வெள்ளி, 22 டிசம்பர், 2023

அகாலிபா இந்திகா - ACALYPHA INDICA K.RAJU

 

அகாலிபா இந்திகா  -   ACALYPHA INDICA

 INDIAN NEETLE

EUPHORBIACEAE FAMILY


 

நோய் கூடுதல் : காலையில்

 

மியாசம் :        சோரா. 

 

.வே.. :       செரிமானப் பாதை, மூச்சு உறுப்புகள்.

 

பொது குப்பைமேனி.  இது தாவரம்.  காய்ச்சல் தொல்லையில்லாமல், சித்திரவதைப்படுத்தும் கடினமான இருமலும், இரத்தம் கலந்த கோழையும், தமனிகளில் இரத்தப் போக்கும், ஆரம்பக் காச                    நோய்க்கும் தரவல்லது.  காலையில் மிகப் பலவீனம்.  பகலில் மற்ற நேரத்தில் பலம் பெறுதல்.  உடல் படிப்படியாக இளைத்தல்.  நோயும் அதன் காரணங்களைக் கொண்ட இரத்தப் போக்குகள் குறிப்பாகக் காலையில் கூடுதல்.

மனம் - மனச்சோர்வு, துக்கம்.

தொண்டை உணவுக் குழல், தொண்டைக் குழியில் எரிச்சல்.

இரைப்பை கனம், எரிச்சல்.

வயிறு குடல்களில் எரிச்சல்.  காற்று சேர்தல்.  மலக்குடலில் இரத்தப் போக்கு,  காலையில் கூடுதல்.  வயிற்றுப் போக்கு  துப்பும் ஓசையுடன், விசையோடு, காற்று ஒலியோடு வெளியாதல்.  கடுகடுப்பு வலி கீழே இறங்குதல்.  வயிற்றில் ககடவென்ற ஓசையுடன் சங்கடமும், பிடிக்கும் வலியும் இருத்தல்.

மூச்சுப் பகுதி வறண்டு, கடினமான இருமலைத் தொடர்ந்து இரத்த வாந்தி (HAEMOPTYSIS).  காலையில், இரவில் அதிகரித்தல்.  மார்பில் தொடர்ந்து கடுமையான வலி.  கோழையுடன் காலையில் வரும் இரத்தம் நல்ல சிவப்பாகவும், அதிகமில்லாமலும், பிற்பகலில் வரும் இரத்தம் கருஞ்சிவப்பாகக் கட்டிகளுடன் இருத்தல்.  விரலால் மார்பைத் தட்டினால் மந்தமாகக் கேட்டல்.

இருதயம் - நாடி மிருதுவாக அழுத்தத்துடன் இருத்தல்.

தோல் காமாலையுள்ள மஞ்சள் நிறம், தினவு.  கட்டிகன் விளிம்பில் உள்ள வீக்கம் போல் காணப்படுதல்.

அளவு 3சி  முதல் 6 சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக