வெள்ளி, 22 டிசம்பர், 2023

அசிடிக் ஆசிட் - ACETIC ACID K.RAJU

 

அசிடிக் ஆசிட்  -   ACETIC ACID

 GLACIAL ACETIC ACID  HC2H3O2



 

நோய் கூடுதல் :

          குளிர்ச்சி, காலை.

 

நோய் குறைதல் :

          குப்புறப்படுத்தல்

மியாசம் :        சோரா, சைக்கோசிஸ். சிபிலிஸ்.

 

.வே.. :       மனம், வயிறு, கர்ப்பப்பை

 

பொது மிகுந்த இரத்தச்சோகை, பசியின்மை, அதிக களைப்பு, இளைப்பு, அடிக்கடி மயக்கம், வெளுத்த, மெலிந்த, தளர்ந்த, தொள, தொளச் சதை உள்ள நபர்கள்.  பலவீன இருதயம், மூச்சு விட இயலாமை, வாந்தி, ஏராளமான சிறுநீர், வியர்வை, மெழுகு தடவியத் தோலுடன் வயிற்றுப்போக்கு.  உடல் முழுவதும் நீர்க் கோப்பு, மூக்கு, நுரையீரல்கள், இரைப்பை, மலக்குடல், புண்கள், கர்ப்பப்பை முதலியவைகளில் இரத்தப்போக்குகள்.  மருக்கள், ஆணிகள், விளிம்புள்ள மச்சம், வலிப்பின்போது பைத்தியம் பிடித்ததுபோல் படுக்கையைவிட்டு குதித்தெழுந்து தரையில் ஊர்ந்து செல்லுதல்.  உள்ளும், வெளியிலும் தோல் புற்றுநோய் (EPITHELIAL CANCER).  நீரிழிவு நோயில் அதிக தாகம்.   காயங்களுக்குப் பின்பும், அறுவை சிகிச்சை அதிர்ச்சிக்குப் பின்பும், அறுவை சிகிச்சையின்போது தரும் மயக்க மருநதால் ஏற்படும் பின்விளைவுகளை முறிக்கிறது.  குழந்தைகள் மெலிதலுக்கும், நோயினால் வரும் இளைப்புக்கும் தரலாம்.  இளைப்பு முகம் கைகள், தொடைகளில் காணப்படுதல்.  இரத்த சோகையுள்ள பால் கொடுக்கும் தாய்க்கும் தரலாம்.  கடினமான ஆரம்ப சிபிலிஸ் புண் (CHANCRE).  மூட்டு இணைப்புகளில் ைடிசக்கோசிஸ் முடிச்சுகள் படிதல்.

மனம் - தன் குழந்தைகளைப் பற்றி ஆதங்கமும் நோயைப் பற்றியும் கவலைப்படுதல்.  வேதனைப்படுல்.  தொழிலைப்பற்றி வருத்தப்படுதல்.  தொல்லைகளை விலைக்கு வாங்குதல்.  சமீபத்தில் நடந்தவைகளைக்கூட மறந்து விடுதல்.  தன் குழந்தையையும், நன்கு தெரிந்தவர்களையும், உறவினர்களையும் கூட தனக்குத் தெரிவதில்லை.  அந்தளவுக்கு மனக்குழப்பம்.  தன்னைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று குழந்தை விரும்புதல்.  மந்த குணம்.  அளவுக்கு மீறி கோபம் கொள்ளுதல், தண்ணீரைக் கண்டால் பயம்.

தலை தன் தலையைத் தொட குழந்ைை அனுமதிக்காது.   புகையிலை, அபினி, மது போன்ற போதைப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்தியதால் வந்த தலைவலி.  சன்னியில் இரத்தம் தலைக்குப் பாய்தல்.  பொறி நரம்புகளில் புடைப்பு.  மயிர்கள்  நிமிர்ந்து நிற்றல் (BRISTLES) நெற்றியிலும், தலையிலும், கனமுள்ள மந்தமான வலி.

கண் -  குழி விழுந்து, கருப்பு வளையங்கள் சுற்றி இருத்தல், கண்ணீர் வடிதல்.

மூக்கு அடிபட்டதால், விழுந்ததால், இரத்தப்போக்கு. அடிக்கடி சளி பிடித்தல்.

முகம் வெளுத்து, இளைத்து, மெழுகு தடவியது போலிருத்தல்.  இடது கன்னம் மிகச் சிவந்து சூடாக இருத்தல்.  உதடுகள் நீலச் சிவப்பு.  தாடை இணைப்பில் வலி, அழுத்தினால், அசைத்தால் வலி கூடும்.  உதடு தோலில் சதைக்கட்டி (EPITHELOIMA).

வாய் நாற்றம், அதிக உமிழ்நீர்ச் சுரத்தல்.  நாக்கின் அடிப்பாகத்தின் பகுதியில் வலியால் பேசவோ, அசைக்கவோ முடியாது.  கீழ்த்தாடை வீக்கம்.  புளிப்புச் சுவை.  பற்கள் மந்த உணர்வு..

தொண்டை குழந்தை ஒரு தேக்கரண்டி நீரைக்கூட வேதனையுடன் விழுங்குதல்.  உண்ணும்போது மிகவும் மெதுவாக விழுங்குதல்.  தொண்டை வீங்கி, புண்ணாகி கெட்ட நாற்றமடித்தல், சவ்வழற்சியால் ஒலிபெட்டி அடைப்பு (CROUP), வெள்ளை போலிச் சவ்வு காணப்படுதல்.

இரைப்பை உருளைக்கிழங்கைத் தவிர, குளிர்பானங்கள், காய்கறிகள், ரொட்டி, வெண்ணெய், உப்பிட்டப் பண்டங்கள் ஒத்துக் கொள்வதில்லை.  கடுமையான எரிச்சல், தாகம், இரைப்பையில் புளித்துப் போன உணர்வு.  இரைப்பைப் புற்றுநோய்.  அதிகளவு அமிலச் சுரப்பு. (HYPERCHLORHYDRIA).  இரைப்பை வலி (GASTRALGIA).  புளிப்பான ஏப்பம், வாந்தி.  எந்தவகை உணவும் வாந்தியாகுதல்.  புண்ணுள்ளது போன்ற எரிச்சல், வலி.  எதுக்களித்தல்.  இரைப்பை, மார்பில் பயங்கரமான எரிச்சல் வலியைத் தொடர்ந்து தோல் குளிர்ந்தும் நெற்றியில் குளிர்ந்த வியர்வையும் இருத்தல்.  சாராயம் குடித்தது போன்ற உணர்வு இமைரப்பையில் தெரிதல்.  இரைப்பையில் சூடு.  சூடுள்ள ஏப்பங்கள், நீரிழிவு (DIABETES).  நீர்க்கோப்பு (DROPSY).  நாட்பட்ட வயிற்றுப்போக்குகளில்  எவ்வளவு தண்ணீர்க் குடித்தாலும் இந்தக் கடுமையான எரிச்சல் தாகத்தைக் குறைத்து திருப்தி அளிக்கச் செய்யாது என்பது ஒரு சிறப்புக் குறி.  காய்ச்சலின்போது சிறிது கூட தாகம் இருக்காது.  குளிர்ந்த நீர்கள் கனமாக இருத்தல்.

வயிறு குடலில் காற்று சேர்ந்ததால் வயிறு உப்புசம் (TYMPANITES).  நீர்க்கோப்பு ( ASCITES).  இரத்தப்போக்கு.  மல்லாந்து படித்தல் வயிறு குழிவிழுந்தது போலிருத்தல்.  நாட்பட்ட மலச்சிக்கல்.  காசநோய் வயிற்றுப்போக்கில் கால்கள், பாதங்களில் வீக்கம்.   இடைப்பட்ட காலத்தில வரும் விடாயை (METRORRHAGIA) அமுக்கியதால் குடல்களிலிருந்து இரத்தப்போக்கு.  முன் சிறுகுடல் திறப்பான் பகுதியில் (PYLORUS) கடினப் புற்றுநோய் (SCIRRHUS).  நாட்பட்ட வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இளைத்துப்  போகுதல்.   மலம் கழிக்கும்போது விந்து வெளியாகுதல்.  பச்சை நிற மலம்.  நாற்றமில்லாக் காற்று.

சிறுநீர் வழி நீரிழிவு நோயில் (DIABETES ).  அதிகளவில் வெளுத்தச் சிறுநீர் கழித்தலால் அதிகத் தாகம், அதிக பலவீனம்.

ஆண் - இரவில் தூக்கத்தில் விந்து வெளியாவதால் மிகவும் பலவீனமடைதல்.  உறுப்பு தளர்ச்சியடைந்து கால்களில் வீக்கம்.  மொட்டுவை மூடியுள்ள தோல் தடித்து, வெடித்து மேலிழுக்க இயலாமை.  பயங்கரத் தினவு.  பாலுணர்வு ஆவல்.  இருப்பினும  எழும்புதல் குறைவு

பெண் - மகப்பேற்றுக்குப்பின் இரத்தப் போக்கு.  விடாய் அதிளவு வெளியாதல்.  பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இரத்தச் சோகை ( ANEMIA).  கர்ப்பமாய் உள்ளபோது புளிப்பான எதுக்களிப்பு.  வாந்தி, நெஞ்செரிச்சல், பகல், இரவு எப்போதும் உமிழ்நீர் சுரத்தல்.  முலைகளில் பால் சுரத்தலால் அதிக வலியுடன் பருத்திருத்தல்.  கட்டி தோன்றுவது போலிருத்தல்.  பால் குறைந்து நீர்த்து, புளிப்பு வாடையுடன் நீலநிறம் காணப்படுதல்.  இடைப்பட்ட விடாயில் அடிவயிற்றில் கவ்விப் பிடிக்கும் வலி.  குப்புறப்படுத்தால் வலி குறைதல். 

மூச்சுப் பகுதி மூச்சுவிட இயலாமை.  மூச்சை உள்ளிழுக்கும்போது இருமல்.  ஏராளாமான கோழை வருதல்.  காற்றுக் குழலில் உறுத்தல், அடைப்பால் மூச்சுத் திணறல்.  இரத்த வாந்தி.

இருதயம் - நாடி நிைந்து, ஒழுங்கற்று  வேகமாக சிறியதாக ஓடுதல்.

கழுத்து, முதுகு முதுகு வலிக்காக குப்புறப்படுத்தால் மட்டுமே வலி குறையும்.  தண்டுவட அழற்சியுடன் (MYELITIS) அதிக சிறுநீர்க் கழித்தல்.

கை, கால்கள் கால்கள் பாதங்களில் நீர்க்கோப்புடன் வீக்கம்.  வயிற்றுப்போக்கு.  மணிக்கட்டுகள், கைகளில் முடமான உணர்வு.  கால்களில் பலவீனம், களைப்பு, உணர்வுக் குறைவு.

தோல் மருக்கள் ( WARTS) ஆணிகள் (CORNS) விளிம்புள்ள மச்சம் (NAVUS) மேல் தோல் ( CUTICLE) உரிதல், எரிச்சல், வறட்சி, சூடு, உடல்  முழுவதும் உணர்வுக் குறைவு.  தோல் வெளிராக, வீங்கி, மெழுகு பூசியது போலிருத்தல்.  பெருத்த சிரைகளில் (VARICOSE VEINS ) வீக்கம், சுளுக்கு, பூச்சிக் கடிகள், கொட்டுகள், தோலில் இரத்தம் கசிதல், அகலமான, தட்டையானக் காம்புப் போன்ற சதைக்கட்டி மருக்கள் ( CONDYLOMOTA) வறண்டோ அல்லது ஈரமாகவோ இருத்தல்.

தூக்கம் - தூக்கமின்மை, மல்லாந்து படுக்க முடியாது.  குப்புறப்பபடுத்தால் தூக்கம் வரும்.

காய்ச்சல் காய்ச்சலின் போது சிறிதுகூட தாகமே இருக்காது.  காய்ச்சல் வேகத்தில் இரவில் நனையுமளவு வியர்த்தல்.  இடது கன்னத்தில் சிவந்தப் புள்ளி.  குளிர்ந்த வியர்வை.

அளவு 3 சி  முதல் 30 சி.

முக்கியக் குறிப்பு அசிடிக் ஆசிடில் உமிழ்நீர், பகலில் இரவில் சுரத்தல்.  மெர்க்குரி சோலில்  உமிழ்நீர் தூங்கும்போது இரவில் மட்டுமே அதிகம் சுரத்தல்.  சிபிலினத்தில் உமிழ்நீர் தூங்கம்போது அதிகம் சுரந்து வாய் வெளியே வழிந்து ஓடுதல்.  காம்பு போன்ற சதைக்கட்டி மருக்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று நுனி கூர்மையுடன் ஆண்குறி மொட்டுவை மூடியுள்ள தோலின் கீழும் ( CONDYLOMOTA ACUMINATA) பெண் வெளி உறுப்பு ( VULVA) மற்றும்  ஆசனனவாய்ப் பகுதியைச் சுற்றிலும் காணப்படுவை, பால்வினை நோய் சம்பந்தமில்லாதது ( NON VENERAL ), மற்றொன்று சிபிலிஸ் சம்பந்தப்பட்ட சதைக்கட்டி மருக்கள் (   CONDYLOMOTA)  மிகவும் தொற்றக்கூடியதாகவும், ஈரமாகவும், ஈரமுள்ளப் பகுதிகளான அக்குள், ஆசனவாய் போன்ற இடங்களில் காணப்படும்.

.கு.. அப்ரோடானம், ஐயோடம், சானிகுலா, டியூபர்குலினம்.

பூ சைனா

போராக்ஸ், காஸ்டிகம், நக்ஸ்வா, ரணன்-பல், சரசபரி, டலகாம்ரா, பெர்ரம், மெர்க்குரி.

மு அக்கோனைட், நேர்.மூர், செபியா, டபாகம்

.செ.கா. 20 நாள்.

 

*****  

1 கருத்து: