அக்டியா ஸ்பிகாடா- ACTEA
SPICATA
BANE BERRY
RANUNCULACEA FAMILY
நோய் கூடுதல்< :
காலநிலை
மாற்றம், மிதமான உழைப்பு, குளிர்ச்சி, அசைதல், இரவு, தொடுதல்.
நோய் குறைதல் >:
திறந்த
வெளிக்காற்று.
மியாசம் : சோரா, சைக்கோசிஸ்.
ம.வே.ப. : சிறு மூட்டுகள், மணிக்கட்டு.
பொது – மணிக்கட்டு கீல்வாதம் கிழிக்கும்
உறுத்தல் வலிகள். உடல் முழுவதும் நாடித் துடிப்பு
. இருப்பினும் சிறப்பாகக் கல்லீரல், சிறுநீரகப்
பகுதிகளில் காணப்படுதல். வலிகள் தொடுவதால்,
அசைவதால் அதிகரித்தல். சிறு களைப்பும், மூட்டுக்களில்
வீக்கத்தை உண்டாக்குதல். பாதிக்கப்பட்ட பகுதி
பாரிசவாயு பலவீனத்தைத் தோற்றுவித்தல். திடீர்ப்
பயத்தால், களைப்பால், நோய்க்குறிகள் ஏற்படுதல். குளிர்ந்த வெளியில் சென்றால் சிறுமூச்சு விடுதல். பேசியபின்,
உண்டபின் திடீர்க் களைப்பு. பயத்தால்
பலவீனம். சிறு மூட்டுகள் கீல்வாதத்திற்கு ஏற்றது.
மனம் - எளிதில் திடுக்கிடுதல், பயமுள்ள குணம். குழப்பமடைதல்.
தலை – காபி குடிப்பதால் இரத்தம் தலைக்கு
ஏறுதல். தலை சுற்றல், கிழிக்கும் தலைவலி. திறந்த வெளிக்காற்றால் குறைதல். மூளையில் தெறிக்கும் வலி. தலை உச்சிக்கும் கண் புருவங்களுக்கிடையில் வலி. நெற்றியில் சூடு. இடது பக்க நெற்றியின் மேட்டில் எலும்பு
நசுக்கப்பட்டது போலிருத்தல். தலையில் சூடு,
தினவும் மாறி மாறி ஏற்படுதல்.
கண் - பொருள்கள் நீலநிறமாகத் தெரிதல்.
காது – தும்மலால் அல்லது மூக்கைச் சிந்துவதால்
காதில் இழுக்கும்.
மூக்கு - நுனி சிவந்து, சளி ஒழுகுதல்.
முகம் -
மேல் தாடையினுள்ேள் ஏற்படும் கடுமையான வலியானது பற்களிலிருந்து கன்னத்தின் எலும்புகள்
வழியாகப் பொறிகளுக்கு செல்லுதல். முகத்திலும்
தலையிலும் வியர்த்தல்.
இரைப்பை – மேல் பகுதியில் கிழிக்கும், ஈட்டி
பாய்வது போல வலியுடன் வாந்தி. தசை இழுப்பது
போன்ற வலியால் முச்சு விட இயலாமை. மூச்சுத்
டிதணறல் உணர்வு. உண்டபின் திடீர்க் களைப்பு.
வயிறு – அடிவயிற்றில் அடிக்கும்
வலி, உப்புசம், விட்டு விட்டு உள்ளிழுத்தல்.
மூச்சுப் பகுதி – இரவில் படுக்கும்போது ஒழுங்கற்ற
சிறு மூச்சு மார்பில் அதிக அமுக்கம், குளிர்ந் வெளிக்காற்றால் சிறு மூச்சு விடுதல்.
இருதயம் - இருதய இரத்தக் குழலில் இழுப்பு,
தொடவோ, அசையவோ முடியாது.
கை, கால்கள் – இடுப்பில் கிழிக்கும் வலி. சிறுமூட்டு இணைபுகள், கைகால் விரல்கள், மணிக்கட்டுகள்,
கணுக்கால்களில் கீல்வாத வலிகள். சிறு களைப்ாலும், மூட்டு இணைப்புளில் வீக்கம். மணிக்கட்டு, வீங்கி சிவந்து இருத்தல். அசைத்தால்
வலி அதிகரிக்கும். கைகளில் பாரிசவாயு பலவீனம்.
கைகளி முடமான உணர்வு, முழங்காலில் வலி.
அளவு – 3 சி முதல் 6 சி.
ஒ.கு.ம. – காலோபில், சிமிசிபியு,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக