வெள்ளி, 22 டிசம்பர், 2023

அசிடாநிலிடம் - ACETANILIDUM K.RAJU

 அசிடாநிலிடம்  -   ACETANILIDUM

 ANTIFEBRINUM   CH3 CONHC6H5

 

மியாசம் :        சோரா

 

.வே.. : இருதயம்.

 

பொது காய்ச்சலைக் குறைக்கிறதுஇரத்த அழுத்தம், இருதயம், முச்சு செயல்படுதல் ஆகியவைகளைப் பலவீனப்படுத்துகிறது. சிவப்பணுக்களை அழிக்கிறது. உடலை வெளிர் நிறமாக்குகிறதுஉடல் நீலம் பூத்தல் (CYANOSIS).  வீழ்ச்சியடைதல் ( COLLAPSPE).  எளிதில் சளி பிடிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்தல்.

மனம் - பாவம் செய்யும் குணம்தீயப் பழக்கம், கெட்டப் புத்தி.

தலை ஒற்றைத் தலைவலி, பெரிதான உணர்வு, மயக்கம்.

கண் கண் பாவை அளவு மீறி விரிந்திருத்தல் (MYDRIASIS).  விழித்திரை நரம்பு, பார்வைக் கொள்ளும் இடம் சுருங்கியும், கண் வில்லை வெளுத்தும் இருத்தல்.

மூச்சுப் பகுதி மூச்சுவிட மிகவும் கடினமாக இருப்பதால், அருகிலுள்ளவரின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுதல்உதரவிதானத்தின் செயல் நின்று போய்விட்டதாகவும், அதனால் எந்தவிதத்திலாவது மூச்சைப் பெற வேண்டுமென்ற உணர்வு.

இருதயம் - பலவீனமும், ஒழுங்கற்றுத் துடித்தலுடன் சளிச்சவ்வுகள் நீல நிறமாகி, பாதம், கணுக்கால்களில் நீர்க்கோப்பு  (OEDEMA),  சிறுநீரில் ஆல்புமின் இருத்தல்.

அளவு 3சி    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக