நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
-5-
திருச்சிராப்பள்ளி நகரில் வான்மீகநாதன் என்ற இலக்கியவாதி இருந்தார். பழந்தமிழ் இலக்கியங்களை சாகித்திய அகாதமி மூலம் வட நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். மிகவும் எளிய தன்மை உடையவர் அடக்கமே உருவானவர். அவருடைய அறிமுகம் எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது.
ஒருமுறை அவரைச் சந்திக்க சென்றபோது அவருடய மேஜையின்மேல் மருத்துவர் சாமுவேல் ஸ்வான் அவர்களுடைய நூல் இருந்தது. அவர் அதிலிருந்து குறிப்பெடுத்த காகிதங்களும் இருந்தன. நோய்க் கழிவுப் பொருள்களைப் பற்றி அற்புதமான கருத்துக்களை ஸ்வான் தெரிவித்திருக்கிறார்.
Dr Samuel Swan MD(1814-1893)
அப்போது தான் என் அருமை நண்பருக்கு ஹோமியோபதியிலும் ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன். விளம்பரம் ஏதுமில்லாமல் பலருக்கு அவர் மருத்துவ உதவி புரிந்து வந்ததையும் அறிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் உரையாடிய போது மெடோரினம் குறித்து அவர் பல அரிய தகவல்களைத் தெரிவித்தார். ஆண்மை குன்றிய இரு இளைஞர்கள் அவரிடம் மருத்துவ உதவியை வேண்டி வந்தனர். இருவருக்கும் வழி வழியாக நோய்த் தொடர்பு ஏதுமில்லை. எனினும் இருவருக்கும் பெண்ணுறவில் நாட்டமே இல்லை. மக்கட் செல்வமும் இல்லை. மருத்துவப் பரிசோதனையில் அவர்களுடைய விந்தணுவில் இயக்கம் (MOBILITY) குறைவாக இருந்தது. இந்த இரு அன்பர்களுக்கும் இரு நூறாவது வீரியத்தில் மெடோரினத்தைப் பதினைந்து நாள் இடைவெளியில் மூன்று முறை கொடுத்தேன். ஒரே ஆண்டில் இருவரும் குழந்தைகளுக்குத் தந்தையர் ஆகினர்.
மெடோரினம் என்பது நோய்வாய்ப்பட்ட வீரியப்படுத்திய விந்து. அது ஆண்மைக் குறைவைப் போக்கக்கூடும் என்று ஃபௌபிஸ்டர், ஃபாரிங்டன் உட்பட பல புகழ் பெற்ற மருத்துவர்கள் கூடக் கூறியதாகத் தெரியவில்லை. போயரிக் மட்டும் எழுதுகிறார்.
-Nocturnal emissions, followed by great weakness.
- Impotence.
(பக்கம் 425) என் நண்பர் கூற்றை நான் நம்புகிறேன். நமது அறிவும் ஓர் எல்லைக்குட்பட்டே உள்ளது. அந்த வட்டத்தை விட்டு நாம் இன்னும் வெளியே வரவில்லை.
மெடோரினம் என்ற நோய்க்கழிவுப் பொருள் இரண்டாம் மியாசத்தைச் சேர்ந்தது. அதை அனைவருமே அறிவோம். மூட்டுக்களில் வீக்கம், வலி ஆகியவற்றை (இது மேக வெட்டையின் விளைவு) குணப்படுத்துவதையும் அறிந்து கொண்டிருக்கிறோம். அது இன்னும் பல சுகவீனங்களையும் போக்கக் கூடும் என்பது புதிய செய்தி.
குறிகள் ஒத்திருந்தால் என்ற சொற் பிரயோகத்தை எல்லா நிபுணர்களுமே அழுத்திக் கூறுகிறார்கள். பதினைந்து வயது மதிக்கத் தக்க இளைஞனுக்கு வலிப்பு நோய் இருந்தது. அதன் பொருட்டு அவன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்குத் தொடர்ந்து அலோபதி மருந்தான கார்டினால் அளிக்கப்பட்டு வந்தது. முதலில் அந்த மருந்துக்கு நோய் கட்டுப்பட்டது. பிறகு ஒவ்வொரு நாளும் அவன் அதை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறுவனின் செரிமான உறுப்புக்கள் பழுதாயின. அவன் வாந்தி எடுக்கத் தொடங்கினான். கண்கள் ஒளி இழந்து போயின. முகம் தோல் சுருங்கி செயற்கையான முதுமைத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. கை கால்கள் நடுங்கின. அந்தச் சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். படிப்படியாக அல்லோபதி மருந்துகளைக் குறைக்கும்படி கூறினேன். வலிப்பு நோய் அதிகரித்தது. நான் கவலைப்படவில்லை.
முதலில் நான் அவனுக்குக் கொடுத்த மருந்து பல்சட்டில்லா 200. (டி.எஸ்.ஐயரின் பரிவுரையின்படி அப்போது எனக்கு சைனடோன்(அருகம்புல்) பற்றித் தெரியாது).
அடுத்து தூஜா ஏணி முறையில் மூன்று நாள் இடைவெளியில் . . . பலன் இல்லை.
தொடர்ந்து ஆர்ட்டிமீசியா வல்காரிஸ், ஆறு, மூன்று நாட்கள் இடைவெளியில், பலன் இல்லை என்றாலும் சிறுவனின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. ஆனால் நான் தொய்ந்து போனேன். அடுத்து அவனுடைய தம்பியுடன் உரையாடினேன்.
உன் அண்ணன் எப்படி உறங்குகிறான்?
எந்த வரையறையும் இல்லை அங்கிள், என்றாலும் பெரும்பாலும் குப்புறத்தான், அதுவும் தவளையைப் போல்.
நான் மீண்டும் மேதை கெண்டின் களஞ்சியத்தைப் புரட்டினேன். இந்த நிலையில் உறங்குபவர்களுக்கு அவர் ஒரே மருந்தைத்தான் குறிப்பிடுகிறார்.
அடுத்து நான் கொடுத்தது மெடோரினம் 200 இரண்டே உருண்டைகள்
சிறுவனுக்கு மீண்டும் வலிப்பு வரவில்லை. ஒரு வாரம் அமாவாசை, பௌர்ணமி சிறுவன் படிப்பில் முன்னேற்றம். விளையாட்டுக்களில் தனி ஆர்வம் காட்டினான்.
இது எனக்கு இமாலய வெற்றி. ஹைதராபாதில் இருந்த என் ஆசானிடம் கூறி மகிழ்ந்தேன். அவர் முதலில் சற்று அசிரத்தைக் காட்டினார். நான் மருத்துவர் கெண்டின் நூலில் பக்கத்தைப் பிரித்துக் காண்பித்தேன். (அவர் லிப்பேயின் சீடர்) அவர் கொடுத்த விட - இன்னும் பொறுத்திருந்து பார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத்தில் ஒரு தொழில் விஞ்ஞானக் கூட்டத்திற்குப் போக வேண்டியிருந்தது. அங்கு அமர்ந்திருந்த என்னை நோக்கி ஓர் அன்பர் விரைந்து வந்தார். ஐயா, என்னை நினைவிருக்கிறதா? என்றார். அவரை நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. நான் தயங்கினேன்.
நான்தான் காப்டன் சாமுவேல். என் தம்பி ராபர்ட்ஸ் தற்போது பொறி இயல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். நான் என் புருவதைத் தேய்த்துக் கொண்டேன். நினைவு வந்தது. ஐயா, நீங்கள் என் தம்பிக்கு மருந்து கொடுத்த பிறகு ஒரு முறை கூட வலிப்பு வரவில்லை. அந்த நண்பரின் விழிக்கடையில் நீர்த் துளிர்த்திருந்தது,
நான் வியந்து போய் நின்றேன். என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அப்போது என் ஆசான் உயிருடன் இருக்கவில்லை.
இன்று வரை எனக்கு ஓர் ஐயப்பாடு. வலிப்பு நோய் மூன்றாவது மியாசத்தின் வெளிப்பாடு என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டாவது மியாசத்தைச் சேர்ந்த மருந்தான மெடோரினம் அந்த நோயை எப்படி நீக்கிற்று?
என்னுடைய முடிவு - குறிகள் ஒத்திருந்தால் நீக்கும் என்பதே. அது தான் ஹோமியோபதியின் சாரம். ஒரு மருத்துவன் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்.
கூலி மட்டும் தருகிறதே என்று தளர்ந்து விடக்கூடாது.
*****
நோய்க்கழிவுகளின் அற்புதங்கள் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக