அகாரிகஸ் மஸ்காரியஸ்
AGARICUS MUSCARIUS
TOAD STOOL FUNGI
நோய் கூடுதல்< :
திறந்தவெளி
குளிர்ந்தக் காற்று, பனியாக உறையுமளவு வீசும் காற்று, இடியுடன் கூடிய புயலுக்கு முன். மனக்களைப்பு, புணர்ச்சிக்குப்பின் களைப்பு, தீய
பழக்கங்கள், மது அருந்துதல், தொடுதல், மாதவிடாயின்போது, திடீர்ப் பயம். காலை சூரியன், தண்டுவடப் பகுதியில் அமுக்கினால்
தானாகச் சிரித்தல், உண்ட பின்பு.
நோய் குறைதல்> :
மெதுவாக
நகர்தல். திறந்த வெளிக்காற்று, வெப்பம், ஒத்தடம் தருதல்.
மியாசம் : சோரா, சிபிலிஸ்.
ம.வே.ப. : தலை பின்புறம், தண்டுவடம், இரத்த ஓட்டம், இருதயம், மார்பு.
பொது – இது ஒரு நஞ்சுள்ளக் காளான். இரத்தத்தை மெல்லியதாக்கும். இந்த நஞ்சு உடனே செயல்படுவதில்லை. பொதுவாக உடலைத் தாக்க பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு
மணி நேரமாகும். மெதுவாகச் செயல்படும். இதற்கு முறிவு மருந்து கிடையாது. தூய சாராயத்தை விட, மூளையில் மயக்கத்தை ஏற்படுத்தித்
தலைச்சுற்றலையும், சன்னியையும் தொடர்ந்து, ஆழ்ந்தத் தூக்கத்துடன் தன் விருப்பம்போல்
செயலாற்ற இயலாமையை ஏற்படுத்தும். ஆரம்பகால
காசநோய். இரத்தச் சோகை. விட்டு விட்டு நரம்புகள் சுண்டுதல். திடீரெனத் தூக்கிப் போடுதல். நடுங்குதல்
தினவெடுத்தல். இதன் குறிப்பிடத்தக்கக்
குறிகள். ஒழுங்கற்ற, கோணங்களுள் நிச்சயமற்ற,
மிகைப்பட நகர்தல். அதிக பாதிப்பால் நோயாளி
தள்ளாடுவார். பொருள்களைக் கீழே போட்டு விடுவார். நடக்கும்போது காலடிகளைத் தொலைவில் தூக்கி வைப்பார். பயந்து அமைதியற்றிருத்தல். கண் இமைகளும், நாக்கும் சிறப்பாகப் பாதித்தல். வலது கை, இடது கால் பாதிப்பு, இசிவு, இழுப்பு, வலிப்பு
யாவும் தூங்கி விட்டால் குறைதல். காக்கை வலிப்பு,
இசிவுக்குப்பின் உடல் பலம் அதிகரிப்பால் கனமுள்ள பொருள்களைத் தூக்குவார். குழந்தைகளைத் திட்டுவதால், தண்டிப்பதால், ஏற்படும்
இசிவுக்கும், புணர்ச்சி, பால் உணர்வை அமுக்கப்பட்டதற்குப் பின்பு ஏற்படும் இசிவுக்கும்
ஏற்றது. மூளைப் பாதிப்பால் தாமதமாகப் பேசும்,
நடக்கும் குழந்தைகள். நோய் வருமுன் கொட்டாவி
விடுதல். திருமணமான பயந்த இளம்பெண்கள். புணர்ச்சிக்குப்
பின் மயக்கமுடைதல், ஓட்டப் பந்தய விளையாட்டு வீரர்களுக்கு மண்ணீரல் குத்தும் வலியைப்
போக்கும். பல பகுதிகளில் பனிக்கட்டியைத் தொட்டது
போலும் அல்லது குளிர்ந்த ஊசிகளால் துளைப்பது போன்ற உணர்வு. சிறைகள் வீங்கி, தோல் சில்லிட்டிருத்தல், தசைகளைத்
தொட்டால் வீக்கமுள்ள உணர்வு. நடந்தால் குறைதல். பருத்த உடல் மூட்டு
இணைப்புகள் நழுவி விட்ட உணர்ச்சி. இலேசான மயிரும்,
தளர்ந்த தசைகளும், தோலும் உடையவர்கள். முதுமையடைந்தவர்களுக்கு
மந்தமான இரத்த ஓட்டம்.
மனம் - மந்தபுத்தி, மனோதிடமில்லாமை, வேலை
செய்ய வெறுப்பு. கேள்விகளுக்கு பதில் சொல்ல
விரும்பாமை, பேச விரும்பாமை, தானாகப் பாடுவார்.
பேசுவார். ஆனால் கேள்விகளுக்கு மட்டும்பதில்
சொல்ல மாட்டார். குழப்பம், திகில், அமைதி,
பிரமையும் சன்னியின்போது படுக்கையை விட்டு வெளியேறுதல். தொடர்ந்து பைத்தியம் பிடித்தவர்போல் உளறிக்கொண்டு,
தன் உணவையும், மருந்துகளையும் பக்கத்திலுள்ள தாதி மீது வீசி எறிதல். நீண்ட மனவெழுச்சியால் அல்லது உணர்ச்சியுடன் விவாதம்
செய்வதால் தலைச்சுற்றல் வருதல். பயமின்மை,
சுயநலவாதி, அலட்சியம், பிடிவாதம், சிடுசிடுப்பு, இணங்காமை, தினசரி செய்ய வேண்டியதைச்
செய்யாமல் மாறுபட்டுச் செய்வது, அவலட்சணமான, கேவலம் உள்ள செயல்கள் செய்தல, அணைத்துக்
கொண்டு கைகளுக்கு முத்தமிடுதல், படிப்பில் மந்தமுள்ள குழந்தைகள்.
இம்மருந்து நிரூபணத்தின்போது மூளையில் நான்கு
நிலைகளைத் தோற்றுவித்தது.
1. முதல்நிலை
- சிறிது ஊக்கம், மகிழ்ச்சி, துணிவு, அதிகம் பேசுதல், உயர்ந்த மனோபாவம்.
2. இரண்டாம்
நிலை – அதிக நிச்சயிக்கப்பட்ட மதிமயக்கம், அதிக மனவெழுச்சி,முரண்பட்ட பேச்சு, மிதமிஞ்சி
நடக்கும் தோரணை, துக்கத்துடன் மாறி மாறி வருதல்.
அறியும் சக்தி இழந்து விடுவதால், உருவத்தின் அளவு தெரியாது. அதனால் சிறிய பொருட்கள் பெரியதாகவும், சிறிய துளை
மிக ஆழமுள்ள பயங்கரமான பள்ளமாகவும், ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஒரு ஏரி போலும், ஒரு சிறிய கல்லைத் தாண்டும் போது பெரிய கல்லென்று
நினைத்து நீண்ட காலடி வைத்தலுமான மனம். அதிக
இசிவின்பின் உடல் பலம் வளர்ந்து கனமான சுமையைத் தூக்கக்கூடும்
3. மூன்றாம்
நிலை- மிக வெகுண்ட அலலது மூர்க்கத்தனமான சன்னியில் வீறிடுதல், உளறுதல், தன்னையே காயப்படுத்திக்
கொள்தல் முதலியன.
4. நான்காம்
நிலை – மனச்சோர்வு, அலட்சியம், சக்தியின்மை, குழப்பம், வேலை செய்ய விரும்பாமை முதலியன.
பெல்லடோனாவில் உள்ளதைப்போல் வேகமாக மூளையில் அடர்த்தியைக் காணமுடியவில்லை. ஆனால் பொதுவான நரம்புக் கிளர்ச்சியைக் காய்ச்சல்,
சன்னி, மது மயக்கம் முதலியனபோல் இதில் காண முடிகிறது.
தலை – தலைவலி மலம் கழித்தபின் குறைதல். தலைவலியானது மூக்கில் இரத்தப்போக்குடனும், கெட்டியான
சளியுடனும் இருத்தல். சூரிய ஒளியால், நடந்தால்
தலைச்சுற்றல். பின்பக்கத் தலை கனமாக இருப்பது
போன்ற உணர்வால் பின்பக்கமே சாய்தல். சாய்வு
மேஜையில் உட்கார்ந்து நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும் மந்தமான தலைவலியால் தலையை
முன்னும், பின்னும் ஆட்டுதல், அசைத்துக் கொண்டேயிருத்தல். வெப்பமான துணியால் தலையை மூடிக்கொள்ள விரும்புதல். ஒரு ஆணியைத்
தலையின் பக்கவாட்டில் செலுத்துவதுபோல் வல இருத்தல். பனிக்கட்டி போல், தலையில் குளிர்ச்சியுடன் நரம்பு
வலி. குளிர்ந்த ஊசிகள் உள்ளது போல் உணர்ச்சி. மது அருந்துதல், அதிக உடலுறவு, குறைபாடுள்ள இரத்த
ஓட்டம் ஆகியவைகளினால் ஏற்படும் தலைவலி. வலியின்போது
காய்ச்சலில் நோயாளிக்கு சன்னி வருதல். அதோடு
விழித்துள்ளபோதே தூக்கிப் போடுதல், இழுத்தல்
கூட இருக்கும்.
கண் - கண்கோளம் ஊசலாடுதல், இரட்டைப் பார்வை,
மங்கல், எழுத்து நகர்வது, நீந்துவதுபோல் இருப்பதால்
படிக்க இயலாமை. இமைகள் துடித்தல். இமைகளின் ஓரம் சிவந்து, தினவு, எரிச்சலுடன் ஒட்டிக்
கொள்ளுதல், கண்களுக்கு அதிக வேலைத் தருவதால் பார்வைக் குறைதல். கண் ஓரத்தில்
பிசின் இருத்தல், இரண்டு இமைகளுக்கிடையே உள்ள
இடம் குறுகுதல், ஓரப்பார்வை, கிட்டப்பார்வை.
காது – காதுகளின் தசைகள் சுண்டுதல். ஒலிகள் கேட்டல். காதினுள் சிவந்தும், எரிச்சல் வலியுடன் தினவு எடுத்தல்.
மூக்கு – சளி ஒழுகல் இல்லாமல் அடிக்கடி தும்முதல். நீர் ஒழுகல்.
இருமலுக்குப் பின் தும்முதல், உள்ளேயும், வெளியேயும் தினவெடுத்தல். வயதானவர்களின் மூக்கில் இரத்த ஒழுகல். மூக்கிலும் வாயிலும் புண்ணுள்ள உணர்வு. நாற்றமுள்ள கருஞ்சிவப்பு இரத்தம் வருதல். குனிந்தால் மூக்கடைப்பு ஏற்படுதல். பனிப்புண்ணால் ஏற்பட்டது போல் சிவந்த மூக்கு.
முகம் - முகத் தசைகளில் விறைப்பு. இழுப்பு, தினவு, எரிச்சல். கன்னங்களில் கீறும், கிழிக்கும் வலிகள். நரம்பு வலியில் குளிர்ந்த ஊசிகள் நரம்புகளினூடே
ஓடுவது போன்ற உணர்ச்சி. முகம் நீல நிறத்துடன்
உப்பி இருத்தல். முகபாவம் மூடனாகத் தோற்றமளித்தல். மேலுதட்டில் கொப்புளங்கள், வெடிப்புகள்.
வாய் -
வாய் மூலைத் தொங்குதல். பாரிச வாயுவால்
உமிழ்நீர் ஒழுகுதல். வாய்க் கூரையில் புண். எந்நேரமும் தாகமெடுத்தல். நாக்கு வெள்ளைபடிதல், நடுங்குதல், வாயில் நுரை. கசப்பான உமிழ்நீர், இனிப்பு, கசப்புச் சுவை. தெளிவற்ற, உளறல் பேச்சு, ஈறுகள் வீங்கி வலியும்,
இரத்தமும் இருத்தல்.
தொண்டை – சுருங்கியிருக்கும் உணர்வு. சிறிய கெட்டியான உருண்டைச்சளி வெளியாகுதல்.
தொண்டை வறட்சி விழுங்க இயலாமை. ஒரு
அடி கூட பாட முடியாமை.
இரைப்பை – எரிச்சலுடன் தாகம். மிகப் பசியிருக்கும். விழுங்க இயலாமை. விக்கலும், ஏப்பமும் விட்டு விட்டு வருதல். இயற்கைக்கு மாறுபட்ட பசி. உணவு உண்டு மூன்று மணி நேரத்திற்குப்பின் இரைப்பையில்
எரிச்சல். கல்லீரல் பகுதியில் கூர்மையான வலியுடன் கோளாறுகள் ஏற்படல். இரைப்பையின் மேல் பகுதியில் ஏதோ கட்டி உள்ளது போல்
இருத்தல். ரொட்டி, கறி வெறுப்பு, வெண்ணெய்,
பீர் விருப்பு.
வயிறு – இடதுபுற விலா எலும்புகளுக்குக் கீழ்
திடீரெனப் பாயும் வலி. அதிக நாற்றமுள்ள வயிற்றுப்போக்கு. நாற்றமுள்ள மலம். வயிற்றிலிருந்து அதிகளவு காற்று
ஆசனவாய் வழியாக வெளியேறும்போது நாற்றமிருப்பதில்லை. சூடானக் காற்று வெளியாதல். கல்லீரல், மண்ணீரல், வயிறுகளில் பாயும் வலி. நெளிதல், கடகடவென ஓசையும், புளிப்பேறிய குடல்கள்.
சிறுநீர் வழி – புறவழியில் பாயும் வலி. திடீரெனக் கடுமையுடன் அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்,
அவசரப்படுதல், குளிர்ந்த சிறுநீர், பிசினாக ஒட்டும் தன்மையுயை சளி வருதல். சிறுநீர் மெதுவாக அல்லது சொட்டாக வருவதோடு கழிக்க
அழுத்துதல்.
ஆண் - சூடான விந்து. பாலுணர்வு விருப்பு
அதிகமாதல். உடலுறவின்போது இதயத்துடிப்பு. உடலுறவுக்குப்பின் மிகப் பலவீனம். அதிகம் வியர்த்தல், தோலில் எரிச்சலும், தினவும்,
விறைப்பும், விலா எலும்புகளுக்குக் கீழ் அழுத்துதலும் இருத்தல். அகாலத்தில் விந்து வெளியாதல். விரைகள் வலியுடன் பின்பக்கம் இழுத்தல். பாலுணர்வுத் தீய பழக்கங்களால் ஏற்படும் பின் விளைவுகள்.
பெண் - அதிகத் தினவுடன் வெள்ளைப்படுதல். உடலுறவு, மகப்பேற்றுக்குப்பின்னும் ஏற்படும் கோளாறுகள். விட்டு விட்டு வரும் மாதவிடாய் வலி. முலைக்காம்பில் தினவும், எரிச்சலும், பாலுணர்வு அதிகரித்தல். மாதவிடாய் நின்றபின் உறுப்புகள் கீழே இறங்குவதும்,
அதனால் அதிக வலி. பால் அமுக்கப்பட்டதால், மூளை,
இரைப்பை, குடல்களில் நோய்கள் ஏற்படுதல். பிறப்பு
உறுப்பிலும், முதுகிலும், தினவும் கிழிக்கும், அழுத்தும் வலிகள். மாதவிடாய் மிக அதிகரித்தல். வெள்ளைப்பாடு கருஞ்சிவப்பு இரத்தத்துடன், புண் ஏற்படச்
செய்யும் தன்மையில் நோயாளியால் நடக்க இயலாமை.
மூச்சுப் பகுதி – ஒரு தும்மலுக்குப்பின்
நின்றுவிடும் இருமல். மூச்சடைத்தல். தண்டுவடத்திலிருந்து
இருமல் வருவதுபோல் உணர்ச்சி. அவ்வப்போது இருமல்
தோன்றி பிறகு தும்மல் வருதல். கடுமையாகத் தாக்கும்
இருமலைத் தன் மனவலிமையால் அமுக்குவதால், உண்டபின் அதிகரித்தல். இருமல் முடியும்போது தலைவலி. இரவில் தூங்கச் சென்றபின் தோன்றும் இருமலில் கோழை
சிறு உருண்டைகளாக வெளி வருதல். மார்பு குறுகிவிட்டதாகத
தெரிதல். சீழ்ப்போல் சளி.
இருதயம் - புகையிலையைப் பயன்படுத்திய பின்பு
ஒழுங்கற்ற நடுக்கமுள்ள இதயப் படபடப்பு. உடலுறவின்போது
படபடப்பு. நெஞ்சு வலி. படபடப்புடன் முகம் சிவந்து இருத்தல். நாடி விட்டுவிட்டு, ஓழுங்கற்று ஓடுதல். அழுத்தும், எரியும், அடிப்பதுமான வலி இருதயத்திலிருந்து
இடது தோள்பட்டைக்குச் செல்லுதல். திடீரென ஏற்படும்
ஒலி, இருமல், ஏப்பம் ஆகியகைளால் இருதயப் பகுதியில்
அதிர்ச்சி காணல்.
கழுத்து, முதுகு – அதிக உடலுறவால் தண்டுவடத்தில்
உறுத்தல். முதுகெலும்பு ஒன்றில் சூடு. இடுப்பும், அதன் கீழ்ப் பகுதிகளில் பகலில், உழைப்பதால்,
உட்காருவதால் புண்ணுள்ள வலி அதிகரித்தல். ஒவ்வொரு
அசைவின்போதும், தொட்டால் உணர்வுடன் இருத்தல் அதிகரித்தல். இடுப்பு வலி.
திறந்தவெளி காற்றால் அதிகரித்தல். முதுகில்
தசைப்பிடிப்பு, குனிந்தால் உடைந்து விடுவதுபோல்
உணர்தல். கழுத்துத் தசைகள் சுண்டுதல். தண்டுவடத்தின் மீது ஊர்வது போலிருத்தல்.
கை, கால்கள் – இடுப்பில் பலவீனம். இடுப்புக்கு மேல் வலி. படுத்தால் கை, கால்களில் விறைப்பு. கால்களைக் குறுக்கே போட்டால் மரத்துப் போதல். கெண்டைக் கால்களில் இறுக்கும், கிழிக்கும் வலி. வலது கையால் எழுதும்போது நடுங்குதல். அதிகமாய் எழுதியதால் பாரிசவாயு தாக்கப்பட்டதாக உணர்வு. உள்ளங்காலில் இழுப்பு. கால் பெரிய எலும்பில் வலி. புட்டங்களில் குளிர். கால்கள் கனம்போல் உணர்ச்சி. தன் கைகால்கள் தன்னுடைது அல்ல என்று எண்ணுதல். இடது கையில் பாரிசவாயுவுடன் வலியைத் தொடர்ந்து இதயத்துடிப்பு. கால் பெருவிரல்ாகளில் தினவும், பாதங்கள் பனியால்
உறைந்து விட்டது போல் இருத்தல். நரம்பு வலியால்
தள்ளாடி நடத்தல். பொருள்களை விரல்களால் பிடிக்கும்போது
அை தானாக விலகுதல். நிலையற்ற நடை. கால்களில் பாரிச வாயுடன்கைகளிலும் அமைதியற்றும்
இருத்தல். நீண்ட எலும்புளில் இடம்விட்டு நகர்ந்தபின் வீக்கம் போலிருத்தல்.
தோல் – தினவு, எரிச்சல், சிவந்து, வீங்கி,
உறைபனியால் தாக்கப்பட்ட புண்போல் இருத்தல்.
சொறிந்தால் இடம் மாறுதல், எரிச்சலும், தினவும் பொறுக்க டியாது. வீங்கிய சிரைகளுடன் குறிர்ந்தத் தோல்கள். மிக அதிகக் குளிர்ச்சியால் கை, கால்களில் ஏற்படும்
சிரங்கு குளிர்ச்சியாக
உள்ளபோது தோலில் வலிகள். பருக்கள், கடினமாக,
தெள்ளுப்பூச்சிக்கடி போல் இருக்கும். சிவந்த,
வட்டமான, விளிம்புள்ள, சீழ்க்கோர்த்தப் பரு தோல் மீது தடித்துக் காணப்படுதல். சிறிது அடிபட்டாலும் இரத்தம் கட்டிக் கொள்ளுதல்.
தூக்கம் - அடிக்கடி கொட்டாவி விடுவதால் திடீரென
நோய்த் தாக்குதல். கொட்டாவியைத் தொடர்ந்து
தானாகச் சிரித்தல். பகலில் தூக்கக் கலக்கத்துடன்
இருத்தல. வழக்கத்துக்கு மாறான தூக்கம். தூக்கம் வரும்போது வரும் இழுப்பால் திடுக்கிட்டு
அடிக்கடி விழித்துக் கொள்ளுதல். பகல் விருந்துக்குப்பின்
தூக்கம், ஆனால் கால்களில் வலியுடன் சக்தியற்றிருப்பதால் தூங்க இயலாமை.
தெளிவான, குழப்பமான, பயங்ரமான, வெறுப்பான, கெட்டக் கனவுகளால் தூக்கம் கெடுதல். மாலையில், இரவில், நடுநிசிக்குப்பின், படுக்கையில்,
புணர்ச்சிக்குப்பின், சிறு உழைப்பால் வியர்த்தல்.
காய்ச்சல் – குளிர்ந்த காற்று மிகவும் பாதித்தல். மாலையில் கடுமையான சூட்டுடன் தாக்குதல். அதிக வியர்வையும், எரிச்சசுலும் இருத்தல்.
அளவு – 3சி முதல் 200 சி.
ஒ.கு.ம. – அக்டி ரசி, பொவிஸ்டா, பெல், கன்னபிஸ்
இன், கல்.கார்ப், சிகூடா, ஓபியம், பல்ஸ், ரஸ்டாக்ஸ், நக்ஸ்.வா. ஸ்டிரமோனியம்.
பூ – கல்கேரியா கார்ப்.
மு -
அடுப்புக்கரி,. காபி, வைன், பிராந்தி, காம்பர், ‘கொழுப்பு’.
உ – பிசியாஸ்டிக்மின், டியூபர்.
ம.செ.கா. – 40 நாள்.
முக்கியக் குறிப்புகள்
- 1. பேசத் தாமதம்-நேட்ரம் மூர், நடக்கத் தாமதம்-கல்கேரியா
கார்ப். பேசவும், நடக்கவும் தாமதம்-அகாரிகஸ்.
2. நெருப்பின் அருகில் உட்கார விரும்புதல்-அகாரிகஸ், விலகி இருக்க விரும்புதல்-அபிஸ்மெல். 3. மலம் கழித்தால் தலைவலி குறைதல்-அகாரிகஸ். சிறுநீர்
கழித்தால் தலைவலி குறைதல்-ஜெல்சிமியம், உரையாடுவதால் தலைவலி குறைதல்-டல்கேமரா. 4. பனிக்கட்டி
குளிர்ச்சியைத் தலையில் உணர்தல்-வெராட்ரம் ஆல்பம். பனிக்கட்டி போல் குளிர்ந்த ஊசிகள்
நரம்புகளில் ஊடுருவும் உணர்ச்சி-அகாரிகஸ்.
சூடுள்ள ஊசிகள் ஊடுருவும் உணர்ச்சி–ஆர்சனிக்ம் ஆல்பம். 5. வலது கை,
இடது கால் பாதிப்பு–அகாரிகஸ். இடது கை, வலது கால் பாதிப்பு-டாரண்டுலா ஹிஸ்பானிகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக