புதன், 18 மே, 2016

தாவோ மட்டுமே --plv

""""தாவோ மட்டுமே""

அன்பே !
புனிதத்தைப் போற்றுவதை
விட்டு விடு
அப்போதுதான்
முடை நாற்றமான அழுக்கு
முற்றிலும் மறைந்து போகும்.

அன்பே !
உண்மைக்காகச் சண்டை போடுவதை
நிறுத்து உடனே !
அப்போதுதான்
பொய் ஆட்சி செய்யாது !

அன்பே !
அழகை ஆராதிப்பதை நிறுத்து
அப்போதுதான்
அசிங்கம் மறைந்து போகும்.

அன்பே !
புண்ணியத்திற்காக
புலம்புவதை விட்டுவிடு
பாவம் பக்கத்திலிருந்து
கேட்டுவிடப் போகிறது.



அன்பே !
புனிதம், அழுக்கு
உண்மை, பொய்
அழகு, அசிங்கம்
எல்லாம் இங்கே
நீயும், நானும்
இருக்கும் வரை மட்டுமே !
எப்போது
நீயும், நானும் இல்லையோ
அப்போதே
எல்லாம் மறைந்து போகும்.
அங்கே இருப்பது
ஒன்றாய் இல்லாத
ஒன்றுமில்லாத  தாவோ  மட்டுமே !                                                                                                                                                                       #plvelllaichamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக