செவ்வாய், 19 டிசம்பர், 2023

Baptisia Tinctoria

 

 

  

Baptisia tinctoria

கே. இராஜூ

 



நோய் < : சிறிது ஈரமும் சூடும்,  மூடுபனி,  அறையில் இருத்தல்,

விழித்தெழுதல், நடத்தல், இருட்டு,  இலையுதிர்காலம், 

வெப்பக் கால நிலை.


நோய் > : ஓய்வு, திறந்த வெளிக்காற்று.

 

மியாசம் : சோரா.

 

ம.வே.ப. : மனம், இரத்தம், நரம்புகள், செரிமானப் பகுதிகள், சவ்வுகள்.

 

பொது - இது தாவரம்.  முகம் சிவந்தும், அந்திநேர இருட்டு போலவுமுள்ளக் கனத்த முகமுடைய நோயாளி.  மந்த குணமும் வழக்கமாக் குடிப்பவனின் பார்வையும் உயைவர்கள்.  டைபாய்டு நோய்க்கு ஏற்றது.  உடல் முழுவதும் புண் போன்ற வலி இருக்கும்.  களைப்பும், மிக அதிக அளவு இரத்தம் கெட்டு அழுகும் நிலைமைகள் (septic conditions).  மலேரியா நோயினால் ஏற்படும் நச்சுத்தன்மை, விவரிக்க இயலாத நோய் உணர்வு.  தசைகள் கனத்து புண்ணுள்ள வலி ஏற்படுதல்.  உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளான மலம், சிறுநீர், வியர்வை, காற்று யாவும் கெட்ட நாற்றமடித்தல்.  தூயக் காற்றில், தண்ணீரில், நச்சுக் கிருமிகள் கலந்ததால் தோன்றும் டைபாய்டு போலுள்ள குறிக்ளுக்கு டைபாய்டு நோய்க்குத் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டபின் ஏற்படும் கோளாறுகளுக்கும் கூடத் தரலாம்.  உடல் உணர்ச்சியற்றும், மனம் சோர்வுற்றும் காணப்படும்.  இன்புளூயன்சா தொற்று நோய், இரத்தப் போக்கு, மலம், கருஞ்சிவப்பாகவும், உடல் கருஞ்சிவப்புப் புள்ளிகள் முதலியன இருத்தல்.  டைபாய்டு படுக்கைப் புண், சளிச்சவ்வுகள் கருஞ்சிவப்பாகுதல்.  குழந்தைகளுக்குக் குடலில் நாட்பட்ட நச்சுத்தன்மை பாதிப்பால் மலமும், ஏப்பமும் நாற்றமடித்தல்.  இந்நோயாளிகளுக்கு 103F-இக்கு மேல் காய்ச்சல் இருக்கும்.  கடுமையான தலைவலி, உடல், கைகால்கள் வலி அதிகளவு நரம்பு தளர்ந்து, குளிரும் காணப்படும்.   எந்தப் பக்கம் படுக்கின்றாரோ அந்தப் பக்கம் புண் போலும், அடிபட்ட வீக்க உணர்வும் இருக்கும்.  இருதயத் துடிப்பு மெதுவாகவும், நாடி நிறைந்து மிருதுவாகவும் ஓடும்.  நாக்கு வெள்ளை படிந்து சிவந்த சிறு கொப்புளங்கள் காணப்படும்.  மையநாக்கு காய்ந்து மஞ்சள் பழுப்பு நிறமாகவும், பிறகு வெடிப்பும், புண்ணும் ஏற்படுதல்.  கடின உணவுகளை விழுங்க முடியாது.  நீராகாரம் போன்றவைகளைத்தான் விழுங்க இயலும்.  பேசிக் கொண்டிருக்கும்போதோ,  கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டுள்ள போதோ நோயாளி பாதியிலேயே மயக்கமடைதல்.  படுக்கையில் இங்கும் அங்கும் புரளுதல்.  மிருதுவானப் படுக்கைக்கூட மரப்பலகை போல் இருத்தல்.  தசைகள் வலி ஒரு சிறப்புக் குறி.

மனம் - மாயமான, வெறும் கனவான, ஏமாற்றமான, கற்பனையான எண்ணங்களால் தன் கால்களை ஒன்றுடன் ஒன்று பேசிச் கொள்வதாக நினைத்தல்.  தலைவலியின்போது கொடூரமாக நடந்து கொள்ளுதல்.  குடிகாரனைப் போல் குழப்பமான மனம்.  தன் உடல் பத்து துண்டுகளாகப் படுக்கையில் சிதறிக் கிடப்பதாகவும் அதை ஒன்று சேர்க்க முயலுவதாகவும், தான் இரண்டு அல்லது மூன்று பேராக உள்ளதாகவும், அவர்களைப் போர்வையால் போர்த்த இயலவில்லை எனவும் சொல்லுதல்.  பதில் சொல்லும்போதே மயக்கமடைதல்.  முழு வாக்கியத்தையும் முடிப்பதில்லை.  தன்னுடன் யாரோ ஒருவர் படுக்கையில் படுத்திருப்பதாக எண்ணுதல்.  மந்த குணமும், தேரமாட்டோம் என்ற நம்பிக்கையின்மையும், உடல் அல்லது மனவேலைகளைச் செய்வதில் வெறுப்பும், முரண்பட்டப் பேச்சும், அமைதியற்றும், பயந்தும், பிதற்றுதலும் காணப்படுதல்.  கவலை, பலவீனத்தால் நினைக்க இயலாமை.  சுற்றித் திரியும், அலைமோதும் எண்ணம்.  இரண்டு மனப்பிரமை, அலட்சியம்.

தலை - பின் தலையில் ஒரு அடி விழுந்தது போலும், நெற்றித் தோல் இறுகி மேல் பக்கமாக இழுக்கப்பட்டுள்ளது போலும், தலையினுள்ளே நீந்துவது போலும், கனத்தம், பறப்பது போலவும், மரத்து, பெரிதாகவும், மூளை புண்ணுள்ளதான உணர்ச்சி.  தலைச்சுற்றலுடன் பலவீனம்.

கண் -  இமைகள் கனத்தும், கண் விழிகள் வீங்கிய புண்ணுள்ள உணர்வும், அசைத்தால் வலியும் இருத்தல்.  பாரிசவாயுவால் இமைகள் பாதித்தல்.  கண் எரிச்சல், நீர் வராது.  படித்தால் கடுமையான வலி.

காது - டைபாய்டு நிலைமைகளில் சீக்கிரமே செவிடாகுதல்.  காதின் கீழுள்ள சுரப்பிகளில் வலி.  கருஞ்சிவப்பு நிற வீக்கம்.

மூக்கு - மூக்கின் அடிப்பாகத்தில் வலி.   நாற்றமுள்ள சளி.  கருஞ்சிவப்பு இரத்தப்போக்கு.

முகம் - களை இழந்து, கனத்து, சிவந்து, அந்திநேர இருட்டு போலும், குடிகாரனின் பார்வை போலும் காணப்படும்.  தாடைத் தசைகள் இணக்கமற்று இருத்தல்.  உதடுகளில் வெடிப்பு.  தாடை தொங்குதல்.

வாய் - நாற்றம், நாக்கு சுட்டது போல உணருதல்.  நாக்கு முதலில்  வெள்ளை, பின்பகுதி மஞ்சளாகவும், நடுவில் பழுப்பு நிறமும், ஓரங்கள் சிவந்தும், பளபளப்புடனும், கசப்பான சுவையும், வெடிப்பும் இரத்தக் கசிவும், பிசினுள்ள உமிழ்நீரும், வாய்ப்புண்ணும் இருத்தல்.  நாக்கை நீட்டினால் நடுங்குதல்.  பற்கள், ஈறுகளில் புண்.  பொருக்குப் படிதல்.

தொண்டை - அன்னக் குழலில் சுருக்கம், இறுக்கம், வலியில்லாதத்  தொண்டைப்புண், நாற்றமுள்ள கழிவு, சுரப்பிகள், வாயின் கூரைப்பகுதி கருஞ்சிவப்பாகக் காணப்படுதல்.  நீராகாரங்களைத்தான் விழுங்க இயலுதல்.  கடின உணவுகளை உட்கொண்டாவ் அடைத்தல்.  கிழிந்து போனப் புண்கள் காணப்படுதல்.  பாரிசவாயுவால் பேச இயலாமை.

இரைப்பை - அன்னக்குழலின் இறுக்கத்தால் உண்ட உணவை வாந்தி எடுத்தல், பசியின்மை, உணவை வெறுத்தல், பால் குடிக்க விரும்புதல், அடிக்கடி தண்ணீர் குடிக்க ஆவல்.  மேல் பகுதியில்   வலி. EPIGASTRIUM இரைப்பைக் காய்ச்சல்.  இழக்கும் உணர்வு.  பீர் குடிப்பதால் குறிகள் < நிறைந்த, கனத்த, கடினமான உணர்வு.

வயிறு - கல்லீரலில், பித்தப்பை பகுதிகளில் புண்ணுள்ள உணர்ச்சி.  வயதானவர்களுக்குத் தோன்றும் சீதபேதி, மலம் கருப்பாக, அதிக நாற்றமுடன், மெலிந்து, இரத்தமுடன் திடீரென வெளியாகுதல்.  ஆனால வலி இருக்காது.  குழந்தைகளுக்கு நாட்பட்ட குடல் நச்சுத்தன்மையால் மலமும், ஏப்பமும் நாற்றமடித்தல்.  அடிவயிற்றில் புண்ணுள்ள உணர்வும், உப்புசமும், கடகடவென ஓசையும் காணப்படுதல்.  சுயநினைவின்றி மலம் கழித்தல்.  வயிற்றுப்போக்கலான ஆசனவாய்ப் புண்.

சிறுநீர் வழி - கருஞ்சிவப்பு நிறமுள்ள, அளவு குறைந்த நாற்றமுள்ள சிறுநீர்கழித்தல்.  யுரேமியா நோய்   இதனால் சிறுநீரகம் செயலிழந்தாலோ, கோளாறானாலோ, நோயினாலோ யூரியா உப்புகள்  வெளியாகாமல் தங்குதல்.

ஆண் - விரை சுரப்பி அழற்சி  பிழியும் வலி.

பெண் - மகப்பேறுக்குப் பின் தோன்றும் காய்ச்சல்   அதிர்ச்சி, மனச்சோர்வு, குறைந்தளவே வெப்பமுள்ள கய்ச்சல்கள், கண் விழித்தல் ஆகியவைகளால் ஏற்படும் குறைமாதக் கருச்சிதைவுகளுக்கு ஏற்றது.  மாதவிடாய் குறித்த காலத்திற்கு முன்பே ஏராளமாக வெளியாகுதல்.  மாதவிடாய் காரமுள்ள நாற்றம்.

மூச்சுப் பகுதி - மார்பில் இறுக்கம். நுரையீரல்களில் ஏற்படும் அமுக்கத்தால் மூச்சுவிட முடியாமை.  தூயக்காற்றுத் தேவை என்ற உணர்வால் சன்னல் அருகே இருக்க விரும்புதல்.  மூச்சுவிடும் காற்று நாற்றமடித்தல்.  நுரையீரல்களின் பலவீனத்தால் ஆழ்ந்து மூச்சு இழுக்க இயலாமை.  காற்றுக் குழல் ஆஸ்துமா.  தூக்கத்தில் தீக்கனவுகளால் மூச்சுத் திணறல் NIGHTMARE  ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக தூங்கச் செல்வதில்லை.

இருதயம் - வயதானவர்களுக்கு விட்டு விட்டுத் துடிக்கு நாடி.  முதலில் வேகமாகவும், பிறகு மெதுவாகக் குறைந்து நாடி ஒடுதல்.

கழுத்து, முதுகு - கழுத்து களைப்புற்றும்,  ஒரு நிலையில் எளிதில் இருக்க இயலாமையும், இடுப்புப் பகுதியைச் சுற்றிலும் புண்போல் வலி இருத்தல்.  வயிற்றிலிருந்து பின்பக்கத்திற்கு வலி பரவுதல்.

கை, கால்கள் - விறைப்பு, இழுக்கும் வலி, நடுங்குதல்.

தோல் - மங்கலான நீலநிறப் புள்ளிகள், திட்டுகள் உடல் முழுவதும் காணப்படுதல்.  தோல் மீது சூடு, எரிச்சல், தோல் கருப்பாகுதல், வலி இல்லாத நாற்றமுள்ள அழுகியப் புண்கள்.

தூக்கம் - அமைதியின்மை, தூக்கமின்மை, சோர்வு, மந்தப்புத்தி, தூங்கி விழுதல், தூங்கும்போது படுக்கையிலிருந்து நகர்ந்து கீழே வந்து விடுதல்.  பாதி இமை மட்டும் மூடியிருத்தல்.  தீய, பயமுறுத்தும் கனவுகள்.

காய்ச்சல் - அதிகளவு காய்ச்சல்  மகப்பேற்றுக்குப் பின் காய்ச்சல், டைபாய்டு, கப்பல் தள காய்ச்சல்கள், உடல் முழுவதும் சூட்டுடன் அவ்வப்போதும், குளிர் காலை 11 மணிக்கும் வருதல்.

அளவு - தாய்க் கரைசல் Q  முதல்   30C

முக்கியக் குறிப்பு - குறைந்த வீரியத்தில் கொடுத்தால் உடலில் டைபாய்டு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.   உடல் சோர்வும், கழிவுகள் யாவும் கெட்ட நாற்றமடித்தலும், வலி இல்லாமையும், நீலநிற மாறுதலும் பாப்டீசியாவின் சிறப்புக் குறிகளாகும்.  1. ஆர்னிகா நோயாளி கேட்கும் கேள்விகளுக்கு மிக்க முயற்சி செய்து சரியான பதிலைச் சொல்லுதல்.  பாஸ்பாரிக் ஆசிட் நோயாளி விருப்பமற்று, மெதுவாக, சுருக்கமாக, சரியில்லாத பதிலைச் சொல்லுதல்.  பாப்டீசியா நோயாளி பாதி பதில் சொல்லும்போதே மயக்கமடைந்து விடுதலும் ஆகிய குறிகள் காணப்படும்.  2. டைபாய்டு காய்ச்சலில் ஜெல்சிமியத்திலும், பாப்டீசியாவிலும் குறிகள் யாவும் ஒன்று போலிருப்பினும் ஜெல்சிமியத்தில் குறிகள் தீவிரமில்லாது இருக்கும்.  3. பாப்டீசியாவில் பழுப்பு நிறக் கோடுகளும் சிவந்த சிறு கொப்பளங்கள் நாக்கின் மையப் பகுதியிலும், ரஸ்டாக்சில் நாக்கின் நுனியில் முக்கோண வடிவத்தில் சிவந்தும் காணப்படும்.

 

*****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக