ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

செயலிழந்த சிறுநீரகத்தை சீர்படுத்திய ஹோமியோபதி பழ.வெள்ளைச்சாமி




பெண். வயது 54
இவர்களுடைய துயர் RENAL FAILURE
இவர்கள் திருநெல்வேலி அருகில் கடையம் பக்கத்திலிருந்து வந்திருந்தார்.
இவருக்கு சிறுநீரகக் கோளாறு கடந்த 6 மாதமாக பல வைத்தியங்கள் பார்த்தும் டயாலிஸிஸ் செய்தும், ஒன்றும் குணமாகாமல் போகவே அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.
இந்நிலையில் இறந்து போகும் தருவாயில் என்னிடம் அழைத்து வந்தார்கள்.
``அம்மா உங்களுக்கு என்ன பண்ணுது?’’
``கிட்னி கோளாறுன்னு சொல்றாங்க’’ என்று தட்டுத் தடுமாறி சொன்னாங்க.
பிறகு அவருடைய கணவர் பேசினார்.
``அய்யா, இவளுக்கு கிட்னி கெட்டுப் போச்சுன்னு ஆறு மாதமாக மருத்துவம் பார்க்கிறோம். இதுவரைக்கும் 6 இலட்சம் செலவு செய்து விட்டோம். கடைசியில் குணப்படுத்த முடியாதுன்னு சொல்லி விட்டார்கள்’’ என்று கூறினார்.
``ஏன் கிட்னி கோளாறு ஆச்சு. எதுவும் தெரியுமா?’’
கணவர் கூறினார். எப்ப மகன் செத்தானோ அப்பவே அவளுக்கு முடியாமல் வந்திடுச்சு.
கொஞ்சம் விளக்கமாகக் கூறும்படி கேட்டதும்
அந்த அம்மா சொன்னார்கள் ``என் மகன் 26 வயது பையன். சிங்கப்பூருக்குப் போனவன் அங்கே இறந்து போய்விட்டான் அய்யா. அப்பவே என் மூச்சு நின்னு போச்சு என்று கூறிக் கொண்டு பலமாக அழுதார்கள்.
இவர்களுக்கு இவர்கள் மகன் இறந்தது தான் பெரும் துயரம். அதை அவர்கள் மறக்காமல் இரண்டு வருடமாகியும் நேற்று நடந்தது போல் அழுகிறார்கள்.
இவர்களுக்கு CREATININE 13.2 UREA 130 இருந்தது. HB 7.9 இருந்தது.
இந்நிலையில் இவர்களுக்கு IGNATIA CM ஒரு வேளை போட்டுவிட்டேன். கீழ்கண்ட குறிகளின் அடிப்படையில்.
MIND - AILMENTS FROM - death of loved ones - child; of a
MIND - AILMENTS FROM – grief
MIND - AILMENTS FROM - mental shock; from
WEEPING GRIEF FROM AS IF RECENT
WORSE - Fright; shock, after losing persons or objects that were very dear.(SR PHATAK)
அன்று அவர்கள் சொந்தக்காரர் வீட்டில் தங்கினார்கள்.
அன்று இரவு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார்கள். பிறகு அவர்கள் தெளிவாகி மறுநாள் இரண்டு இட்லி சாப்பிட்டார்.
இரண்டாம் நாள் லேப் டெஸ்ட் பண்ணியதில் CREATININE 4.3 UREA 96 வந்து விட்டது.
இரண்டு நாட்கள் கழித்து வந்தார்கள். அவர்களுக்கு தொடர்மருந்து ஒரு மாதத்திற்கு கொடுத்து அனுப்பி வைத்தேன்.
அவர்கள் மறுபடியும் 1 மாதம் கழித்து வரும்போது அவர்கள் CREATININE 2.3 UREA 64 இருந்தது.
அவர்களுக்கு மறுபடியும் IGNATIA CM ஒரு வேளை கொடுத்துவிட்டு மருந்துடன் தொடர் மருந்து 1 மாதம் கொடுக்க அவர்கள் கிட்டத்தட்ட நலமானார்கள்.
அவர்கள் அதன் பிறகு பல வருடங்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-4
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக