வெள்ளி, 21 ஜனவரி, 2022

3. மருத்துவ முன்னோடிகள் ஓமியோபதி மருத்துவம் மேஜர் தி.சா.இராஜூ

 


என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க 

உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே!  (பட்டினத்தார்) 


முன்னோடிகள் 

சாமுவேல் கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஹானிமானின் வாழ்க்கை, அவரது மருத்துவச் சாதனைகள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளுமுன்பு, அவருக்கு வழித்துணையாக நின்றவர்கள் யாவர் என்று தெரிந்து கொள்வது பயனுடைய தகவல்களாகும். மருத்துவத்துறையில் இத்தகைய முதல் நிலையை எய்துவதற்கு அவருக்குக் கிடைத்த அடித்தளம் எது? 







ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் தன்வந்திரி, ஸுஸ்ருதர், சரகர், போகர் ஆகியோர் கொண்டாடப்படுவது போல் மேல்நாட்டுச் சிகிச்சை முறையின் ஆதிப்பிதாவாக, கிரீஸ் நாட்டு ஹிப்போக்ரேடஸ் மதிக்கப்படுகிறார். இவர் உலகம் சுற்றிய கிரேக்க மருத்துவரான டிமாக்ராடஸின் மாணாக்கர். கி.மு. 460 - ல் காஸ் என்ற சிறிய தீவில் பிறந்தவர். ஆன்கிளிபியன் ஆலயத்தைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னாளில் அங்கேயே ஆசிரியப் பணியையும் மேற்கொண்டார். தரேஸ், தெஸ்ஸாலே, டெலோஸ், ஏதன்ஸ் ஆகிய கிரேக்க நகரங்கள் இவருடன் தொடர்பு கொண்டவை. தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு லாரிஸ்ஸா நகரில் இயற்கை எய்தினார். 


உணவே - நஞ்சு

'ஒருவனது உணவு மற்றவனுக்கு விஷம்' என்று உறுதியாகக் கூறியவர் இந்தப் பெருமகன். நோயாளியின் உடல்நிலை, அவனுடைய அன்றாட வாழ்முறை, தொழில்வகை, குடும்பப்பின்னணி ஆகியவற்றைப் பற்றி எல்லாம் தெளிவுறத் தெரிந்து கொள்வது ஒரு மருத்துவனுக்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எண்பத்து ஏழு நூல்கள் எழுதினார். எலும்பு முறிவுகளும், எலும்புப் பிசகுகளும் என்ற அவருடைய சிறந்த மருத்துவநூல், அந்தத் துறையில் ஆதாரக் கிரந்தம். மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு அவருடைய நூல்களே பாட புத்தகங்களாக இருந்தன. இவைகள் அனைத்தும் 'ஹிப்போக்ரேடஸ் தொகுப்பு' என்று பெயர் பெறும். 


கிரேக்க அறிஞர்களான அரிஸ்டாடில், ப்ளாட்டோ ஆகியோர் இவருடைய பெயரை மரியாதையுடன் குறிப்பிடுகின்றனர். அலக்சாண்ட்ரியா மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் இவர்களது குறிப்புக்களைத் தொகுத்தனர்  இவருடைய ஆதாரபூர்வமான வரலாற்றை கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஸோரன்ஸஸ் எழுதினார். டபிள்யூ.ஹெச்.எஸ்.ஜோன்ஸ் (1923) டபிள்யூ.என், மான் (1950) ஆகியோர், ஹிப்போக்ரேடஸ் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த மேதையின் அடிப்படைக் கருத்துக்களை ஹானிமான் தமது ஆராய்ச்சிக்குத் துணை கொண்டார்.


 






ஸெல்ஸஸ்

 அடுத்ததாக ஸெல்ஸஸ் ஒளலஸ் கார்னீலயஸ் என்ற மருத்துவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். லத்தீன் மொழியில் டெ- மெடிஸினா, ப்ரூக்மியம் ஆகிய நூல்கள் எழுதியிருக்கிறார். இந்த மேதையின் அடிப்படைக் கருத்துக்களையும் ஹானிமான் தமது ஆராய்ச்சிக்குத் துணைகொண்டார்.  இவை மருத்துவ நெறியின் வேதங்கள்.


உணவிலும் தினசரி நடவடிக்கையிலும், சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்பது நோயாளிக்கு நல்லது. மருத்துவனுக்கும் துணைநிற்கும் என்ற கருத்தை முதன்முதலாக வலியுறுத்தியவர் இவர்தான். இருதயம், மூளை, ஆகியவைகள் பாதிக்கப்பட்டால், இந்தக் கட்டுப்பாடுகள் பெரிதும் துணைநிற்கும் என்றும் இவர் போதித்தார். சத்திர சிகிச்சையில் இவர் ஆயுர்வேத நிபுணரான சரகரை ஒத்தவர். உடலில் தோன்றும் கட்டிகளை மெல்லிய நூலை இறுக்கி அகற்றும் லிகேசர் முறை, மொட்டுக்கள் உருவத்தில் எழும்பும் சதைத் திரட்சியை வெட்டிப் பிதுக்கும் லித்தோமிமுறை, ஹெர்னியா சத்திரசிகிச்சை ஆகியவை குறித்துத் தெளிவான வழிமுறைகளை வகுத்தார். கிரேக்க மருத்துவ முறை இவருடைய ஆராய்ச்சிக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.



 இவருடைய மருத்துவ நூல்கள் அனைத்தையும் மூன்று தொகுதிகளாக டபிள்யூ.ஜி. ஸ்பென்ஸர் மொழிபெயர்த்திருக்கிறார். இவருடைய மருத்துவத் திறமையைப் பெரிதும் பாராட்டி எழுதியிருக்கிறார்.. மருத்துவத்தைத் தவிர, சட்டம், இராணுவ விதிமுறைகள், தத்துவம் ஆகியன குறித்தும் ஸெல்ஸஸ் எழுதினார். இத்தகைய மருத்துவமேதையை இவருடைய சமகாலத்து அறிஞர்கள் அதிகம் பாராட்டவில்லை. 








பாரா ஸெல்ஸஸ் 

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தியோ பாரஸ்டஸ் , பொம்பாஸ்டஸ் வான்ஹோஹன் ஹெய்ம் , சுவிட்ஜர்லாந்து நாட்டவர் . இவர் பேஸல் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் . ஸெல்ஸஸின் வாழ்க்கையும் , மருத்துவ நெறிகளும் இவரைப் பெரிதும் ஈர்த்தன . அவற்றை முறையாக ஆராய்ந்தார். அதன் அருமை பெருமைகளை உலகுக்குக் கூறினார். தம்மையே பாராஸெல்ஸஸ் (ஸெல்ஸலை ஒத்தவர்) என்று அழைத்துக் கொண்டார். வேதி இயலுக்கு மருத்துவத்தில் சிறப்பிடம் தந்தவர் இவர் தான். மருத்துவத் துறையோடு நிற்காமல் தொழிலாளர்களின் பிரச்சனைகளிலும் இவர் கவனம் செலுத்தினார். பூமிக்கடியில், சுரங்கங்களில் அவர்கள் பணிபுரிவதால் ஏற்படும் தனித்தன்மையுடைய நோய்கள் குறித்து அவர் ஆராய்ந்தார். அந்த நோய்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியபோதுதான் அரசியல்வாதிகள் இவரைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக அவர் பேஸல் நகரத்தையே விட்டு நீங்கும்படியான நிலைமை ஏற்பட்டது.



உடல் - கலவை

மனிதஉடல் பேரண்டத்தின் மிக நுணுக்கமான பகுதி. இது உப்பு, கந்தகம், பாதரசம் ஆகிய பொருள்களினால் ஆன மிசிரம் என்று அறிவித்தார். தொடர்ந்து, ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவசக்தி என ஒன்று உறைகிறது. அது வயிற்றுப் பகுதியில் உள்ளது. மனிதன் உண்ணும் பொருள்களில் உள்ள நல்லவற்றை நஞ்சிலிருந்து அது பிரித்தெடுக்கிறது என்றும் உறுதி கூறினார். அது மட்டுமன்றி மருத்துவனுக்கு உடற்கூறு மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அவனுக்குப் பௌதிகம், வேதிஇயல், வானநூல், சமயம் அனைத்திலும் அறிமுகம் தேவை என்றும் வற்புறுத்தினார்.



கோளும், மீனும்

வானத்திலுள்ள கோள்களும், மற்ற இயற்கை ஆற்றலும், மண்ணிலுள்ள எல்லா உயிர்களிலும் தமது ஆளுகையைச் செலுத்துவதைப் போல், மனிதனுடைய உள்ளத்திலும், உடலிலும் மாறுதல்களை உண்டாக்கும். அவனுடைய துயாத்திற்கும், மகிழ்ச்சிக்கும், பேரண்டத்திலுள்ள மீன்களும் கோள்களும் காரணம், என்று துணிந்து கூறினார். மனித உடலுக்குள் ஆத்மா என்ற தத்துவம் உறைகிறது. அதற்கும், எல்லையற்ற பெருஞ் சக்திக்கும், இடையறாத தொடர்பு இருக்கிறது. ஆகவே மருத்துவனுக்கு மெய்ஞான அறிவும் மிகமிக முக்கியம் என்று அழுத்திக் கூறினார்.


இந்தக் கொள்கைகள், அவருடைய சமகால மருத்துவர்களைத் திடுக்கிட வைத்தன. அவர்கள், இவரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். முறையாக மருத்துவக் கல்வி பெறாத இவருக்கு மருத்துவத்தைப் பற்றிப் பேச எத்தகைய அதிகாரமும் கிடையாது என்று ஓலமிட்டு இவரை விரட்டினார்கள்.



புதிய உத்தி

என்றாலும், தமது முப்பத்தி ஆறாவது வயதில் இவர் மீண்டும் பேஸல் நகரத்திற்கு வந்தார். தமது கொள்கையை விளம்பரப்படுத்துவதற்கு இவர் புதியதோர் உத்தியைக் கையாண்டார். அந்த நாளில் மருத்துவ ஆதார நூல்களாகக் கருதப்பட்ட காலன் , ஆவிஸென்னா ஆகியோருடைய பெரிய புத்தகங்களைப் பிரசங்க மேடையில் பலர் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்துவார். குழுமியுள்ள மக்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். தொடர்ந்து அவர் தமது பேருரையை வெகு சிறப்பாக நிகழ்த்துவார். இத்தகையவர்களுடைய வாழ்முறை, மருத்துவக் கொள்கைகள், மக்களிடையே அவை ஏற்படுத்திய பரபரப்பு அனைத்தையும் ஊன்றிக் கவனித்த பின்புதான் ஹானிமான் தமது கருத்தையும் எடுத்துரைக்கத் துணிவு பெற்றார். என்றாலும், எத்தகைய எதிர்ப்புக்கள்? 


தொடரும்........


சனி, 1 ஜனவரி, 2022

ஹோமியோபதி மருத்துவம் நூல் தொடர் 2 மேஜர் தி.சா.இராஜூ

 2. மூன்று வகைத் தோஷங்கள் 


மருத்துவம் புரிபவன் ஓரளவு வானநூலும் அறிந்திருப்பது நலம். ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அதற்கென்றே உடல்வாகு, நோய்த்தன்மை ஆகியவற்றை உடன் கொண்டு பிறக்கிறார்கள்

-ஆயுர்வேதம். 


தமிழ் அறம்

 'எல்லாப் பொருளும் இதன்பால் உள'    என்று வள்ளுவரின் நூலைப் பாராட்டுகிறார் மதுரைத் தமிழ்நாகனார். இந்தப் பேரறத்தை ஆழ்ந்து படிக்கும்போது நமக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. மனிதகுலம் செம்மையாக வாழ்வதற்கு நோயில்லாத சமுதாயம் தேவை என்று செந்நாப் போதார் கருதினார். அதனால் அவர் மருத்துவத்திற்கு  தனி அதிகாரம் வகுத்தார். அதில் முதல் குறள். 


மிகினும்  குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. 


மருத்துவச்சாத்திரத்தின் அடிப்படையை அறிந்திராவிட்டால் இந்தப் பாடலுக்குப் பொருள் காண்பது கடினம். தெய்வப் புலவர் இங்கு ஆயுர்வேத மருத்துவம் குறித்துப் பேசுகிறார் . அந்த விஞ்ஞானம் கூறுகிறது : மனித உடல் மூன்று தத்துவங்களால் ஆனது: இவை சீரான அளவில் இருந்தால் மட்டுமே உடல் சீராக இயங்கும். அந்தத் தத்துவங்களில் ஒன்று குறைந்தாலோ, அல்லது மிகுந்தாலோ உடல் இயக்கம் ஒழுங்காகச் செயல்படாது. 


வேறுபாடு ஏன்? 


கோடிக்கணக்கான மாந்தர்களையுடையது இந்த மண்ணுலகம், எல்லோருக்கும் உடலுறுப்புக்கள் மேற்பார்வைக்கு ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால் இரண்டு  மனிதர்களுடைய முகத்தோற்றம், குண இயல்பு ஆகியவை ஒன்றாக இருப்பதில்லை. இரட்டைக் குழந்தைகளைக் கூட நெருங்கிய உறவினர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. தோற்றமும், குண இயல்பும், நூறு சதவிகிதம் ஒத்திருக்கும் இரண்டு உயிர்களைக் காண்பதே அரிது. இது ஏன்? 


மனித உடல் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. அவற்றின் இணைப்பினால் உடல் தோன்றுகிறது.  இறுதியில் பூதங்களுடன் கலந்து ஒன்றிவிடுகிறது. ஓர் உயிரின் பிறப்புக்குக் காரணமாக இருக்கும் வேளையில் அமைந்துள்ள இந்தப் பிரகிருதி தத்துவம் மறுகணத்தில் அதே நிலையில் இருப்பதில்லை. மனிதர்களிடையே தோன்றும் உருவ - உள்ள மாறுதலுக்கும் இதுவே காரணம்.

மூன்று வகை தோஷங்கள்


 மூன்று அடிப்படை


 ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் இவைகளின் பாகுபாட்டை மூன்றாகக் குறுக்கினார்கள். அவைகள், காற்று ( இதில் ஆகாசம் உட்படும் ) வெப்பம், தட்பம் ( இதில் நீரும் நிலமும் அடக்கம் ) ஆகியவை. இந்த மூன்றைத்தான் இந்திய மருத்துவம், வாதம், பித்தம், கபம் என்று பகுத்தது. இந்த மூன்றிற்கும் அதிபதிகளாக வாயு, சூரியன், சந்திரன் ஆகியவர்களை நியமித்தார்கள். ஆக, இந்த மூன்று ஆற்றல்களின் நிலை, அப்போது பிறப்பிக்கப்படும் உயிரின் தன்மையை நிர்ணயிக்கிறது என்பதை உறுதி செய்தார்கள்.


 இவர்களுடைய பொதுவான இயல்புகள் எவ்வாறிருக்கும்? வாயுவின் தன்மையை மிகுதியாகப் பெற்றவர் எப்போதுதும் விரைவாகவே நடப்பார். அவரால் சோம்பலாகவே இருக்க முடியாது.

 (காந்தியடிகளின் நடைவேகம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. நேரு இரண்டிரண்டு படிகளாகவே ஏறுவார், இறங்குவார். )


வெப்பம் - இதைப் பித்தம், என்று நூலோர் குறிப்பிட்டார்கள். பித்தம் மிகுதியாக உடையவனின் தலையில் முடி முளைகள் கருகிவிடும், அல்லது வெளுத்துவிடும். (வழுக்கைக்கு மருந்து உண்டா?)  ஆனால் தட்பம் மிகுந்த  உடலில் நிறைய ரோமம் முளைக்கும். எந்தக் குழ்நிலையிலும் நிலத்தைப் போல் அமைதியாக இருப்பவன் அவன். அந்த உடலில் நீரின் தன்மை அதிகமாக இருக்கும். . இத்தகையவர்களைச் சந்திரனின் தன்மை உடையவர்கள்  என்றனர் இந்திய மருத்துவர்கள்.


   ஜெர்மனி 


யுனானி, அலோபதி மருத்துவ முறைகள் இந்த கொள்கையை எந்த அளவுக்கு எற்றுக் கொள்கின்றன என்பது தெரியாது. ஆனால் சித்த வைத்தியம் இந்த அடிப்படைக்கு உடன்பாடு தெரிவிக்கிறது. இந்தியநாட்டின் மருத்துவ வல்லுநர்கள் இந்த நியதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹானிமான் இந்த அடிப்படையை ஒத்துக் கொள்கிறார்.


 ஜெர்மனி நாட்டில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு அதிகம். இந்தியத் தத்துவங்களுக்கு அங்கு அதிக மதிப்பு. சாகுந்தலத்தைப் போன்றதோர் கவிதையை உலகில் எந்த மொழியிலும், எந்தக் கவிஞனும் எழுதியது கிடையாது என்று கூறுகிறார் மாமேதை கதே. அவர் இந்த நாடகத்தை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் . ( தெய்வீகச் சாகுந்தலமெனும் நாடகம் செய்த தெவர் கவிதை? - இது பாரதியின் கேள்வி.) இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த நா(ட்)சிக் கட்சி தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டது. ஸ்வஸ்திகாவைத் தமது கட்சியின் அடையாளமாக ஏற்றுக் கொண்டது. ஸ்வஸ்திகம் என்றாலே நல்வாழ்வு என்பதுதான் பொருள். நோய் சொஸ்தமாகிவிட்டதா? என்று நாட்டுப்புறத்தில் வினவுவது வழக்கம்.) 


மருத்துவ மேதை ஹானிமான் பல மொழிகள் கற்றவர்.  ஆனால் சமஸ்கிருதம் படித்ததாகத் தெரியவில்லை. என்றாலும் ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையைப் பல இடங்களில் எழுத்துக்கெழுத்து பின்பற்றியிருக்கிறார்.




அடியொற்றி


 'உஷ்ணம், உஷ்ணேன சீதளம்', என்பது ஓர் இந்திய மருத்துவத்தத்துவம். இதன் பொருள், வெப்பத்தை, வெப்பமுள்ள பொருளே தணித்துக் குளுமையை உண்டாக்கும் என்பதாகும். இதை அப்படியே பின்பற்றுகிறார் ஹானிமான். வெப்பமான உடல்வாகுள்ள நோயாளிக்கு, வெப்பமான மருந்துகளையே கொடு, என்று அவர் வரைகிறார். உடலில் வெப்பத்தன்மை உடையவர், குளிர்வாகுடையவர் என்றெல்லாம் மேலைமுறையில் பாகுபாடு கிடையாது. சகட்டு மேனிக்கு, பொடி, வில்லை, ஊசி மருந்துகள். அப்போதைக்கு நோய் அமுங்கினால் சரி. பின் விளைவுகளை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்? 


விஷம் விஷஸ்ய சமனம்', என்கிறது ஆயுர்வேதம். உடலிலுள்ள நஞ்சை முறிப்பதற்கும் அதே வகை விஷம்தான் என்பது ஆதாரம்.  ஹோமியோபதியின் அடிப்படையும் இதுவேதான்.( ஸிமிலியா, ஸிமிலிபஸ், க்யூரெண்டர், என்பது இதற்கேற்ற ஜெர்மானிய மொழி வாசகம்)  ஒத்த இயல்புள்ள மருந்து மட்டுமே நோயாளியைக் குணப்படுத் தும் என்பது ஆதார சித்தாந்தம்.


 ஒரு மருந்துப் பொருளைக் கடைவதனாலும், நீர்க்கச் செய்வதாலும் மட்டுமே அதன் ஆற்றல் மிகுதியாகிறது என்ற தத்துவத்தின் மூலமே ஹோமியோபதி இயங்குகிறது. அதே  கருத்தை வலியுறுத்துகிறது ஆயுர்வேதம், மர்த்தனம் -  குணவர்த்தனம். (மர்த்தனம் - கடைவது. குணம் - ஆற்றல். வர்த்தனம் - அதிகமாகிறது.)


 குறள் நெறி 


நோயாளி, மருத்துவன், மருந்து; அதை அண்மையில் இருந்து தருபவன் என்ற நுண்ணிய நெறியை ஹானிமானின் . ஆர்கனான் - மருத்துவ சாத்திரம் படிப்படியாக, தெளிவாக, நிர்ணயிக்கிறது; போதிக்கிறது. அதை ஆழ்ந்து படிக்கும் போது இந்த மேதை, நமது குறளை எப்படிப் படித்திருக்க முடியும் என்று வியப்பில் மூழ்காமல் இருக்க முடிவதில்லை . ஏனெனில் வள்ளுவர் தமது நெறியின் இறுதிப்பாவாகக் கீழ்க்கண்டவாறு வரைந்துள்ளார். 


உற்றவன் தீர்ப்பான் மருந்து  உழைச் செல்வானென்று

 அப்பால் நாற்கூற்றே மருந்து.  (நட்பியல்- மருந்து) 


'இதன்பால் - இல்லாத எப்பொருளுமில்லையால்', என்று தமிழ்நாகனார் கூறியது எத்தனை பொருத்தமாக அமைந்துவிட்டது?


 மருத்துவ சாத்திரம் என்பது வள்ளுவர் அறிந்ததில் மிகச் சிறிய பகுதியே ஆகும். அவர் ஒரு ஞானக் கடல்.



வியாழன், 30 டிசம்பர், 2021

ஹோமியோபதி மருத்துவம் மேஜர் தி.சா.இராஜூ

 பகுதி ஒன்று 


தோற்றமும் வளர்ச்சியும்


 1.உணவு மருந்து 


 மதலையின் இதயமும் , நடுவயதினரின் மனத்திடனும் , இளைஞனின் உற்சாகமும் , மூத்தவனுடைய அறிவு முதிர்ச்சியும் , தேவர்களே , என்னுள் எப்போதும் நிலைத் திருக்க அருளும்! 

( மகாகவி பாரதி ) 



மருத்துவ நெறி 

மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் , சோர்வின்றி பணிபுரிவதற்கும் நோயில்லாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மக்கள் நோய்வாய்ப்படுவார்களேயானால் அதை நீக்கும் பொருட்டுப் பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன . அவையே பதி ( Pathy ) அல்லது பத்

 ( Path ) எனப்படும் . பதி என்றால் வழி, நெறி என்று பொருள் . இந்த வழி, அல்லது நெறி பல தரத்தன. அனைத்துமே, மனிதகுலம் சீராக இயங்கும் பொருட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட முறைகள். 


  ஆங்கில, அல்லது மேலைநாட்டு முறை அல்லோபதி என்று அழைக்கப்படுகிறது . இதன் ஆதிகர்த்தா ஹிப்பாக்ரேடஸ் . இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் . ( கி.மு .460 ) இன்றும் மருத்துவக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்று , மருந்தை வாழ்நெறியாகக் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அவருடைய பெயரில் ஆணையிட்டு செயல் நெறி உறுதியைக் கைக்கொள்கிறார்கள்.


 மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை நோக்கிப் படை எடுத்து வந்தபோது அவருடன் வந்த சில மருத்துவர்கள். இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடி அமைந்தார்கள் . அவர்களுடைய முறைக்கு யுனானி என்று பெயர் . கிரீஸ் நாட்டை அவர்கள் யூனான் என்று அழைத்தார்கள்.


 நம் நாட்டில் இப்போதும் காணக் கிடைக்கும் மருத்துவ நூல்கள் நமக்கு வியப்பை ஊட்டுகின்றன. அதர்வணவேதம், அதர்வ ஸம்ஹிதை, ஆயுர்கிரந்தம், ஆயுர்வேதம், அக்னிபுராணம், அக்னி வேச ஸம்ஹிதை ,  பேல ஸம்ஹிதை , ஸுச்ருத ஸம்ஹிதை , காச்யப ஸம்ஹிதை , சித்த வைத்திய நூல்ஆகியன சில.

 இவைகளிற் பல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.


   பாரத நாட்டின் நான்காவது வேதமான அதர்வணத்தில் ஆயுர்வேத மருத்துவ நெறி விளக்கப்படுகிறது . பகைவர்களின் தாக்குதல், காலநிலை , நச்சுப்பிராணிகள் ஆகியவைகளினால் மனித இனத்திற்கு ஏற்படும் தீமைகளுக்கு மாற்று அளிப்பதற்காக ஏற்பட்ட முறை இது . 


தமிழ்நாட்டில் பல சித்த புருஷர்கள் வாழ்ந்தார்கள் . பல யோக முறைகளை மேற்கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்த பெரியோர்கள், பல வேர், இலை, மலர், விதை, உலோகம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் பக்குவம் செய்து நோயுற்றவர்களுக்கு அளித்தார்கள். வியக்கத்தகும் வகையில் பயன் விளைவிக்கும் மருத்துவம் இது . 



சாமுவேல் ஃப்ரடெரிக் ஹானிமான் 


ஜெர்மனி நாட்டில் ஹானிமான் என்றொரு மருத்துவ மேதை வாழ்ந்தார். (1755-1843 ) அவர் கண்டுபிடித்த மருத்துவ முறைக்கு ஹோமியோபதி ( நெறி ) என்று பெயர்.

 

ஹோமியோ என்றால் ஒரே மாதிரியான, ஒத்த என்பது பொருள் . இவருடைய முறையில் சிறப்புக்கள்  இரண்டு . 

முதலாவது மனிதனின் தன்மையை, மனநிலையை  அறிந்து குணப்படுத்துவது . அடுத்தது இதன் விலை . இதைவிட மலிவான மருத்துவ முறையே உலகில் கிடையாது. 

வள்ளுவம் நமது தொன்மையான தமிழ் மறையை இயற்றிய தெய்வப்புலவர் , பொருட்பாலில் - நட்பியலில் - மருந்துக்காகத் தனி அதிகாரமே வகுத்திருக்கிறார் . இந்தப் பத்து குறட்பாக்களையும் தனித்தனியாகவோ , ஒட்டு மொத்தமாகவோ ஊன்றிக் கவனித்தால் ஒரு கருத்தை அவர் , ஆழமாக , தீவிரமாக வலியுறுத்துகிறார் என்பது புரியும் . அதுதான் கட்டுப்பாடான உணவு . ருசிக்காக அன்றி பசிக்காக மட்டுமே உண்ணுதல். அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்த பிறகு மேலோங்கும் எண்ணம் ஒன்றேதான் . வள்ளுவப் பெருமானுக்குச் சமண சமயத்தில் இவ்வளவு ஈடுபாடு ஏற்படக் காரணம் , அவரே அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்பதுதான் அது . 


சமண சமயத்தின் மிகத் தீவிரமான கோட்பாடு, 'பசித்திரு' என்பதாகும் . பசித்திருத்தல் விழித்திருத்தலுக்குத் துணை செய்யும் என்பது அந்த சமய அறிஞர்கள் கண்ட முடிவு . உண்ணா நோன்பையே உபவாசம் என்று கூறுவார்கள் . இறைவனுக்கு அண்மையில் வாழ்வது என்பது அதன் பொருள். உள்ளத்தைக் கூர்ந்துகொண்டு செயற்கரிய செயல்களைச் செய்யும் அவதானிகளைக் கவனித்தோமானால் அவர்கள் தங்கள் திறமையையைக் காட்டுவதற்கு முதல்நாள் எதுவுமே உண்ணாமல் இருப்பார்கள் என்பதை அறியலாம். 


உண்ணாமல் இருப்பது என்பது எல்லோராலும் இயலாத செயல் . ஆனால் ஒரு பணியை எல்லோரும் செய்யலாம்


 

   அற்றது அறிந்து கடைப்பிடித்து மா றல்ல

   துய்க்க துவரப் பசித்து 


முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து , மாறுபாடில்லாத உணவு முறைகளைக் கடைப்பிடித்து , அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகுதான் உண்ண வேண்டும். 


அடுத்ததாக அவர் கூறுகிறார் . 


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு 


 மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மிதமாக உண்டால் உயிர் உடம்போடு இணைந்து வாழ இயலாமல் இடையூறு செய்யும், நோய் என்பது இல்லாமல் ஒழியும்.


 மாறுபாடு இல்லாத உண்டி என்பதை அடிக்கோடிட வேண்டும். உணவு உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு எத்தனை ரசாயனப் பொருள்களை விளை நிலத்தில் கலக்குகிறோம்? தழைக்கும் பயிர்களைக் காக்கும் பொருட்டு எத்தனை பூச்சிக் கொல்லிகளைத் தளிர்களின் மேல் தெளிக்கிறோம் ? இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உண்பவர்களையே மீண்டும் தாக்கக்கூடும் என்பதை நமது சிந்தனைச் செம்மல்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை . 


இயற்கை முறை


 காந்தியப் பொருளாதாரவாதியான ஜே.ஸி.குமரப்பாவின் கேள்வி இது . நிலத்தை உழவும், பரம்படிக்கவும், அறுவடை செய்யவும் டிராக்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்; ஏற்றுக் கொள்வோம் . ஆனால் டிராக்டர் சாணி போடுமா? என்று வினவினார் . இன்று அமெரிக்கப் பெருநகர்களில் உள்ள டிபார்ட்மெண்டல் பேரங்காடிகளில் தனியே ஓர் உணவுப் பண்டப்பிரிவு அமைந்துள்ளது.   ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட  பண்டங்களுக்காகத் தனிக்கடைகள். இவைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் நோய்வாய்ப்படுவதில்லை என்று அவர்களுடைய புள்ளி விவரக் கணக்கர்கள் தெரிவிக்கிறார்கள். 


இறுதியாக இன்னொரு செய்தியையும் நமக்கு அறிவித்துப் புளகிக்க வைக்கிறார் நாயனார். 


இழிவறிந்து உண்பான் கண்இன்பம் போல்நிற்கும் 

கழி பேரிரையான் கண்நோய். 


குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல் , மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிலைத்து நிற்கும்.


சமண சமயத்தத்துவங்களைக் கரைகண்ட தெய்வப் புலவர் மனித உடலில் நோய் குடிபுகும் காரணத்தை மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். 


தமிழ் முதுமகள் வலியுறுத்தியதும் அதுவே ! 


மீதூண் விரும்பேல்!






செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஓமியோபதி மருத்துவம் மேஜர் தி. சா. இராஜூ

 



ஒரு நல்ல புத்தகத்திற்கு அடையாளம் யாது ?
நூலைப் படிக்கத் தொடங்கியவர்களைக் கீழே வைக்க அது அனுமதிக்காது . ஒரு தரம் படித்த பின்பும் மீண்டும் படிக்கத் தூண்டும் . இந்த நிலை இந்நூலில் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இதைப் படித்தவர்கள் பலரும் இவ்வகையிலேயே தமது கருத்தைக் கூறியிருக்கி றார்கள் . பொதுவாக அறிவியல் நூல்கள் வாசிப்பவர்களுக்கு அயர்வை உண்டாக்கும் . மாறாக இது சோர்வை நீக்குகிறது . அறிவியல் கொள்கைகள் இனிப்பில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் மேஜர் தி.சா.ராஜு அவர்கள்.
இதைப்பற்றிக் கணித்தவர்கள் அனைவரும் ஒரு முகமாகக் கேட்கும் கேள்வி இது .
'இதை எத்தனை முறை படித்தீர்கள் ?'
மேதை ரஸ்கின் கூறியது போல
'இது எல்லாக் காலத்திற்கும் ஏற்ற ஒரு நூல்'
Note..
தமிழ்நாட்டில் ஓமியோபதியை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்ததில் பெரும்பங்காற்றிய மேஜர் தி.சா.இராஜூவின் ஹோமியோபதி மருத்துவம் நூல் சிறுசிறு பகுதிகளாக நாளை முதல் இப்பக்கத்தில் பதிவிடப்படும்..

சனி, 5 டிசம்பர், 2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆளுமை அலசல் ஓமியோபதி பார்வை

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆளுமை அலசல்

ஓமியோபதி பார்வை அன்புக்கு ஏங்கிய சிறுமி

இரண்டு வயதிலே தந்தையை இழந்த அவர் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கினார். தாயும் அவரின் பணி காரணமாக இவருடன் இருக்க முடியவில்லை,தாயின் பாசம் கிடைக்காது இவருக்கு மேலும் துயரத்தை தந்தது. தாயின் பணிச்சுமையால் இவரை பராமரிக்க முடியாமல் தாத்தா வீட்டில் வளர்ந்தார். தாயின் பிரிவு இவரை வாட்டியது MIND - AILMENTS FROM - father; absence of MIND - AFFECTION - yearning for affection MIND - AILMENTS FROM - grief – prolonged MIND - AILMENTS FROM – homesickness இவரின் பள்ளியில் இவரை சக தோழிகள் இவரை கேலி செய்தால் இவரால் எப்படி அதற்கு எதிர்வினை புரியவேண்டும் எனத்தெரியாத வெகுளியாக இருந்துள்ளார். இவரின் கோபம்,அழுகை இவற்றை அடக்கியே வைத்துள்ளார்,யாரிடமும் காட்டியதில்லை. MIND - EMOTIONS – suppressed வக்கீல் ஆகனும்கிற ஆசை குடும்பச்சூழல் மற்றும் தாயின் வலுக்கட்டாயத்தில்,சிறுவயதில் பொறுப்பை எடுத்து நடிகை ஆகிறார் MIND - AILMENTS FROM – disappointment MIND - AILMENTS FROM - domination - children; in - parental control; long history of excessive - harsh upbringing MIND - AILMENTS FROM - responsibility - early; too தனது 23 வது வயதில் தாயை இழக்கிறார்.அது இவருக்கு தாங்கொணா துயரத்தை தருகிறது. MIND - AILMENTS FROM-death of parents தனது சுதந்திரத்தில் சிலர் தலையிடுவதை இவரால் தவிர்க்க முடியவில்லை,அதுவே இவரின் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாக இருக்கிறது MIND - AILMENTS FROM - unhappiness - influence of other people; due to இவரின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டமாகவே இவருக்கு இருந்துள்ளது MIND - LIFE - struggle; has been a long hard இவரை நீதிமன்றம் தண்டித்தபோதும் இவரை அவமானப்படுத்தியதும் இவருக்கு ஆழமான காயத்தை உண்டுபண்ணியது. MIND - AILMENTS FROM – punishment MIND - AILMENTS FROM – mortification ஒளிந்துள்ள வைரம் மறைந்த முதல்வர் கட்சிப் பேதமின்றி எல்லோரையும் வசிகரித்துதான் இருக்கிறார். அவரின் ஏதோ ஒரு பண்பு அவரது எதிராளிகளைக் கூட கவர்ந்திருக்கிறது. அவரைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். மறைந்த முதல்வர் குறித்து பலருடன் உரையாடியபோது, அவர்கள் அனைவரும் வியந்து கூறியது, அவரின் ஆளுமைப் பண்பு குறித்துதான். அவரது முடிவெடுக்கும் திறன் யாருக்கும் வராது, எல்லா அதிகாரமும் தனக்கே உள்ளது என எண்ணுபவர், நல்ல உழைப்பாளி என்ன அதிகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் ஆட்சிக்கட்டிலில் அமர பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார் நல்லதே நடக்கும் என, மனோதிடம் படைத்தவர், எடுத்த காரியத்தில் உறுதியாக இருப்பார், கலக மனம் கொண்டவர், புரட்சித்தலைவி. MIND - DECISIVE MIND - DELUSIONS - power - all-powerful; she is MIND - INDUSTRIOUS MIND - POWER - excited by power MIND - QUICK to act MIND - PLANS - making many plans MIND - POSITIVENESS MIND – CONFIDENT MIND - REBELLIOUS தனக்கு போதுமான வளம் உள்ளது தான் ஏன் ஊழல் செய்யவேண்டும்,நான் மகாராணி,என்னிடம் போதுமான அளவு வசதி உள்ளது,நான் சுதந்திரமானவள்,யாருக்கும் சொத்து சேர்க்கவேண்டிய அவசியமில்லை என அடிக்கடி சொன்னவர். MIND - DELUSIONS - abundance of everything, she has an MIND - DELUSIONS - prince; she is a MIND - DELUSIONS - wealth, of MIND - INDEPENDENT சுதந்திரமாக இருந்தாலும் அன்பு, பாசம்,வீட்டு விஷயங்களுக்காக மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தே பழகி விட்டார் ஆனால் தான் யாரை சார்ந்திருந்தோமோ அவர்களே இவரை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தார். அரசியலில் இவர் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார்.கேலி,கிண்டல், அவமரியாதை என இவர் சந்தித்தது கொஞ்ச நஞ்சமல்ல. தான் ஏன் எந்த தவறுமிழைக்காமல் இவ்வாறு பாதிக்கப்படவேண்டும் என அடிக்கடி கேட்டுவந்தார். MIND - DEPENDENT of others MIND - DELUSIONS - betrayed; that she is MIND - AILMENTS FROM - scorned; being MIND - DELUSIONS - insulted, he is MIND - DELUSIONS - laughed at and mocked at; being MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has எதிலுமே ஒரு பிடிப்பு,பற்றில்லாமல் இருந்தார். வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் இருக்க விரும்பினார்.இந்த உலகில் இருந்து தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். MIND – DETACHED MIND - COMPANY - aversion to, agg. - solitude, fond of MIND - IRRITABILITY - alone - wishes to be alone MIND - ESCAPE, attempts to - family and children; attempts to escape from her MIND - HOME - leave home; desire to - and lead a clear not muddled life without her family MIND - DELUSIONS - separated - world; from the - he is separated மேலும் சில வைர குணங்கள்: படிப்பதில் ஆர்வம் தன்னை யாரும் தொடுவது பிடிக்காது சந்தேக குனம் பிடிவாதம் கல்நெஞ்சக்காரி மக்கள் நலனில் அக்கறையின்மை அடிக்கடி மாறும் குணம் சோகம் இருந்தாலும் அழுது வெளிக்காட்ட மாட்டார் MIND - READING - desires MIND - TOUCHED - aversion to be MIND - SUSPICIOUS MIND - OBSTINATE, headstrong MIND – HARDHEARTED MIND - UNFEELING MIND - INDIFFERENCE - welfare of others, to MIND - MOOD - changeable MIND - HIDING – himself MIND - WEEPING - cannot weep, though sad MIND - ANGER - support; desires MIND - ANGER, irascibility - violent MIND - BED - desires to remain in MIND - CENSORIOUS MIND - FEAR - death, of MIND - IDEAS - abundant MIND - IMPATIENCE MIND - IMPULSE; morbid - stab; to - others; to stab MIND - INDIGNATION MIND - INDOLENCE, aversion to work MIND - LAZINESS MIND - MALICIOUS, vindictive MIND - MENTAL POWER - increased MIND - TRIFLES - important; seem பிளாட்டின முகம் அரசியல் அவ்வளவு சுலபமானதாக இல்லை அவருக்கு, இருந்தாலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் தன் இலட்சியத்தை அடைய பயன்படுத்திக்கொண்டார். தனது மனவலிமையும், உறுதியும் சூழ்ச்சி செய்யும் இயல்பும்,புத்திக்கூர்மையும், மக்கள் மனதில் பதியும் அளவுக்கு அவர் செய்த பிரச்சாரமும் அவருக்கு அதிகாரத்தை தந்தது. MIND - AMBITION - much, ambitious - means, employed every possible ; MIND - DECEITFUL, sly ; MIND - DELUSIONS, imaginations - strong, he is ; MIND - IMPRESSIONABLE, susceptible ; MIND - MALICIOUS, vindictive; MIND – INTELLECTUAL பதவிக்கு வந்தவுடன் அவருடைய முழு சுயமும், தனித்த போக்கும் வெளிப்பட ஆரம்பித்தது. ஆடம்பரமான, ஊதாரித்தனமான படோடபமான வாழ்க்கையை வாழ்ந்தார், மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை. தனது உடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையை ஆட்சி நடத்துவதில் காட்டவில்லை. MIND - EXCLUSIVE, too MIND – EXTRAVAGANCE MIND – EXUBERANCE MIND - FASTIDIOUS - appearance, to personal MIND - INDIFFERENCE, apathy - welfare of others, to என்ன தான புத்திக்கூர்மையான நபராக இருந்தாலும் அவருடைய ஆணவ நடத்தை அவருக்கு தோல்வியை தந்தது,அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தார்,அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை. MIND - HAUGHTY - intelligent, but very ; MIND - AILMENTS FROM - position; loss of MIND - AILMENTS FROM – fright MIND - AILMENTS FROM – disappointment .தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் ஆட்சியை பிடிக்க உறுதி பூண்டார். MIND - AMBITION – increased தோல்விக்கு காரணமான தனது சுற்றத்தார் மீது அதிருப்தி கொண்டு, கடுமையான கோபம் அடைந்து, தனது விருப்பத்திற்கெதிராக செயல்பட்ட அனைவரையும் ஓரங்கட்டினார்,சிலரை கட்சியை விட்டு தூக்கி வீசினார். MIND - DISCONTENTED, displeased, dissatisfied - surroundings, with his MIND - CASTING off of people against her will MIND - CONTEMPTUOUS - casts people off, in paroxysms, against her will MIND - CONTEMPTUOUS - paroxysmal, against her will MIND - ANGER, irascibility - violent முன்னர் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த முறை ஆட்சியை பிடித்ததும் எச்சரிக்கையாக நடந்துகொண்டார், MIND – CAUTIOUS மந்திரிகளையும் மற்றும் கட்சி உறுப்பினர்களையும் அடிமை போல நடத்தினார். தான் சொல்வதே வேதம் தன்னை எதிர்த்து யார் எது சொன்னாலும் இவரால் தாங்கமுடியாது, MIND - DELUSIONS, imaginations - humility and lowness of others, while he is great MIND - CONTRADICTION - intolerant of எதிர்க்கட்சிக்காரர்கள்,அதிகாரிகள் யாரும் இவரின் அதிகாரப்பேச்சுக்கு முன் அடங்கித் தான் போகவேண்டும்.அப்படி ஒரு அதிகாரத் தொணி; MIND - DICTATORIAL, domineering, dogmatic, despotic MIND - ANSWER, answering, answers - general - dictatorial தானே அனைத்திலும் முதன்மையானவளாக இருக்க வேண்டும் என்ற தன்முனைப்பு, நான் ,என் தலைமையிலான ஆட்சி,நான் என்ற அகங்காரம்,அடுத்தவர்களை துளியும் மதியாத திமிர்த்தனம் ,மற்றவர்கள் எல்லாம் தன் கால் தூசிக்கு சமமானவர்களாக நடத்திய தனம் இது எல்லாம் அவரின் மாறாத குணங்கள் என அனைவருக்கும் தெரியும் MIND - IMPORTANCE, feels his, pompous ; MIND - INSOLENCE, impertinence; MIND - EGOTISM, self-esteem ; MIND – RUDENESS; MIND - SELFISHNESS, egoism; MIND - DELUSIONS, imaginations - humility and lowness of others, while he is great ; MIND - DELUSIONS, imaginations - inferior, on entering house after a walk, people seem mentally and physically அவரின் வாழ்வில் சிலர் அவரை தன்வசத்தில் வைத்திருந்தனர், அவர்களில் அவரின் அம்மா,மறைந்த நடிகர் மற்றும் தோழி ஒருவரின் வசத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்தார். அதனால் மனதில் ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. தன்னை பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தே இருந்தார். MIND - DELUSIONS, imaginations - possessed, he or she is MIND - DELUSIONS, imaginations - superhuman - control, is under MIND - DELUSIONS - emptiness; of MIND - AILMENTS FROM - abused; after being அதனால் தன்னை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் தன் எதிரிகள் தான் என்று எண்ணம் வந்துவிட்டது, குறை காண்பதும், தனக்கு எதிரான நபர்களை அழிப்பதுமாக இருந்தார், சில நபர்களை கண்டாலே பிடிக்காமல் போனது. MIND - CENSORIOUS, critical MIND - DELUSIONS, imaginations - enemy - everyone is an MIND - AVERSION - persons - certain, to MIND – DESTRUCTIVENESS அரசுப்பணி அவருக்கு சலிப்பை தந்து விடும் அதனால் பணிகளில் நாட்டம் இருக்காது,மக்களை விட்டு நாட்டை விட்டு அடிக்கடி எஸ்டேட்டுக்கு தனிமை விரும்பி ஓய்வெடுக்க சென்றுவிடுவார். MIND - ENNUI, boredom; MIND - INDOLENCE, aversion to work MIND - COMPANY - aversion to - desire for solitude எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார்,அவ்வளவு தைரியம்,அதே சமயம் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற பயமும் ,தனக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தால் எப்பவும் புல்லட் புரூப் ஆடைகளை பயன்படுத்துவார்,பலத்த பாதுகாப்புடன் தான் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வார். MIND – COURAGEOUS MIND - DANGER - no sense of danger; has MIND - FEAR - happen - something will MIND - FEAR - murdered, of being பொது நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தாமதமாக தான் வருவார்,சரியான நேரத்திற்கு வருவது அபூர்வம், இவரிடம் நிறைய செண்டிமெண்ட் உண்டு, பழமையில் ஊறியவர்,பஞ்சாங்கம் பார்த்து இராகுகாலம்,எமகண்டம் பார்த்து கிளம்புதல், அதை சரியாக பின்பற்றவேண்டும் என்ற முன் கருதுகோள் உடையவர்.அதே நேரத்தில் இவர் ஒரு பக்திப்பழம். கோவில் செல்வது, அவற்றை பராமரிப்பது என்று கடவுள் பக்தி அதிகம் உடையவர். MIND - LATE, always MIND - PREJUDICES, traditional ; MIND – SENTIMENTAL; MIND - RELIGIOUS - affections, general – mania கட்சிக்கூட்டணிகளை அடிக்கடி மாற்றுபவர், ஜெயித்த உடனே கழற்றி விட்டு விடுவார், நன்றியுடன் இருக்கமாட்டார், ஜெயிக்க வைத்த மக்களுக்கே கசப்பு மருந்து தருவார்,இரக்கப்படமாட்டார் MIND - UNGRATEFUL MIND - UNSYMPATHETIC, unscrupulous சிறுவயதில் இசை, நாட்டியம் விரும்பி கற்றவர், கதை,நாவல் எழுதவும் ஆர்வம் கொண்டவர். பத்திரிக்கைகளில் எழுதவும் செய்தார். MIND - ARTISTIC – aptitude ; MIND - DANCING - desire for ஆண் போன்று இருக்க விரும்பியவர், ஆண்களின் உடைகளான பேண்ட் சர்ட் அணிவதில் தீராத விருப்பம் கொண்டிருந்தார். திரையில் ஒரு பட்த்தில் ஆணாக நடித்து ஆசையை தீர்த்துக்கொண்டார். MIND - MANNISH habits of – girls இளம்வயதில் தாய் தந்தையை இழந்து இந்த உலகில் தனித்து இருப்பதாக தன்னிடம் எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்த யாரும் இல்லை என அடிக்கடி சொல்லி வந்தார். MIND - AILMENTS FROM - death of loved ones - parents or friends; of MIND - DELUSIONS, imaginations - alone - world, in the ; MIND - FORSAKEN feeling - isolation, sensation of MIND - FORSAKEN feeling - thinks she is left alone in the world தன்னை பணத்துக்காக நெருங்கிய சொந்தங்களை வெறுத்தார். அவர்களை ஒதுக்கி தனது தோழியுடன் தனித்து வாழ்ந்தார். MIND - CONTEMPTUOUS - relations, for ; MIND - DELUSIONS, imaginations - family - does not belong to her own ; MIND - ESTRANGED - family, from her ; MIND - FAMILY members - aversion to நடிப்பை விருப்பமில்லாமல் தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் நம்பர் 1 ஆக திகழ்ந்தார். தனது இலட்சியம் அரசியலில் சாதிக்க வேண்டும் என்பது,ஆனால் சிறுவயதில் வக்கீல் ஆக ஆசை கொண்டிருந்தார். திரைத்தொழிலில் வாய்ப்பில்லாமல் தான் இப்படி சொல்கிறார் என ஒரு பத்திரிக்கை எழுதிய போது “கடவுளின் கருணையால், நான் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் வாழ்க்கையை ஒரு மகாராணி போல என்னால் வாழ முடியும். தற்போது, ஒட்டுமொத்தமாக என் ஆர்வம் வேறு திசையில் இருக்கிறது” என சொன்னவர் அவர். MIND - DELUSIONS, imaginations - superiority, of MIND - DELUSIONS, imaginations - tall, taller - he is MIND - DELUSIONS, imaginations - wealth, of MIND - DELUSIONS, imaginations - large - he or she is too MIND - DELUSIONS, imaginations - noble person, he is a MIND - DELUSIONS, imaginations - great person, is மொத்தத்தில் வெளிப்பார்வைக்கு தங்கமா பிளாட்டினமா என கணிக்கமுடியாத அளவுக்கு உள்ளுக்குள் வைரமாக வாழ்ந்த நபர் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்று எழுதியது. ஒரு மனிதரின் குணத்தை ஆய்வு செய்வது என்பது கடினமானது..இருந்தாலும் ஹோமியோபதி பார்வையில் எழுதப்பட்ட ஆளுமை அலசல்.)
கார்ட்டூன் உதவி: Cartoonist Bala

புதன், 28 அக்டோபர், 2020

NPK உரமா? நஞ்சா??

*உரமா? நஞ்சா??*
bala@agrohomoeopathy 

NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல அது பயிருக்கான நஞ்சு

"விளைச்சல் குறைவாக இருந்தால் காம்ப்ளக்ஸ் அடிக்கணும்" 
என விவசாயிகள் அடிக்கடி கூறுவதுண்டு. காம்ப்ளக்ஸ் உரம் விளைச்சலை கூட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அதுவே அவர்களின் விளைச்சலுக்கு எமனாகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. 

மண் பலவகையான குணங்களை உடைய சத்துக்களையும் உள்ளடக்கியது(நைட்ரஜன்,பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சிலிக்கா, கந்தகம், மாங்கனீசு,மெக்னீசியம்,இரும்பு,மாலிப்டினம்,சோடியம் உப்பு,போரான் மற்றும் கார்பன் போன்ற எண்ணற்றவை). இந்த ஒவ்வொரு சத்துக்களுக்கும் ஒவ்வொரு குணமுண்டு, ஒவ்வொன்றின் அளவு கூடுதலும் குறைவும் பயிரை பாதிக்கக்கூடிய காரணியாக இருக்கின்றன.
காம்ப்ளக்ஸ் NPK என்பது நைட்ரஜன்+பாஸ்பரஸ்+பொட்டாஷ் இவற்றின் சரிவிகித கலவையாகும் 17-17-17. இந்த மூன்றும் பயிரின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகித்தாலும் 
இவற்றை அதிகப்படியான அளவில் பயிருக்கு தெளிப்பது அதிக ஊட்டத்தை கொடுக்கும்,அதிக ஊட்டம் நோய் ஏற்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான தேவைக்கதிகமான நைட்ரஜன் அல்லது நைட்ரேட் அபரிமிதமாக தாவரங்களுக்கு தருவது பல தொல்லைகள் உருவாக காரணமாகிறது. இரசாயன உரங்களின் மூலம் தேவைக்கதிகமாக தெளிக்கப்படும் நைட்ரஜன் தாவரங்களை கொழுக்க வைத்து ஊதி நீரேறி பெருக்க வைக்கிறது. இந்த நிலையில் உள்ள தாவரமே, தன்னுடைய சரிசம நிலையை தக்க வைத்துக்கொள்ள அனைத்து வித பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.உளுத்தல் மற்றும் அழுகுதல்,அதுவும் ஈரக்கசிவு அழுகுதல் இவையே அதன் விளைவுகள்.

மனிதன் நொறுக்குத்தீனி (junk food) என்ற குப்பை உணவுகளை தின்பதன் விளைவே பலவிதமான நோய்களுக்கும் காரணமாகிறது(எ.கா: உடல் பருமன்,நீரிழிவு,இரத்த அழுத்தம்,இதய நோய்கள்). 

அதே போல NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல, தாவரங்களுக்கான நஞ்சு. பலவகையான பூச்சிகளும் நோய்களும் இதற்கு பிறகே பயிரைத் தாக்குகின்றன ஏனெனில் பயிர்கள் பூச்சிகள் தாக்குவதற்கு ஏதுவாக இருக்கின்றன.
தாவரங்கள் கொண்டுள்ள அதிகப்படியான நைட்ரஜன் சத்தே அசுவினிப் பூச்சிகளை ஈர்க்க காரணமென University of Kentucky செய்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வருகிறது.

சிலந்திப்பூச்சிகள் ஒரு நாளைக்கு 5லிருந்து 6 முட்டைகள் வரை இடும் என USDA ஆய்வுகள் சொல்கின்றன. அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவானது சிலந்திப்பூச்சிகளின் முட்டையிடும் அளவை ஒரு நாளைக்கு 10 ஆக அதிகரிக்கிறது என்று உறுதிப்படுத்துகின்றன.(Hylton, 1974.)

அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவே பழங்கள் பிஞ்சிலே உதிர்வதற்கும் காரணமாகிறது. பயிர்களின் அமினோ அமிலங்களின் அளவை நைட்ரஜன் அதிகரிக்கிறது, அதிக அளவிலான அமினோ அமிலங்களே பூச்சிகளை ஈர்க்கின்றன.

அசுவினிப்பூச்சிகள் அதிக அமினோ அமிலம் கொண்டுள்ள தாவரத்தையே தேர்ந்தெடுக்கின்றன என A Temple University ஆய்வு சொல்கிறது.
நைட்ரஜன் பொட்டாசியத்துடன் இணைந்து போரானுக்கு எதிரியாக மாறுகிறது, அது போரான் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது. போரான் பற்றாக்குறையின் விளைவாக பயிர்களில் வேரும் தண்டும் இணையும் பகுதி அழுகுகிறது, இலைகள் நலிவடைகின்றன, தண்டுகள் நடுவில் ஓட்டையாகின்றன.
அதிகப்படியான சுண்ணாம்புச்சத்தும் பாஸ்பரஸ் சத்தும் போரான் ஊட்டத்தை தடுத்து நிறுத்துகிறது.

இந்த மூன்று (NPK) சத்துக்களின் தேவைக்கதிக ஊட்டமானது பயிர்களின் தண்டு உடைதலுக்கும், பூ உதிர்தலுக்கும், வேர் அழுகலுக்கும், இலை பழுத்து உதிரவும் மற்றும் பயிர்கள் திடீரென காய்ந்து போகவும் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கும் காரணமாகின்றன.
இவை எல்லாம் எப்போது நடக்கும் என்றால் போரானின் அளவு மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும்போதுதான் நடக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

ஆக மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும் சத்தை ஈடுகட்ட அதற்கு ஒத்த மிக நுண்ணிய அளவிலான மருந்தே தேவை,
அதை விடுத்து அதிகப்படியான அளவில் உரத்தை மண்ணிற்கு தருவதானது அதற்கே நஞ்சாகிறது.
இதனால் தான் வீரியப்படுத்தல் எவ்வளவு முக்கியம் என்று ஹானிமன் வலியுறுத்துவதை நாம் உணரலாம். உயிர் ஆற்றலே இயங்கும் பண்பு என ஹானிமன் கூறுகிறார். 
கடைதல் மற்றும் குலுக்கி வீரியப்படுத்திய 6x வீரியமானது 10 இலட்சத்தில் ஒரு பங்கு அளவாக இருக்கிறது. இதிலிருந்து வெறும் நீர்மத்திற்கும் வீரியப்படுத்திய மருந்திற்கும் உள்ள வேறுபாட்டையும், ஹோமியோபதி மருந்தின் செயல்பாட்டையும் அதன் நுண்ணிய தன்மையையும் அறியலாம்.

*முக்கிய ஹோமியோபதி  உரங்கள்*
Alternative for NPK

(N)தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்து   குறைபாடு இருக்குமானால் 
 கல்கேரியா கார்ப் மற்றும் மாலிப்டினம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.

(P)மணிச்சத்து எனப்படும்  பாஸ்பேட்(பாஸ்பரஸ்) சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கு ஏற்ற ஹோமியோபதி மருந்துகள்:
அலுமினா, கல்கேரியா கார்ப், ஃபெர்ரம் மெட், மெக்னீசியம், மங்கானம், நேட்ரம்ம்யூர், ஜிங்கம் மெட்.  
 
(K)சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கேற்ற ஹோமியோபதி மருந்துகள்:
ஃபெர்ரம் மெட், மங்கானம், நேட்ரம் ம்யூர்


ஆக நல்ல விளைச்சலுக்கு இயற்கையுடன் இயைந்த விவசாய செயல்பாடே சரியானது. பின்வருவனவற்றை சரியான விவசாயத்திற்கு உகந்த செயல்பாடுகளாக கொள்ளலாம்.

1.இரசாயன உரங்களை அறவே தவிர்த்தல், பூச்சி மற்றும் களைக்கொல்லிகளை தவிர்த்தல், எந்த ஊட்டத்தையும் தேவைக்கதிகமாக தருவதை தவிர்த்தல்
2. ஒன்றுக்கொன்று துணையான பயிர்களை விவசாயத்தில் பயன்படுத்தல்(எ.கா: தக்காளியுடன் துளசி, கேரட்   பயிரிடுதல்.சோளத்துடன் பயறு மற்றும் பூசணி)
3. பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல் (எ.கா: நெல்லை தொடர்ந்து உளுந்து)
4. நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல் காத்தல் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டும் துணைப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடல்
5. சூழல்,வானிலை மற்றும் மண்தன்மை மற்றும் நீர் இருப்பு இவற்றை அறிந்து பயிரிடுதல்
6. நிரந்தர வேளாண்மை.
7. வளர்ப்புப்பிராணிகள் வளர்த்தல் மூலம் மறு சுழற்சி. அவற்றின் சாணம் உரமாகிறது மற்றும் பயிரின் இலைதழைகள் அவற்றுக்கு உணவாகிறது.
8.ஏதேனும் நோய்த் தாக்குதலுக்கும் சத்துப்பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துதல்.
இதன்மூலம் நல்ல விளைச்சலை விவசாயத்தின் மூலம் பெறமுடியும்.
அது 
வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப,

ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு

உழுவதை விடவும் இயற்கையான எருவிடுதலை நல்லது என்கிறார். மற்றும் நீர்பாய்ச்சுவதை விட முக்கியம் அதனை காத்து பராமரிப்பது
ஆகவே ஹோமியோபதி என்ற இயற்கைப் பாதுகாவலன் உதவியுடன் பயிரைப் பாதுகாப்போம்.
தொழில்களில் எல்லாம் தலையாய தொழிலான உழவுத்தொழிலை காப்போம்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

reference: vaikundanath kaviraj 
                 father of agro homoeopathy
http://balahomoeopathy.blogspot.com/

புதன், 27 மே, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் இயற்கை வழி மருத்துவம் ஹோமியோபதி


வெட்டுக்கிளி படையெடுப்பு மட்டுமல்ல ஏற்கெனவே பூச்சிக்கொல்லிகளுக்கும் கட்டுப்படாத பூச்சிகளின் பெருக்கம் மற்றும் நத்தை படையெடுப்பு போன்ற பல்வேறு புதுது புதிதான சிக்கலை உழவர்குடி எதிர்கொண்டு மிக சிரமத்தில் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இயற்கையான பாதுகாப்பான பல அடுக்கு விவசாய முறையை கைவிட்டு ஒற்றை அடுக்கு விவசாயத்தை கையில் எடுத்தது தான்...
சரி இதற்கு தீர்வே இல்லையா.. இருக்கிறது..மரபு சார்ந்த பல அடுக்கு விவசாயமுறைக்கு திரும்புவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆய்ந்து தெளிந்து கூறியிருக்கிறார்.
பூச்சிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த எளிய மூலிகை பூச்சிவிரட்டி முறைகளையும் தந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=xehvMPJfQ30
அதுமட்டுமில்லாமல் ஹோமியோபதி மருத்துவமுறையும் வெட்டுக்கிளி மற்றும்
நத்தை படையெடுப்பை வெற்றிகரமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டாக்டர் வைகுந்தநாத் கவிராஜ் அவர்களால் கட்டுப்படுத்திய வரலாறும் உண்டு. நத்தையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தான helix toasta ஹோமியோபதி தத்துவமான ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் வழியில் அதாவது..முள்ளை முள்ளால் எடுப்பது போல நத்தையை விரட்டுகிறது.
கட்டுரை இணைப்பு:
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://balahomoeopathy.blogspot.com/2017/10/blog-post.html
அதேபோல வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.
1.Rove beetle
என்ற பூச்சியின் அறிவியல் பெயர்: Staphylinidae இந்த பூச்சிக்கரைசலின்(இந்த பூச்சியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) வாசனைக்கு வெட்டுக்கிளி வரவே வராது.(இந்த பூச்சியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
2.hyssopus officinalis (இந்த தாவரக்கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) இந்த தாவரக்கரைசலுக்கும் வெட்டுக்கிளி வரவே வராது..ஆடுதொடா செடி எப்படி ஆட்டுக்கு பிடிக்காதோ அது போல இது வெட்டுக்கிளிக்கு பிடிக்காத வாசனையுள்ள செடி.(இந்த செடியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
3.aranea diadema என்ற சிலந்தி (இந்த சிலந்தியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) ..இந்த சிலந்தி கரைசலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் தன்மைக்கு வெட்டுக்கிளி தலைவைத்து படுக்காது.
மேற்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஹோமியோபதி மருந்துகடைகளில் வாங்கி வெட்டுக்கிளி அறிகுறி தெரிய ஆரம்பித்த உடன் பயிருக்கு தெளிக்கலாம்..
ஹோமியோபதி மருந்து மிகவும் குறைந்த செலவு தான் ஆகும். இன்னும் எளிதாக இந்த செடியோ பூச்சியோ கிடைத்தால் அதனை ஹோமியோபதி மருத்துவ முறைப்படி வீரியப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தும் முறை
10மில்லி மருந்தை 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்...
அதிக நிலப்பரப்புக்கு 500மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
குறிப்பு:
கீழ்க்கண்ட காணொளி பதிவுக்கான பின்னூட்ட பதிவாக நான் இட்டது. அவசியம் கருதி விரிவாக இங்கே பதியப்பட்டது.
https://www.youtube.com/watch?v=-nDFs354xCU