அகாவ் அமெரிக்கானா
AGAVE AMERICANA
CENTURY PLANT
AMARYLLIDACETAE
மியாசம் : சோரா. சைக்கோசிஸ்
ம.வே.ப. : இரைப்பை
பொது – களைப்பு, மயிர்க்கால்களில் குறைந்த
அளவு இரத்தப்போக்கு. தண்ணீரைக் கண்டால் பயம்.
உணவில் வைட்டமின் ‘சி ’ குறைவால் ஏற்படும் நோய்கள்.
மனம் - சண்டையிடுதல், திடீர்ப் பயம்.
முகம் – வெளுத்திருத்தல்.
வாய் - ஈறுகள் வீங்கி இரத்தம் வருதல்.
இரைப்பை – பசிக் குறைவு, இரைப்பையில் வலி
வயிறு – மலச்சிக்கல்.
சிறுநீர் வழி – மெதுவாக வலியுடன் சிறுநீர்க்
கழித்தல்
ஆண் – வெட்டை நோயில் ஆண் உறுப்பு
வலியுடன் விறைத்தல்.
கை, கால்கள் – கால்களில் கருஞ்சிவப்பு, நீலநிறத்தில்
கொப்புளங்கள் வீங்கி வலியுடன் கனமாக இருத்தல்.
அளவு – தாய்க் கரைசல் க்யூ.
ஒ.கு.ம. – லைசின், ஆலோ, லாக்கசிஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக