அக்னஸ் காஸ்டஸ்
AGNUS CASTUS
CHASTE TREE
VERBENACEAE
நோய் கூடுதல்< :
மிதமிஞ்சிய
உடலுறவு, அதிக அளவு பழு தூக்கியதால் உண்டான சுளுக்கு, தொடுதல், நகர்தல், மாலையில்.
நோய் குறைதல் >:
ஓய்வு,
அழுத்துதல்.
மியாசம் : சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ்.
ம.வே.ப. : நரம்புகள், ஆண், பெண் உறுப்புகள்.
பொது – இருபாலாருக்கும் உகந்தது. அதிகம் ஆண்களுக்கு சிறந்தது. மிக அதிக அளவு உடலுறவில் ஈடுபட்டதால்
பார்வைக்குக் கிழவர்போல் இருத்தல்.
பாலுணர்வு முழுவதும் இழந்து விட்டதாகவும், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்துள்ளதாகவும்
நோயாளி கூறுவார். அடிக்கடி வெட்டை நோய்த் தாக்கப்பட்டவர்கள். அதிக சுயஇன்பம் பெற்றவர்கள். மணமாகாதவர்களின் நரம்பு பலவீனம். சுளுக்கு அதிகளவு
தசை இழுபடுதல் வலியால் பற்களைக் கடித்தல். கண்களில் தினவு. புகையிலை பயன்படுத்துவதால் இருதயம் வேகமாகச் செயல்படுதல். ஒழுக்கங்கெட்டதால் ஏற்பட்ட சோர்வு. அடிக்கடி ஆண்குறி விறைத்தாலும் காமமூட்டும் எண்ணம்
இருக்காது. பெண்ணைக் கட்டித் தழுவும்போது விந்து
தானாக வந்துவிடுவதாக நோயாளி கூறுவார். கக்கில
சுரப்பி விரிவடைவதால் சுக்கில நீர் வருதல். உடல் முழுவதும் வீக்ககமுள்ள உணர்வு நிணநீர்
உடலமைப்பு.
மனம் - அதிகளவு ஞாபகமறதி. இறப்பைக் கண்டு பயம். சீக்கிரம் இறந்துவிடுவோமே என்ற கவலையால் எதைச் செய்து
என்ன பயன் என எண்ணுதல். அடிக்கடி இறந்து விடுவேன்
எனச் சொல்லுதல். நம்பிக்கையின்மை, பாலுணர்வுக்
குறைவால் துக்கப்படுதல். மனத் தடுமாற்றம். நடந்த நிகழ்ச்சிகளைக்கூட நினைவுக்குக் கொண்டு வர
இயலாமை. துணிவின்மை, உற்சாகமின்மை, எளிதில் எரிச்சலடைதல், கோபப்படுதல். நரம்புக் சோர்வு.
மீன் வாடை, கஸ்தூரி மணம் வீசுவதாக ஒரு பொய்யான பிரமை. கெடுதல நேரப்போகிறது என்று சொல்லும் மனப்பாண்மை. எண்ணத்தை ஒருமுகப்படுத்த முடியாமையால் படித்ததை
மறந்துவிடுதல். மகிழ்ச்சி மாறி விசனப்படுதல்.
பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றும், வாங்க வேண்டியதை வாங்காமல் மறந்து விடுதல். வாங்கியப் பொருள்களை அங்கேயே விட்டு விட்டு வருதல். உடல் முழுவதும் கடித்தெறியும் தினவு குறிப்பாகக்
கண்களில் இருத்தல்.
தலை – பொறிகளில் அடிபட்டது போன்ற வலி, தூசி,
புகை சூழ்ந்த அறையில் இருந்தாலும் ஏற்படும் தலைவலி போலிருத்தல். ஒரே இடத்தில் உற்று நோக்குவதால் வலி குறைதல். படிப்பதால் பொறிகளில் இறுக்கும் வலி. தலைக்கனத்தாலும், கழுத்தில் அழுத்தத்தாலும் தலையானது
முன்பக்கமாக விழுவது போலிருத்தல். தலை மீது
அழுத்தமும், சில்லிப்பும் இருந்தாலும் தொட்டால் அவ்விடம் வெப்பமாக இருத்தல்.
கண் - கண்பாவைகள் விரிவடைந்திருத்தல்.
ஒளியால் கண் கூசுதல் மாலையில் படித்தால் கண்களில் எரிச்சல். கண்களின்மீதும், புருவங்களிலும், அரித்துப் பிடுங்கும்
தினவு. சொறிவதால் குறைதல் மீண்டும் ஏற்படல்.
காது – மணியோசை இரைச்சல். கேட்பது கடினம்.
மூக்கு – மீன் வாடை, கஸ்தூரி மணம், பின்
மூக்கில் வலி, அழுத்தினால் குறைதல்.
முகம் - கீழ்த்தாடைப் பற்குழியில் பிளக்கும், கிழிக்கும் வலி. கன்னங்களில் அரிக்கும் தினவு. ஊரும் உணர்ச்சி.
வாய் -
வாய் சூடான உணவோ, வெந்நீரோ பற்களில் பட்டால் வலி. வாயிலும், ஈறுகளிலும் புண்கள். செம்பு, கசப்பு, உலோகச் சுவை. நாக்கின் மீது வெள்ளைப்படிந்திருத்தல்.
தொண்டை – தொண்டைக் குழியில் அரிக்கும் தினவு.
இரைப்பை – உண்ணும் ஆவல் (ஹஞஞநுகூஐகூநு) குறைதல். தாகமின்மை.
விக்கலால் கோபம், சிடுசிடுப்பு ஏற்படுதல். நிற்கும்போது இரைப்பைக் குழியில் குமட்டல் தோன்றுதல். குடிக்க வெறுத்தல். கொழுப்பு உணவைத் தின்றதால் ஏற்படும் குமட்டல் போலிருத்தல்.
ஏப்பம் சிறுநீர் வாடை போல் வீசுதல்.
வயிறு – தூங்கும்போது வயிற்றில் இரைச்சல். மண்ணீரல் வீங்கிக்,
கடினமாகிப் புண்ணாக இருத்தல். கல்லீரல் பகுதியில்
தொடர்ந்து வலி. தொட்டால் அதிகரித்தல். குமட்டலுடன் குடல்கள் கீழிறிங்குவது போலிருப்பதால்
அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமென விரும்புதல்.
மிருதுவான மலத்தைக் கழிக்கக் கடினம்.
வயிற்று நீர்க்கோப்பு ஆசனவாயில் ஆழமான வெடிப்புகள் நடிக்கும்போது அடிக்கடி
வலி தருதல். குழந்தைகளின் வயிற்றுப்போக்கு. மலத்தை முக்கி வெளியேற்றும்போது சுக்கில நீர் வருதல். கீரிப்பூச்சிகள்.
சிறுநீர் வழி – சிறுநீர்ப் பையில் வலி. அடிக்கடி அதிகளவு சிறுநீர்க் கழித்தல். சிறுநீர் கழிக்கும் போது சில நேரங்களில் வயிற்றில்,
சிறுநீரகங்களில் வலி.
ஆண் - ஆண்குறியில் தினவு. மஞ்சள் நிறக் கசிவு. உறுப்பு குளிர்ந்து, தளர்ந்து, தொள தொளத்துச் சிறியதாகி,
பாலுணர்வு முழுவதும் இழந்த நிலை. அடிக்கடி
வெட்டை நோயால் தாக்கப்பட்டவருக்கு ஏற்படும் கசிவுடன் கூடிய ஆண்மையின்மை விரைகள்
குளிர்ந்து, வீங்கி, வலியோடு கடினமாக இருத்தல்.
நாட்பட்ட சளி போன்ற கசிவால் பாலுணர்வுற்றோ, விரப்பற்றோ காணப்படுதல். தானாக விந்து வெளியாதல்
பெண் - பால் சுரக்காமையுடன் கவலை. வெள்ளைப்பாடு
துணியில் மஞ்சள் நிறக் கறையை ஏற்படுத்தும்.
உடலுறவில் அருவருப்புக் கொள்ளுதல்.
மலடு குறைந்த மாதவிடாய், உறுப்புக்கள் தளர்வுடன் வெள்ளைப்பாடு
தன்
உணர்வை இழுக்கச் செய்யும் நோயாகிய ஹிஸ்டீரியாவில் இருதய படபடப்புடன்
மூக்கில் இரத்தம் ஒழுகுதல். குழந்தை பிறந்து
ஒரு மணி நேரத்திற்குள் ‘செத்தை’ வெளியாகாமல் தங்கி விடுதல்
மூச்சுப்பகுதி – மாடிப்படிகளில் ஏறும்போது மூச்சடைப்பு. நுரையீரல்களில் வறண்ட உணர்வு. மார்பு எலும்புப் பகுதியில் அழுத்தம். ஆழ்ந்து மூச்சிழுத்தலால் அதிகரித்தல். படுக்கப் போகுமுன் இருமல்.
இருதயம் - நரம்பு நோயால் வேதனைப்படுகிற இளைஞருக்கு
புகையிலையைப் பயன்படுத்தியக் காரணத்தால் இருதயம் மிக வேகமாகச் செயல்படுதல்.
கழுத்து, முதுகு – கீழ் முள்ளெலும்பில் ஆழ்ந்த
கூர்ையான வலி.
கை, கால்கள் – கை விரல் மூட்டுகளில் வீக்கம். கிழிக்கும் வலி. முடிச்சுகள்.
குளிர்ந்த முழங்கால்கள். நடக்கும்போது
பாதங்கள் திரும்புதல். கால் விரல் மூட்டுகளில்
வலி அதிகரித்தல்.
தோல் – புண்களைச் சுற்றி மாலையில் தினவு.
தூக்கம் - கவலையால் தூக்கமின்மை. ஆவலானக் கனவுகள. அடிக்கடி பயத்தால் எழுதல்.
காய்ச்சல் – பாதங்கள் ஈரமாவதால் தோன்றிய
பின் விளைவுகள். உள்ளே சில்லிப்பும், நடுக்கமும்
வெளியே வெப்பமாகவும் இருத்தல். குளிரும், சூடும்
மாறி வருதல். திறந்த வெளிக்காற்றில் நடந்தால்
கைகள் வியர்த்தல்.
அளவு – 1 சி முதல் 6 சி.
ஒ.கு.ம. – கார்ப் அனி. செலிடோ. நக்ஸ்.வா.
மு -
காம்பர், நேட்.மூர்.
உ – ஒலியாண்டர், பாஸ்-ஆசிட்.
ம.செ.கா. – 14 நாள்.
முக்கியக் குறிப்புகள் - அக்னஸ் காஸ்டஸ்- விறைப்பு இல்லை. உறுப்பு குளிர்ந்து, தளர்ந்துள்ளதால் உடலுறவில்
விருப்பமில்லை. அதிக அளவு அனுபவித்ததால் இளமையில்
முதுமையானவர். கோனியம் - ஆசை அதிகம், சக்தி குறைவு, பாலுணர்வு இச்சையை அடக்டிகயதால்
பாதிப்புகளுக்கு ஆளானவர். பாலுணர்வு பயத்தால்
குறைந்தளவே விறைப்பு ஏற்படுதல். சபால் செருலூட்டா
– புணர்ச்சியின்போது விந்து வெளிவரும் நேத்தில் வலி. விரை இளைத்து, உறுப்பு குறிர்ந்து, ஆண்மை இழந்து
விடுதல். செலினியம் - புணர்ச்சிக்கு முயல்கிறார். ஆனால் உறுப்பு தளர்ந்து விடுகிறது. விந்து வாடையற்று, நீர் போலாகிறது. தூங்கும் போது விந்து கசிகிறது. உடலுறவில் அதிகப் பேரவாவால், எப்படியெல்லாமோ ஈடுபடலாம்
என்ற எண்ணம். இருப்பினும் விறைப்பின்போது ஆண்மை
முவதும் இழந்து வாடுதல். புணர்ச்சி முடிந்து
விட்டால் எளிதில் கோபப்படுவார். கலாடியம்
- உறுப்பு பார்ப்பதற்குப் பெரிதாக, உப்பி, தளர்ந்து, குளிர்ந்து, வியர்த்து இருத்தல். பாதி தூக்கத்தில் விறைக்கும். விழித்து விட்டால் முழுவதும் அடங்கிவிடும். உணர்விழந்தவர். உணர்ச்சியும், மனவெழுச்சியின்போது உறுப்பு தளர்ந்து
விடுதல். கட்டித் தழுவும் போது உணர்வோ, விந்து
வருவதோ இல்லை. காப்சிகம் - ஆண்மையற்றத் தன்மையுடன்
விரைப்பை குளிர்ந்திருத்தல்