புதன், 25 டிசம்பர், 2013

ஹோமியோ தோழன்



                          தமிழக ஹோமியோபதி மருத்துவ உலகில் PLV என அன்போடு அழைக்கப்படும் தோழர் பழ.வெள்ளைச்சாமி அவர்களின் உழைப்பும் கனிவும் இப்போது உங்கள் கரங்களில் புத்தகமாக இருக்கிறது.தோழர் PLV அவர்களிடம் எந்த ஒரு மனிதரும் சென்று "அய்யா ஹோமியோபதி" என்று பேசத்தொடங்கினால் போதும்,அவரின் தோழமை வட்டத்தில் அங்கமாகிவிடலாம். இரவும் பகலும் வகுப்புகளும் விளக்கங்களுமாக ஓடிக்கொண்டிருக்கிறது அவரின் 20 ஆண்டுகால உழைப்பு.
    1993ல் தொடங்கிய தூய ஹோமியோபதி பிரச்சார சங்கத்தின்[AProCH] மாநில செயலாளராக தமிழகமெங்கும் அவர் ஹோமியோபதி வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.அவரின் புலர்காலைப்பொழுதுகள் வகுப்புகளிலேயே தொடங்கி,இரவும் வகுப்புகளிலேயே முடிவதை அருகில் இருந்தே கவனித்து இருக்கிறேன்
    தூய ஹோமியோபதி பிரச்சார சங்கத்தின்[AProCH] செயல்பாடுகள் நானறிந்த வரையில்,கடந்த தலைமுறை மகான்களில் ஒருவரான நாராயண குருவை ஒத்திருக்கும். நாராயண குரு ஈழவ [தாழ்த்தப்பட்ட ]  மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.ஈழவ மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை கற்றுக்கொடுத்து அதை முறைப்படுத்தி பிரபலப்படுத்தியவர்களில் ஒருவர்.இந்த அணுகுமுறையால் ஈழவ மக்களைத் தேடி உயர்சாதி மக்களும் வரவேண்டிய சமூக நிர்பந்தம் உருவானது.எவ்வித நேரடி விமர்சனங்களும் இன்றி சாதியத்தின் இறுகிப்போன வேர்களைத் தளர்த்த முடிந்தது.அதுபோலவே  தூய ஹோமியோபதி பிரச்சார இயக்கமும்[AProCH] தமிழகமெங்கும் பல்லாயிரம் மருத்துவர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
  எளிய பாடத்திட்டங்களும்,மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவ முகாம்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.அங்கு பயிலும் மாணவர்களின் தேவைகளுக்கு தோழர் PLV எழுதிய கட்டுரைகளே புத்தகங்களாக வந்துகொண்டிருக்கின்றன.அந்த வரிசையில் ஹோமியோபதி மேதை கெண்ட் அவர்களின் மருந்துகாண் ஏட்டை எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்த இப்புத்தகம் தமிழகத்தில் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
 தோழரின் உழைப்பையும் வீச்சையும் தமிழகம் இன்னும் சரிவர புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் அவரின் மாணவர்களுக்கும் உண்டு.அதை உடைக்கின்ற வகையில் இப்புத்தகத்தின் வருகையும் எதிர்பார்ப்பும் இருக்கவேண்டும் என்கிற ஆவல் மேலோங்குகிறது.நண்பர்களே நாம் அதை நிகழச்செய்வோம்!              
                                                       அன்புடன்
                                                    மரு.கோவிந்தராஜ்

ஹோமியோபதி மருந்துகாண் ஏடு-ஓர் அறிமுகம்

விஜயா பதிப்பகம்  --  புத்தகத்தின் முன்னுரையிலிருந்து  ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக