திங்கள், 6 ஏப்ரல், 2020

நொடியில் குறைந்த காய்ச்சல்




ஆண் வயது 30.
(விபத்தில் அடிபட்டு கடுமையான காய்ச்சல். கை, கால் வீங்கிவிட்டது).
இந்தத் துயரர் அப்ரோச்சை சேர்ந்த நண்பர்.
அவருக்கு விபத்து ஏற்பட்டு கடுமையான சிராய்ப்புக் காயத்துடன் பெட்டில் சேர்க்கப்பட்டார் கால், கை எல்லம் வீங்கிப் போய்விட்டது. உடம்பில் பல இடங்களில் இரத்தக்கட்டு. அவரால் அசையக்கூட முடியவில்லை. இவருக்கு காய்ச்சல் 106டிகிரி வந்துவிட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். ``காயம் ஆழமானது இல்லை, ஆனால் உடல் முழுதும் அடிபட்டுள்ளது’’ பயப்பட வேண்டியது இல்லை என்று சொன்னார்கள்.
இவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்த பின்பும், வலியும் குறையவில்லை. காய்சசலும் குறையவில்லை.

இந்த நிகழ்வு நடந்தபோது நான் ஊரில் இல்லை.
இவர் அப்ரோச் உறுப்பினர் என்பதால் மற்ற உறுப்பினர்கள் சென்று பார்த்துவிட்டு ஆர்னிகா, ஹைபெரிகம் போன்ற மருந்துகள் எல்லாம் கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
ஆக மூன்று நாட்கள் கடந்தும் மாற்றம் இல்லை.

நான் மூன்று நாட்கள் கழித்து திண்டுக்கல் வந்தவுடன் தகவல் அறிந்தேன்.

``நம்ம சார்க்கு பைக்கில் இருந்து விழுந்து அடிபட்டு ரொம்ப வலியோடும், காய்ச்சலோடும் மயங்கிய நிலையில் உள்ளார். நாங்கள் பல மருந்துகள் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை’’ என்று கூறினார்கள்.

நான் என்ன நடந்தது என்று விபரமாகக் கூறும்படி நண்பரிடம் கேட்டேன்.

``மூன்று நாட்களுக்கு முன்பு ஆபீஸ் வேலை சம்பந்தமாக புல்லட் பைக்கில் பழநிக்குச் சென்றுள்ளார். திண்டுக்கல்லை அடுத்து 8-வது கிமீ.-இல் பைக்கில் 60 கிமீ வேகத்தில் போகும்போது ஒரு குழந்தை குறுக்கே வந்துவிட்டது. அவர் குழந்தையை அடித்துவிடாமல் இருக்க சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது பைக் கீழே சாய்ந்து இவரை 20 அடி தூரம் தரையோடு இழுத்துக் கொண்டு போய்விட்டது. அப்போது இடதுபுறம் பூராவும் தலை முதல் பாதம் வரை அடிபட்டு இரத்தம் கொட்ட விழுந்துவிட்டார். கிராம மக்கள் இவரைத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை என்று நண்பர் நடந்ததை விபரமாகக் கூறினார்.

நான் மறுபடியும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வரும்படி கூறினேன்.
அவரும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார்.
நான் அவரிடம் அவர் எதுவும் பேசுகிறாரா? என்ன பேசினார்? என்று கேட்டேன்.

``அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் முணங்கிக் கொண்டிருக்கிறார்’’ என்று கூறினார்.

அவர் என்ன முணங்கினார் என்று கேட்டதில் அவர் போலீஸ் போலீஸ் என்று அடிக்கடி சொல்வதாகக் கூறினார்.

நான் இவர் ஏன் ``போலீஸ், போலீஸ்’’ என்று கூற வேண்டும் என யோசனை பண்ணினேன்.
பிறகு என்ன நினைத்திருப்பார் என்று அனுமானித்தேன்.

``இவர் பைக்கில் சென்றபோது குறுக்கே வந்த குழந்தையைக் காப்பாற்ற பிரேக் போடப் போய் கீழே விழுந்து அடிபட்டதாகக் கூறினார்கள். அப்படியானால் அவர் தாம் குழந்தையை அடித்துவிட்டதாகவும், குழந்தை இறந்திருக்கலாம் என்றும், அதனால் நம்மை போலீஸ் தேடி வரும் என்றும், எப்படியும் அரஸ்ட் பண்ணிவிடுவார்கள் என்றும் நினைத்திருப்பார்’’, இந்த நினைவில் அவர் இருப்பதால்தான் அவருக்கு எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. ஆகவே இவருடைய மனநிலைக்கு மருந்து கொடுத்தால் நிச்சயம் சரியாவார் என்று எண்ணிக் கொண்டு அவருடைய மனநிலைக்குக் கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.

MIND - DELUSIONS - crime - committed a crime; he had
MIND - DELUSIONS - pursued; he was - police, by
MIND - DELUSIONS - arrested, is about to be

இதுதான் அவர் மனநிலை என்று யூகித்துக் கொண்டு இந்தக் குறிகளின் அடிப்படையில் ZINCUM MET என்ற மருந்தை 200 வீரியத்தில் ஒரு வேளை மருந்து எடுத்து மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்தேன்.
அவர் மயங்கிய நிலையில் என்னைப் பார்த்ததும் ``என்ன ஜீ ரொம்ப முடியலை, பேச முடியலை’’ என்றார்.

உடனே நான் கொண்டு போன மருந்தை அவருக்குக் கொடுத்தேன். கொடுத்த 10 செகண்டில் மாத்திரை கரைய ஆரம்பிப்பதற்குள் அவருடைய 106டி காய்ச்சல் மேலிருந்து கீழாக இறங்கி ஓடிவிட்டது. உடம்பு 30 செகண்டில் குளிர்ந்து விட்டது. அடுத்த ஒரு நிமிடத்தில் எழுந்து அமர்ந்தார். ஜி, என்ன பண்ணினீர்கள். மந்திரம் போட்டீர்களா, ஒரு நிமிடத்தில் எல்லாம் சரியாச்சே அவர் பயத்தில் கத்த ஆரம்பித்தார்.

நான் அமைதியாக இருக்கும்படி கூறினேன். மந்திரம் போடவில்லை. ஹோமியோபதி மருந்து தான் போட்டேன் என்று கூறினேன். பிறகு 5 நிமிடத்தில் கை, கால் வீக்கம் வற்றிவிட்டது. அவர் என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார். அரைமணி நேரத்தில் அடிபட்ட வலி இல்லை, வீக்கம் இல்லை. வீட்டுக்கு மருத்துவமனையிலிருந்து சென்று விட்டார்.

இதை ஹோமியோபதி வட்டாரத்தில் அதிசயமாகவே எண்ணினர்.
இது திடீரென்று ஏற்பட்ட விபத்து அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு அவருடைய மனநிலைததான் அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அவருடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் தவிர்க்கவியலாதபடி அவருடைய உடல் நிலையைத் தீர்மானிக்கிறது என்பதற்கு இதைவிட நல்ல சான்று தேவையில்லை.

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-5
பழ.வெள்ளைச்சாமி

தொடரும்.....

1 கருத்து: