பருவச்சூழல் துயரம் தரும்
ஹோமியோபதி புதிர்-1;
கோபப்படாமலேயே திட்டுவார்,குடும்பத்துக்குள்ள
நடந்த கருத்துவேறுபாடுகளை பற்றியே பேசிக்கிட்டு
இருப்பார்,சூடான கிளைமேட் திடீர்னு மாறி மழை பேஞ்சா இவருக்கு ஆகாது.யார் இவர்??.
ஹோமியோபதி புதிர்-2;
மூடத்தனமான
விஷயங்களுக்கெல்லாம் பயப்படுவார்,வேர்வையில குளிச்சாலோ மழையில நனைஞ்சாலோ இவருக்கு
சேராது. பனிக்காலம் மழைக்காலம் ஆகாது,அடிக்கடி சுளுக்கு விழும்,ஈரத்தரையில
படுத்தாலோ,குளிர்காற்றிலபோனாலோ உடம்பு சரியில்லாம போயிடும்,ஓய்வெடுத்தா நோய்
கூடும்,நடந்துகிட்டே இருந்தா நல்லாருக்கும்.தெம்பு குறைஞ்சு போனா சாவைப்பத்தி பயம்
வந்துடும் யார் இவர்??......
ஹோமியோபதி புதிர்-3;
இடி,மின்னல்,சூறாவளி,புயல் வரப்போகுதுன்னாலே
பயம் நடுநடுங்கிபோயிடுவார்.குளிர்காலம்,பனிக்காலம், மழைக்காலம் வானம் மோடம் போட்டாலே இவருக்கு ஒத்துக்காது.கூலிங்க் கிளைமேட் மாறி வெயில் அடிச்சாதான் நிம்மதி,நல்லாவும் இருக்கும்.கால் மேல்கால்
குறுக்காகபோட்டாதான் இவருக்கு தூக்கம் வரும்.புயல் காலங்களில் வீட்டுக்குள் இருந்தாகூட தொந்தரவு வரும்.யார் இவர்??
ஹோமியோபதி புதிர்-4;
மழைன்னாலே
இவருக்கு பீதி,நடுக்கம். மழைகாலத்தை நினைச்சு பதட்டப்படுவார். புல்தரையில் விளையாட
பிடிக்கும்,குளிர்ச்சியா ஏதாவது குடிச்சபிறகு வயித்துல ஐஸ் போல ஜில்லுன்னு ஆயிடும்
அதனால நெஞ்சுலயும் ஜில்லுன்னு இருக்கும்,இனிப்பு கலந்த மோர்னா ரொம்ப
பிடிக்கும்,பிணத்துக்கு சவத்துணி போத்துறாப்பல கனவு வரும்,மாதவிடாய் வெகுசீக்கிரமே
ஒன்னு,இரண்டு வாரத்துக்குள்ளேயே வந்துடும்,மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்கள்ல
கறுப்பா இரத்தப்போக்கு இருக்கும்,இருமரப்ப இரத்த டேஸ்ட் வரும்.ஆரஞ்ச்பழம்
பிடிக்காது தின்னாலும் ஒத்துக்காது.யார் இவர்??
ஹோமியோபதி புதிர்-5;
எளிதாக சளி பிடிக்கும்
உடல்வாகு,கிளைமேட் மாறினாலே உடம்புக்கு ஒத்துக்காது.உடம்பு இளைக்கும்,பலவீனமா
இருப்பார் இருந்தாலும் நல்லா பசிக்கும்.நாயைக்கண்டாலே பயம்,பல் லேட்டா மொளைக்கும்,
ஒரு டாக்டர்கிட்ட பார்த்து திருப்தியாகமாட்டார்,புதுசுபுதுசா டாக்டர கண்டுபிடிச்சு
செக் பண்ணிக்குவார்,முடி ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டு சடைபிடிச்சுக்கும்,தலைவலி
சொல்லிவச்சதுபோல வரும்,சளி புடிச்சுட்டு வயித்தால போவும்,மூடிய அறைக்குள்
இருந்தால் தொந்தரவு வரும்.யார் இவர்?????
ஹோமியோபதி
புதிர்-6;
கரண்ட்னாலே இவருக்கு பயம், ,மழை,புயல்காலம்,காத்து ஒத்துக்காது. கிளைமேட்
மாறப்ப ஊசி வச்சு தைக்கிறாப்ல நெஞ்சுல வலி வரும்,நீண்ட காலமா விஸ்கி,பிராந்தி
குடிச்சு நடை தளர்ந்து பலவீனமா போனவர்,ஏசி ரூமுக்குள்ள போனா
ஒத்துக்காது,சாயந்தரமானா பேய் பயம் வந்துடும் தனியா இருக்க
பயப்படுவார்,ஈரக்காலத்துல இடுப்புநரம்பு வலி குதிகால் வரைக்கும் இருக்கும் வலது
பக்கமா ஒருக்களிச்சு படுக்கமுடியாது,நீந்தறமாதிரி கனவு வரும்,எழுதறதால
பலவீனமாயிடுவார் யார் இவர்??????
ஹோமியோபதி புதிர்-7;
v கிளைமேட் மாறினா சேராது, இரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வந்துடும், இரண்டு ஆளா இருக்கிற மாறி தோணும்,தான் எங்க இருக்கிறமின்னே தெரியாது; குழப்பமா இருக்கும்;,குளிர்ச்சியான ஈரப்பருவத்தில் குளிர் அதிகமாக இருக்கும்;.கர்ப்பகாலத்தில் மனக்கோளாறுகள் தோன்றும்;
v
யார்
இவர்??????
ஹோமியோபதி புதிர்-8;
புயல்,சூறாவளி
காலங்களில் மனவேதனை அதிகமாக இருக்கும்,தனியாக இருந்தாலும் மனசு வேதனைப்படும். யார்
இவர்??????
ஹோமியோபதி புதிர்-9;
தன் மேலே கோபம், பிறர்
மேலும் கோபம்;
கர்ப்பமா இருக்கப்ப எல்லார் மேலயும்
வெறுப்பாருக்கும்;
சிகப்பு கலரைக்கண்டால் கோபம் அதிகமாகுது;
இளஞ்சிவப்பு,கருஊதா நிறங்கள்னா இவருக்கு
வெறுப்பு;கருப்பு கலரை கண்டாலே அமைதியில்லாமல் இருப்பதும், உணர்ச்சிவசப்படுவதும்
அதிகமாகும்;
அழுதா மனசுல இருக்கிற குழப்பமெல்லாம் தணியும்;
தூக்கத்தில யாரோ கூப்பிடறமாதிரி பிரம்மை
இருக்கும்;
என்னால எதையும் புரிஞ்சுக்கமுடியாது,நான்
வாழ்க்கைக்கே தகுதியில்லை அப்படின்னு நெனப்பார்;
தன் கணவனை பிடிக்காது,
கணவனின் உடம்பு வாசனை ஆவாது பெருவெறுப்பு வந்துடும்,கர்ப்பம்தரிக்கிறத
நெனச்சாலே பயப்படுவாள்;
புயல்,சூறாவளி காலங்களில் துயரம் தணியும்;
மேகமூட்ட,மூடுபனி காலங்களில் துயரம்
அதிகமாகும்;
காமத்தோட தொட்டா பிடிக்காது; யார்
இவள்??????????
ஹோமியோபதி புதிர்;10;
இடி மின்னல்,சூறாவளி காலம் மற்றும்
குளிர்ச்சியான ஈரமான பருவகாலங்களில் தொந்தரவு அதிகமாகும்;கோழைச்சளி இருமும் போது
வாயிலிருந்தும்,மூக்கிலிருந்தும் பறக்கும்;
சளி,தும்மல்,மூக்கிலிருந்து சளி தண்ணியா
கொட்டும் அதோட மூச்சிரைக்கும், மூச்சு திணற மாதிரி இருமல் வரும்;
இனிப்பு,கற்கண்டு
சாப்பிட்டா இருமல் வரும்;
தசைகளில் புண் போன்ற வலி அசைஞ்சா
அதிகமாகும்:.யார் இவர்???????
ஹோமியோபதி
புதிர்;11;
குளிர்ச்சியான கிளைமேட்டில ரொம்ப டல்லா
இருப்பார்;சூடான பகலும்,குளிர்ந்த இரவும் வர்ற காலங்களில் இவருக்கு தொந்தரவு
வரும்;
சாப்பிடறப்ப பதட்டமாகவும்
குளிர்ந்த வியர்வையும்
இருக்கும்;அதிகமா வியர்க்கும்,ஓய்வு எடுத்தா வியர்வை குறையும்;
சளியோட காய்ச்சல் இருக்கும்,காய்ச்சல் உட்காந்திருந்தா
நல்லாருக்கும்;தும்மல் படுத்திருந்தா குறையும்;
சளி பிடிச்சிருக்கிறப்ப உடம்பு சூடா இருக்கிற
மாதிரி உணர்வு இருக்கும்;
எப்பவுமே மனக்குறையோடவே
இருப்பார்,எல்லாத்துலயும் ஒரு அதிருப்தியோட மனசு அமைதியில்லாம இருப்பார்;
வான நீல கலர் மற்றும் லைட் பச்சை கலரால மனசு
பாரமெல்லாம் தணியும்.யார் இவர்??????
ஹோமியோபதி புதிர்;12;
சூடான
கிளைமேட் திடீர்னு மாறி குளிர்ச்சியானா இவருக்கு ஆகாது;
மாதவிடாயின் போது கடுமையான வலி
இருக்கும்,கூடவே வாந்தி,வயிற்றுப்போக்கு மற்றும் சோர்வு இருக்கும்;இவருக்கு
தொந்தரவு வரும்போதெல்லாம் நெற்றியில் குளிர்ந்த வியர்வை இருக்கும்;யார்
இவள்??????????
ஹோமியோபதி புதிர்;13;
புயல்,சூறாவளி காலங்களில் மறதி அதிகமா இருக்கும்; இடி மின்னல்.மழை,வானம் மோடம்
போட்டிருந்தாலோ,மோசமான வானிலை சமயங்களில் சிடுசிடுப்பாக
இருப்பார்.குளிக்கப்பிடிக்காது;யார் இவர்????????
ஹோமியோபதி புதிர்;14;
இடி மின்னல்னா பயம்,பனிக்காலம் புயல்
காத்துகாலம் சேராது,வெய்யில்காலம் நல்லாருக்கும்;
கார்ல பயணம் பண்ணுறதுன்னா பிடிக்காது,ஆனா
சுவாசக்கோளாறுகள் பயணம் பண்ணினா தணியும்;
டைபாய்டு காய்ச்சல்ல ஜில்லுன்னு வியர்வை
இருக்கும்,உடம்பே ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்;யார் இவர்???????
ஹோமியோபதி புதிர்;15;
அமாவாசை,பௌர்ணமினா இவருக்கு தொந்தரவு
வந்துடும்;
நாக்குல முடி இருக்கிறமாதிரி உணர்வு
இருந்துட்டே இருக்கும்;
இடி
மின்னல்காலத்துலயும், கிளைமேட் மாறினாலும்,தலைக்கு போத்திக்காம இருந்தாலும் இருமல்
வரும்;புயல் சமயத்துல காய்ச்சல் அடிக்கும்;யார் இவர்????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக