வியாழன், 9 ஏப்ரல், 2020

சொரியாசிஸ் நோயும் புதுமைப்பெண்ணும்





பெண். வயது 26
இவர்களுக்கு  ECZEMA  மற்றும் சோரியாஸிஸ் இருந்தது.

``இந்த SKIN PROBLEM   எவ்வளவு நாளாக இருக்கிறது?’’

``இரண்டு வருடமாக இருக்கிறது’’

``இதற்கு முன் எப்பொழுதாவது வந்துள்ளதா?’’

இதற்கு முன் வந்ததில்லை.

இது எப்படி வந்தது?  ஏதாவது காரணம் இருக்கா?

``என் வாழ்க்கையே வேஸ்டாய் போச்சு சார்.  எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடமாகுது.  சொல்லப் போனால் லவ் மேரேஜ்தான்.  அதை நினைச்சுத்தான் வருத்தப்படுகிறேன்.’’

``என்ன வருத்தம்  விளக்கமாகச் சொல்லுங்க’’

நான்  MSc Computer scinece படித்துவிட்டு IT ஃபீல்டில் வேலை பார்த்தேன்.  என் கணவரும் அங்குதான் வேலை பார்த்தார்.  அவரும்   MSc  படித்து இருக்கிறார்.  4 வருடத்திற்கு முன்பு இரண்டு பேரும் ஒரே ஆபீஸில் வேலை பார்க்கும்போது லவ் ஏற்பட்டு ஒரு வருடம் கழித்து பல  பிரச்சனைகளுக்கிடையில் 4 வருடத்திற்குப் பின் எங்கள் திருமணம் நடந்தது.

நான் கொஞ்சம் வசதியானவள்.  ஒரே பெண்  செல்வாக்காத்தான் இருந்தேன்.  இவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன்.  முதலில் எதிர்ப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பின் சம்மதித்தார்கள்.

என் கணவர் வீட்டில் என் மாமியார் டாமினேசன்.  என் கணவரும் சரி என் மாமனாரும் சரி.  அவர்களை எதிர்த்துப் பேசவே மாட்டார்கள்.  என் மீதும் அதிகாரம் பண்ணினார்கள்.  நாங்கள் பெரும்பாலும் சென்னையில் இருந்ததால் எங்களுக்குள் பெரும்பாலும் மோதல் ஏற்படாமல் சென்றது.  இருந்தாலும் அவர்கள், அவர்கள் மகனிடம் சொல்லி பொண்டாட்டியை அடக்கி வைக்கனும்டா.  ஆரம்பத்திலேயே திமிரை அடக்கனும்’’ என்று பலமுறை சொன்னதைக் கேட்டுள்ளேன்.

நான் அன்பாகச் சொன்னால் எதையும் செய்வேன்.  அதிகாரம் பண்ணினால் பணியமாட்டேன்.  முதலில் அந்த அதிகாரத்தைக் காலி பண்ணனும்னுதான் நினைப்பேன்.  நான் எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்.  எந்த டாமினேசனையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இந்நிலையில் நான் கன்சீவ் ஆகி ஒரு வருடத்திலே ஆண் குழந்iதை பிறந்தது.  அதன் பிறகுதான் நிலைமை மாறியது.

``என்ன மாறியது என்ன நீங்கள் பீல் பண்ணினீர்கள் என்பதை விபரமாகச் சொல்லுங்கள்’’

ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனதும் அவர்கள் குலசாமி கோவிலுக்கு மொட்டை போடத் திட்டமிட்டார்கள்.  அவர்கள் வழக்கப்படி குலசாமிக்கு ஆண்குழந்தை பிறந்தால் குழந்தைக்கு மட்டும் மொட்டை போட்டால் போதாதாம்.  தாய்க்கும் மொட்டை போடனுமாம்.

என்னை அவர்கள் மொட்டை போடச் சொன்னார்கள்.  நான் இதைக் கேட்டதும் ஷாக் ஆகிவிட்டேன்.  ``இது என்ன அநியாயம் நான் ஏன் மொட்டை போடனும்’’ என்று சப்தம் போட்டேன்.   அவர்கள் சாமி குத்தமாயிடும் என்றும், குடும்பத்திற்கு நல்லது இல்லை என்றும் என்னைக் கம்பல் பண்ண ஆரம்பித்தார்கள்.

``ஏன் அவர்கள் மகன் மொட்டை போடக் கூடாது?’’ என்று கேட்டேன்.  இது என்ன நியாயம் என்று கேட்க, என் மாமியார், மாமனார் என் கணவர் உட்பட சண்டை போட்டு கட்டாயம் மொட்டை போடும்படி கூறினார்கள்.

நாங்கள் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினோம்.  கொஞ்சம் காதல் இருக்கும் என்று கணவரிடம் கெஞ்சினேன்.  அவர் கொஞ்சமும் சட்டை பண்ணல.  வீட்டில அம்மா சொல்றபடி கேளு என்று சொல்லிவிட்டார்.

நீ என்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினாய். அப்போதெல்லாம் என்னவெல்லாம் பேசினாய்.  அதெல்லாம் மறந்துவிட்டாயா? எப்படியய்யா நான் மொட்டை அடிக்க முடியும்?  வேலை வேறு பார்க்கிறேன். மொட்டையடித்துவிட்டு வேலைக்குக் போக முடியுமா?  என்றும் நீ உடனே உங்கள் வீட்டில் சொல்லி என் பெண்டாட்டி, மொட்டை அடிக்கமாட்டாள்ன்னு சொல்லுய்யா’’ என்று கெஞ்சிப் பார்த்தேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டில் போய் கூறவும் மனமில்லை.  நானாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை.  நிச்சயம் அங்கேயும் எனக்கு மதிப்பு இருக்காது.  அவமானம்தான் மிஞ்சும்

மறுபடியும் என் கணவரிடம் போராடலாம் என்று நினைத்து மறுபடி கெஞ்சி, அழுது சண்டை போட்டுப் பார்த்தேன்.  அவனோ எந்த முயற்சியும் பண்ணவில்லை.  நீ மொட்டை அடிக்கத்தான் வேண்டும் என்று கண்டிப்பாக கத்த ஆரம்பித்தான்.

``அப்புறம் எனக்கு ரொம்ப கோபம் வந்தது.  நீயெல்லாம் ஒரு ஆம்பள, உனக்கு ஒரு காதல்.  காதல்ன்னா என்னன்னு தெரியுமாடா? காதலியை உயிரா நினைக்கனும்டா.  ஆனால் நீ என்னையே அசிங்கப்படுத்த நினைக்கிறாய்’’ என்று சண்டை போட்டேன்.   நான் செத்துப் போவேன் என்று கத்தினேன்.  என்ன அழுதாலும், புலம்பினாலும் அவர்கள் விட்டபாடில்லை.  என்னை அடித்துக் கம்பல் பண்ணி மொட்டை அடித்துவிட்டார்கள்.  இதுதான் சார் எனக்கு நடந்த கொடுமை.

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. 
``சரி இந்தச் சம்பவத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

``எல்லாம் போலி சார்.  குடும்பம் போலி,  காதல் போலி, கல்யாணம் போலி எல்லாம் மோசக்காரத்தனம் சார்’’.  என்னால இதைச் சகிக்க முடியாது.  எல்லாம் ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போலிச் சமூக உறவுகள்தான் சார்.’’

``இதைப் பற்றி உங்கள் முடிவென்ன?’’

எதுக்கு சார் ஒரு பெண் திருமணம் செய்கிறாள்?  அடிமையாக இருக்கவா? யாராவது அடிமைத்தனத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? அதுல வேறு காதல், காதலாவது, கத்திரிக்காயாவது எல்லாம் காமம்.  வெறும் பசப்புதான் காதல்’’ என்று அந்தப் பெண் பொரிந்து தள்ளினாள்.

``இன்னும் சொல்லுங்க’’

ஒரு பொண்ணு எதுக்கு சார் கல்யாணம் செய்கிறாள்?  சோத்துக்கு இல்லாமலா? இல்லை உடுத்தத் துணி இல்லாமலா? இல்லை படுக்க இடமில்லையா? இல்லை சார், இது எல்லாம் எங்க வீட்டில் இருக்கு.  எல்லாம் இருந்தும் எதுக்கு சார் கல்யாணம் பண்ணணும்?  கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் செக்ஸ்.  அதுதான் சார்.  இந்த செக்ஸுக்காக மானம், மரியாதை, சுதந்திரம், கல்வி, அறிவு எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டு எப்படி அடிமையாக இருக்கிறது?

``இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.  இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது சார்’

சரி இதற்கு என்ன தீர்வு?

ஒரு பெண் எல்லாம் இருந்தும் செக்ஸுக்காக ஒரு முன்னப்பின்ன தெரியாதவனிடம் போய் கல்யாணம் என்கிற பெயரில் போய் படுக்கிறது எப்படி  சார் சரி.  இந்தக் காலத்தில் காதலிக்கிறவர்களே இந்த லட்சனத்தில் இருக்கும்போது மற்ற ஆம்பிளைகளைப் பற்றிச் சொல்லவா வேணும்?’’

``என்னதான் முடிவு?’’

``ஒரு பொண்ணுக்கு கல்யாணத்திலே செக்ஸ் மட்டும்தான் கிடைக்குதுன்னா கல்யாணம் எதற்கு? பாதுகாப்புன்னு சொல்லுவீர்கள்.  எது சார் பாதுகாப்பு?  கல்யாணம் பண்ணின பெண்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?  என்னைப் பாருங்க, நான் இவ்வளவுக்கும் காதலித்துக் கல்யாணம் பண்ணினேன்.  எனக்குப் பாதுகாப்பு இருந்ததா?  அதனால் பெண்ணுக்குக் கல்யாணம் பாதுகாப்புன்னு நான் நினைக்கலை.’’

அப்புறம் என்னதான் முடிவாகச் சொல்கிறீர்கள்?

அப்புறம் என்ன சார்.  செக்ஸ்தான் பிரதானம் என்றும், அதற்கு அடிமையாக இருக்கனும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.  திருமணம் என்பதே பெண்ணை அடிமைப்படுத்துகிற ஒன்றுதான்.  அடிமைப்படுத்துகிற எதையும் என்னால் ஏற்க முடியாது.  நான் அடிமைத்தனத்தை உடைக்கனும் என்று நினைப்பேன்.  இந்தச் சமூகத்தில், திருமணம் முறையில் கோளாறு இருக்கு.  இதை மொத்தமாக மாற்ற வேண்டும்.

அன்பு, பாசம், சுதந்திரம், மனித நேயம் எல்லாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேணும்.  அதைவிட்டு பெண்ணை கல்யாணம் செய்து ஆண் வீட்டுக்கு அனுப்புறது என்ன நியாயம்?  இப்பத்தான் பெண்ணுக்கு சொத்து உரிமை உண்டுல்ல.  ஏன் ஆணை பொண்ணு வீட்டுக்கு அனுப்பக் கூடாது?  செக்ஸ்கூட இரண்டு பேருக்கும் பொதுதானே?  அப்படியிருக்க பெண் ஆண் வீட்டிற்குப் போனால்தான் அதை நடத்த முடியுமா?  எப்படி பொண்ணுக்கு கணவர் வீடு முற்றிலும் அந்நியமோ அப்படித்தானே பெண் வீடும் கணவனுக்கு.  அப்படியிருக்க பெண்ணை மட்டும் ஆண் வீட்டுக்கு அனுப்புறது எப்படிச் சரி?.

இந்த நடைமுறையையே மாற்றனும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது சார்.

இன்னும் சொல்லப் போனால் எங்க வீட்டில எல்லாமே இருக்கு.  உணவு, உடை, வீடு மற்றும் எல்லா வசதியும் இருக்

கு.  அந்த ஒன்றுக்குத்தான் இந்தக் கல்யாணம் வேண்டுமா?  காமம் என்பது எல்லா உயிருக்கும் பொதுதானே?  இதைக் கல்யாணம் என்று இவங்க சொல்லுகிற அசிங்கத்தை செய்து அடையனும் என்கிற அவசியம் இல்லை.  கல்யாணம் செய்யாமல் கூட இதைப் பெறலாம்.  நான் தப்பானவ இல்லை.  ஒரு தர்க்கத்திற்காக சொல்கிறேன்.

செக்ஸ் என்பது கூட பசிபோல ஒரு உயிர்த் தூண்டல்தான்.  அது இனப்பெருக்கத்திற்கானதுதான் என்றாலும் இப்ப யார் அதை நினைக்கிறார்கள். செக்ஸில் pleasure தானே எல்லோரும் விரும்புகிறார்கள்.  ஏன் இது இல்லாமல் வாழ முடியாதா?  என்னால முடியும் சார்.  இந்தக் கல்யாணங்கிற சாக்கடைக்குள்ளே விழுவதைவிட சும்மா இருந்திட்டுப் போகலாம்.  அப்படித்தான் அது வேணும்னா மனதுக்குப் பிடித்தவனோடு எப்பவாவது கூடி மகிழ்ந்திட்டு போறதுல கூட தப்பு இல்லைன்னு தோணுது.

இப்படி அந்தப் பெண் ஆவேசமாகப் பேசி முடித்தாள்.  இதிலிருந்து இந்தப் பெண்ணின் மனநிலை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்  Anti-Authority இப்போதுள்ள சமூகத்தையே மொத்தமாக புரட்டிப் போட நினைக்கிறாள்.  அதனால் அவளுடைய கூற்றுக்களிலிருந்து மூன்று குறிகளைத் தேர்வு செய்தேன்.

ANTI AUTHORITY
MIND - REVOLUTIONIST
MIND - ANARCHIST - revolutionary

  The main feeling in Mercurius is that of being dominated, suppressed or contradicted by an extremely dictatorial authority. The only solution in such a situation is to either get away from or revolt against this domination.
-RAJAN SANKARAN

இந்த மூன்றுக்குமான மருந்து  MERC SOL தான்.  1M -இல் இரண்டு வேளைக்கு கொடுத்து விட்டு ஒரு மாதம் கழித்து வரச் சொன்னேன்.  என்ன ஆச்சரியம்.  ஒரே மாதத்தில அந்தப் பெண் முற்றிலும் நலமானாள்.  பின்பு ஒரு மாதத்திற்கு தொடர் மருந்து கொடுத்தனுப்பினேன்.  அந்தப் பெண் மறுபடியும் வரவில்லை. முற்றிலும் சொரியாசிஸ் நீங்கி நலமாகி விட்டாள்.


மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-7
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக