திங்கள், 8 ஜனவரி, 2024

அக்னஸ் காஸ்டஸ் AGNUS CASTUS K.RAJU

 

அக்னஸ் காஸ்டஸ்

     AGNUS CASTUS

CHASTE TREE

VERBENACEAE

நோய் கூடுதல்< :

      மிதமிஞ்சிய உடலுறவு, அதிக அளவு பழு தூக்கியதால் உண்டான சுளுக்கு, தொடுதல், நகர்தல், மாலையில்.

 

நோய் குறைதல் >:

      ஓய்வு, அழுத்துதல்.

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ். 

 

ம.வே.ப. :  நரம்புகள்,  ஆண், பெண் உறுப்புகள்.

 

பொது – இருபாலாருக்கும் உகந்தது.  அதிகம் ஆண்களுக்கு சிறந்தது.  மிக அதிக அளவு உடலுறவில்  ஈடுபட்டதால்  பார்வைக்குக் கிழவர்போல் இருத்தல்.  பாலுணர்வு  முழுவதும் இழந்து விட்டதாகவும்,  உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்துள்ளதாகவும் நோயாளி கூறுவார்.  அடிக்கடி வெட்டை நோய்த் தாக்கப்பட்டவர்கள்.  அதிக சுயஇன்பம்   பெற்றவர்கள்.  மணமாகாதவர்களின் நரம்பு பலவீனம்.  சுளுக்கு   அதிகளவு தசை இழுபடுதல்    வலியால் பற்களைக் கடித்தல்.  கண்களில் தினவு.  புகையிலை பயன்படுத்துவதால் இருதயம் வேகமாகச் செயல்படுதல்.  ஒழுக்கங்கெட்டதால் ஏற்பட்ட சோர்வு.  அடிக்கடி ஆண்குறி விறைத்தாலும் காமமூட்டும் எண்ணம் இருக்காது.  பெண்ணைக் கட்டித் தழுவும்போது விந்து தானாக வந்துவிடுவதாக நோயாளி கூறுவார்.  கக்கில சுரப்பி விரிவடைவதால் சுக்கில நீர் வருதல். உடல் முழுவதும் வீக்ககமுள்ள உணர்வு நிணநீர் உடலமைப்பு.

மனம் - அதிகளவு ஞாபகமறதி.  இறப்பைக் கண்டு பயம்.  சீக்கிரம் இறந்துவிடுவோமே என்ற கவலையால் எதைச் செய்து என்ன பயன் என எண்ணுதல்.  அடிக்கடி இறந்து விடுவேன் எனச் சொல்லுதல்.  நம்பிக்கையின்மை, பாலுணர்வுக் குறைவால் துக்கப்படுதல்.  மனத் தடுமாற்றம்.  நடந்த நிகழ்ச்சிகளைக்கூட நினைவுக்குக் கொண்டு வர இயலாமை.  துணிவின்மை, உற்சாகமின்மை,  எளிதில் எரிச்சலடைதல், கோபப்படுதல். நரம்புக் சோர்வு. மீன் வாடை, கஸ்தூரி மணம் வீசுவதாக ஒரு பொய்யான பிரமை.  கெடுதல நேரப்போகிறது என்று சொல்லும் மனப்பாண்மை.  எண்ணத்தை ஒருமுகப்படுத்த முடியாமையால் படித்ததை மறந்துவிடுதல். மகிழ்ச்சி மாறி விசனப்படுதல்.  பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றும், வாங்க வேண்டியதை வாங்காமல் மறந்து விடுதல்.  வாங்கியப் பொருள்களை அங்கேயே விட்டு விட்டு வருதல்.  உடல் முழுவதும் கடித்தெறியும் தினவு குறிப்பாகக் கண்களில் இருத்தல்.

தலை – பொறிகளில் அடிபட்டது போன்ற வலி, தூசி, புகை சூழ்ந்த அறையில் இருந்தாலும் ஏற்படும் தலைவலி போலிருத்தல்.  ஒரே இடத்தில் உற்று நோக்குவதால் வலி குறைதல்.  படிப்பதால் பொறிகளில் இறுக்கும் வலி.  தலைக்கனத்தாலும், கழுத்தில் அழுத்தத்தாலும் தலையானது முன்பக்கமாக விழுவது போலிருத்தல்.  தலை மீது அழுத்தமும், சில்லிப்பும் இருந்தாலும் தொட்டால் அவ்விடம் வெப்பமாக இருத்தல்.

கண் - கண்பாவைகள்   விரிவடைந்திருத்தல். ஒளியால் கண் கூசுதல்    மாலையில் படித்தால் கண்களில் எரிச்சல்.  கண்களின்மீதும், புருவங்களிலும், அரித்துப் பிடுங்கும் தினவு.  சொறிவதால் குறைதல் மீண்டும் ஏற்படல்.

காது – மணியோசை இரைச்சல்.  கேட்பது கடினம்.

மூக்கு – மீன் வாடை, கஸ்தூரி மணம், பின் மூக்கில் வலி, அழுத்தினால் குறைதல்.

முகம் - கீழ்த்தாடைப் பற்குழியில் பிளக்கும்,  கிழிக்கும் வலி.   கன்னங்களில் அரிக்கும் தினவு.  ஊரும் உணர்ச்சி.                                

வாய் -  வாய் சூடான உணவோ, வெந்நீரோ பற்களில் பட்டால் வலி.  வாயிலும், ஈறுகளிலும் புண்கள்.  செம்பு, கசப்பு, உலோகச் சுவை.  நாக்கின் மீது வெள்ளைப்படிந்திருத்தல்.

தொண்டை – தொண்டைக் குழியில் அரிக்கும்   தினவு.

இரைப்பை –  உண்ணும் ஆவல் (ஹஞஞநுகூஐகூநு) குறைதல்.  தாகமின்மை.  விக்கலால்  கோபம், சிடுசிடுப்பு ஏற்படுதல்.  நிற்கும்போது இரைப்பைக் குழியில் குமட்டல் தோன்றுதல்.  குடிக்க வெறுத்தல்.  கொழுப்பு உணவைத் தின்றதால் ஏற்படும் குமட்டல்  போலிருத்தல்.  ஏப்பம் சிறுநீர் வாடை போல் வீசுதல்.

வயிறு – தூங்கும்போது வயிற்றில் இரைச்சல்.  மண்ணீரல்   வீங்கிக், கடினமாகிப் புண்ணாக இருத்தல்.  கல்லீரல்   பகுதியில் தொடர்ந்து வலி.  தொட்டால் அதிகரித்தல்.  குமட்டலுடன் குடல்கள் கீழிறிங்குவது போலிருப்பதால் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமென விரும்புதல்.  மிருதுவான மலத்தைக் கழிக்கக் கடினம்.  வயிற்று நீர்க்கோப்பு    ஆசனவாயில் ஆழமான வெடிப்புகள் நடிக்கும்போது அடிக்கடி வலி தருதல்.  குழந்தைகளின் வயிற்றுப்போக்கு.  மலத்தை முக்கி வெளியேற்றும்போது சுக்கில நீர்   வருதல்.  கீரிப்பூச்சிகள்.

சிறுநீர் வழி – சிறுநீர்ப் பையில் வலி.  அடிக்கடி அதிகளவு சிறுநீர்க் கழித்தல்.  சிறுநீர் கழிக்கும் போது சில நேரங்களில் வயிற்றில், சிறுநீரகங்களில் வலி.

ஆண் - ஆண்குறியில் தினவு.   மஞ்சள் நிறக் கசிவு.  உறுப்பு குளிர்ந்து, தளர்ந்து, தொள தொளத்துச் சிறியதாகி, பாலுணர்வு முழுவதும் இழந்த நிலை.  அடிக்கடி வெட்டை நோயால் தாக்கப்பட்டவருக்கு ஏற்படும் கசிவுடன் கூடிய ஆண்மையின்மை   விரைகள் குளிர்ந்து, வீங்கி, வலியோடு கடினமாக இருத்தல்.  நாட்பட்ட சளி போன்ற கசிவால்   பாலுணர்வுற்றோ, விரப்பற்றோ காணப்படுதல்.  தானாக விந்து வெளியாதல்  

பெண் - பால் சுரக்காமையுடன்  கவலை.  வெள்ளைப்பாடு துணியில் மஞ்சள் நிறக் கறையை ஏற்படுத்தும்.  உடலுறவில் அருவருப்புக் கொள்ளுதல்.  மலடு    குறைந்த மாதவிடாய், உறுப்புக்கள் தளர்வுடன் வெள்ளைப்பாடு    தன் உணர்வை இழுக்கச் செய்யும் நோயாகிய ஹிஸ்டீரியாவில்   இருதய படபடப்புடன் மூக்கில் இரத்தம் ஒழுகுதல்.  குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் ‘செத்தை வெளியாகாமல் தங்கி விடுதல்

மூச்சுப்பகுதி – மாடிப்படிகளில்  ஏறும்போது மூச்சடைப்பு.  நுரையீரல்களில் வறண்ட உணர்வு.  மார்பு எலும்புப் பகுதியில் அழுத்தம்.  ஆழ்ந்து மூச்சிழுத்தலால் அதிகரித்தல்.  படுக்கப் போகுமுன் இருமல்.

இருதயம் - நரம்பு நோயால் வேதனைப்படுகிற இளைஞருக்கு புகையிலையைப் பயன்படுத்தியக் காரணத்தால் இருதயம் மிக வேகமாகச் செயல்படுதல்.

கழுத்து, முதுகு – கீழ் முள்ளெலும்பில் ஆழ்ந்த கூர்ையான வலி.

கை, கால்கள் – கை விரல் மூட்டுகளில் வீக்கம்.  கிழிக்கும் வலி.  முடிச்சுகள்.  குளிர்ந்த முழங்கால்கள்.  நடக்கும்போது பாதங்கள் திரும்புதல்.  கால் விரல் மூட்டுகளில் வலி அதிகரித்தல்.

தோல் – புண்களைச் சுற்றி மாலையில் தினவு.

தூக்கம் - கவலையால் தூக்கமின்மை.  ஆவலானக் கனவுகள.  அடிக்கடி பயத்தால் எழுதல்.

காய்ச்சல் – பாதங்கள் ஈரமாவதால் தோன்றிய பின் விளைவுகள்.  உள்ளே சில்லிப்பும், நடுக்கமும் வெளியே வெப்பமாகவும் இருத்தல்.  குளிரும், சூடும் மாறி வருதல்.  திறந்த வெளிக்காற்றில் நடந்தால் கைகள் வியர்த்தல்.

அளவு – 1 சி முதல் 6 சி.

ஒ.கு.ம. – கார்ப் அனி. செலிடோ. நக்ஸ்.வா. 

மு -  காம்பர், நேட்.மூர்.

உ – ஒலியாண்டர், பாஸ்-ஆசிட்.

ம.செ.கா. – 14 நாள்.

முக்கியக் குறிப்புகள் -   அக்னஸ் காஸ்டஸ்- விறைப்பு இல்லை.  உறுப்பு குளிர்ந்து, தளர்ந்துள்ளதால் உடலுறவில் விருப்பமில்லை.  அதிக அளவு அனுபவித்ததால் இளமையில் முதுமையானவர்.  கோனியம் -  ஆசை அதிகம், சக்தி குறைவு, பாலுணர்வு இச்சையை அடக்டிகயதால் பாதிப்புகளுக்கு ஆளானவர்.  பாலுணர்வு பயத்தால் குறைந்தளவே விறைப்பு ஏற்படுதல்.   சபால் செருலூட்டா – புணர்ச்சியின்போது விந்து வெளிவரும் நேத்தில் வலி.  விரை இளைத்து, உறுப்பு குறிர்ந்து, ஆண்மை இழந்து விடுதல்.    செலினியம் -   புணர்ச்சிக்கு முயல்கிறார்.  ஆனால் உறுப்பு தளர்ந்து விடுகிறது.  விந்து வாடையற்று, நீர் போலாகிறது.  தூங்கும் போது விந்து கசிகிறது.  உடலுறவில் அதிகப் பேரவாவால், எப்படியெல்லாமோ ஈடுபடலாம் என்ற எண்ணம்.  இருப்பினும் விறைப்பின்போது ஆண்மை முவதும் இழந்து வாடுதல்.  புணர்ச்சி முடிந்து விட்டால் எளிதில் கோபப்படுவார்.  கலாடியம் - உறுப்பு பார்ப்பதற்குப் பெரிதாக, உப்பி, தளர்ந்து, குளிர்ந்து, வியர்த்து இருத்தல்.  பாதி தூக்கத்தில் விறைக்கும்.  விழித்து விட்டால் முழுவதும் அடங்கிவிடும்.  உணர்விழந்தவர்.  உணர்ச்சியும், மனவெழுச்சியின்போது உறுப்பு தளர்ந்து விடுதல்.  கட்டித் தழுவும் போது உணர்வோ, விந்து வருவதோ இல்லை.  காப்சிகம் - ஆண்மையற்றத் தன்மையுடன் விரைப்பை குளிர்ந்திருத்தல்

அகாவ் அமெரிக்கானா AGAVE AMERICANA K.RAJU

 

அகாவ் அமெரிக்கானா  

 AGAVE AMERICANA

CENTURY PLANT

AMARYLLIDACETAE

 

மியாசம் :  சோரா.  சைக்கோசிஸ்

 

ம.வே.ப. :  இரைப்பை

 

பொது – களைப்பு, மயிர்க்கால்களில் குறைந்த அளவு இரத்தப்போக்கு.  தண்ணீரைக் கண்டால் பயம். உணவில்   வைட்டமின் ‘சி ’ குறைவால் ஏற்படும் நோய்கள்.

மனம் - சண்டையிடுதல், திடீர்ப் பயம்.

முகம் – வெளுத்திருத்தல்.

வாய் - ஈறுகள் வீங்கி இரத்தம் வருதல்.

இரைப்பை – பசிக் குறைவு, இரைப்பையில் வலி

வயிறு – மலச்சிக்கல்.

சிறுநீர் வழி – மெதுவாக வலியுடன் சிறுநீர்க் கழித்தல்  

ஆண் – வெட்டை நோயில்   ஆண் உறுப்பு வலியுடன் விறைத்தல்.

கை, கால்கள் – கால்களில் கருஞ்சிவப்பு, நீலநிறத்தில் கொப்புளங்கள்   வீங்கி வலியுடன் கனமாக இருத்தல்.

அளவு – தாய்க் கரைசல் க்யூ.

ஒ.கு.ம. – லைசின், ஆலோ, லாக்கசிஸ்.

அகாரிகஸ் மஸ்காரியஸ் AGARICUS MUSCARIUS K.RAJU

 

அகாரிகஸ் மஸ்காரியஸ்

 AGARICUS MUSCARIUS

TOAD STOOL FUNGI

நோய் கூடுதல்< :

      திறந்தவெளி குளிர்ந்தக் காற்று, பனியாக உறையுமளவு வீசும் காற்று, இடியுடன் கூடிய புயலுக்கு முன்.  மனக்களைப்பு, புணர்ச்சிக்குப்பின் களைப்பு, தீய பழக்கங்கள், மது அருந்துதல், தொடுதல், மாதவிடாயின்போது, திடீர்ப் பயம்.  காலை சூரியன், தண்டுவடப் பகுதியில் அமுக்கினால் தானாகச் சிரித்தல், உண்ட பின்பு.

 

நோய் குறைதல்> :

      மெதுவாக நகர்தல்.  திறந்த வெளிக்காற்று, வெப்பம்,  ஒத்தடம் தருதல்.

 

மியாசம் :  சோரா, சிபிலிஸ். 

 

ம.வே.ப. :  தலை பின்புறம், தண்டுவடம், இரத்த ஓட்டம், இருதயம், மார்பு.

 

பொது – இது ஒரு நஞ்சுள்ளக் காளான்.  இரத்தத்தை மெல்லியதாக்கும்.  இந்த நஞ்சு உடனே செயல்படுவதில்லை.  பொதுவாக உடலைத் தாக்க பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு மணி நேரமாகும்.  மெதுவாகச் செயல்படும்.  இதற்கு முறிவு மருந்து கிடையாது.  தூய சாராயத்தை விட, மூளையில் மயக்கத்தை ஏற்படுத்தித் தலைச்சுற்றலையும், சன்னியையும் தொடர்ந்து, ஆழ்ந்தத் தூக்கத்துடன் தன் விருப்பம்போல் செயலாற்ற இயலாமையை ஏற்படுத்தும்.  ஆரம்பகால காசநோய்.  இரத்தச் சோகை.  விட்டு விட்டு நரம்புகள் சுண்டுதல்.   திடீரெனத் தூக்கிப் போடுதல்.  நடுங்குதல்  தினவெடுத்தல்.  இதன் குறிப்பிடத்தக்கக் குறிகள்.  ஒழுங்கற்ற, கோணங்களுள் நிச்சயமற்ற, மிகைப்பட நகர்தல்.  அதிக பாதிப்பால் நோயாளி தள்ளாடுவார்.  பொருள்களைக் கீழே போட்டு விடுவார்.  நடக்கும்போது காலடிகளைத் தொலைவில் தூக்கி வைப்பார்.  பயந்து அமைதியற்றிருத்தல்.  கண் இமைகளும், நாக்கும் சிறப்பாகப் பாதித்தல்.  வலது கை, இடது கால் பாதிப்பு, இசிவு, இழுப்பு, வலிப்பு யாவும் தூங்கி விட்டால் குறைதல்.  காக்கை வலிப்பு, இசிவுக்குப்பின் உடல் பலம் அதிகரிப்பால் கனமுள்ள பொருள்களைத் தூக்குவார்.  குழந்தைகளைத் திட்டுவதால், தண்டிப்பதால், ஏற்படும் இசிவுக்கும், புணர்ச்சி, பால் உணர்வை அமுக்கப்பட்டதற்குப் பின்பு ஏற்படும் இசிவுக்கும் ஏற்றது.  மூளைப் பாதிப்பால் தாமதமாகப் பேசும், நடக்கும் குழந்தைகள்.  நோய் வருமுன் கொட்டாவி விடுதல்.  திருமணமான பயந்த இளம்பெண்கள். புணர்ச்சிக்குப் பின் மயக்கமுடைதல், ஓட்டப் பந்தய விளையாட்டு வீரர்களுக்கு மண்ணீரல் குத்தும் வலியைப் போக்கும்.  பல பகுதிகளில் பனிக்கட்டியைத் தொட்டது போலும் அல்லது குளிர்ந்த ஊசிகளால் துளைப்பது போன்ற உணர்வு.  சிறைகள் வீங்கி, தோல் சில்லிட்டிருத்தல், தசைகளைத் தொட்டால் வீக்கமுள்ள உணர்வு.  நடந்தால் குறைதல்.  பருத்த உடல்    மூட்டு இணைப்புகள் நழுவி விட்ட உணர்ச்சி.  இலேசான மயிரும், தளர்ந்த தசைகளும், தோலும் உடையவர்கள்.  முதுமையடைந்தவர்களுக்கு மந்தமான இரத்த ஓட்டம்.

மனம் - மந்தபுத்தி, மனோதிடமில்லாமை, வேலை செய்ய வெறுப்பு.  கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாமை, பேச விரும்பாமை, தானாகப் பாடுவார்.  பேசுவார்.  ஆனால் கேள்விகளுக்கு மட்டும்பதில் சொல்ல மாட்டார்.  குழப்பம், திகில், அமைதி, பிரமையும் சன்னியின்போது படுக்கையை விட்டு வெளியேறுதல்.  தொடர்ந்து பைத்தியம் பிடித்தவர்போல் உளறிக்கொண்டு, தன் உணவையும், மருந்துகளையும் பக்கத்திலுள்ள தாதி மீது வீசி எறிதல்.  நீண்ட மனவெழுச்சியால் அல்லது உணர்ச்சியுடன் விவாதம் செய்வதால் தலைச்சுற்றல் வருதல்.  பயமின்மை, சுயநலவாதி, அலட்சியம், பிடிவாதம், சிடுசிடுப்பு, இணங்காமை, தினசரி செய்ய வேண்டியதைச் செய்யாமல் மாறுபட்டுச் செய்வது, அவலட்சணமான, கேவலம் உள்ள செயல்கள் செய்தல, அணைத்துக் கொண்டு கைகளுக்கு முத்தமிடுதல், படிப்பில் மந்தமுள்ள குழந்தைகள்.

இம்மருந்து நிரூபணத்தின்போது மூளையில் நான்கு நிலைகளைத் தோற்றுவித்தது.

1.     முதல்நிலை - சிறிது ஊக்கம், மகிழ்ச்சி, துணிவு, அதிகம் பேசுதல், உயர்ந்த மனோபாவம்.

2.     இரண்டாம் நிலை – அதிக நிச்சயிக்கப்பட்ட மதிமயக்கம், அதிக மனவெழுச்சி,முரண்பட்ட பேச்சு, மிதமிஞ்சி நடக்கும் தோரணை, துக்கத்துடன் மாறி மாறி வருதல்.  அறியும் சக்தி இழந்து விடுவதால், உருவத்தின் அளவு தெரியாது.  அதனால் சிறிய பொருட்கள் பெரியதாகவும், சிறிய துளை மிக ஆழமுள்ள பயங்கரமான பள்ளமாகவும், ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஒரு ஏரி போலும்,  ஒரு சிறிய கல்லைத் தாண்டும் போது பெரிய கல்லென்று நினைத்து நீண்ட காலடி வைத்தலுமான மனம்.  அதிக இசிவின்பின் உடல் பலம் வளர்ந்து கனமான சுமையைத் தூக்கக்கூடும் 

3.     மூன்றாம் நிலை- மிக வெகுண்ட அலலது மூர்க்கத்தனமான சன்னியில் வீறிடுதல், உளறுதல், தன்னையே காயப்படுத்திக் கொள்தல் முதலியன.

4.     நான்காம் நிலை – மனச்சோர்வு, அலட்சியம், சக்தியின்மை, குழப்பம், வேலை செய்ய விரும்பாமை முதலியன. பெல்லடோனாவில் உள்ளதைப்போல் வேகமாக மூளையில் அடர்த்தியைக் காணமுடியவில்லை.  ஆனால் பொதுவான நரம்புக் கிளர்ச்சியைக் காய்ச்சல், சன்னி, மது மயக்கம் முதலியனபோல் இதில் காண முடிகிறது.

தலை – தலைவலி மலம் கழித்தபின் குறைதல்.  தலைவலியானது மூக்கில் இரத்தப்போக்குடனும், கெட்டியான சளியுடனும் இருத்தல்.  சூரிய ஒளியால், நடந்தால் தலைச்சுற்றல்.  பின்பக்கத் தலை கனமாக இருப்பது போன்ற உணர்வால் பின்பக்கமே சாய்தல்.  சாய்வு மேஜையில் உட்கார்ந்து நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும் மந்தமான தலைவலியால் தலையை முன்னும், பின்னும் ஆட்டுதல், அசைத்துக் கொண்டேயிருத்தல்.  வெப்பமான துணியால் தலையை மூடிக்கொள்ள விரும்புதல்.  ஒரு ஆணியைத்  தலையின் பக்கவாட்டில் செலுத்துவதுபோல் வல இருத்தல்.  பனிக்கட்டி போல், தலையில் குளிர்ச்சியுடன் நரம்பு வலி.  குளிர்ந்த ஊசிகள் உள்ளது போல் உணர்ச்சி.  மது அருந்துதல், அதிக உடலுறவு, குறைபாடுள்ள இரத்த ஓட்டம் ஆகியவைகளினால் ஏற்படும் தலைவலி.  வலியின்போது காய்ச்சலில் நோயாளிக்கு சன்னி வருதல்.  அதோடு விழித்துள்ளபோதே தூக்கிப் போடுதல்,  இழுத்தல் கூட இருக்கும்.

கண் - கண்கோளம் ஊசலாடுதல், இரட்டைப் பார்வை, மங்கல்,  எழுத்து நகர்வது, நீந்துவதுபோல் இருப்பதால் படிக்க இயலாமை.  இமைகள் துடித்தல்.  இமைகளின் ஓரம் சிவந்து, தினவு, எரிச்சலுடன் ஒட்டிக் கொள்ளுதல், கண்களுக்கு அதிக வேலைத் தருவதால் பார்வைக் குறைதல்.    கண் ஓரத்தில் பிசின் இருத்தல்,  இரண்டு இமைகளுக்கிடையே உள்ள இடம் குறுகுதல், ஓரப்பார்வை, கிட்டப்பார்வை.

காது – காதுகளின் தசைகள் சுண்டுதல்.  ஒலிகள் கேட்டல்.  காதினுள் சிவந்தும், எரிச்சல் வலியுடன் தினவு எடுத்தல்.

மூக்கு – சளி ஒழுகல் இல்லாமல் அடிக்கடி தும்முதல்.  நீர் ஒழுகல்.  இருமலுக்குப் பின் தும்முதல், உள்ளேயும், வெளியேயும் தினவெடுத்தல்.  வயதானவர்களின் மூக்கில் இரத்த ஒழுகல்.  மூக்கிலும் வாயிலும் புண்ணுள்ள உணர்வு.  நாற்றமுள்ள கருஞ்சிவப்பு இரத்தம் வருதல்.  குனிந்தால் மூக்கடைப்பு ஏற்படுதல்.  பனிப்புண்ணால் ஏற்பட்டது போல் சிவந்த மூக்கு.

முகம் - முகத் தசைகளில் விறைப்பு.  இழுப்பு, தினவு, எரிச்சல்.  கன்னங்களில் கீறும், கிழிக்கும் வலிகள்.  நரம்பு வலியில் குளிர்ந்த ஊசிகள் நரம்புகளினூடே ஓடுவது போன்ற உணர்ச்சி.  முகம் நீல நிறத்துடன் உப்பி இருத்தல்.  முகபாவம் மூடனாகத் தோற்றமளித்தல்.  மேலுதட்டில் கொப்புளங்கள், வெடிப்புகள்.

வாய் -  வாய் மூலைத் தொங்குதல்.  பாரிச வாயுவால் உமிழ்நீர் ஒழுகுதல்.  வாய்க் கூரையில் புண்.  எந்நேரமும் தாகமெடுத்தல்.  நாக்கு வெள்ளைபடிதல், நடுங்குதல், வாயில் நுரை.  கசப்பான உமிழ்நீர், இனிப்பு, கசப்புச் சுவை.  தெளிவற்ற, உளறல் பேச்சு, ஈறுகள் வீங்கி வலியும், இரத்தமும் இருத்தல்.

தொண்டை – சுருங்கியிருக்கும் உணர்வு.  சிறிய கெட்டியான உருண்டைச்சளி  வெளியாகுதல்.  தொண்டை வறட்சி விழுங்க இயலாமை.  ஒரு அடி கூட பாட முடியாமை.

இரைப்பை –  எரிச்சலுடன் தாகம்.  மிகப் பசியிருக்கும்.  விழுங்க இயலாமை.  விக்கலும், ஏப்பமும் விட்டு விட்டு வருதல்.  இயற்கைக்கு மாறுபட்ட பசி.  உணவு உண்டு மூன்று மணி நேரத்திற்குப்பின் இரைப்பையில் எரிச்சல். கல்லீரல் பகுதியில் கூர்மையான வலியுடன் கோளாறுகள் ஏற்படல்.  இரைப்பையின் மேல் பகுதியில் ஏதோ கட்டி உள்ளது போல் இருத்தல்.  ரொட்டி, கறி வெறுப்பு, வெண்ணெய், பீர் விருப்பு.

வயிறு – இடதுபுற விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனப் பாயும் வலி.  அதிக நாற்றமுள்ள வயிற்றுப்போக்கு.  நாற்றமுள்ள மலம். வயிற்றிலிருந்து அதிகளவு காற்று ஆசனவாய் வழியாக வெளியேறும்போது நாற்றமிருப்பதில்லை.  சூடானக் காற்று வெளியாதல்.  கல்லீரல், மண்ணீரல், வயிறுகளில் பாயும் வலி.  நெளிதல், கடகடவென ஓசையும், புளிப்பேறிய குடல்கள்.

சிறுநீர் வழி – புறவழியில் பாயும் வலி.  திடீரெனக் கடுமையுடன் அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், அவசரப்படுதல், குளிர்ந்த சிறுநீர், பிசினாக ஒட்டும் தன்மையுயை சளி வருதல்.  சிறுநீர் மெதுவாக அல்லது சொட்டாக வருவதோடு கழிக்க அழுத்துதல்.

ஆண் - சூடான விந்து. பாலுணர்வு விருப்பு அதிகமாதல்.  உடலுறவின்போது இதயத்துடிப்பு.  உடலுறவுக்குப்பின் மிகப் பலவீனம்.  அதிகம் வியர்த்தல், தோலில் எரிச்சலும், தினவும், விறைப்பும், விலா எலும்புகளுக்குக் கீழ் அழுத்துதலும் இருத்தல்.  அகாலத்தில் விந்து வெளியாதல்.  விரைகள் வலியுடன் பின்பக்கம் இழுத்தல்.  பாலுணர்வுத் தீய பழக்கங்களால் ஏற்படும் பின் விளைவுகள்.

பெண் - அதிகத் தினவுடன் வெள்ளைப்படுதல்.  உடலுறவு, மகப்பேற்றுக்குப்பின்னும் ஏற்படும் கோளாறுகள்.  விட்டு விட்டு வரும் மாதவிடாய் வலி.  முலைக்காம்பில் தினவும்,  எரிச்சலும், பாலுணர்வு அதிகரித்தல்.  மாதவிடாய் நின்றபின் உறுப்புகள் கீழே இறங்குவதும், அதனால் அதிக வலி.  பால் அமுக்கப்பட்டதால், மூளை, இரைப்பை, குடல்களில் நோய்கள் ஏற்படுதல்.  பிறப்பு உறுப்பிலும், முதுகிலும், தினவும் கிழிக்கும், அழுத்தும் வலிகள்.  மாதவிடாய் மிக அதிகரித்தல்.  வெள்ளைப்பாடு கருஞ்சிவப்பு இரத்தத்துடன், புண் ஏற்படச் செய்யும் தன்மையில் நோயாளியால் நடக்க இயலாமை.

மூச்சுப் பகுதி – ஒரு தும்மலுக்குப்பின் நின்றுவிடும் இருமல். மூச்சடைத்தல்.  தண்டுவடத்திலிருந்து இருமல் வருவதுபோல் உணர்ச்சி.  அவ்வப்போது இருமல் தோன்றி பிறகு தும்மல் வருதல்.  கடுமையாகத் தாக்கும் இருமலைத் தன் மனவலிமையால் அமுக்குவதால், உண்டபின் அதிகரித்தல்.  இருமல் முடியும்போது தலைவலி.  இரவில் தூங்கச் சென்றபின் தோன்றும் இருமலில் கோழை சிறு உருண்டைகளாக வெளி வருதல்.  மார்பு குறுகிவிட்டதாகத தெரிதல்.  சீழ்ப்போல் சளி.

இருதயம் - புகையிலையைப் பயன்படுத்திய பின்பு ஒழுங்கற்ற நடுக்கமுள்ள இதயப் படபடப்பு.  உடலுறவின்போது படபடப்பு.  நெஞ்சு வலி.  படபடப்புடன் முகம் சிவந்து இருத்தல்.  நாடி விட்டுவிட்டு, ஓழுங்கற்று ஓடுதல்.  அழுத்தும், எரியும், அடிப்பதுமான வலி இருதயத்திலிருந்து இடது தோள்பட்டைக்குச் செல்லுதல்.  திடீரென ஏற்படும் ஒலி,  இருமல், ஏப்பம் ஆகியகைளால் இருதயப் பகுதியில் அதிர்ச்சி காணல்.

கழுத்து, முதுகு – அதிக உடலுறவால் தண்டுவடத்தில் உறுத்தல்.  முதுகெலும்பு ஒன்றில் சூடு.  இடுப்பும், அதன் கீழ்ப் பகுதிகளில் பகலில், உழைப்பதால், உட்காருவதால் புண்ணுள்ள வலி அதிகரித்தல்.  ஒவ்வொரு அசைவின்போதும், தொட்டால் உணர்வுடன் இருத்தல் அதிகரித்தல்.   இடுப்பு வலி.  திறந்தவெளி காற்றால் அதிகரித்தல்.  முதுகில் தசைப்பிடிப்பு, குனிந்தால் உடைந்து விடுவதுபோல்  உணர்தல்.  கழுத்துத் தசைகள் சுண்டுதல்.  தண்டுவடத்தின் மீது ஊர்வது போலிருத்தல்.

கை, கால்கள் – இடுப்பில் பலவீனம்.  இடுப்புக்கு மேல் வலி.  படுத்தால் கை, கால்களில் விறைப்பு.  கால்களைக் குறுக்கே போட்டால் மரத்துப் போதல்.  கெண்டைக் கால்களில் இறுக்கும், கிழிக்கும் வலி.  வலது கையால் எழுதும்போது நடுங்குதல்.  அதிகமாய் எழுதியதால் பாரிசவாயு  தாக்கப்பட்டதாக உணர்வு.  உள்ளங்காலில் இழுப்பு.  கால் பெரிய எலும்பில் வலி.  புட்டங்களில் குளிர்.  கால்கள் கனம்போல் உணர்ச்சி.  தன் கைகால்கள் தன்னுடைது அல்ல என்று எண்ணுதல்.  இடது கையில் பாரிசவாயுவுடன் வலியைத் தொடர்ந்து இதயத்துடிப்பு.  கால் பெருவிரல்ாகளில் தினவும், பாதங்கள் பனியால் உறைந்து விட்டது போல் இருத்தல்.   நரம்பு வலியால் தள்ளாடி நடத்தல்.  பொருள்களை விரல்களால் பிடிக்கும்போது அை தானாக விலகுதல்.  நிலையற்ற நடை.  கால்களில் பாரிச வாயுடன்கைகளிலும் அமைதியற்றும் இருத்தல். நீண்ட எலும்புளில் இடம்விட்டு நகர்ந்தபின் வீக்கம் போலிருத்தல்.

தோல் – தினவு, எரிச்சல், சிவந்து, வீங்கி, உறைபனியால் தாக்கப்பட்ட புண்போல் இருத்தல்.  சொறிந்தால் இடம் மாறுதல், எரிச்சலும், தினவும் பொறுக்க டியாது.  வீங்கிய சிரைகளுடன் குறிர்ந்தத் தோல்கள்.  மிக அதிகக் குளிர்ச்சியால் கை, கால்களில் ஏற்படும் சிரங்கு     குளிர்ச்சியாக உள்ளபோது தோலில் வலிகள்.  பருக்கள், கடினமாக, தெள்ளுப்பூச்சிக்கடி போல் இருக்கும்.  சிவந்த, வட்டமான, விளிம்புள்ள, சீழ்க்கோர்த்தப் பரு தோல் மீது தடித்துக் காணப்படுதல்.  சிறிது அடிபட்டாலும் இரத்தம் கட்டிக் கொள்ளுதல்.

தூக்கம் - அடிக்கடி கொட்டாவி விடுவதால் திடீரென நோய்த் தாக்குதல்.  கொட்டாவியைத் தொடர்ந்து தானாகச் சிரித்தல்.  பகலில் தூக்கக் கலக்கத்துடன் இருத்தல.  வழக்கத்துக்கு மாறான தூக்கம்.  தூக்கம் வரும்போது வரும் இழுப்பால் திடுக்கிட்டு அடிக்கடி விழித்துக் கொள்ளுதல்.  பகல் விருந்துக்குப்பின் தூக்கம், ஆனால் கால்களில் வலியுடன் சக்தியற்றிருப்பதால்  தூங்க இயலாமை.  தெளிவான, குழப்பமான, பயங்ரமான, வெறுப்பான, கெட்டக் கனவுகளால் தூக்கம் கெடுதல்.  மாலையில், இரவில், நடுநிசிக்குப்பின், படுக்கையில், புணர்ச்சிக்குப்பின், சிறு உழைப்பால் வியர்த்தல்.

காய்ச்சல் – குளிர்ந்த காற்று மிகவும் பாதித்தல்.  மாலையில் கடுமையான சூட்டுடன் தாக்குதல்.  அதிக வியர்வையும், எரிச்சசுலும் இருத்தல்.

அளவு – 3சி முதல் 200 சி.

ஒ.கு.ம. – அக்டி ரசி, பொவிஸ்டா, பெல், கன்னபிஸ் இன், கல்.கார்ப், சிகூடா, ஓபியம், பல்ஸ், ரஸ்டாக்ஸ்,  நக்ஸ்.வா. ஸ்டிரமோனியம்.

பூ – கல்கேரியா கார்ப்.

மு -  அடுப்புக்கரி,. காபி, வைன், பிராந்தி, காம்பர், ‘கொழுப்பு.

உ – பிசியாஸ்டிக்மின்,  டியூபர்.

ம.செ.கா. – 40 நாள்.

முக்கியக் குறிப்புகள் -  1. பேசத் தாமதம்-நேட்ரம் மூர், நடக்கத் தாமதம்-கல்கேரியா கார்ப். பேசவும், நடக்கவும் தாமதம்-அகாரிகஸ்.  2. நெருப்பின் அருகில் உட்கார விரும்புதல்-அகாரிகஸ்,  விலகி இருக்க விரும்புதல்-அபிஸ்மெல்.  3. மலம் கழித்தால் தலைவலி குறைதல்-அகாரிகஸ். சிறுநீர் கழித்தால் தலைவலி குறைதல்-ஜெல்சிமியம், உரையாடுவதால் தலைவலி குறைதல்-டல்கேமரா. 4. பனிக்கட்டி குளிர்ச்சியைத் தலையில் உணர்தல்-வெராட்ரம் ஆல்பம். பனிக்கட்டி போல் குளிர்ந்த ஊசிகள் நரம்புகளில் ஊடுருவும் உணர்ச்சி-அகாரிகஸ்.  சூடுள்ள ஊசிகள் ஊடுருவும் உணர்ச்சிஆர்சனிக்ம் ஆல்பம். 5. வலது கை, இடது கால் பாதிப்புஅகாரிகஸ்.  இடது கை, வலது கால் பாதிப்பு-டாரண்டுலா ஹிஸ்பானிகா.                                                                 

எதுசா சைனாபியம் AETHUSA CYNAPIUM K.RAJU

 

எதுசா சைனாபியம்

 AETHUSA CYNAPIUM

FOOL’S PARSLEY

UMBELIFERACEAE

நோய் கூடுதல்< :

      பால், அடிக்கடி உண்ணுதல், பல் முளைத்தலால், அளவு மீறிய உழைப்பு, வெப்பம், வாந்திக்குப் பின் ோடைக்காலம், மாலை, குளிர்ந்த நீர், மலம் கழித்தபின், காலை 3.00 முதல் 4.00 மணி வரை, காபி.

 

நோய் குறைதல்> :

      திறந்தவெளிக்காற்று, உரையாடுதல், துணையிருத்தல், ஓய்வு,  தலையை இறுக்கிக் கட்டுதல்

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ். 

 

ம.வே.ப. :  மூளை, கழுத்து, கல்லீரல், நரம்புகள், தலை பின்பக்கம்.

 

பொது – கடுமை   இதன் முக்கியக் குறியாகும்.  கடுமையான வாந்தி, வலிப்பு, வலிகள், கத்துதல் யாவும் குழந்தைகளின் நோய்களில் காணப்படும்.  பால் எவ்வகையிலும் ஒத்துக் கொள்ளாததால், குடித்தபின் தயிராக வாந்தி எடுத்தல்.  வாந்தி எடுத்தபின் பலவீனமும் தூக்கமும் ஏற்படுதல்.  பல் முளைக்கும் காலத்திலும், கோடையிலும் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்.  மனமும், உடலும் பலவீனப்படுவதால் அதிருப்தி.  தன்னால் பேச இயலாமையைத் தெரிவித்தல்.  நோய் அதிகமாக ஆக நோயாளி அழுவார்.  வேதனைப்படுவார்.  வலிப்புகளில் கட்டைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு முகம் சிவந்து, கண்பாவைகள் குத்திட்டு விரிந்து கண்கள் ஒளியுடையதாய் கீழ்நோக்கியப் பார்வையும், சொருகியும், வாயில் நுரை தள்ளி, தாடைகள் கிட்டித்தும், நாடித்துடிப்பு வேகமாகவும் உடல் குளிர்ந்து, வியர்த்துக் காணப்படும்.  உட்காரவோ, எழவோ, தலையை நிமிர்த்தவோ முடியாது.  நோய்க்குறிகள் இல்லாத நிலையிலேயே தலைமை நிமிர்த்த இயலாதக் குழந்தைகள்.    தூங்கச் செல்வார், எழுவார், உண்பார், வாந்தி எடுப்பார்  உண்டபின் ஒரு மணி நேரம் கழித்து பசுமையுள்ள கடுமையான வாந்தி.  வாந்திக்குப் பின் மீண்டும் பசி எடுக்கும்.  இது இம்மருந்தின் சிறப்புக் குறி.  வாந்தியாகும், குமட்டல் இருக்காது.  தலை, முகம், கைகளில் வீக்கமுள்ள உணர்வு.  கழுவினால் அதிகரித்தல்.  அறைக்கு வந்தால் குறைதல்.  நடந்தபின் கைகளில் வீக்கமுள்ள உணர்ச்சி.  முறையாக ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்.

மனம் - சிந்திக்கவோ, எண்ணத்தை ஒரே இடத்தில் நிலை நிறுத்தவோ இயலாமை.  அமைதியற்று ஆதங்கத்துடன் அழுதல்.  குழப்ப மனம்.  எலிகள் அறையின் குறுக்கே ஓடுவதாகவும், பூனைகளை, நாய்களைக் காண்பதாகவுமான கற்பனை எண்ணம்.  அறியாமையினால் ஆத்திரம், கோபம் மாறி மாறி ஏற்படுதல், முட்டாள் குழந்தைகள்.  தேர்வு என்றாலே பயம்.  உற்சாகமின்மை.  சன்னியின்போது சன்னல் வழியாகவோ, படுக்கையிலிருந்தோ குதிக்க எண்ணுதல்.  முற்பகல் மகிழ்ச்சியாகவும், பிற்பகலில் கோபமாகவும் இருத்தல்.  படிப்பதையே  வெறுத்து ஒதுக்கும் பள்ளி மாணவ மாணவிகள தேர்வின்போது குழப்பத்தால் மனமுடைந்து எண்ணம் சிதறல் உள்ளவர்கள்.  உணர்வுகளுக்கும், வெளிப் பொருள்களுக்கும் இடையிலே ஏதோ ஒரு தடையுள்ளதுபோல் இருத்தல்.  நாக்கு நீண்டுள்ளதாகத் தெரிதல்.  நேற்று ஒரு ஆபரணம் செய்துள்ள எண்ணம் தொடர்ந்து இருத்தல்.  கண்களை மூடிக்கொண்டால் முகங்கள் தெரிதல்.  சன்னல் வழியாகக் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுதல்.  ஒலிகளைக் கேட்டு அழுதல்.

தலை – பின்பக்கத் தலைவலி கழுத்தின் வழியாகத் தண்டுவடத்திற்குச் செல்லுதல், கீழே படுப்பதால், அழுத்துவதால் குறைதல்.  தலைக்குறிகள் வயிற்றிலுள்ள காற்று வெளியேறுவதாலோ, மலம் கழிப்பதாலோகுறைதல்.  மயிர்கள் இழுக்கப்பட்டதுபோல் உணர்தல்.  இருதயத் துடிப்புடனும், மயக்கத்துடனும் தலைச்சுற்றல்.    தலைச்சுற்றல் நின்றபின் தலை சூடாகுதல்.  தலையின் இரண்டு பக்கங்களிலும் இடுக்கியில் சிக்கியுள்ள உணர்வு.

கண் - கண்கள் கீழ் நோக்கி சொருகுவதும், கண்பாவைகள் விரிந்தும், வெளிச்சத்தைப் பார்க்க இயலாமலும் இருத்தல்.  கண் இமைச் சுரப்பிகளில்   வீக்கம்..  தூங்கப் போகும் போது கண்கள் சுழலுதல்.  பார்க்கும் பொருள்கள் பெரிதாகவோ, இரண்டாகவோ தெரிதல்.  நாட்பட்ட கண் கூச்சம்.

காது – இரைச்சல், அடைத்தருப்பதுபோல உணருதல்.  காதுகளிலிருந்து ஏதோ சூடாக வெளியாவதாக உணர்ச்சி.

மூக்கு – நுனியில் கொப்பளங்கள்.  கெட்டியான சளியால் மூக்கடைப்பு.  அடிக்கடி தும்ம வேண்டுமென விரும்புதல்.  மூக்குப் பகுதி உள்ளிழுத்திருத்தல்.  மூக்கின் மீது கோடு.

முகம் - குழி விழுந்து, வெளுத்து, பருத்து, சிவந்தப் புள்ளிகளிருத்தல்.  செத்துப்போனத் தோற்றம்.  உதடுகளில் மங்கலான நீல, வெள்ளைநிறம், முகவாய்க் கட்டை, வாயின் மூலைகைளில் குளிர்ந்த உணர்ச்சி.

வாய் -  நாக்கு மிக நீளமாக உள்ளதாகத் தெரிதல். வறட்சி, புண், பேச சங்கடம்.

தொண்டை – எரிச்சல், சீழ்க் கொப்புளங்களால் விழுங்க இயலாமை.

இரைப்பை –  பால் குடித்தவுடனே ஒத்துக் கொள்ளாமல் தயிராக வாந்தியெடுத்தல்.  கடிக்கும் பசி.  வாந்திக்குப் பின் பசி.  உண்டபின் ஒரு மணி நேரம் கழித்து உணவுடன் வாந்தி.  வியர்வையுடன், பலவீனத்துடனுள்ள வாந்திக்குப் பின் குமட்டலும், தூக்கமும், வேதனையுடன் துவண்டு போகுதல்.  இரைப்பைத் தலைகீழாகத் திரும்பிவிட்டதான உணர்ச்சி.  கிழிக்கும்வலி இரைப்ையிலிருந்து உணவுக் குழலுக்குச் செல்லுதல்.  வாந்தி எடுக்க முயலுதல்.  ஒயின், மது குடிக்க விரும்புதல்.  காபி குடித்தால் அதிகரித்தல்.  கடுமையான வாந்தியில் பால் போன்று நுரைத்து வெளியாதல்.  ஓக்காளம் வருதல்.  மூளைக் களைப்பால் செரிமானம் தடைப்படுதல்.

வயிறு – வயிற்றுப் போக்கு மஞ்சள், பச்சை நிறத்துடன் இருத்தல்.  செரிமானமாகாத மலம்.  பிடிவாதமான மலச்சிக்கலால் குடல்கள் செயலிழந்துள்ளதான உணர்ச்சி.  குழந்தைகளின் காலரா போன்ற வயிற்றுப் போக்கால்  குழந்தை குளிர்ந்து, சில்லிட்டு, மந்த புத்தியுடன் இருத்தல்.  தொப்புளைச் சுற்றி நீர்க்குமிழிகள் உள்ளது போன்ற உணர்வு.  வயிற்றில் வலியுடன் உள்ளும், வெளியும் குளிர்ந்து இருக்கும்.  வயதானவர்களுக்குக் காலரா போல் பேதி.

சிறுநீர் வழி – சிறுநீரகங்களில்   வலி, அடிக்கடி சிறுநீர்ப் பையில்   வெட்டும் வலியுடன் சிறுநீர்க் கழிக்க அவசரத் தூண்டுதல்.

ஆண் - வலதுபக்க விரை மேல் நோக்கி இழுக்கப்பட்டதால் சிறுநீரகத்தில் வலி.

பெண் - அறுக்கும் வலியுடன் பால் சுரப்பிகளில் வீக்கம்.  நீர்ப்போல் மாதவிடாய்.  பிறப்புறுப்பில் கீறும் வலியும் அதன் வெளிப்பாகத்தில் பருக்களும், வெப்பமாக உள்ளபோது தினவெடுத்தல்.

மூச்சுப் பகுதி – மார்பில் இறுக்கும் வலியால் நோயாளிக்கு பேச இயலாமை.  இருமலால் தலையினுள்ளே வலி.  விக்கலால் மூச்சுத் தடைபடல்.

இருதயம் - தலைசுற்றல், தலைவலி, அமைதியின்மையுடன் கடுமையான இதயத் துடிப்பு.  நாடி வேகமாக, சிறியதாக, கடினமாக ஓடுதல்.

கழுத்து, முதுகு – கழுத்தின் பலவீனத்தால் தலையையே நேராக நிறுத்த இயலாமை.  முதுகு இடுக்கியில் சிக்கியது போல் உணர்ச்சி.  கழுத்தைச் சுற்றியுள்ள சுரப்பிகளில் பாசிமணி கோர்த்திருப்பது போல் வீக்கம்.  விறைப்புடன் பின்பக்கம் வளைவதால், உடலை நேராக வைப்பதால் முதுகுவலி குறையும் என்ற உணர்வு.

கை, கால்கள் – விரல்கள், கட்டை விரல்கள் இறுக்கிப் பிடித்த நிலை, கைகள், பாதங்களில் மரமரப்பு.  கைகள் சிறுத்துவிட்டது போன்று உணர்தல்.  நடக்கும்போது தொடைகள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் சிராய்ப்பு.

தோல் – எளிதில் வியர்த்தல்.  மூட்டுக்களைச் சுற்றித் தினவெடுக்கும் கொப்பளங்கள்.  சூட்டினால் குறைதல், கைகளின் தோல் வறண்டு, சுருங்கி இருத்தல்.  நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி பாசிமணி கோர்த்தது  போல தோல் மீது காணப்படுதல்.  உடல் குளிர்ந்து, சில்லிட்ட வியர்வையால் மூடப்பட்டிருத்தல்.  உடல் முழுவதும் நீர்க்கோப்பு     இரத்தக் குழாயிலிருந்து இரத்தமானது வெளியேறி திசுக்களிலும், தோலின்மீதும் நிறமாறி கருநீலமாகி அதாவது ஊமைக்காயம்போல் இருத்தல்

தூக்கம் - குளிர்ந்த வியர்வையாலோ, கடுமையாகத் திடுக்கிடச் செய்வதாலோ தூக்கம் கெடுதல்.  வாந்தி எடுத்து அல்லது மலம் கழித்தப்பின் சற்று கண்ணயர்வதோடு குழந்தை மிகவும் ளைத்திருப்பதால் உடனே தூங்கி விடும்.  முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், பயங்கரமானக் கனவுகளும் தோன்றுதல்.

காய்ச்சல் – தாகமற்ற அதிகச் சூடு.  ஏராளமான குளிர்ந்த வியர்வை.  வியர்த்தலின்போது நோயாளி போர்த்திக் கொள்ளுவார்.

அளவு – 3சி முதல் 30 சி.

ஒ.கு.ம. – ஆண்டிகுரூட், காலிகார்ப், சிகூடா, குப்ரம், சல்பர்.

பூ – கல்கேரியா கார்ப்.

ம.செ.கா. – 30 நாள்.

அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம் AESCULUS HIPPOCASTANUM K.RAJU

 

 அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்   

  AESCULUS HIPPOCASTANUM

HORSE CHESTNUT SAPINDACEAE   

     

நோய் கூடுதல்< :

      காலை விழித்து எழுதல், மலம் கழித்தபின், சிறிது நகர்ந்தால், குளிர்ந்த காற்று, குளிர்க்காலம், படுத்திருத்தல், குனிதல், நடத்தல்.  சிறுநீர்க் கழித்தல், உண்டபின், பிற்பகல், தண்ணீரில் இருந்து கொண்டு, துவைத்தல்.

 

நோய் குறைதல் >:

      குளிர்ச்சியான திறந்த வெளி, குளிர்ந்த நீரில் குளித்தல், மூலத்தில் இரத்தப் போக்கு, முழந்தாளிடுதல்., தொடர்ந்து உழைத்தல், கோடைக்காலம்.

 

மியாசம் :  சோரா 

 

ம.வே.ப. :  மலக்குடல், வயிறு, கல்லீரல் சிரைகள், மூக்கு, தொண்டைச் சளி சவ்வுகள்.

 

பொது – மூலத்திற்கு தரும் மருந்துகளில் இதுவும் ஒன்று.  மூலம்   சம்பந்த உடலமைப்பு உள்ளவர்கள்.  சளி சவ்வுகளில் வீக்கம், வறட்சி.  காலையில் விழித்தெழும் போதும் அசையும் போதும் தசைகளில் புண்ணுள்ள உணர்வு.  உடல் முழுவதும் மின்னல் போல் பறக்கும் நரம்பு வலிகள்.  இருதயம், மலக்குடல், தலை நோய்களில் இரத்தத் தேக்கம்.  நிச்சயமாக மலச்சிக்கல் இல்லாத நிலையில் கீழ்க்குடல்களில், மூலத்தின் சிரைகள் பெருத்து, முதுகு வலியும் இருத்தல்.  சிரைகளில் பொதுவாக இரத்தம் சேர்தல்.  ஊதா நிறமுள்ள பெருத்த சிரைகள்   முதுகு வலி, நோயாளியை வேலை செய்ய அனுமதிக்காது.  அதிக வலி இருந்தாலும், இரத்தம் சிறிதளவே வருதல்.  கால், கை, தண்டுவடத்தில் பாரிசவாயு உணர்வு.  மயக்கம், பலகீனம், களைப்பு உணர்வு.  கொட்டாவி விடுதல், உடலை நெளித்தல், முறுக்குதல், மூலக்கோளாறுடன் நாட்பட்ட வயிற்றுப் போக்கில் இடுப்பு, கீழ் முதுகில் கடுமையான வலி.  கர்பப்பை நழுவுதல்.  இடுப்புப் பகுதி உறுப்புகளில் வீக்கம், மோசமான வகையுள்ள வெள்ளைப்பாடுகளுக்கும் ஏற்றது.

மனம் - எளிதில் கோபப்படுதல், கோபம் மெதுவாகக் குறைதல், சோர்வடைதல், மனமுடைதல், குழப்பமடைதல், எண்ணத்தை ஒருமுகப்படுத்த இயலாமை.  சொற்பேச்சுக் கேளாமை, எதிர்த்தல்.

தலை – உட்கார்ந்துள்ளபோது, நடக்கும்போது, தலைச்சுற்றுதல்.  குழப்பமுள்ள உணர்வால் இருக்கையிலிருந்து எழுந்தால் தலை சுற்றல் அதிகரிக்கும்.  குத்தும் நரம்பு வலியானது வலப்புறத்திலிருந்து, இடப்புறத்திற்கு நெற்றி வழியாக செல்லுதலைத் தொடர்ந்து மேல் வயிற்றில் மின்னல் வலி.  தலையில் பின் பக்கத்திலிருந்து நெற்றியின் பகுதிக்கு வலி வருதலுடன் வீக்கமுள்ள உணர்வு.  நெற்றியில் அழுத்தத்துடன், குமட்டலும், வலது விலா எலும்புக்குக் கீழ்   குத்தும் வலி.  சளியால் வலி இருப்பதுபோல் தலையில் மந்தமான வலி.  குழப்பம்.  எல்லாத் தொல்லைகளும் மூலம், மலக்குடல், கீழ் இடுப்புக் குறிகளுடன் தொடர்புடையவை.  பின்தலை பிழிவது போலிருத்தல்.

கண் - கனமாக, சூடாக, நீர் வடிதல்.  இரத்தக் குழல்கள் பெரிதாகி இருத்தல்.  விழிகள் சிவந்து புண் போலிருத்தல்.  கண் முன் மின்னுதல், இமைகள், தசைகள் சுண்டுதல், கண்பாவைகள் விரிவடைந்து மெதுவாகச் சுருங்குதல்.

காது – எரிச்சல், அழுத்தம், மணியோசைக் கேட்டல்.  விழுங்கும்போது காதுகளில் சூடான, வறண்ட, புண்ணுள்ள குத்தும் வலி.

மூக்கு – குளிர்ந்தக் காற்றை இழுத்தால் மூக்கில் எரிச்சல்.  ளி ஒழுகல், தும்மல், மூக்கின் அடிப்பாகத்தில் அழுத்தம்.  கல்லீரல் கோளாறால் மூக்கடைப்பு.  அடர்த்தியான சளி.  மூக்குத் தொண்டைப் பாதையில்   எரிச்சல், வறட்சி, கொட்டும் வலி.  சளியால் நெற்றியில் வலி.  குளிர்ந்தக் காற்றை இழுத்தால் ஒத்துக் கொள்ளாது.

முகம் - தண்ணீரில் முகத்தைக் கழுவினால் பெரிதாக வீக்கம் ஏற்படுதல்.  தேய்த்தால் சிவந்தப்புள்ளிகள் உண்டாகுதல்.  வெளுத்துக் கவலையுள்ளத் தோற்றம் காணப்படுதல்.  முகத்தின் இடது புறத்தில் சூடும், சிவந்தும் இருத்தல்.

வாய் -  நாக்கில் சுட்ட உணர்வு.  இனிப்பு, கசப்பு, உலோகச் சுவை, வெள்ளை மஞ்சள் படிகம்,  உமிழ் நீருடன் எண்ணெய்ச் சுவை, செம்புச் சுவை.  சரியான வார்த்தையை உச்சரிக்க நாக்கை முறைப்படுத்த இயலாமை.  நாக்கின் நுனி புண்ணானது போலிருத்தல்.  பற்கள் எண்ணெயால் மூடியுள்ள உணர்ச்சி.

தொண்டை – வாயின் பின்னுள்ள கூம்பு வடிவக் குழியில் சிறிய நீர்ப்பையுடன் சவ்வு அழற்சியானது   கல்லீரல் தொடர்புடனிருத்தல்.  இனிப்புச் சுவையுள்ள நார் போன்ற சளியை கனைத்து வெளியேற்றுதல்.  கூம்பு வடிவக் குழி சிரைகள் பெருத்து கோணலாக இருத்தல்.  தொண்டையில் ஏதோ ஒன்று தங்கியுள்ள உணர்வால் அடிக்கடி விழுங்க விரும்புதல்.  அடிக்கடி தொண்டையில் நரம்பு வலிகள்.  டான்சில்கள் கருஞ்சிவப்பாக, வீக்கமாக, மந்தமான வலியோடு, நெருப்புப் போல எரிதல்.  மூலத் தொல்லையுடன் கூடிய நாட்பட்ட தொண்டைப் புண்.

இரைப்பை –  உண்டபின் நிறைந்த உணர்வு.  இரைப்பைச் சுவர்கள் தடித்தது போலிருத்தல்.  உணவு உண்டபின் சுமார் மூன்று மணி நேரம் கழித்து கல் போல் கடினமும், கடிக்கும் வலியும் இருத்தல்.  கசப்பு, புளிப்பு, வழவழப்பான ஏப்பங்கள், குமட்டல், வாந்தி, இரைப்பையில் எரிச்சல், காற்றுள்ள வெறும் ஏப்பங்கள்.

வயிறு – கல்லீரல் பகுதியில் நிறைந்த, கனமுள்ள உணர்வு.  காமாலை, கல்லீரலல் மந்தமான வலி.  தொப்புளில் வலி.  கீழ் வயிற்றிலும் தெறிக்கும் வலி.  மண்ணீரல் பகுதியில் வலி.  குடல்களில் இரைச்சலுடன் தொப்புளில் வெட்டும் வலி.  நாற்றமுள்ளக் காற்று வெளியாதல்.  மலக்குடலில் சிறியக் குச்சிகள் நிறைந்துள்ள உணர்ச்சியும், வறண்டு, சூடாக, சுருங்கி இருத்தல்.  ஆசன வாயில் கத்தி உள்ளது போன்ற வலி.  பச்சைப் புண்ணாக இருத்தல்.  மலம் கழித்த பின் சதைப் பிதுக்கமுடன் முதுகுப் பக்கம் அதிக வலி.  மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் மூலத் தொல்லை அதிகரித்தல்.  ஆசனவாய் சளிச்சவ்வு வீங்கி வழியை அடைத்துக் கொள்ளுதல்.  கீரிப்பூச்சியால் ஏற்படும் உறுத்தலை நீக்குவதோடு அவைகளை வெளியேற்றவும் துணை செய்கிறது.  நீலச் சிவப்பு நிற வெளி மூலம்.  நின்றாலோ, குனிந்தாலோ, நடந்தாலோ வலி அதிகரித்தல்.  ஆசனவாய் எரிச்சலுடன் குளிர் மேலும் கீழும் செல்லுதல்.  நாட்பட்ட மலச்சிக்கல்.  வறண்ட சளிச்சவ்வுகள்.  இருதயம், இரத்தம் மற்றும் நிணநீர்க் குழாய்களின் சவ்வுகளினூடே உப்பு, குளுக்கோஸ், யூரியா  போன்றவைகள் செல்லும்போது ஏற்படும் தொந்தரவுகளை   நீக்கும்.

சிறுநீர் வழி – அடிக்கடி கொஞ்சமாக மண்போல் சூடாக, கரும்பழுப்பாகக் கழித்தல்.  இடது சிறுநீரகத்தில் சிறுநீர்க் குழாயில் வலி, சளி.

ஆண் - மலம்,  சிறுநீர்க் கழிக்கும்போதெல்லாம் சுக்கில நீர் வெளியாகுதல்.  தூக்கத்தில் விந்து வெளியாதல்.

பெண் - கர்ப்பப்பை நழுவுதல். அழற்சியடைதல்.  வெள்ளைப்பாடு திட மஞ்சளாக தடித்து ஒட்டும் தன்மையும், உறுப்பின் உதடுகளை அரித்தும், மாதவிடாய்க்குப் பின்னும்  நடந்தாலும் அதிகரித்தல்.  கீழ் இடுப்பிலும், முழங்காலிலும் வலி.  ஆண், பெண் உறுப்பு முக்கோணப் பகுதிக்குப் பின்னால் தொடர்ந்து தெறிக்கும் வலி.  கர்ப்பமுள்ளப் பெண்ணிற்கு இடுப்பு எலும்புகளில் வலி.  இடுப்பு எலும்பு மூட்டு இணைப்பில் முடமான உணர்வு.

மூச்சுப் பகுதி – மார்பில் சூடுள்ள உணர்வு.  கல்லீரல் கோளாறால் இருமல்.  நுரையீரல்கள் பெருத்து கனமுள்ளதாகத் தெரிதல்.  இடதுபுறத்திலிருந்து வலது புறத்திற்கு குத்தும் வலி செல்லுதல்.  வலது நுரையீரல் வலியுடன் வேகமாக, மூச்சு  வாங்குதல்.  வறண்ட சிற்றிருமல்.  இருமும்போது, ஆழ்ந்து மூச்சிழுக்கும்போது அதிகமாதல்.

இருதயம் - இருதயத் துடிப்பை உடல் முழுவதும் உணருதல்.  இருதயத்தின் மேல்பகுதியில் சுண்டுதல்.  மூலத் தொல்லையுடன் இருதயத் தொல்லையில் சுற்றிலும் வலி.  இருதயத்தின் செயல் நிறைந்து கனமாக இருத்தல்.  படபடப்பு.

கழுத்து, முதுகு – கர்ப்பமாய் உள்ளபோது இடுப்பு வலி, நோயாளியை நகரவிடாமல் உட்காரச் செய்யும்.  இரண்டு தோள்பட்டைகளுக்கிடையே வலி.  கழுத்து முடமானத் தன்மையும், தண்டுவடப் பகுதியில் பலவீனம்.  தொடர்ந்துள்ள முதுகுவலியானது குனிந்தால், நடந்தால் அதிகரித்தல்.  வலது தோள்பட்டை, மார்புகளில் வலி.  மூச்சிழுத்தால் அதிகரித்தல்.  கால்களும், முதுகும் விட்டுப் போகுதல்.

கை, கால்கள் – விரல் நுனிகள் மரத்துப் போதல்.  நடக்கும்போது பாதங்கள் உள்பக்கமாக மடங்குதல்.  கை, கால்களில் பாரிசவாயு உணர்வு.  இடது கை மிக வெப்பமாகவும், கனம் மற்றும் வீங்கிய உணர்வு.  வலதுகை பாரிச வாயு உணர்வால் மேலே தூக்க இயலாமை.  கைகளைக் கழுவினால் சிவந்து வீங்கி விடுதல்.  நகங்கள் நீலநிறமாகுதல்.

தோல் – மணிக்கட்டில் தினவு.  தலை, மூக்கு, தொண்டையில் ஊருதல்.

தூக்கம் - நெளித்தல், கொட்டாவி விடுதல், இரைப்பையில் எரிச்சல் வலி, தூக்கத்தலிருந்து விழித்துக் கொள்ளுதல்.  விழிக்கும்போது தான் எங்கே இருக்கின்றோம் என்பது தனக்கேத் தெரியாமை.

காய்ச்சல் – சரியாக மாலை 4.00 மணிக்குக் குளிர் வருதல்.  மாலைக் காய்ச்சல்.  இரவு 7.00 மணி முதல் 12.00 மணிவரை காய்ச்சலின்போது தாகமிருக்காது.  வெடிக்கும் தலைவலி, கண் கூசுதல், ஏராளமான சூடான வியர்வை.  இருதயம் கடுமையாகத் துடித்தல்.  பாதங்கள், உள்ளங்காலகளில் எரிச்சல்.  முதுகில் சில்லிப்பு மேலும், கீழும் செல்லுதல்.

அளவு – தாய்க் கரைசல் க்யூ. முதல் 30 சி.

முக்கியக் குறிப்பு – அஸ்குலசில் மலக்குடலில் சிறு குச்சிகள் உள்ள உணர்வு.   ரடானியாவில் மலக்குடலில் உடைந்தக் கண்ணாடித் துண்டுகள் உள்ள உணர்வு.  அஸ்குலசில் தொண்டையில் வறட்சி, எரிச்சல், வீக்கமின்மை, நாருள்ள சளி இருக்காது.  காலி பைக்ரோமில் பிசினும் நாருள்ள சளி இருத்தல்.

ஒ.கு.ம. – ஆலோ, காலின்சோ, மெர்க்குரி, நக்ஸ்வாமிகா, போடோ, சல்பர்.

பூ – கார்போ வெஜ், லாக்கசிஸ், மூரி.ஆசிட்.

உ – ஆலோ, காலின்சோ, பல்ஸ்சடில்லா.

அட்ரிநலின் ADRENALAIN K.RAJU

 

அட்ரிநலின்    ADRENALAIN

     SUPRARENAL GLAND

மியாசம் :  சோரா.

 

ம.வே.ப. :  உணர்வு நரம்புகள், தமனி, இருதயம், சிறுநீரகம்

 

 

பொது – தந்துகிகளிலிருந்து வரும் இரத்தக் கசிவை கட்டுப்படுத்துகிறது.  குறைந்த இரத்த அழுத்தம், அதிகத் தசைப் பலவீனம், குறைவாகச் சுரக்கும் அட்ரினல் சுரப்பி நோய் (   ).  சிறுநீரில் இரத்தப் போக்கு, மருந்தால் தோன்றிய சினைப்புகள்.

மூச்சுப் பகுதி – ஆஸ்துமா நோய்க்கும், நுரையீரல்களில் சளி கட்டிக் கொண்டு மூச்சுவிட இயலாமைக்கும் ஏற்றது.  கடுமை குறைந்த, மத்திம நாட்பட்ட நெஞ்சுவலி.  தமனிகள் கெட்டியாகுதல்.

இருதயம் - படபடப்பு, மிக அதிவேகமுள்ள நாடி.  இதய திடீர் வலி.  தமனி அழற்சி.

தோல் – வெண்கல நிறத்தோல்.

அளவு – 2 எக்ஸ் முதல் 6 எக்ஸ்.

அடோனிஸ் வெர்னாலிஸ் - ADONIS VERNALIS K.RAJU

 

அடோனிஸ் வெர்னாலிஸ்  -   ADONIS VERNALIS

PHEASANT’S EYE

RANAUNCULACEAE FAMILY







நோய் கூடுதல்< :

      குளிர்ச்சி, படுத்திருத்தல்

 

நோய் குறைதல்> :

      உழைப்பு

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ்

 

ம.வே.ப. :  இருதயம், இரைப்பை, தண்டுவடம், சிறுநீரகம்.

 

பொது – இது ஒரு இருதய மருந்து.  கீல்வாதம்  இன்புளுயன்சா   சிறுநீரக அழற்சி   நோய்களால் இருதய தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, இருதயச் சுவற்றின் மையத்திலுள்ள திசுக்களில் சிறிதளவு கொழுப்புகள் தங்குவதால் ஏற்பட்ட சீரழிவைத்   தடுத்து, நாடித் துடிப்பை ஒழுங்குபடுத்தி, இருதயத்தின் சுருங்கி விரியும் சக்தியை அதிகரிக்கச் செய்து, சிறுநீரை அதிகளவு சுரக்கவும் செய்விக்கிறது.  இருதய நீர்க்கோப்புக்குச்  சிறந்த மருந்து.  குறைந்த சக்தியுடன் பலவீனமான இருதயம்.  மெதுவான பலமிழந்த நாடி.  வயிற்றில்   மார்பில்   உடம்பு முழுவதில்   நீர்க்கோப்பு.

மனம் - கவலை, பயம்.

தலை – கனமற்ற உணர்வு, எழுந்தால், தலையை வேகமாகத் திருப்பினால், கீழே படுக்கும்போது, இதயத் துடிப்புடன், தலைச் சுற்றல் அதிகரித்தல்.  வலி, பின் தலையிலிருந்து   பொறிகளைச் சுற்றிக் கொண்டு கண்களுக்கு வருதல்.  தலையில் இறுகக் கட்டியுள்ள உணர்ச்சி.

கண் - கண் பாவைகள் விரிந்திருத்தல்.

காது – இரைச்சல் தேனீ ரீங்காரமிடுவது போல், மணி அடிப்பது போலிருத்தல்.

வாய் -  தாகமின்மை, நாக்கில் புண், அழுக்கடைந்த மஞ்சள் நிறம். 

இரைப்பை –  மிக கனமாயிருத்தல்.  கடித்துத் தின்னும் பசி.  இரைப்பையின் மேல்ப் பகுதியில் வலுவற்ற உணர்வுடனுள்ள தலைச்சுற்றல்.  வீட்டிற்கு வெளியே இருந்தால் குறைதல்.

வயிறு – குடல்கள் உடைவது போலிருத்தல்.  குனிந்தால் அதிகரித்தல்.

சிறுநீர் வழி - சிறுநீர்க் கழிக்க அவசரம்.  சிறுநீரில் புரதம்    எண்ணெய்ச் சொட்டுகள் போல் மிதத்தல்.  கொஞ்சமாகக் கழித்தல்.  சிறுநீரை அதிகம் சுரக்கச் செய்து, செயல்படுகிறது.

மூச்சுப் பகுதி – அடிக்கடி ஆழ்ந்து மூச்சுவிட விருப்பம்.  மார்பின்மீது கனமுள்ள உணர்வு.  மூச்சிவிட இயலாமையின்போது முதுகைத் தொட்டால் அதிகரித்தல்.  கூசும்.  வறண்ட இருதயநோய் இருமல்.

இருதயம் - நாட்பட்ட மாதமனி அழற்சி    இருதய ஆஸ்துமா   இருதய தசை அழற்சி  கீல் வாதம், சிபிலிஸ் நோயால் இருதய உட்பகுதியில் உள்ள திறப்பானை மூடியுள்ள சவ்வு பாதிப்பால் அழற்சி  ) சிரைகள் பெருத்திருத்தல். இருதயத்தின் இடது மேலறையான ஆட்ரியத்திலிருந்து ( ) கீழறையான வென்டிரிகிளுக்கு ( ) இடையிலுள்ள திறப்பான் ( ) பழுதடைந்தால் வென்டிரிகிளுக்குச் சென்ற இரத்தம் மீண்டும் ஆட்ரியத்திற்கே திரும்பி விடுதல்       அதே போல் மாதமனியிலும் ஏற்படுதல்.  இருதயத்தை மூடியுள்ள வெளிச் சவ்வு அழற்சி ( ). ஒழுங்கற்ற, வேகமான, நாடித் துடிப்பு, கொழுப்புள்ள இருதயம், ஒழுங்கற்ற இருதயத்தின் செயல்,  இருதயச் சுருக்கம்.  இருதயத்திற்குச் சற்று மேலே உள்ள பகுதியில் ( ) வலி. படபடப்பு.  மூச்சு விட இயலாமை ( ) இருதய திறப்பான் நோய் (   ).

கழுத்து, முதுகு – தண்டு வடத்தில், கழுத்தில் பிடிப்பு வலி, களைப்பு உணர்வு.

தோல் – சிறு கொப்பளங்கள்.

தூக்கம் - பயங்கரக் கனவுகள், எண்ணச் சிதறல்களால் தூக்கமின்மை, அமைதியின்மை.

அளவு – தாய்க் கரைசல் க்யூ.

ஒ.கு.ம. – கன்வலேரியா, கிரடகஸ், டிஜிடாலிஸ், ஸ்டிரொபான்தஸ்.

உ – புபோ.