அபிஸ் கனடன்சிஸ் - ABIES CANADENSIS
HEMLOCK SPRUCE CONIFERAE FAMILY
நோய் குறைதல் :
அழுத்துவதால்.
மியாசம் : சோரா, சைக்கோசிஸ்.
ம.வே.ப. : சளி சவ்வுகள், இரைப்பை, கர்ப்பப்பை.
பொது - இது தாவரம். இது சளிச்சவ்வுகளை, நரம்புகளை பாதிக்கச் செய்து இரைப்பையில் அழற்சியை
உண்டாக்கி சளியை உற்பத்தி செய்வதால், நோயாளிக்குப் பசியை அதிகமாக்குவதோடு, சீர் செய்யப்படாத,
கரடு முரடான உணவு வகைகளை உண்ண அடங்காத ஆவலைத் தூண்டுகிறது. தசைகள் சுண்டுதல், ஊட்டச் சத்துக்குறைந்து பலவீனமாய்
உள்ள பெண்களுக்குக் கர்ப்பப்பை நழுவுதல் (UTERUS). நரம்புகளின் பலவீனத்தால் வலுவற்று எப்போதுமே படுத்திருக்க
விரும்புதல். மிக மயக்கம். கல்லீரல், வலது நுரையீரல் சிறுத்து கடினமாக உள்ள
உணர்ச்சி. தோல், கைகள் சில்லிட்டு சுருங்கி
இருத்தல். வலது தோள்பட்டையின் கீழ் வலி. உண்ண ஆவல் கொண்டு அளவு மீறி உண்ணுதல்.
மனம் - அக்கறையின்மை, எளிதில்
கோபப்படுதல்.
தலை – கனமற்றும், குடித்தது போன்றுத்
தள்ளாடுதல்.
கண் - இடது கண்ணின் வெளிப்பகுதியில் கண்கட்டியுள்ள உணர்வு.
வாய் – வறட்சி.
இரைப்பை – மிக அதிகப் பசியால்
மயக்க உணர்வு. இறைச்சி, ஊறுகாய், முள்ளங்கி வகைகள், சீர் செய்யப்படாத உணவுகளை
உண்ண அளவு கடந்த ஆவல். செரிமான அளவுக்கு மீறி
உண்ணுதல். எரிச்சல், உப்புசம், கடிக்கும் பசி.
வயிறு – உப்புசத்துடன் இருதயப்
படபடப்பு. இரைப்பை மற்றும் குடற் காற்றினால் இருதயத்தின் செயலுக்குத் தொல்லை ஏற்படுதல். மலச்சிக்கலுடன் மலக்குடலில் எரிச்சல். கல்லீரல் சிறுத்து, கடினமாக உள்ள உணர்வு. மந்தமான கல்லீரலால் பித்தம் போதாது போலிருத்தல்.
ஆண் - சிறுநீர்ப் புறவழியில்
கோழை போன்ற நாட்பட்ட ஒழுகல் (GLEET).
பெண் - விசித்திரமான அடங்காத
ஆவலும், சில்லென்ற உணர்வுமுள்ளக் குறிகளோடு சிறப்பாகக் கர்ப்பப்பை நழுவிய பெண்கள். கர்ப்பப்பை நழுவியதால் அதன் அடிப்பாகத்தில் புண்ணுள்ள
உணர்வு. அழுத்தினால் வலி குறைதல். கர்ப்பப்பை மிருதுவாக பலமற்று உள்ளதாக நினைத்தல். அதிகக் களைப்பால் எப்போதுமே படுத்திருக்க விரும்புதல்.
மூச்சுப் பகுதி - மூச்சு வாங்குதல். வலது நுரையீரல் சிறுத்து, கடினமாகவுள்ள உணர்வு.
இருதயம் - இருதயத்தின் செயல்
இரைப்பை குடற்காற்று உப்புசத்தால் (FLATULENCE) பாதிக்கப்படுதல்.
கழுத்து, முதுகு – வலது தோள்பட்டைக்குக்
கீழ் வலி. இரண்டு தோள்களுக்கிடையில் குளிர்ந்த
நீருள்ள உணர்ச்சி. கீழ் இடுப்புப் பகுதியில்
பலவீன உணர்வு.
தோல் – குளிர்ந்து சில்லிட்டு
ஒட்டும் தன்மையுடனிருத்தல். இரவில் வியர்த்தல்.
தூக்கம் - படுக்கும்போது முழங்கால்கள்
மேலிருக்குமாறு மடக்கிக் கொள்ளுதல். அமைதியற்று
இரவில் புரண்டு புரண்டு படுத்தல்.
காய்ச்சல் – இரத்தம் பனிக்கட்டி
நீர்ப் போன்றுள்ள உணர்வால் உடல் முழுவதும் குளிர், நடுக்கம். குளிர் முதுகுக்கு இறங்குதல். இரவில் வியர்த்தல்.
அளவு - தாய்க் கரைசல் க்யூ முதல் 3 சி.
ஒ.கு.ம. – அபிஸ் நைக்ரா, ஹெலோனியாஸ்,
நக்ஸ் வாமிகா.
*****
குறிப்பு-
ம.வே.ப. மருந்து வேலை செய்யும் பகுதிகள்.
ஒ.கு.ம. ஒத்த குணமுள்ள மருந்துகள்
ம.செ.கா. மருந்து செயல்படும் காலம்
பூ பூர்த்தி (அ) நிறைவு செய்யும் மருந்து
உ உறவு
ப பகை
மு முறிவு
க்யூ தாய்க் கரைசல்
சி நூறில் ஒரு பங்கு 1/100
எக்ஸ் பத்தில் ஒரு பங்கு 1/10.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக