திங்கள், 28 டிசம்பர், 2015

கட்டியை கரைத்த பெல்
Dr.Murali Castro

தலையில் கொம்பு முளைத்ததுபோன்ற ஓர் கட்டியுடன் வந்த துயரர்க்கு பெல்லடோனா பரிந்துரைத்திருந்தார் டாக்டர் அருள்மாணிக்கம்.
இது நடந்தது ஹோமியோபதி விழிப்புணர்வு மருத்துவமனையில் கடந்த மே மாதத்தில்.

துயரர்க்கு கட்டி 15 ஆண்டுகளாக இருக்கிறது, அலோபதி மருத்துவர்கள் கட்டியை ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்து, மாத்திரையாலும் கரைக்க முடியாது, இந்த கட்டி இருப்பதால் உயிருக்கு ஆபத்தில்லை (மேலும் வளராமல் இருந்தால்) என்று அனுப்பிவிட்டார்கள்.
 பலரும் இதே பதிலை சொன்னதால் துயரர் மேற்கொண்டு சிகிச்சை எடுக்கவில்லை.

நான் மருந்தக பிரிவில் இருந்து துயரரை கவனித்தேன் தோழர் அருள் இவருக்கு கட்டியை கரைக்கவல்ல மருந்துகளில் ஒன்றைதான் (Hep, sil, myr etc.) சிபாரிசு செய்வார் என்று சக நண்பரிம் சொல்லியிருந்தேன்.
ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக பெல்லடோனாவை பரிந்துரைத்திருந்தார்.
நான் கேள்வி எழுப்பினேன் 15 ஆண்டுகால கட்டியை கரைக்க acute remedy எப்படி உதவும், எனக்கு பெல் கட்டியை கரைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று வாதிட்டேன். அதற்கு தோழர் அருள்மாணிக்கம் துயரரின் தற்போதைய diseased State பெல் தான், பெல் கண்டிப்பாக கட்டியை கரைக்கும் நான் உறுதியாக இருக்கிறேன்.

சரி பார்ப்போம் என்று பெல்லடோனாவை துயரர்க்கு 30வது வீரியத்தில் ஒரு வேளை மட்டும் கொடுத்து அனுப்பினோம்.

ஆறு மாதம் கழிந்த நிலையில் நான் ஆச்சரியம் அடையும் வகையில் கட்டி பெருமளவு குறைந்துவிட்டது.
அருளின் உறுதி ஜெயித்துவிட்டது.

15yrs sebaceous cyst (BEFORE rx) -----cured with in 3 month from BELL 30 /2D

DURING rx
 AFTER Rx
 AFTER Rx



1 கருத்து: