மனிதத்துவம்
PART-2
PART-2
மனிதத்துவம் ஏன்?
பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும், ஒற்றைச் செல் உயிரியிலிருந்து
மனிதன் வரை மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகின்றன. அதன் அடிப்படையில்தான் வினைபுரிகின்றன.
அந்த விளைவுகளின் அடிப்படையில் மகிழ்கின்றன, வளர்கின்றன. இந்த வளர்ச்சிதான் ஒவ்வொரு உயிரியையும் மேம்பட்ட நிலைக்கு
உயர்த்துகின்றது. ஒவ்வொரு உயிரியும் காலப்போக்கில் வினையின் பயனால் மாற்றமடைந்து
தன்னியக்க உயிராற்றலின் விளைவால் மேம்பட்ட நிலைக்கு வந்து தன்னிலும் உயர்ந்த
நிலையை அடைகின்றது.
இவ்வாறு ஒரு செல்
விலங்கு இரண்டு செல் விலங்காக மாறி படிப்படியாக பாலூட்டிகள் நிலைக்கு வளர்ந்து
கடைசியில் மனிதர் நிலைக்கு உயர்ந்து விட்டனது. இந்த பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு
உயிரியும் அதன் அதன் தனித்தன்மைப்படிதான் வாழ்ந்து வளர்ந்து உயர்நிலைக்கு
வந்துள்ளது. இப்போது மனிதன் எதை நோக்கி செல்வான் என்று நிச்சயமாகச் சொல்ல
முடியாது. இப்போது உள்ள நிலையில் அவனுடைய வினைப்பயனுக்கு ஏற்றார்போல்தான் அவனில்
மாற்றம் நடக்கும்.
இப்போது மனிதர்கள்
விலங்குகளின் சுயத்தில் தான் வாழ்கிறார்கள். பெரும்பாண்மையான மனிதர்கள், மனிதர்களின்
சுயத்தில் இல்லை. அவர்கள் விலங்குகளின் சுயத்தில் இருப்பதால், இதைவிட தாழ்ந்த
விலங்காக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மனிதர்கள் மனிதனின் சுயத்தில்
இல்லை. மனிதர்கள் மனிதனின் சுயமான ‘அன்பு” ‘உழைப்பு” ‘பகிர்வு” என்ற குணங்களோடு
இருக்கும் போது மட்டுமே ‘மனிதன்” என்ற நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு போகலாம்.
பரிணாம வளர்ச்சியில்
மனிதன், மனிதன் என்ற
நிலையிலிருந்து உயர்ந்த நிலையாகிய ஒரு நிலையை (‘கடவுள் தன்மையை”) அடைவதற்கு
முதலில் மனிதனின் சுயத்தோடு கூடிய மனிதத்தன்மையை அடைய வேண்டும். ஏன் மனிதன்
மனிதனுடைய சுயத்தோடு வாழ வேண்டும்? இங்கே ‘வாழ்வு” என்பது ‘இருத்தல்” (நுஒளைவநnஉந) இல்லை. வாழ்வு என்பது மகிழ்வோடு இருத்தல், தான் மட்டுமல்ல, மற்றவர்களையும்
மகிழ்வோடு இருக்க வைத்து அந்த மகிழ்ச்சியில் தானும் மகிழ்தல். ஆக வாழ்வு என்பது
மற்றவர்களுக்காக வாழ்தல். எனவே மனிதன் என்பவன் மற்றவர்களுக்கு வாழ்பவன். ஏனெனில்
மனிதன் மட்டுமே மற்றவர்களுக்காக வாழ முடியும்.
தன்னை அறியாதவனால்
மற்றவர்களைச் சாpயாக அறிய முடியாது.
தன்னை அறிவது என்பது தன் சுயத்தை அறிவது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே
ஒன்றின் வடிவாக்கம்தான். அவைகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாம்
ஒன்றின் வடிவாக்கம் தான். அதனால் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ளவைதான்.
அதனால், வள்ளுவர் பெருமான்
அவர்கள்,
‘சார்புணர்ந்து
சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா
சார்தரும் நோய்”
என்று கூறுகிறார்.
எனவே, ஒவ்வொரு உயிரும்
மற்றவற்றோடு இடைவிடாது தொடர்பு உள்ளதாக இருக்கிறது. இவ்வாறு தொடர்புடன் இருக்கும்
போது ஒவ்வொன்றும் தனக்கென ஒரு சாரம் இருப்பாக நினைப்பதும், அது உயர்ந்ததாக
நினைப்பதும் மாயை ஆகும். அது அறியாமையின் ஆர்ப்பரிப்பு. அதனால் ஒன்றில் என்ன
நடந்தாலும் அது அனைத்துக்கும் போய்ச் சேரும். ஏனெனில் எல்லாம் பிரபஞ்ச மரத்தின்
பகுதிகள்தான். ஆகையால் அந்த மரத்தின் எந்த பகுதியில் என்ன நடந்தாலும் அது
அனைத்துப் பகுதிகளுக்கும் பரவும் என்பதுதான் உண்மை.
ஆகையால் மனிதன்
அவனுடைய மனிதத்துவம் என்ற சுயத்தில் இல்லாவிட்டால், அதன் விளைவு துன்பம்தான். மனிதனடைய சுயமாகிய
அன்பை உணர்ந்து மற்றவைகளுக்கு ஒன்று செய்யும் போது அது ஆனந்தமாக இருக்கிறது. அங்கே
அன்பின் நிமித்தம் செய்யும் ஒவ்வொரு செயலும் நாம் மற்றவர்களுக்கு செய்வதாகக் கருத
முடியாது. நாம் நமக்கே செய்து கொள்வதாகும். அதில் பெருமைப்படுவதற்குக் கூட
அவசியமில்லை. இதை தான், இந்த உண்மையை உணர்ந்தவனே உயிர் வாழ்வான் என்றும், இந்த உண்மையை
உணராதவர்கள் செத்தவர்களுக்குச் சமமானவர்கள் என்று வள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”
இங்கோ நாம் எல்லோரும்
ஒன்றின் அவதாரங்கள். அதனால்தான் நாம் எல்லோருக்கும் ஒத்தவர்கள் என்ற எண்ணம் வர
வேண்டும். இந்த எண்ணம் வர வேண்டுமென்றால் முதலில் மனிதத்துவத்தை உணர்ந்து
மனிதர்களாக மாறினால் தான் அனைத்திலும் உள்ள ஒத்ததை அறிய முடியம். இந்த உண்மையை
அறியும் போது தான் ஆனந்த வௌ;ளம் கரை புரண்டு ஓடும்.
ஆனால் இன்று உலகு
அப்படியா இருக்கிறது? இல்லை. ஏனெனில் மனிதன் அவனுடைய சுயத்தை இழந்து விலங்குகள் இனத்தில் இருப்பதால்
தான் அனைத்து துன்பங்களும்‚ புத்த பகவான் கூறியது போல், இன்று உலகம் துன்பமயமானதாக
உள்ளது. சிலர் சொல்லலாம் நாங்கள் வசதியாக உள்ளோம். எங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது
என்று இறுமாப்புடன் கூறலாம். ஆனால் வள்ளுவர் பெருமான் கூறியது போல
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும்
நினைக்கப் படும்”
அதாவது அவ்விய
நெஞ்சத்தான் ஒருபோதும் நன்றாக இருக்க முடியாது. அவன் செய்த கேடு அவனுக்குத்
திரும்பாமல் ஒருபோதும் இருக்காது. ஏனெனில்
இது அறிவியல், இது தத்துவம். ‘நீ
எந்தச் செயல் செய்தாலும் அது பிரதிபலித்து, எதிர் வினையாக வரும்” ‘விதைப்பதையே அறுக்க முடியும், கொடுப்பதையே பெற
முடியும்” என்பதும், அன்பை மறந்து அறம் நோக்காது செய்த ஒவ்வொன்றும் செய்தவனையே அடைந்து, அவனை
துன்பத்துள்ளாக்கும்.
‘பிறர்க்கு இன்னா
முற்பகல் செய்யின் தமக்கு
இன்னா
பிற்பகல் தாமேவரும்”
ஆம், வள்ளுவர் சொன்னதுபோல்
ஒருவர் ஒருவருக்கு துன்பம் செய்தால் அந்தத்துன்பம் பிரதிபலிப்பு கோட்பாட்டின்
எதிர் வினைக் கோட்பாட்டின் படியும் செய்தவனுக்கே திரும்பி வரும். ஒரு மனிதனுடைய
நோய்க்கும், துன்பத்திற்கும் அவன்
பிறர்க்கு அன்பற்றுச் செய்த தீங்குதான் அவனுக்கு நோயாக வருகின்றது. இதை வள்ளுவர்
தெளிவாகவே சொல்கிறார்
‘தீப்பாலதான் பிறர்கண் செய்யற்க நோய்பால்
தன்னை
அடல் வேண்டா தான்”
‘உனக்கு நோய் வேண்டாமா? பிறர்க்குத் தீங்கு
செய்யாதே” என்று எச்சாpக்கிறார். இப்போது மனிதர்களுக்கு வந்துள்ள நோய்கள் மற்றும் துன்பங்கள் எல்லாம்
ஏற்கனவே மனிதர்கள் மற்றவர்களுக்குச் செய்த துன்பங்கள் காரணம் என்றும், வருங்காலத்தில் துன்பம்
இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் யாருக்கும் துன்பம் செய்யக் கூடாது என்பதையும்
வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
‘நோயெல்லாம் நோய்
செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர்”
இங்கே ஒரு மனிதன்
இன்னொரு மனிதனுக்கு ஏன் துன்பம் செய்ய வேண்டும். பிறகு ஏன் அந்தத் துன்பத்தையே
திரும்பப் பெற வேண்டும்? இதற்கெல்லாம் மனிதர்கள் மனிதத்துவத்தை மறந்து விலங்குத்துவத்தில் வாழ்வதுதான்.
மேலும் வள்ளுவர்
விரோதிக்குக்கூட துன்பம் செய்யலாகாது என்று வலியுறுத்துகிறார். தர்க்காPதியாக பார்த்தால்
நமக்கு துன்பம் செய்த விரோதிக்குத் துன்பம் செய்வது என்பது நியாயமானதாகத் தொpயும். ஆனால்
விரோதிக்குச் செய்தாலும் நண்பனுக்குச் செய்தாலும் இயற்கை அதன் வேலையைச் செய்யாமல்
இருக்காதே. ஆகையால் இந்த உண்மையை உணர வேண்டுமானால் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல்
அறிவியல் பூர்வமான உண்மையை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் விரோதிக்குத்
திருப்பி செய்வது நியாயம் என்றாலும், அது அறிவியல் ரிதியாக செய்தவனுக்கு வந்து சேரும் என்று அறிவது தலையாய அறிவு
என்பதுதான் சாpயாகும்.
‘அறிவுனுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடின்”
அதேபோல மறந்துக்கூட
பிறர்க்கு தீங்கு செய்யக் கூடாது. ஏனெனில் எதிர்வினை என்பது நிச்சயம் உண்டு.
மறந்து செய்தாலும் மறக்காமல் செய்தாலும் இயற்கை விதி எதிர்வினையாற்றாமல்
இருக்காது.
‘மறந்தும் பிறன் கேடுசூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தபின் கேடு”
ஆக, மனிதன் நண்பனுக்குச்
செய்தாலும் விரோதிக்குச் செய்தாலும் தொpந்து செய்தாலும், தொpயாமல் செய்தாலும், மறந்து செய்தாலும், மறக்காமல் செய்தாலும்
துன்பம் துன்பம்தான். அந்தத் துன்பம் எதிர்வினையாற்றி எய்தவனுக்கே அம்பு வந்து
சேரும் என்பது அறிவியல் பூர்வமான இயற்கை நியதி.
ஏன் மனிதன் இவ்வாறு
செய்ய வேண்டும்? அவன் அவனுக்குரிய
சுபாவத்தில் இல்லை. அவன் முழுக்க முழுக்க விலங்கினப் பண்போடு இருக்கிறான்.
அதனால்தான் அவன் துன்பத்துக்கு அவனே காரணமாகிறான். நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய
கையில் மட்டும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் சார்ந்தது.
மற்றவையெல்லாம் நலமோடு இருக்கும் போதுதான், நாமும் நலமாக இருக்க முடியும்.
இன்று அமெரிக்காவில் 60% மக்கள்
கிட்டதட்ட மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே வளம் இருக்கிறது, வசதி இருக்கிறது, பெரும்பாலோருக்கு
நினைத்தது கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார்கள். பின்பு ஏன் இப்படி மன அழுத்த
நோயால் பாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் பிறருக்குச் செய்த துன்பம்.
ஆம், அப்பாவி வியட்நாம்
மக்களை கொன்றழித்தும், இருமாப்புக்காக ஈராக் மக்களைக் கொன்றழித்து, மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று சண்டையை
மூட்டி விட்டு எரிகின்ற நெருப்பில் குளிர் காய்ந்து, இன்னும் எத்தனையோ கொடுமைகளை எல்லாம் செய்து, அறன் அழித்து அல்லவை
செய்து பொருள் சேர்த்த புண்ணியவான்கள் அவர்கள். அவர்கள் பிறருக்கு செய்த கொடுமைகள்
மன அழுத்த நோயாகவும், இருதய நோயாகவும் இன்னும் பல மன நோயாகவும் திருப்பித் தாக்குகின்றன.
இதே போல் ஜப்பான்
நாட்டில் வருடத்திற்கு 3000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஏன்? அவர்கள் இரண்டாம்
உலகப்போரில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
கொன்றழித்த அப்பாவி மக்கள் எத்தனை பேர், கோடியில் அடங்கும். அதற்கு எதிர்வினையிருக்காதா‚ அதன் விளைவுதான் அங்கே சுனாமி
வருவதும், தற்கொலை செய்து
கொள்வதும்‚
இன்று
எத்தியோப்பியாவிலும் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை உணவின்றி எத்தனை
குழந்தைகள் மடிகிறார்கள். ஆனால் டென்மார்க்கிலும், அமெரிக்காவிலும் பாலையும், கோதுமையையும் கடலில்
கொட்டுகிறார்கள். இந்தக் கொடுமை, உலக மக்களை தாக்காமல் என்ன செய்யும். „நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும்…
என்று அன்பில்லாமல் அறம் நோக்காது பிறர்க்கு துன்பம் தொpந்து செய்தாலும், தொpயாமல் செய்தாலும் அது
பிரபஞ்சத்தில் உள்ளது எல்லா உயிர்களுக்கும் போய்ச் சேரும்.
‘நான் மட்டும் மகிழ்ச்சியாக
இருப்பேன்” என்று யாராவது கூறினால் அது ஒரு போதும் முடியாது. ஒருவர் நலமாக இருக்க
வேண்டுமென்றால் அனைவரையும் நலமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும்
மகிழ்வாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் துன்பத்திலிருந்தும் நோயிலிருந்தும்
யாரும் விடுபட முடியாது. இதனால்தான் தாமஸ் ஹாரிஸ் சொன்னார் ‘I
am okey; you are okey“ அதாவது, ‘நான் நல்லாய் இருக்கிறேன். ஏனெனில் நீ நல்லாய் இருக்கிறாய்”
‘நீ யாருக்கு என்ன
செய்தாலும், எதைச் செய்தாலும்
உனக்குச் செய்கிறாய், உண்மைக்குச் செய்கிறாய்” என்பதுதான் உண்மை.
எப்போது மனிதன்
மனிதனுக்குள்ள சுபாவத்தில் இயங்குகிறானோ அப்போது பூமியில் துன்பம் இல்லாமல்
போகும். அன்பு என்பது ஏதோ பிரத்தியேகப்
பண்பு என்றும், அது புத்தர், ஏசு, நபிகள், லாவோத்சு, மகாவீரர் போன்ற
மகான்கள்தான் வெளிப்படுத்த முடியும் என்று எண்ண வேண்டாம்.
மேலும், அன்பாக இருப்பது
என்பது அறம் என்றும் நீதிநெறி என்றும் அது எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாது
என்றும் எண்ண வேண்டாம். அது முழுக்க முழுக்க மனிதனின் சாரம். மனிதனின் இயற்கைச்
சுபாவம். அது இயல்பாக மனிதர்களிடம் வெளிப்பட வேண்டியது. அந்தோ பரிதாபம்
விலங்குகளின் குணங்களை மனிதர்கள் சுமந்து திரிவதால் சீரழிந்து துன்புறுகிறார்கள்.
மனிதனுக்குத்
துன்பத்திலிருந்து விடுதலை வேண்டுமென்றால், மனிதனுக்கு நோயிலிருந்து விடுதலை வேண்டுமென்றால் மனிதன், அனைத்துப் பிரிவினை
மற்றும் மாறுபாடுகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும்
மனிதத்துவம் என்ற அன்பு, உழைப்பு, பகிர்வு என்ற
அவனுக்கு மட்டுமே உரிய குணங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போது உலகம்
சொர்க்கமாகும். வாழ்வு ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக