நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 6
நிறைவுப்பகுதி -7-
நோய்க் கழிவுப் பொருட்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் பல சிந்தனையாளர்களை ஊக்குவித்துள்ளது. பல கேள்விகளும் ஐயப்பாடுகளும் எழுப்பியுள்ளார்கள். கடந்த கால் நூற்றாண்டாக நான் மருத்துவப் பணிபுரிந்து வருகிறேன். ஆனால் இந்த மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றவுமில்லை. எவரும் வலியுறுத்தவும் இல்லை என்று ஓர் அன்பர் எழுதியிருக்கிறார்.
இது மருத்துவ இயக்கத்திற்கு ஒரு பலவீனம், நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டும். இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்டகருத்துக்கள் மனித சமுதாயத்திற்குச் சிறந்த பலனைத் தரும்.
எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். அவர் ஒரு நல்ல மனிதர், மருத்துவர், அடிப்படையில் ஒரு மருத்துவ நல்லவராக, சமுதாயத்திற்குத் தொண்டு புரிய வேண்டுமென்ற ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். இதை என் ஆசான் வலியுறுத்துவார். சமுதாயத்திற்கு நன்மை புரிய வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை உடையவர்களையே அவர் தமது அணுக்கத் தொண்டர்களாகத் தேர்ந்தெடுத்தார். பொருள் ஈட்டலாம் அதில் தவறு இல்லை. ஆனால் அடிப்படைத் தகுதி தொண்டுணர்ச்சி, மனித நேயம்.
நாம் குறிப்பிட்ட நண்பர் ஒரு சித்த மருத்துவர். எப்போதும் மருந்து குறித்த சிந்தனையிலேயே வாழ்பவர். வீதியில் நடக்கும்போது கூட தெருவோரத்தில் முளைத்திருக்கும் செடி, பூண்டு அகியவற்றை எடுத்து அவற்றின் மருத்துவக் குணங்களை விளக்குவார். பிறருக்கு மருத்துவச் செய்திகளைத் தெரிவிப்பதில் அவர் இயற்கையிலேயே பேரார்வம் உடையவர்.
நோய்க் கழிவுப் பொருள்களைப் பற்றி அவரிடம் உரையாடினேன். சித்த மருத்துவம் இந்தத் தத்துவம் குறித்து என்ன கூறுகிறது என்பது என் வினா. அவர் தமது அண்மையக் காலத்து அனுபவத்தை கூறினார். உதக மண்டலத்தில் பல ஆதிக் குடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் தற்போதும் கூண்டு போன்ற குடில்களிலேயே தங்கியிருக்கிறார்கள் என்றாலும் அவை தூய்மையாக இருக்கும். அங்குள்ள மலைப் பகுதிகளில் பல மருந்துச் செடிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளைச் சேகரித்து மருந்து தயாரிக்கும் பொருட்டு அங்கு சென்றேன்.
மருந்திற்குரிய செடியின் வேர் எந்தத் திசையில் ஓடியிருக்கும். அதை எந்தத் திதியில், மண்ணிலிருந்து பெயர்க்க வேண்டும், சிறந்த ஓரை எது என்று கூட மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறகு அவற்றைக் கிள்ளிக் கழுவி மண்சட்டியில் இட வேண்டும். அவற்றை எந்த விறகு கொண்டு சூடேற்ற வேண்டும். எத்தனை நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்பது கூடக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலோகப் பாத்திரங்களை விட மண் கலயம், கற்சட்டி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும் என்று நூல்கள் தெளிவாக்குகின்றன. மத்து, கரண்டி, அகப்பை ஆகியவை மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் விதி.
கடைகளில் விற்கப்படும் சித்த மருந்துகள் இந்த வகையில் தயாரிக்கப்படுகின்றனவா? என்பது எனது அடுத்தக் கேள்வி.
இல்லை, அதனல்தான் அவை முழுப் பயனையும் அளிப்பதில்லை. மருந்துகளைத் தயாரிப்பதற்காக மலை மேலுள்ள முதியவர் ஒருவரை அணுகினேன். அவர் எனக்கு உதவி செய்ய முன் வந்தார். அவர் படகர் இனத்தைச் சேர்ந்தவர். தமது உறவினர்களிடம் அவர் படகர் மொழியிலேயே பேசினார். தமிழ் மொழியிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. ஒரு மரப்பெட்டியில் மருத்துவச் சுவடிகளை அடுக்கி வைத்திருந்தார். அவர் அவற்றை நோய் வாரியாகப் பிரித்து வைத்திருந்த முறை சிறப்பாக இருந்தது.
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் விடை தரவில்லை. அது நோய்க் கழிவுப் பொருட்களைப் பற்றியது . . .
என் படக இன நண்பர் ஒரு தகவலைத் தெரிவித்தார். நாங்கள் இயற்கையுடன் ஒத்து வாழ்கிறோம். பல வேளைகளில் விலங்குகனால் தாக்கப்படுவோம். நச்சுப் பிராணிகளின் தீண்டலும் இருக்கும். இவற்றுக்கு மாற்றாக நாங்கள் அதிகம் பயன்படுத்துவது சுண்ணாம்பு, வெல்லம், மண் துகள் . . . நீண்ட நாள் ஆறாத புண்ணாக இருந்தால் நாங்கள் பயன்படுத்துவது தீட்டுத் துணி. அதற்கு மிஞ்சிய மருந்தே கிடையாது.
எனக்குச் சிவ வாக்கியர் நினைவு வந்தார்.
அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே? --049
தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. --050
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. --050
தூமையைப் பழிக்கிறீர் . . . (தூமை - தூய்மை என்ற சொல்லின் திரிபு) அவருக்கு முன்பு திருமூலரும் இந்தச் செய்தியைக் கூறியிருக்கிறார். எல்லையற்ற ஆற்றலுடைய இந்த மனித உயிரே அந்தத் திரவத்தில்தான் உருப்பெறுகிறது. ஒன்பது மாதம் வளர்ந்து இறுதியில் உயிருள்ள உடலாக வெளிப்படுகிறது.
இதற்கு மருத்துவ ஆதாரம்?
என் படக நண்பர் கூறினார். அகத்தியர், புலிப்பாணி, போகர், தேரையர் ஆகியோருடைய எல்லலச் சுவடிகளிலும் இதைத் தேடிப் பார்த்தேன். பெயரே குறிப்பிடாத ஒரு துணுக்கில் இந்தத் தகவல் இருந்தது. அந்தப் பெருந்தகையரில் ஒருவர் இந்தச் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். அந்த விவரம் ஏதும் தெரியாமலேயே இதை எங்கள் இனத்தவர் வழிவழியாகப் பின்பற்றுகிறார்கள்.
நான் வியப்புற்று நின்றேன். வியர்வை, சிறுநீர், சளி, மலம், சீழ் போலவே இதுவும் ஓர் இயற்கையான கழிவு. மற்ற கழிவுகளுக்கு இருப்பது போல் இதற்கும் சிறப்பான தன்மைகள் இருக்கத்தானே வேண்டும்?
ஒவ்வொரு திங்களும் ஏற்படும் இந்த இயற்கை நிகழ்ச்சியை எப்படிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்? அந்த மங்கையர் ஏதோ இழிவான பிராணி என்று கருதி விலக்கி வைக்கிறோம். நெருக்கடியான குடியிருப்புகளில் இதன் பொருட்டு ஒரு கூண்டே அமைத்திருப்பார்கள். அதற்குள் விலக்கான பெண்ணை அடைத்து வைத்திருப்பார்கள்.
இந்த நிகழ்வின்போது பெண்களின் உடற்கூற்றில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவர்களுடைய உடல் சோர்வடைந்திருக்கும். அப்போது அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமே. குளிர்ந்த நீர், வெளிப்போக்கைத் தடை செய்யும் என்ற காரணத்திற்காகவே அவர்களைக் குளிக்க வேண்டாம் என்று பரிவுகள் செய்வதுண்டு.
பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக உழைக்கிறார்கள். கடினமான உடற்பயிற்சிகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை ஒதுக்கி இழிந்த பிராணிகளைப் போல் நடத்துவது எந்த வகையில் நியாயம்? நமது மருத்துவம் இதை ஓர்ந்து செயல்பட வேண்டும்.
இந்த நாட்களில் வழிபாடு செய்வது கூட ஏற்புடையதன்று என்பது ஒரு பண்டையக் கோட்பாடு. அந்த நிலையில் இருந்த பாஞ்சாலியின் துணைக்கு இறைவனே வந்தான் என்பது வியாசரின் கூற்று.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது மட்டும்தான் அறிவு.
-
பால்வினை நோய்களைச் சீராக்க உதவும் இரு கழிவுப் பொருட்கள் ஹோமியோபதி முறையில் உள. ஒன்று மெடோரினம். மற்றது சிஃபிலினம். ஒரு நோயை மேகவெட்டை எறும், மற்றதை மேகக் கிரந்தி என்றும் தமிழில் கூறுவது வழக்கம். மேகம் என்றாலே நோய் என்பது பொருள். (எடு) மது மேகம்- இனிப்பு நோய். நமக்குப் பெயர் முக்கியமன்று. குறிகளை அனுசரித்து மருந்துகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தக் குறிகளின் தொகுப்பை என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள் என்று அறிவதும் நல்லது. நாட்டு வழக்கில் இதைப் பொம்பளைச் சீக்கு என்று கூறுவதுண்டு. நோய்வாய்ப்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதன் விளைவாக இது ஆணுக்கும் தொற்றுகிறது. நோயுள்ள ஆண் மூலமும் பெண்களுக்கு வியாதி பரவ வாய்ப்புண்டு. ஒட்டு மொத்தமாக மனித சமுதாயம் அஞ்சும். அருவெறுக்கும் சுகவீனம் இது.
மேக வெட்டையில் விளைவுகள் எவ்வாறிருக்கும்? அதற்கு மருந்தாகும் மெடோரினம் என்ற நோய்க் கழிவுப் பொருளைப் பற்றி விரிவாகவே சிந்தித்தோம். மேகக் கிரந்தியைச் சீராக்கும் நோய்க் கழிவுப் பொருள் சிஃபிலினம் என்பதாகும். நோயுள்ளவர்களின் புண்ணிலுள்ள கிருமிகளை வீரியப்படுத்தி இதைத் தயாரிக்கிறார்கள். இதன் பெயரைக் கண்டு அஞ்சி வங்க மாநிலத்தில் இதை லூட்டிகம் என்றே அழைப்பார்கள். தமிழ் நாட்டில் லூட்டிகம் என்ற பெயரில் இநத மருந்தை விற்பனை செய்வதில்லை.
சிஃபிலிஸ் என்ற சொல்லுக்கு மூலம் என்ன என்றும் தெரியவில்லை. இந்தப் பெயர் சொல் இலக்கணத்திலேயே இல்லை என்று (ETYMOLOGY) ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி கூறுகிறது.
ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணக்கும். இந்தப் பால்வினை நோயை எப்படிக் குறிப்பிட்டாலும் அச்சுறுத்தும். இந்த நோயுள்ளவர்களைத் தொட்டுப் பரிசோதிக்கவே தயங்கும் மருத்துவர்களை நான் சந்தித்ததுண்டு.
இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களின் ஆணுறுப்பின் மேல் சிறு சிறு புண்கள் தோன்றும். ஊன் நீர் வடியும். மென்மையான அடிப்பாகத்திலும் இவை தோன்றக் கூடும். சிவந்து வீங்கும் பொறுக்க இயலாத அரிப்பு, கடுப்பு, இந்த நோயைப் பற்றிய அச்சம், சமுதாய நோக்கு ஆகியவை நோயாளியை நிலைகுலையச் செய்யும். ஒரு முலையில் தனியாக உட்கார்ந்து கண்ணீர் வடிக்கும் நோயாளிகளை நான் கண்டதுண்டு. அவர்களுக்கு ஆறுதல் கூறினாலே மகிழ்ச்சி அடைவார்கள்.
மருந்துகளின் தயாரிப்பு முறைகளைப் பற்றி விவரிக்கும் மருத்துவர் டிவி இதன் வழிமுறை பற்றித் தெரிவிக்கவில்லை. இந்த மருந்துக்கும் தனி அதிகாரமும் கூட மருத்துவர் நாஷ் தரவில்லை ஆனால் எல்லோரும் ஒருமுகமாக இதை உயர்ந்த வீரியத்தில் தர வேண்டும் என்றே பரிவுரை செய்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில் இரு நூறு, அதிகமாகப் போனால் ஆயிரம், இதைத் தாண்டாமலேயே நோயாளிகள் சீரடைவதை நான் கண்டிருக்கிறேன்.
இது நோயின் முதல் நிலை. அடுத்து நோயாளிக்குக் காய்ச்சல் வரும். தொடைடுக்குகளில் நெறி கட்டும். உடல் முழுவதும் திட்டு திட்டாகப் புடைத்துக் கொண்டு நீர் வடியும். புண்கள் பார்க்கவே விகாரமாக இருக்கும். மேற்பரப்பு அழுகிச் சுருங்கிப் போகும். இதிலிருந்து மீளவே முடியாதோ என்ற மனநிலை கூடவே கழிவிரக்கம்.
அடுத்த நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. கை, கால் மூட்டுக்கள், சிறிய பந்தளவு வீங்கி விடும். தொட்டால் சுடும். பொறுக்க இயலாத நோவு மூட்டுகளை அசைக்கவே இயலாத நிலை எலும்புகளில் நைந்து போன நிலைமை.
சிஃபிலினம் என்ற நோய்க் கழிவுப் பொருளினால் மட்டும் இந்த நிலைமையை மாற்ற இயலாது. இதை இடையூடாக மட்டும் கொடுக்க வேண்டும். ஒரு மாத இடைவெளி பொருத்தமானதாக இருக்கும்.
உடலின் எந்தப் பகுதியில் நெறி கட்டினாலும் உடனடியாக நினைவுக்கு வரவேண்டியது பாதரசம். இதை ஆறில் துவங்கலாம். குணம் தெரிந்தால் இரு மாத்திரைகள் லூட்டிகத்தைத் தர வேண்டும். தொடர்ந்து குணம் தெரியாவிட்டால் மெர்க்யூரியஸ் சல்ஃப்யூரிகம் தர வேண்டும். ஆறில் தொடங்கி ஏணி முறையில் தருவது பயனளிக்கும். இரு நூறுக்கு மேல் போக வேண்டிய தேவையில்லை. உடல் மேலுள்ள புண்கள் செதிலாக உதிரும் தோலுரியும். இந்த நிலை வந்தவுடன் நான் வல்லாரையைத் (ஹைட்ரோகாட்டைல்) தருவது வழக்கம்.
என் தாயாருக்குச் சில நாட்டு மருந்துகளில் பழக்கமுண்டு. நாட்பட்ட பூவரசு மரங்களின் வேர், பட்டை, இலை, மலர் ஆகியவற்றை இடித்துக் கிழாயம் தயாரித்து உள்ளுக்கு கொடுத்து, புண்ணின் மேல் முந்திரிக் கொட்டை எண்ணையைத் தடவுவார்கள். நோயாளியின் உடல் சூடு தணியும். நிறைய மலம் வெளிபடும் புண்கள் ஆறி விடும். (முந்திக் கொட்டை - அனகார்டியம் ஓரியண்டல்) இது விரல்களின் இடுக்குகளில் ஏற்படும் வெடிப்புகளை வெகு விரைவில் குணப்படுத்துவதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
சிஃபிலினத்தின் இன்னொரு முக்கியமான குறி இருள் சூழ்ந்த பிறகு தொடங்கி விடியும் வரை நோய் இருப்பதாகும். காலை கண் விழிக்கும்போது நோய் வெளிப்பட்டால் அப்போதும் லூட்டிகம் பயன் தரும். இது மட்டுமன்று. பொதுப்படையாக இரவு நேரத்தில் நோய்க்குறி மிகுமானால், அது அரிப்போ, வயிற்றுப் போக்கோ, தலை நோவோ, எல்லாவற்றையுமே லூட்டிகத்தின் இரு மாத்திரைகள் குணப்படுத்தி விடும். இந்த விதியை மேற்கொண்ட நான் பல பெரிய வெற்றிகளைச் சந்தித்திருக்கிறேன்.
மேகவெட்டைக் கிரந்தி நோய்க்கு சிஃபிலினம் மட்டும் மருந்து அன்று என்பதை எல்லா மருத்துவர்கமே உறுதி செய்கிறார்கள். குறிகளுக்கேற்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு இடையூடாக இதைத் தர வேண்டும் என்பதே அவர்களுடைய பரிவுரை.
இதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
*****
-