“சார்!! கர்ப்பப்பைக்கோளாறை ஆபரேஷன் இல்லாம சரி பண்ண உங்களால முடியுமா?” என்று நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
“முயற்சி செய்யலாம் ஹோமியோபதி இருக்க பயமேன்” என்றேன் நான்.
“என்னுடைய நெருங்கிய நண்பரின் மனைவிக்குத்தான் நிறைய டாக்டர்ட்ட காட்டீட்டாங்க ,எல்லோரும் ஆபரேஷன் தான் செய்யனும் இல்லாட்டி உயிருக்கே ஆபத்தா போய் முடியும்னு சொல்றங்க, அவங்க ஆபரேஷன்னா பயப்படுறாங்க. அதுதான் உங்களிடம் கேட்டு பாக்கிறேன்னு சொல்லிட்டுதான் போன் பண்றன்.” என்றார்.
“சரி வரச்சொல்லுங்க” என்றேன்.
அடுத்தநாள் நண்பர் அவர்களை அழைத்துக்கொண்டு என் இருப்பிடத்திற்கு வந்தார். கவலை தோய்ந்த முகத்துடன் அந்த பெண்மனியும் அவரின் கணவரும் எனக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தனர். டெஸ்ட் ரிப்போர்ட்,ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் மருந்துச்சீட்டு அடங்கிய ஒரு பைலை நீட்டினர்.
நான் பைலை வாங்கி வைத்துக்கொண்டு “சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை?”
அந்த பெண்மனி அவரின் கணவரை தயக்கத்துடன் பார்க்க அதற்கு அவர் “வெட்கப்படாமல் சொல்லு” என்றார்.இருந்தும் அவர் பேசாமல் இருக்க அவரின் கணவரே தொடர்ந்தார்
“சார்! என் மனைவிக்கு வயசு 35 ஆகுது,எங்களுக்கு ஒரே பெண்குழந்தைங்க 10 வயசு ஆகுது,அதற்கு பிறகு கரு தங்கல. டாக்டர்ட்ட கேட்டதற்கு இனிமே குழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு சொல்லிட்டாங்க, இவளுக்கு எப்பவும் வீட்டுக்கு தூரம்னா வயித்த வலி வரும், வலிமாத்திரை போட்டாதான் வலி குறையும்,மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் நிறைய வெள்ளைப்பாடும் இருக்கும், தீட்டு நிறைய படும் அதுக்குப்பிறகு பெரிய டாக்டர்ட்ட காட்டி ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் கர்ப்பப்பை வாயில் புண் இருக்கு நாட்பட்டதா இருக்கு, அப்படியே விட்டா மொத்த கர்ப்பப்பைக்கும் பரவி சீழ் வச்சுடும், அதனால ஆபரேஷன் பண்ணி கர்ப்பப்பையை எடுத்துறதுதான் நல்லதுன்னு சொன்னாங்க.எவ்வளவு செலவு ஆகும்னு கேட்டதுக்கு ஒரு லட்சரூவா ஆவும்னு சொன்னாரு.அப்பறம் நிறைய டாக்டர பாத்துட்டோம் எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஆபரேஷன் தான் பண்ணனும்னு சொல்றாங்க. சரி பணம் போனா போகட்டும் ஆபரேஷன் பண்ணிடலாம்னு கடன உடன வாங்கி பணம் ரெடி பண்ணா இவ பிடிவாதம் பிடிக்கிறா எனக்கு ஆபரேஷன் வேண்டாம்னு, பயப்படறா சார்! அப்பறம் தான் பிரெண்டு சொன்னாரு ஆபரேஷன் இல்லாம சரி பண்ணலாம்னு அதுக்குப்பிறகு தான் உங்கள்ட்ட வந்தோம். நீங்க தான் எப்படியாவது சரி பண்ணனும், ஆபரேஷன் இல்லாம சரி பண்ண முடியுமா சார்!?”
“முடியும், நீங்க சொல்லுங்கம்மா ஏன் ஆபரேஷன் வேணாங்கறீங்க?”
மெல்ல பேச ஆரம்பித்தார் அந்த பெண்மனி “எங்க ஊரில நிறைய பேரு கர்ப்பப்பை எடுத்துட்டு ரொம்ப சிரமப்படுறாங்க, தண்ணிக்குடம் கூட அவங்களால தூக்க முடியல, எப்பவும் முதுகுவலி சின்ன சின்ன வீட்டுவேலை கூட செய்யமுடியாம சிரமப்படறாங்க, 35 வயசுலே ஆபரேஷன் பண்ணிட்டு காலத்துக்கும் அவஸ்தைப்படறத நினைச்சாவே பயமாருக்கு. பொண்ணு வேற சின்ன வயசு நாளைக்கு அவளுக்கு நல்லது கெட்டது பாக்கனும் அதுக்குள்ள கட்டையில் படுத்துக்கிட்டா எப்படி சார்? நீங்கதான் எப்படியாவது ஆபரேஷன் இல்லாம மருந்து மாத்திரையிலேயே சரி பண்ணனும்” என கண்ணீர் மல்க வேண்டினார்.
“கவலைப்படாதீங்க குணப்படுத்திடலாம்” பைலை புரட்டினேன்.
ஸ்கேன் ஆய்வுத்தகவல் CHRONIC ENDO CERVICITIS WITH CHRONIC INFLAMMATION என்று இருந்தது,அதனுடன் கர்ப்பப்பை பருமனாக இருப்பதையும், இரு சினைப்பைகளிலும் சிறு சிறு கட்டிகள் இருப்பதையும் பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
05/05/2014
ஹோமியோபதி மருத்துவமுறைப்படி முழுமையாக துயரரை ஆய்வு செய்து மருந்து தேர்வு செய்யப்பட்டது.
அவரின் உடல்,மனக்குறிகள் ஆராயப்பட்டு தகுந்த மருந்தாக கல்கேரியா கார்ப் மற்றும் அதன் தொடர் மருந்துகள் தேர்வு செய்யப்பட்டது,உணவு முறையில் மட்டும் சில ஆலோசனைகள் சொல்லி கண்டிப்பாக ஆபரேஷன் செய்யாமல் குணப்படுத்திவிடலாம் என தைரியம் கொடுத்து அனுப்பினேன்.
6 மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு..
05/11/2014
ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் கர்ப்பப்பை (Uterus) மற்றும் சினைப்பைகள் (ovaries) நார்மல் என காட்டியது CHRONIC ENDO CERVICITIS WITH CHRONIC INFLAMMATION completely cured with homeopathy.
அவரின் உடல் உபாதைகள் வயிற்றுவலி (dysmenorrhoea),வெள்ளைப்பாடு(leucorrhoea) மற்றும் பெரும்பாடு(excess menorrhoea) அனைத்தும் தற்போது அறவே இல்லை. இப்போது அவருக்கு எந்த தொந்தரவும் இல்லை ,நலமாக இருக்கிறார்.
ஆபரேஷன் இல்லாமல் நோய் குணமானதில் என் நண்பருக்கு பெருமிதம் . தம்பதியினரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக