பழ.வெள்ளைச்சாமி
ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் தொடரும்
பெண் வயது 45
ECZEMA தொடையில் இருந்தது. அந்தப் பெண்மணி வந்ததும் எந்தவித தயக்கமும்
இல்லாமல் தொடையை ஆடையை நீக்கிக் காட்டினார்.
``உங்களுக்கு என்ன பண்ணுது?’’
``தொடையில் பத்து பத்தாக இருக்கு’’ என்று
மறுபடியும் தொடையைக் காட்டினார்.
எவ்வளவு நாளாக இருக்கு?
``இது 4 வருஷமாக இருக்கிறது. தோட்டத்துக்குள்ளே குடியிருக்கிறோம். அதனால் பூச்சி பட்டை கடிச்சிருக்கும். விஷச் செடிகள் ஏதாவதுபட்டிருக்கும்’’ என்று சொன்னார்கள்.
``உங்களுக்கு 4 வருடத்திற்கு முன் வேறு என்ன நோய்கள் வந்தன?’’
எதுவுமே வந்ததில்லை.
``இது அரிப்பு இருக்கா? இல்லை எப்படி இருக்கு?
அப்பப்ப அரிக்கும். அரிக்கும்போது
தேங்காய் எண்ணெய் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏதாவது ஆஸ்பத்திரி களிம்பு போட்டால் குறையுது. அப்புறம் வந்திடுது. நானும் 4 வருஷமா பல பேர்களிடம் காட்டிவிட்டோம். தோல் டாக்டர்கள் மாத்திரைதான் எழுதித்
தர்றாங்க. ஆனால் குறைஞ்சபாடில்லை. நானும் அலுத்துப் போய் விட்டுவிட்டேன்.’’
`` நான்கு வருடத்திற்கு முன் என்ன முக்கியமான
சம்பவம் மனதை பாதிக்கிறது போல நடந்தது?’’
``ஒன்றும் பெரிதாக நடக்கலை. பத்து வருடமாகவே பக்கத்துத்
தோட்டததுக்காரர்களோடு சண்டைதான்.
கோழிச்சண்டை, மாட்டுச் சண்டை என்று ஏதாவது வந்துவிடும்.
அப்பப்ப பயந்து கொண்டு
இருப்பேன் எதுவும் சண்டை வந்துவிடுமோ
என்று.’’
``வேறு காரணம் இருக்கா?’’
``வேறு இல்லை எப்பப் பார்த்தாலும் சண்டை வந்துவிடுமோ
என்று பயந்து கொண்டிருப்பேன்.’’
இவர்கள் வந்ததும் கூச்சநாச்சமில்லாமல் ஆடையை நீக்கித் தொடையைக் காட்டியது
மற்றும் அவர்கள் கூறிய விபரங்களிலிருந்து கீழ்கண்ட குறிகள் கணக்கீடு செய்யப்பட்டன.
MIND – SHAMELESS
MIND - NAKED, wants to be
MIND - FEAR - injury - being injured; of
MIND - DELUSIONS -
injury - being injured; is - surroundings; by his
மேலே தேர்வு செய்யப்பட்ட குறிகள் HYOSCYAMUS மருந்து
குறித்தன. அந்த மருந்தை 200 வீரியத்தில் கொடுத்து அனுப்பினேன்.
அவர்கள் 15 நாட்கள் கழித்து வந்தபோது அவர்களுடைய
ECZEMA முக்கால்வாசி குணமாகி இருந்தது.
மறுபடியும் ஒரு மாதத்திற்கு தொடர்மருந்து கொடுத்தனுப்பினேன். அவர்கள் ஒரு மாதம் கழித்து வந்தபோது
முற்றிலுமாக நலமடைந்து இருந்தார்கள்.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் எனக் கருதி மாதாமாதம்
வந்து மருந்தில்லா மருந்து வாங்கிச் செல்வார்.
இரண்டு வருடம் வந்தும் மறுபடியும் அந்தக் குறிகள் திரும்பி வராததால் நான்
அவர்களுக்கு மருந்து மோகத்தைத் தணிக்க நான் பவரான மருந்து கொடுப்பதாகச் சொல்லி
தொடர்மருந்து கொடுத்து இனிமேல் இரண்டு வருடத்திற்கு மருந்து தேவைப்படாது என்று
கூறியதால் பிறகு அவர்கள் வரவில்லை ஆனால் அவர்கள் அனுப்பிய துயரர்கள் அடிக்கடி வந்து போவார்கள்.
ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக