செவ்வாய், 31 டிசம்பர், 2013

பிஎல்வீ

மதிப்புக்குரிய ஆசான்
தூய ஹோமியோபதி பிரச்சார சங்கத்தின்(AProCH) தூண்
மனிதநேயப்பற்றாளர்
ஹோமியோபதியை ஈர்த்திடும் காந்தம்
தமிழகத்தின் ஹானிமன்
AProCHல் மந்திரச்சொல்
ஆர்கனானை அணு அணுவாய்
தின்று முடித்தும் அடங்காப்பசி!
உயிர்க்காற்று
உயிர்த்திரவம்
உயிர் நாடியாய்
இருப்பது ஹோமியோபதி
நடப்பது ஆர்கனான் வழி
கற்றலும் கற்பித்தலுமே
இவரது சுவாசம்
இவரால் ஹோமியோபதியில்
உருவானர்கள் ஏராளம்!
குணமடைந்தவர்கள்
பல்லாயிரம்!
சமுதாயப்பார்வையில்
சேகுவேரா சீடர்!
திருக்குறளையும் கம்யூனிசத்தையும்
ஹோமியோபதியோடு ஒப்பிட்டவர்
சமூக விஞ்ஞானி
பெண்ணுரிமைவாதி
ஹோமியோ மேதை
PLV என்று எல்லோராலும் அன்போடு
அழைக்கப்படுகிற
பழ.வெள்ளைச்சாமி

திங்கள், 30 டிசம்பர், 2013

அன்பே வாழ்வின் சாறு

இந்த புத்தகம் வாழ்கையை புரட்டிபோடும் மகத்தான சக்திமிக்கது .இவரின் வார்த்தைகள் எனக்கு வேதம் போல ஒலிக்கிறது படிக்க படிக்க சற்று மிரண்டு போனேன் அத்தனையும் எதார்த்தத்தின் பிம்பம் " அன்பே வாழ்வின் சாறு ,வெறுப்பு மரணத்தின் சீழ் , சிறந்த பேச்சு ஒரு செம்மையான பொய் , மோசமான மௌனம் ஒரு நிர்வாண உண்மை "என்று கூறும் ஆசிரியரின் வார்த்தைகளில் புதைந்திருக்கும் உண்மை நம்மை சுடுகிறது .அற்புதமான ஆற்றலை கொடுக்கும் வலிமையான வார்த்தைகளால் நிறைந்த இந்நூல் நம்மை உணர செய்யும் .

புதன், 25 டிசம்பர், 2013

பழ.வெள்ளைச்சாமி

அப்பாவை பிடிக்காத அம்மோனியம் கார்ப்

“என் அப்பா குடும்பத்தை கவனிக்கலை. மற்ற குடும்பங்களைப்போல இல்லை.தந்தைக்குண்டான கடமையைச்செய்யாதவர்.இவர் லட்சியத்தந்தையாக[ideal father] இல்லை.எனவே எங்கப்பாவை எனக்கு பிடிக்காது.தந்தை மேலே கோபம்,மனக்கசப்பு உண்டு.இந்த சமூகமே சரியில்லை.இது நல்ல சமூகம் இல்லை” என்று சொல்வார்கள்.-இவர்தான் அம்மோனியம் கார்ப்.
-----------------------“ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்” புத்தகத்திலிருந்து.

நானும் ஹோமியோபதியும் -- மரு.கோவிந்தராஜ் திருப்பூர்




எனக்கு ஹோமியோபதி என்ற மருத்துவ முறை அறிமுகம் ஆனது 1980 ம் ஆண்டுகளில் எனது நண்பர்கள் மூலம். 

அது ‘’’சும்மா இனிப்பு மிட்டாய் மாதிரி’’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அது ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடும் என்று நான் நினைக்க வில்லை

அப்போது எனக்கு சுமார் 14 அல்லது 15 வயது இருக்கும் தீவிரமான கம்யுனிஷ்ட் .அந்த வயதில் அப்படீத்தான் இருந்தேன். இந்த சமுகம் பற்றிய என்னுடைய கோபம் அப்போது உருவானது தான் .

எனது மொத்த வேலையும் படிப்பு ;படிப்புதான் சும்மா ஊர் சுற்றாமல் கண்டதையும் படிப்பது கனவு காணுவது கவிதை எழுதுவது என்றபடி போய்க்கொண்டிருந்தது காலம்.
கட்சி வேலை பார்ப்பது போஸ்டர் ஓட்டுவது கூட்டங்களில் பங்கெடுப்பது என்று எனது இளமை காலம் ‘’மெல்லப்போனதுவே’’ .

இந்த சமுகத்தை புரட்சி மூலம் மாற்றுவது எனது பெரும்கனவுகளில் ஓன்று. அதை ஒட்டிய படிப்பும் எனக்கு வாய்த்தது. ரஷ்ய இலக்கியங்கள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனது மொத்த படிப்பு 5 வகுப்பு மட்டும் தான் அதன் பின் எல்லாம் பட்டறிவுதான். புத்தகபடிப்பு என்னை தொடர்ந்து வழி நடத்துகிறது.

குறிப்பாக கதை புத்த கங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை இராமகிருஷ்னரின் குட்டிக்கதைகள்

மகாத்மாவின் சத்திய சோதனை ஆரோக்கிய திறவுகோல் மெய் வழி சாலை ஆண்டவரின் வெளீயிடுகள் இவை எல்லாம் எனக்கு வழி காட்டி.
அப்போது திருப்பூரில் ‘’’காந்தி சுயராச்சிய சேவா சங்கம்’’ என்ற அமைப்பு அப்போது இயங்கி வந்தது (1975-76) நான் 3ம் வகுப்பு படித்து வந்தேன். எனது பள்ளி வாழ்வு முழுவதும் எல்லா மாலை நேரங்களும் அங்கேதான் கழிந்தன.

அதை நடத்தி வந்தவர் மாணிக்கம் அண்ணா சேவப்பூரில் படித்து விட்டு திருப்பூரில் மருத்துவமனை நடத்தி வந்தார். சொந்த ஊர் பெரியநாயக்கன் பாளையம் இன்று பிரபலமாகி இருக்கும் இயற்கை மருத்துவர்கள் பலரும் இங்கே பயிற்சி பெற்றவர்கள்தான்.

DR சண்முகவேல் [கோவை]
DR வெள்ளிமலை [கோபி]
மற்றும் சர்வோதய இயக்கதை சேர்ந்த பலரும் இங்கே கூடுவார்கள். அவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தவன் நான். அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பேன் நான். உடம்பு நன்றாக வளையும். யோகா செய்து காட்டுவேன். பாரட்டுக்கள் கிடைக்கும். தின்ன பழங்கள் கிடைக்கும். எனது வாழ்வின் மகிழ்சியான நாட்கள் அவை.

‘’அருகம்பில் ஆஸ்பத்திரி’’ என்றுதான் மக்கள் அதை சொல்லுவார்கள். என் அம்மாதான் அவர்களுக்கான காய்களை சப்ளை செய்யும். எங்களுக்கு மார்க்கெட்டில் ஒரு காய்க்கடை இருந்தது. இந்த மாணிக்கம் அண்ணாதான் பின்நாட்களில் சுவாமி ‘’சைதன்ய சகஜனந்தா’’ என்று அறியப்பட்டார்.

தமிழகம் முழுவதும் இயற்கை மருத்துவத்தை பிரச்சாரம் செய்தவர். ‘’தளி’’யில் அதீதா ஆசிரமத்தில் சமாதியடைந்தார். இவரைப்பற்றி நான் தனியாக நிறைய எழுதவேண்டும். இப்போது இங்கே இடமில்லை

எனது படிப்பை 5ம் வகுப்போடு நானே வம்படியாக நிறுத்தியதன் பின்னால் கம்பெனி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் ,. அப்போது வாரம் 3 ரூபாய் சம்பளம் எனக்கு. கதை புத்தகங்கள் மேல் எனக்கு மாளாத ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. கையில் கிடைத்ததை எல்லாம் படித்துக்கொண்டே இருந்தேன். கம்யுனிச புத்தகங்கள் மேல் காதல் ஆனது இப்படித்தான்.

கிடைக்கும் காசுக்கு எல்லாம் புத்தகம் வாங்குவேன். என் வீட்டில் புத்தகங்களை வைக்க தனி இடம் தேடவேண்டும்

அப்போது கவிதை புத்தகங்கள் 5 ரூபாய்க்கும் இரஷ்ய இலக்கியங்கள் 2 ருபாய்க்கும் கிடைக்கும். இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் தன் என்னை கம்யுனிஷ்ட் ஆக்கியது

நான் முதலில் மேடையில் பேச ஆரம்பித்தது எனது 14 வது வயதில் பகத்சிங் நினைவு தின கூட்டத்தில்தான். அப்போது DYFI அமைப்பு உருவாக்கப்பட்டது. எனது பகுதியில் நான் தான் செயலாளர். திவிரமான மனிதனாய் மிளிர்ந்தேன்

வாரத்தில் எனக்கு தேவைப்படும் அளவு மட்டும் கம்பெனி வேலை செய்வேன் . மற்றபடி கட்சி வேலைதான். இடையே கிடைக்கிறநேரத்தில் எல்லாம், படிப்பு,படிப்புதான்.

இந்த தீவிரம்தான் என்னை நடத்திக்கொண்டு வருகிறது, இன்று வரை
எனது அரசியல் வாழ்வு பற்றியும் தனியாகத்தான் எழுதியாக வேண்டும். இப்போது இங்கே இடமில்லை .சுருக்கமாக சொன்னால் எனது வாழ்வை அரசியல்,இலக்கியம், மருத்துவம் என மூன்றாக பிரிக்கலாம் அதில் மருத்துவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

உண்மையில், நினைத்துப்பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும்,வியப்பாகவும் தான் இருக்கிறது.நான் ஹோமியோபதியை கண்டு கொண்டதும் ஹோமியோபதியர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதும் ஆச்சரியமானவைகள். உண்மையில் எனது உணர்வுகளை எளிமையாய் சொல்லிவிடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை .

எனக்கு முதலில் அறிமுகமான மருத்துவர் DR பாலசுப்பிரமணி [DHMS] மார்க்சிய இலெனிய இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியபோது கிடைத்த நட்பு அப்போது ஏராளமான தோழர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வேலையை நான் என் தலையில் சுமந்திருந்தேன்.
அப்போது மருத்துவகட்டணம் 10 ரூபாய்.ஆனால் டாக்டரிடம் மருந்து வாங்கிக்கொண்டு ,டீக்குடிக்க காசும் வாங்கிக்கொண்டு வருவோம்.

பிறகு திருப்பூரில் வடக்கு பகுதியில் வேலை செய்யும் போது DR வடிவேல் [RHMP] அறிமுகம் ஆனார். அப்போதெல்லாம் 3-4 மருந்துகளை ஒன்றாக கலந்து மருந்தை வாங்கும் போது டாக்டர் நிறைய மருந்து கொடுத்திருக்கிறார் என்ற சந்தோசமும்,மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால் இப்போது ? [single remedy] ___ அறிவுத்தேடல் அதிகமாகும் போது மகிழ்சிக்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன நண்பர்களே.____

ஹோமியோபதி செலவு குறைவான ,ஏழைகளின் மருத்துவமுறை என்று மட்டுமே அப்போதைய புரிதல் இருந்தது . அதற்கும் மேல் தினமணி வெளியீடான டாக்டர் ராமசுவாமி அவர்களின் சில புத்தகங்களை வாசித்திருக்கிரேன் எனது தீவிரமான அரசியல், இலக்கிய வாசிப்புகளினூடே இது போன்ற புத்தகங்கள் வந்து போகும் அவ்வளவுதான். ஆனால் ஹோமியோபதியை என் வாழ்வின் ஒரு பாகமாக, முழுமையாக ஏற்றுக்கொண்டு, நடக்கத்தொடங்கியநாள் இன்னும் மறக்க முடியாததாக இருக்கிறது.

அப்போது மிகவும் மோசமான கால கட்டம் எனக்கு,. எனக்கு முன் இருந்தவை இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே . ஒன்று நான் கொல்லப்படவேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இது தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலையில் யோகாவும், ஹோமியோபதியும் எனக்கு வாழ்வின் இன்னொறு பக்கத்தை திறந்து வைத்தது. நான் ஏற்றுக்கொண்ட அரசியலின் போதாமையும், நான் உருவாக்கிய குடும்பமும் என்னை கைவிட்ட போது எனக்கு கிடைத்தவைகள் இவை இரண்டும்.

1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று நானும் எனது நண்பர் வாசுதேவனும், மதுரை சென்று விட்டு திரும்பும் வழியில் திண்டுக்கல் சென்று வருவது என முடிவுசெய்திருந்தோம், அப்போது மனவளக்கலை மன்றத்தில் ஹோமியோபதி முதலுதவிப்பெட்டி எங்களிம் கிடைக்கும் என்கிற நோட்டீசை நண்பர் கொண்டு வந்து இருந்தார்.

நான் அரசியலில் இருந்து மானசீகமாய் விலகி இருந்த நேரம் , அப்போது தமிழகத்தில் தோழர் தியாகு அவர்களால் தொடங்ப்பட்ட தாய்த்தமிழ் பள்ளி திருப்பூரில் தொடங்கி இருந்தபோது எல்லா வேலைகளிலும் பங்கெடுத்துக்கொள்வேன். இந்த ஹோமியோபதி மருந்துப்பெட்டி பள்ளிக்கு உதவுமே என்று தான் அதை வாங்க முடிவு செய்திருந்தேன்.

அன்றுதான் என்னை மடை மாற்றி விட்ட அந்த மனிதர் வாழ்க வளமுடன் ஜெயகோபால் அவர்களை சந்தித்தேன். ஒல்லியான உடம்பு , தாடி , என்நேரமும் பரபரத்துகிடக்கும் கண்கள் சரளமான பேச்சு நடை என காட்சியளித்தரர். அடுத்த இரண்டு நாளில் நடக்க இருக்கும் இராசாமணி அய்யாவின் கூட்டம் பற்றியே வெகுநேரம் பேசினார். அவரிடம் இருந்தே P L V என்கிற மாமனிதரின் பெருமைகளை கேட்டுணர்ந்தோம். பின்னர் அவரை சந்திக்க இரவு 11 மணி வரை காத்திருந்தோம்.

இரவு பேசுவதற்கு நிறைய நேரம் இருந்தது. முதல் அறிமுகத்திலேயே அரசியல் தொடக்கம் இலக்கியம் வரை பேசினோம். ஹோமியோபதிக்கும் சமூக புரிதலுக்கும் உறவைப் பற்றி நீண்ட விளக்கம் அளித்தார். பல்லடத்தில் வகுப்பு நடப்பதையும், அங்கு என்னை கலந்து கொள்ளவும் பணித்தார்.

பல்லடம் வகுப்புகள்
பல்லடத்தில் வகுப்புகள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை நடக்கும். என்னுடைய முதல் வகுப்பு சல்பர் மருந்து . மெட்டீரியா மெடிக்கா பாடம்.

கந்தலாடை அணிந்த தத்துவவாதி
அழுக்கான்
கஞ்சன்

இப்படி சல்பரைப்பற்றி விபரங்கள் வகுப்பில் நடந்து கொண்டிருக்கும் போது நான் இடையே புகுந்து

‘’’’அப்டினா கார்ல்மார்க்சு , பெரியார் எல்லாம் சல்பரா ‘’’ என்றேன்.

Yes,,, சரியாச்சொன்னீங்க தம்பி என்றார்.

’’சமூகப்புரிதல் இருந்தா, ஹோமியோபதி ரொம்ப சுலபமாக புரிஞ்சுக்க முடியும், சமூகப்பிரச்சனைகள் தான் உறவுகளுக்குள்ள சிக்கலாக வருது இந்தசிக்கல் மனிதமனங்கள்ல பிரதி பலிச்சு நோய்களா உருவாகுது so நோய்கள் உருவாக காரணங்கள் சமூகத்துல இருக்கு, சமூகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை புரிஞ்சுகிட்டா ஹோமியோபதில குணமாக்குவது சுலபம்’’ இப்படி அவர் பேச பேச எனக்குள் எனக்குள் இருந்த சமூகமனிதன் தீவிரவதியானன்.

அப்போது dr jan scholtan புத்தகங்கள் அறிமுகமான நேரம் அவரின் தளபதி போல் plv இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். Scholtan னின் கருத்துக்களை Xerox போட்டு படித்துக்கொண்டிருந்தோம் ’’ அப்ரோச்’’ இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக இயங்கிய நேரம் அதன் வளர்ச்சியினுடே நானும் வளர்ந்துகொண்டிருந்தேன்.

புதிய நட்புகள் , உறவுகள் உருவாகி வந்தது. என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பலரையும் இப்போதுதான் சந்தித்தேன். Dr கைலாசம், நாராயணன், இராமசாமி. போன்ற மனதுக்கு நெருக்கமான நட்புகளை கண்டடைந்தது இங்கேதான்.

மனிதர்களை வகைப்படுத்தி அறிந்து கொள்வதை அப்ரோச் இயக்கதிலும் , ஹோமியோபதியிலும் தான் கற்றுக்கொண்டேன்.

எனது வேலை நாட்கள் கம்பனியிலும், கிடைக்கிற மனிதர்களுக்கு எல்லாம் மருத்துவம் என்று ஓடிக்கொண்டிருந்தது

எனது முதல் நோயாளியை இங்கே குறிப்பிட வேண்டும். எனது மரியாதைக்குரிய எழுத்தாளர் கவிஞர் ,ஓவியர் நண்பர் யூமா வாசுகி அவர்கள். அவருக்கு கொடுத்தமருந்து dulcamara ’’இதென்ன மாதிரி கேமரா’’ என்று கேட்டதை இன்னும் மறக்கவில்லை எனக்கு.

இப்படி ஓடிக்கொண்டிருந்த என் வாழ்வில் இன்னொறு திருப்புமுனையை ஏற்படுத்தியது 2002 ல் நடந்த 5 நாள் செமினார்தான். அதன் பிறகுதான் முழுநேர மருத்துவராக நான் மாறியது . இந்த செமினாரை நடத்த கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள், அப்ரோச் மையக்கமிட்டியில் dr கைலாசம் சாரோடு நானும் விவாதித்து இருக்கிறேன்.

கிட்டத்தட்ட 5 நாள் முழுமையும் கம்யூன் வாழ்க்கைதான். பகல் முழுக்க வகுப்பு, மாலை விளையாட்டு, இரவு கலை நிகழ்ச்சி என்று நடந்தது.

ஒவ்வொறு நாளும் ஒரு ’’ school of thought’’ தான். Roh, scholtan , rajan sankaran , என ஒவ்வொரு நாளும் வகுப்பு புதிய உலகத்தை திறந்து கொண்டே இருந்தது ஹோமியோபதியில் ஒரு மனிதனை அனுகுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது.

உன்னும் போதும் உறங்கும் போதும் விவாதங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். கடைசிநாள் இயற்கை உணவோடு முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது dr விஜயலிங்கம் என்னிடம் கேட்டார்

’’ஏங் கோவிந்து நீங்க ஏன் காலேஜுல சேர்ந்து படிக்கக்கூடாது’’ என்றார். அப்போது எனக்கு சிரிப்பாய் இருந்தது.

’’ என்னா சார் நாம் படிச்சது 5ம் வகுப்பு இதில் எங்க காலேஜுல படிக்க’’
’’ அதினால என்ன private ஆ படிங்க என்றார்.

ஆம் அப்படிகொளுத்திபோட்டுவிட்டார் அது என்னுள் ஜுவாலையாய் பற்றி எரிந்தது.

அப்போது தமிழ்நாடு ஹோமியோ மருத்துவக் கல்லூரி பொய் மான் கரடில் நடந்து கொண்டிருந்தது.

அதில் என் நண்பர்கள் பலரும் படித்து வந்தனர். சென்னையிலிருந்து வந்த பின்னால் எனது படிப்பு முயற்சிகள் தொடர்ந்தது. 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பை திருப்புரிலும் 12ஆம் வகுப்பை சேலத்திலும் எழுதினேன்.

இதை முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டேன். இடையே சொந்த வாழ்விலான நிறைய இழப்புகளையும் கடந்து வந்திருந்தேன்.

கல்லூரிக்கு செல்லும் முன் ஏராளமான சுய மனத்தடைகளை கடக்க வேண்டி இருந்தது

சொந்த ஊரை விட்டு வெளியே வருவது , உதவிக்கான யாசித்த பல கரங்களின் கண்டு கொள்ளாமை நம்பி இருந்த பலதும் கைவிட, எதிர்பாராத இடங்களில் உதவிகள் வந்து குவிந்தன. ’’தெய்வம் வேட்டியை மடித்துக் கொண்டு உதவிக்கு வரும் ’’ என்ற வள்ளுவனின் வார்த்தைகள் எனக்கு அனுபவமாய் ஆனது.

Dr கைலாசம் எனக்கு கார்டியனாய் இருக்கிறார். இது எனக்கான பெரிய கவுரவம் .

கல்லூரிக்கு பணம் கட்டி விட்டு வீட்டுக்கு வந்ததும் டைபாய்டு காய்ச்சல் வந்தது. ஒரு மாத படுக்கை, என் பிள்ளையின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எனக்கு இருந்தது. நண்பர்களின் கரங்கள் என்னைச்சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது.
நம்பிக்கைகளை ஒரு கையிலும் பிள்ளையை மறு கையிலும் பற்றிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைகிறேன்.

[ கல்லூரி வாழ்வு பற்றி 5 வருடம் கழித்து எழுதுவேன் ...
நன்றி http://bhairavihomoeopathy.blogspot.in/2012/03/blog-post_4523.html

ஹோமியோ தோழன்



                          தமிழக ஹோமியோபதி மருத்துவ உலகில் PLV என அன்போடு அழைக்கப்படும் தோழர் பழ.வெள்ளைச்சாமி அவர்களின் உழைப்பும் கனிவும் இப்போது உங்கள் கரங்களில் புத்தகமாக இருக்கிறது.தோழர் PLV அவர்களிடம் எந்த ஒரு மனிதரும் சென்று "அய்யா ஹோமியோபதி" என்று பேசத்தொடங்கினால் போதும்,அவரின் தோழமை வட்டத்தில் அங்கமாகிவிடலாம். இரவும் பகலும் வகுப்புகளும் விளக்கங்களுமாக ஓடிக்கொண்டிருக்கிறது அவரின் 20 ஆண்டுகால உழைப்பு.
    1993ல் தொடங்கிய தூய ஹோமியோபதி பிரச்சார சங்கத்தின்[AProCH] மாநில செயலாளராக தமிழகமெங்கும் அவர் ஹோமியோபதி வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.அவரின் புலர்காலைப்பொழுதுகள் வகுப்புகளிலேயே தொடங்கி,இரவும் வகுப்புகளிலேயே முடிவதை அருகில் இருந்தே கவனித்து இருக்கிறேன்
    தூய ஹோமியோபதி பிரச்சார சங்கத்தின்[AProCH] செயல்பாடுகள் நானறிந்த வரையில்,கடந்த தலைமுறை மகான்களில் ஒருவரான நாராயண குருவை ஒத்திருக்கும். நாராயண குரு ஈழவ [தாழ்த்தப்பட்ட ]  மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.ஈழவ மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை கற்றுக்கொடுத்து அதை முறைப்படுத்தி பிரபலப்படுத்தியவர்களில் ஒருவர்.இந்த அணுகுமுறையால் ஈழவ மக்களைத் தேடி உயர்சாதி மக்களும் வரவேண்டிய சமூக நிர்பந்தம் உருவானது.எவ்வித நேரடி விமர்சனங்களும் இன்றி சாதியத்தின் இறுகிப்போன வேர்களைத் தளர்த்த முடிந்தது.அதுபோலவே  தூய ஹோமியோபதி பிரச்சார இயக்கமும்[AProCH] தமிழகமெங்கும் பல்லாயிரம் மருத்துவர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
  எளிய பாடத்திட்டங்களும்,மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவ முகாம்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.அங்கு பயிலும் மாணவர்களின் தேவைகளுக்கு தோழர் PLV எழுதிய கட்டுரைகளே புத்தகங்களாக வந்துகொண்டிருக்கின்றன.அந்த வரிசையில் ஹோமியோபதி மேதை கெண்ட் அவர்களின் மருந்துகாண் ஏட்டை எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்த இப்புத்தகம் தமிழகத்தில் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
 தோழரின் உழைப்பையும் வீச்சையும் தமிழகம் இன்னும் சரிவர புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் அவரின் மாணவர்களுக்கும் உண்டு.அதை உடைக்கின்ற வகையில் இப்புத்தகத்தின் வருகையும் எதிர்பார்ப்பும் இருக்கவேண்டும் என்கிற ஆவல் மேலோங்குகிறது.நண்பர்களே நாம் அதை நிகழச்செய்வோம்!              
                                                       அன்புடன்
                                                    மரு.கோவிந்தராஜ்

ஹோமியோபதி மருந்துகாண் ஏடு-ஓர் அறிமுகம்

விஜயா பதிப்பகம்  --  புத்தகத்தின் முன்னுரையிலிருந்து  ..

பருவச்சூழல் துயரம் தரும்

பருவச்சூழல் துயரம் தரும்
ஹோமியோபதி புதிர்-1;
   கோபப்படாமலேயே திட்டுவார்,குடும்பத்துக்குள்ள
நடந்த கருத்துவேறுபாடுகளை பற்றியே பேசிக்கிட்டு இருப்பார்,சூடான கிளைமேட் திடீர்னு மாறி மழை பேஞ்சா இவருக்கு ஆகாது.யார் இவர்??.  
ஹோமியோபதி புதிர்-2;
         மூடத்தனமான விஷயங்களுக்கெல்லாம் பயப்படுவார்,வேர்வையில குளிச்சாலோ மழையில நனைஞ்சாலோ இவருக்கு சேராது. பனிக்காலம் மழைக்காலம் ஆகாது,அடிக்கடி சுளுக்கு விழும்,ஈரத்தரையில படுத்தாலோ,குளிர்காற்றிலபோனாலோ உடம்பு சரியில்லாம போயிடும்,ஓய்வெடுத்தா நோய் கூடும்,நடந்துகிட்டே இருந்தா நல்லாருக்கும்.தெம்பு குறைஞ்சு போனா சாவைப்பத்தி பயம் வந்துடும் யார் இவர்??......
ஹோமியோபதி புதிர்-3;
    இடி,மின்னல்,சூறாவளி,புயல் வரப்போகுதுன்னாலே பயம் நடுநடுங்கிபோயிடுவார்.குளிர்காலம்,பனிக்காலம், மழைக்காலம் வானம் மோடம் போட்டாலே இவருக்கு ஒத்துக்காது.கூலிங்க் கிளைமேட் மாறி வெயில் அடிச்சாதான் நிம்மதி,நல்லாவும் இருக்கும்.கால் மேல்கால் குறுக்காகபோட்டாதான் இவருக்கு தூக்கம் வரும்.புயல் காலங்களில் வீட்டுக்குள் இருந்தாகூட தொந்தரவு வரும்.யார் இவர்??
ஹோமியோபதி புதிர்-4;
  மழைன்னாலே இவருக்கு பீதி,நடுக்கம். மழைகாலத்தை நினைச்சு பதட்டப்படுவார். புல்தரையில் விளையாட பிடிக்கும்,குளிர்ச்சியா ஏதாவது குடிச்சபிறகு வயித்துல ஐஸ் போல ஜில்லுன்னு ஆயிடும் அதனால நெஞ்சுலயும் ஜில்லுன்னு இருக்கும்,இனிப்பு கலந்த மோர்னா ரொம்ப பிடிக்கும்,பிணத்துக்கு சவத்துணி போத்துறாப்பல கனவு வரும்,மாதவிடாய் வெகுசீக்கிரமே ஒன்னு,இரண்டு வாரத்துக்குள்ளேயே வந்துடும்,மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்கள்ல கறுப்பா இரத்தப்போக்கு இருக்கும்,இருமரப்ப இரத்த டேஸ்ட் வரும்.ஆரஞ்ச்பழம் பிடிக்காது தின்னாலும் ஒத்துக்காது.யார் இவர்??
ஹோமியோபதி புதிர்-5;
  எளிதாக சளி பிடிக்கும் உடல்வாகு,கிளைமேட் மாறினாலே உடம்புக்கு ஒத்துக்காது.உடம்பு இளைக்கும்,பலவீனமா இருப்பார் இருந்தாலும் நல்லா பசிக்கும்.நாயைக்கண்டாலே பயம்,பல் லேட்டா மொளைக்கும், ஒரு டாக்டர்கிட்ட பார்த்து திருப்தியாகமாட்டார்,புதுசுபுதுசா டாக்டர கண்டுபிடிச்சு செக் பண்ணிக்குவார்,முடி ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டு சடைபிடிச்சுக்கும்,தலைவலி சொல்லிவச்சதுபோல வரும்,சளி புடிச்சுட்டு வயித்தால போவும்,மூடிய அறைக்குள் இருந்தால் தொந்தரவு வரும்.யார் இவர்?????
ஹோமியோபதி புதிர்-6;
  கரண்ட்னாலே இவருக்கு பயம், ,மழை,புயல்காலம்,காத்து ஒத்துக்காது. கிளைமேட் மாறப்ப ஊசி வச்சு தைக்கிறாப்ல நெஞ்சுல வலி வரும்,நீண்ட காலமா விஸ்கி,பிராந்தி குடிச்சு நடை தளர்ந்து பலவீனமா போனவர்,ஏசி ரூமுக்குள்ள போனா ஒத்துக்காது,சாயந்தரமானா பேய் பயம் வந்துடும் தனியா இருக்க பயப்படுவார்,ஈரக்காலத்துல இடுப்புநரம்பு வலி குதிகால் வரைக்கும் இருக்கும் வலது பக்கமா ஒருக்களிச்சு படுக்கமுடியாது,நீந்தறமாதிரி கனவு வரும்,எழுதறதால பலவீனமாயிடுவார் யார் இவர்??????                                   

ஹோமியோபதி புதிர்-7;
v  கிளைமேட் மாறினா சேராது, இரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வந்துடும், இரண்டு ஆளா இருக்கிற மாறி தோணும்,தான் எங்க இருக்கிறமின்னே தெரியாது; குழப்பமா இருக்கும்;,குளிர்ச்சியான ஈரப்பருவத்தில் குளிர் அதிகமாக இருக்கும்;.கர்ப்பகாலத்தில்  மனக்கோளாறுகள் தோன்றும்;
v  யார் இவர்??????                                   
ஹோமியோபதி புதிர்-8;
புயல்,சூறாவளி காலங்களில் மனவேதனை அதிகமாக இருக்கும்,தனியாக இருந்தாலும் மனசு வேதனைப்படும். யார் இவர்??????
 ஹோமியோபதி புதிர்-9;
     தன் மேலே கோபம், பிறர் மேலும் கோபம்;
கர்ப்பமா இருக்கப்ப எல்லார் மேலயும் வெறுப்பாருக்கும்;
சிகப்பு கலரைக்கண்டால் கோபம் அதிகமாகுது;
இளஞ்சிவப்பு,கருஊதா நிறங்கள்னா இவருக்கு வெறுப்பு;கருப்பு கலரை கண்டாலே அமைதியில்லாமல் இருப்பதும், உணர்ச்சிவசப்படுவதும் அதிகமாகும்;
அழுதா மனசுல இருக்கிற குழப்பமெல்லாம் தணியும்;
தூக்கத்தில யாரோ கூப்பிடறமாதிரி பிரம்மை இருக்கும்;
என்னால எதையும் புரிஞ்சுக்கமுடியாது,நான் வாழ்க்கைக்கே தகுதியில்லை அப்படின்னு நெனப்பார்;
தன் கணவனை பிடிக்காது,
கணவனின் உடம்பு வாசனை ஆவாது   பெருவெறுப்பு வந்துடும்,கர்ப்பம்தரிக்கிறத நெனச்சாலே பயப்படுவாள்;
புயல்,சூறாவளி காலங்களில் துயரம் தணியும்;
மேகமூட்ட,மூடுபனி காலங்களில் துயரம் அதிகமாகும்;
காமத்தோட தொட்டா பிடிக்காது; யார் இவள்??????????

ஹோமியோபதி புதிர்;10;
   இடி மின்னல்,சூறாவளி காலம் மற்றும் குளிர்ச்சியான ஈரமான பருவகாலங்களில் தொந்தரவு அதிகமாகும்;கோழைச்சளி இருமும் போது வாயிலிருந்தும்,மூக்கிலிருந்தும் பறக்கும்;
    சளி,தும்மல்,மூக்கிலிருந்து சளி தண்ணியா கொட்டும் அதோட மூச்சிரைக்கும், மூச்சு திணற மாதிரி இருமல் வரும்;
இனிப்பு,கற்கண்டு சாப்பிட்டா இருமல் வரும்;
  தசைகளில் புண் போன்ற வலி அசைஞ்சா அதிகமாகும்:.யார் இவர்???????
ஹோமியோபதி புதிர்;11;
   குளிர்ச்சியான கிளைமேட்டில ரொம்ப டல்லா இருப்பார்;சூடான பகலும்,குளிர்ந்த இரவும் வர்ற காலங்களில் இவருக்கு தொந்தரவு வரும்;
   சாப்பிடறப்ப பதட்டமாகவும் குளிர்ந்த வியர்வையும் இருக்கும்;அதிகமா வியர்க்கும்,ஓய்வு எடுத்தா வியர்வை குறையும்;
   சளியோட காய்ச்சல் இருக்கும்,காய்ச்சல் உட்காந்திருந்தா நல்லாருக்கும்;தும்மல் படுத்திருந்தா குறையும்;
   சளி பிடிச்சிருக்கிறப்ப உடம்பு சூடா இருக்கிற மாதிரி உணர்வு இருக்கும்;
    எப்பவுமே மனக்குறையோடவே இருப்பார்,எல்லாத்துலயும் ஒரு அதிருப்தியோட மனசு அமைதியில்லாம இருப்பார்;
  வான நீல கலர் மற்றும் லைட் பச்சை கலரால மனசு பாரமெல்லாம் தணியும்.யார் இவர்??????
   ஹோமியோபதி புதிர்;12;
      சூடான கிளைமேட் திடீர்னு மாறி குளிர்ச்சியானா இவருக்கு ஆகாது;
    மாதவிடாயின் போது கடுமையான வலி இருக்கும்,கூடவே வாந்தி,வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு இருக்கும்;இவருக்கு தொந்தரவு வரும்போதெல்லாம் நெற்றியில் குளிர்ந்த வியர்வை இருக்கும்;யார் இவள்??????????
     ஹோமியோபதி புதிர்;13;
       புயல்,சூறாவளி காலங்களில் மறதி அதிகமா இருக்கும்; இடி மின்னல்.மழை,வானம் மோடம் போட்டிருந்தாலோ,மோசமான வானிலை சமயங்களில் சிடுசிடுப்பாக இருப்பார்.குளிக்கப்பிடிக்காது;யார் இவர்???????? 
    ஹோமியோபதி புதிர்;14;
      இடி மின்னல்னா பயம்,பனிக்காலம் புயல் காத்துகாலம் சேராது,வெய்யில்காலம் நல்லாருக்கும்;
    கார்ல பயணம் பண்ணுறதுன்னா பிடிக்காது,ஆனா சுவாசக்கோளாறுகள்  பயணம் பண்ணினா தணியும்;
    டைபாய்டு காய்ச்சல்ல ஜில்லுன்னு வியர்வை இருக்கும்,உடம்பே ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்;யார் இவர்???????
     ஹோமியோபதி புதிர்;15;
         அமாவாசை,பௌர்ணமினா இவருக்கு தொந்தரவு வந்துடும்;
         நாக்குல முடி இருக்கிறமாதிரி உணர்வு இருந்துட்டே இருக்கும்;
         இடி மின்னல்காலத்துலயும், கிளைமேட் மாறினாலும்,தலைக்கு போத்திக்காம இருந்தாலும் இருமல் வரும்;புயல் சமயத்துல காய்ச்சல் அடிக்கும்;யார் இவர்????????