தாத்தாவுக்கு வந்த மாதிரி எனக்கும் வந்துடுமோ?
துயரர் ஆண் வயது. 51. துயரர் காலில் படை நோய் (eczema) அவருக்கு அவருடைய காலில் சிறு சிறு சீழ்
கொப்புளம் தோன்றி அதைச் சுற்றி சிவந்து, பின்பு
கொப்புளம் உடைந்து பொருக்கு கட்டி வரும்.
அதன் பிறகு அதைச் சுற்றி கொப்புளம் தோன்றி பெரிய படை நோயாக மாறி விடும்.
``சார் இந்த தொந்தரவு எப்ப வந்தது’’
``ஆறு மாதத்திற்கு
முன்பு வந்தது’’
``என்ன மருத்துவம்
பார்த்தீர்கள்?’’
``அலோபதியில்
ஆயின்ட்மெண்ட் போட்டேன் போட்டால் மறையுது அப்புறம் வந்திடுது.’’
``இந்தப் புண் என்ன
பண்ணுது? ’’
``வலிக்குது உள்ளே
வரை வலிக்குது. என்னால வேலை செய்ய
முடியலை. அப்ப அப்ப அரிக்குது’’
``இது எதனால
வந்திருக்கும்னு நினைக்கிறீங்க? ’’
``தெரியலை’’
``ஆறு மாதத்திற்கு
முன்னாடி எதைப் பற்றியெல்லாம் நினைச்சீங்க? மன ரீதியா
ஏதாவது பாதிப்பு இருந்ததா? ’’
``ஒன்னுமில்லை, தொழில் சரியா
இல்லை ரியல் எஸ்டேட் செய்தது எல்லாம் நின்னுபோச்சு. அதுல பணம் முடங்கிப் போச்சு. அந்தக் கவலை.
கடன் வாங்கித்தான் பணம் போட்டோம்.
எதுவும் விற்காததால் முடங்கிப் போச்சு.
பணத்தை இழந்திடுவோமோன்னு பயம் வந்திச்சு.
எங்க அண்ணன் எப்பப் பார்த்தாலும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருப்பார் அது வேற பயம்’’
``வேற என்ன பயம்
இருக்கு? ’’
``நமக்கு இப்படி
ஒன்னுகிடக்க ஒன்னு வருதே நமக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம். இப்படி ஆச்சுன்னா பிள்ளைகள் கல்யாணம் பற்றிக்
கவலை. குடும்பம் என்ன ஆகும் என்ற கவலை ’’
``அப்புறம் பெரிய
பயம் என்னன்னா எனக்கு 51 வயதாகிறது.
எங்க தாத்தா 52 வயதில் ஹார்ட் அட்டாக்ல இறந்தார். எங்க அப்பாவும் 52 வயதில் அதே
நோயில இறந்திட்டார். நமக்கும் 51 வயது
ஆயிடுச்சு. அடுத்த வருடம் 52 வயது. என்னமும் ஆகிவிடுமோ என்ற பயம். அப்படி ஆயிட்டா குடும்பம் என்ன ஆகும். இந்தப் பயம் ரொம்ப சார். ’’
ஆறு மாதத்திற்கு முன் இப்படித்தான் என் நிலைமை இருந்தது.
``வேறு எந்த
வகையிலாவது நீங்க பாதிப்படைந்தது உண்டா?’’
``இல்லை சார்’’
இவர் மேற்சொல்லிய
விபரங்களிலிருந்து கீழ்கண்ட குறிகள் சேர்க்கப்பட்டன.
MIND - ANXIETY -
children, about his
MIND - ANXIETY - family, about his
MIND - ANXIETY - future, about
MIND - ANXIETY -
money matters, about
MIND - FEAR -
misfortune, of
MIND - FEAR – poverty
MIND - FEAR -
superstitious
மேற்கண்ட குறிகளிலிருந்து ரஸ்டாக்ஸ் மருந்து தேர்வு செய்து 200 வீரியத்தில்
கொடுக்கப்பட்டது.
இரண்டு வாரத்தில் காலில் இருந்த எக்ஸீமா மற்றும் சீழ் கொப்புளங்கள் அனைத்தும்
மறைந்துவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக