செவ்வாய், 7 மே, 2019

ஹோமியோபதியும் வள்ளுவமும் பழ.வெள்ளைச்சாமி

வள்ளுவன் க்கான பட முடிவுஹானிமன் க்கான பட முடிவு


``உலகத்தில்  கிடைத்தற்கரிய பேறுகளில் எல்லாம் பெரிய பேறாக உள்ளது ஒரு மனிதனின் உடல், மன ஆரோக்கியம்தான்’’ என்று மாமேதை டாக்டர் ஹானிமன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவ்வாறான பெரிய பேறாகிய ஆரோக்கியத்தை மீட்டித் தருவதற்கு உலகத்தில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன.  அவைகளில்,  அதுவும் மருந்து கொடுத்து ஆரோக்கியத்தை மீட்டித் தரும் மருத்துவ முறைகளில்  ஹோமியோபதி மட்டுமே இளமையானதும், அறிவியல்பூர்வமானதும் மற்றும் தத்துவார்த்த ரீதியானதும் ஆகும்.
டாக்டர் ஹானிமன்அவர்கள் ஹோமியோபதி மட்டுமே உண்மையானது என்று கூறுவார்.  எவ்வாறு இரண்டு புள்ளிகளை ஒரு நேர்க்கோடு மட்டுமே இணைக்குமோ அதுபோல ஹோமியோபதி மட்டுமே உண்மையானது என்று அவர் கூறுவார்.

இவருடைய கூற்று மிகையில்லை.  சாலச் சிறந்ததாகும்.  ஏனெனில் ஹோமியோபதி மட்டுமே மனிதனை முழுமையாகப் பார்க்கிறது.
அவனுடைய உடல், மனம் இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவனைத் தனித்துவப்படுத்தி அவனை முழுமையாகக் குணப்படுத்துகிறது.
ஹோமியோபதியில் மருந்துகள் எல்லாம் ஆரோக்கியமான மனிதர்களுக்குக் கொடுத்து நிரூபணம் செய்யப்பட்ட பின்பே, அவைகளில் ஒத்த விதிப்படி மருந்து தேர்வு செய்து கொடுக்கப்பட்டு, நோயுற்ற மனிதனுக்குக் கொடுத்து நலப்படுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமே, இயற்கை விதிகளாகிய பிரபஞ்ச விதிகளால் பிரயோகித்து மனிதன், நோய், மருந்து அனைத்தையும் கணிக்கிறது.
இது மட்டுமே, புறநிலை அறிவியலையும் மற்றும் அகநிலை அறிவியலையும் சோதிக்கும் ஆய்வுக் களமாக இருந்து கொண்டு முற்றிலும் சிறப்பு வாய்ந்த  சமூக, ஆன்மீக மற்றும் அன்பீக வாழ் நெறியாக இருக்கிறது.
மேலும் இது ஒவ்வொரு நோயிலும், நோயுற்றவரின் மாறுபட்ட சுபாவம் மற்றும் மாறுபட்ட மனநிலையே பிரதானப் பகுதியாக இருப்பதாக வரையறுத்து அதையறிந்து மருந்து தேர்வு செய்வதே தலையானது என்று கூறுகிறது.

இதன் அடிப்படையில் ஹோமியோபதியில் மனத்தின் அவசியத்தையும், அது மாறுபட்டதால்தான் நோய் தோன்றுகிறது என்பதை வலியுறுத்தவும், அதனால் அந்த மாறுபட்ட மனநிலையை மட்டும் கணக்கில்  எடுத்து மருந்து தேர்வு செய்யும்போது எவ்வாறு நோய்கள் குணமாக்கப்படுகின்றன என்பதை உலகிற்கு வலியுறுத்துவதற்காகவே ஹோமியோபதியில் குணப்படுத்த துயர்களை இந்தச் சிறு நூலில் எழுதப்பட்டுள்ளது.

இது தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்புடையதாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.  இதில் குறைகள் இருப்பின் அவை என்னுடைய அறியாமையே !.  இதில் உள்ள நிறைகள் அனைத்தும் டாக்டர் ஹானிமன் அவர்களின் புகழுக்கானவேயே.
plv


இந்த நூலை மின்னச்சு செய்து உதவிய சகோதரி விஜயராணி அவர்களுக்கு என்னுடய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஆரம்பம் முதல் இந்த நூலின் அவசியம் குறித்து என்னைத் தூண்டி எழுத வைத்து, அதில் பிழைகளைச் சரி செய்து இதைப் புத்தக வடிவத்தில் ஆக்கித் தந்த எனது மகனாகக் கருதும் ப.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
இன்னும் இப்புத்தகம் வெளிவர உதவி புரிந்த அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


*****
ஆர்கனான் பூங்காவனம் க்கான பட முடிவுorganon of medicine க்கான பட முடிவு

நலம் என்பது உணர்வு நிலை மற்றும் செயல்பாட்டு நிலையைப் பொறுத்தது

ஒரு மனிதனுடைய நோயும் மற்றும் ஆரோக்கியமும் காற்று, நீர் மற்றும் வெப்பம் ஆகிய இந்த மூன்றின் சீர்மையைச் சார்ந்ததே என்று பேரறிவாளன் வள்ளுவப் பெருமான் கூறுகிறார்.

"மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று."
பித்தம், வாதம், கபம் இந்த மூன்றும் ஏன் சீர்மையில்லாமல் போகிறது என்பதற்கான விளக்கம் மருந்து என்ற அதிகாரத்தில் இல்லை.  ஆனால் திருவள்ளுவர் அவர்கள் அதற்கான காரணத்தை திருக்குறளில் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.

டாக்டர் ஹானிமன் அவர்கள் அவருடைய ஹோமியோபதியின் மறைநூலான ஆர்கனானின்  6-ஆம் பதிப்பில் ஆரோக்கியம் என்பதை இரத்தினச் சுருக்கமாக வரையறுத்து, அதை அவர் வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிட்டார்.

ஆர்கனான் மணிமொழி 19-இல் ஒரு மனிதனுடைய ஆரோக்கியம் என்பது அவனுடைய "உணர்வு நிலையையும், செயல்பாட்டு நிலையையும் பொறுத்தது"(health which depends on sensations and functions) என்று கூறியுள்ளார்கள்.
அப்படியென்றால், உணர்வு நிலை மற்றும் செயல்பாட்டு நிலையில் ஏற்படும் மாற்றம் மட்டும்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தையும், நோயையும் தீர்மானிக்கிறது என்று தெளிவாகக் கூறுகிறது.
திருக்குறள் மெய்ப்பொருளுரை க்கான பட முடிவுthirukkural book க்கான பட முடிவு
இதையே வள்ளுவர் பெருமான் மிகச் சிறப்பாக திருக்குறளில் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதனின் உணர்வு நிலையில் காமமும், கோபமும் மற்றும் மயக்கம்(பிரம்மை-delusions)  இருக்கும் அளவுக்கேற்றார்போல் நோய் இருக்கும் என்பதையும்’’ அந்த மூன்றும் முற்றிலும் இல்லாத நிலையே ஆரோக்கிய நிலை என்பதையும் வள்ளுவர் கூறுகிறார்.

"காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்"

இங்கே காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றும்தான் உணர்வு நிலையில் நோய்க்குக் காரணம் என்பதை டாக்டர் ஹானிமன் கூறியதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியுள்ளார்கள்.

மேலும் காமம் என்பதை `அவா’ என்று தனியாகக் கூறி, அந்த அவாவே துன்பத்துக்குக் காரணம் என்பதை  வலியுறுத்துகிறார்.

"அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் 
அஃதுண்டே தவாது மேன் மேலும் வரும்."

இதிலிருந்து ஒருவருடைய உணர்விலிருந்து `அவா’ அறுக்கப்படுமானால் அறுபடும் நோய்கள், இன்பமும் இடையறாது கிடைக்கும்.  இதையே வள்ளுவர் துன்பத்துக்கெல்லாம் துன்பம் அவா என்பதையும், ஆரோக்கியமாக உள்ளவன் உணர்வில் அவா அற்றவனாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் 
துன்பத்துள் துன்பம் கெடின்"

ஒருவன் மனதில் மாசற்ற உணர்வே மகத்துவமானது, அதுவே ஆரோக்கியத்துக்கும், அறத்திற்கும் அஸ்திவாரமானது.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

அறம் என்பதும் ஆரோக்கியம் என்பதும் மன உணர்வில் மாசற்று இருப்பதுதான் என்பதை வள்ளுவர் தெளிவாக வலியுறுத்துகிறார்.
மேலும் மன நலம் குறித்து மிகவும் சிறப்பாகவே வலியுறுத்துகிறார்.

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம், என்றும் ``மனநலத்தினாகும் மறுமை’’ என்றும் உணர்வு நிலையில் மனிதன் மனநலம் உள்ளவனாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி  இருக்கிறார்.

மனிதனின் உணர்வில் பற்று வந்து பற்றுமானால் பற்றிடும் நோயும் துன்பமும் நொடிப்பொழுதில் அதனால் ஒரு மனிதனின் உணர்வில் பற்றற்ற தன்மையை வலியுறுத்துகிறார்.

"பற்றி விடாஅ  இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ  தவர்க்கு"

மேலும் வள்ளுவர் பெருமான் ஒருவன் உணர்வில் என்ன இருக்க வேண்டும் என்பதையும் ஒருவன் தனக்கென்று ஒரு சாரம் இருக்கிறது.  எண்ணத்தை ஒழிக்க வேண்டியஅவசியத்தையும், அது அழியும்போது ``நான்’’ என்ற மதிமயக்கம் அழியும் என்பதையும், அந்நிலையில் ஒரு மனிதனுக்கு நோய் வராது என்பதையும் அப்படியே நோய் வந்தாலும் அவருக்கு துயர்அளிக்காது என்பதையும் வெகு சிறப்பாகவே வலியுறுத்துகிறார்.

"சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார் தரும் நோய்"

இதிலிருந்து ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு உணர்வு நிலை  எந்த அளவிற்கு முக்கியம் என்பதை திருவள்ளுவர் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்.
இதையே டாக்டர் ஹானிமன் அவர்கள் ஒரு மனிதனுடைய ஆரோக்கியம் அவனுடைய உணர்வையும், செயலையும் பொறுத்தது என்பதை வெகு நுணுக்கமாகக் கூறுகின்றார்.

நாம் இதுகாறும் உணர்வு நிலையின் அவசியத்தை திருவள்ளுவரின் கூற்றிலிருந்து பார்த்தோம்.

இதுபோல  ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவனின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் நோயுற்று இருப்பதற்குக் காரணம் அவன் மற்றவர்களுக்குச் செய்த தீவினைதான் என்பதை திருவள்ளுவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
இது ஓர் அறிவியல்பூர்வமானது.  எந்த வினை செய்தாலும் அது எதிர்வினையாக செய்தவனுக்கே வந்து சேரும் என்பது இயற்கை விதி, ஓர் அறிவியல் உண்மை.  ஆகையால் நமக்கு வந்த நோய்கள் நாம் பிறருக்குச் செய்த தீமைகள் என்பதை வள்ளுவர் பல குறள்களில் வலியுறுத்துகிறார்.

ஓ ! மனிதனே உனக்கு நோய் வர வேண்டாம் என்று நினைக்கிறாயா, தயவு செய்து யாருக்கும் தீங்கு செய்யாதே ! என்று மனித குலத்தின் மீதுள்ள மாறா பற்றோடு கூறுகிறார்.

"அட கொஞ்சம் கேளுப்பா,  உனக்கு நோய் வரக்கூடாது என்று நினைக்கிறாயா யாருக்கும் தீங்கு செய்யாதப்பா" என்று உருகிக் கேட்கிறார் திருவள்ளுவர்.

"தீப்பால தான் பிறர்கண் செய்யற்க  நோய்ப்பால
தன்னை அடல் வேண்டா தான்"

நீ தீவினை செய்தால் அதற்கான எதிர்வினை எப்பவோ வரும் என்று நினைக்க வேண்டாம்.  நீ காலையில் இன்னா செய்தால்  அது மாலையில் உனக்குத் தானே வந்து சேரும் என்பதை எடுத்துக் கூறுகிறார்.

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"

இப்போது மனித குலத்திற்கு வந்த நோயெல்லாம் அவரவர் செய்த தீமைகள்தான் என்பதில் எந்தவித ஐயமில்லாமல் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

"நோயெல்லாம் நோய் செய்தார் மேவவாம் நோய் செய்யார்
நோயின்மை வேண்டுபவர்"

எனவே  எல்லோருடைய நோய்களுக்கெல்லாம் காரணம் அவரவர் பிறர்க்கு செய்த தீவினையும், துன்பங்களும்தான் காரணம்.

அதனால்தான் வள்ளுவர் ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கேட்கிறார்.  "அப்பா பிறர் மீது காதல் வைத்திருக்கிறாயோ என்னவோ ஆனா உன்மீது காதல் இருக்குல அதனால உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்ப்பா யாருக்கும் தீவினை செய்திராதேப்பா.  நீ கெட்டு அழிஞ்சு போவாய்" என்று கருணையோடு வள்ளுவர்கெஞ்சுவதைப் பார்க்கலாம்.

"தன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்
துன்னற்க தீவினைப்பால்"

திருவள்ளவர் மனிதர்கள் மீது  உள்ள பெரும் காதலால் நோய் வருவதற்கான பேருண்மையைக் கண்டறிந்து கூறி அதற்கு மேலும் இதற்குச் செவி சாய்க்காமல் மேலும் மேலும் தீங்கு செய்வதைக் கடுமையாகக் கண்டித்து பிறர்க்கு தீமை செய்யாதே என்றும் நீ அவ்வாறு செய்தால் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் கண்டிப்பாக வலியுறுத்துகிறார்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயா தடி உறைந் தற்று.

ஒருவன் செய்த தீவினை அவனை விட்டுப் பிரியாத நிழல் போல அவனுக்கு நோய் செய்யாமல் விடாது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் வள்ளுவர் யாரிடமும் எந்தப் பகை கொண்டாலும் உனக்கு உய்வதற்கு வழி இருக்கிறது ஆனால் தீவினை செய்தால் அந்த தீவினையின் எதிர்வினை உன்னைத் தாக்காமல் ஒரு போதும் ஓயாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

எனைப் பகை உற்றாரும் உய்வா,வினைப்பகை
வீயாது பின் சென்று அடும்
வள்ளுவன் க்கான பட முடிவு

மேலும் திருவள்ளுவர் பிறருக்கு தீவினை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் நீ தப்பிக்க முடியாது என்பதை அச்சுறுத்தும் வகையில் எடுத்துரைக்கிறார். மறந்தும் கூட பிறருக்குத் தீங்கு செய்யாதே.  செய்தால் அதற்கான தண்டனையை எந்த வகையிலும் அடைந்தே தீருவாய்.  அதற்கு மன்னிப்பு கிடையாது.

மறந்தும் பிறன் கேடு சூழற்க, சூழின்
அறம் ஆழும் சூழ்ந்தவன் கேடு

மேலும் வள்ளுவர் கூறுகிறார் மற்றவர்களுக்கு தீவினை செய்யாதே அப்படிச் செய்தால் அதனால் வரும் விளைவை எதிர்கொள்ளாமல் தப்பிக்கவே முடியாது என்று வலியுறுத்தினாலும் மேலும் நமக்குச் சந்தேகம் வருகிறது அதாவது நாம் பகைவருக்குத் தீங்கு செய்யாமல் எப்படி இருப்பது? நமக்குத் தீங்கு செய்த பகைவருக்கு நாம் தீங்கு செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று நாம் கேட்கலாம் என்பதை உணர்ந்தே அதற்கும் வள்ளுவர் சரியான விளக்கம் அளிக்கிறார்.

தீங்கு செய்தவருக்கு தீங்கு செய்வது அறிவுபூர்வமாகச் சரியாகப்பட்டாலும், தீங்கு செய்தவருக்கு மறுபடியும் நாம் திருப்பி தீங்கு செய்தாலும் அத்தீங்கு மறுபடியும் நமக்கே வந்து சேரும் என்ற அறிவியல் விதியை உணர்ந்து விரோதிக்கும் தீங்கு செய்யாமல் அறிவுபூர்வமாக எண்ணி அவருக்குத் தீங்கு செய்யாமல் தவிர்த்தலே அறிவிலே உயர்ந்த அறிவு என்று வள்ளுவர் மெச்சுகிறார்.

அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

ஆக, திருவள்ளுவர் டாக்டர் ஹானிமன் அவர்கள் சொன்ன இரண்டு வார்த்தைகளுக்கும் பல குறள்களில் விளக்கம் அளித்து, ஒரு மனிதனின் துன்பத்திற்கும், நோய்க்கும் அவன் உணர்விலும், செயலாலும் பிறருக்குத் தீங்கு செய்வதுதான் என்பதைத் தின்னமாக வலியுறுத்துகிறார்.

இவ்வளவு தெளிவாகச் சொல்லியும் மனிதன் பிறருக்குத் தீங்கு செய்வதிலிருந்தும், துன்பம் செய்வதிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை.

தீங்கு மட்டும் செய்யவில்லை, அந்தோ கொடூரம் மனிதன் மனிதர்களை அழித்து ஒழிக்கிறான்.  ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர்கள் மனிதர்களால் கொல்லப்படுகிறார்கள்.  மனிதன் தோன்றிய நாள்தொட்டு யுத்தமும், அழிவும் தொடர் சோகமாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது.  இது ஏன்?

மனித வாழ்க்கையே துன்பமயமானதாக உள்ளது.  இது ஏன்? மனிதனை மனிதன் அழிக்கும் கொடூரம் எப்படி வந்தது?  பரிணாம வளர்ச்சியில்  விலங்குகளிலிருந்து வந்த மனிதனிடத்தில் எந்த உயிர் இனங்களிலும் இல்லாத இந்த அவலம் எப்படி வந்தது.

இந்த உலகம் தோன்றி சற்றேறக்குறைய 420 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது.  அதில் 220 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் உயிர் இனம் தோன்றியது.  அதிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான தாவர  சங்கம  இனங்கள் தோன்றி படிப்படியாக 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றி 3 இலட்சம் ஆண்டுகளுக்கு இன்றைய மனிதன் தோன்றியுள்ளான்.  இந்த உயிரின பரினாம வரலாற்றில் எந்த உயிரினமும் தன்னினத்தையே அழித்ததாக வரலாறு இல்லை.  அதுவும் ஐந்தறிவிற்கும் குறைவான  எல்லா உயிர் இனங்களும் தங்கள் தங்கள் இனத்தோடு சேர்ந்து வாழும்போது இந்த மனிதனுக்கு மட்டும் என்ன வந்தது?  ஏன் இந்த மனிதன் மட்டும் தன் இனத்தையே அழித்துக் கொள்கிறான்?

எல்லா உயிரினங்களும் அவற்றிற்கே உண்டான தனித்துவத்தோடு உள்ளன.  ஒரு சிங்கம் என்றால் உலகத்தில் உள்ள அனைத்துச் சிங்கங்களும் ஒன்று போல் இருக்கின்றன.  அதேபோல் காக்கை என்றால் உலகில் உள்ள எல்லாக் காக்கைகளும் ஒன்று போல் இருக்கின்றன.  இதுபோல அனைத்து ஜீவராசிகளும் இந்த பூமியில் இருக்கின்றன.

ஆக அனைத்து இனமும் அவைகளுக்குண்டான தனித்துவமான பண்புகளால் இருக்கின்றன.
அதனால் ஒவ்வொரு இனமும் அதனதன் இனத்தை அழித்துக் கொள்ளாமல்   அரவணைத்து வாழ்கின்றன.
ஆனால் மனிதன் மட்டும் ஏன் இவ்வாறு தன் இனத்திற்கே தீங்கு செய்வதும், துன்பம் இழைப்பதும் ஏன் இடைவிடாது கொன்று அழிப்பதுமாக இருக்கின்றான்?

ஏனெனில் உலகத்தில் உள்ள உயிரினங்களில் அனைத்தும் அதனதன் தனித்துவத்தோடு இருக்கும்போது  மனிதன் மட்டும் மனிதனுக்குண்டான தனித்துவத்தோடு இல்லாமல் இருப்பதுதான் இந்த அவலமான பேரழிவுக்கும், துன்பத்துக்கும் காரணம்.

நாம் ஹோமியோபதியர்கள், தனித்துவம் அறிந்து ஒட்டு மொத்த முழுமைக்கும் மருந்து கொடுப்பது நமது லட்சியம்.
நாம் ஒவ்வொரு துயரருடைய தனித்துவத்தைக் கண்டறிந்து மருந்து கொடுக்கும் நாம் ஏன் மனிதனுடைய தனித்துவம் என்ன என்பதை அறிய விழையவில்லை?   ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் அதற்கேயுண்டான தனித்துவம் இருக்கும்போது மனித இனத்துக்கான தனித்துவம் இல்லையா?
தனித்துவம் என்பது அதற்கு மட்டுமே உரிய பண்பு.  அதற்கு மட்டுமே உரிய பண்பாக இருந்து கொண்டு அந்த இனத்தை உலகத்தில் உள்ள அனைத்து இனங்களிடமிருந்து வேறுபடுத்தும் பண்பு.

அப்படியென்றால் மனித இனத்துக்குக் அதற்கு மட்டுமே உரிய பண்பாக, அந்தப் பண்புகள் வேறு எந்த உயிரினத்திலும் இல்லாத ஒன்றாக இருந்து கொண்டு, அனைத்து மனிதர்களுக்குமான பண்புகளாக இருப்பது என்ன?
இப்போது மனிதனிடம் இருப்பது எல்லா விலங்கினப் பண்புகள், தாவர இனப் பண்புகள், கனிம இனப் பண்புகள்.   அதனால்தான் அனைத்து மனிதர்களும் நோயுற்றும், துயருற்றும் வாழ்வது மட்டுமின்றி இந்த உலகத்தைத் துன்பக் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மனிதன் துன்பத்திலிருந்தும், அனைத்து பாகுபாடுகள் மற்றும் மாச்சரியங்களிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால், மனிதன் மனிதனாக மாற வேண்டும்.
மனிதன் மனிதனாக மாறுவது என்றால் என்ன?  அவன் அவனுக்கே உண்டான தனித்துவத்தோடு இருக்க வேண்டும்.

அவனுடைய தனித்துவம் என்ன?  வேறு எந்த உயிரினங்களிடமும் இல்லாத பண்பு. மனிதர்களிடம் மட்டுமே இருந்து கொண்டு, மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பு.  அது அவனுடைய தனித்துவம்.
அப்படி மனிதனுக்கு மட்டுமே உரித்தான பண்புகள் என்று பார்த்தால் அன்பு, உழைப்பு, பகிர்வு என்ற மூன்று பண்புகள்தான்.
இந்த மூன்று பண்புகளும் மனிதர்களிடமிருந்து மனிதர்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் பண்புகள்.

இந்த மனித இனமானது, மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான அன்பு, உழைப்பு, பகிர்வு என்ற பண்புகளை எப்போது வெளிப்படுத்தி, இவைகள் பிரத்தியோகமான பண்புகள் அல்ல, மாறாக இவை மனித இயல்புகள் என்று உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் வாழ நினைக்கிறார்களோ அப்போது இந்த உலகம் நோய்களிடமிருந்து மட்டுமல்ல, அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுபட்டு, எந்த மாறுபாடும் இல்லாத ஓர் உலகமாக மாறும்.

பகவான் புத்தர் கூறியது போல் உலகம் துன்பமானது இல்லை, உலகம் இனிமையானது மற்றும் நிரந்தர சொர்க்கமானது என்பதை உணரலாம்.

*****