அப்ரோடானம் - ABROTANUM
SOUTHERN WOOD
COMPOSITAE FAMILY
நோய் கூடுதல் :
குளிர்ந்தக்காற்று, ஈரம், இரவு, மூடுபனி, சுரக்கும் நீர்கள் அமுக்கப்படுதல்,
குளிருள்ள மழைக்காலம்.
நோய் குறைதல் :
நகர்தல், இளகிய மலம்.
மியாசம் : சோரா, சைக்கோசிஸ்.
ம.வே.ப. : நரம்புகள்.
பொது - இது தாவரம். நல்ல பசியிருந்தும் தெளிவான காரணமின்றி குழந்தைகள்
இளைத்தல். முக்கியமாகக் கால்கள் மெலிதல்.
(MARASMUS). நோய் ஒரு பகுதியிலிருந்து உடலின்
இன்னொரு பகுதிக்கு மாறுதல் (METASTASIS). வயிற்றுப்
போக்கைத் தடை செய்ததால் கீல் வாதம் தோன்றுதல். கீல்வாதம் மறைந்து இருதய நோய் ஏற்படல். கீல்வாதம் செம்மையாகும்போது மூலநோய் அதிகரிக்கும். கால் பெருவிரல் கீல்வாதம் (GOUT) குறைந்து வேறு
கோளாறுகள் வருதல். பிறந்த குழந்தைக்கும், சிறுவர்களுக்கும்
விரையில் நீர்க்கட்டி (HYDROCELE). பிறந்த
குழந்தையின் தொப்புளில் இரத்தமும், நீரும் கசிதல், மெலிவு கால்களில் தோன்றி படிப்படியாக
மேலே பரவுதல். மார்பு உறை நீர்க்கோப்பு (HYDROTHROX)
அல்லது நுரையீரல் குழிகளில் சீழ்க்கோப்பு (EMPYEMA). அறுவை சிகிச்சைக்குப்பின் மார்பில் ஒரு அழுத்தும்
உணர்வு இருத்தல். முச்சு விட இயலாமை. சிறுவர்களுக்கு மூக்கில் இரத்தம் ஒழுகுதல். இன்புளூயன்சா நோய்க்குப்பின் அதிக பலவீனம், நாற்றமடிக்கும்
வாந்தி.
மனம் - எளிதில் கோபப்படுதல்,
சிடுசிடுப்பு, அதிக ஆதங்கம், மனச்சோர்வு, சிறுவர்கள் கொடூரச் செயல்களைச் செய்யத் தயங்க
மாட்டார்கள். இரக்கமற்ற கெட்ட குணம். சொற்கேளாமை, எதிர்த்தல், ஏக்கம் பிடித்திருத்தல். உற்சாகமின்மை, புரிந்து கொள்ளும் சக்தியில்லாமை,
வாயாடுதல், கத்துதல்.
தலை – கழுத்து பலஹீனத்தால் தலையை
நேராக நிமிர்த்த இயலாமை. மனமுயற்சி, உரையாடலுக்குப்
பின் மூளைக்களைப்பு. நெற்றிச் சிரைகள் (VEINS)
புடைத்தல். மூளை மிருதுவாக ஆவதுபோல் உணர்வு. இடது பக்க மூளை பலவீனமாகத் தெரிதல். பொறி பகுதிகளில் பிழிவது போலிருத்தல்.
கண் - கண்களைச் சுற்றி நீலநிற வளையங்கள். மங்கலான பார்வை. குழி விழுந்த கண்கள். இரத்த சோகை.
காது – தேனீக்கள் ரீங்காரம்போல்
இரைச்சல். வலது காதிலிருந்து காற்று வருதல்.
மூக்கு – வறட்சி, சிறுவர்களுக்கு
இரத்தம் ஒழுகுதல்.
முகம் – வறண்டு, சுருங்கி, வெளுத்து,
குளிர்ந்து, முதுமையடைந்தவர்போல் காணப்படுதல்.
இரத்தக் குழாயில் சதைக்கட்டி (ANGIMOA).
இளைத்த நிலையில் கருப்புத் தலையுள்ள பருக்கள் (COMEDONES).
வாய் – சொத்ைதைப் பற்களில் இழுக்கும்,
கிழிக்கும் வலி. அமிலச் சுவை, வறட்சி, புண்ணால்
உமிழ் நீர் அதிகம் சுரத்தல்.
இரைப்பை – உணவு செரிமானமாகாமல்
நாற்றமடிகும் ஏராளமான நீருடன் வாந்தியாகுதல்.
கடித்தெரிவது போன்று இரைப்பையில் பசி இரவில் ஏற்படுதல். இரைப்பை தொங்குவது போல், நீரில் நீந்துவது போல்
குளிர்ந்த உணர்வுடனிருத்தல். நல்ல பசி இருந்தும்
இளைத்தல். வெட்டும், கடிக்கும் எரிச்சலுள்ள
வலி இரவில் அதிகமாதல். பாலில் கொதித்த ரொட்டி
விருப்பம்.
வயிறு – பல பகுதிகளில் கடினமானக்
கட்டிகள் வயிற்றில் இருத்தல். உப்புசம், தொப்புளில்
கசிவு, குடல்களில் மூழ்கும் உணர்வு. உருண்டை
மற்றும் நூல் கீரிப் பூச்சிகள் (ASCARIDES).
மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல். கீல்வாதத் தொல்லைத் தணியும்போது மூலத் தொல்லை கூடும். பிதுங்கியுள்ள மூலத்தைத் தொட்டால், மலம் கழித்தால்
எரிச்சல், வலி. முன்சிறுகுடல் திறப்பான் (PYLORUS)
குறுகி விடுவதால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுதல். அதனால் களைப்பும், உடலில் நீர் வறட்சியும் உண்டாகுதல். மலம் கழிக்க விரும்பினால் இரத்தம் மட்டுமே வருதல். வயிற்றுப்போக்கு திடீரென்று தடைப்பட்டதால் கீல்வாதம்
தோன்றுதல். செரிமானமாகாமலேயே மலத்தில் உணவு
வெளியாகுதல். காசநோய் சம்பந்தத்தால் வயிற்று
உறுப்புக்களை மூடியுள்ள சவ்வு அழற்சி (PERITONITIS).
சிறுநீர் வழி – சிறுநீர்ப் பையில்
சிறுநீர் நிறைந்து இருந்து கழிக்க அவசரப்பட்டாலும் குறைந்தளவே வெளியாகுதல்.
ஆண் - சிறுவர்களுக்கு விரைவில்
நீர்க்கோப்பு தாளம்மையால் (MUMPS) விரைகள்
பாதித்தல்.
பெண் - தாளம்மையால் முலைகளில்
பாதிப்பு இடது கருப்பையில் (டீஎயசல) ஈட்டி
பாய்வது போன்ற வலி. வலியுள்ள மாதவிடாய். அமுக்கப்பட்ட விடாய்.
மூச்சுப் பகுதி – வயிற்றுப்போக்கைத்
தொடர்ந்து வறட்டு இருமல். மார்பின் குறுக்கே
வலி. மூச்சைத் தடைப்படுத்துதல். நுரையீரலை மூடியுள்ள சவ்வு அழற்சியால் (PLEURISY)
நீர்க் கசிதல். பாதிக்கப்பட்ட பகுதியில் அழுத்தும்
உணர்வு. குளிர்ந்தக் காற்றுவீச்சு புண்ணுள்ள
உணர்வை ஏற்படுத்துதல்.
இருதயம் - இருதயப் பகுதியில்
கடுமையான வலி. கீல்வாதம் மாறி இருதயத்தில்
பாதிப்பை உண்டாக்குதல். நாடி சிறிதாக பலவீனமாக
இருத்தல்.
கழுத்து, முதுகு – கழுத்து பலவீனத்தால்
தலையை நேராக நிமிர்த்த இயலாமை. கீழ் இடுப்பில்
மூலத்துடன் வலி. திடீரென தண்டுவடத்தில் வீக்கம்
வலி. அசைந்தால் முதுகில் பலவீனம். முடமான வலி.
இடுப்புப் பகுதி வலி விந்துவடத்திற்குப் பரவுதல்.
கை, கால்கள் – கால்களில் அதிக
மெலிவு காணப்படுதல். நடக்க இயலாமை. தோள்கள், கைகள், மணிக்கட்டுகள், கணுக்கால்களில்
வலி. கை,கால் விரல்களில் குத்தும் வலியும்,
குளிர்ந்தும், மரமரத்தும் இருத்தல். மூட்டுகளில்
பிடிப்பு, மடக்கினால் வலி. தோள்மூட்டிலிருந்து
முழங்கைக்கு வலி செல்லுதல்.
தோல் – உப்பி, தொள, தொளவென்றிருத்தல். சுருக்கம்.
கொப்பளங்களை அமுக்கியதால் தோல் மீது நீலச் சிவப்பு நிறம் தோன்றுதல். குளிராலான சிரங்கின் (CHILBLAINS) தினவு. கட்டிகள்,
கொப்பளங்கள் இருந்த இடத்தில் மயிர் கொட்டுதல்.
தூக்கம் - இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அமைதியின்மை.
பயங்கரக் கனவுகள், நாய்க் கனவு, ஆதங்கம்.
காய்ச்சல் – கீல்வாதத்தால் அதிகக்
காய்ச்சல். காய்ச்சல் வேகமுடன் சில்லிப்பும்,
பலவீனத்தையும் ஏற்படுத்துதல்.
அளவு – 3 சி முதல் 30 சி.
முக்கியக் குறிப்பு – ஹீபார்சல்ப்
கொடுத்தபின் தோன்றும் கட்டிகளுக்கு (குரசரேஉடநள) ஏற்றது. கல்கேரியா கார்பில் வயிறு பெருத்து உடல் மெலிந்து
இருத்தல். கல்கேரியா பாஸ்பாரிகாவில் ஒட்டிய
வயிறுடன் மெலிந்திருத்தல்.
ஒ.கு.ம. – பென்.ஆசிட், பிரை,
ஐயோட், நேட்.மூர்.
உ – அகார், சைனா, லேடம், நக்ஸ்வாமிகா.
*****
குறிப்பு-
ம.வே.ப. மருந்து வேலை செய்யும் பகுதிகள்.
ஒ.கு.ம. ஒத்த குணமுள்ள மருந்துகள்
ம.செ.கா. மருந்து செயல்படும் காலம்
பூ பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து
உ உறவு
ப பகை
மு முறிவு
க்யூ தாய்க் கரைசல்
சி நூறில் ஒரு பங்கு 1/100
எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக