அடோனிஸ் வெர்னாலிஸ் - ADONIS VERNALIS
PHEASANT’S EYE
RANAUNCULACEAE FAMILY
நோய் கூடுதல்< :
குளிர்ச்சி,
படுத்திருத்தல்
நோய் குறைதல்> :
உழைப்பு
மியாசம் : சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ்
ம.வே.ப. : இருதயம், இரைப்பை, தண்டுவடம், சிறுநீரகம்.
பொது – இது ஒரு இருதய மருந்து. கீல்வாதம் இன்புளுயன்சா சிறுநீரக
அழற்சி நோய்களால் இருதய தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, இருதயச்
சுவற்றின் மையத்திலுள்ள திசுக்களில் சிறிதளவு கொழுப்புகள் தங்குவதால் ஏற்பட்ட சீரழிவைத்
தடுத்து,
நாடித் துடிப்பை ஒழுங்குபடுத்தி, இருதயத்தின் சுருங்கி விரியும் சக்தியை அதிகரிக்கச்
செய்து, சிறுநீரை அதிகளவு சுரக்கவும் செய்விக்கிறது. இருதய நீர்க்கோப்புக்குச் சிறந்த மருந்து. குறைந்த சக்தியுடன் பலவீனமான இருதயம். மெதுவான பலமிழந்த நாடி. வயிற்றில் மார்பில்
உடம்பு
முழுவதில் நீர்க்கோப்பு.
மனம் - கவலை, பயம்.
தலை – கனமற்ற உணர்வு, எழுந்தால், தலையை வேகமாகத்
திருப்பினால், கீழே படுக்கும்போது, இதயத் துடிப்புடன், தலைச் சுற்றல் அதிகரித்தல். வலி, பின் தலையிலிருந்து பொறிகளைச்
சுற்றிக் கொண்டு கண்களுக்கு வருதல். தலையில்
இறுகக் கட்டியுள்ள உணர்ச்சி.
கண் - கண் பாவைகள் விரிந்திருத்தல்.
காது – இரைச்சல் தேனீ ரீங்காரமிடுவது போல்,
மணி அடிப்பது போலிருத்தல்.
வாய் -
தாகமின்மை, நாக்கில் புண், அழுக்கடைந்த மஞ்சள் நிறம்.
இரைப்பை – மிக கனமாயிருத்தல். கடித்துத் தின்னும் பசி. இரைப்பையின் மேல்ப் பகுதியில் வலுவற்ற உணர்வுடனுள்ள
தலைச்சுற்றல். வீட்டிற்கு வெளியே இருந்தால்
குறைதல்.
வயிறு – குடல்கள் உடைவது போலிருத்தல். குனிந்தால் அதிகரித்தல்.
சிறுநீர் வழி - சிறுநீர்க் கழிக்க அவசரம். சிறுநீரில் புரதம் எண்ணெய்ச்
சொட்டுகள் போல் மிதத்தல். கொஞ்சமாகக் கழித்தல். சிறுநீரை அதிகம் சுரக்கச் செய்து, செயல்படுகிறது.
மூச்சுப் பகுதி – அடிக்கடி ஆழ்ந்து மூச்சுவிட
விருப்பம். மார்பின்மீது கனமுள்ள உணர்வு. மூச்சிவிட இயலாமையின்போது முதுகைத் தொட்டால் அதிகரித்தல். கூசும்.
வறண்ட இருதயநோய் இருமல்.
இருதயம் - நாட்பட்ட மாதமனி அழற்சி இருதய ஆஸ்துமா
இருதய
தசை அழற்சி கீல் வாதம், சிபிலிஸ் நோயால் இருதய
உட்பகுதியில் உள்ள திறப்பானை மூடியுள்ள சவ்வு பாதிப்பால் அழற்சி ) சிரைகள் பெருத்திருத்தல். இருதயத்தின் இடது மேலறையான
ஆட்ரியத்திலிருந்து ( ) கீழறையான வென்டிரிகிளுக்கு ( ) இடையிலுள்ள திறப்பான் ( ) பழுதடைந்தால்
வென்டிரிகிளுக்குச் சென்ற இரத்தம் மீண்டும் ஆட்ரியத்திற்கே திரும்பி விடுதல் அதே போல்
மாதமனியிலும் ஏற்படுதல். இருதயத்தை மூடியுள்ள
வெளிச் சவ்வு அழற்சி ( ). ஒழுங்கற்ற, வேகமான, நாடித் துடிப்பு, கொழுப்புள்ள இருதயம்,
ஒழுங்கற்ற இருதயத்தின் செயல், இருதயச் சுருக்கம். இருதயத்திற்குச் சற்று மேலே உள்ள பகுதியில் ( )
வலி. படபடப்பு. மூச்சு விட இயலாமை ( ) இருதய
திறப்பான் நோய் ( ).
கழுத்து, முதுகு – தண்டு வடத்தில், கழுத்தில்
பிடிப்பு வலி, களைப்பு உணர்வு.
தோல் – சிறு கொப்பளங்கள்.
தூக்கம் - பயங்கரக் கனவுகள், எண்ணச் சிதறல்களால்
தூக்கமின்மை, அமைதியின்மை.
அளவு – தாய்க் கரைசல் க்யூ.
ஒ.கு.ம. – கன்வலேரியா, கிரடகஸ், டிஜிடாலிஸ்,
ஸ்டிரொபான்தஸ்.
உ – புபோ.
நோயின் கழிவே நோய்க்கு மருந்து நிறைவுப்பகுதி மேஜர் தி.சா.இராஜூ
பதிலளிநீக்குநோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 6
நிறைவுப்பகுதி -7-
ஐயா வணக்கம் மேஜர் தி.சா.இராஜூவின் 8 புத்தகங்கள் என்னிடம் உண்டு.ஆனால் அவற்றில் எங்கும் இவ் விடயம் இல்லை (நோயின் கழிவே நோய்க்கு மருந்து).யெயகோபால் ஐயாவிடமும் இல்லை.தயவு செய்து இதன் விபரங்களை பதிவிடவும்