சனி, 11 ஏப்ரல், 2020


மரணத்திடம் இருந்து மீண்டு வந்தவன்



ஆண் வயது 14.
(காலில் இருந்து நெஞ்சு வரை செயல் இழந்த பையன் வாய் மட்டும் பேசுகிறான்).
ஒரு நாள் காலை ஒரு பையனைத் தூக்கி வந்து மருத்துவமனை பெஞ்சில் கிடத்தினார்கள். அவன் பேச மட்டும் செய்தான். அவனுக்கு நெஞ்சிலிருந்து அடிவரை செயல் இழந்து போய்விட்டது.

``இவனுக்கு என்ன பிரச்சனை? எப்படி வந்தது?’’

நல்லாய்த்தான் இருந்தான். திடீரென்று பத்து நாட்களுக்கு முன்பு கால் நடக்க முடியவில்லை என்று சொன்னான். பின்பு கால் செயலிழந்து போய் படிப்படியாக மேல் நோக்கிச் செயலிழந்து போய் இப்போது நெஞ்சு வரை வந்துவிட்டது. நாங்கள் 10 நாட்களாக மதுரை, கோவை என்ற பல இடங்களில் பார்த்துவிட்டோம். இன்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பையனும் படிப்படியாக செயல் இழந்து போய்க் கொண்டு இருக்கிறான். இப்படியே போனால் ஹார்ட் நின்று இன்னும் சில நாட்களுக்குள் இறந்து விடுவான் என்றும், வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறிவிட்டார்கள்.
நேற்று எங்கள் ஊரில் இங்கே கொண்டு போனால் ஏதாவது செய்வார்கள் என்று கூறியதால் இங்கே வந்தோம் என்று கூறினார்.

என்ன நடந்தது. ஏன் இப்படி ஆனான் அடிபட்டதா? விழுந்து விட்டானா? வேறு என்ன காரணம்?

``வீட்டில் சும்மாத்தான் படுத்திருந்தான். காலையில் எழும்போது கால் நடக்க வரலைன்னான். பின்பு மறுநாள் முழங்கால் வரை உணர்வற்றுப் போச்சு 10 நாட்களுக்குள் படிப்படியாக நெஞ்சு வரை உணர்வற்றுப் போச்சு. எங்களுக்கு என்ன காரணம் என்று தெரியலை’’ அம்மா சொன்னார்.

``சமீபத்தில் ஏதாவது மனது பாதிக்கிறதுபோல் சம்பவம் நடந்ததா? யோசித்துப் பாருங்க’’

ஒன்னுமில்லையே……

ஆமா சார், 20 நாட்களுக்கு முன் ஊரில் ஒரு சம்பவம் நடந்துச்சு. ஊருக்கு வெளியில் உள்ள கோயிலில் இவன் பிரண்ட்ஸ் எல்லாம் உண்டியலை உடைத்து காசு திருடி வாங்கித் தின்றுவிட்டார்கள். அதனால் ஊருக்குள்ள உள்ளவங்க கூடி பிரண்ட்ஸ் இவன் எல்லோரையும் பிடிச்சு அடித்து எவன்டா உண்டியலை உடைச்சதுன்னு கேட்டாங்க. எல்லோருக்கும் அடி, இவனையும் அடித்தார்கள். ஆனால் அன்னைக்குன்னு இவன் அவர்களோடு போகவில்லை. ஆனா இவனும்தான் அதில் சேர்ந்துள்ளான் என்று பிடிச்சு அடிச்சிட்டாங்க. இவன் அவங்ககிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ‘நான் இல்லைன்னு’ ஆனா அவங்க நம்புறாப்ல இல்லை. இவனை ஊருக்கு மத்தியில அடிச்சது ரொம்ப அவமானமாப் போச்சுன்னு வருத்தப்பட்டான். அப்ப வீட்டில வந்து படுத்தவன்தான். ஒரே அழுகை, அதே கவலையா இருந்தான். நான் எப்படி ஊருக்குள்ளே போவேன் என்று சொல்லிக்கிட்டே இருந்தான். இதற்குப் பிறகுதான் இப்படி ஆயிருக்க வேணும்’’ என்று அவனுடைய அம்மா நடந்த விஷயத்தை உருக்கமாகக் கூறினார்கள்.

இப்போது எனக்குப் புரிந்தது அவமானத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். அதனாலே வீட்டை விட்டே வெளியே போகாமல் மனம் உடைந்து போய் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்துள்ளான் அதன் விளைவு ஒட்டு மொத்தமாக செயல் இழந்து விட்டான் என்று யூகித்துக் கொண்டு அவன் குடும்ப வரலாற்றை கேட்க நினைத்தேன்.

அம்மா கொஞ்சம் சொல்லுங்க ``இவன் உங்களுக்குத் தலைப்பிள்ளையா? இவன் கர்ப்பமாக இருக்கும்போது நீங்க எப்படி இருந்தீர்கள்? ஏதாவது மனப் பாதிப்பு ஏற்பட்டதா கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்க. அவர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். பின்பு நான் அவர்களை, உங்கள் மகன் நலமாகனும்னா நீங்க சொன்னாத்தான் நல்லது என்று வலியுறுத்திக் கூறினேன்.

சார் எனக்குக் கல்யாணம் 15 வயதில் நடந்தது. என் வீட்டுக்காரருக்கு 27 வயது. நாங்க கூலி வேலைக்குத்தான் போவோம். நான் கொஞ்சம் நல்லாய் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் எப்போதுமே சந்தேகப்படுவார். நான் ஒரு இடத்துக்கு வேலைக்குப் போவேன். அவர் ஒரு இடத்துக்கு வேலைக்குப் போவார். நான் எப்பவாவது லேட்டா வீட்டுக்கு வந்திட்டா ரொம்ப அசிங்க அசிங்கமாகப் பேசி எவனோடடி இருந்துட்டு வருகிறாய் என்று அவமானப்படுத்துவார். நான் ரொம்ப அவமானப்பட்டேன். சொல்லுங்க சார், கட்டின புருஷனே இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும். நான் அவமானத்தில் கூனிக் குறுகி போவேன். நான் அப்படிப்பட்ட ஆளில்லை என்னை அப்படி பேசாதீங்கன்னு அவர்கிட்ட அழுது கெஞ்சுவேன். ஆனால் அவர் என்னை சந்தேகப்படுவது, அடிப்பது, திட்டுவதுமாகத்தான் இருப்பார். நான் இவரோடு வாழ்வதற்கு செத்துப் போகலாம்னு நினைத்தேன். நான் வருகிற கோபத்தையெல்லாம் அடக்கி வைத்தக் கொண்டு கட்டின புருஷனே நம்ம மதிப்பைக் கெடுக்கிறானே என்று அமைதியாக இருப்பேன்.’’ இதுதான் சார் இவன் கர்ப்பமான போது என் வாழ்க்கை என்று அழுது கொண்டு கூறினார்கள்.
இப்போது அந்தப் பையனின் மனநிலை இப்படி ஆனதற்கு இவன் அம்மாவின் மனநிலை முக்கியக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இவர்கள் கூறிய விஷயங்களிலிருந்து கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.

MIND - AILMENTS FROM - anger – suppressed
MIND - AILMENTS FROM - honor; wounded
MIND - AILMENTS FROM – mortification
MIND - DELUSIONS - insulted, he is
MIND - INDIGNATION - misdeeds of others; at the
மேற்சென்ன குறிகள் STAPHYSAGRIA என்ற மருந்தைக் குறிக்கின்றன.
அந்த மருந்தை 10 எம் வீரியத்தில் ஒரு வேளை வாயில் போட்டுவிட்டு 1 வேளை மருந்தை இரவு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
மறுநாள் அதிகாலையில் வேகமாக ஒருவர் ஓடிவந்தார்.

``சார் சாகக் கிடந்தவன் எழுந்து உட்கார்ந்து விட்டான்’’ என்று கூறி கண்ணீர் மல்க என்னைப் பார்த்தார்.’’

எனக்கு ஒரே ஆச்சர்யம். எல்லோரும் கைவிட்ட ஒரு துயரரைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சி. பின்பு மருந்தை கொடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஒருவேளை கொடுக்கச் சொன்னேன்.
பின்பு முன்று நாட்களில் அந்தப் பையனும் அம்மாவும் இன்னும் 4, 5 பெரிய மனிதர்களும் வந்தார்கள்.

``சார் சாகக் கிடந்தவனைக் காப்பாற்றிவிட்டீர்கள். நீங்க நல்லாய் இருக்கனும்னு வந்தவரில் ஒருவர் கூறினார். அந்தப் பையன் காலில் விழுந்து வணங்கினான்.

நான் டாக்டர் ஹானிமனுக்கு எல்லாப் புகழும் என்று அவரை வணங்கினேன்.

இந்தத் துயரரைப் பொறுத்த வரை மற்றவர்களுடைய தவறான செய்கையால் அவமானப்பட்டு மனத்தளவில் முடங்கிப் போனான். அவனிடம் மனத்தில முடங்கிப்போன பின்பு உடம்பு முடங்கிச் செயலிழந்து போய்விட்டது. இப்போது தெரிகிறதா? மனம் பாதிக்காமல் ஒருபோதும் நோய் வருவதில்லை.
எனக்கு இந்தத் துயரரை நலப்படுத்தியது என்னை தீவிரமாக மனத்தின் பங்களிப்பைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இந்தத் துயரரில் இருந்துதான் நான் முழுமையாக மனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஆரம்பித்தேன்.

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-8
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக