பெண். வயது. 36
இவருக்கு வலது மேற்கையில் வலி. உடம்பில் கருப்பு கட்டி கட்டியாக இருக்கும்
இடங்களில் எல்லாம் கடுமையான வலி. குறுக்கு
வலி மற்றும் புட்டம் பகுதியில் வலி.
``உங்களுக்கு இந்த
நோய் எப்ப வந்தது?’’
`` ஐந்து வருடமாக
இருக்கிறது’’
``முதலில் எது
வந்தது?’’
``முதலில்
குறுக்கு வலி வந்தது. நரம்பை அழுத்துவதால்
வந்தாகச் சொன்னார்கள். பிறகு மேற்கை வலி
வந்தது. குறுக்கு வலி நீண்ட நேரம்
உட்கார்ந்திருந்தால் வரும். உட்கார்ந்து
எழும்போதும் வரும். கை வலி கை தூக்கினால்
வருது’’.
``என்ன மருத்துவம்
பார்த்தீர்கள்?’’
``பல இடத்தில்
பார்த்தோம். தண்டுவட நரம்பு அழுத்துவதால்
வலி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஊசி
போட்டு மருந்து சாப்பிட்டால் வலி குறையுது.
மருந்தை இரண்டு நாட்களுக்கு நிறுத்தினால் கூட வலி கூடிவிடுகிறது’’. மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பில்
கரும்புள்ளிகள் வந்து விட்டது. இப்ப அந்த
இடத்தில் எல்லாம் கடுமையான வலி வருது.
இந்தத் துயரர் அலோபதி மற்றும் சித்த மருத்துவம், அக்குபஞ்சர்
முதலிய மருத்துவம் பார்த்துள்ளார்.
``உங்களுக்கு வலி
வந்து ஐந்து வருஷமாச்சு. ஐந்து
வருடங்களுக்கு முன் உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்க’’.
``இப்ப எங்க
வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது’’
``நான் இப்ப
கேட்கலை, ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி
இருந்தீர்கள்’’.
``அதெல்லாம் 10 வருடத்திற்கு
முன் நடந்தது. அதெல்லாம் இப்ப
ஒன்றுமில்லை’’.
``பத்து
வருடத்திற்கு முன் என்ன நடந்து?’’.
``சார் 10 வருடத்திற்கு
முன் பிஸினஸ் பண்ணினோம். பிஸினஸ்
நஷ்டமாயிடுச்சு. கையிலுள்ள பணமும்
போயிடுச்சு. கடன் வாங்கிய பணம் 30 லட்சம் மேல்
பணம் போச்சு. வாங்கிய கடனுக்கு சொத்தை
விற்றுக் கொடுத்தோம்’’
`` பிஸினஸ் நஷ்டமாச்சு, பணம்போச்சு’’
அதனால என்ன ஃபீல் பண்ணினீர்கள்?
``கௌரவம்
போச்சுன்னு பீல் பண்ணினீர்களா?’’
``இல்லை. அதுதான் சொத்தை வித்து பணத்தைத் திருப்பிக்
கொடுத்துட்டோம். ஆனால் நல்லா இருந்திட்டு
மட்டமாகப் போய்விட்டோம். அதுதான் கவலை, அசிங்கமா
போச்சு’’
அவர்கள் சொன்ன விஷயத்திலிருந்து ஒன்று
புரிந்தது. அவர்கள் தொழில் போனது கவலை
இல்லை. பணம் போனது கூட அவ்வளவு பாதிக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலை தாழ்ந்து போச்சு. அதனால்
அசிங்கமாகப் போச்சு.
மேற்கூறிய அவர்கள் கூற்றிலிருந்து கீழ்கண்ட
குறிகள் தருவிக்கப்பட்டன.
MIND - AILMENTS FROM
- business failure
MIND - AILMENTS FROM
- money; from losing
MIND - AILMENTS FROM
- position; loss of
MIND - DELUSIONS -
insulted, he is
மேற்சொன்ன குறிகளின் அடிப்படையில் nux vomica 1M - 2 வேளை மருந்தும்
மருந்தில்லா மருந்து 1 மாதத்திற்கும் கொடுக்கப்பட்டது.
ஒரு மாதம் சென்று வரும்போது அவர்களுக்கு 90%
குணமாகியிருந்தது.
பின்பு மறுபடியும் தொடர் மருந்து மேலும்
ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்பட்டது.
உடலில் இருந்த கரும்புள்ளிகளும் காணாமல் போனது மட்டுமில்லாமல் தற்போது எந்த வலியுமில்லை.
அவர் முற்றிலுமாகக் குணமாகி வரும்போது
அவர்களுடைய இரண்டு மகன்களையும் வைத்தியத்திற்கு அழைத்து வந்தார்.
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-10
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....