ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பச்சைத்துரோகமும் மூட்டுவலியும்




ஆண்  வயது 62
(RHEUMATISM) எல்லா ஜாயின்டுகளிலும் வலி.  தோள்பட்டையில் தொடங்கி, பாதம் கணுக்கால் வரை வலி.
``சொல்லுங்க என்ன பண்ணுது என்று சொல்லுங்க’’
மூட்டுக்கு மூட்டு வலி.  எல்லா மூட்டிலும் வலி.
``எவ்வளவு நாட்களாக இருக்கிறது?’’
``இரண்டு வருடங்களாக உள்ளது’’
``காலையில் எழுந்திருக்க முடியலை. உட்கார்ந்து எழுந்திருக்க முடியலை வலி.  கொஞ்சம் மதியமானால் வலி குறையுது.  குளிர்ந்த காற்று பட்டால் அதிகம் வலி’’.
``இரண்டு வருடங்களாக எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம்.  ஆஸ்பத்திரி வைத்தியம் தான் பார்க்கப்பட்டது.  அவங்க மருந்து கொடுத்தால் இரண்டு நாளைக்கு நல்லாயிருக்கு.  அப்புறம் வலிதான்.  இரண்டு வருடமாக படாதபாடுபட்டுப் போனேன்.’’
``இதற்கு முன்பு, இரண்டு வருடத்திற்கு முன்பு வேறு என்ன நோய் வந்தது.’’
``சார் காய்ச்சலுக்குக் கூட ஊசி போட்டதில்லை.  பெருசா சொல்கிற மாதிரி எந்த நோயும் வரலை.’’
``அப்ப எதனால வந்திருக்கும்னு நினைக்கிறீர்கள்?’’
``தெரியலை’’
நல்லா யோசிங்க.  ``மழையில் நனைந்த பின்பு வந்தது.  வியர்வையோடு குளிச்ச பின்பு வந்தது, இது சாப்பிட்ட பிறகு வந்தது’’ என்று ஏதாவது காரணம் இருக்கான்னு சொல்லுங்க.  இல்ல உங்க வாழ்க்கையில் இரண்டு வருடத்திற்கு முன் மனம் பாதித்த விஷயம் ஏதுவும் இருக்கா என்று கவனமாகச் சொல்லுங்க’’
``அப்படி ஒன்றும் நடக்கலை சார்.  இப்ப நல்லா இருக்கேன் சார்.’’
``இப்ப நல்லா இருக்கலாம்.  ஆனால் இரண்டு வருடத்திற்கு முன் ஏதாவது இழந்தது, மனதில் கடுமையாய் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் ஏதாவது இருக்கா சொல்லுங்க.’’
``சார் இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லை``
``இப்ப இல்லை அது சரி, இரண்டு வருடத்திற்கு முன் ஏதாவது பாதிப்பு’’
``அப்படின்னா, நான்கு வருடங்களுக்கு முன் முக்கியமான சம்பவம் நடந்தது’’
``அது என்ன?’’
சார் எனக்கு இரண்டு பொம்பளைப் பிள்ளைகள்.  ஒன்னு +2 படித்தது.  ஒன்னு 10-வது படித்தது.  அதனால் எங்க கிராமத்தை விட்டு திண்டுக்கல் குடியேறி விட்டோம்.  எங்க ஊர் திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ இருக்கும்.  அப்ப எங்களுக்குக் கிணறு, தோட்டம் எல்லாம்  இருந்தது.  அப்ப, என் அண்ணன் மகன் இரண்டு பிள்ளைகளோடு கஷ்டப்படுகிறேன்,  வறுமையாக இருக்கு.  நான் கேணி, நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கிறேன்.  நீங்க வந்து கேட்கும்போது நிலத்தைக் கொடுத்து விடுகிறேன் சித்தப்பா என்று கேட்டான்.
நானும், அண்ணன் மகன் குடும்பத்தோடு கஷ்டப்படுகிறான்.  அவன்தான் ரொம்ப கேட்கிறான் என்று அவன் பொறுப்பில் நிலத்தை விட்டு நானும் திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டேன்.
``அப்புறம் என்ன நடந்தது?’’
நான் பிள்ளைகள் படிப்பு முடிந்து மூன்று வருடம் சென்று நான் கிராமத்துக்குப் போய் அவன் கிட்ட நிலத்தை விடு நான்  பயிர் பண்ணிக்கிறேன் என்று கேட்டேன்.
அதற்கு அவன் ``என்ன சித்தப்பா கிண்டல் பண்ணுறீங்க.  எங்க வீட்டில இரண்டு பொட்டப் பிள்ளைகளை வைச்சிருக்கேன்.  ஏன் ரொம்ப ஆசைப்படறீங்க  நிலமும் கிடையாது ஒன்னும் கிடையாது’’ என்று சொல்லிவிட்டான்.
``திருட்டுப்பயல், பாவம் கஷ்டப்படறானேன்னு கொடுக்கப் போக  நமக்கே துரோகம் பண்ணிவிட்டானே என்று ரொம்ப கோபப்பட்டேன்.  அவனைக் கொன்றுவிடலாம் என்று கூட நினைத்தேன்.  பிறகு அடிதடி வந்தது.  பஞ்சாயம் வைத்து போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கடைசியில் ஆறுமாதமாக படாதபாடுபட்டு அந்த நிலத்தை அவன்கிட்டயிருந்து வாங்க வேண்டியதாயிற்று.’’
``நீங்க என்ன நினைத்தீர்கள்?’’
`` சார் இது பச்சைத் துரோகம் சார், பாவம்னு கொடுக்கப் போயி இப்படிப் பண்ணிட்டான்.  கொலை பண்ணலாம்னு இருந்தேன்.’’
இவர் கூற்றிலிருந்து சொத்து போய்விடும் என்ற பயத்தைக் காட்டிலும் துரோகம் பண்ணியது பெரிய பாதிப்பாக இருந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.
இவர் பாதிக்கப்பட்ட மையத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கீழ்கண்ட குறிகள் எடுக்கப்பட்டன.
MIND - DELUSIONS - betrayed; that he is
MIND - KILL; desire to

 
மேற்கண்ட குறிகளின் அடிப்படையில்  RHUS GLABRA 200 வீரியத்தில் கொடுக்கப்பட்டது.
முதல் இரண்டு வாரத்திலே 90%   குணமாகி விட்டது.
அடுத்து 3 மாதங்களில் முற்றிலும் நலமாக்கப்பட்டார்.


மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-9
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக