வெள்ளி, 22 டிசம்பர், 2023

அப்சின்தியம் - ABSINTHINUM K.RAJU

 

அப்சின்தியம்  -   ABSINTHINUM

 COMMON WORM WOOD

COMPOSITAE FAMILY

மியாசம் :        சோரா. 

 

.வே.. :       நரம்புகள். மூளை, தண்டுவடம்.


 

பொது - இது தாவரம்.  வலிப்பு நோய்க்கு உகந்தது.  காக்கை வலிப்புக்கும் இதைப் போன்ற தன்மையையுடைய வலிப்புக்கும் தரலாம்.  வலிப்பு ஏற்படுமுன் உடலில் நடுக்கம். (TREMOR) நாக்கைக் கடித்தல், வாயில் நுரை தள்ளுதல், முகம் கோணுதல் காணப்படும்.  நடுக்கத்தில் நாக்கு, இருதயம் குறிப்பிடத்தக்கதாகும்.  திடீரென்று கடுமையானக் கிறுகிறுப்பும், சன்னியுடன் வேகமாகத் தாக்கி உணர்விழக்கச் செய்தல்.  வலிப்பின்போது குதிகால்களும்,  தலை மட்டும் தரையைத் தொட்டிருக்க, உடல் வில்லாக வளைந்திருத்தல (OPISTHOTONUS) காளான்களைத் தின்றதால் ஏற்பட்ட நஞ்சு தன் கட்டுப்பாட்டை மீறி, விட்டு விட்டு உதறுதல் (CHOREA) குழந்தைகளுக்கு நீண்ட நாள் உள்ள வலிப்புக்கும், முதுமை அடைந்தவர்களுக்குக் காக்கை வலிப்புப் போன்றவைகளுக்கும் பயன் தரும்.  செரிமானமாகாமல் குழந்ைகைளுக்கு வரும் வலிப்பு.  வலிப்பு முகத்திலிருந்து ஆரம்பித்து உடலுக்கும், கால்களுக்கும் பரவுதல்.  பெரும்பாலான வலிப்புகள் சில மணி நேரம் தொடர்ச்சியாக வீரிட்டுக் கத்திக் கொண்டு வருதல்.  வலிப்பின்போது அழுதல். 

மனம் - பிரமை.  ஞாபகமமறதி.  யாருடைய தயவும் தனக்குத் தேவையில்லை என நினைத்தல்.  திருடியே தீரவேண்டுமென்ற மன உந்துதல் (KLEPTOMANIA).  விந்தையான மிருகங்களையும், பலவித நிறங்களில் எலிகளையும் பார்ப்பதாகவும் பிரமை.  குழப்பம்,  உடல் தேறும் நிலையில் இறப்பை விரும்புதல்.  எதிரிகளும், சிப்பாய்களும் தன்னைப் பின்தொடர்வதாக எண்ணுதல்.  முட்டாள்தனமாக நடத்தல்.  வேகமாகக் குளறி பேசுதல்.  சற்று முன் என்ன நடந்தது என்ற நினைவு இல்லாமை.  பயங்கரமானக் கற்பனை எண்ணங்கள்.  கொடுமையான பைத்தியம்.  மயக்கம் தெளிந்து பயங்கரமான வன்முறையில் ஈடுபடுதல்.

தலை எழுந்தால் தலை சுற்றுதல், பின்பக்கமாக விழுந்து விடுவது போலிருத்தல்.  ஒரு நொடி உணர்வின்மை, மந்தமான பின்பக்கத் தலைவலி.  தலையை கீழாக வைத்துப் படுக்க விரும்புதல்.  மூளையில் இரத்தத் தேக்கம்.  வழுக்கை (BALDNESS).  படை (TINEA).

கண் -  கண் பாவைகள் (PUPILS) இரண்டும் சமமற்று விரிந்திருத்தல்.  பார்வை மங்கல்.  இமைகள் வீங்கி கனத்தும் தினவு எடுத்தல்.

காது தலைவலிக்குப்பின் காதில் நீர் வடிதல்.

முகம் நீலநிறம் விட்டு விட்டு சுண்டுதல், முட்டாள்தனப் பார்வை, தாடைகள் கிட்டிக் கொள்ளல்.

வாய் நாக்கைக் கடித்தல், பிதுங்குதல், நடுங்குதல், மிகப் பெரிதாக வீங்கி தடித்துள்ள உணர்வு.  பேசக் கடினத்தால் மெதுவாகப் பேசுதல்.

தொண்டை சுட்ட புண் போல், ஏதோ பொருள் தங்கியுள்ளது போல உணர்வு.

இரைப்பை உண்ண ஆவலின்மை.  உணவு வெறுப்பு உண்ட உணவு கனமாக இருத்தல்.  ஏப்பம், குமட்டல், எதுக்களித்தல்.  பித்தப்பைப் பகுதியிலிருந்து குமட்டல் வருதல்.  இரைப்பையில் குளிர்ந்து அமுக்கும் உணர்வு.

வயிறு இடுப்பை, வயிற்றைச் சுற்றி உப்பி இருத்தல்.  காற்றால் வலி.  கல்லீரல், மண்ணீரலில் வீக்கமுள்ள உணர்ச்சி.  மலச்சிக்கல், மூலம், குடற்புழுக்களை (WORMS) அழிக்கும்.

சிறுநீர் வழி சிறுநீர்ப் அதிக மஞ்சள் நிறமும், குதிரையின் சிறுநீர் போன்ற வாடையும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு.

ஆண் - பாலுணர்வு எழுச்சி இல்லாமலேயே விந்து தானாக வெளியாதலுடன் (SPERMATORRHOEA) ஆண்குறி தளர்ந்து பலவீனமாயிருத்தல்.

பெண் - இரத்தசோகை.  கர்ப்பப்பையில் வலி .  வலது கருப்பையில் ஈட்டி பாய்வது போன்ற வலி.  மாதவிடாய் நிற்கும் வயதின் காலத்திற்கு (MENOPAUSE) முன்பே நின்று விடுதல்.

மூச்சுப் பகுதி இருமலுடன் கல்லீரல் தொல்லைகள்.  மார்பில் கனத்த உணர்வு.

இருதயம் - இருதயத்தின் நடுக்கம் முதுகில் உணருதல்.  தோள்பட்டை (SCAPULA) பகுதியில் இருதயத்தின் துடிப்பைக் கேட்டல்.

கழுத்து, முதுகு கீழ் இடுப்பில் வலி.

கை, கால்கள் தோள்களில், கைகால்களில் வலி,  நடுக்கம்.  பாரி வாயு குறிகள்.  குதிரை தன் கால்களால் வயிற்றுப் பக்கம் உதைத்துக் கொள்வது போல் செய்தல்.  வலிப்பில் கைகால்கள் தூக்கிப் போடுதல்.

தோல் காமாலை போல் மஞ்சள் நிறம்.

தூக்கம் - குழந்தைகளுக்குத் தூக்கமின்மை, பயம், கூச்சம், நடுக்கம்.

காய்ச்சல் குளிர், சூடு, பிறகு வியர்த்தல், எல்லா நிலையிலும் தாகம்.  இலையுதிர்க் காலத்தில் வரும் காய்ச்சல்கள்.

அளவு தாய்க்கரைசல்  முதல் 6 சி.

.கு.. ஆர்டிம் வல், சிகூடா, சினா, ஹைட்ரோ ஆசிட்.


குறிப்பு-

.வே..         மருந்து வேலை செய்யும் பகுதிகள்.

.கு.. ஒத்த குணமுள்ள மருந்துகள்

.செ.கா.        மருந்து செயல்படும் காலம்

பூ       பூர்த்தி () நிறைவு செய்யும் மருந்து

       உறவு

        பகை

மு       முறிவு

க்யூ     தாய்க் கரைசல்

சி       நூறில் ஒரு பங்கு 1/100

எக்ஸ்   பத்தில் ஒரு பங்கு 1/10.

வியாழன், 21 டிசம்பர், 2023

அப்ரோடானம் - ABROTANUM

 

அப்ரோடானம்  -   ABROTANUM

SOUTHERN WOOD

COMPOSITAE FAMILY

 K.RAJU


நோய் கூடுதல் :

     குளிர்ந்தக்காற்று, ஈரம், இரவு, மூடுபனி, சுரக்கும் நீர்கள் அமுக்கப்படுதல், குளிருள்ள மழைக்காலம்.

 

நோய் குறைதல் :

     நகர்தல், இளகிய மலம்.

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ்.

 

ம.வே.ப. :  நரம்புகள்.

 

பொது - இது தாவரம்.  நல்ல பசியிருந்தும் தெளிவான காரணமின்றி குழந்தைகள் இளைத்தல்.  முக்கியமாகக் கால்கள் மெலிதல். (MARASMUS).  நோய் ஒரு பகுதியிலிருந்து உடலின் இன்னொரு பகுதிக்கு மாறுதல் (METASTASIS).  வயிற்றுப் போக்கைத் தடை செய்ததால்  கீல் வாதம் தோன்றுதல்.  கீல்வாதம் மறைந்து இருதய நோய் ஏற்படல்.  கீல்வாதம் செம்மையாகும்போது மூலநோய் அதிகரிக்கும்.  கால் பெருவிரல் கீல்வாதம் (GOUT) குறைந்து வேறு கோளாறுகள் வருதல்.  பிறந்த குழந்தைக்கும், சிறுவர்களுக்கும் விரையில் நீர்க்கட்டி (HYDROCELE).  பிறந்த குழந்தையின் தொப்புளில் இரத்தமும், நீரும் கசிதல், மெலிவு கால்களில் தோன்றி படிப்படியாக மேலே பரவுதல்.  மார்பு உறை நீர்க்கோப்பு (HYDROTHROX) அல்லது நுரையீரல் குழிகளில் சீழ்க்கோப்பு (EMPYEMA).  அறுவை சிகிச்சைக்குப்பின் மார்பில் ஒரு அழுத்தும் உணர்வு இருத்தல்.  முச்சு விட இயலாமை.  சிறுவர்களுக்கு மூக்கில் இரத்தம் ஒழுகுதல்.  இன்புளூயன்சா நோய்க்குப்பின் அதிக பலவீனம், நாற்றமடிக்கும் வாந்தி.

மனம் - எளிதில் கோபப்படுதல், சிடுசிடுப்பு, அதிக ஆதங்கம், மனச்சோர்வு, சிறுவர்கள் கொடூரச் செயல்களைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.  இரக்கமற்ற கெட்ட குணம்.  சொற்கேளாமை, எதிர்த்தல், ஏக்கம் பிடித்திருத்தல்.  உற்சாகமின்மை, புரிந்து கொள்ளும் சக்தியில்லாமை, வாயாடுதல், கத்துதல்.

தலை – கழுத்து பலஹீனத்தால் தலையை நேராக நிமிர்த்த இயலாமை.  மனமுயற்சி, உரையாடலுக்குப் பின் மூளைக்களைப்பு.  நெற்றிச் சிரைகள் (VEINS) புடைத்தல்.  மூளை மிருதுவாக ஆவதுபோல் உணர்வு.  இடது பக்க மூளை பலவீனமாகத் தெரிதல்.  பொறி பகுதிகளில் பிழிவது போலிருத்தல்.

கண் -  கண்களைச் சுற்றி நீலநிற வளையங்கள்.  மங்கலான பார்வை.  குழி விழுந்த கண்கள்.  இரத்த சோகை.

காது – தேனீக்கள் ரீங்காரம்போல் இரைச்சல்.  வலது காதிலிருந்து காற்று  வருதல்.

மூக்கு – வறட்சி, சிறுவர்களுக்கு இரத்தம் ஒழுகுதல்.

முகம் – வறண்டு, சுருங்கி, வெளுத்து, குளிர்ந்து, முதுமையடைந்தவர்போல் காணப்படுதல்.  இரத்தக் குழாயில் சதைக்கட்டி (ANGIMOA).  இளைத்த நிலையில் கருப்புத் தலையுள்ள பருக்கள் (COMEDONES).

வாய் – சொத்ைதைப் பற்களில் இழுக்கும், கிழிக்கும் வலி.  அமிலச் சுவை, வறட்சி, புண்ணால் உமிழ் நீர் அதிகம் சுரத்தல்.

இரைப்பை – உணவு செரிமானமாகாமல் நாற்றமடிகும் ஏராளமான நீருடன் வாந்தியாகுதல்.  கடித்தெரிவது போன்று இரைப்பையில் பசி இரவில் ஏற்படுதல்.  இரைப்பை தொங்குவது போல், நீரில் நீந்துவது போல் குளிர்ந்த உணர்வுடனிருத்தல்.  நல்ல பசி இருந்தும் இளைத்தல்.  வெட்டும், கடிக்கும் எரிச்சலுள்ள வலி இரவில் அதிகமாதல்.  பாலில் கொதித்த ரொட்டி விருப்பம்.

வயிறு – பல பகுதிகளில் கடினமானக் கட்டிகள் வயிற்றில் இருத்தல்.  உப்புசம், தொப்புளில் கசிவு, குடல்களில் மூழ்கும் உணர்வு.  உருண்டை மற்றும் நூல் கீரிப் பூச்சிகள் (ASCARIDES).  மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல்.  கீல்வாதத் தொல்லைத் தணியும்போது மூலத் தொல்லை கூடும்.  பிதுங்கியுள்ள மூலத்தைத் தொட்டால், மலம் கழித்தால் எரிச்சல், வலி.  முன்சிறுகுடல் திறப்பான் (PYLORUS) குறுகி விடுவதால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுதல்.  அதனால் களைப்பும், உடலில் நீர் வறட்சியும் உண்டாகுதல்.  மலம் கழிக்க விரும்பினால் இரத்தம் மட்டுமே வருதல்.  வயிற்றுப்போக்கு திடீரென்று தடைப்பட்டதால் கீல்வாதம் தோன்றுதல்.  செரிமானமாகாமலேயே மலத்தில் உணவு வெளியாகுதல்.  காசநோய் சம்பந்தத்தால் வயிற்று உறுப்புக்களை மூடியுள்ள சவ்வு அழற்சி (PERITONITIS).

சிறுநீர் வழி – சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிறைந்து இருந்து கழிக்க அவசரப்பட்டாலும் குறைந்தளவே வெளியாகுதல்.

ஆண் - சிறுவர்களுக்கு விரைவில் நீர்க்கோப்பு தாளம்மையால்  (MUMPS) விரைகள் பாதித்தல்.

பெண் - தாளம்மையால் முலைகளில் பாதிப்பு  இடது கருப்பையில் (டீஎயசல) ஈட்டி பாய்வது போன்ற வலி.  வலியுள்ள மாதவிடாய்.  அமுக்கப்பட்ட விடாய்.

மூச்சுப் பகுதி – வயிற்றுப்போக்கைத் தொடர்ந்து வறட்டு இருமல்.  மார்பின் குறுக்கே வலி.  மூச்சைத் தடைப்படுத்துதல்.  நுரையீரலை மூடியுள்ள சவ்வு அழற்சியால் (PLEURISY) நீர்க் கசிதல்.  பாதிக்கப்பட்ட பகுதியில் அழுத்தும் உணர்வு.  குளிர்ந்தக் காற்றுவீச்சு புண்ணுள்ள உணர்வை ஏற்படுத்துதல்.

இருதயம் - இருதயப் பகுதியில் கடுமையான வலி.  கீல்வாதம் மாறி இருதயத்தில் பாதிப்பை உண்டாக்குதல்.  நாடி சிறிதாக பலவீனமாக இருத்தல்.

கழுத்து, முதுகு – கழுத்து பலவீனத்தால் தலையை நேராக நிமிர்த்த இயலாமை.  கீழ் இடுப்பில் மூலத்துடன் வலி.  திடீரென தண்டுவடத்தில் வீக்கம் வலி.  அசைந்தால் முதுகில் பலவீனம்.  முடமான வலி.  இடுப்புப் பகுதி வலி விந்துவடத்திற்குப் பரவுதல்.

கை, கால்கள் – கால்களில் அதிக மெலிவு காணப்படுதல்.  நடக்க இயலாமை.  தோள்கள், கைகள், மணிக்கட்டுகள், கணுக்கால்களில் வலி.  கை,கால் விரல்களில் குத்தும் வலியும், குளிர்ந்தும், மரமரத்தும் இருத்தல்.  மூட்டுகளில் பிடிப்பு, மடக்கினால் வலி.  தோள்மூட்டிலிருந்து முழங்கைக்கு வலி செல்லுதல்.

தோல் – உப்பி, தொள, தொளவென்றிருத்தல்.  சுருக்கம்.  கொப்பளங்களை அமுக்கியதால் தோல் மீது நீலச் சிவப்பு நிறம் தோன்றுதல்.  குளிராலான சிரங்கின் (CHILBLAINS) தினவு. கட்டிகள், கொப்பளங்கள் இருந்த இடத்தில் மயிர் கொட்டுதல்.

தூக்கம் - இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம்.  அமைதியின்மை.  பயங்கரக் கனவுகள், நாய்க் கனவு, ஆதங்கம்.

காய்ச்சல் – கீல்வாதத்தால் அதிகக் காய்ச்சல்.  காய்ச்சல் வேகமுடன் சில்லிப்பும், பலவீனத்தையும் ஏற்படுத்துதல்.

அளவு – 3 சி  முதல் 30 சி.

முக்கியக் குறிப்பு – ஹீபார்சல்ப் கொடுத்தபின் தோன்றும் கட்டிகளுக்கு (குரசரேஉடநள) ஏற்றது.  கல்கேரியா கார்பில் வயிறு பெருத்து உடல் மெலிந்து இருத்தல்.  கல்கேரியா பாஸ்பாரிகாவில் ஒட்டிய வயிறுடன் மெலிந்திருத்தல்.

ஒ.கு.ம. – பென்.ஆசிட், பிரை, ஐயோட், நேட்.மூர்.

உ – அகார், சைனா, லேடம், நக்ஸ்வாமிகா.

 

*****

குறிப்பு-

ம.வே.ப.   மருந்து வேலை செய்யும் பகுதிகள்.

ஒ.கு.ம.    ஒத்த குணமுள்ள மருந்துகள்

ம.செ.கா.   மருந்து செயல்படும் காலம்

பூ    பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து

    உறவு

    பகை

மு   முறிவு

க்யூ  தாய்க் கரைசல்

சி    நூறில் ஒரு பங்கு 1/100

எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.


அபிஸ் நைக்ரா - ABIES NIGRA


அபிஸ் நைக்ரா  -   ABIES NIGRA

 BLACK SPRUCE

CONIFERAE FAMILY

K.RAJU





நோய் கூடுதல் :

     உண்டபின்பு, படுத்தால், இருமினால்

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ்.

 

ம.வே.ப. :  இரைப்பை, மூச்சுப் பகுதி.

 

பொது - இது தாவரம்.  செரிமானம் சரியாக ஆகாதபோது ஒரு வேக வைத்த முட்டை இருதயத்தின் கீழ்முனைப் பகுதியிலுள்ள இரைப்பையில் தங்கி இருப்பது போன்ற உணர்வு.  இரைப்பைக் குறிகளுடன் தொடர்புள்ள பல நோய்க்களுக்குப் பயன்படக் கூடியது.  வயதானவர்களுக்கு செரிமானத் தொல்லைகளோடுள்ள இருதயக் குறிகள், அளவுக்கு மீறி தேநீர் குடித்தல், புகையிலையை மெல்லுதல், புகைத்தலால் தோன்றிய செரிமானகோளாறுகள், மலச்சிக்கல், கீல்வாத வலிகள்.

மனம் - சுறுசுறுப்பின்மை, படிக்க, சிந்திக்க இயலாமை, பகலில் மந்தமாகவும், இரவில் விழிப்புடனிருத்தல்.

தலை – கிறுகிறுப்பு, சூடுடன் கன்னங்கள் சிவந்திருத்தல், மந்தமான வலி.

காது – இடது வெளிக்காதில் வலி.

தொண்டை -  உணவுக் குழலின் கீழ் முனையில் ஏதோ கடினமான பொருள் ஒன்று ஒட்டிக் கொண்டுள்ள உணர்வு.

இரைப்பை – உணவு உண்டபின் எப்போதுமே இரைப்பையில் வலி தோன்றுதல்.  காலையில் பசியே எடுப்பதில்லை.  நன்பகலிலும்,  இரவிலும் அடக்க முடியாத பசி.  ஒரு வேக வைத்த முட்டை செரிமானமாகாமல் இருதயத்தின் கீழ்முனைப் பகுதியில் உள்ள இரைப்பையில் தங்கியுள்ளது போலவும், இரைப்பை குழிக்குச் சற்று மேலே எல்லாவற்றையும் முடிச்சு போட்டு கட்டி வைத்திருப்பது போலவுமுள்ள உணர்ச்சி.  அடிக்கடி ஓசையுள்ள ஏப்பங்கள்.

வயிறு – மலச்சிக்கல்.

பெண் - மூன்று மாத தாமத விடாய்.

மூச்சுப் பகுதி – நுரையீரல்களில் இறுக்கமுள்ள உணர்வு.  மார்பை முழு அளவும் விரிக்க இயலாமை, இருமினால் தொந்தரவுகள் கூடுதல்.  எதுக்களித்தலின்போது இருமல் தொடர்தல்.  தொண்டை அடைக்கும் உணர்வு.  மூச்சுவிட இயலாமை.  படுத்தால் தொந்தரவுகள் கூடும்.  மார்பில் ஏதோ ஒன்று தங்கியுள்ளதால் இருமி அதை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற வலியுள்ள உணர்ச்சி.

இருதயம் - கூர்மையான வெட்டும் வலி.  செரிமானக் கோளாறுகளால் இருதயம் மிக வேகமாகவும் (TACHYCARDIA) மெதுவாகவும் (BRADYCARDIA) துடித்தல்.  இருதயம் கனத்துள்ளபோது மெதுவாகத் துடித்தல்.

கழுத்து, முதுகு – கீழ் இடுப்பிலும், எலும்புகளிலும் கீல்வாத வலிகள்.

தூக்கம் - மிகவும் கெட்டக் கனவுகள் காணுதல்.  பசியால் இரவில் விழித்தல்.  அமைதியற்று இருத்தல்.

காய்ச்சல் – சூடும், குளிரும் மாறிமாறி வருதல்.  இரைப்பை வலியுடன் விட்டு விட்டு வரும் நாட்பட்டக் காய்ச்சல்.

அளவு – 3 சி  முதல் 30 சி.

ஒ.கு.ம. – பிரையோனியா, சைனா, லாக்டிக் ஆசிட், நக்ஸ்வாமிகா, பல்ஸ்.

 

*****  

குறிப்பு-

ம.வே.ப.   மருந்து வேலை செய்யும் பகுதிகள்.

ஒ.கு.ம.    ஒத்த குணமுள்ள மருந்துகள்

ம.செ.கா.   மருந்து செயல்படும் காலம்

பூ    பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து

    உறவு

    பகை

மு   முறிவு

க்யூ  தாய்க் கரைசல்

சி    நூறில் ஒரு பங்கு 1/100

எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.

அபிஸ் கனடன்சிஸ் - ABIES CANADENSIS

 


 

அபிஸ் கனடன்சிஸ்  -   ABIES CANADENSIS

 HEMLOCK SPRUCE    CONIFERAE FAMILY

 K.RAJU


நோய் குறைதல் :

     அழுத்துவதால்.

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ்.

 

ம.வே.ப. :  சளி சவ்வுகள், இரைப்பை, கர்ப்பப்பை.

 

பொது - இது தாவரம்.  இது சளிச்சவ்வுகளை,  நரம்புகளை பாதிக்கச் செய்து இரைப்பையில் அழற்சியை உண்டாக்கி சளியை உற்பத்தி செய்வதால், நோயாளிக்குப் பசியை அதிகமாக்குவதோடு, சீர் செய்யப்படாத, கரடு முரடான உணவு வகைகளை உண்ண அடங்காத ஆவலைத் தூண்டுகிறது.  தசைகள் சுண்டுதல், ஊட்டச் சத்துக்குறைந்து பலவீனமாய் உள்ள பெண்களுக்குக் கர்ப்பப்பை நழுவுதல் (UTERUS).  நரம்புகளின் பலவீனத்தால் வலுவற்று எப்போதுமே படுத்திருக்க விரும்புதல்.  மிக மயக்கம்.  கல்லீரல், வலது நுரையீரல் சிறுத்து கடினமாக உள்ள உணர்ச்சி.  தோல், கைகள் சில்லிட்டு சுருங்கி இருத்தல்.  வலது தோள்பட்டையின் கீழ் வலி.  உண்ண ஆவல் கொண்டு அளவு மீறி உண்ணுதல்.

மனம் - அக்கறையின்மை, எளிதில் கோபப்படுதல்.

தலை – கனமற்றும், குடித்தது போன்றுத் தள்ளாடுதல்.

கண் -  இடது கண்ணின் வெளிப்பகுதியில் கண்கட்டியுள்ள உணர்வு.

வாய் – வறட்சி.

இரைப்பை – மிக அதிகப் பசியால் மயக்க உணர்வு.  இறைச்சி,  ஊறுகாய், முள்ளங்கி வகைகள், சீர் செய்யப்படாத உணவுகளை உண்ண அளவு கடந்த ஆவல்.  செரிமான அளவுக்கு மீறி உண்ணுதல்.  எரிச்சல், உப்புசம், கடிக்கும் பசி.

வயிறு – உப்புசத்துடன் இருதயப் படபடப்பு.  இரைப்பை மற்றும் குடற் காற்றினால்  இருதயத்தின் செயலுக்குத் தொல்லை ஏற்படுதல்.  மலச்சிக்கலுடன் மலக்குடலில் எரிச்சல்.  கல்லீரல் சிறுத்து, கடினமாக உள்ள உணர்வு.  மந்தமான கல்லீரலால் பித்தம் போதாது போலிருத்தல்.

ஆண் - சிறுநீர்ப் புறவழியில் கோழை போன்ற நாட்பட்ட ஒழுகல்  (GLEET).

பெண் - விசித்திரமான அடங்காத ஆவலும், சில்லென்ற உணர்வுமுள்ளக் குறிகளோடு சிறப்பாகக் கர்ப்பப்பை நழுவிய பெண்கள்.  கர்ப்பப்பை நழுவியதால் அதன் அடிப்பாகத்தில் புண்ணுள்ள உணர்வு.  அழுத்தினால் வலி குறைதல்.  கர்ப்பப்பை மிருதுவாக பலமற்று உள்ளதாக நினைத்தல்.  அதிகக் களைப்பால் எப்போதுமே படுத்திருக்க விரும்புதல்.

மூச்சுப் பகுதி - மூச்சு வாங்குதல்.  வலது நுரையீரல் சிறுத்து, கடினமாகவுள்ள உணர்வு.

இருதயம் - இருதயத்தின் செயல் இரைப்பை குடற்காற்று உப்புசத்தால் (FLATULENCE) பாதிக்கப்படுதல்.

கழுத்து, முதுகு – வலது தோள்பட்டைக்குக் கீழ் வலி.  இரண்டு தோள்களுக்கிடையில் குளிர்ந்த நீருள்ள உணர்ச்சி.  கீழ் இடுப்புப் பகுதியில் பலவீன உணர்வு.

தோல் – குளிர்ந்து சில்லிட்டு ஒட்டும் தன்மையுடனிருத்தல்.  இரவில் வியர்த்தல்.

தூக்கம் - படுக்கும்போது முழங்கால்கள் மேலிருக்குமாறு மடக்கிக் கொள்ளுதல்.  அமைதியற்று இரவில் புரண்டு புரண்டு படுத்தல்.

காய்ச்சல் – இரத்தம் பனிக்கட்டி நீர்ப் போன்றுள்ள உணர்வால் உடல் முழுவதும் குளிர், நடுக்கம்.  குளிர் முதுகுக்கு இறங்குதல்.  இரவில் வியர்த்தல்.

அளவு - தாய்க் கரைசல் க்யூ  முதல் 3 சி.

ஒ.கு.ம. – அபிஸ் நைக்ரா, ஹெலோனியாஸ், நக்ஸ் வாமிகா.

*****

குறிப்பு-

ம.வே.ப.   மருந்து வேலை செய்யும் பகுதிகள்.

ஒ.கு.ம.    ஒத்த குணமுள்ள மருந்துகள்

ம.செ.கா.   மருந்து செயல்படும் காலம்

பூ    பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து

உ    உறவு

ப    பகை

மு   முறிவு

க்யூ  தாய்க் கரைசல்

சி    நூறில் ஒரு பங்கு 1/100

எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.