என் முன்னால் அமர்ந்திருக்கும் மங்கையின் முகத்தைப் பார்க்கிறேன். மாநிறம் என்றாலும் வாளிப்பாதன உடல்வாகு. கண்களில் இனம் புரியாத சோகம். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை வினவுகிறேன்.
‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘சென்னை’ அவர் ஒரு முகவரியைக் கூறினார்.
‘நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்றேன்.
‘என் மனைவியின் சிற்றப்பா எங்களைக் காண வந்திருந்தார். அவருக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். அவர்தான் எங்களுக்கு உங்கள் முகவரியைக் கொடுத்தார். அவருக்கு நெடுநாளாக முட்டி வலியும், சரும நோயும் இருந்தன. இரண்டையுமே நீங்கள் ஒருசேரக் குணப்படுத்திவிட்டதாகக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியோடு பேசினார். என் மனைவியின் நிலையைக் கண்டு உங்களிடம் சிகிச்சை பெறும்படி பரிவுரை செய்தார்’.
‘உங்கள் மனைவிக்கு உள்ள சுகவீனம் என்ன?’
எங்கள் குடும்ப மருத்துவர் இதை சோரியாஸிஸ் என்று குறிப்பிடுகிறார். மூன்றாண்டுகளாக அவர் மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நிரந்தரமான பலன் ஏதும் காணோம்.
நோயுள்ள பகுதி, சிகிச்சை முறை, அதன் விளைவு ஆகியவை பற்றிக் கூறினால் எனக்குப் பயனுடையதாக இருக்கும்
என் மனைவிக்கு உடலின் பல பாகங்களில் புடைப்பு ஏற்படுகிறது அது மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. ஊசி போட்டால் தடிப்பு மாறுகிறது. அரிப்பும் இல்லை. ஆனால ஓரிரு மாதம் பொறுத்து அரிப்பு தொடர்கிறது. வேறு இடங்களிலும் கிளைக்கிறது’.
‘இதனால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?’
‘நாங்கள் அதிகம் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் நோய் வந்தால் மருத்துவரை அணுகுகிறோம். குணமளிக்கிறார்’.
‘நோயின் வேர் மருந்துகளினால் அறுபடவில்லை. அதனால்தான் அது மற்ற இடங்களில் புடைத்துத் தன்னை வெளிக்காட்டுகிறது’.
‘புரியவில்லை அய்யா, சோரியாஸிஸுக்கு உங்கள் மருத்துவ முறையில் நிவாரணம் உண்டா?’
,
‘ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்குறித் தொகுப்புக்குப் பெயர் ஏதும் கிடையாது.தோலின் மேல் ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் நாம் மகிழ்ச்சி அடை யவேண்டும்’
"உங்கள் கூற்று வியப்பைத் தருகிறது".
"உடலில் ஏற்படும் கழிவுப் பொருள்களான சிறுநீர், வியர்வை, மலக்கழிவு ஆகியவை உரிய முறையில், அளவில் வெளிப்பட வேண்டும். அந்தப் பாதைகளில் தடையோ, தயக்கமோ இருந்தால, அது தோல் வழியாக வெளிக்காட்டும். சருமம் நமது உடலின் சாளரம். இதன் வழியே அழுக்குகள் வெளிப்படும்போது களிம்புகளின்[OINTMENT] உதவி கொண்டு அதை உள்ளே அமுக்க முயற்சி செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அது உடலின் உள்ளுறுப்புகளைத் தாக்கும்".
நான் என் பரிசோதனைகளைத் துவக்குகிறேன். அது ஒரு நீண்ட பட்டியல். அந்த மங்கைக்குக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மூக்கு, தொண்டை அழற்சி உள்ளது. எப்போதும் சளி, சில சமயம் மஞ்சள் அல்லது பச்சை அதனுடன் கூடி,தோலின் மேல் புடைப்புகள், தலையிலும் புடைப்பு சுற்றிலும் சிறு சிறு புண்கள். வெள்ளைத் துகள், அரிப்பு எப்போதுமே உள்ளது. நாவு இலேசான மஞ்சள் கலந்த வெள்ளை. இவை சில குறிகள் மட்டுமே.
பழைய நிகழ்ச்சி ஒன்று என் நினைவுக்கு வந்தது. எங்கள் மருத்துவமனைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க மங்கையைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவளுடைய பார்வை, உடலசைவு, பேச்சு அனைத்துமே பிறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவருடைய கணவர் அவரைப் படிமானத்தில் வைத்திருந்தார். அவள் முரண்டினாள். கணவன் வன்முறையை பிரயோகிக்க முயன்றார். என் ஆசான் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.
பரிவுடன் நோயாளியைக் கவனித்தார். பேசினார் ஆசான். விவரங்களைப் பதிவு செய்யும்படி என்னைப் பணித்தார். ‘உங்கள் கணவரைத் தவிர வேறு யாராவது உடன் வந்திருக்கிறார்களா?’
‘நாயனகாரு உள்ளாரு அவறே விடையிறுத்தாள்’
அவரை உள்ளே அழைத்தார் ஆசான். ‘உங்கள் மகளுக்கு எப்போதாவது தோல் வியாதி வந்திருக்கிறதா?’
‘இப்புடு காதண்டீ, இரு சகஸ்ரம் முந்துக.. அந்த பாகாயி போயிந்தி, இது இப்புடே இலாக கேசிந்தி’
ஆசான் என்னைப் பார்த்துக் கூறினார். மெர்க் சொல்.12, ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு ஒரே முறை, இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
மருந்தை மடித்து அவரிடம் கொடுத்தேன். மருந்து உண்ணும் முறையை ஆசான் முதியவருக்கு விளக்கினார்.
நான்காம் நாள் அந்தப் பெரியவர் மருத்துவமனைக்குப் பரபரப்புடன் ஓடி வந்தார். அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ‘உடம்பு முழுவதும் தடித்து வீங்கி என் மகள் கதறுகிறாள்’
‘என்ன சொல்லுகிறார்?’
‘அரிப்புப் பொறுக்க முடியவில்லையாம்’
‘மற்றபடி ஏதாவது கோளாறு?’
‘சாந்தமாகவே இருக்கிறாள். கூச்சல், திட்டல், பேயாட்டம் எல்லாம் ஓய்ந்து விட்டது.’
‘ஏன், போயே போயிந்தி’
என் ஆசான் முறுவலித்துவிட்டு என்னை நோக்கிப் பணிந்தார். ‘ஸாக்லாக்’ நான் அவற்றை மடித்துக் கொடுத்தேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரே ஒரு முறை அந்த மங்கையும், அவளது தந்தையும் வந்தனர். ஒரு கூடை நிறையப் பழங்கள்.
என் ஆசான் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
உள்ளுக்கு அமுக்கப்பட்ட மியாசம் (தோஷம்) மனநிலையையும் எப்படிப் பாதிக்கக்கூடும் என்ற விபரம் எனக்கு அன்றுதான் விளங்கிற்று.
சென்னையிலிருந்து வந்த அந்த மங்கைக்கு நான் கொடுத்தது மெர்க்யூரியஸ் 6 ஒரு வாரத்திற்கு இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
அந்த மங்கையின் கணவர் என்னைக் கேட்டார். ஹோமியோபதி முறையில் நோய்கள் அதிகரிக்கும் என்று எங்கள் குடும்ப மருத்துவர் கூறினார். அப்படி ஏதாவது நேருமா?
‘அப்படி நிகழ்ந்தாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமாகிவிடும்’
ஸோரியாஸிஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். ஃப்ரான்ஸ் நாட்டினர் இதை ஸோரா என்று அழைக்கின்றனர். அரிப்புடன் கூடிய சொறி, சிரங்கு என்று அதற்குப் பொருள்.
பத்திற்கும் மேற்பட்ட சொரியாஸிஸ் வகைகள் இருப்பதாக நோயியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். Plaque Psoriasis, Guttate Psoriasis, Inverse Psoriasis, Pustular Psoriasis, Erythrodermic Psoriasis,
Pustular Psoriasis |
Scalp Psoriasis மற்றும் nail psoriasis என பலவகை இருப்பதாக பயமுறுத்துகிறார்கள்.
Guttate Psoriasis |
Plaque Psoriasis |
மேதை ஹானிமன் ஸோராவுக்குக் கூறும் விளக்கம் பல பக்கங்களில் உள. மனித குலத்தின் மிகத் தொன்மையான தோஷம் (மியாஸம்) இது. உடல் இயக்கமே குலைந்து போன ஒரு நிலையைத்தான் ஸோரா என்று கூற வேண்டும் அவர் அருள்கிறார்.
சென்னையிலிருந்து எனக்குக் கடிதம் வந்து விட்டது.மருந்து கொடுத்த பிறகு, கடந்த மூன்று மாதங்களாக அந்த மங்கைக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.
நோயாளியின் நலனைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்த கவனத்துடன் உழைத்தால், அதற்கு உறுதியான பயன் உண்டு என்பது ஒரு பரமசத்தியம்.
***********************************************************************
ஹோமியோபதி அற்புதங்கள் சொரியாசிஸ் மேஜர் தி.சா.இராஜூ
One of my relatives has this problem for more than 10 years. Is it possible to get cure by homeopathy medical treatment. If so please provide that doctor details, I want to help them.
பதிலளிநீக்குThanks
சொரியாசிஸ் மட்டுமல்ல தீர்க்கமுடியாத பல தீராத வியாதிகள் ஹோமியோபதியால் குணப்படுத்தமுடியும்.அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள்..
பதிலளிநீக்குஅய்யா என் வயது 58 எனக்கு புளி கத்திரிக்காய் சேர்ந்தால் உடலில் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஅய்யா என் வயது 58 எனக்கு புளி கத்திரிக்காய் சேர்ந்தால் உடலில் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஅய்யா என் வயது 58 எனக்கு புளி கத்திரிக்காய் சேர்ந்தால் உடலில் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குSend ur details to vasthuram@gmail.com. I try to help you
நீக்குSir I need his books. Pls give the publisher address
பதிலளிநீக்குAbdul Aziz
பதிலளிநீக்குஹோமியோ பதிப்பகம்,
சென்னை.
7200800699.
மேற்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். மேஜர் தி.சா.ராஜூ அவர்கள் எழுதிய எட்டு புத்தகங்களும் மொத்தம் ரூபாய் 1600 அனுப்பினால் Indian Post மூலமாக அனுப்பி வைப்பார். நான் சென்ற ஞாயிறு பணம் அனுப்பிவிட்டு முகவரியை வாட்ஸ்அப்பில் அனுப்பினேன். நேற்று அவர் பதிவுத் தபாலில் புத்தகங்களை அனுப்பிவிட்டார். புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.