செவ்வாய், 24 அக்டோபர், 2017

நத்தைகளை ஒழிக்க என்ன வழி?

நத்தைகள் பெருக்கம் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த நிகழ்வுகளை
நாம் வேறு கண்ணோட்டத்தில் அணுகவேண்டி உள்ளது.
ஏன் இந்த நத்தைகள் இவ்வாறு பெருகுகிறது?
நத்தைகள் பெருக்கத்திற்கான காரணம் என்ன?
அது இயற்கைக்கு எதிரான நமது விவசாய முறை தான்..

இரசாயண உரம், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை பயன்படுத்தி நிலத்தின் தன்மையை பாழ்படுத்திவிட்டோம்.நிலத்தின் இந்த பாழ்பட்ட தன்மை இந்த வகை நத்தைகள் வாழ ஏற்றதாக இருக்கிறது. இதுதான் காரணம்.

சரி இப்போது என்ன செய்வது?
மீண்டும் அதே தவறை நத்தைகளை களைவதிலும் செய்வதா?

இல்லை.நாம் விழிப்புணர்வுடன் இயற்கை சார் விவசாயத்திற்கு மாறவேண்டியுள்ளது.

நத்தைகளை ஒடுக்க தீர்வு:
நத்தைகளை அகற்ற எளிதான தீர்வு அக்ரோ ஹோமியோபதியில் இருக்கிறது.
Helix tosta 6X என்ற இந்த மருந்தை கொண்டு மிக விரைவாக நத்தைகளை ஒடுக்கமுடியும்,(பயன்படுத்தும் முறையை அக்ரோஹோமியோபதி வல்லுநரிடம் கேட்டுக்கொள்ளவும்) .

இதற்கு முன்னே இம்மாதிரி நத்தைகள் பெருக்கம் ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் மாகாணத்தில் பெருமளவில் இருந்தபோது இந்த அக்ரோ ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தி அய்யா வைகுந்தநாத் கவிராஜ் அவர்கள் நத்தைகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்.
வெற்றிகரமாக மட்டுமில்லாமல் எளிதாகவும் நத்தையை கட்டுப்படுத்தியதால் ஆஸ்திரேலியா பூச்சிமருந்து வியாபாரமே பாதிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சோகமான நிகழ்வு என்னவெனில் இவரது இந்த அக்ரோ ஹோமியோபதி புரட்சியால் நஷ்டமடைந்த பூச்சிமருந்து பெருமுதலாளிகள் ஆஸ்திரேலியா அரசை கைக்குள் போட்டுக்கொண்டு கவிராஜ் அவர்களை நாட்டை விட்டே வெளியேற வைத்துவிட்டனர்.


இணைப்பு:
தினமலர் மற்றும் தமிழ் இந்து செய்திகள்

நத்தையால் திணறுது திண்டுக்கல்
http://new.dinamalar.com/district_detail.asp?id=1414317
நகர்த்த முடியாக நத்தை முகாம்
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19767616.ece
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://tamil.thehindu.com/…/reporter-pa…/article19910712.ece

திங்கள், 23 அக்டோபர், 2017

சாதாரண சமையல் உப்பு மாபெரும் மருந்து மேஜர் தி சா இராஜூ


நேட்ரம் ம்யூரியாடிகம்
(NATRUM MURIATICUM) 
சாதாரணச் சமையல் உப்பு
*****
பலமுனை நிவாரணி
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லா மருந்துகளுமே பல முகங்கள் கொண்டவையே.  எனினும் மிக அதிகமான நிவாரண முனைகள் கொண்ட ஒரு மாபெரும் மருந்தை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.  இது குறித்து என் முந்தைய நூற்களில் நிறையவே எழுதியிருக்கிறேன்.  என்றாலும், இன்னும் எழுதுவதற்கு அதிகம் விவரங்கள் உள என்பதே உண்மை.

ஒவ்வொரு பொருளிலும் உள்ள மருத்துவ ஆற்றலை வெளிக் கொணர்ந்து படம் பிடித்துக் காட்டியவர் மேதை ஹானிமன்.  ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில் இத்தனை சக்தி உறைந்திருக்கிறது என்ற உண்மையை விவரித்ததற்காக, மருத்துவ உலகமே,  ஏன் மக்கள் சமுதாயமே, அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.  இதன் மருத்துவக் குறிகள் மொத்தம் 2900.  எண்ண எண்ண வியப்பைத் தூண்டும் நிவாரணி இது.

உப்பு உலகெங்கும் நிறைந்துள்ளது.  இந்தப் புவியின் பரப்பில் முக்கால் பங்கு கடல் நீர், உப்புக் கரைசல், உலகில் உலாவும் ஜீவராசிகள் அனைத்திலும் உதிரம் உள்ளது.  அது உப்பு நீர்.

வெளிப்பாடு

நமது கழிவு-சிறுநீரும், கண்ணீரும், வியர்வையும் கூட உப்பேதான்.  இவை கூட மருந்தாக அமைய முடியும் என்பதே ஒரு பெரு வியப்பு.  ஒரு வேளை நமது உடலின் கழிவுப் பொருளே உப்பாக இருப்பதனால்தான் இது மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறதோ என்று எண்ணும்படி இருக்கிறது.

மியாஸம்

மூன்று வகைத் தோஷங்களைப் பற்றித் தமது முதல் குறளிலேயே குறிப்பிட்ட பெருந்தகை, ‘மிகினும், குறையினும் துயர் செய்யும்’ என்று கூறுகிறார்.  உப்பைக் குறித்தும் அவ்வாறே சொல்லலாம்.
உலகம் முழுவதும் கடல் பரவியுள்ளது.  பல வேறு பிரதேசங்களில் உள்ள தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு சூழ்ந்துள்ள நீரிலுள்ள உப்பின் அளவு வேறுபடுகிறது.  எந்த இடங்களில் குறைந்த விகிதம் உப்பு உள்ளதோ அங்கு உப்பு அதிகமாக உள்ள நீர் விரைகிறது.  இதையே கடலின் இழுப்புச் சக்தி (OCEAN CURRENTS) என்று கூறுகிறார்கள்.  இது மிகப் பெரும் வலிமை வாய்ந்தது.  இதைப் போன்ற உள்ளியக்கம் மனித உடலிலும் ஏற்படுகிறது.  உடலிலுள்ள உந்து சக்திக்கும் ஆதாரமே இந்த உப்பின் தடிமத்தைப் பொருத்ததாகும்.

ஷுஸ்லரின் தசை மருந்துகளில் முக்கியானது இந்த உப்பு.  தசம வீரியத்திலிருந்து ஆயிரம் பத்தாயிரம் வரை வெகு சிறப்பாகப் பணிபுரியும் மருந்து இது.  (என் ஆசான் இரு நூறாவது வீரியத்திற்கு அதிகமாகப் பயன்படுத்த மாட்டார்  நானும் அவரையே பின்பற்றுகிறேன்.)  மூன்று அல்லது ஆறாவது தசம வீரியங்களிலேயே இந்த மருந்து பல அற்புதங்களைச் செய்வதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  நம்ப இயலாத அளவுக்கு இது நிவாரணம் தருகிறது.
Image result for உப்பு சத்தியாகிரகம்
`காற்றும் நீரும் எப்படி எல்லா மக்களுக்கும் பொதுவானதோ அதேபோல் கடல் நீரும் அமைய வேண்டும்.  அதிலிருந்து காய்ச்சும் உப்புக்கு நான் வரி கொடுக்க மாட்டேன்’ என்று சூளுரைத்து வலிமை மிக்க பிரிட்டிஷ் ஆட்சியையே உலுக்கினார் காந்தி அடிகள்.  உப்பிற்கான அறப் போராட்டம் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது.  அந்தப் பெருமகன் இறுதிவரை உப்பில்லாமலேயே வாழ்ந்தார்.  அவரது துணைவியாரும் அவ்வாறே.

நா காக்க

உப்பில்லாமல் வாழ்பவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் எத்தகைய நோய்க்கும் ஆளாகவில்லை.  புலனடக்கத்திற்கு உப்பு உறு துணை.  மனித உடலை வாழ்விப்பதும் உப்பு.  அதை வீழ்ச்சியின் திசையில் இட்டேகுவதும் உப்புத்தான்.  எப்படி உப்பின்றி வாழ்வது கடினமோ, அதேபோல் அமித உப்புள்ள உணவையும் உண்பது கடினம்.  புலவி நுணுக்கத்தில் கூட ஊடலின் அளவு  உப்பைப் போல அமைய வேண்டும்  என்று வள்ளுவம் பேசும்.
உணவுப் பண்டங்கள் கெடாமல் பாதுகாப்பது உப்பு.  இறைச்சி, மீன், சில காய்வகைகள் ஆகியவற்றை உப்பு சீர் கெடாமல் வைத்திருக்கும்.  ஊறுகாயே உப்புக் கரைசல்தானோ?  நமது வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் பங்கு பெறுவது உப்பு.
நல்ல பண்புக்கும், ஒழுக்கத்திற்கும் உப்பு ஒரு மறு பெயர்.  உருது மொழியில் நன்றி கெட்டவனை `நமக் ஹாரம்’ என்று அழைப்பார்கள்.  

நன்றி கெட்ட விதுரா - சிறிதும்
நாணமற்ற விதுரா -
தின்ற உப்பினுக்கே நாசம்
தேடுகின்ற விதுரா. . . 
என்று ஹஸ்தினாபுரத்து மன்னன் துரியோதனன் தன் சிற்றப்பனைத் திட்டுகிறான்.
Image result for SALT
சாலரி (SALARY) ஊதியம் என்ற சொல்லே கிரேக்க மொழியிலிருந்து வந்தது.  அதன் பிறப்பு `ஸால்ட்’ (உப்பு) என்பது தான்.  ஆதி நாட்களில் உப்பையே ஊதியமாகக் கொடுத்து வந்தனர்.

வடநாட்டில், படைவீரர்கள்  வியாசரின் கீதையை ஏந்திப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.  பதவியேற்பின்போது, தென்னாட்டுப் படை வீரர்கள் (வெல்லிங்டன்) பயன்படுத்துவதோ உப்பு.  உப்பின் பெருமையை, வாழ்வில் அதன் இன்றியமையாமையை, விவரமாக விளக்கவே இத்தகையை நீண்ட முன்னுரை.  உப்புத்தான் வாழ்க்கை.  அது இல்லாவிட்டால் வாழ்வில் சுவை ஏது?

உப்பினும் சிறந்த மருந்தேது?

இந்த மருந்தின் செயல்திறனைப் பட்டியல் போட்டு கொடுத்து விடலாம்.   அவை மிகவும் எளிமையானதாகத்தான் தோன்றும்.  அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பபடும் ஒரு பொருள்.  இவ்வளவு நோய்களைக் குணப்படுத்த முடியுமா என்று ஹானிமன் காலத்திலேயே நிபுணர்கள் ஐயமுற்றார்கள்.  நம்ப மறுத்தார்கள்.  எள்ளி நகையாடினார்கள்.  அந்த மேதை தமது  கொள்கையை நிரூபித்துக் காட்டியபோது அவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.  `நாட்பட்ட நோய்கள்’ (CHRONIC DISEASES) என்ற தமது நூலில் ஹானிமன் இந்த மருந்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

1. உணவில் நாட்டமின்மை என்றாலும் கடுமையான பசி எடுத்து நிறைய சாப்பிட்டாலும், அது உடம்பில் ஒட்டுவதில்லை.  மாறாக உடல் இளைத்துக் கொண்டே போகும்.

2. ஒரு வித்தியாசமன தலைவலி.  பற்பல சுத்தியலால் உள்ளிருந்து மொத்துவதைப் போன்ற நோவு.
3. உரோமங்கள் முளைக்கும் ஓரங்களில் சிறுசிறு சிரங்குகள், படைநோய்.
4. மிக அதிகமான தண்ணீர்த் தாகம்.
5. முதுகிலே ஒரு கடுமையான வலி.  கெட்டியான சம தரையிலோ, பலகையிலோ படுத்தால் இதமாக இருக்கும்.
இது மேலோட்டமான அட்டவணை  இதன் உண்மையான இயல்பை அறிய வேண்டுமானால் இந்த மருந்தின் மனக்குறிகளை ஆராய வேண்டும்.

நோய்க் கடுமை பொறுத்தல்

முக்கியமானது தாளாமை.  எத்தகைய குறைபாட்டையும் தாளாமல் அலட்டிக் கொள்வது.  ஹைபோகொண்ட்ரிகல் (HYPOCHONDRICAL) என்று இதை அழைப்பதுண்டு.  ஒரு சமயம் அழுகை மறு வேளை சிரிப்பு.  சிரிப்பு என்றால் குறுநகையிலிருந்து பலமாகச் சத்தம் போட்டுக் கூவுவது வரை. அவரே நகைப்புக்கு இடமாகும் வகையில், பிறருடைய கவனத்தைக் கவரும் வகையில் அந்தச் சிரிப்பு அமையும்  அவரால் கட்டுப்படுத்தவே இயலாத அளவுக்குச் சிரிப்பு.  அதே சமயம் கடுமையான துயரம் ஏதும் அவரைப் பாதிக்காது என்றாலும் முகத்தில் துயரமான பாவனை.  மிகச் சிறிய இடர்ப்பாடுகளைக் கூட மலை போலக் கற்பனை செய்து வளர்த்துக் கொள்வது.  யாராவது ஆறுதல் கூறப்போனால் அந்த நிலை பன்மடங்கு அதிகரிக்கும்.  தொடர்ந்து பெரிதாக அரற்றி அழும் ஒரு நிலை.

அதிசய மறதி

மூளைப் பிரதேசத்தில் உணர்வுகள் பதிய மறுக்கும்.  நம்ப முடியாத அளவு மறதி.  அடுத்து என்ன பேச வேண்டும் என்பதே மறந்து விடும்.  மற்றவர் என்ன பேசுகிறார் என்று புரிந்து கொள்ளவே இயலாத ஒரு மன நிலை.  இது அவருடன் பழகுகிறவரின் பொறுமையைச் சோதிக்கும் எல்லைக்குப் போய்விடும்.

வன்முறை

பெண்களை இது பாதிக்கும்போது அவர்கள் இழிநிலைப் பாதையில் சென்று விடுவதைப் பார்த்திருக்கிறேன். தனது தகுதிக்கு ஏற்பில்லாதவர்களிடம் உடலுறவு கொள்ள விருப்பம்.  திருமணமாகிக் குழந்தைகள் உள்ள மாதர்களும் கூட பிற ஆடவர்களிடம் புணர்ச்சி கொள்ள விழைவது என்பது இந்த மருந்தின் சிறப்புக் குறிகளில் ஒன்று.
இது சமுதாயத்தில் மிகவும் தலையிறக்கம் தரும் ஒரு நிலை.  பல பெற்றோர்களும், கணவன்மார்களும் இதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் பற்பல மருத்துவ முறைகளை நாடுகிறார்கள்.  மந்திரவாதிகள்,  பூசாரிகள்,  வேப்பிலை, தீச்சட்டி, நீர்க்குடம், மஞ்சள் நீர் என்று எவ்வளவோ முறைகள் கேரளத்திலுள்ள சோட்டானிக் கரையிலும், காவிரியின் வடகரையில் உள்ள குணசீலம் என்ற ஊரிலும் மனநோயைச் சீராக்கும் ஆலயங்கள் உள.  அங்கு வரும் மாதர்களில், பெண்களில் கால் பகுதி  இத்தகைய நோய்க்கு ஆட்பட்டவர்களே.
எளிதில் செரித்துக் கொள்ள முடியாத நிலைமை.  அத்தகையவர்களை நோயாளிகளாகவே கருதாமல், திமிர் பிடித்தவள் என்று குற்றம் சாட்டி, அடித்தும், உதைத்தும் துன்புறுத்துவதைக் கண்டு நான் பெரிதும் வருந்தியிருக்கிறேன்.
இத்தகைய துரதிருஷ்ட நிலையிலுள்ளவர்களுக்கு நான் கூற விழைவது இதுதான்.  எந்த மருத்துவ முறையிலும் இதற்கு நிவாரணம் கிடையாது.  நம்பகமுள்ள ஹோமியோபதி மருத்துவர்களைத் தவிர.

ஒரு வேண்டுகோள்

சக மருத்துவர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்று உண்டு.  அற்புதங்கள் விளையலாம்.  ஆனால் அவை எல்லாச் சமயங்களிலும் உடனடியாக விளைந்து விடுவதில்லை.  உடற்கூற்றின் அடிப்படை மருந்துகளைத் தக்க கால இடைவெளியில் கொடுத்துவிட்டு நாட்ரம் ம்யூரியாட்டிக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

நேட்ரம் ம்யூருக்கு ஏற்ற நோய்கள் சிறிது சிறிதாக உடலில் படரும்.  நெடு நாள் நீங்காது.  ஆழமாக ஊடுருவும்.  இந்த மருந்தின் ஆளுகைக்கு நோயாளியைக் கொண்டு வருவதற்கே நாள் பிடிக்கும்.  நோயாளியின் இயல்பான தன்மை ஆழ்துயிலில் உறைந்து போன நிலையில் தள்ளப்பட்டு விட்டதென்பதை மறந்து விடக்கூடாது.  பொறு, கவனி, செயல்படு என்று அறிவுரை கூறுகிறார் மருத்துவர் கெண்ட்.
சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
என்பது அருள் வாக்கு.  நோயாளியின் உறவினர்களையும், மருத்துவர்களையும் கடுமையாகச் சோதிக்கும் நிலையில் இந்த உப்பு நோயாளி ஆழ்ந்திருப்பார்.  மெள்ள மெள்ள நூல் கண்டின் சிக்கலைப் பிரிக்க வேண்டும்.
அத்தகைய வேளைகளில் உறுதியும், தெளிவும் தருவது பிரார்த்தனை.  அந்த பரம்பொருளிடம் கையேந்துங்கள்.  மனமுருகிய வேண்டுகோளுக்கு அவன் செவி சாய்ப்பது உறுதி.  இதை என் சுய அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.

உணர்ச்சிப் பிழம்பு

ஒரு நேட்ரம் ம்யூர் நோயாளி எளிதில் உணர்ச்சி வசப்படுவார்.  அவர் ஓர் உணர்ச்சியின் குவியல்.  எதைக் கண்டாலும் சிடுசிடுப்பு.  எத்தகைய சிறிய ஒலியும் அவரைப் பாதிக்கும்.  அழைப்பு மணி ஒலித்தாலோ, கதவை அறைந்து சாத்தினாலோ ஏன் நல்ல சங்கீதமும் கூட அவரை நிதானம் இழக்கச் செய்யும்.
உடலை ஊசி முனையினால் குத்துவதைப் போன்ற நோவு.  மின் தாக்குதலைப் போன்ற அதிர்ச்சி, தூங்க முயற்சிக்கும்போது நரம்பு சுண்டும், இழுக்கும் எல்லா இடத்திலும் வலி தோன்றும்,  மறையும், இடம் மாறும்.
அறையின் வெப்பத்தை அவரால் தாங்க இயலாது.  திறந்த காற்றோட்டமான இடம் இதமளிக்கும் என்றாலும் எளிதில் குளிரால் தாக்கப்படுவார்.  அதை மறந்துவிடக் கூடாது.  திறந்த வெளியில் உலாவுவதையே அவர் பெரிதும் விரும்புவார்.

தோற்றம்

நோயாளியின் உடல் மேற்பரப்பில் எண்ணெய் வடியும்.  பளபளப்பாக இருக்கும்.  உடலின் பல பகுதிகளில் சிரங்குத் தொகுதிகள்.  காது மடல், முதுகு ஆகிய திறப்புகளில் தோலுரியும்.  ஊன் நீர் கசியும்.  முத்துக் கோர்த்ததைப் போல் உதடுகளின் ஓரங்களில் நீர்க் குண்டுகள்.  பிறப்புறுப்பிலும், மலத்துவாரத்திலும் சிறு சிரங்குகள், கட்டிகள், மேற்பரப்பு முழுவதுமே அரிப்பு.
வெப்பத்துடன் வதங்கிப் போன உடல் வாகு.  சிறு குழந்தைக்குக் கூட வயதான தோற்றம்.  கழுத்துப் பகுதி இளைத்திருக்கும்.  நெஞ்சின் மேற்கூட்டில் கூட்டெலும்பு துருத்திக் கொண்டு நிற்கும்.

கசிவுகள்

பூந்தசைப் பகுதிகளிலிருந்து ஏற்படும் கசிவுகள் நீராகவும் இருக்கும்.  முட்டையின் கருவைப் போன்று வெண்மையாகக் கொழ கொழவென்றும் இருக்கக் கூடும்.  மூக்கிலிருந்தும் செவிகளிலிருந்தும் இது பெருகக்கூடும்.  வெள்ளைப்பாடும் இதே வகை.  சிறுநீர்க் குழலில் கடுப்பு  நீர் கழித்த பின்பு.  இது ஒரு முக்கியமான குறி.

தலை நோவு

இடுக்கியினுள் வைத்து இறுக்கியதைப் போல் தலை நோவு.  கூடவே சுத்தியால் அடிப்பதைப் போன்ற நிலையும் இருக்கும்.  காலையில் எழுந்து நடக்கும்போது இந்த வலி வரலாம்.  அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பிற்பகுதியில் இருக்கும்.  துயில் கொள்ளும் வேளையில் அமைதியின்மை.  தூக்கம் எளிதில் வராது.  அப்படி வந்தாலும் தலைவலி விழிக்கச் செய்துவிடும்.  இந்தத் தலைவலி குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்துவிடும்.  ஒவ்வொரு நாளும் வரலாம்.  அல்லது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் வரக்கூடும்.  சில வேளைகளில் தலைவலியுடன் காய்ச்சலும் இருக்கும்.  காய்ச்சல் துவங்கும்போது கடும் வறட்சி.  குளிர்ந்த நீரை பருக ஆவல்.  வியர்த்துவிடும் வரை தொந்தரவுகள் இருக்கும்.  வியர்வை வெளிப்பட்டால் பல தொந்தரவுகள் சமனமாகும்  தலைவலியைத் தவிர.

முதுகு வலி

முதுகந் தண்டில் நோவு, கடுப்பு வலி.  வலி தண்டு முழுவதுமே இருக்கும்.  இருமினால் நோவு மிகும்.  சில சமயங்களில் நோயாளி கெட்டியான தரையில் படுத்துக் கொண்டு நிவாரணம் பெறுவான்.  அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு முதுகைச் சுவரில் அழுத்திக் கொள்வான்.  கை, கால், உடல் பகுதி முழுவதும் தொடர்ந்து நடுக்கம் இருக்கும்.  அசைவு இருந்தால்தான் அமைதி கிட்டும்.

கல்லீரல்

உணவுப் பகுதியும், கல்லீரலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.  உண்ட உணவு கட்டியாக இரைப்பையிலேயே இருக்கும்.  செரிமானமாக நெடுநேரம் பிடிக்கும்.  உணவு உட்சென்ற உடனே வாந்தி எடுக்கும்.  குமட்டும்.  வயிற்றுப் பகுதி முழுவதும் காற்று நிறைந்திருக்கும்.


கழிப்பு

மலமும் சிறுநீரும் இயற்கையான வேகத்துடன் இறங்காது.  மலம் கட்டியாக உருண்டையாகச் சிரமத்துடன் வெளிப்படும்.  சிறுநீரின் நிலையும் அதுவேதான்.  சொட்டும், சிவிறும், சிரமப்பட்டு வெளிக் கொணரும்படி இருக்கும்.  கழித்த பிறகும் இன்னும் கெஞ்சம் மிச்சம் இருப்பது போன்ற ஓர் உணர்ச்சி.  அருகில் யாராவது இருந்தால் சிறுநீர் கழிக்கவே இயலாது.  கூடவே அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓர் உந்தல்.
அதே வகையில் வயிற்றுப் போக்கையும் இது தடை செய்யும்.  உப்பின் எல்லா வகைகளுமே இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும்.

மாதக் கெடு

பெண்களின் மாதாந்திரக் கோளாறுகளுக்கும் இது மிகச் சிறந்த நிவாரணி.  பெரும்பாடு என்ற அதிகமான போக்கு அல்லது கசிவே இல்லாத ஒரு நிலை. அடுத்தடுத்தும் இது ஏற்படலாம்.  நெடுநாள் இடைவெளியிலும் இது ஏற்படலாம்.  மொத்தத்தில் சீர்கேடான ஒரு நிலை.

சீர்கேடு

இந்த மருந்து பிறந்தது ஒரு மா கடலில்.  ஆகவே தன் பிறந்த இடத்தின் இயல்புகளெல்லாம் இந்த மருந்துக்கு ஏற்றவரிடத்திலும் இருக்கும்.  . . . .சூரியனும், சந்திரனும் கடல் நீரைப் பாதிக்கின்றன.  அதே வகையில் முற்பகலும், பௌர்ணமியும் இந்த நோயாளியைப் பாதிக்கும்.  எத்தனையோ  இனிய நீர் ஆறுகள் கடலில் கலக்கும்.  அவை அனைத்தையும் கடல் நீர் பருகத் தகாததாகச் செய்துவிடும்.  தனது உரையாடலினாலும், நடையினாலும் தான் புகும் சூழ்நிலையையே ஒரு நேட்ரம் ம்யூர் நோயாளி சீர்கெடச் செய்து விடுவான்.  ஆழ்கடல் எத்தனையோ இரகசியங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெளித் தோற்றத்திற்கு எதையுமே காட்டாது.  இந்த மனிதர் தமது உள்ளத்தில் எல்லாத் துயரங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பார்.  எப்படிக் கடலின் அலைகள் குறிப்பிட்ட காலக் கெடுவில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறதோ அதே வகையில் இவருடைய நோய்கள் மிகும், குறையும்.
கடைசியாக இதன் தொடர் மருந்துகளப் பார்ப்போம்.  அனைத்தும் கடலைச் சார்ந்தவை.  செப்பியா, ஸ்பாஞ்சியா, ஆம்ப்ரா க்ரேஸியா, ஐயோடின் இறுதியாக அகீவா-மரீனா (கடல் நீர்).

குறிகள்

ஒவ்வொரு  மருந்துக்கும் பொதுவான குறிகள், சிறப்புக் குறிகள் என உள.  சிறப்புக் குறிகள் துருத்திக் கொண்டு காணப்படும்போது அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அனுதாபம்

பிறர் தம்மை அனுதாபத்துடன் அணுக வேண்டும் என்று அந்த மனிதர் எதிர்பார்ப்பார்.  என்றாலும் அவரிடம் பரிவு காட்டும்போது அவருடைய நோய்க் குறிகள் மிகும்.  `ஓ’ என்று கதறித் தீர்த்து விடுவார்.  இத்தகைய அன்பர் ஒருவரின் நெடுநாளைய நோய்நிலையை இரண்டு உப்பு மாத்திரைகள் நிரந்தரமாகச் சீராக்கி விட்டன.

பேச்சி ஆயி

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மருந்தாக  பாரிடா கார்பனேட்டும், கல்காரியா கார்பனேட்டும் உதவுவதைக் கண்டிருக்கிறேன்.  இத்தகைய குழந்தைகள் தாமதமாகத் தவழும், நடக்கும், பேசும்.  இவற்றை `மைல் கற்கள்’ என்று குறிப்பிடுவார்கள்.  இத்தகைய குழந்தைகள் சீராகத்தவழ்ந்து நடந்தாலும், பேசுவதற்குத் தாமதமாகும்போது, நேட்ரம் ம்யூர் நல்ல மருந்தாக அமையும் என்று அனுபவசாலிகள் எழுதுகிறார்கள்.

தும்மல் .. . . . சளி

தும்மலுடன் தொடரும் சளித் தொந்தரவுகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து என்று போயரிக், கெண்ட், கிளார்க் ஆகிய எல்லா நிபுணர்களும் எழுதுகிறார்கள்.  அடிக்கடி தடுமன் பிடிக்கும் இயல்பையே இந்த மருந்து மாற்றிவிடும் என்று உறுதியாகக் கூறுகிறார் க்ளார்க்.

இந்த மருந்தையும் பொட்டாஸியம் பைக்ரோமையும், மாற்றி மாற்றி இரு நூறாவது வீரியத்தில் தருவார் என் ஆசான்.  விளைவு?  காற்றுக் குழல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எண்பது சதவிகிதம் நிவாரணம், என்னைப் பொருத்த வரையில் இது நல்ல பயனைத் தந்திருக்கிறது.  என்னைக் கைவிட்டதே கிடையாது.  தொடர் மருந்தாக பாஸிலினத்தையும், ட்யூபர்குலினத்தையும் பயன்படுத்துவேன்.  சில சமயங்களில் லூட்டிகமும் பயன்படுத்தியதுண்டு இறுதியாக லெமினா மைனர்.

சிறப்புக் குறி

இன்னொரு முக்கியமான சிறப்புக் குறி.  இந்த மருந்துக்கேற்ற நோயாளி எப்போதும் குப்புறப்படுப்பான்.  அல்லது குப்புறப்படுப்பதில் நாட்டம் காட்டுவான்.  இந்த ஒரு குறி மட்டும் எனக்குப் பல வேளைகளில் நூலேணியாக உதவியிருக்கிறது.
இந்த மருந்து மெதுவாகத்தான் வேலை செய்யும்.  பொதுவாக ஆழ்ந்து பணி புரியும் எந்த மருந்தின் இயல்பும் இதுதான்.  பல நிபுணர்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

காய்ச்சல்

அந்தக் காரணம் பற்றி, தீவிரமான நோயான காய்ச்சல் போன்றவைகளுக்கு இது பயன்படாது என்று ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது என்றாலும் பற்பல சோதனைகள் மாறான முடிவையே தந்துள்ளன.
காய்ச்சல் காலை ஒன்பது மணிக்குத் துவங்குமானால் அப்போது நேட்ரம் ம்யூர் உறுதியாகப் பணிபுரியும்.  அதில் ஐயப்பாடே வேண்டாம்.  அதேபோல் குளிர்த் தாக்குதலுடன் காய்ச்சலும் மிகுந்த கடும் தலைவலியும் இருக்குமானால் அப்போது இதுதான் மருந்து.  குளிர் குறையும்,  ஆனால் தலைவலி மட்டும் தொடரும்.  இன்னுமொரு வேடிக்கை உடல் சூடு மிகும் போது தலைவலி அதிகரிக்கும்.  ஆனால் காய்ச்சல் இறங்கு முகமாகும்.  தலைவலி மட்டும் கடுமையாகிக் கொண்டே போகும். 
நடுக்கம், போர்வை
காய்ச்சல் அதிகமாகும்போது நக்ஸ்வாமிகா நோயாளி போர்த்திக் கொள்ளுவான்.  ஆனால் இந்த மருந்துக்கு ஏற்றவர் போர்வையை விலக்கி விடுவார். மேல் கீழுதடுகள் வெப்ப மிகுதியினால் பிளவுபட்டுப் போகும்.
முன்னரே கூறியதுபோல் இந்த மருந்து குறித்து ஆயிரம் பக்கங்களுக்கும்மேல் எழுதலாம்.  எழுதியுமிருக்கிறார்கள்.  மிகச் சுருக்கமாக வரைவதில் கைதேர்ந்த போயரிக் கூட இதற்கென நான்கு பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்.
எல்லோரும் உப்பைக் கண்டு அச்சமுறுகிறார்கள்.  நாம் உப்பை வீரியப்படுத்திப் பயனடைகிறோம்.  ஹானிமானின் ஆராய்ச்சித் திறனுக்கு நிகர் ஏது?

நினைவில் நிறுத்துக (4)

1. பெயர் - நேட்ரம் ம்யூரியாட்டிகம்
2. இனம் - கனிமம்
3. நோய் முதல் - உப்பின் அமித உபயோகம்
4. நோய் தாக்கும் பருவம் - வெப்பம், குளிர்
5. நோய் தாக்கும் நேரம் - காலை 9-10 மணி
6. நோய் சமனமாகும் சூழல் - இறுக்கமான ஆடை, குளியல் - அழுத்தம்
7. மருந்து பணிபுரியும் காலம் - 40-50 நாட்கள்
8 தொடர் மருந்துகள் - ஸெப்பியா, இக்னெஷியா, ஏபிஸ்
9. எதிர் மருந்துகள் - ஆர்சனிக்கம்-பாஸ்பரஸ்
10. பொதுக் குறிகள் - சத்துள்ள உணவும் ஊட்டம் தராது
11. சிறப்புக் குறிகள் - கழுத்துப் பகுதியில் இளைப்பு
12. வீரியம் - 6 முதல் 200 வரை
13. குறிப்பு - பரிவு காட்டுதல் நோயை மிகச் செய்யும்.


*****

வெள்ளி, 21 ஜூலை, 2017

‘வாழை வட்டம்’

வேளாண் ஹோமியோபதி
துணைப்பயிர் வேளாண்மை 2



‘வாழை வட்டம்’

வாழையை பயிரிடுவதில் பழமையான இந்த முறை வட்ட வடிவில் வாழையை பயிரிடுவதாகும். செலவில்லாத நிரந்தர வேளாண் முறையான ‘வாழை வட்டம்’ வீட்டுத்தோட்டங்களுக்கு மிகவும் ஏற்ற முறையாகும். அதிக செலவு பிடிக்காத ஐந்தடுக்கு விவசாய முறையாகும் இது.
பழங்குடி மக்களால் வாழையடி வாழையாக பயிரிடப்படும் ‘வாழை வட்டம்’ ஏன் இன்னும் பெரும்பான்மையான வாழை விவசாயிகளை சென்றடையவில்லை என்பது புதிராக உள்ளது.
வட்ட வடிவ விவசாய முறை வாழைக்கு மட்டுமல்ல தென்னை, பப்பாளி மற்றும் மூங்கில் மரங்களுக்கும் ஏற்ற முறையாகும்.

வாழை வட்டம் அமைப்பது எப்படி?

வாழை பதிக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்து அதில் எத்தனை வாழை வட்டம் அமைக்க வேண்டுமோ அத்தனை வட்டங்களை சரியான இடைவெளிவிட்டு பிரிக்கவேண்டும். சரியான அளவில் பிரித்தபிறகு வட்டத்தின் மையப்பகுதியில் 5அடி விட்டம் கொண்ட வட்ட அளவில் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். தோண்டிய மண்ணை கொண்டு குழியை சுற்றிலும் 2 அடி அகலம் கொண்ட மேடாக குவிக்க வேண்டும்.
வீட்டுத்தோட்டமாக இருந்தால் நீர் பாய்க்க ஒரு வாய்க்கால் மட்டும் வெட்டி குழியுடன் இணைத்துக்கொள்ளலாம். வாழைத்தோட்டமாக இருந்தால் நீர் பாய ஒரு வழியையும் நீர் வெளியேற ஒரு வழியையும் அமைத்துக்கொள்ளலாம். இப்போது வாழை வட்டத்திற்கான உரக்குழி  தயார்.. அடுத்து என்ன செய்வது?

உரக்குழி 

பொதுவாகவே வாழைக்கு அதிகம் ஊட்டம் தேவை,ஆகையால் அதற்கான ஊட்டத்தை தயாரிக்க மட்கக்கூடிய அனைத்துக்கழிவுகளையும் தழைக்கூளங்களையும் உரக்குழியில் குவித்து வைக்க வேண்டும். பின்னர் நீர்பாய்ச்சி வந்தால் உரக்குழி தயாராகிவிடும்.

வாழை நடல்

குழியை சுற்றியுள்ள மேட்டின் நடுப்பகுதியில் சமமான இடைவெளியில் தேர்ந்தெடுத்த 5 முதல் 7 வாழைகளை ஆழமாக புதைக்க வேண்டும். வாழைக்கு அதிக நீர் தேவையாயினும் தேங்கியிருக்கக்கூடாது.வாழையின் வேர்கள் நீரைத்தேடி சென்று உறிஞ்சிக்கொள்ளும் திறனுடையவை. நடுவில் உள்ள உரக்குழியில் குப்பைக்கூளங்களை வேகமாக மட்க ஈரப்பதமும் நிழலும் தேவை அது இந்த அமைப்பில் கிடைத்துவிடும். உரம் வேகமாக தயாராக வாழையின் வேர்களும் உதவி புரியும்.
புதைத்த வாழைக்கன்றுகளுக்கிடையில் மேட்டின் ஓரக்காலில் இரண்டிரண்டு மரவள்ளிக்கிழங்கு(குச்சிக்கிழங்கு) குச்சிகளை நடவேண்டும். மேட்டின் ஓரக்கால்களில் நடப்படும் குச்சிக்கிழங்கு செடி வறட்சியை தாங்குவது மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து ‘வாழை வட்ட்த்திற்கு ஒரு பாதுகாப்பை தரும். வாழை தயாராகும் முன்னரே கிழங்கு அறுவடைக்கு வந்துவிடும்.
மரவள்ளிக்குச்சிக்கு முன்புறம் அதாவது குழியை நோக்கி வெட்டிவேர்ப்புல் பயிரிட வேண்டும். வெட்டிவேர்ப்புல்லானது ஆழமான வேரமைப்பால் மண்ணரிப்பை தடுக்கும் ,இதன் மூக்கைத் துளைக்கும் வாசனையானது பூச்சிகளையும் கொசுக்களையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது. ஒன்றரை மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புல் தாழ்ந்த காற்றினால் வரும் சேதத்தையும் தடுக்கிறது. எளிதில் வளரும் இந்தப்புல் இந்த அமைப்பிற்கான மட்கக்கூடிய வைக்கோலையும் தருகிறது.
அடுத்து சக்கரைவள்ளிக்கிழங்கு கொடியை வாழையை சுற்றி சமமான இடைவெளியில் ஊன்றிவிடவேண்டும். இந்த சர்க்கரைவள்ளிக்கொடிகள் இந்த வாழை வட்ட அமைப்பின் மூடாக்காக செயல்பட்டு தேவையற்ற களைகள் வளருவதை தடுக்கின்றன. இதனூடாக அல்லது இது அறுவடை செய்த பிறகு வேர்க்கடலை பயிரிடுவதும் நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலைபெறச்செய்ய உதவும். களையை கட்டுப்படுத்தவும் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் இவை இந்த அமைப்புக்கு உதவுகின்றன.

கடைசியாக உரக்குழியின் உள்வட்ட ஓரக்கால்களில் சேம்புக்கிழங்கு அடர்த்தியாக விதைக்க வேண்டும். உள்வட்டத்தில் ஈரமான சூழலில் வாழும் தாவரமான சேப்பங்கிழங்கு தழைக்கூளங்களை எளிதில் மட்கச்செய்யும் வல்லமை படைத்தவை.
உரக்குழியில் உபயோகப்படாத பெரிய மரக்கட்டைகள்,மரக்கிளைகளை அடிப்பகுதியில் இடுவது மட்கச்செய்யும் பூஞ்சைகளுக்கு ஏதுவாக இருக்கும். உரக்குழி எப்போதும் குப்பைகளால் குவிந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.குழிய விடக்கூடாது.இந்த ‘வாழை வட்டத்தில்’ வாடிய வாழை இலைகளையும், தார் ஈன்ற பிறகு வெட்டப்பட்ட மரங்களையும் மற்றும் கழிக்கப்பட்ட எடைக்கன்றுகளையும் வெளியே வீசாமல் உரக்குழியிலே இடுவது இந்த அமைப்புக்கு மேலும் உரம் சேர்ப்பதாகும். நாளடைவில் இந்த உரக்குழி எந்த குப்பையையும் எளிதில் மட்கச்செய்து உரமாக மாற்றி விடும் வல்லமை பெற்றுவிடும்.

Image may contain: plant and food
banana circle


இந்த ‘வாழை வட்ட கூட்டுக்குடும்ப அமைப்பு’ வாழையடி வாழையாக பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆற்றலுடையது.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.
படம் மற்றும் கருத்து உதவி:
treeyo permaculture edu
permaculture.com
https://www.facebook.com/groups/1464331126988383/permalink/1467850809969748/
#அக்ரோஹோமியோபதி
🍀

பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

வேளாண் ஹோமியோபதி

துணைப்பயிர் வளர்ப்பு விவசாயம்



பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

மூன்று பயிர்களை பயிரிடும் முறையானது மூன்றடுக்குகளாக தோட்டத்தை நிரப்புவதாகும்.
நேராக நிமிர்ந்து வளரக்கூடிய முதல் அடுக்குப்பயிரானது மக்காச்சோளமாக வழிவழியாக இருந்திருக்கிறது, பின்னர் மக்காச்சோளத்திற்கு பதிலாக சூரியகாந்தியும் தானிய சோளமும் பின்னர் வெற்றிகரமான மாற்றுப்பயிராக உருவாகியிருக்கிறது.
இரண்டாவது அடுக்குப்பயிராக மொச்சைப்பயிறு அல்லது கொத்தவரை போன்ற படரும் ஏறுகொடி தாவரங்களை பயிரிட வேண்டும்.மொச்சைப்பயிறின் வளர்ச்சியை சோளத்தின் நிழலானது முதலில் தாமதப்படுத்தும்,பின்னர் சோளம் கதிர் அறுத்தவுடன் காயத்தொடங்கும் தருவாயில் மொச்சை புதிய வளர்ச்சியுடன் வெடித்துத் தயாராகிவிடும்.
பூசணிப்பயிர்களுக்கு (பூசணி,பரங்கி,தர்பூசணி) அதிகப்படியான வெளிச்சம் தேவை,நிழல் அவைகளுக்கு நன்மை செய்யாது, நிழல் பூசணியின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். பூசணியை சோளம் மற்றும் மொச்சைக்கு வெளியே பயிரிடவேண்டும் ஏனெனில் நிலத்தை மூடுமளவுக்கு அடர்த்தியாக பரவும் அதற்கு அந்த அளவுக்கு பரந்த நிலம் தேவை.

எப்படி பயிரிடுவது?

பயிரிட தயார் செய்யப்பட்ட விவசாய நிலத்தில் தகுந்த பருவத்தில் பட்டம் பார்த்து பயிரிடவேண்டும்.
எனக்கு தெரிந்து மேற்கு தமிழகத்தில் மானாவாரியாக தானிய சோளமும் கூடவே நரிப்பயிர், பச்சைப்பயிறு அல்லது பாசிப்பயிறு ஊடு பயிராக பயிரிடுவார்கள். இதுவும் துணைப்பயிர் விவசாயமே.இருந்தாலும் பூசணியில்லாமல் இது பாதுகாப்பாக இருக்காது.ஏனெனில் பூச்சிகள் மற்றும் ஆடுமாடுகளிடமிருந்து இதற்கு பாதுகாப்பு கிடைக்காது.ஆதலால் பூசணியில்லாமல் இது நிறைவான முறை கிடையாது. மூன்றடுக்கு பயிர் முறையில் எப்படி பயிரிடுவது என பார்ப்போம்.

செயல்முறை-1

நிலத்தை தயார் செய்தவுடன் விதைக்கும் பரப்பை 12’க்கு 12’ சதுர அடியாக பிரித்து அதன் மையப்பகுதியில் வட்டம் அமைத்து சோள விதைகளை வட்ட வடிவில் 8 விதைகளை சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்தபிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.

செயல்முறை-2

இரண்டு வாரங்களுக்கு பிறகு சோளம் முளைத்து 5லிருந்து 10 அங்குலம் வளர்ந்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு சோளச்செடியை சுற்றிலும் 4 மொச்சைப்பயிறு விதைகளை சமமான இடைவெளியில் ஒரு அங்குல ஆழத்திற்கு ஊணவேண்டும்.அதன் பிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.மொச்சை விதை முளைக்கும் வரை நிலம் ஈரப்பதமாக இருக்கவேண்டியது அவசியம்.

செயல்முறை-3

மொச்சை விதை ஊன்றிய ஒரு வாரத்திற்கு பிறகு மொச்சை முளைத்து சோளத்தின் மீது ஏறி படரும் தருவாயில் 6லிருந்து 8 பூசணி விதைகளை வட்டத்திற்கு வெளியில் சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும்.
பூசணி வளர்ந்து படரும்போது கொடிகளின் திசை வட்டத்தை நோக்கி அதன் மையப்பகுதி நோக்கி படரும் படி திருப்பி விடவேண்டும்.

மூன்றடுக்கு துணைப்பயிர் வளர்ப்பு முறை எப்படி வேலை செய்கிறது?

இந்த பழமையான துணைப்பயிர் வளர்ப்பு முறையில் மூன்று பயிர்களும் தன்னையையும் வளர்த்து தனது துணைப்பயிரையையும் வளர்த்து ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
மூத்த சகோதரியான சோளம் மொச்சைக்கு பற்றுக்கோலாக ஆதரவை வழங்குகிறது. மொச்சைப்பயிறானது சோளத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகிறது.மொச்சையானது காற்றிலிருந்து நைட்ரஜனை மண்ணில் சேமித்து வைத்து தனக்கும் தன் துணைக்கும் அளிக்கிறது.
பூசணி பாதுகாப்பை வழங்குகிறது. அதன் கொடிகள் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. மேலும் அது உயிருள்ள தழைக்கூளமாக மூடக்காக மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதன் சொரசொரப்பான மெல்லிய முள் போன்ற அமைப்பை கொண்ட அதன் கொடிகள் சோளத்தையையும் மொச்சையையும் தாக்கும் பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கிறது.ஒரு கூட்டுக்குடும்ப அமைப்பு போல இருந்துகொண்டு இந்த மூன்று பயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒரு வலிமையான பாதுகாப்பு தடைவேலியை உருவாக்கி பூச்சிகளையையும் களைகளையும் வீழ்த்துகிறது.
No automatic alt text available.

மூன்று தோழிகள்

சோளம்(மக்காச்சோளம் அல்லது சூரியகாந்தி அல்லது தானியச்சோளம்)
+பீன்ஸ்(மொச்சைப்பயிறு அல்லது பிற ஏறுகொடிப்பயிறு வகைகள்)
+பூசணி(பூசணி அல்லது பரங்கி அல்லது தர்ப்பூசணி)
இந்த மூன்றடுக்கு பயிர் முறை எளிமையான பழமையான விவசாய முறையாகும். இதனுடன் சாமந்திப்பூச்செடியையும் ஒரக்கால்களில் பயிர் செய்தால் இன்னும் பாதுகாப்பு.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத இயற்கை விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.

AGRO HOMOEOPATHY
🍀

மனிதத்துவம் விடை தருமா??

இன்றைய சமூகச்சீர்கேடுகள், ஆன்மீக மோசடிகள், மக்களின் குணக்கேடுகள் மற்றும் அரசியல்வியாதிகள் இவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு விடுதலை அடைவது, மதங்கள் ஏன் அன்பை போதித்தன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
மிருகங்கள் அனைத்தும் தன் குணத்தில் ஒன்றுபோல் இருக்க மனிதன் மட்டும் ஏன் ஒன்று போல் இல்லை..
மனிதனுக்கு என தனித்துவமான குணம் இருக்கிறதா?
இருந்தால் அது என்ன?
அந்த குணத்தை மனிதன் ஏன் மறந்தான்?
கடவுள் பற்றி,
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
எனது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
எனது கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?

கடும்தவம் புரியும் தவசிகள் மட்டுமே ஞானமடைய முடியும் என சொல்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சாதாரண மனிதன் என்னால் ஞானமடைய முடியுமா? அது இருக்கட்டும், முதலில் ஞானம் என்றான் என்ன? அதை ஏன் மனிதன் அடையவேண்டும்,அது அடையக்கூடிய ஒன்றா?
சமூகத்தை ஒதுக்கிவிட்டு தியானம் செய்வது சரியா?
மனிதனுக்குள் ஏன் இந்த பிரிவினை...
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
அறிவியலின் பேரில் ஏன் இத்தனை சுரண்டல்கள்
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
நான் மதங்களை பின்பற்றுவதா?
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே...
எனது கேள்விகளுக்கு   பதில் கிடைக்காமல் அலைந்து திரிந்தேன்..
அப்போது தான் கிடைத்தது ஒரு புத்தகம் 

மனிதத்துவம்


*********************************

********************************
இந்த நூல் என்னுடைய கேள்விகளுக்கு விடையை மட்டுமல்ல
எனது உள்ளத்தில் ஒரு பூகம்பத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
உங்களுக்குள்ளும் அதேபோல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தகத்தால் முடியும்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
ஹோமியோபதி ஆசான் PL Vellaichamy அவர்களின்
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
------
---------------

 படியுங்கள்
விடை மட்டுமல்ல
வாழ்வின் அர்த்தமும் உங்களுக்கு கிடைக்கும்

துணைப்பயிர் வளர்ப்பு




தமிழ்நாட்டில் துணைப்பயிர் வளர்ப்பு பற்றி யாரும் பேசியதாகவோ அது பற்றிய புத்தகமோ இருப்பதாக என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் இல்லை...
நம்மாழ்வார் மற்றும் இயற்கை விவசாய நண்பர்கள் கூட ஊடுபயிர் பற்றி பேசுகிறார்களே ஒழிய துணைப்பயிர் பற்றி பேசியதாக தெரியவில்லை.....
இப்போது துணைப்பயிருக்கும் ஊடுபயிருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்
துணைப்பயிர்
துணைப்பயிர் என்பது முதன்மைப்பயிரின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கு வரும் பூச்சிகள்,நோய்கள் இவற்றில் இருந்தும் பாதுகாக்கும் அதே வேளையில் முதன்மைப்பயிரும் துணைப்பயிரை அதேபோல் பாதுகாக்கும்... இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதோடு செழிப்பான விளைச்சலையும் தரும்..
ஊடுபயிர்
முதன்மைப்பயிருக்கு இடையே பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் ஊடுபயிரே..
அந்தப்பயிர்கள் முதன்மைப்பயிரின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் தராமல் கூட இருக்கலாம்..
அல்லது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் நேரெதிர்ப்பயிராகவும் இருக்கலாம்..இதுவே பூச்சிகளையும் நோய்களையும் கூட்டி வரும் பயிராகவும் இருக்கலாம்..
இடம் சும்மா கிடக்கின்றதே என்பதற்காக வளர்க்கப்பட்ட பயிராகவும் இருக்கலாம்..
முதன்மைப்பயிரின் தன்மைக்கு ஒத்த தன்மை இல்லாது வெறுமனே இடையே வளர்க்கப்படும் பயிராகவும் இருக்கலாம்..
ஊடுபயிராக துணைப்பயிரை பயிரிட்டால் மட்டுமே அது இயற்கை விவசாயம் 
(intercropping with companion plant = ORGANIC FARMING)
இயற்கை விவசாயம் என்ற ஆர்வமுடன் ஈடுபட்ட பல விவசாயிகள் கூட நட்டமடைந்து மீண்டும் இரசாயன உரம் பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் "இயற்கை விவசாயம் செய்கின்றேன், தேவைப்படும்போது இரசாயன மருந்துகளையும் பயன்படுத்துகிறேன்" என கூறுகிறார்கள்.இது துணைப்பயிர் பற்றிய விழிப்புணர்வின்மையையே காட்டுகிறது.
துணைப்பயிர் பயிரிடுதலே ஹோமியோபதி தான்... 
துணைப்பயிர் பயிரிடாமல் இயற்கை விவசாயத்தில் இலாபம் ஈட்ட முடியாது.
ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்தல் மட்டுமே இயற்கை விவசாயம்.
ஹோமியோபதி அறிந்திருந்தால் மட்டுமே இயற்கை விவசாயத்தை செவ்வனே செய்யமுடியும்.
அக்ரோ ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்யும்போது விளைச்சலை அதிகப்படுத்தும் நுண்ணுயிர் ஊட்டங்கள், பஞ்சகவ்யம் மற்றும் பூச்சிவிரட்டிகள் இவை தேவைப்படாது
துணைப்பயிர் பயிரிடல் வரப்போரங்களில் பூச்செடிகள் வளர்த்தல், பயிர் சுழற்சி முறையில் பயிரிடல், பட்டம் பார்த்து விதை விதைத்தல் மற்றும் நீர் மேலாண்மை இவற்றுடன் நோய்த்தாக்குதலுக்கு ஹோமியோ மருந்துகள் இந்த வகையில் செய்யும் விவசாயம் தான் இயற்கை விவசாயம்.
வெளிநாட்டு ஆய்வாளர்கள் துணைப்பயிர் பற்றி பிளந்துகட்டுகின்றனர்..என்றாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் விவசாய நிலங்களில் பயன்படுத்தவில்லை..வீட்டுத்தோட்டங்களிலும் சிறு நிலங்களில் மட்டுமே இதனை பயன்படுத்துகின்றனர்... பெரிய அளவில் பயன்படுத்தாதற்கு காரணம் ஹோமியோபதி அறியாததால் தான்..
வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் மட்டுமே ஹோமியோபதியின் துணையுடன் துணைப்பயிரை ஊடுபயிராக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்யமுடியும் என்று நிரூபித்தவர்.
கவிராஜின் வழியில் சென்றால் விவசாயம் இலாபகரமான இயற்கை வழி விவசாயமாக இருக்கும்..
பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழமரங்கள் இடையே 
ஊடுபயிராக என்னென்ன துணைப்பயிர்களை பயிரிடாம் என விக்கிபீடியா விளக்கமாக தகவல் சொல்கிறது.👇https://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

உதாரணத்திற்கு
பழ மரங்களுக்கான துணைப்பயிர்கள்:

துணைப்பயிர்களின் பயன்கள்:
*பூச்சிகளை தடுக்கிறது.
*மகரந்தச்சேர்க்கைக்கான வண்டுக்களை கவர்ந்தீர்க்கிறது.
*மரம் செழிப்பாக வளர மற்றும் பழங்கள் சுவையாக வருவதற்கான ஊட்டத்தை தருகிறது.
*துணைப்பயிர்கள் நிலத்தை ஈரமாக வைத்திருக்க உதவுகின்றன..இதனால் வறட்சியை தாங்கி பழமரங்கள் வளர உதவுகின்றன.
*துணைப்பயிர்கள் இருப்பது தேவையற்ற களைகள் வளர்வதை தடுக்கின்றன.
மேலும் இவை மடிந்து மண்ணுக்கு உரமாகின்றன.
பழமரங்களுக்கான துணைப்பயிர்கள்:
1.Comfrey( Symphytum). சிம்பைடம்
இது இயற்கை விவசாயத்தில் முக்கியமான துணைப்பயிர். மற்றும்.இது அடிபடுதல் மற்றும் எலும்பு முறிதல் போன்றவற்றுக்கு முக்கியமான ஹோமியோபதி மருந்து..
2.Nasturtium 
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை
செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
3.Chamomile 
செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ருசியுள்ளது..
4.Coriander 
கொத்தமல்லி
5.Dill 
சதகுப்பை
6.Fennel பெருஞ்சீரகம்
7.Basil துளசி
8.Lemongrass புல்
9.Mint புதினா
10.Artemisia wormwood (மக்கிப்பூ)
11.Yarrow காரப்பூடு
12.Daffodil,
13.tansy, ஆயிரந்தழைப்பூண்டு
14.marigold சாமந்தி
15.hyssop 
16.garlic பூண்டு
17.spinach பசலைக்கீரை
18.mustard கடுகு
19.chives வெங்காய இனப்பூண்டு
20.Dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
21.sweet cicely மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
இந்த துணைப்பயிர்கள் பெரும்பாலும் ஹோமியோபதியில் முக்கிய மருந்துகளாக இருக்கின்றன..இவற்றில் பல மூலிகைச்செடிகள், மருந்தாக மட்டுமில்லாமல் உணவுக்கும் பயன்படும்
பயிர்கள் நோயுற்றபிறகு இவற்றை மருந்தாக தருவதற்கு பதிலாக துணைப்பயிராக வளர்ப்பது பலவகை நன்மைகளை தருகிறது..
விளைச்சலுக்கு விளைச்சல்...அதுமட்டுமின்றி துணைப்பயிர்கள் பெரும்பாலும் கீரைகளாக இருப்பதால் அவற்றை தினசரி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.
விவசாயிகள் இந்த துணைப்பயிர்கள் அல்லது இதையொத்த துணைத்தாவரங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிதான் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கவேண்டியதாக இருக்கும்..

செவ்வாய், 20 ஜூன், 2017

அக்ரோ ஹோமியோபதி பழ மரங்களுக்கான துணைப்பயிர்கள்



துணைப்பயிர்களின் பயன்கள்

*பூச்சிகளை தடுக்கிறது.

*மகரந்தச்சேர்க்கைக்கான வண்டுக்களை கவர்ந்தீர்க்கிறது.

*மரம் செழிப்பாக வளர மற்றும் பழங்கள் சுவையாக வருவதற்கான ஊட்டத்தை தருகிறது.

*துணைப்பயிர்கள் நிலத்தை ஈரமாக வைத்திருக்க உதவுகின்றன..இதனால் வறட்சியை தாங்கி பழமரங்கள் வளர உதவுகின்றன.

*துணைப்பயிர்கள் இருப்பது தேவையற்ற களைகள் வளர்வதை தடுக்கின்றன.
மேலும் இவை மடிந்து மண்ணுக்கு உரமாகின்றன.

பழமரங்களுக்கான துணைப்பயிர்கள்:
1.Comfrey( Symphytum). சிம்பைடம்
இது இயற்கை விவசாயத்தில் முக்கியமான துணைப்பயிர். மற்றும்.இது அடிபடுதல் மற்றும் எலும்பு முறிதல் போன்றவற்றுக்கு முக்கியமான ஹோமியோபதி மருந்து..

2.Nasturtium
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை
செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.

3.Chamomile
செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ருசியுள்ளது..

4.Coriander
கொத்தமல்லி

5.Dill
சதகுப்பை

6.Fennel பெருஞ்சீரகம்

7.Basil துளசி

8.Lemongrass ஒரு வகைப்புதினா

9.Mint புதினா

10.Artemisia wormwood (மக்கிப்பூ)

11.Yarrow காரப்பூடு

12.Daffodil,

13.tansy, ஆயிரந்தழைப்பூண்டு

14.marigold சாமந்தி

15.hyssop
16.garlic பூண்டு
17.spinach பசலைக்கீரை
18.mustard கடுகு
19.chives வெங்காய இனப்பூண்டு
20.Dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
21.sweet cicely மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.

இந்த துணைப்பயிர்கள் பெரும்பாலும் ஹோமியோபதியில் முக்கிய மருந்துகளாக இருக்கின்றன..இவற்றில் பல மூலிகைச்செடிகள், மருந்தாக மட்டுமில்லாமல் உணவுக்கும் பயன்படும்

பயிர்கள் நோயுற்றபிறகு இவற்றை மருந்தாக தருவதற்கு பதிலாக துணைப்பயிராக வளர்ப்பது பலவகை நன்மைகளை தருகிறது..

விளைச்சலுக்கு விளைச்சல்...அதுமட்டுமின்றி துணைப்பயிர்கள் பெரும்பாலும் கீரைகளாக இருப்பதால் அவற்றை தினசரி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.

விவசாயிகள் இந்த துணைப்பயிர்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிதான் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கவேண்டியதாக இருக்கும்..

ஏனெனில் இந்த துணைப்பயிர்களில் பலவகைகளின்
சரியான தமிழ்ப்பெயர்கள் தெரியவில்லை ..இணையத்தில் தேடியோ அல்லது மூலிகை அல்லது தாவரவியல் நிபுணர்களை கேட்டால் அதற்கான தமிழ்ப்பெயர்களை அறிய முடியும் ..

தேடிப்பயிரிடுங்கள்..
பலனடையுங்கள்...

அக்ரோ ஹோமியோபதி