துயரர் ஆண் வயது.29.
இவருக்கு குறுக்கு வலி,Lumbar sacral pain
``இது எவ்வளவு நாளா இருக்குது’’
`ஒன்றரை வருஷமாக இருக்கு’
``இந்த வலியைப்
பற்றிச் சொல்லுங்க’’
``சார் வலி
உட்கார்ந்திருந்தால் அதிகமாக வலிக்கிறது இல்லை.
ரொம்ப தூரம் நடந்திட்டு வந்து உட்கார்ந்தா ரொம்ப வலிக்குது’’.
நடக்க ஆரம்பிக்கும்போது வலி அப்புறம் போகப் போக வலி குறைந்து
விடும். ஆனால் நடந்தால், நடந்து முடிந்த பிறகு வலி வருது.
``இந்த வலி வந்து
எவ்வளவு நாளாச்சு’’
``இரண்டரை வருடமாக
இருக்கு’’
``எதனால்
வந்துச்சுன்னு நினைக்கிறீங்க’’
``அடிபட்டுச்சா?’’
``இல்லை’’
``எதுவும்
வெயிட்டு தூக்கினீர்களா?’’
``இல்லை’’
``இதுக்கு முன்னாடி
ஏதாவது நோய் வந்ததா?’’
``அப்படீன்னா’’
``அதாவது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் அரிப்பு அப்படி ஏதாவது
நோய் வந்ததா?’’
`எதுவும் இல்லை’
``இப்ப வயது 29. அப்படீன்னா இந்த வலி வந்து 26 ½ வயதில்
வந்திருக்கும். அப்படி வந்திருந்தா அந்தக்
காலக்கட்டத்தில உங்க வாழ்க்கையில் என்ன நடந்தது?’’
``ஒன்னும்
நடக்கலை’’
``நல்லா யோசித்து
சொல்லுங்கள்’’
`ஒன்றுமில்லை
சார்’
`` சரி நீங்க என்ன
வேலை பார்க்கிறீங்க’’
`` நான் 22-23 வயதில் பி.இ. படிச்சேன். நானும் எவ்வளவோ
முயற்சி செஞ்சு ஒரு வேலைக்குப் போகலான்னு பார்த்தேன். ஆனால் எந்த வேலையும் கெடைக்கிறதில்லை. அப்படிக் கெடைச்சாலும் ஐயாயிரம், ஆறாயிரம்
சம்பளம் தருவேன்னாங்க. அதை வைச்சிக்கிட்டு
டவுனில் என்ன பண்ணுறதுன்னு வேலைக்கு போகலை.
அப்படிப் போனாலும் அசிங்கமாக பேசுவாங்கன்னு பயமா இருக்கு. அதனால வேலைக்குப் போகலை’’.
`வேலைக்குப்
போகாம வீட்டில் என்ன பண்ணினீங்க’’
``சும்மா சின்ன, சின்ன வேலையை
வீட்டில் பார்ப்பேன்’’
``உங்க சூழல்
எப்படி இருந்தது?’’
``எங்க அப்பா
கோபக்காரர். ரொம்ப strict, ரொம்ப கன்டிசனாக இருப்பார். எப்ப பார்த்தாலும்
திட்டிக்கிட்டேயிருப்பார். அதனால நான்
ரொம்ப கவலைப்பட்டேன். ஒரு தப்பும் பண்ணாமே
திட்டுறாரே. நாம் முயற்சிதான பண்ணுகிறோம். சரியா வராததுக்கு நாம் என்ன பண்ணுறது’’
வீட்டில யாரும் சரியா கூட பேசுறது இல்லை. இதுதான் என் சூழல் என்று மிகவும் வருத்தமாகச்
சொன்னார்.
இந்தச் சூழல்தான் இவரைப் பாதித்திருக்க வேண்டும் என்று
முடிவு செய்து கொண்டு கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.
MIND - AILMENTS FROM
- domination
MIND - AILMENTS FROM
– reproaches
MIND - FEAR -
reproaches; of
MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has
MIND - DELUSIONS -
neglected - he or she is neglected
MIND - ANXIETY -
future, about
மேற்கண்ட குறிகளுக்கு பொருத்தமான மருந்து கார்சினோசினம்.
இந்த மருந்தை 200 வீரியத்தில் 3 வேளைக்குக்
கொடுத்து தினமும் 3 நாட்களுக்கு கொடுத்து அதனுடன் 2 வாரம் தொடர் மருந்துகளும்
கொடுத்தனுப்பினேன்.
இரண்டு வாரங்கள் கழித்து வரும்போது மலர்ச்சியுடன்
வந்தார். அவருடைய வலி 90%
குணமாகியிருந்தது.
மேலும் அவருக்கு 2 வாரத்திற்கு தொடர் மருந்துகளும் கொடுத்து
அனுப்பினேன். அவர் அதன்பிறகு முழுவதும்
நலமடைந்தார்.
தொடரும் அற்புத நலமாக்கல்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக