அப்சின்தியம் - ABSINTHINUM
COMMON WORM WOOD
COMPOSITAE FAMILY
மியாசம்
: சோரா.
ம.வே.ப.
: நரம்புகள்.
மூளை, தண்டுவடம்.
பொது - இது
தாவரம். வலிப்பு
நோய்க்கு
உகந்தது. காக்கை
வலிப்புக்கும்
இதைப் போன்ற
தன்மையையுடைய
வலிப்புக்கும்
தரலாம். வலிப்பு
ஏற்படுமுன்
உடலில் நடுக்கம்.
(TREMOR) நாக்கைக்
கடித்தல்,
வாயில் நுரை
தள்ளுதல்,
முகம் கோணுதல்
காணப்படும். நடுக்கத்தில்
நாக்கு, இருதயம்
குறிப்பிடத்தக்கதாகும். திடீரென்று
கடுமையானக்
கிறுகிறுப்பும்,
சன்னியுடன்
வேகமாகத்
தாக்கி உணர்விழக்கச்
செய்தல். வலிப்பின்போது
குதிகால்களும், தலை
மட்டும்
தரையைத்
தொட்டிருக்க,
உடல் வில்லாக
வளைந்திருத்தல
(OPISTHOTONUS)
காளான்களைத்
தின்றதால்
ஏற்பட்ட
நஞ்சு தன்
கட்டுப்பாட்டை
மீறி, விட்டு
விட்டு உதறுதல்
(CHOREA) குழந்தைகளுக்கு
நீண்ட நாள்
உள்ள வலிப்புக்கும்,
முதுமை அடைந்தவர்களுக்குக்
காக்கை வலிப்புப்
போன்றவைகளுக்கும்
பயன் தரும். செரிமானமாகாமல்
குழந்ைகைளுக்கு
வரும் வலிப்பு. வலிப்பு
முகத்திலிருந்து
ஆரம்பித்து
உடலுக்கும்,
கால்களுக்கும்
பரவுதல். பெரும்பாலான
வலிப்புகள்
சில மணி
நேரம் தொடர்ச்சியாக
வீரிட்டுக்
கத்திக்
கொண்டு வருதல். வலிப்பின்போது
அழுதல்.
மனம் - பிரமை. ஞாபகமமறதி. யாருடைய
தயவும் தனக்குத்
தேவையில்லை
என நினைத்தல். திருடியே
தீரவேண்டுமென்ற
மன உந்துதல்
(KLEPTOMANIA). விந்தையான
மிருகங்களையும்,
பலவித நிறங்களில்
எலிகளையும்
பார்ப்பதாகவும்
பிரமை. குழப்பம், உடல்
தேறும் நிலையில்
இறப்பை விரும்புதல். எதிரிகளும்,
சிப்பாய்களும்
தன்னைப்
பின்தொடர்வதாக
எண்ணுதல். முட்டாள்தனமாக
நடத்தல். வேகமாகக்
குளறி பேசுதல். சற்று
முன் என்ன
நடந்தது
என்ற நினைவு
இல்லாமை. பயங்கரமானக்
கற்பனை எண்ணங்கள். கொடுமையான
பைத்தியம். மயக்கம்
தெளிந்து
பயங்கரமான
வன்முறையில்
ஈடுபடுதல்.
தலை –
எழுந்தால்
தலை சுற்றுதல்,
பின்பக்கமாக
விழுந்து
விடுவது
போலிருத்தல். ஒரு
நொடி உணர்வின்மை,
மந்தமான
பின்பக்கத்
தலைவலி. தலையை
கீழாக வைத்துப்
படுக்க விரும்புதல். மூளையில்
இரத்தத்
தேக்கம். வழுக்கை
(BALDNESS). படை
(TINEA).
கண் - கண்
பாவைகள்
(PUPILS) இரண்டும்
சமமற்று
விரிந்திருத்தல். பார்வை
மங்கல். இமைகள்
வீங்கி கனத்தும்
தினவு எடுத்தல்.
காது –
தலைவலிக்குப்பின்
காதில் நீர்
வடிதல்.
முகம் –
நீலநிறம்
விட்டு விட்டு
சுண்டுதல்,
முட்டாள்தனப்
பார்வை, தாடைகள்
கிட்டிக்
கொள்ளல்.
வாய் –
நாக்கைக்
கடித்தல்,
பிதுங்குதல்,
நடுங்குதல்,
மிகப் பெரிதாக
வீங்கி தடித்துள்ள
உணர்வு. பேசக்
கடினத்தால்
மெதுவாகப்
பேசுதல்.
தொண்டை –
சுட்ட புண்
போல், ஏதோ
பொருள் தங்கியுள்ளது
போல உணர்வு.
இரைப்பை
– உண்ண
ஆவலின்மை. உணவு
வெறுப்பு
உண்ட உணவு
கனமாக இருத்தல். ஏப்பம்,
குமட்டல்,
எதுக்களித்தல். பித்தப்பைப்
பகுதியிலிருந்து
குமட்டல்
வருதல். இரைப்பையில்
குளிர்ந்து
அமுக்கும்
உணர்வு.
வயிறு –
இடுப்பை,
வயிற்றைச்
சுற்றி உப்பி
இருத்தல். காற்றால்
வலி. கல்லீரல்,
மண்ணீரலில்
வீக்கமுள்ள
உணர்ச்சி. மலச்சிக்கல்,
மூலம், குடற்புழுக்களை
(WORMS) அழிக்கும்.
சிறுநீர்
வழி –
சிறுநீர்ப்
அதிக மஞ்சள்
நிறமும்,
குதிரையின்
சிறுநீர்
போன்ற வாடையும்,
அடிக்கடி
சிறுநீர்
கழிக்க வேண்டுமென்ற
உணர்வு.
ஆண் - பாலுணர்வு
எழுச்சி
இல்லாமலேயே
விந்து தானாக
வெளியாதலுடன்
(SPERMATORRHOEA)
ஆண்குறி
தளர்ந்து
பலவீனமாயிருத்தல்.
பெண் - இரத்தசோகை. கர்ப்பப்பையில்
வலி . வலது
கருப்பையில்
ஈட்டி பாய்வது
போன்ற வலி. மாதவிடாய்
நிற்கும்
வயதின் காலத்திற்கு
(MENOPAUSE)
முன்பே நின்று
விடுதல்.
மூச்சுப்
பகுதி –
இருமலுடன்
கல்லீரல்
தொல்லைகள். மார்பில்
கனத்த உணர்வு.
இருதயம்
- இருதயத்தின்
நடுக்கம்
முதுகில்
உணருதல். தோள்பட்டை
(SCAPULA)
பகுதியில்
இருதயத்தின்
துடிப்பைக்
கேட்டல்.
கழுத்து,
முதுகு –
கீழ் இடுப்பில்
வலி.
கை, கால்கள்
– தோள்களில்,
கைகால்களில்
வலி, நடுக்கம். பாரி
வாயு குறிகள். குதிரை
தன் கால்களால்
வயிற்றுப்
பக்கம் உதைத்துக்
கொள்வது
போல் செய்தல். வலிப்பில்
கைகால்கள்
தூக்கிப்
போடுதல்.
தோல் –
காமாலை போல்
மஞ்சள் நிறம்.
தூக்கம்
- குழந்தைகளுக்குத்
தூக்கமின்மை,
பயம், கூச்சம்,
நடுக்கம்.
காய்ச்சல்
– குளிர்,
சூடு, பிறகு
வியர்த்தல்,
எல்லா நிலையிலும்
தாகம். இலையுதிர்க்
காலத்தில்
வரும் காய்ச்சல்கள்.
அளவு –
தாய்க்கரைசல் முதல்
6 சி.
ஒ.கு.ம.
– ஆர்டிம்
வல், சிகூடா,
சினா, ஹைட்ரோ
ஆசிட்.
குறிப்பு-
ம.வே.ப.
மருந்து
வேலை செய்யும்
பகுதிகள்.
ஒ.கு.ம. ஒத்த
குணமுள்ள
மருந்துகள்
ம.செ.கா. மருந்து
செயல்படும்
காலம்
பூ பூர்த்தி
(அ) நிறைவு
செய்யும்
மருந்து
உ உறவு
ப பகை
மு முறிவு
க்யூ தாய்க்
கரைசல்
சி நூறில்
ஒரு பங்கு
1/100
எக்ஸ் பத்தில்
ஒரு பங்கு
1/10.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக