வெள்ளி, 3 ஏப்ரல், 2020


தேங்காய் அளவு கர்ப்பப்பைக் கட்டி
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் 
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-3 
பழ.வெள்ளைச்சாமி



துயரர் பெண்.  வயது 40
இந்தப் பெண்மணிக்குக் கர்ப்பப்பையில் கட்டி.  அதுவும் தேங்காய் அளவு.
லோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு நாள் குறித்து விட்டார்கள்.  யாரோ அவர்கள் நண்பர் சொல்ல என்னிடம் வந்தார்கள்.
அவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டினார்கள்.  அதில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது.
``உங்களுக்கு என்ன செய்யுது?``
``அடிவயிறு கனமாக உள்ளது.  லேசாக வலிக்குது’’
``உங்களுக்கு மாதவிலக்கு எப்படி இருக்கிறது?’’
``நான்கு மாதமாக வரவே இல்லை.  நான் மெனோபாஸ் ஆக இருக்கலாம்னு நினைச்சேன்.  பின்பு வலி வந்தபிறகு டாக்டர்களிடம் காட்டினோம்.  அவர்கள் ஸ்கேன் எடுக்கச் சொன்னார்கள்.  பிறகு அதைப் பார்த்துவிட்டு கட்டி இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆபரேஷன் பண்ணி கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அவர்களுக்குச் சொல்லும்போதே கண் கலங்கியது.

``உங்களைப் பற்றிச் சொல்லுங்க’’
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் முதலாவது +2வும், அடுத்தது பத்தாவதும் படிக்கிறார்கள்.  என் கணவர் பேங்கில் வேலை பார்க்கிறார்.  என் மாமியார் என்னோடு இருக்கிறார்கள்.
``உங்கள் வாழ்க்கையில் மனதைப் பாதிக்கிறார்போல் ஏதாவது நடந்திருக்கா?’’

அப்படி எதுவும் இல்லை.  ஆனால் என் மாமியார்தான் பிரச்சனை.  அவர்கள் எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.  நான் இவ்வளவுக்கும் பார்த்து பார்த்து எல்லாம் செய்வேன்.  ஆனால் அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.  ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.  அவர்கள் மாடியில் இருப்பார்கள்.  நேரம் தவறாமல் அவர்களுக்கு உணவு மற்றும் அனைத்தையும் சரியாகச் செய்வேன்.  அப்படிச் செய்தும் என்னைக் குறை சொல்லுவாங்க.  எனக்கு இதை நினைச்சா ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருக்கு.
   இதை என் கணவரிடம் சொல்வேன்.  ஆனால் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார்.  என்னன்னும் கேட்க மாட்டார்’’
``இப்படி இருக்கும்போது நீங்க ஏன் எல்லாவற்றையும் மிகவும் சரியாக அவர்களுக்கு செய்கிறீர்கள்?’’
``எப்படி சார் செய்யாம இருக்கிறது’’
``உங்கள் கணவர் கோபிப்பாரா?’’
``இது நம்ம கடமையில்லையா’’
``அவங்க எப்படி வேணுமின்னாலும் இருந்திட்டுப் போகட்டும்.   நம்ம கடமையை மறக்காமல் செய்யனும்.  அதுதான் என் குணம்.  அவங்க எவ்வளவோ சொல்லி எனக்கும் என் கணவருக்கும் தேவையில்லாத சண்டையை எல்லாம் ஏற்படுத்தினாங்க.  அப்படியிருந்தாலும் நான் அவங்களுக்கு நன்மைதான் செய்வேன்.   என் கடமையிலிருந்து தவறமாட்டேன்’’
``வேறு எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடந்ததுண்டா?’’
வாழ்க்கை பூராவும் இந்த அம்மாகிட்ட பட்டதுதான் அதிகம்  இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இவர்கள் மேற்சொன்ன விபரங்களிலிருந்து கீழ்கண்ட குறிகள் எடுக்கப்பட்டன.
MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has
MIND - DELUSIONS - neglected - duty; he has neglected his
MIND - DELUSIONS - neglected - he or she is neglected

[Its unique feature however is its feeling of duty consciousness. In my observation, Naja people have a certain quality of nobility about them, of morality, of responsibility. Rajan sankaran soul of remedies]

மேற்கூறிய குறிகளிலிருந்து  நாஜா 10எம் தேர்வு செய்து கொடுக்கப்பட்டது. 
இரண்டு மாதங்களுக்குப் பின் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது கட்டி மறைந்திருந்தது தெரிய வந்தது.
திண்டுக்கல்லில் ஸ்கேன் எடுத்தது சரியில்லாமல் இருக்கலாம் என்று திருச்சியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த போதும் கட்டி இருக்கவில்லை.
அனைவரும் அதிசயித்த அருமையானதொரு நலமாக்கல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக