செவ்வாய், 7 ஏப்ரல், 2020


தீராத மூட்டுவலி தீர்ந்த அதிசயம்
ஆண் வயது 65..
இவருக்கு (rhematism) மூட்டு வலி. முதலில் இரண்டு தோளிலும் வலி. பின்பு முழங்காலில் வலி. பின்பு கணுக்காலில் வலி.
இந்த வலி ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிறது.

``தங்களுக்கு எப்ப வலி வந்தது’’

இரண்டு வருடம் ஆகிறது. முதலில் தோளில் தான் வந்தது. முதலில் வலது தோளில் வந்து பின்பு இடது தோளிலும் வந்தது.

``அப்புறம் வலி எங்கே வந்தது’’

முழங்காலில் வந்தது. அதை அடுத்து கணுக்காலிலும் வந்தது.

``வலி எல்லாம் எப்ப அதிகமாகும்?’’

காலையில் எழுந்ததும் அதிகமாகும். கையைத் தூக்கினால் தோள் வலி. உட்கார்ந்து எழுந்தா முழங்கால் வலிக்குது.

``எதனால் வந்திருக்கலாம்னு நினைக்கிறீங்க?’’

``முதலில் தோளில் லேசாக வலி வருது பின்பு படிப்படியாக வலி அதிகமாச்சு’’

``என்ன வைத்தியம் பார்த்தீர்கள்?’’

``ஊசி போட்டேன் அது இரண்டு நாள் கேட்குது. வலி மாத்திரை சாப்பிட்டால் குறையுது. நானும் பல இடத்தில் பார்த்துட்டேன். அப்புறம் இங்கே போகச் சொன்னாங்க. இங்கே வந்திட்டேன்’’.

``இரண்டு வருடத்திற்கு முன் உங்கள்வாழ்க்கையில் மனதைப் பாதித்த விஷயம் என்ன?’’

``ஒன்றுமில்லை. எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான்’’

``விளக்கமாகச் சொல்லுங்க’’

பத்து வருடமாக சரியான வருமானம் இல்லை. குடும்பத்தில் யாரும் மதிக்கிறது இல்லை. என் மனைவிகிட்ட ஏதாவது கேட்டா காதுல கேட்காதது போல போவாள்.

``மூத்த பையன் பாருங்க எங்ககிட்டக்கூட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான்’’

``சின்ன பையன் எங்க போறான் என்ன வேலை பார்க்கிறான்னு சொல்றதில்லை’’

``மொத்தத்தில் யாரும் என்னைக் கண்டுக்கிறது இல்லை’’

``உங்களுக்குக் கோபம் வருமா?’’

``சொன்னதைத் செய்யாதபோது கோபம் வரத்தான் செய்யும். அப்படி ஒன்னும் வெளியே காட்ட மாட்டேன். அப்படி நாம காட்டினாலும் சட்டை பண்ண மாட்டாங்க’’.

``வேறு வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் இருக்கிறதா?’’

வேறு ஒன்றும் பெரிய கவலை இல்லை.

``எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லுங்க உங்களைக் குணபடுத்தத்தான் கேட்கிறேன்’’
வேறு எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.

துயரர் மேற்கூறிய சம்பவங்களை வைத்து கீழ்கண்ட குறிகள் தேர்வு செய்யப்பட்டன.

MIND - RESPECTED - desire to be
MIND - DELUSIONS - neglected - he or she is neglected
MIND - ANGER - contradiction; from
மேற்கூறிய குறிகளிலிருந்து hamamelis 200- 3 வேளை மருந்தும், அதன் தொடர் மருந்துகளும் இரண்டு வாரங்களுக்கு கொடுக்க வலிகள் எல்லாம் பெரும்பகுதி குறைந்து விட்டது.
மேலும் 2 மாதங்களில் அவர் முற்றிலுமாகக் குணமாகி அவர் இரண்டு துயரர்களை அழைத்து வந்தார்.

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-6
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக