திங்கள், 8 ஜனவரி, 2024

அகோனைடம் நேப்பல்ஸ் ACONITUM NAPELLUS K.RAJU

 



அகோனைடம் நேப்பல்ஸ்  

ACONITUM NAPELLUS

MONKSHOOD

RANANUNCULACEAE FAMILY

 

நோய் கூடுதல் :<

      திடீர் பயம், அதிர்ச்சி, பயங்கரமான மன எழுச்சி, கோபம், குளிர்ச்சி, வறண்ட குளிர்ந்த காற்று அழுத்துதல், வியர்த்தலின்போது தொடுதல்.  மாலை, இரவு, ஒலி, ஒளி, பல் முளைக்கும்போது மாதவிடாய் காலத்தில், வெய்யிலில் தூங்குதல், பாட்டு, வெப்ப அறை, பாதிக்கப்பட்ட பக்கம் படுத்தல்,  புகையிலை புகைத்தல், மூச்சிழுக்கும்போது, படுக்கையில் உள்ளபோது.

 

நோய் குறைதல் :>

      திறந்த வெளிக்காற்று, ஓய்வு, போர்வையை அகற்றுதல்.

மியாசம் :  சோரா. 

 

ம.வே.ப. :  மனம், இருதயம், மார்பு, நரம்புகள், மூட்டுகள்.

 

பொது – நாபிக் கிழங்கு.  இது தாவரம்  பாறைப்பகுதியில் வளரும் ஒரு செடி.  நோயின் காரணத்தை அடிப்படையாகக் (PATHOLOGICAL) கொண்டில்லாத திடீரென்று தோன்றும் எல்லா ஆரம்ப நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்தாகும்.  உடலில், மனதில் வேதனை, அமைதியின்மை, பயம், ஆதங்கம், கோபம், கடுமையுடன் திடீரெனத் தாக்கும் காய்ச்சல்.  ஆரம்ப அழற்சிகள், அழற்சி காய்ச்சல்களுக்கும், உள்ளுறுப்புகளில் எரிச்சல், உறுத்தல், குளிர்ச்சி, குத்தல், மரமரப்பு, தமனிகளில் அழுத்தம், திடீரெனப் பலம் குறைந்துவிட்டது போல் உணர்வும், வறண்ட குளிர்கால நிலை, குளிர்ந்த காற்று, வினயர்வை தடைபடல் ஆகியவைகளால் தாக்குதலுக்குள்ளாகி ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மிகவும் வெப்பக் கால நிலையில் தோன்றும் வயிற்றுளக் கோளாறுகளுக்கும் ஏற்றது.   குழந்தைகள் நோய்களில் அதிகக் காய்ச்சல், குழந்தைகள் பாதிக்கப்பட்ட உறுப்பில் வையை வைத்துக் கொள்ளும்.  இரத்தப் போக்குகள் சிவங்திருத்தல்.  இளமையுடன் கட்டுக்கோப்பான உடலும், உறுதியான தசைநார்களும், கருப்புக் கூந்தலும், கண்களும் உடையவர்கள்.  உட்கார்ந்தே பணிபுரிபவர்கள்.  புயல் தோன்றி குறுகிய காலமே வீசியபின், புயல் மறைவது போல் குறிகளும் அவ்வாறே தோன்றி மறைதல்.  அதனால் இது உடலின் செயல் முறையில் தொந்தரவு கொடுக்கிறது.  திசுக்களின் மாற்றங்களில் அதன் சக்தி அரிதாக உள்ளதால், இதன் செயல் குறுகிய காலம் மட்டுமே தவிர, குறிப்பிட்டக் காலத்தில் வரும் நோய் போலிருக்காது.  அதிகக் காய்ச்சலுள்ள குழந்தைகளின் நோய்கள்.  முதுமையடைந்தவர்களுக்குத் தூக்கமின்மை.  எல்லா சளிச்சவ்வுகளிலும் எரிச்சல்.  சுரப்பிகளில் வலி, சூடு, வீக்கம், நரம்புகளில் அதிக உறுத்தல்.  பல் முளைக்கும்போது, காய்ச்சலின்போது, திடுக்கிடும்போது குழந்தைகளுக்கு வலிப்பு.  ஒரே தசை மட்டும் சுண்டுதல்.  கோபம் கொண்டு கத்துதல்.  கை முட்டியை, நகங்களை, பற்களை நரநரவென்று கடித்தல்.  இடது கை அல்லது கால் உதறுதல்.  அமைதியற்று முனகுதல்.  நடுக்கமுள்ள படபடப்பு, பயந்த குணமுள்ள பெண்கள்.  கட்டுக் கோப்புள்ள உடலமைப்புடையவர்கள், வலியைப் பொறுக்க முடியாது. 

மனம் - அற்ப சங்கதிக்கும், சாதாரண நோயிக்கும்கூட அதிக ஆதங்கமும், மிகத் துன்பப்படுமளவு பயமும், அமைதியின்மையும் காணப்படும்.  மக்கள் கூட்டம், இருட்டு, பாலத்தின் குறுக்கே செல்லுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லுதல்.  இறப்பு, பேய், எதிர்காலம் ஆகியவைகளில் பயம்.  முன்கூட்டியே தான் இறக்கப் போகும் நாளை,  நேரத்தைக் குறிப்பிடுதல்.  கர்ப்பமாய் உள்ள போதும் இறப்பைப் பற்றிய பயம்.  விவரிக்க இயலாத ஏதோ நடக்கப் போகிறதென காரணமில்லாத பயம்.  தனிமையில் இருக்க விருப்பம்.  திடமில்லாத எண்ணம்.  ஒன்றைச் செய்ய நினைக்கும்போது இன்னொன்றை நினைத்தல்.  சண்டையிடும் குணம்.  பொறுமையின்மை,  அதிக மனமுடைதல், கோபப்படுதல்.  சிறிய ஒலியோ, வலியோ வலியுள்ள இடத்தைத் தொடவோ, மூடியுள்ள துணியை நீக்கினாலோ பொறுக்க முடியாது.  பாட்டு கேட்பது பொறுக்க முடியாததோடு அதுவே கவலையைத் தருதல்.  மன உழைப்பை வெறுத்தல்.  ஞாபகமறதி.  பலவீனமான ஞாபகசக்தியால் சற்று முன் செய்ததெல்லாம் ஒரு கனவுபோல் தோன்றுதல்.  தேதிகளைக் கூட மறந்து விடுதல்,  எல்லாமே இருதயத்திலுள்ளதுபோல் எண்ணுதல்.  உடலின் சில பகுதி மிகப் பெருத்துவிட்டதாகவும்,  உருக்குலைந்துவிட்டதாகவும், செய்ய எண்ணும் எண்ணங்கள் யாவும் இரைப்பையிலிருந்து தோன்றுவதாகவும் பலம் வாய்ந்தக் கற்பனை நினைப்பு.

ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE), அதிக வலியல் வீறிடுதல், புரளுதல், அமைதியற்றிருத்தல், மாறும் குணம், ஒரு நேரம் மிக்க மகிழ்ச்சியுடன் பாடுதல், ஆடுதல், சிரித்தல் பிறகு ஒரு நேரம் கவலையுடன், பயத்துடன், கண்ணீர்விட்டு அழுதல்.  எண்ணத்திலும், செயலிலும் அதிகக் குழப்பம்.  மனித சமூகத்தை வெறுத்தல்.  யார் மீதும் பற்று இல்லாமை.  தீய எண்ணம், கேலி செய்வதை தவறாக எடுததுக் கொள்ளுதல்.  பேச விரும்பாமை, சுருக்கமாகப் பதிலளித்தல்.  பயத்தால் படுக்கையை விட்டு எழுந்து ஓடுதல். பயம், திகில், கோபத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள்.  மன அமைதி அகோனைட்டுக்கு எதிரி.  சித்தபிரமையில் மகிழ்ச்சியற்று வருத்தமுடன், நம்பிக்கையில்லாமல் உறுமிக் கொண்டு பயந்த முகக் குறியோடு சற்று நினைவோடு இருத்தல்.  இரவில் பெரு மகிழ்ச்சி, கற்பனை.

தலை – உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ, எழுந்தாலோ, தலையை அசைத்தாலோ தலை சுற்றுதல்.  தலை நிறைந்து, கனத்து, சூடாக, நாடித்துடிப்புடன், வெடிப்பதுபோல், எரிச்சலும், அலை செல்வது போன்ற உணர்வு.  தலைவலியோடு சிறுநீர் அதிகம் சுரத்தல்.  கோபத்தால், திடீர்ப் பயத்தால், வறண்ட குளிர்க்காற்று, பாதிப்புக்குப் பின், திடீரென மனவெழுச்சியால், குளிரால், விடாய் அமுக்கப்பட்டதால் தோன்றிய தலைச்சுற்றல்.  மூளை தளர்ந்து உருளுதல் உணர்வு.  அசைந்தால், பேசினால், குடித்தால் அதிகரித்தல்.  மூளை முழுவதும் கண்கள் வழியாக வருவது போலிருத்தல்.  எரிச்சல்.  தலைவலியில் மூளையானது  கொதிக்கும் நீரில் உள்ளதுபோல் அசைதல்.  நெற்றியில் ஒரு பலகை இருப்பது போலவும், பிழிவது போலவும், வெடிப்பது போல், நாடித்துடிப்பும் இருத்தல்.  மண்டை ஓட்டினுள் அழுத்தம்.  தலையை மயிரால் இழுப்பது போன்றோ, மயிரின் நுணி நிற்பது போன்றோ உணர்ச்சி.  குழந்தைகளின் மூளைப் பாதிப்பில் தலையில் கடுமையான வலியும, கண்களில் அதிக உணர்வும், வாந்தி, மலச்சிக்கல் இருத்தல்.  தலைவலியில் பார்வை மறைதல், ஊருதல் உணர்வு.  சூட்டால் குறையும்.  நெற்றியில் குளிர்ந்த வியர்வை.

கண் -  சிவந்து, இமைகள் வீங்கி, கடினமாக இருத்தல்.  வறட்சி, சூடு,  மணல் உள்ள உணர்வு.  ஓளியை குறிப்பாக சூரிய ஒளியை வெறுத்தல்.  கூசுதல்.  வறண்ட குளிர்க்காற்று வீச்சால், பனிக்கட்டி ஒளி பிரதிபலிப்பால், தூசி, மணல் பட்டு நீக்கிய பின்னால், வெளிப்பொருட்களால், அதிகக் கண்ணீர் வடிதல்.  கண்கள் முன் கரும்புள்ளிகள்.  மூடுபனி போல் தெரிதல்.  திரைவழியாகப் பார்ப்பதுபோல் தெரிவதால், முகத்தைப் பார்த்து இன்னாரென்று  அறிந்து கொள்வது கடினம்.  கண்பார்வை திடீரென்று குருடாகுதல்.  கண்பாவைகள் சுருங்குதல்.  விரிதல்.  விழிகளை அசைத்தால் அழுத்தம், எரிச்சல், வலி, சூடு, அமுக்கப்பட்ட வெட்டை நோயால்   தோன்றியக் கண்நோய்   நரம்புகளில் வலி,  கண்நோயின் முதல் நிலையில் திசுக்களும் அதன் சம்பந்தப்பட்டவைகளில் சூடு, வறட்சி, கூர்மையான வலி, பீழை ஆரம்பமாகு முன் காணப்படும்.

காது – வெளிக்காது சூடாகவும், சிவந்தும், வீங்கி, வலி இருத்தல்.  ஒலிகளால் உணர்ச்சி மிகுதல்.  பாட்டு என்றாலே சகிக்க முடியாது.  இவ்வொலிகள் ஒவ்வொரு  கை,  கால் வழியாக ஊடுருவி  கவலையை ஏற்படுத்துதல்.  இரைச்சல்கள்.  காதினுள் ஒரு சொட்டுத் தண்ணீர் உள்ளது போலிருத்தல்.  இடது காதில் ஒழுகல்.

மூக்கு – அடிபாகத்தில் வலி.  சளி ஒழுகலுடன் தும்மல்.  நாசியில் துடிப்பு.  மரத்த உணர்வுடன் சிவந்த இரத்தப் போக்கு  சளிச்சவ்வுகள் வறண்டு மூக்கை அடைத்தல்  அல்லது குறைவாக சளி ஒழுகுதல்.  மணம், வாடைகளை நுகரும் தன்மை அதிகம்.  கடுமையானத் தும்மலுடன் வயிற்று வலி.  அமுக்கப்பட்ட சளியால் தலைவலி.  திறந்தவெளிக் காற்றில் சென்றால் குறையும்.. பேசினால் தொந்தரவுகள் கூடும்.

முகம் – ஒரு பக்கம் கன்னம் சிவந்து சூடாகவும்,  இன்னொரு பக்கம் வெளுத்து குளிர்ந்திருத்தல்.  அமைதியின்மையுடன், தாடையின் இடது முக நரம்புகளில் வலி. படுத்திருந்து எழும்போது பிணத்தின் முகம் போல் வெளுத்தல்.  உதட்டில் மரமரப்பு.  உறுத்தும் உணர்வு.  உதடு கறுத்து, வறண்டு, தோல் உரிதல்.  ஆதங்கமுள்ள தோற்றம்.  முகம் முழுவதும் கனத்த உணர்வு.  வலிப்பில் முகம் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளுதல்.   தாடை தொங்குதல்.  மெல்லுவது போல் அசைத்தல்  முகம் உப்பி, சூடாக , சிவந்து காணப்படுதல்.

வாய் – நல்ல பற்களில் குளிர்ந்த காற்றால் தெரிக்கும் வலி ஏற்படுதல்.  குளிர்ந்த பொருட்களால் பற்கள் கூசுதல்.  தண்ணீரைத் தவிர எல்லாமே கசத்தல்.  பற்களை மெல்லுதல்  அழுகிய முட்டை போல் சுவை.  நாக்கு வெள்ளை அல்லது மஞ்சள், வெள்ளைப் படிந்திருத்தல்.  ஈறுகளில் சூடு, வீக்கம்.  வாய், நாக்கு, உதடுகளில் வறட்சி, மரமரப்பு, பேச்சுக் குளறுதல், தடுமாறுதல், கீரிப்பூச்சிகளால் உமிழ் நீர் குவிதல்.  ஆனால் பொதுவாக உமிழ்நீர் சுரத்தல் குறைவு.  நாக்கில் வீக்கம்.  நுனியில் உறுத்தல்.  உள்நாக்கு நீண்டு, நாக்கைத் தொடுவது போன்ற உணர்வு.

தொண்டை – இருமும் போதும், விழுங்கும்போதும் உறுத்தல்.  தொண்டை, உள்நாக்கு சிவந்து, வறண்டு, இறுக்கமுடன், மரத்து, குத்தும், கொட்டும் வலி, எரிச்சல்.  விழுங்கும்போது மூச்சடைத்தல்.  தொண்டைச் சுரப்பியான டான்சில்களில்  வீக்கம்.  தொண்டையில் ஏதோ அடைத்துள்ள உணர்வு.  தொண்டையில் குடையும் எரிச்சல், வலி, காதுக் குழல்களுக்கும் பரவுதல்.

இரைப்பை – பசி இல்லாதிருந்தும், விருப்மில்லாமலே அவ்வப்போது உண்ணுதல்.  உண்டபின் பசி எடுத்தல்.  மெதுவாக உண்ணுதல்.  எரிச்சலுடன் தணிக்க முடியாத தாகம்.  ஐஸ் நீரைக் குடித்தால் இருமல்.  அதிக நீர்ச் சுரப்பு.  அடிக்கடி கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால் குமட்டலோ, வாந்தியோ இருக்காது.  கடுமையான தாகத்தின்போது அதிகளவில் தண்ணீர்க் குடித்தால் வாந்தி.  இறந்து விடுவேன் என்று சொல்லுதல்.   வாந்தியில் பித்தம், பச்சை நிறக் கோழை, இரத்த வாந்தி  இரைப்பையிலிருந்து உணவுக்குழல் வரை எரிச்சல்.  இரைப்பையின் அழுத்தத்தால் மூச்சுவிட இயலாமை (னுலுளுஞசூடீநுஹ) புகையிலை ரொட்டி வெறுப்பு.  மது வகைகள், கசப்புப் பானங்கள், புளிப்புப் பொருள்கள் விருப்பு.  பால் ஒத்துக் கொள்ளாது.  வாந்தியில் குடற்புழு  வருதல்.  ஒரு நொடி மயக்கம்.  ஆதங்கத்துடன் குமட்டல், வாந்தி, தாகம், சூடு, ஏராளமான வியர்வை.  அதிக சிறுநீர்க் கழித்தல்.  உணவுக்குழல் அல்லது இரைப்பையில் குமட்டல்.  உண்டபின் இரைப்பையில் கடுமையான வலி.  விக்கல், இறைச்சி சூப்பு குடித்த பின் குமட்டல்.  இரைப்பைக் குழியில் ஒரு கனமான அழுத்தம் போலிருத்தல்.  அடிக்கடி வரும் வாந்தியால் ஒரு குளிர்ந்த கல் உள்ள உணர்ச்சி.  குளிர்ந்த நீரைக் குடிக்கத் தணியாத தாகத்தால் நீண்ட இடைவெளியில் அதிகம் குடித்தல் அல்லது கொஞ்சமாக அடிக்கடி குடித்தல். 

வயிறு – இளகிய மலம் கழிக்கும் முன்னும், பின்னும் வியர்த்தல், குமட்டுதல், அடிக்கடி குறைவாக வெள்ளை நிற மலம் கடுகடுப்புடன் கழித்தல்.  இரவில் ஆசன வாயில் கீரிப்பூச்சியால் தினவு எடுத்தல்.  ஆரம்ப சீதபேதியில் மலக்குடலில்  கடுமையான வலி, குளிர்க் காய்ச்சல், கடுகடுப்பு, இரத்தமும் இருத்தல்.  இரத்த மூலம்.  இலையுதிர்க்கால சீதபேதி.  மலம் சிறு சிறு துண்டுகளாக பசும்புல் போல், பகலில் அதிக வெப்பமும் இரவில் குளிர்ந்தும் உள்ள நாட்களில் அதிகரிக்கும்.  கோடையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீராக வருதல்.  வலியுடன் கத்துதல், தூக்கமற்று, அமைதியற்று இருத்தல்.  பிறந்த குழந்தைக்குக் காமாலை  சவ்வுப் பிளவு  ஆசனவாயிலிருந்து வெப்பமாக நீர் வெளியாகும் உணர்வு.  மூச்சிழுக்கும்போது கல்லீரல் பகுதியில் குத்தும் வலி, அழுத்தம், இறுக்கம். உதரவிதானத்தில்  குத்தல், சூடு.  குடல்களில் அதிகளவு காற்று சேர்ந்ததால்   அழுத்தம், சூடு, தொட முடியாமை.  வாந்தி, எப்பக்கம் படுத்தாலும் வலி நீங்குவதில்லை.  இரண்டாகக் குறுகிப் படுக்கச் செய்தல்.  தொப்புள் பகுதியில் வீக்கம், வலி, எரிச்சல், சூடுள்ள கரைத்த உணவைக் குடித்தால் வலி குறைதல்.  பழைய நிலைக்கு அமைக்க முடியாத சவ்வுப் பிளவில்   பித்த வாந்தி, வீக்கம், தொட முடியாமை, வியர்த்தல், பயத்தால், சில்லிப்பால் வரும் காமாலை.  குனிந்துள்ள நிலையில் வயிற்றில் இழுக்கும் வலி.  கோபத்தாலோ, திடீர்ப் பயத்தாலோ வெட்டும், கவ்வும் வலியுடன் அடிக்கடி மலம் கழிக்க அவசரப்படுதல்.  காமாலையில் மலச்சிக்கலும், கொழ கொழப்பான மலமும் மாறி மாறி வருதல்.

சிறுநீர் வழி – பிறந்த குழந்தை சிறுநீர்க் கழிக்காமைக்கும், குழந்தைகள் அதிகம் கத்தி அழுததாலும், அதிர்ச்சியாலும், குளிர்ந்த காற்றோ, ஈரமோ தாக்கப்பட்டாலும், குளிர்பானங்கள் குடித்ததாலும் உண்டான காரணத்தாலும் சிறுநீர்க் கழிக்க இயலாமைக்கும் தரலாம்.   சிறுநீர்ப்பைக் கழுத்தில் எரிச்சல், கடுகடுப்பு.  சிறுநீரகப் பகுதியில் பாயும் வலி.  சிறுநீர் குறைவாக, சூடாக, சிவப்பாக, வலியுடன் கழித்தல்.  சிறுநீர்க் கழிக்க ஆரம்பிக்கும்போதே எப்போதும் பயம்.  சிறுநீர்ப் பையில் சிறுநீர் இருந்தும் கழிக்க இயலாமையால்   வீரிட்டுக் கத்துதல்.  அமைதியற்றிருத்தல், உறுப்பை   கையில் பிடித்துக் கொள்ளுதல்.  புறவழியில் எரிச்சல்.  அமுக்கப்பட்டதால் இரத்தப் போக்கு ஏற்படுதல்.  இடுப்பில் வலி.  ஏராளமாகச் சிறுநீர்க் கழித்தலோடு, ஏராளமாய் வியர்த்தல், வயிற்றுப் போக்கு ஏற்படுதல்.

ஆண் - விரை அழற்சி    விரைகள் வீங்கிக் கடினமாக உள்ள உணர்வு.  வலி.  கடுமையான சுக்கிலச் சுரப்பி அழற்சி    குளிராலோ, நாட்பட்ட நோய்களாலோ நிகழ்தல்.  வலியுடன் உறுப்பு எழும்புதல்.  அடிக்கடி எழும்புதலின்போது விந்து வெளியாதல்.  உறுப்பின் மொட்டுப் பகுதியில் ஊறும், கொடடும் உணர்ச்சி.  முதல் நிலை வெட்டை நோய்.  பாலுணர்வு ஆவல் குறைவால் உறுப்பு தளர்தல்.  திடீர்க் காம உணர்வு.

பெண் - விடாய் தோன்றும்போது வெறிபிடித்தவர் போல் இருத்தல்.  யோனி  வறண்ட, சூடாக, உணர்வோடு இருத்தல்.  திடீரென விடாய் அமுக்கப்பட்டதால் கருப்பை அழற்சி   திடீர்ப் பயத்தால், குளிர்ந்த பாதத்தால் விடாய் அமுக்கப்படுதல்.  வெள்ளைப்பாடு மஞ்சளாக, ஏராளமாகப் பிசினாக இருத்தல்.  முலைகளில் பால் சுரப்பு அதிகம்.  விடாய் மிக அதிகமாக, மூக்கில் இரத்தப் போக்குடன், நீண்டு இருத்தல்.  பயத்தால் மன அதிர்ச்சியால கருச்சிதைவு   ஏற்படுதல்.  கர்பப்பையில் மகப்பேறு வலிபோலுள்ள வலியுள்ள விடாயில்  வளைந்து படுத்தாலோ, எந்தவித நிலையோ வலியை நீக்காது.  கர்ப்பப்பையிலிருந்து வேகமாக வரும் இரத்தப் போக்கால்,  நோயாளிக்கு அதிக மனவெழுச்சியும், தலை கிறுகிறுப்பும்,  எழுந்து உட்கார முடியாமல் இறப்பைக் கண்டு பயப்படுதல்.  பித்தமும், அதிக இரத்தமும் உள்ள உடல்வாகும், முதல் குழந்தை கர்ப்பமுள்ள பெண்களுக்கு கர்பப்பை வாய் வறண்டு, இணக்கமில்லாததால் சீக்கிரம் பேறு ஏற்படாத நிலையில் வேதனையால், பயத்தால், ஆதங்கத்தால் குழம்புதல்.  குழந்தை பிறக்காது என்ற பயம்.  ஏதோ கெடுதல் நேரப்போகிறது என நினைத்தல்.  பொதுவாக விடாய் மிகத் தாமதமாக, குறைந்திருத்தல்.  ஆனால் உட்கார்ந்தே வாழ்க்கை நடத்தும் அதிக இரத்தம் உள்ள பெண்களுக்கு நீண்ட நாள் இருத்தல்.  கர்பப்பை திடீரென்று நழுவும்போது வீக்கம், கசப்பு வாந்தி, குளிர்ந்த வியர்வை அல்லது சூடான வறண்ட தோல்.  கர்ப்பமாய் உள்ள போதும், மகப்பேற்றின்போதும் அமைதியற்று இறப்பைக் கண்டு பயந்து இறக்கப் போகும் நேரத்தைக் கூட சொல்லுதல்.  பால் காய்ச்சல்   சித்தப்பிரமை, முலைகளில் சூடு, பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல்   காமாலை   கண்நோய், சிறுநீர்க் கழிக்காமை, ஊதா நிறமாகுதல், மூச்சில்லாமை, நாடி இல்லாமை, சூடு, ஒரு பக்கப் பாரிசவாயு தாக்குதல்  

மூச்சுப் பகுதி –  ஒவ்வொரு முறை இருமல் தோன்றும்போது பெரியவர்களோ, குழந்தைகளோ தொண்டையைப் பிடித்துக் கொள்ளுதல்.  இருதய நோயால் இடது பக்க மார்பில் தொடர்ந்து அழுத்தம், சிறிது அசைந்தாலும் மூச்சடைத்தல்.  கடுமையான தோல் சினைப்புகள்  அமுக்கியதால் ஆஸ்துமா, மார்பைச் சுற்றி ஒரு பட்டைக் கட்டியுள்ள உணர்ச்சி.  மார்புத் தசைகளில் இணக்கமின்மை, வேதனையால் நிமிர்ந்து உட்ார்ந்து சிரத்துடன் மூச்சு விடுதல், மூச்சும் சூடு, நுரையீரல்களிலும் சூடுள்ள உணர்வு.  ஒலிப்பெட்டி அழற்சி   மார்பினுள் தினவு, சிறுமூச்சு விடுதல், வறண்ட சிற்றிருமல், கனைத்தல், மார்பு எலும்புக்குக்   கீழ் அழுத்தம், கனம், எரிச்சல்.  இருமலானது உண்டபின், குளிர்பானங்களைக் குடித்தபின், புகைத்தபின் கோபம், திடீர்ப் பயம், அதிகச் சூடு, வறண்டக் குளிர்க்காற்று, ஆழ்ந்து மூச்சிழுத்தல், பேசுதல், நேராக உட்கார முயலுதல்.  தூக்கத்தில் இரவில் குறிப்பாக நடுநிசிக்குப்பின் அதிகரித்தல்.  மல்லாந்து படுத்தால் குறைதல்.  இருமும்போது இரத்த வாந்தி எடுத்தல் அல்லது இரத்தம் கலந்தோ, தடித்த வெள்ளை நிறக் கோழையோ வெளியாதல். 

இருதயம் - இருதய நோயில் இடது தோளில், கையில் வலி, மரமரப்பு.  மிக வேகமாகத் துடித்தல்.   படபடப்பு, ஆதங்கம், மயக்கம், கைவிரல்களில் உறுத்தல்  இருதயத் தொல்லையில் நோயாளி தலையைச் சற்று உயரே வைத்து மல்லாக்கப் படுத்தால் வேதனைகள் குறைதல்.  நேராக உட்கார்ந்தால் அதிகரித்தல்.  படபடப்புடன் தொதிக்கும் நீரை மாாபில் ஊற்றுதல் போன்ற உணர்வு.  மூன்று துடிப்புகளின்போது இருதயத்தின் கீழ்முனையில்  ஒன்று மட்டுமே துடித்தல்.  இருதயத்தின் அமுக்கத்தால்முதுகில் இரத்தம் எரிச்சலாகப் பாய்தல்.  அசையும்போதோ, மாடிப்படிகளில் ஏறும்போதோ இருதயத்தில் பாயும் வலி.  உட்காந்துள்ளபோது நெற்றிப் பொறி, கழுத்தின் இருபுறமுள்ள தமனிகளின்   துடிப்பை உணருதல்.  காய்ச்சல், அழற்சிகளில் நாடி நிறைந்து, பலமாக, கடினமாகத் துடித்தல்.  ஆஸ்துமாவில் நாடி ஒழுங்கற்று, விட்டு விட்டு சிறியதாகத் துடித்தல்.  இருதயத் துடிப்பை விட வேகமாக இருத்தல்.  வயிற்று உறுப்புகளை மூடியுள்ள சவ்வு அழற்யில்   நாடி வேமாக, கனமாக, சிறியதாகத் துடித்தல்.  மெதுவாகத் துடிக்கும்போது பெரும்பாலும் புலப்படாமல் நூல் போல் ஆதங்கத்துடன் துடித்தல்.  சிக்கலில்லாத பெரிதாக உள்ள இருதயம்   இருதய அழற்சி  

கழுத்து, முதுகு – கழுத்து, இடுப்பு, இடுப்பு மூட்டுகள் வலியுடன் பிடிப்பு.  இரண்டு தோள்களுக்கிடையில் வீக்கமுள்ள வலி.  தோள்பட்டைகளில்   இழுக்கும், கிழிக்கும் வலி.  முதுகுவலியால் ஆழ்ந்து மூச்சு விடுவது தடைப்படுதல்.  முதுகுப் பிடிப்பு.  தண்டுவடத்தில் வண்டு ஊர்வது போலிருத்தல்.  கீழ்முதுகின் மரமரப்பு கால்களுக்குப் பரவுதல்.  தண்டுவடத்திலிருந்து வயிற்றுக்கு வெட்டும் வலி சுற்றி வருதல்.  தண்டுவட வீக்கத்தால் வரும் வலிப்பு.

கை, கால்கள் – மரமரப்பு    உறுத்தல், சூடான கைகள், குளிர்ந்த பாதங்கள்.  உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்குக் கீழ் உள்ள மேடு   சிவந்து காணப்படுதல்.  கைகள் சக்தியற்று தொங்குதல்.  மணிக்கட்டு பாரிசவாயு.  எழுதும்போது விரல்கள் நடுங்கும் உணர்வு.  கைகளில் பின்பக்கம் சிவந்து பருக்களில் தினவு, கொட்டும் வலி.  இடது கை மரமரப்பால் அசைக்கக் கடினம்.  கைகள் பனிக்கட்டிபோல் சில்லென்றிருத்தல்.  உள்ளங்கைகளில் குளிர்ந்த வியர்வை.  தோள்மூட்டுகளில் கிழிக்கும் வலி.  கைகளில் நரம்பு வலி.    பாதத்தில் உறுத்தல் தோன்றி மேல் நோக்கி பரவுதல்.  தொடையில் குளிர்ந்த நீர் சொட்டுச் சொட்டாக ஒழுகுவது போன்ற உணர்ச்சி.  மூட்டுகளில் கீழ்வாத அழற்சியால் வலி, மாலையில்,  இரவில் அதிகரித்தல்.  அவ்விடங்கள் சிவந்து, மினுமினுப்புடன், வீங்கி, தொட முடியாதிருத்தல.  முழங்கால்கள் நிலையற்று இருத்தலால் நடக்கும்போது பாதங்கள் திரும்புதல்.  எல்லா மூட்டுக்களிலும் தசை நார்கள் பலவீனம், தளர்ச்சி, மூட்டுகளில் வலியில்லாத உடையும் ஓசை.   கால்களில் மரமரப்பு, பாதங்களில் கனம், தொடையின் பின்பக்கம் செல்லும் நரம்பில்   வலி.  இடுப்பு மூட்டிலிருந்து முழங்காலுக்குப் பாயும் வலியில் நோயாளி ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும்போதும் கத்துதல்.  கை, தொடை, இடுப்பு மூட்டுகள் படுத்தபின் முடமானது போன்றிருத்தல்.

தோல் – சிவந்து, சூடாக, வீங்கி, வறண்டு, எரிச்சல் இருத்தல்.  சிவந்த வேர்க்குருக்கள்   தட்டம்மை   போன்ற சினைப்புகள்.  ஊக்கமூட்டும் பானங்களால் தினவு  குறைதல்.  சூரியக் கதிர்களாலான சிவந்தத் தோல்.  முகம், தோல், மஞ்சள் நிறம், ஊரும் உணர்வு, தினவு, தோலுரிதல்.

தூக்கம் - பயங்கரக் கனவுகள்.  பேய், பிசாசு அமுக்குவது போலிருத்தல்.    பிதற்றுதல், உளறுதல், பயத்தால் தூக்கமற்று, அமைதியற்று, புரண்டு, புரண்டு படுத்தல்.  வயதானவர்களுக்குத் தூக்கமின்மை.  திடீரெனத் தூக்கத்தலிருந்து எழுதல்.  பகலில் தூங்கி விழுதல்.  தூக்கமில்லாமல் அடிக்கடி கொட்டாவி விடுதல்.  எதிர்கால பயத்தால், ஆதங்கத்தால் நடுநிசிக்குப்பின் தூக்கமின்மை.  தூங்கும்போது மல்லாந்து படுத்துக் கொண்டு கையைத் தலைக்கடியில் வைத்துக் கொள்ளுதல்.  உட்கார்ந்து தூங்கும்போது முன்பக்கமாகத் தலையை சாயத்துக் கொள்ளுதல்.

காய்ச்சல் – திடீரெனக் கடுமையுடன், அதிகமாக ஒரு புயல் போல் வரும்.  நாடி வேகமாகக் குதித்தெழுந்து, அழுத்தத்துடன் நிறைந்து துடித்தல்.  உடல் மீது குளிர் அலை வீசுவது போலவும், குளிரும், சூடும் மாறி மாறி வருதலும், மலச்சிக்கலும், சிறுநீர் வெளியேறல் குறைந்தும், சிறிது அசைந்தாலும் குளிர் தோன்றுவதும் இருத்தல்.  ஆரம்பத்தில் குளிரானது கடுமையாகி மாலை, இரவு வரும்போது அதிகரிக்கும், தாகமும், அமைதியின்மையும் காணப்படும்.  உடலின் எந்தப் பகுதி படுக்கையில் உள்ளதோ அந்தப் பகுதியிலும், துணி மூடியுள்ள பகுதியிலும் ஏராளமாக வியர்த்துக் கொட்டுதல்.  அதனால் நோயாளி தன் மீதுள்ள துணியை அகற்ற விரும்புதல்.  உடலில் சூடுள்ளபோது சிறிது துணியை அகற்றினாலும் குளிருதல்.  இரத்தக்குழல்களில் குளிர்ந்த உணர்ச்சி.  குளிர் பாதத்திலிருந்து மார்புக்கு ஏறுதல்.  வியர்வையை அமுக்கியதால்  தோன்றிய பின்விளைவுகள்.  அதிகக் காய்ச்சலில் தலை, கண் இமைகள், மூக்கு, வாய், தொண்டை, நுரையீரல்கள், உள்ளங்கைகளில் வறண்ட, எரிச்சலுள்ள சூடும், கன்னங்கள் சிவந்தும் காணப்படுதல்.  வீக்கமுண்டாகிற காய்ச்சல்களில், வீக்கங்களில் அதிகச் சூடு, வறட்சி, தோலில் எரிச்சல், முனகுதல், வேதனையால் புரளுதல், சிறு மூச்சுவிடுதல், தலையில் இரத்தம் தேங்குதல்.  டைபாய்டு, மலேரியா போன்ற தொற்று நோய் காய்ச்சல்களுக்குத் தரக் கூடாது.

அளவு – 1 சி  முதல் 30 சி.

முக்கியக் குறிப்பு – 1. அகோனைட் வேகமாகக் குறுகிய காலமே வேலை செய்வதால் கடுமையான நோய்களில் அடிக்கடி தரலாம்.  குறித்தக் காலத்தில் வரும் தொல்லைகளுக்கு ஏற்றதல்ல.  உணர்ச்சி சம்பந்தப்பட்ட   பாதிப்புகளுக்கு 6சி.  இரத்தம் குவியும்   நிவைமைகளுக்கு 1 சி முதல் 3சி.  வீக்கங்களின் ஆரம்ப நிலைக்குத் தரலாம்.  இரண்டாம் நிலையில் அதாவது கடினமாகி, ஒரே இடத்தில் நிலைத்துள்ளபோது தரக்கூடாது.  ஆரம்ப திடீர் நோய்க்கு சில வேளைகள் அக்கோனைட்டைக் கொடுத்து சில மணிகளில் குறிகள் நீங்கவில்லையானால் அதற்குச் சரியான மருந்து இதுவல்ல எனக் கருதி நிறுத்தி விட வேண்டும்.  அதைப் போலவே வேறு மருந்துகளோடு  சேர்ந்தோ, மாற்றியோ தரக்கூடாது. 

2. சல்பர், அக்கோனைட்டின் நாட்பட்ட மருந்தாகும்.  அகோனைட்டில் ஆரம்பித்ததை சல்பர் முழுதும்  குணமாக்குகிறது.  காரணம் இவ்விரு மருந்துகளுக்கிடையே உள்ள குறிகள் யாவும் ஒத்திருப்பதால் கடுமையான நோய்களில்  அகோனைட்டும், நாட்பட்ட நோய்களில்   சல்பரும் ஏற்றதாகும்.  நாம் சிகிச்சை அளிக்கும்போது இவ்வித உறவு உள்ளவைகள் மற்ற மருந்துகளிலும் இருப்பதால் அவைகளையு இவ்வாறே கடைப்பிடிக்க வேண்டும்.  நற்பயன் கிட்டும். 

3. சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய அம்சம் அகோனைட் இரத்த ஓட்டத்திலும், பெல்லடோனா மூளையிலும் சாமோமில்லா மனோபாவத்திலும் உள்ள கோளாறுகளுக்கு ஏற்றது.

4. திடீர்ப் பயத்தை அகோனைட்டும், ஆத்திரத்தை, கோபத்தை சாமோமில்லாவும் அவமானப்படுதல், மனத்தாங்கல்களை ஸ்டாபிசாகரியாவும் குணமாக்கும்.

5.  வறண்ட, குளிர்க்காற்றால் ஏற்பட்ட பாரிச வாயுவிற்கு   ஆரம்பத்தில் அகோனைட் கொடுத்துத் தோல்வி கண்டால் காஸ்டிகம் தர வேண்டும்.  இவை இரண்டுமே வறண்ட குளிர்க் காற்றால் ஏற்பட்ட பாரிச வாயுவைப் போக்கக் கூடியவை.  பிரையோனியா குளிர்ந்த, வறண்ட காற்றால் வந்த பாதிப்புகளுக்குத் தரலாம்.

கருச்சிதைவு     பயத்தினால்     -     அகோனைட்

      பலவீனத்தால்   -     அலடிரிஸ்

      அடிபட்டதால்    -     ஆர்னிகா

      வழக்கமாக ஏற்படுதல்      -     காலோபில்லம்

      அதிக உழைப்பு  -     எரிக்னான்

      மனக்கிளர்ச்சி   -     ஜெல்சிமியம்

      சைக்கோசிஸ்   -     மெடோரினம்

      சிபிலிஸ்   -     மெர்க்கூரியஸ் சோல்.

 

ஒ.கு.ம. – ஜெல்சிமியம், காபியா, ஹீபார், பிரையோ, நக்ஸ்வாமிகா.

உ – பெல், சாமோமில், பெர்பரிஸ். காபியா. ஆர்ச.ஆல். செபியா.

பூ – ஆர்னிகா, காபியா, சல்பர்.

மு – ஆசிட்.அசிடிக், பாரிஸ், வைனம், பெர்பரிஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக