செவ்வாய், 20 ஜூன், 2017

அக்ரோ ஹோமியோபதி பழ மரங்களுக்கான துணைப்பயிர்கள்



துணைப்பயிர்களின் பயன்கள்

*பூச்சிகளை தடுக்கிறது.

*மகரந்தச்சேர்க்கைக்கான வண்டுக்களை கவர்ந்தீர்க்கிறது.

*மரம் செழிப்பாக வளர மற்றும் பழங்கள் சுவையாக வருவதற்கான ஊட்டத்தை தருகிறது.

*துணைப்பயிர்கள் நிலத்தை ஈரமாக வைத்திருக்க உதவுகின்றன..இதனால் வறட்சியை தாங்கி பழமரங்கள் வளர உதவுகின்றன.

*துணைப்பயிர்கள் இருப்பது தேவையற்ற களைகள் வளர்வதை தடுக்கின்றன.
மேலும் இவை மடிந்து மண்ணுக்கு உரமாகின்றன.

பழமரங்களுக்கான துணைப்பயிர்கள்:
1.Comfrey( Symphytum). சிம்பைடம்
இது இயற்கை விவசாயத்தில் முக்கியமான துணைப்பயிர். மற்றும்.இது அடிபடுதல் மற்றும் எலும்பு முறிதல் போன்றவற்றுக்கு முக்கியமான ஹோமியோபதி மருந்து..

2.Nasturtium
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை
செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.

3.Chamomile
செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ருசியுள்ளது..

4.Coriander
கொத்தமல்லி

5.Dill
சதகுப்பை

6.Fennel பெருஞ்சீரகம்

7.Basil துளசி

8.Lemongrass ஒரு வகைப்புதினா

9.Mint புதினா

10.Artemisia wormwood (மக்கிப்பூ)

11.Yarrow காரப்பூடு

12.Daffodil,

13.tansy, ஆயிரந்தழைப்பூண்டு

14.marigold சாமந்தி

15.hyssop
16.garlic பூண்டு
17.spinach பசலைக்கீரை
18.mustard கடுகு
19.chives வெங்காய இனப்பூண்டு
20.Dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
21.sweet cicely மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.

இந்த துணைப்பயிர்கள் பெரும்பாலும் ஹோமியோபதியில் முக்கிய மருந்துகளாக இருக்கின்றன..இவற்றில் பல மூலிகைச்செடிகள், மருந்தாக மட்டுமில்லாமல் உணவுக்கும் பயன்படும்

பயிர்கள் நோயுற்றபிறகு இவற்றை மருந்தாக தருவதற்கு பதிலாக துணைப்பயிராக வளர்ப்பது பலவகை நன்மைகளை தருகிறது..

விளைச்சலுக்கு விளைச்சல்...அதுமட்டுமின்றி துணைப்பயிர்கள் பெரும்பாலும் கீரைகளாக இருப்பதால் அவற்றை தினசரி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.

விவசாயிகள் இந்த துணைப்பயிர்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிதான் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கவேண்டியதாக இருக்கும்..

ஏனெனில் இந்த துணைப்பயிர்களில் பலவகைகளின்
சரியான தமிழ்ப்பெயர்கள் தெரியவில்லை ..இணையத்தில் தேடியோ அல்லது மூலிகை அல்லது தாவரவியல் நிபுணர்களை கேட்டால் அதற்கான தமிழ்ப்பெயர்களை அறிய முடியும் ..

தேடிப்பயிரிடுங்கள்..
பலனடையுங்கள்...

அக்ரோ ஹோமியோபதி

வெள்ளி, 16 ஜூன், 2017

எயிட்ஸ்க்கு மருந்து உண்டா? -மேஜர் தி.சா.இராஜூ


திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் பாதையில் அத்யேந்தல்  என்ற சிற்றூர் உள்ளது.  விக்டர் ஹ்யூகோ என்ற ஜெர்மானிய அன்பர் அதைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.  அங்கு பல சிறந்த நலப்பணிகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பிரிவு மருத்துவம்.  அதன் தலைவர் டாக்டர்.ஆண்ட்ரியாஸ் எம்.டி.

ரமண மகரிஷிக்குப் பிறகு அவருடைய வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே டாக்டர்.விக்டர் ஹ்யூகோ சில நன்பர்களுடன் இங்கு வருகை புரிந்தார்.  தொடர்ந்து இங்கேயே தங்கி தொண்டு புரிந்தார்.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரியும் பலர் ஐரோப்பிய நாட்டில் உள்ளனர்.  ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கிறிஸ்துவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு.  அது போற்றப்பட வேண்டியது.

டாக்டர். ஆண்ட்ரியாஸை எப்படியும் சந்தித்துவிட வேண்டுமென்று அவருடைய மருத்துவ முகாமுக்குச் சென்றேன்.  வெளியே பலதரப்பட்ட மக்கள் வரிசையில் நின்றனர்.  பல வயனர், பல இனத்தவர் எல்லோரிடத்திலும் ஒரு நம்பிக்கை.  அந்த வெள்ளைக்காரர் கைபட்டால் எல்லா நோய்களும் குணமாகிவிடுகின்றன என்று ஒரு மூதாட்டி தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 264 நோயாளிகளை மட்டுமே அவரால் கவனிக்க முடிகிறது.  எஞ்சியவர்கள் அந்த ஊரிலேயே தங்கி மறுநாள் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.

எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் மக்களின் நம்பிக்கை என்பது வலுவான அடிப்படை. அதை இந்த மருத்துவர் பெற்றிருக்கிறார்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் கூறினார்.

  ‘ஹோமியோபதி மருத்துவம் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறீர்கள்.  எனக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு’  அவர் மன்னிப்பை வேண்டும் குரலில் பேசினார்.

‘என்னுடைய நிலையும் அதுவேதான்.  நாம் நடந்து கொண்டே பேசுவோம்.’
அவர் பல இடங்களைச் சுற்றிக் காட்டினார்.  மருத்துவச் செடிகளின் பராமரிப்பு குறித்து பேசினார்.  ஆயுர்வேதம், அலோபதி, அக்யூபங்சர், ஹோமியோபதி பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றார்.  அவற்றின் தலைமைப் பொறுப்பேற்றிருப்பவர்களை அறிமுகப்படுத்தினார்.
Image result for AIDS
டாக்டரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன்.  
‘எய்ட்ஸ் என்று ஒரு நோய் இருப்பதாக விளம்பரம் செய்கிறார்களே, அதை நீங்கள் நம்புகிறீர்களா?’

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்:‘ஆய்வுக் களத்தின் மூலம் ஒரு செய்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதை எப்படி மறுக்க முடியும்?"

  எய்ட்ஸ் என்பது என்ன?’ இது என் வினா.

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: ‘வெளியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்புத் திறனை அழிக்கும் தொகுப்பு என்பதே பொருள்.  அது ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது.  அதற்கு மருந்தே கிடையாது."

  நீங்கள் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எழுதிய நூலைப் படித்ததுண்டா?’  நான் வினவினேன்.
James Tyler Kent (1849-1916)
டாக்டர்.ஆண்ட்ரியாஸ்:‘நான் தேர்வு பெற்றிருப்பது அலோபதித் துறையில்தான் என்றாலும் நான் ஹோமியோபதி முறையை நம்புகிறேன்’

 உங்களிடம் கெண்ட் எழுதிய நூல் உள்ளதா? (ஹோமியோபதி தத்துவ விளக்கப் பேருரைகள்) டாக்டர் அதை எடுத்து வந்தார்.

‘அதில் 51-ஆம் பக்கத்தை படியுங்கள்’-தணிந்த குரலில் அவர் அதைப் படித்தார்.

அதன் சாரம் இதுதான்-
‘கிருமிகளினால் நோய் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.  ஆனால் கிருமிகள் துப்புரவுப் பணியைச் செய்வதற்கே அங்கு வருகின்றன.  ஆகவே கிருமிகளினால் நோய் ஏற்படுகிறது என்ற கொள்கை தவறானது.  உலகத்தில் மனித இனத்தை அழிக்க எந்தப் படைப்பும் சிருஷ்டிக்கப்படுவதில்லை’.

உடனடியாக ஆண்ட்ரியாஸால் பதில் கூற முடியவில்லை.  மென்று விழுங்கினார்.

"கிருமிகளினால் நோய் வருவதாக வைத்துக் கொண்டாலும் அதே கிருமிகளை உடலில் செலுத்தி எயிட்ஸ் நோயைத் தவிர்க்கலாமே?   ஜென்னிங்ஸ் அதைத்தானே செய்தார்.  அதை ஹோமியோபதி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.தடுப்பூசி அறிவியல் வழி வந்த செயல் அல்ல,   எம் ஆசான் அம்மைப்பாலை உடலில் ஏற்றாதீர்கள் என்று படையினர் மருத்துவமனைகளுக்கே சென்று பிரசாரம் செய்வார். "

டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’

‘எயிட்ஸ் என்பது வெறும் புரட்டு.   அப்படி ஒரு நோய் இல்லை என்பதே என் அடிப்படைக் கருத்து.  இதுவரை எத்தனை எய்ட்ஸ் நோயாளிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்?’

 டாக்டர்.ஆண்ட்ரியாஸ்: எவருமில்லை.  இனி வருவார்களானால் அவர்களை உங்களிடம் அனுப்பி விடுகிறேன்.  அத்தகையவர்களை நீங்கள் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன்.  ஏனெனில் மருத்துவர் கெண்ட் ஒரு மாமேதை.  அவர் சொல்வது தவறாக இராது என்பது உறுதி.
பின்பு அவரிடம் இருந்து விடைபெற்று வந்தேன்.

இந்த விவரத்தை அன்பர் ராபி அவர்களிடம் தெரிவித்தேன்.  அவர் ஹோமியோபதி தத்துவத்தின் மெய்த் தொண்டர்.  அதன் தத்துவங்களை எளியமுறையில் விளக்குவார்.  பெரும் செயல்வீரரும் கூட.
‘வெள்ளை, வெட்டை, குட்டம் என்று நீங்கள் அடிக்கடி வலியுறுத்துவீர்களே, அது ஆயுர்வேத முறையானாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.  ‘அவர் என்னைப் பாராட்டி மகிழ்ந்தார்’.

‘மருத்துவ அறிஞர்கள் ஏன் இது பற்றிச் சிந்திப்பதில்லை? எழுதுவதில்லை?’
‘சுவடு விழுந்த பாதையிலேயே நாம் சென்று கொண்டிருக்கிறோம்.  நீங்கள் நிறையக் கட்டுரை எழுதுகிறீர்கள்.  பலர் படிக்கும் ஏடுகளுக்கு நீங்கள் ஏன் இந்தச் செய்தியைத் தெரிவிக்கக்கூடாது?’ அவர் கேட்டார்.

‘என்னுடைய முயற்சியை அவர்கள் ஆதரிப்பதில்லை’

‘ஏன்?’

‘அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் வரும் வருமானம் நின்றுவிடுமே’

நண்பர் நகைத்தார்.  நாம் சிந்திப்பதில்லை என்பது மட்டுமன்று.  நமக்கு
மக்கள் நலன் முக்கியமானதன்று.  பொருள் வேண்டும்.  அதை எந்த வகையிலும் பெறலாம்.  பொது நலன் குப்பையில் போகட்டும்.

எய்ட்ஸ் என்று விளம்பர செய்யப்படுவது ஒரு பால்வினை நோய்.  இது ஓரினச் சேர்க்கையால் ஏற்படாது.  பால்வினை நோய்களுக்கு நமது ஹோமியோபதி  அம்புறாத்தூயியில் பல அருமருந்துகள் உள. அவற்றைக் கொண்டு இதனை படிப்படியாக நலப்படுத்திவிடலாம்.


http://www.business-standard.com/article/current-affairs/a-homeopathic-experiment-gives-hope-for-treatment-of-aids-115040200877_1.html

https://www.youtube.com/watch?v=TGYj-xbD-_s

நாம் சிந்திப்போம், செயல்படுவோம், உண்மையை மட்டும் உரக்கக் கூறுவோம்.
******************
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து

குறிப்பு:

2015இல் மும்பையில் நடந்த The Global Homeopathy Foundation (GHF) ஒருங்கிணைத்த  the World Homoeopathy Summit கருத்தரங்கில் எயிட்ஸ் ஹோமியோபதியில் நலமாக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஹோமியோபதியின் அறிவியல்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
http://globalhomeopathyfoundation.com/whs-brochure/World_Homeopathy_Summit-2015.pdf

கருத்தரங்க அறிக்கைகள்↓ 
http://www.ijrh.org/article.asp?issn=0974-7168;year=2015;volume=9;issue=2;spage=109;epage=113;aulast=Das;type=3

செவ்வாய், 13 ஜூன், 2017

ஹோமியோபதி முறையில் தடுப்பு மருந்துகள் மேஜர் தி.சா.இராஜூ



எல்லாப் பொருளையுமே உள்ளடக்கிய நமது திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்துப்பாக்கள் உள்ளன.   இவை மருத்துவ சாத்திரத்திற்கே ஆதாரமாகும்.


நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் ஒரு குறள் அதில் உள்ளது.   அது,

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்பதாகும்.

முதன்மையாக ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE)  என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது.  அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.  இந்த நோய் பாரம்பரியத்தினாலும், தவறான உணவை உட்கொள்ளுதல் மூலமும், சூழ்நிலையினாலும் ஏற்படக்கூடும்.

சூழ்நிலை என்பது, கால வேறுபாட்டினாலும், எளிதில் பரவக்கூடிய நோயுள்ளவர்கள் வாழும் இடத்தில் வசிப்பதாலும், பணிபுரிவதாலும், தூய்மை குறைந்த நீரையும், காற்றையும் துய்ப்பதாலும் அமையும்.  இதைத் தடுப்பதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் இணையற்ற, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத மருந்துகள் உள.  அந்த நோய்களின் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரிய வேண்டும்.

சின்னம்மை

சின்னம்மை
-
உதாரணமாக, அண்டை வீட்டின் ஒரு குழந்தைக்கு சின்னம்மை கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த நோய் பிற இல்லங்களுக்கும் பரவாமல் தடுப்பதற்கு சில மருந்துகள் உள்ளன.  அவை முறையே ஆண்டிமோனியம் க்ரூடம், (ANTIMONIUM CRUDUM) பல்ஸட்டிலா,  (PULSATILLA) மெர்க்யூரியஸ், (MERCURIUS) ரஸ்டாக்ஸ் ( RHUS TOX)  ஆகியவையாகும்.

இவற்றினுள் உடனடியாக நிவாரணம் தரக்கூடியது எது என்று ஒரு மருத்துவன் தனது அனுபவத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில் ஆண்டிமோனியம் க்ரூடம் எனக்கு நல்ல பயனை அளித்திருக்கிறது.  ஆண்டமனி என்ற கனிமத்தைப் பொடித்து நீர்த்து, வீரியமூட்டி இது தயாரிக்கப்படுகிறது.  சாதாரணமாக முப்பதாவது வீரியமே போதும்.  தேவைப்பட்டால் சைலீஷியா (SILICEA) என்ற தொடர் மருந்தையும் நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்குத் தரலாம்.  அது வியாதியின் கடுமையைக் குறைக்கும்.


வாந்தி பேதி -
திருவிழாக் காலங்களில் சுற்றுப் புறத்தின் தூய்மை குறைகிறது.  அதன் விளைவாக வாந்திபேதி பரவுவது வழக்கம்.  இது எளிதில் பிறரையும் தொற்றிக் கொள்ளும்.  இதற்கு மிகச் சிறந்த மருந் காம்ஃபரா (CAMPHORA). இது கற்பூரத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டது.
Image result for கற்பூரம்
நமது ஆலயங்களில் கற்பூர ஒளி காட்டுவதும், நீரில் கற்பூரத்தைக் கரைத்துப் பிரசாதமாக வழங்குவதும், வாந்தி, பேதி பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான்.

 இன்னொரு மருந்து குப்ரம் (CUPRUM)  செம்பு, செம்பினாலான நாய்க்காசு, தாயத்து, கட்டைக் காப்பு ஆகியவற்றை அணிந்தாலும் போதுமானது.
Related image
 உடலில் செம்புபடுவதனால் காலரா தடுப்பு மட்டுமல்ல, காக்கை வலிப்பு நோயையும் அது குணப்படுத்துகிறது என்பது எனது அனுபவம்.  மாவாகத் தின்றாலும், பணியாரமாகும் ஒரு விந்தையை மருத்துவத்துறையில் கண்டிருக்கிறேன்.
Image result for தாளம்மை
தாளம்மை-
சாதாரணமாக நாம் காண்பது பொன்னுக்கு வீங்கி என்ற கண்ட அழற்சி (MUMPS) தாடையில் ஒரு புறம் வீங்கி விடும்.  சளி, கடும் காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவை ஏற்படும்.  வெகு விரைவில் பரவித் தொல்லை கொடுக்கும் நோய்களில் இதுவும் ஒன்று.அப்போதெல்லாம் குழந்தைக்கு ஒரு பொன் சங்கிலியை அணிவிப்பார்கள்.  தங்கம் விற்கும் விலையில் நாம் எத்தனை குழந்தைகளுக்குப் பொற் சங்கலியைத் தர முடியும்?
Image result for குழந்தை தங்க நகை

தங்கத்தையே[GOLD] உரைத்து வீரியப்படுத்திய ஆரம்மெட்டாலிக்கம் ( AURUM METALICUM )  என்ற ஹோமியோபதி மருந்து முப்பதாவது ஆற்றலிலேயே சிறந்த தடுப்பு மருந்தாக விளங்கும்.  ஆரம் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு தங்கம் என்பதுதான் பொருள்.  பிலோகாரபைன்(PILOCARPINE),மெர்க்யூரியஸ், (MERCURIUS) பாராடோடினம் (PAROTIDINUM) ஆகிய மருந்துகளும் சிறந்த பயன் தருவதைக் கண்டிருக்கிறேன்.  தடுப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது நோயாளிகளின் மன, உடல் இயல்புகளைக் கருத்தில் கொள்வது விரைவில் நிவாரணமளிக்க உதவி செய்யும்.

கக்குவான் இருமல்-
கக்குவான் இருமல்( WHOOPING COUGH ) என்பது ஒரு கொடிய நோய்.  இது குழந்தையை  உருமாற்றிக் குலைத்து விடும்.  அதுபடும் துயரத்தைக் கண்டு பரிதாபப்பட வேண்டிய நிலைமை தோன்றும்.  குழந்தை இருமி, இருமி உண்டதை எல்லாம் வாந்தி எடுத்துவிடும்.
Related image
எந்த இருமலுக்குமே ட்ரொசேரா (DROSERA) நல்ல மருந்து. ஆறாவது வீரியமே போதும்.  இது ஒரு செடியின் சாறு, தொடர்ந்து கொரேலியம்( CORALIUM)  என்ற நற்பவளமும் பெர்ட்டூசின்(PERTUSSIN )  என்ற நோய்க் கழிவுப் பொருளும் நல்ல ஔடதங்களாக அமையும்.  இவை அனைத்துமே முப்பதாவது வீரியத்தில் பயன்தரக் கூடியவை.  கக்குவான் இருமலை இந்த மூன்று மருந்துகளின் துணை கொண்டே குணப்படுத்திவிடுவது சாத்தியம்.   வராமலும் தடுக்கலாம்.


முறைக்காய்ச்சல் -
மலேரியாவைப் போன்ற முறைக்காய்ச்சல்களுக்கு ( INTERMITTENT FEVER )  சில நல்ல தடுப்பு மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன.  காய்ச்சலின்போது குளிர் இருக்குமானால் நக்ஸ்வாமிகா(NUX VOMICA ) காலை ஒன்பது மணிக்கு ஜுரம் வருவதானால் நாட்ரம் ம்யூர் ( NATRUM MUR ) நடுப்பகல் அல்லது நள்ளிரவானால் ஆர்சனிக்கம் ஆல்பம்,(ARSENICUM ALBUM) பதினோரு மணிக்கென்றால் கந்தகம்(SULPHUR).
  ஒரு கவனமுள்ள மருத்துவன் நோய் தோன்றும், மிகுதியாகும் அல்லது தணியும் நேரத்தையும் முறைக்காய்ச்சல் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related image
சொறி, சிரங்கு -
ஒரு குழந்தையின் பெற்றோர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய் (SCABIES) அல்லது குழந்தையை உண்டாகியிருக்கும் தாய் பல வகை மருந்துகளை உட்கொண்டுடிருந்தாலோ, அதற்குக் கந்தகம் (SULPHUR) என்ற நிவாரணியின் ஒரு சிற்றுருண்டையே போதுமானது என்பது மேதைகளின் அனுபவக் கணிப்பு.  குழந்தை பிறந்த ஓரிரண்டு வாரங்களுக்குள் அந்தக் கந்தக[HOMOEOPATHIC SULPHUR] கரைசலின் ஒரு சொட்டு  குழந்தைக்குக் கொடுக்கப்படுமானால், அது எந்தத் தோல் வியாதியிலிருந்தும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவ மேதை லிப்பே (LIPPAE)  குறிப்பிடுகிறார்.  அதற்காகும் செலவு நம்ப இயலாத அளவு மலிவு.

Image result for வெப்பத் தாக்கம்
வெப்பத் தாக்குதல் (SUNSTROKE )-
நமது நாடு வெப்பம் மிகுந்தது.  சூரிய உஷ்ணத்தில் அலைந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது.  சூரிய ஒளி உடலுக்கு நன்மை தருவதானாலும், அதன் வெப்பம் பலருக்கு நோயை விளைவிக்கக்கூடும்.  முகம் சிவந்து, தலைசுற்றி, நாவரண்ட நிலை பெரும்பாலோருக்கு ஏற்படும்  அப்போதெல்லாம் க்ளோனைன் அல்லது பெல்லடோனா உடனடியாக பலனைத் தரும்.  சிறப்பாக, நெருப்பினடியில் பணிபுரியும் நிர்ப்பந்தமுடைய கருமான் போன்ற கைவினைஞர்களுக்கு இந்த மருந்து தடுப்பாகவும், நிவாரணியாகவும் பயனளிப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அடுப்படியில் நெடுநேரம் பணிபுரியும் சமையர்காரர் ஒருவருக்கு நீர்க்கடுப்பு வந்தது.  சிறு நீரிலும் உதிரம் கலந்திருந்தது.  அவர் ஓடோடி வந்தார்.  தொழில் முறையில் அவருக்கிருந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி செய்தேன்.  ஒரே வேளை மருந்து க்ளோனைன் அவரைக் குணப்படுத்தி விட்டது.  இதை நைட்ரோ கிளிசரின் என்றும் சொல்வார்கள்.  க்ளிசரின், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவைகளின் கலப்பு இது.  வெய்யிலில் அலைந்து பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தமுடையவர்களுக்கு க்ளோனைன் ஒரு சிறந்த தடுப்பு மருந்து என்பது எனது அனுபவம்.

ஹோமியோபதித் தத்துவத்தின் தந்தை எனப்படும் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் என்ற தமது நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார்.  

"மருத்துவரின் தலையாய ஒரே கடமை நோயாளியைக் குணப்படுத்துவதாகும்.  இதை விரைவாக, பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், நிரந்தரமான பலன் தரும் வகையில் செய்தல் வேண்டும்".

இந்தப் பணியைச் செம்மையாகப் புரிவதற்கு அவன் நோயாளியின் குறிகள், அதற்கேற்ற மருந்து, அதைத் தர வேண்டிய நேரம் அனைத்தையும் சீர்தூக்கி செயல்படுதல் வேண்டும்.  இதோ நமது தமிழ்மறை பேசுகிறது.

உற்றான் அளவும், பிணியளவும், காலமும் 
கற்றான் கருதிச் செயல்

தெய்வ வள்ளுவன் சமுதாயப் பிணிகளுக்கு மட்டுமல்ல, உடலைத் துன்புறுத்தும் நோய்களுக்கும் உற்ற மருத்துவராக விளங்குகிறார் என்ற பேருண்மையை வலியுறுத்த வாய்ப்பளித்த நல்லோர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து


குறிப்பு:
வாசகர்கள் இவற்றில் குறிப்பிடப்பட்ட மருந்துகளை உங்கள் அருகாமையில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.
சுயமாக ஹோமியோபதி மருந்துகளை எடுப்பது அவ்வளவு உசிதமான செயல் அல்ல.


திங்கள், 12 ஜூன், 2017

சொரியாஸிஸ் -மேஜர் தி.சா.இராஜூ



என் முன்னால் அமர்ந்திருக்கும் மங்கையின் முகத்தைப் பார்க்கிறேன்.  மாநிறம் என்றாலும் வாளிப்பாதன உடல்வாகு.  கண்களில் இனம் புரியாத சோகம்.  அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை வினவுகிறேன். 
Woman with a scaly rash on her forehead. Close-up of the scaly rash.
‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘சென்னை’ அவர் ஒரு முகவரியைக் கூறினார்.

‘நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்றேன்.

‘என் மனைவியின் சிற்றப்பா எங்களைக் காண வந்திருந்தார்.  அவருக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர்.  அவர்தான் எங்களுக்கு உங்கள் முகவரியைக் கொடுத்தார்.  அவருக்கு நெடுநாளாக முட்டி வலியும், சரும நோயும் இருந்தன.  இரண்டையுமே நீங்கள் ஒருசேரக் குணப்படுத்திவிட்டதாகக் கூறினார்.  மிகவும் மகிழ்ச்சியோடு பேசினார்.  என் மனைவியின் நிலையைக் கண்டு உங்களிடம் சிகிச்சை பெறும்படி பரிவுரை செய்தார்’.

‘உங்கள் மனைவிக்கு உள்ள சுகவீனம் என்ன?’
எங்கள் குடும்ப மருத்துவர் இதை சோரியாஸிஸ் என்று குறிப்பிடுகிறார்.  மூன்றாண்டுகளாக அவர் மருந்து கொடுத்தார்.  ஊசி போட்டார்.  நிரந்தரமான பலன் ஏதும் காணோம்.

நோயுள்ள பகுதி, சிகிச்சை முறை, அதன் விளைவு ஆகியவை பற்றிக் கூறினால் எனக்குப் பயனுடையதாக இருக்கும்
என் மனைவிக்கு உடலின் பல பாகங்களில் புடைப்பு ஏற்படுகிறது  அது மற்ற இடங்களுக்கும் பரவுகிறது.  ஊசி போட்டால் தடிப்பு மாறுகிறது.  அரிப்பும் இல்லை.  ஆனால ஓரிரு மாதம் பொறுத்து அரிப்பு தொடர்கிறது. வேறு இடங்களிலும் கிளைக்கிறது’.

‘இதனால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?’
‘நாங்கள் அதிகம் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் நோய் வந்தால் மருத்துவரை அணுகுகிறோம்.  குணமளிக்கிறார்’.

‘நோயின் வேர் மருந்துகளினால் அறுபடவில்லை.  அதனால்தான் அது மற்ற இடங்களில் புடைத்துத் தன்னை வெளிக்காட்டுகிறது’.

‘புரியவில்லை அய்யா, சோரியாஸிஸுக்கு உங்கள் மருத்துவ முறையில் நிவாரணம் உண்டா?’
,
‘ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்குறித் தொகுப்புக்குப் பெயர் ஏதும் கிடையாது.தோலின் மேல் ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் நாம் மகிழ்ச்சி அடை யவேண்டும்’

"உங்கள் கூற்று வியப்பைத் தருகிறது".

"உடலில் ஏற்படும் கழிவுப் பொருள்களான சிறுநீர், வியர்வை, மலக்கழிவு ஆகியவை உரிய முறையில், அளவில் வெளிப்பட வேண்டும்.  அந்தப் பாதைகளில் தடையோ, தயக்கமோ இருந்தால, அது தோல் வழியாக வெளிக்காட்டும்.  சருமம் நமது உடலின் சாளரம்.  இதன் வழியே அழுக்குகள் வெளிப்படும்போது களிம்புகளின்[OINTMENT] உதவி கொண்டு அதை உள்ளே அமுக்க முயற்சி செய்தல் கூடாது.  அவ்வாறு செய்தால் அது உடலின் உள்ளுறுப்புகளைத் தாக்கும்".

நான் என் பரிசோதனைகளைத் துவக்குகிறேன்.  அது ஒரு நீண்ட பட்டியல்.  அந்த மங்கைக்குக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மூக்கு, தொண்டை அழற்சி உள்ளது.  எப்போதும் சளி, சில சமயம் மஞ்சள் அல்லது பச்சை அதனுடன் கூடி,தோலின் மேல் புடைப்புகள், தலையிலும் புடைப்பு சுற்றிலும் சிறு சிறு புண்கள்.  வெள்ளைத் துகள், அரிப்பு எப்போதுமே உள்ளது.  நாவு இலேசான மஞ்சள் கலந்த வெள்ளை.  இவை சில குறிகள் மட்டுமே.

பழைய நிகழ்ச்சி ஒன்று என் நினைவுக்கு வந்தது.  எங்கள் மருத்துவமனைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க மங்கையைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள்.  அவளுடைய பார்வை, உடலசைவு, பேச்சு அனைத்துமே பிறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன.  அவருடைய கணவர் அவரைப் படிமானத்தில் வைத்திருந்தார்.  அவள் முரண்டினாள்.  கணவன் வன்முறையை பிரயோகிக்க முயன்றார்.  என் ஆசான் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.

பரிவுடன் நோயாளியைக் கவனித்தார்.  பேசினார் ஆசான்.  விவரங்களைப் பதிவு செய்யும்படி என்னைப் பணித்தார்.  ‘உங்கள் கணவரைத் தவிர வேறு யாராவது உடன் வந்திருக்கிறார்களா?’

‘நாயனகாரு உள்ளாரு அவறே விடையிறுத்தாள்’

அவரை உள்ளே அழைத்தார் ஆசான். ‘உங்கள் மகளுக்கு எப்போதாவது தோல் வியாதி வந்திருக்கிறதா?’

‘இப்புடு காதண்டீ, இரு சகஸ்ரம் முந்துக.. அந்த பாகாயி போயிந்தி, இது இப்புடே இலாக கேசிந்தி’

ஆசான் என்னைப் பார்த்துக் கூறினார்.  மெர்க் சொல்.12, ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு ஒரே முறை, இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.

மருந்தை மடித்து அவரிடம் கொடுத்தேன்.  மருந்து உண்ணும் முறையை ஆசான் முதியவருக்கு விளக்கினார்.

நான்காம் நாள் அந்தப் பெரியவர் மருத்துவமனைக்குப் பரபரப்புடன் ஓடி வந்தார்.  அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாக இருந்தது.  ‘உடம்பு முழுவதும் தடித்து வீங்கி என் மகள் கதறுகிறாள்’

‘என்ன சொல்லுகிறார்?’
‘அரிப்புப் பொறுக்க முடியவில்லையாம்’
‘மற்றபடி ஏதாவது கோளாறு?’

‘சாந்தமாகவே இருக்கிறாள்.  கூச்சல், திட்டல், பேயாட்டம் எல்லாம் ஓய்ந்து விட்டது.’
‘ஏன், போயே போயிந்தி’

என் ஆசான் முறுவலித்துவிட்டு என்னை நோக்கிப் பணிந்தார்.  ‘ஸாக்லாக்’ நான் அவற்றை மடித்துக் கொடுத்தேன்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரே ஒரு முறை அந்த மங்கையும், அவளது தந்தையும் வந்தனர்.  ஒரு கூடை நிறையப் பழங்கள்.

என் ஆசான் காலைத் தொட்டு வணங்கினார்கள்.  அவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

உள்ளுக்கு அமுக்கப்பட்ட மியாசம் (தோஷம்) மனநிலையையும் எப்படிப் பாதிக்கக்கூடும் என்ற விபரம் எனக்கு அன்றுதான் விளங்கிற்று.

சென்னையிலிருந்து வந்த அந்த மங்கைக்கு நான் கொடுத்தது மெர்க்யூரியஸ் 6 ஒரு வாரத்திற்கு இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.

அந்த மங்கையின் கணவர் என்னைக் கேட்டார்.  ஹோமியோபதி முறையில் நோய்கள் அதிகரிக்கும் என்று எங்கள் குடும்ப மருத்துவர் கூறினார்.  அப்படி ஏதாவது நேருமா?

‘அப்படி நிகழ்ந்தாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்.  விரைவில் குணமாகிவிடும்’

ஸோரியாஸிஸ் என்பது கிரேக்க மொழிச் சொல்.  ஃப்ரான்ஸ் நாட்டினர் இதை ஸோரா என்று அழைக்கின்றனர்.  அரிப்புடன் கூடிய சொறி, சிரங்கு என்று அதற்குப் பொருள்.

பத்திற்கும் மேற்பட்ட சொரியாஸிஸ் வகைகள் இருப்பதாக நோயியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  Plaque Psoriasis, Guttate Psoriasis, Inverse Psoriasis, Pustular Psoriasis, Erythrodermic Psoriasis,
Pustular
Pustular Psoriasis
Scalp Psoriasis மற்றும் nail psoriasis என பலவகை இருப்பதாக பயமுறுத்துகிறார்கள்.
Guttate
Guttate Psoriasis
 இதுமட்டுமில்லாமல் சொரியாஸிஸ் முற்றி அது Psoriatic arthritis ஆக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.
Plaque Psoriasis
Plaque Psoriasis
ஆனால் ஹோமியோபதியர்களான நாம் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை,ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்குறித் தொகுப்புக்குப் பெயர் ஏதும் கிடையாது.நோய்வாய்ப்பட்ட மனிதனுக்குத் தான் மருந்து.நோய்வாய்ப்பட்ட மனிதனுக்கு மருந்துகொடுத்து குணப்படுத்தினால் அவனுக்கு இருக்கின்ற எந்த நோயும் குணமாகிவிடும்.

மேதை ஹானிமன் ஸோராவுக்குக் கூறும் விளக்கம் பல பக்கங்களில் உள.  மனித குலத்தின் மிகத் தொன்மையான தோஷம் (மியாஸம்) இது.   உடல் இயக்கமே குலைந்து போன ஒரு நிலையைத்தான் ஸோரா என்று கூற வேண்டும் அவர் அருள்கிறார்.

சென்னையிலிருந்து எனக்குக் கடிதம் வந்து விட்டது.மருந்து கொடுத்த பிறகு,  கடந்த மூன்று மாதங்களாக அந்த மங்கைக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

நோயாளியின் நலனைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்த கவனத்துடன் உழைத்தால், அதற்கு உறுதியான பயன் உண்டு என்பது ஒரு பரமசத்தியம்.

***********************************************************************
ஹோமியோபதி அற்புதங்கள் சொரியாசிஸ்  மேஜர் தி.சா.இராஜூ