வியாழன், 21 டிசம்பர், 2023

அபிஸ் நைக்ரா - ABIES NIGRA


அபிஸ் நைக்ரா  -   ABIES NIGRA

 BLACK SPRUCE

CONIFERAE FAMILY

K.RAJU





நோய் கூடுதல் :

     உண்டபின்பு, படுத்தால், இருமினால்

 

மியாசம் :  சோரா, சைக்கோசிஸ்.

 

ம.வே.ப. :  இரைப்பை, மூச்சுப் பகுதி.

 

பொது - இது தாவரம்.  செரிமானம் சரியாக ஆகாதபோது ஒரு வேக வைத்த முட்டை இருதயத்தின் கீழ்முனைப் பகுதியிலுள்ள இரைப்பையில் தங்கி இருப்பது போன்ற உணர்வு.  இரைப்பைக் குறிகளுடன் தொடர்புள்ள பல நோய்க்களுக்குப் பயன்படக் கூடியது.  வயதானவர்களுக்கு செரிமானத் தொல்லைகளோடுள்ள இருதயக் குறிகள், அளவுக்கு மீறி தேநீர் குடித்தல், புகையிலையை மெல்லுதல், புகைத்தலால் தோன்றிய செரிமானகோளாறுகள், மலச்சிக்கல், கீல்வாத வலிகள்.

மனம் - சுறுசுறுப்பின்மை, படிக்க, சிந்திக்க இயலாமை, பகலில் மந்தமாகவும், இரவில் விழிப்புடனிருத்தல்.

தலை – கிறுகிறுப்பு, சூடுடன் கன்னங்கள் சிவந்திருத்தல், மந்தமான வலி.

காது – இடது வெளிக்காதில் வலி.

தொண்டை -  உணவுக் குழலின் கீழ் முனையில் ஏதோ கடினமான பொருள் ஒன்று ஒட்டிக் கொண்டுள்ள உணர்வு.

இரைப்பை – உணவு உண்டபின் எப்போதுமே இரைப்பையில் வலி தோன்றுதல்.  காலையில் பசியே எடுப்பதில்லை.  நன்பகலிலும்,  இரவிலும் அடக்க முடியாத பசி.  ஒரு வேக வைத்த முட்டை செரிமானமாகாமல் இருதயத்தின் கீழ்முனைப் பகுதியில் உள்ள இரைப்பையில் தங்கியுள்ளது போலவும், இரைப்பை குழிக்குச் சற்று மேலே எல்லாவற்றையும் முடிச்சு போட்டு கட்டி வைத்திருப்பது போலவுமுள்ள உணர்ச்சி.  அடிக்கடி ஓசையுள்ள ஏப்பங்கள்.

வயிறு – மலச்சிக்கல்.

பெண் - மூன்று மாத தாமத விடாய்.

மூச்சுப் பகுதி – நுரையீரல்களில் இறுக்கமுள்ள உணர்வு.  மார்பை முழு அளவும் விரிக்க இயலாமை, இருமினால் தொந்தரவுகள் கூடுதல்.  எதுக்களித்தலின்போது இருமல் தொடர்தல்.  தொண்டை அடைக்கும் உணர்வு.  மூச்சுவிட இயலாமை.  படுத்தால் தொந்தரவுகள் கூடும்.  மார்பில் ஏதோ ஒன்று தங்கியுள்ளதால் இருமி அதை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற வலியுள்ள உணர்ச்சி.

இருதயம் - கூர்மையான வெட்டும் வலி.  செரிமானக் கோளாறுகளால் இருதயம் மிக வேகமாகவும் (TACHYCARDIA) மெதுவாகவும் (BRADYCARDIA) துடித்தல்.  இருதயம் கனத்துள்ளபோது மெதுவாகத் துடித்தல்.

கழுத்து, முதுகு – கீழ் இடுப்பிலும், எலும்புகளிலும் கீல்வாத வலிகள்.

தூக்கம் - மிகவும் கெட்டக் கனவுகள் காணுதல்.  பசியால் இரவில் விழித்தல்.  அமைதியற்று இருத்தல்.

காய்ச்சல் – சூடும், குளிரும் மாறிமாறி வருதல்.  இரைப்பை வலியுடன் விட்டு விட்டு வரும் நாட்பட்டக் காய்ச்சல்.

அளவு – 3 சி  முதல் 30 சி.

ஒ.கு.ம. – பிரையோனியா, சைனா, லாக்டிக் ஆசிட், நக்ஸ்வாமிகா, பல்ஸ்.

 

*****  

குறிப்பு-

ம.வே.ப.   மருந்து வேலை செய்யும் பகுதிகள்.

ஒ.கு.ம.    ஒத்த குணமுள்ள மருந்துகள்

ம.செ.கா.   மருந்து செயல்படும் காலம்

பூ    பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து

    உறவு

    பகை

மு   முறிவு

க்யூ  தாய்க் கரைசல்

சி    நூறில் ஒரு பங்கு 1/100

எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக