திங்கள், 8 ஜனவரி, 2024

எதுசா சைனாபியம் AETHUSA CYNAPIUM K.RAJU

 

எதுசா சைனாபியம்

 AETHUSA CYNAPIUM

FOOL’S PARSLEY

UMBELIFERACEAE

நோய் கூடுதல்< :

      பால், அடிக்கடி உண்ணுதல், பல் முளைத்தலால், அளவு மீறிய உழைப்பு, வெப்பம், வாந்திக்குப் பின் ோடைக்காலம், மாலை, குளிர்ந்த நீர், மலம் கழித்தபின், காலை 3.00 முதல் 4.00 மணி வரை, காபி.

 

நோய் குறைதல்> :

      திறந்தவெளிக்காற்று, உரையாடுதல், துணையிருத்தல், ஓய்வு,  தலையை இறுக்கிக் கட்டுதல்

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ். 

 

ம.வே.ப. :  மூளை, கழுத்து, கல்லீரல், நரம்புகள், தலை பின்பக்கம்.

 

பொது – கடுமை   இதன் முக்கியக் குறியாகும்.  கடுமையான வாந்தி, வலிப்பு, வலிகள், கத்துதல் யாவும் குழந்தைகளின் நோய்களில் காணப்படும்.  பால் எவ்வகையிலும் ஒத்துக் கொள்ளாததால், குடித்தபின் தயிராக வாந்தி எடுத்தல்.  வாந்தி எடுத்தபின் பலவீனமும் தூக்கமும் ஏற்படுதல்.  பல் முளைக்கும் காலத்திலும், கோடையிலும் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்.  மனமும், உடலும் பலவீனப்படுவதால் அதிருப்தி.  தன்னால் பேச இயலாமையைத் தெரிவித்தல்.  நோய் அதிகமாக ஆக நோயாளி அழுவார்.  வேதனைப்படுவார்.  வலிப்புகளில் கட்டைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு முகம் சிவந்து, கண்பாவைகள் குத்திட்டு விரிந்து கண்கள் ஒளியுடையதாய் கீழ்நோக்கியப் பார்வையும், சொருகியும், வாயில் நுரை தள்ளி, தாடைகள் கிட்டித்தும், நாடித்துடிப்பு வேகமாகவும் உடல் குளிர்ந்து, வியர்த்துக் காணப்படும்.  உட்காரவோ, எழவோ, தலையை நிமிர்த்தவோ முடியாது.  நோய்க்குறிகள் இல்லாத நிலையிலேயே தலைமை நிமிர்த்த இயலாதக் குழந்தைகள்.    தூங்கச் செல்வார், எழுவார், உண்பார், வாந்தி எடுப்பார்  உண்டபின் ஒரு மணி நேரம் கழித்து பசுமையுள்ள கடுமையான வாந்தி.  வாந்திக்குப் பின் மீண்டும் பசி எடுக்கும்.  இது இம்மருந்தின் சிறப்புக் குறி.  வாந்தியாகும், குமட்டல் இருக்காது.  தலை, முகம், கைகளில் வீக்கமுள்ள உணர்வு.  கழுவினால் அதிகரித்தல்.  அறைக்கு வந்தால் குறைதல்.  நடந்தபின் கைகளில் வீக்கமுள்ள உணர்ச்சி.  முறையாக ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்.

மனம் - சிந்திக்கவோ, எண்ணத்தை ஒரே இடத்தில் நிலை நிறுத்தவோ இயலாமை.  அமைதியற்று ஆதங்கத்துடன் அழுதல்.  குழப்ப மனம்.  எலிகள் அறையின் குறுக்கே ஓடுவதாகவும், பூனைகளை, நாய்களைக் காண்பதாகவுமான கற்பனை எண்ணம்.  அறியாமையினால் ஆத்திரம், கோபம் மாறி மாறி ஏற்படுதல், முட்டாள் குழந்தைகள்.  தேர்வு என்றாலே பயம்.  உற்சாகமின்மை.  சன்னியின்போது சன்னல் வழியாகவோ, படுக்கையிலிருந்தோ குதிக்க எண்ணுதல்.  முற்பகல் மகிழ்ச்சியாகவும், பிற்பகலில் கோபமாகவும் இருத்தல்.  படிப்பதையே  வெறுத்து ஒதுக்கும் பள்ளி மாணவ மாணவிகள தேர்வின்போது குழப்பத்தால் மனமுடைந்து எண்ணம் சிதறல் உள்ளவர்கள்.  உணர்வுகளுக்கும், வெளிப் பொருள்களுக்கும் இடையிலே ஏதோ ஒரு தடையுள்ளதுபோல் இருத்தல்.  நாக்கு நீண்டுள்ளதாகத் தெரிதல்.  நேற்று ஒரு ஆபரணம் செய்துள்ள எண்ணம் தொடர்ந்து இருத்தல்.  கண்களை மூடிக்கொண்டால் முகங்கள் தெரிதல்.  சன்னல் வழியாகக் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுதல்.  ஒலிகளைக் கேட்டு அழுதல்.

தலை – பின்பக்கத் தலைவலி கழுத்தின் வழியாகத் தண்டுவடத்திற்குச் செல்லுதல், கீழே படுப்பதால், அழுத்துவதால் குறைதல்.  தலைக்குறிகள் வயிற்றிலுள்ள காற்று வெளியேறுவதாலோ, மலம் கழிப்பதாலோகுறைதல்.  மயிர்கள் இழுக்கப்பட்டதுபோல் உணர்தல்.  இருதயத் துடிப்புடனும், மயக்கத்துடனும் தலைச்சுற்றல்.    தலைச்சுற்றல் நின்றபின் தலை சூடாகுதல்.  தலையின் இரண்டு பக்கங்களிலும் இடுக்கியில் சிக்கியுள்ள உணர்வு.

கண் - கண்கள் கீழ் நோக்கி சொருகுவதும், கண்பாவைகள் விரிந்தும், வெளிச்சத்தைப் பார்க்க இயலாமலும் இருத்தல்.  கண் இமைச் சுரப்பிகளில்   வீக்கம்..  தூங்கப் போகும் போது கண்கள் சுழலுதல்.  பார்க்கும் பொருள்கள் பெரிதாகவோ, இரண்டாகவோ தெரிதல்.  நாட்பட்ட கண் கூச்சம்.

காது – இரைச்சல், அடைத்தருப்பதுபோல உணருதல்.  காதுகளிலிருந்து ஏதோ சூடாக வெளியாவதாக உணர்ச்சி.

மூக்கு – நுனியில் கொப்பளங்கள்.  கெட்டியான சளியால் மூக்கடைப்பு.  அடிக்கடி தும்ம வேண்டுமென விரும்புதல்.  மூக்குப் பகுதி உள்ளிழுத்திருத்தல்.  மூக்கின் மீது கோடு.

முகம் - குழி விழுந்து, வெளுத்து, பருத்து, சிவந்தப் புள்ளிகளிருத்தல்.  செத்துப்போனத் தோற்றம்.  உதடுகளில் மங்கலான நீல, வெள்ளைநிறம், முகவாய்க் கட்டை, வாயின் மூலைகைளில் குளிர்ந்த உணர்ச்சி.

வாய் -  நாக்கு மிக நீளமாக உள்ளதாகத் தெரிதல். வறட்சி, புண், பேச சங்கடம்.

தொண்டை – எரிச்சல், சீழ்க் கொப்புளங்களால் விழுங்க இயலாமை.

இரைப்பை –  பால் குடித்தவுடனே ஒத்துக் கொள்ளாமல் தயிராக வாந்தியெடுத்தல்.  கடிக்கும் பசி.  வாந்திக்குப் பின் பசி.  உண்டபின் ஒரு மணி நேரம் கழித்து உணவுடன் வாந்தி.  வியர்வையுடன், பலவீனத்துடனுள்ள வாந்திக்குப் பின் குமட்டலும், தூக்கமும், வேதனையுடன் துவண்டு போகுதல்.  இரைப்பைத் தலைகீழாகத் திரும்பிவிட்டதான உணர்ச்சி.  கிழிக்கும்வலி இரைப்ையிலிருந்து உணவுக் குழலுக்குச் செல்லுதல்.  வாந்தி எடுக்க முயலுதல்.  ஒயின், மது குடிக்க விரும்புதல்.  காபி குடித்தால் அதிகரித்தல்.  கடுமையான வாந்தியில் பால் போன்று நுரைத்து வெளியாதல்.  ஓக்காளம் வருதல்.  மூளைக் களைப்பால் செரிமானம் தடைப்படுதல்.

வயிறு – வயிற்றுப் போக்கு மஞ்சள், பச்சை நிறத்துடன் இருத்தல்.  செரிமானமாகாத மலம்.  பிடிவாதமான மலச்சிக்கலால் குடல்கள் செயலிழந்துள்ளதான உணர்ச்சி.  குழந்தைகளின் காலரா போன்ற வயிற்றுப் போக்கால்  குழந்தை குளிர்ந்து, சில்லிட்டு, மந்த புத்தியுடன் இருத்தல்.  தொப்புளைச் சுற்றி நீர்க்குமிழிகள் உள்ளது போன்ற உணர்வு.  வயிற்றில் வலியுடன் உள்ளும், வெளியும் குளிர்ந்து இருக்கும்.  வயதானவர்களுக்குக் காலரா போல் பேதி.

சிறுநீர் வழி – சிறுநீரகங்களில்   வலி, அடிக்கடி சிறுநீர்ப் பையில்   வெட்டும் வலியுடன் சிறுநீர்க் கழிக்க அவசரத் தூண்டுதல்.

ஆண் - வலதுபக்க விரை மேல் நோக்கி இழுக்கப்பட்டதால் சிறுநீரகத்தில் வலி.

பெண் - அறுக்கும் வலியுடன் பால் சுரப்பிகளில் வீக்கம்.  நீர்ப்போல் மாதவிடாய்.  பிறப்புறுப்பில் கீறும் வலியும் அதன் வெளிப்பாகத்தில் பருக்களும், வெப்பமாக உள்ளபோது தினவெடுத்தல்.

மூச்சுப் பகுதி – மார்பில் இறுக்கும் வலியால் நோயாளிக்கு பேச இயலாமை.  இருமலால் தலையினுள்ளே வலி.  விக்கலால் மூச்சுத் தடைபடல்.

இருதயம் - தலைசுற்றல், தலைவலி, அமைதியின்மையுடன் கடுமையான இதயத் துடிப்பு.  நாடி வேகமாக, சிறியதாக, கடினமாக ஓடுதல்.

கழுத்து, முதுகு – கழுத்தின் பலவீனத்தால் தலையையே நேராக நிறுத்த இயலாமை.  முதுகு இடுக்கியில் சிக்கியது போல் உணர்ச்சி.  கழுத்தைச் சுற்றியுள்ள சுரப்பிகளில் பாசிமணி கோர்த்திருப்பது போல் வீக்கம்.  விறைப்புடன் பின்பக்கம் வளைவதால், உடலை நேராக வைப்பதால் முதுகுவலி குறையும் என்ற உணர்வு.

கை, கால்கள் – விரல்கள், கட்டை விரல்கள் இறுக்கிப் பிடித்த நிலை, கைகள், பாதங்களில் மரமரப்பு.  கைகள் சிறுத்துவிட்டது போன்று உணர்தல்.  நடக்கும்போது தொடைகள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் சிராய்ப்பு.

தோல் – எளிதில் வியர்த்தல்.  மூட்டுக்களைச் சுற்றித் தினவெடுக்கும் கொப்பளங்கள்.  சூட்டினால் குறைதல், கைகளின் தோல் வறண்டு, சுருங்கி இருத்தல்.  நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி பாசிமணி கோர்த்தது  போல தோல் மீது காணப்படுதல்.  உடல் குளிர்ந்து, சில்லிட்ட வியர்வையால் மூடப்பட்டிருத்தல்.  உடல் முழுவதும் நீர்க்கோப்பு     இரத்தக் குழாயிலிருந்து இரத்தமானது வெளியேறி திசுக்களிலும், தோலின்மீதும் நிறமாறி கருநீலமாகி அதாவது ஊமைக்காயம்போல் இருத்தல்

தூக்கம் - குளிர்ந்த வியர்வையாலோ, கடுமையாகத் திடுக்கிடச் செய்வதாலோ தூக்கம் கெடுதல்.  வாந்தி எடுத்து அல்லது மலம் கழித்தப்பின் சற்று கண்ணயர்வதோடு குழந்தை மிகவும் ளைத்திருப்பதால் உடனே தூங்கி விடும்.  முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், பயங்கரமானக் கனவுகளும் தோன்றுதல்.

காய்ச்சல் – தாகமற்ற அதிகச் சூடு.  ஏராளமான குளிர்ந்த வியர்வை.  வியர்த்தலின்போது நோயாளி போர்த்திக் கொள்ளுவார்.

அளவு – 3சி முதல் 30 சி.

ஒ.கு.ம. – ஆண்டிகுரூட், காலிகார்ப், சிகூடா, குப்ரம், சல்பர்.

பூ – கல்கேரியா கார்ப்.

ம.செ.கா. – 30 நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக