சனி, 5 டிசம்பர், 2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆளுமை அலசல் ஓமியோபதி பார்வை

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆளுமை அலசல்

ஓமியோபதி பார்வை அன்புக்கு ஏங்கிய சிறுமி

இரண்டு வயதிலே தந்தையை இழந்த அவர் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கினார். தாயும் அவரின் பணி காரணமாக இவருடன் இருக்க முடியவில்லை,தாயின் பாசம் கிடைக்காது இவருக்கு மேலும் துயரத்தை தந்தது. தாயின் பணிச்சுமையால் இவரை பராமரிக்க முடியாமல் தாத்தா வீட்டில் வளர்ந்தார். தாயின் பிரிவு இவரை வாட்டியது MIND - AILMENTS FROM - father; absence of MIND - AFFECTION - yearning for affection MIND - AILMENTS FROM - grief – prolonged MIND - AILMENTS FROM – homesickness இவரின் பள்ளியில் இவரை சக தோழிகள் இவரை கேலி செய்தால் இவரால் எப்படி அதற்கு எதிர்வினை புரியவேண்டும் எனத்தெரியாத வெகுளியாக இருந்துள்ளார். இவரின் கோபம்,அழுகை இவற்றை அடக்கியே வைத்துள்ளார்,யாரிடமும் காட்டியதில்லை. MIND - EMOTIONS – suppressed வக்கீல் ஆகனும்கிற ஆசை குடும்பச்சூழல் மற்றும் தாயின் வலுக்கட்டாயத்தில்,சிறுவயதில் பொறுப்பை எடுத்து நடிகை ஆகிறார் MIND - AILMENTS FROM – disappointment MIND - AILMENTS FROM - domination - children; in - parental control; long history of excessive - harsh upbringing MIND - AILMENTS FROM - responsibility - early; too தனது 23 வது வயதில் தாயை இழக்கிறார்.அது இவருக்கு தாங்கொணா துயரத்தை தருகிறது. MIND - AILMENTS FROM-death of parents தனது சுதந்திரத்தில் சிலர் தலையிடுவதை இவரால் தவிர்க்க முடியவில்லை,அதுவே இவரின் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாக இருக்கிறது MIND - AILMENTS FROM - unhappiness - influence of other people; due to இவரின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டமாகவே இவருக்கு இருந்துள்ளது MIND - LIFE - struggle; has been a long hard இவரை நீதிமன்றம் தண்டித்தபோதும் இவரை அவமானப்படுத்தியதும் இவருக்கு ஆழமான காயத்தை உண்டுபண்ணியது. MIND - AILMENTS FROM – punishment MIND - AILMENTS FROM – mortification ஒளிந்துள்ள வைரம் மறைந்த முதல்வர் கட்சிப் பேதமின்றி எல்லோரையும் வசிகரித்துதான் இருக்கிறார். அவரின் ஏதோ ஒரு பண்பு அவரது எதிராளிகளைக் கூட கவர்ந்திருக்கிறது. அவரைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். மறைந்த முதல்வர் குறித்து பலருடன் உரையாடியபோது, அவர்கள் அனைவரும் வியந்து கூறியது, அவரின் ஆளுமைப் பண்பு குறித்துதான். அவரது முடிவெடுக்கும் திறன் யாருக்கும் வராது, எல்லா அதிகாரமும் தனக்கே உள்ளது என எண்ணுபவர், நல்ல உழைப்பாளி என்ன அதிகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் ஆட்சிக்கட்டிலில் அமர பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார் நல்லதே நடக்கும் என, மனோதிடம் படைத்தவர், எடுத்த காரியத்தில் உறுதியாக இருப்பார், கலக மனம் கொண்டவர், புரட்சித்தலைவி. MIND - DECISIVE MIND - DELUSIONS - power - all-powerful; she is MIND - INDUSTRIOUS MIND - POWER - excited by power MIND - QUICK to act MIND - PLANS - making many plans MIND - POSITIVENESS MIND – CONFIDENT MIND - REBELLIOUS தனக்கு போதுமான வளம் உள்ளது தான் ஏன் ஊழல் செய்யவேண்டும்,நான் மகாராணி,என்னிடம் போதுமான அளவு வசதி உள்ளது,நான் சுதந்திரமானவள்,யாருக்கும் சொத்து சேர்க்கவேண்டிய அவசியமில்லை என அடிக்கடி சொன்னவர். MIND - DELUSIONS - abundance of everything, she has an MIND - DELUSIONS - prince; she is a MIND - DELUSIONS - wealth, of MIND - INDEPENDENT சுதந்திரமாக இருந்தாலும் அன்பு, பாசம்,வீட்டு விஷயங்களுக்காக மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தே பழகி விட்டார் ஆனால் தான் யாரை சார்ந்திருந்தோமோ அவர்களே இவரை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தார். அரசியலில் இவர் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார்.கேலி,கிண்டல், அவமரியாதை என இவர் சந்தித்தது கொஞ்ச நஞ்சமல்ல. தான் ஏன் எந்த தவறுமிழைக்காமல் இவ்வாறு பாதிக்கப்படவேண்டும் என அடிக்கடி கேட்டுவந்தார். MIND - DEPENDENT of others MIND - DELUSIONS - betrayed; that she is MIND - AILMENTS FROM - scorned; being MIND - DELUSIONS - insulted, he is MIND - DELUSIONS - laughed at and mocked at; being MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has எதிலுமே ஒரு பிடிப்பு,பற்றில்லாமல் இருந்தார். வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் இருக்க விரும்பினார்.இந்த உலகில் இருந்து தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். MIND – DETACHED MIND - COMPANY - aversion to, agg. - solitude, fond of MIND - IRRITABILITY - alone - wishes to be alone MIND - ESCAPE, attempts to - family and children; attempts to escape from her MIND - HOME - leave home; desire to - and lead a clear not muddled life without her family MIND - DELUSIONS - separated - world; from the - he is separated மேலும் சில வைர குணங்கள்: படிப்பதில் ஆர்வம் தன்னை யாரும் தொடுவது பிடிக்காது சந்தேக குனம் பிடிவாதம் கல்நெஞ்சக்காரி மக்கள் நலனில் அக்கறையின்மை அடிக்கடி மாறும் குணம் சோகம் இருந்தாலும் அழுது வெளிக்காட்ட மாட்டார் MIND - READING - desires MIND - TOUCHED - aversion to be MIND - SUSPICIOUS MIND - OBSTINATE, headstrong MIND – HARDHEARTED MIND - UNFEELING MIND - INDIFFERENCE - welfare of others, to MIND - MOOD - changeable MIND - HIDING – himself MIND - WEEPING - cannot weep, though sad MIND - ANGER - support; desires MIND - ANGER, irascibility - violent MIND - BED - desires to remain in MIND - CENSORIOUS MIND - FEAR - death, of MIND - IDEAS - abundant MIND - IMPATIENCE MIND - IMPULSE; morbid - stab; to - others; to stab MIND - INDIGNATION MIND - INDOLENCE, aversion to work MIND - LAZINESS MIND - MALICIOUS, vindictive MIND - MENTAL POWER - increased MIND - TRIFLES - important; seem பிளாட்டின முகம் அரசியல் அவ்வளவு சுலபமானதாக இல்லை அவருக்கு, இருந்தாலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் தன் இலட்சியத்தை அடைய பயன்படுத்திக்கொண்டார். தனது மனவலிமையும், உறுதியும் சூழ்ச்சி செய்யும் இயல்பும்,புத்திக்கூர்மையும், மக்கள் மனதில் பதியும் அளவுக்கு அவர் செய்த பிரச்சாரமும் அவருக்கு அதிகாரத்தை தந்தது. MIND - AMBITION - much, ambitious - means, employed every possible ; MIND - DECEITFUL, sly ; MIND - DELUSIONS, imaginations - strong, he is ; MIND - IMPRESSIONABLE, susceptible ; MIND - MALICIOUS, vindictive; MIND – INTELLECTUAL பதவிக்கு வந்தவுடன் அவருடைய முழு சுயமும், தனித்த போக்கும் வெளிப்பட ஆரம்பித்தது. ஆடம்பரமான, ஊதாரித்தனமான படோடபமான வாழ்க்கையை வாழ்ந்தார், மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை. தனது உடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையை ஆட்சி நடத்துவதில் காட்டவில்லை. MIND - EXCLUSIVE, too MIND – EXTRAVAGANCE MIND – EXUBERANCE MIND - FASTIDIOUS - appearance, to personal MIND - INDIFFERENCE, apathy - welfare of others, to என்ன தான புத்திக்கூர்மையான நபராக இருந்தாலும் அவருடைய ஆணவ நடத்தை அவருக்கு தோல்வியை தந்தது,அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தார்,அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை. MIND - HAUGHTY - intelligent, but very ; MIND - AILMENTS FROM - position; loss of MIND - AILMENTS FROM – fright MIND - AILMENTS FROM – disappointment .தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் ஆட்சியை பிடிக்க உறுதி பூண்டார். MIND - AMBITION – increased தோல்விக்கு காரணமான தனது சுற்றத்தார் மீது அதிருப்தி கொண்டு, கடுமையான கோபம் அடைந்து, தனது விருப்பத்திற்கெதிராக செயல்பட்ட அனைவரையும் ஓரங்கட்டினார்,சிலரை கட்சியை விட்டு தூக்கி வீசினார். MIND - DISCONTENTED, displeased, dissatisfied - surroundings, with his MIND - CASTING off of people against her will MIND - CONTEMPTUOUS - casts people off, in paroxysms, against her will MIND - CONTEMPTUOUS - paroxysmal, against her will MIND - ANGER, irascibility - violent முன்னர் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த முறை ஆட்சியை பிடித்ததும் எச்சரிக்கையாக நடந்துகொண்டார், MIND – CAUTIOUS மந்திரிகளையும் மற்றும் கட்சி உறுப்பினர்களையும் அடிமை போல நடத்தினார். தான் சொல்வதே வேதம் தன்னை எதிர்த்து யார் எது சொன்னாலும் இவரால் தாங்கமுடியாது, MIND - DELUSIONS, imaginations - humility and lowness of others, while he is great MIND - CONTRADICTION - intolerant of எதிர்க்கட்சிக்காரர்கள்,அதிகாரிகள் யாரும் இவரின் அதிகாரப்பேச்சுக்கு முன் அடங்கித் தான் போகவேண்டும்.அப்படி ஒரு அதிகாரத் தொணி; MIND - DICTATORIAL, domineering, dogmatic, despotic MIND - ANSWER, answering, answers - general - dictatorial தானே அனைத்திலும் முதன்மையானவளாக இருக்க வேண்டும் என்ற தன்முனைப்பு, நான் ,என் தலைமையிலான ஆட்சி,நான் என்ற அகங்காரம்,அடுத்தவர்களை துளியும் மதியாத திமிர்த்தனம் ,மற்றவர்கள் எல்லாம் தன் கால் தூசிக்கு சமமானவர்களாக நடத்திய தனம் இது எல்லாம் அவரின் மாறாத குணங்கள் என அனைவருக்கும் தெரியும் MIND - IMPORTANCE, feels his, pompous ; MIND - INSOLENCE, impertinence; MIND - EGOTISM, self-esteem ; MIND – RUDENESS; MIND - SELFISHNESS, egoism; MIND - DELUSIONS, imaginations - humility and lowness of others, while he is great ; MIND - DELUSIONS, imaginations - inferior, on entering house after a walk, people seem mentally and physically அவரின் வாழ்வில் சிலர் அவரை தன்வசத்தில் வைத்திருந்தனர், அவர்களில் அவரின் அம்மா,மறைந்த நடிகர் மற்றும் தோழி ஒருவரின் வசத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்தார். அதனால் மனதில் ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. தன்னை பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தே இருந்தார். MIND - DELUSIONS, imaginations - possessed, he or she is MIND - DELUSIONS, imaginations - superhuman - control, is under MIND - DELUSIONS - emptiness; of MIND - AILMENTS FROM - abused; after being அதனால் தன்னை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் தன் எதிரிகள் தான் என்று எண்ணம் வந்துவிட்டது, குறை காண்பதும், தனக்கு எதிரான நபர்களை அழிப்பதுமாக இருந்தார், சில நபர்களை கண்டாலே பிடிக்காமல் போனது. MIND - CENSORIOUS, critical MIND - DELUSIONS, imaginations - enemy - everyone is an MIND - AVERSION - persons - certain, to MIND – DESTRUCTIVENESS அரசுப்பணி அவருக்கு சலிப்பை தந்து விடும் அதனால் பணிகளில் நாட்டம் இருக்காது,மக்களை விட்டு நாட்டை விட்டு அடிக்கடி எஸ்டேட்டுக்கு தனிமை விரும்பி ஓய்வெடுக்க சென்றுவிடுவார். MIND - ENNUI, boredom; MIND - INDOLENCE, aversion to work MIND - COMPANY - aversion to - desire for solitude எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார்,அவ்வளவு தைரியம்,அதே சமயம் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற பயமும் ,தனக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தால் எப்பவும் புல்லட் புரூப் ஆடைகளை பயன்படுத்துவார்,பலத்த பாதுகாப்புடன் தான் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வார். MIND – COURAGEOUS MIND - DANGER - no sense of danger; has MIND - FEAR - happen - something will MIND - FEAR - murdered, of being பொது நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தாமதமாக தான் வருவார்,சரியான நேரத்திற்கு வருவது அபூர்வம், இவரிடம் நிறைய செண்டிமெண்ட் உண்டு, பழமையில் ஊறியவர்,பஞ்சாங்கம் பார்த்து இராகுகாலம்,எமகண்டம் பார்த்து கிளம்புதல், அதை சரியாக பின்பற்றவேண்டும் என்ற முன் கருதுகோள் உடையவர்.அதே நேரத்தில் இவர் ஒரு பக்திப்பழம். கோவில் செல்வது, அவற்றை பராமரிப்பது என்று கடவுள் பக்தி அதிகம் உடையவர். MIND - LATE, always MIND - PREJUDICES, traditional ; MIND – SENTIMENTAL; MIND - RELIGIOUS - affections, general – mania கட்சிக்கூட்டணிகளை அடிக்கடி மாற்றுபவர், ஜெயித்த உடனே கழற்றி விட்டு விடுவார், நன்றியுடன் இருக்கமாட்டார், ஜெயிக்க வைத்த மக்களுக்கே கசப்பு மருந்து தருவார்,இரக்கப்படமாட்டார் MIND - UNGRATEFUL MIND - UNSYMPATHETIC, unscrupulous சிறுவயதில் இசை, நாட்டியம் விரும்பி கற்றவர், கதை,நாவல் எழுதவும் ஆர்வம் கொண்டவர். பத்திரிக்கைகளில் எழுதவும் செய்தார். MIND - ARTISTIC – aptitude ; MIND - DANCING - desire for ஆண் போன்று இருக்க விரும்பியவர், ஆண்களின் உடைகளான பேண்ட் சர்ட் அணிவதில் தீராத விருப்பம் கொண்டிருந்தார். திரையில் ஒரு பட்த்தில் ஆணாக நடித்து ஆசையை தீர்த்துக்கொண்டார். MIND - MANNISH habits of – girls இளம்வயதில் தாய் தந்தையை இழந்து இந்த உலகில் தனித்து இருப்பதாக தன்னிடம் எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்த யாரும் இல்லை என அடிக்கடி சொல்லி வந்தார். MIND - AILMENTS FROM - death of loved ones - parents or friends; of MIND - DELUSIONS, imaginations - alone - world, in the ; MIND - FORSAKEN feeling - isolation, sensation of MIND - FORSAKEN feeling - thinks she is left alone in the world தன்னை பணத்துக்காக நெருங்கிய சொந்தங்களை வெறுத்தார். அவர்களை ஒதுக்கி தனது தோழியுடன் தனித்து வாழ்ந்தார். MIND - CONTEMPTUOUS - relations, for ; MIND - DELUSIONS, imaginations - family - does not belong to her own ; MIND - ESTRANGED - family, from her ; MIND - FAMILY members - aversion to நடிப்பை விருப்பமில்லாமல் தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் நம்பர் 1 ஆக திகழ்ந்தார். தனது இலட்சியம் அரசியலில் சாதிக்க வேண்டும் என்பது,ஆனால் சிறுவயதில் வக்கீல் ஆக ஆசை கொண்டிருந்தார். திரைத்தொழிலில் வாய்ப்பில்லாமல் தான் இப்படி சொல்கிறார் என ஒரு பத்திரிக்கை எழுதிய போது “கடவுளின் கருணையால், நான் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் வாழ்க்கையை ஒரு மகாராணி போல என்னால் வாழ முடியும். தற்போது, ஒட்டுமொத்தமாக என் ஆர்வம் வேறு திசையில் இருக்கிறது” என சொன்னவர் அவர். MIND - DELUSIONS, imaginations - superiority, of MIND - DELUSIONS, imaginations - tall, taller - he is MIND - DELUSIONS, imaginations - wealth, of MIND - DELUSIONS, imaginations - large - he or she is too MIND - DELUSIONS, imaginations - noble person, he is a MIND - DELUSIONS, imaginations - great person, is மொத்தத்தில் வெளிப்பார்வைக்கு தங்கமா பிளாட்டினமா என கணிக்கமுடியாத அளவுக்கு உள்ளுக்குள் வைரமாக வாழ்ந்த நபர் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்று எழுதியது. ஒரு மனிதரின் குணத்தை ஆய்வு செய்வது என்பது கடினமானது..இருந்தாலும் ஹோமியோபதி பார்வையில் எழுதப்பட்ட ஆளுமை அலசல்.)
கார்ட்டூன் உதவி: Cartoonist Bala

புதன், 28 அக்டோபர், 2020

NPK உரமா? நஞ்சா??

*உரமா? நஞ்சா??*
bala@agrohomoeopathy 

NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல அது பயிருக்கான நஞ்சு

"விளைச்சல் குறைவாக இருந்தால் காம்ப்ளக்ஸ் அடிக்கணும்" 
என விவசாயிகள் அடிக்கடி கூறுவதுண்டு. காம்ப்ளக்ஸ் உரம் விளைச்சலை கூட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அதுவே அவர்களின் விளைச்சலுக்கு எமனாகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. 

மண் பலவகையான குணங்களை உடைய சத்துக்களையும் உள்ளடக்கியது(நைட்ரஜன்,பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சிலிக்கா, கந்தகம், மாங்கனீசு,மெக்னீசியம்,இரும்பு,மாலிப்டினம்,சோடியம் உப்பு,போரான் மற்றும் கார்பன் போன்ற எண்ணற்றவை). இந்த ஒவ்வொரு சத்துக்களுக்கும் ஒவ்வொரு குணமுண்டு, ஒவ்வொன்றின் அளவு கூடுதலும் குறைவும் பயிரை பாதிக்கக்கூடிய காரணியாக இருக்கின்றன.
காம்ப்ளக்ஸ் NPK என்பது நைட்ரஜன்+பாஸ்பரஸ்+பொட்டாஷ் இவற்றின் சரிவிகித கலவையாகும் 17-17-17. இந்த மூன்றும் பயிரின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகித்தாலும் 
இவற்றை அதிகப்படியான அளவில் பயிருக்கு தெளிப்பது அதிக ஊட்டத்தை கொடுக்கும்,அதிக ஊட்டம் நோய் ஏற்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான தேவைக்கதிகமான நைட்ரஜன் அல்லது நைட்ரேட் அபரிமிதமாக தாவரங்களுக்கு தருவது பல தொல்லைகள் உருவாக காரணமாகிறது. இரசாயன உரங்களின் மூலம் தேவைக்கதிகமாக தெளிக்கப்படும் நைட்ரஜன் தாவரங்களை கொழுக்க வைத்து ஊதி நீரேறி பெருக்க வைக்கிறது. இந்த நிலையில் உள்ள தாவரமே, தன்னுடைய சரிசம நிலையை தக்க வைத்துக்கொள்ள அனைத்து வித பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.உளுத்தல் மற்றும் அழுகுதல்,அதுவும் ஈரக்கசிவு அழுகுதல் இவையே அதன் விளைவுகள்.

மனிதன் நொறுக்குத்தீனி (junk food) என்ற குப்பை உணவுகளை தின்பதன் விளைவே பலவிதமான நோய்களுக்கும் காரணமாகிறது(எ.கா: உடல் பருமன்,நீரிழிவு,இரத்த அழுத்தம்,இதய நோய்கள்). 

அதே போல NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல, தாவரங்களுக்கான நஞ்சு. பலவகையான பூச்சிகளும் நோய்களும் இதற்கு பிறகே பயிரைத் தாக்குகின்றன ஏனெனில் பயிர்கள் பூச்சிகள் தாக்குவதற்கு ஏதுவாக இருக்கின்றன.
தாவரங்கள் கொண்டுள்ள அதிகப்படியான நைட்ரஜன் சத்தே அசுவினிப் பூச்சிகளை ஈர்க்க காரணமென University of Kentucky செய்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வருகிறது.

சிலந்திப்பூச்சிகள் ஒரு நாளைக்கு 5லிருந்து 6 முட்டைகள் வரை இடும் என USDA ஆய்வுகள் சொல்கின்றன. அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவானது சிலந்திப்பூச்சிகளின் முட்டையிடும் அளவை ஒரு நாளைக்கு 10 ஆக அதிகரிக்கிறது என்று உறுதிப்படுத்துகின்றன.(Hylton, 1974.)

அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவே பழங்கள் பிஞ்சிலே உதிர்வதற்கும் காரணமாகிறது. பயிர்களின் அமினோ அமிலங்களின் அளவை நைட்ரஜன் அதிகரிக்கிறது, அதிக அளவிலான அமினோ அமிலங்களே பூச்சிகளை ஈர்க்கின்றன.

அசுவினிப்பூச்சிகள் அதிக அமினோ அமிலம் கொண்டுள்ள தாவரத்தையே தேர்ந்தெடுக்கின்றன என A Temple University ஆய்வு சொல்கிறது.
நைட்ரஜன் பொட்டாசியத்துடன் இணைந்து போரானுக்கு எதிரியாக மாறுகிறது, அது போரான் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது. போரான் பற்றாக்குறையின் விளைவாக பயிர்களில் வேரும் தண்டும் இணையும் பகுதி அழுகுகிறது, இலைகள் நலிவடைகின்றன, தண்டுகள் நடுவில் ஓட்டையாகின்றன.
அதிகப்படியான சுண்ணாம்புச்சத்தும் பாஸ்பரஸ் சத்தும் போரான் ஊட்டத்தை தடுத்து நிறுத்துகிறது.

இந்த மூன்று (NPK) சத்துக்களின் தேவைக்கதிக ஊட்டமானது பயிர்களின் தண்டு உடைதலுக்கும், பூ உதிர்தலுக்கும், வேர் அழுகலுக்கும், இலை பழுத்து உதிரவும் மற்றும் பயிர்கள் திடீரென காய்ந்து போகவும் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கும் காரணமாகின்றன.
இவை எல்லாம் எப்போது நடக்கும் என்றால் போரானின் அளவு மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும்போதுதான் நடக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

ஆக மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும் சத்தை ஈடுகட்ட அதற்கு ஒத்த மிக நுண்ணிய அளவிலான மருந்தே தேவை,
அதை விடுத்து அதிகப்படியான அளவில் உரத்தை மண்ணிற்கு தருவதானது அதற்கே நஞ்சாகிறது.
இதனால் தான் வீரியப்படுத்தல் எவ்வளவு முக்கியம் என்று ஹானிமன் வலியுறுத்துவதை நாம் உணரலாம். உயிர் ஆற்றலே இயங்கும் பண்பு என ஹானிமன் கூறுகிறார். 
கடைதல் மற்றும் குலுக்கி வீரியப்படுத்திய 6x வீரியமானது 10 இலட்சத்தில் ஒரு பங்கு அளவாக இருக்கிறது. இதிலிருந்து வெறும் நீர்மத்திற்கும் வீரியப்படுத்திய மருந்திற்கும் உள்ள வேறுபாட்டையும், ஹோமியோபதி மருந்தின் செயல்பாட்டையும் அதன் நுண்ணிய தன்மையையும் அறியலாம்.

*முக்கிய ஹோமியோபதி  உரங்கள்*
Alternative for NPK

(N)தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்து   குறைபாடு இருக்குமானால் 
 கல்கேரியா கார்ப் மற்றும் மாலிப்டினம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.

(P)மணிச்சத்து எனப்படும்  பாஸ்பேட்(பாஸ்பரஸ்) சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கு ஏற்ற ஹோமியோபதி மருந்துகள்:
அலுமினா, கல்கேரியா கார்ப், ஃபெர்ரம் மெட், மெக்னீசியம், மங்கானம், நேட்ரம்ம்யூர், ஜிங்கம் மெட்.  
 
(K)சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கேற்ற ஹோமியோபதி மருந்துகள்:
ஃபெர்ரம் மெட், மங்கானம், நேட்ரம் ம்யூர்


ஆக நல்ல விளைச்சலுக்கு இயற்கையுடன் இயைந்த விவசாய செயல்பாடே சரியானது. பின்வருவனவற்றை சரியான விவசாயத்திற்கு உகந்த செயல்பாடுகளாக கொள்ளலாம்.

1.இரசாயன உரங்களை அறவே தவிர்த்தல், பூச்சி மற்றும் களைக்கொல்லிகளை தவிர்த்தல், எந்த ஊட்டத்தையும் தேவைக்கதிகமாக தருவதை தவிர்த்தல்
2. ஒன்றுக்கொன்று துணையான பயிர்களை விவசாயத்தில் பயன்படுத்தல்(எ.கா: தக்காளியுடன் துளசி, கேரட்   பயிரிடுதல்.சோளத்துடன் பயறு மற்றும் பூசணி)
3. பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல் (எ.கா: நெல்லை தொடர்ந்து உளுந்து)
4. நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல் காத்தல் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டும் துணைப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடல்
5. சூழல்,வானிலை மற்றும் மண்தன்மை மற்றும் நீர் இருப்பு இவற்றை அறிந்து பயிரிடுதல்
6. நிரந்தர வேளாண்மை.
7. வளர்ப்புப்பிராணிகள் வளர்த்தல் மூலம் மறு சுழற்சி. அவற்றின் சாணம் உரமாகிறது மற்றும் பயிரின் இலைதழைகள் அவற்றுக்கு உணவாகிறது.
8.ஏதேனும் நோய்த் தாக்குதலுக்கும் சத்துப்பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துதல்.
இதன்மூலம் நல்ல விளைச்சலை விவசாயத்தின் மூலம் பெறமுடியும்.
அது 
வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப,

ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு

உழுவதை விடவும் இயற்கையான எருவிடுதலை நல்லது என்கிறார். மற்றும் நீர்பாய்ச்சுவதை விட முக்கியம் அதனை காத்து பராமரிப்பது
ஆகவே ஹோமியோபதி என்ற இயற்கைப் பாதுகாவலன் உதவியுடன் பயிரைப் பாதுகாப்போம்.
தொழில்களில் எல்லாம் தலையாய தொழிலான உழவுத்தொழிலை காப்போம்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

reference: vaikundanath kaviraj 
                 father of agro homoeopathy
http://balahomoeopathy.blogspot.com/

புதன், 27 மே, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் இயற்கை வழி மருத்துவம் ஹோமியோபதி


வெட்டுக்கிளி படையெடுப்பு மட்டுமல்ல ஏற்கெனவே பூச்சிக்கொல்லிகளுக்கும் கட்டுப்படாத பூச்சிகளின் பெருக்கம் மற்றும் நத்தை படையெடுப்பு போன்ற பல்வேறு புதுது புதிதான சிக்கலை உழவர்குடி எதிர்கொண்டு மிக சிரமத்தில் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இயற்கையான பாதுகாப்பான பல அடுக்கு விவசாய முறையை கைவிட்டு ஒற்றை அடுக்கு விவசாயத்தை கையில் எடுத்தது தான்...
சரி இதற்கு தீர்வே இல்லையா.. இருக்கிறது..மரபு சார்ந்த பல அடுக்கு விவசாயமுறைக்கு திரும்புவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆய்ந்து தெளிந்து கூறியிருக்கிறார்.
பூச்சிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த எளிய மூலிகை பூச்சிவிரட்டி முறைகளையும் தந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=xehvMPJfQ30
அதுமட்டுமில்லாமல் ஹோமியோபதி மருத்துவமுறையும் வெட்டுக்கிளி மற்றும்
நத்தை படையெடுப்பை வெற்றிகரமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டாக்டர் வைகுந்தநாத் கவிராஜ் அவர்களால் கட்டுப்படுத்திய வரலாறும் உண்டு. நத்தையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தான helix toasta ஹோமியோபதி தத்துவமான ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் வழியில் அதாவது..முள்ளை முள்ளால் எடுப்பது போல நத்தையை விரட்டுகிறது.
கட்டுரை இணைப்பு:
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://balahomoeopathy.blogspot.com/2017/10/blog-post.html
அதேபோல வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.
1.Rove beetle
என்ற பூச்சியின் அறிவியல் பெயர்: Staphylinidae இந்த பூச்சிக்கரைசலின்(இந்த பூச்சியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) வாசனைக்கு வெட்டுக்கிளி வரவே வராது.(இந்த பூச்சியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
2.hyssopus officinalis (இந்த தாவரக்கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) இந்த தாவரக்கரைசலுக்கும் வெட்டுக்கிளி வரவே வராது..ஆடுதொடா செடி எப்படி ஆட்டுக்கு பிடிக்காதோ அது போல இது வெட்டுக்கிளிக்கு பிடிக்காத வாசனையுள்ள செடி.(இந்த செடியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
3.aranea diadema என்ற சிலந்தி (இந்த சிலந்தியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) ..இந்த சிலந்தி கரைசலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் தன்மைக்கு வெட்டுக்கிளி தலைவைத்து படுக்காது.
மேற்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஹோமியோபதி மருந்துகடைகளில் வாங்கி வெட்டுக்கிளி அறிகுறி தெரிய ஆரம்பித்த உடன் பயிருக்கு தெளிக்கலாம்..
ஹோமியோபதி மருந்து மிகவும் குறைந்த செலவு தான் ஆகும். இன்னும் எளிதாக இந்த செடியோ பூச்சியோ கிடைத்தால் அதனை ஹோமியோபதி மருத்துவ முறைப்படி வீரியப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தும் முறை
10மில்லி மருந்தை 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்...
அதிக நிலப்பரப்புக்கு 500மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
குறிப்பு:
கீழ்க்கண்ட காணொளி பதிவுக்கான பின்னூட்ட பதிவாக நான் இட்டது. அவசியம் கருதி விரிவாக இங்கே பதியப்பட்டது.
https://www.youtube.com/watch?v=-nDFs354xCU

புதன், 20 மே, 2020

அரிப்பும் மருந்துமோகமும்

பழ.வெள்ளைச்சாமி


பெண் வயது 45
ECZEMA தொடையில் இருந்தது.  அந்தப் பெண்மணி வந்ததும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தொடையை ஆடையை நீக்கிக் காட்டினார்.

``உங்களுக்கு என்ன பண்ணுது?’’

``தொடையில் பத்து பத்தாக இருக்கு’’ என்று மறுபடியும் தொடையைக் காட்டினார்.

எவ்வளவு நாளாக இருக்கு?

``இது 4 வருஷமாக இருக்கிறது.  தோட்டத்துக்குள்ளே குடியிருக்கிறோம்.  அதனால் பூச்சி பட்டை கடிச்சிருக்கும்.  விஷச் செடிகள் ஏதாவதுபட்டிருக்கும்’’ என்று சொன்னார்கள்.

``உங்களுக்கு 4 வருடத்திற்கு முன் வேறு என்ன நோய்கள் வந்தன?’’

எதுவுமே வந்ததில்லை.

``இது அரிப்பு இருக்கா?  இல்லை எப்படி இருக்கு?

அப்பப்ப அரிக்கும்.  அரிக்கும்போது தேங்காய் எண்ணெய் போட்டுக் கொள்ள வேண்டும்.  ஏதாவது ஆஸ்பத்திரி களிம்பு போட்டால் குறையுது.  அப்புறம் வந்திடுது.  நானும் 4 வருஷமா பல பேர்களிடம் காட்டிவிட்டோம்.  தோல் டாக்டர்கள் மாத்திரைதான் எழுதித் தர்றாங்க.  ஆனால் குறைஞ்சபாடில்லை.  நானும் அலுத்துப் போய் விட்டுவிட்டேன்.’’

`` நான்கு வருடத்திற்கு முன் என்ன முக்கியமான சம்பவம் மனதை பாதிக்கிறது போல நடந்தது?’’

``ஒன்றும் பெரிதாக நடக்கலை.  பத்து வருடமாகவே பக்கத்துத் தோட்டததுக்காரர்களோடு சண்டைதான்.  கோழிச்சண்டை, மாட்டுச் சண்டை என்று ஏதாவது வந்துவிடும்.  அப்பப்ப  பயந்து கொண்டு இருப்பேன்  எதுவும் சண்டை வந்துவிடுமோ என்று.’’

``வேறு காரணம் இருக்கா?’’

``வேறு இல்லை எப்பப் பார்த்தாலும் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பேன்.’’

இவர்கள் வந்ததும் கூச்சநாச்சமில்லாமல் ஆடையை நீக்கித் தொடையைக் காட்டியது மற்றும் அவர்கள் கூறிய விபரங்களிலிருந்து கீழ்கண்ட குறிகள் கணக்கீடு செய்யப்பட்டன.

MIND – SHAMELESS
MIND - NAKED, wants to be
MIND - FEAR - injury - being injured; of
MIND - DELUSIONS - injury - being injured; is - surroundings; by his

மேலே தேர்வு செய்யப்பட்ட குறிகள் HYOSCYAMUS  மருந்து குறித்தன.  அந்த மருந்தை 200 வீரியத்தில்  கொடுத்து அனுப்பினேன்.

அவர்கள் 15 நாட்கள் கழித்து வந்தபோது அவர்களுடைய   ECZEMA முக்கால்வாசி குணமாகி இருந்தது.

மறுபடியும் ஒரு மாதத்திற்கு தொடர்மருந்து கொடுத்தனுப்பினேன்.  அவர்கள் ஒரு மாதம் கழித்து வந்தபோது முற்றிலுமாக நலமடைந்து இருந்தார்கள்.  ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் எனக் கருதி மாதாமாதம் வந்து மருந்தில்லா மருந்து வாங்கிச் செல்வார்.

இரண்டு வருடம் வந்தும் மறுபடியும் அந்தக் குறிகள் திரும்பி வராததால் நான் அவர்களுக்கு மருந்து மோகத்தைத் தணிக்க நான் பவரான மருந்து கொடுப்பதாகச் சொல்லி தொடர்மருந்து கொடுத்து இனிமேல் இரண்டு வருடத்திற்கு மருந்து தேவைப்படாது என்று கூறியதால் பிறகு அவர்கள் வரவில்லை  ஆனால் அவர்கள் அனுப்பிய துயரர்கள் அடிக்கடி வந்து போவார்கள்.


ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் தொடரும்

வியாழன், 14 மே, 2020

PLV அப்பா

 Dr Prema Gopalakrishnan MD (Homoeopathy)
Image may contain: 1 person, text
pazha.vellaichamy
ஓமியோபதி இளநிலை முடித்திருந்த நேரம். திண்டுக்கல்லில் மூன்று மருத்துவ நண்பர்கள் ஓமியோபதி தொடர் கற்றலுக்கான முயற்சியில், எங்களது கிளினிக்கில் மதிய இடை வேளைகளில் ஓமியோபதியின் பாடத்திட்டத்திற்குள் வராதவற்றை தேடி படித்துக்கொண்டிருந்தோம்.
இதை அறிந்த பழ.வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் என்னை விட்டுவிட்டு நீங்கள் மூவரும் மட்டும் படிப்பதா என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று தனது இல்லத்தில் படிக்க மூவரையும் அழைத்தார்.
மற்ற இருவரும் அவருக்கு நெருக்கமானவர்கள். எனக்கோ அப்போதுதான் அறிமுகமாகிறார்.
ஒரு தயக்கத்துடன் தான் நண்பர்களுடன் சென்றேன்.
மதியநேர படிப்பு காலைநேரமாக மாறியது.
அதிகாலையில் எழுந்து தனது கடமைகள், நடைபயிற்சி அனைத்தும் முடித்துவிட்டு எங்களது வருகைக்காக காத்திருக்கும் 60 வயது இளைஞரை பார்த்து, இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பும் வேகமும் ஒரு மாணவனைப்போல மேவும் மேலும் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கும் அவர் எனக்கு ஆச்சரயத்தை அளித்தார்.
ஓமியோபதி வெறும் மருத்துவமன்று. அது இவ்வுலகின் சமூகவாழ்வியலின் பரிமாணங்களை(dimensions) சொல்லிக்கொடுக்கும் ஒப்பற்ற கல்வியாகும். ஆதலால் கலந்துரையாடலுக்கு என்றும் எங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
மகளே என்ற சொல்லுக்கு மறுசொல் இல்லாமல் எனை எப்போதும் விழிக்கும் PLV சார்,
ஒரு மழைக்கால காலையில், மழையினால் தாமதாக வந்த எங்களைப்பார்த்து நீ என்ன உப்பு மூட்டையா மழையில் கரைந்துவிட.. அல்லது காளானா முளைத்துவிட.. மழை பெய்தால் என்ன.. படிக்க தாமதாக வரலாமா என அன்போடு கடிந்து கொண்டபோது,
PLV அப்பா ஆனார்.
ஓமியோபதியையும் இயங்கியலையும், வள்ளுவத்தையும் ஒருகோட்டில் இவர் பேச மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருக்கலாம்.
சில மாதங்களாக எனது தனிப்பட்ட விருப்பத்தில், "தமிழகத்தில் ஓமியோபதியும் கம்யூனிஸமும்" என்ற தலைப்பில் சிறிய ஆய்வாக சில மூத்த தோழர்களை சந்தித்துவருகிறேன். இதுவரை சந்தித்த அனைவரும் ஒருசேர அவர்களது ஓமியோபதி பாதையின் திருப்புமுனையாக இருந்தவர் "PLV" என்று மந்திரம் போல சொன்னது, தமிழகத்தில் ஓமியோபதியின் வளர்ச்சியில் இவரது பெயர் நீங்கா இடம் பெற்றிருப்பதை காண்பிக்கிறது. ஒருகாலத்தில் தமிழகமெங்கும் இரவும்பகலும் பயனப்பட்டு ஓமியோபதி கற்றுக்கொடுத்து பல ஓமியோபதி மாணவர்களை, மருத்துவர்களை உருவாக்கியுள்ளார்.
ஐயா நம்மாழ்வார் தொடங்கி தோழர் நல்லகண்ணு ஐயா , தோழர் பாலபாரதி என இவரிடம் ஓமியோபதி மனங்களாக இணைந்த ஆளுமைகள் ஏராளம்.
இவரது அனுபவங்களை, இந்த ஊரடங்கு காவத்தில் நமக்கு கேட்கும் வாய்ப்பளித்த
"குக்கூ உரையாடலுக்கு" நன்றிகள் பல.
~ Dr. கோ. பிரேமா .
🦋
" ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது; அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்கவேண்டியது அவசியம்.”
- ஜான் ஸ்கால்ட்டன்
டச்சு நாட்டைச் சேர்ந்த ஜான் ஸ்கால்ட்டன் என்ற ஹோமியோபதி அறிவியலாளர்தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை தனிமங்களின் அணு எண் அடிப்படையில் முதன்முதலில் ஆய்வுசெய்தவர்; அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்த்தார். ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த வெள்ளைச்சாமி ஐயா அதன் சாரத்தை ‘ஸ்கால்ட்டனின் கனிமங்கள்’ என்ற தன்னுடைய சிறுநூலில் தெளிவுற எழுதியுள்ளார். ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்; சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்கமுடியாது என்பதை தனது முப்பது வருடகால மருத்துவ அனுபவம் வழியாக நமக்குத் தெளிவாக்குகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி (PLV) அவர்கள், காரைக்குடி தாலுகா செம்பனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இளைஞராக இருந்தபோதே மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதில் இவர் ஆர்வமாக இருந்தார். இவர் தனது 17 வயதில் CPI அரசியல் கட்சியில் இணைந்து இன்றுவரை அதில் தொடர்கிறார். தீவிர கம்யூனிஸ்ட்டாக பல்வேறு போராட்டக்களங்களில் ஈடுபட்ட இவர் அதற்காக 1976ல் 7 மாத சிறைவாசம் அனுபவித்தார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் மனிதாபிமான, குணப்படுத்தும் தீர்வுகளைத் தேடியலைந்ததின் பயனாக, இவர் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டடைந்தார்.
இது ஒரு மருத்துவமுறை மட்டுமல்ல, இயற்கையின் நியதி மற்றும் மனிதர்கள் எதிர்கொள்கிற வாழ்க்கைப் போராட்டங்களுக்கான தீர்வு என்றும் அவர் விரைவிலேயே கண்டறிந்தார். 1990ம் ஆண்டில், சில நண்பர்களுடன் சேர்ந்து ஹோமியோபதிக்காக 'APROACH' (தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம்) என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். 30 ஆண்டுகளைக் கடந்து, இந்த அமைப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தின் பல பிராந்தியங்களில் இலவச ஹோமியோபதி சிகிச்சையுடன் அனைத்துவகுப்பு மக்களுக்கும் சமமான சேவையை செய்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நோய் எதிர்ப்பு மருந்துகளை கிராமப் பொதுமக்களுக்கு அண்மையில் இவ்வமைப்பினர் வழங்கினர். ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச்செயலாளராகவும் வெள்ளைச்சாமி ஐயா பொறுப்புவகிக்கிறார்.
அன்பே கடவுளின் நியதி, மனிதத்துவம், A Brief Introduction to Homoeopathy, ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?, ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு, ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு, ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள், ஹோமியோபதி ஓர் அறிமுகம், மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம், ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம், ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம், ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் உள்ளிட்ட ஹோமியோபதி மற்றும் மனிதாபிமான எண்ணங்கள் குறித்த புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெள்ளைச்சாமி ஐயா எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய ஆசான்களாக ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிடும் ஐந்தாறு முக்கிய நபர்களில் வெள்ளைச்சாமி ஐயாவும் ஒருத்தர். நோவுற்றுத் தான் துடிக்கும் வேளைகளில் நம்மாழ்வார் ஐயா, சிகிச்சைக்கென முதல் தேடிச்சென்றது வெள்ளைச்சாமி ஐயாவிடம்தான். மார்க்சியத்தை வெறும் வாய்த்தத்துவமாக நிறுத்திக்கொள்ளாமல், தன்னுடைய வாழ்வை அதற்கென ஒப்படைத்து, ஒரு ஆசான் பொறுப்பிலிருந்து இவர் உருவாக்கும் ஆளுமைகள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் சாட்சி மருத்துவர்களாக மாறிநிற்கிறார்கள். மேலும், இன்று தமிழகத்தின் ஏதோவொரு சிறுகிராமத்தில், யாரோ ஒரு கிராமத்துப் பையனோ அல்லது பொண்ணோ ‘ஹோமியோபதி’ படிக்க முடிவெடுத்தால், வெகு இயல்பாக அவர்கள் சென்றடையும் வழிகாட்டி ஆசான் ‘மருத்துவர் பழ.வெள்ளைச்சாமி’ என்ற ‘PLV அப்பா’ தான்.
குக்கூ நேரலை இணையவழி உரையாடலில், நாளை 15.05.20 மாலை 5.00 மணிக்கு, ஹோமியோபதி ஆசானான வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் பங்கேற்று, தனது வாழ்வுக்கால அனுபவங்கள் மற்றும் துறைசார்ந்த மேலதிக அவதானிப்புகளை நம்முடன் பேசிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இயற்கை மருத்துவத்தை அதன் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் விளக்கி, மனிதத்தன்மையே மருத்துவச் சிகிச்சையின் இறுதியிலக்காக இருக்கவேண்டும் என தற்போதைய அறிவுலகத்தின் முன்பு உரக்கச்சொல்கிற இந்த ஆளுமைமனிதரின் உரையாடல், பல சுயமுடிவுகளை எடுப்பதற்கான தைரியத்தை நமக்கு வழங்கக்கூடும்.

thanks to kukkoo children movement

திங்கள், 4 மே, 2020

காணாமல் போன கர்ப்பப்பை கட்டியும் கரைந்துபோன சிறுநீரகக்கல்லும் பழ.வெள்ளைச்சாமி



      பெண் வயது 41
இவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி. சிறுநீரகக் கல்.
``உங்களுக்கு  என்ன பண்ணுது?’’
 மென்சஸ் அதிகமாகப் போகுது.  அடிவயிற்றில் வலி, யூரின் போகும்போது எரிச்சல்.  ஸ்கேன் எடுத்துப் பார்த்தில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள்.  வலது கிட்னியில் கல் இருப்பதாகச் சொன்னார்கள்.
``இது எவ்வளவு நாட்களாக இருக்கிறது?’’
``ஆறு மாதமாக இருக்கிறது’’
``இதற்கு முன் ஏதாவது நோய் வந்ததா?’’
``எப்பவாவது சளி, காய்ச்சல் வந்தால்தான்.  அதைத்தவிர வேறு எந்த நோயும் கிடையாது.  அதுவும் இந்த இரண்டு வருடங்களாகத்தான் உடம்புக்குச் சரியில்லாமல் போகுது’’

``அது என்ன இரண்டு வருடம்?’’
``ஆமா சார், எப்ப இந்த ஆபீஸ்க்கு வந்தேனோ அப்பவே உடம்புக்குச் சரியில்லை’’
எங்க வேலை பார்க்குறீங்க? உங்க வேலையைப் பற்றிச் சொல்லுங்க.
நான் முனிசிபல் ஆபீஸில்   AE  சார். எனக்கு 12 வருட சர்வீஸ் சார்.  இரண்டு வருடத்திற்கு முன்தான் இங்கே டிரான்ஸ்பரில் வந்தேன்.  நான் ரொம்ப சின்சியர்.  நான்  DUTY-இல் சரியாக இருப்பேன்.  நான் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் எனக்கு நல்ல பேர்.  ஆனால் இந்த ஆபீஸிற்கு வந்த பிறகுதான் எல்லாப் பிரச்னையும்.
என்ன பிரச்சனை? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க.
``சார் எனக்கு மேல் உள்ளவர்கள் காண்ட்ராக்ட்காரர்களிடம் லஞ்சம் வாங்கியதற்காகவே வேலைகளைப் பார்க்கச் சொல்வார்கள்.  நான் அவர்களுடைய போக்குக்கு ஒத்துழைக்காததால் எனக்கு பல வழிகளிலும் டார்ச்சர் கொடுக்கறாங்க.  சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மற்றவர்கள் முன் அசிங்கமாகப் பேசி இன்சல்ட் பண்ணுவாங்க.  நான் இவ்வளவு நாளாக நல்லா வேலை பார்த்துவிட்டு இங்கே வந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறேன்.  தப்பு பண்ணாமல் டார்ச்சர் பண்ணுவது, அவமானப்படுத்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது.``  கடந்த இரண்டு வருடமாக இப்படித்தான் போகுது.   As a lady  ஆக என்னால ஒரு level -க்கு மேல் போக முடியலை.  அதனால் நான் ரொம்ப வேதனைப்படுகிறன் சார்.  சொல்லப் போனா இங்க வந்த பிறகுதான் எனக்கு சேராமல் வந்தது.  இதற்கு முன்னாடி எந்தப் பிரச்சனையும் வீட்டிலும் இல்லை.  ஆபீஸிலும் இல்லை.’’
      நான் இவர்கள் நோய்க்குக் காரணம் இவர்களுக்கு அலுவலகத்தில் மனம் பாதித்ததுதான் என்று உணர்ந்து கொண்டேன்.  மேலும் இவர்கள் மேற்கூறிய விஷயங்களிலிருந்து கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.

MIND - DELUSIONS - tormented; he is
MIND - DELUSIONS - insulted, he is
MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has
 
மேற்கூறிய குறிகளுக்கு  lyssinum பொருத்தமாக இருத்ததால் அதை 200 வீரியத்தில்  கொடுத்து விட்டு தொடர் மருந்தை 1 மாதம் கொடுத்து அனுப்பினேன்.
ஒரு மாதம் கழித்து அவர் மறுபடியும் வந்தார்.
``உங்களுக்கு மருந்து சாப்பிட்டதும் எப்படி இருக்கிறது’’
நன்றாக இருக்கிறது.  போனவாரம் மென்சஸ் ஆனபோதும் கூட அதிகமாக பிளீடிங் இல்லை.  வலியும் இல்லை.

பின்பு அவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்கள் கர்ப்பப்பை கட்டி காணாமல் போயிருந்த்து.  சிறுநீரகக் கல்லும் கரைந்து விட்டது.