வெள்ளி, 16 ஜூன், 2017

எயிட்ஸ்க்கு மருந்து உண்டா? -மேஜர் தி.சா.இராஜூ


திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் பாதையில் அத்யேந்தல்  என்ற சிற்றூர் உள்ளது.  விக்டர் ஹ்யூகோ என்ற ஜெர்மானிய அன்பர் அதைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.  அங்கு பல சிறந்த நலப்பணிகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பிரிவு மருத்துவம்.  அதன் தலைவர் டாக்டர்.ஆண்ட்ரியாஸ் எம்.டி.

ரமண மகரிஷிக்குப் பிறகு அவருடைய வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே டாக்டர்.விக்டர் ஹ்யூகோ சில நன்பர்களுடன் இங்கு வருகை புரிந்தார்.  தொடர்ந்து இங்கேயே தங்கி தொண்டு புரிந்தார்.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரியும் பலர் ஐரோப்பிய நாட்டில் உள்ளனர்.  ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கிறிஸ்துவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு.  அது போற்றப்பட வேண்டியது.

டாக்டர். ஆண்ட்ரியாஸை எப்படியும் சந்தித்துவிட வேண்டுமென்று அவருடைய மருத்துவ முகாமுக்குச் சென்றேன்.  வெளியே பலதரப்பட்ட மக்கள் வரிசையில் நின்றனர்.  பல வயனர், பல இனத்தவர் எல்லோரிடத்திலும் ஒரு நம்பிக்கை.  அந்த வெள்ளைக்காரர் கைபட்டால் எல்லா நோய்களும் குணமாகிவிடுகின்றன என்று ஒரு மூதாட்டி தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 264 நோயாளிகளை மட்டுமே அவரால் கவனிக்க முடிகிறது.  எஞ்சியவர்கள் அந்த ஊரிலேயே தங்கி மறுநாள் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.

எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் மக்களின் நம்பிக்கை என்பது வலுவான அடிப்படை. அதை இந்த மருத்துவர் பெற்றிருக்கிறார்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் கூறினார்.

  ‘ஹோமியோபதி மருத்துவம் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறீர்கள்.  எனக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு’  அவர் மன்னிப்பை வேண்டும் குரலில் பேசினார்.

‘என்னுடைய நிலையும் அதுவேதான்.  நாம் நடந்து கொண்டே பேசுவோம்.’
அவர் பல இடங்களைச் சுற்றிக் காட்டினார்.  மருத்துவச் செடிகளின் பராமரிப்பு குறித்து பேசினார்.  ஆயுர்வேதம், அலோபதி, அக்யூபங்சர், ஹோமியோபதி பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றார்.  அவற்றின் தலைமைப் பொறுப்பேற்றிருப்பவர்களை அறிமுகப்படுத்தினார்.
Image result for AIDS
டாக்டரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன்.  
‘எய்ட்ஸ் என்று ஒரு நோய் இருப்பதாக விளம்பரம் செய்கிறார்களே, அதை நீங்கள் நம்புகிறீர்களா?’

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்:‘ஆய்வுக் களத்தின் மூலம் ஒரு செய்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதை எப்படி மறுக்க முடியும்?"

  எய்ட்ஸ் என்பது என்ன?’ இது என் வினா.

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: ‘வெளியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்புத் திறனை அழிக்கும் தொகுப்பு என்பதே பொருள்.  அது ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது.  அதற்கு மருந்தே கிடையாது."

  நீங்கள் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எழுதிய நூலைப் படித்ததுண்டா?’  நான் வினவினேன்.
James Tyler Kent (1849-1916)
டாக்டர்.ஆண்ட்ரியாஸ்:‘நான் தேர்வு பெற்றிருப்பது அலோபதித் துறையில்தான் என்றாலும் நான் ஹோமியோபதி முறையை நம்புகிறேன்’

 உங்களிடம் கெண்ட் எழுதிய நூல் உள்ளதா? (ஹோமியோபதி தத்துவ விளக்கப் பேருரைகள்) டாக்டர் அதை எடுத்து வந்தார்.

‘அதில் 51-ஆம் பக்கத்தை படியுங்கள்’-தணிந்த குரலில் அவர் அதைப் படித்தார்.

அதன் சாரம் இதுதான்-
‘கிருமிகளினால் நோய் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.  ஆனால் கிருமிகள் துப்புரவுப் பணியைச் செய்வதற்கே அங்கு வருகின்றன.  ஆகவே கிருமிகளினால் நோய் ஏற்படுகிறது என்ற கொள்கை தவறானது.  உலகத்தில் மனித இனத்தை அழிக்க எந்தப் படைப்பும் சிருஷ்டிக்கப்படுவதில்லை’.

உடனடியாக ஆண்ட்ரியாஸால் பதில் கூற முடியவில்லை.  மென்று விழுங்கினார்.

"கிருமிகளினால் நோய் வருவதாக வைத்துக் கொண்டாலும் அதே கிருமிகளை உடலில் செலுத்தி எயிட்ஸ் நோயைத் தவிர்க்கலாமே?   ஜென்னிங்ஸ் அதைத்தானே செய்தார்.  அதை ஹோமியோபதி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.தடுப்பூசி அறிவியல் வழி வந்த செயல் அல்ல,   எம் ஆசான் அம்மைப்பாலை உடலில் ஏற்றாதீர்கள் என்று படையினர் மருத்துவமனைகளுக்கே சென்று பிரசாரம் செய்வார். "

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’

‘எயிட்ஸ் என்பது வெறும் புரட்டு.   அப்படி ஒரு நோய் இல்லை என்பதே என் அடிப்படைக் கருத்து.  இதுவரை எத்தனை எய்ட்ஸ் நோயாளிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்?’

 டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: எவருமில்லை.  இனி வருவார்களானால் அவர்களை உங்களிடம் அனுப்பி விடுகிறேன்.  அத்தகையவர்களை நீங்கள் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன்.  ஏனெனில் மருத்துவர் கெண்ட் ஒரு மாமேதை.  அவர் சொல்வது தவறாக இராது என்பது உறுதி.
பின்பு அவரிடம் இருந்து விடைபெற்று வந்தேன்.

இந்த விவரத்தை அன்பர் ராபி அவர்களிடம் தெரிவித்தேன்.  அவர் ஹோமியோபதி தத்துவத்தின் மெய்த் தொண்டர்.  அதன் தத்துவங்களை எளியமுறையில் விளக்குவார்.  பெரும் செயல்வீரரும் கூட.
‘வெள்ளை, வெட்டை, குட்டம் என்று நீங்கள் அடிக்கடி வலியுறுத்துவீர்களே, அது ஆயுர்வேத முறையானாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.  ‘அவர் என்னைப் பாராட்டி மகிழ்ந்தார்’.

‘மருத்துவ அறிஞர்கள் ஏன் இது பற்றிச் சிந்திப்பதில்லை? எழுதுவதில்லை?’
‘சுவடு விழுந்த பாதையிலேயே நாம் சென்று கொண்டிருக்கிறோம்.  நீங்கள் நிறையக் கட்டுரை எழுதுகிறீர்கள்.  பலர் படிக்கும் ஏடுகளுக்கு நீங்கள் ஏன் இந்தச் செய்தியைத் தெரிவிக்கக்கூடாது?’ அவர் கேட்டார்.

‘என்னுடைய முயற்சியை அவர்கள் ஆதரிப்பதில்லை’

‘ஏன்?’

‘அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் வரும் வருமானம் நின்றுவிடுமே’

நண்பர் நகைத்தார்.  நாம் சிந்திப்பதில்லை என்பது மட்டுமன்று.  நமக்கு
மக்கள் நலன் முக்கியமானதன்று.  பொருள் வேண்டும்.  அதை எந்த வகையிலும் பெறலாம்.  பொது நலன் குப்பையில் போகட்டும்.

எய்ட்ஸ் என்று விளம்பர செய்யப்படுவது ஒரு பால்வினை நோய்.  இது ஓரினச் சேர்க்கையால் ஏற்படாது.  பால்வினை நோய்களுக்கு நமது ஹோமியோபதி  அம்புறாத்தூயியில் பல அருமருந்துகள் உள. அவற்றைக் கொண்டு இதனை படிப்படியாக நலப்படுத்திவிடலாம்.


http://www.business-standard.com/article/current-affairs/a-homeopathic-experiment-gives-hope-for-treatment-of-aids-115040200877_1.html

https://www.youtube.com/watch?v=TGYj-xbD-_s

நாம் சிந்திப்போம், செயல்படுவோம், உண்மையை மட்டும் உரக்கக் கூறுவோம்.
******************
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து

குறிப்பு:

2015இல் மும்பையில் நடந்த The Global Homeopathy Foundation (GHF) ஒருங்கிணைத்த  the World Homoeopathy Summit கருத்தரங்கில் எயிட்ஸ் ஹோமியோபதியில் நலமாக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஹோமியோபதியின் அறிவியல்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
http://globalhomeopathyfoundation.com/whs-brochure/World_Homeopathy_Summit-2015.pdf

கருத்தரங்க அறிக்கைகள்↓ 
http://www.ijrh.org/article.asp?issn=0974-7168;year=2015;volume=9;issue=2;spage=109;epage=113;aulast=Das;type=3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக