புதன், 18 மே, 2016

தாவோ மட்டுமே --plv

""""தாவோ மட்டுமே""

அன்பே !
புனிதத்தைப் போற்றுவதை
விட்டு விடு
அப்போதுதான்
முடை நாற்றமான அழுக்கு
முற்றிலும் மறைந்து போகும்.

அன்பே !
உண்மைக்காகச் சண்டை போடுவதை
நிறுத்து உடனே !
அப்போதுதான்
பொய் ஆட்சி செய்யாது !

அன்பே !
அழகை ஆராதிப்பதை நிறுத்து
அப்போதுதான்
அசிங்கம் மறைந்து போகும்.

அன்பே !
புண்ணியத்திற்காக
புலம்புவதை விட்டுவிடு
பாவம் பக்கத்திலிருந்து
கேட்டுவிடப் போகிறது.



அன்பே !
புனிதம், அழுக்கு
உண்மை, பொய்
அழகு, அசிங்கம்
எல்லாம் இங்கே
நீயும், நானும்
இருக்கும் வரை மட்டுமே !
எப்போது
நீயும், நானும் இல்லையோ
அப்போதே
எல்லாம் மறைந்து போகும்.
அங்கே இருப்பது
ஒன்றாய் இல்லாத
ஒன்றுமில்லாத  தாவோ  மட்டுமே !                                                                                                                                                                       #plvelllaichamy

அதுவே தாவோ -plv

""""அதுவே தாவோ""

அன்பே !
உள்ளதனைத்திலும் உன்னைப் பார்க்கிறேன்.
ஏனெனில்
உள்ளத்தில் இருப்பது எதுவோ
அதுதான்
உள்ளதனைத்திலும் தெரியும்
அகத்தில் இல்லாத ஒன்றை
புறத்தில் பார்க்க முடியுமா?
அதனால்
பார்ப்பதெல்லாம் நீயானாய்
பரவசமாய் நானானேன்.
என் அகத்தில் இருந்து
சுயத்தை அழிக்கும் சுகமே
அந்தச் சுகத்தை இழந்தால்
சோகமே.
சுகத்துக்குள்ளே
சோகமிருப்பதால்
அதுபோல
சோகத்திற்குள்ளே
சுகம் இருப்பதால்
எனக்குள் உள்ள சுகம்
எப்போதும் அழியாது.
அந்த அழியாத சுகமே
பரம்
அதுவே நிரந்தரம்
அதுவே தாவோ !                                                                                                                                #plv
#தாவோ மட்டும்

அளவு மாற்றம் -பழ.வெள்ளைச்சாமி

அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாகப் பரிணமித்தல் பற்றிய இயற்கை விதி
*****
pazha.vellaichamy                                                                                

                                                                               

இந்த இயற்கை விதி மிகவும் முக்கியமானது.
இங்கே அளவு என்பது பண்பைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.
அளவு என்று எதிர்நிலைகளைத் தீர்மானிப்பதாக உள்ளது.
ஆக அளவு என்பது பொருட்கள் நிகழ்வும் மற்றும் அனைத்தையும் தோற்றுவித்தது.
அளவு மாற்றமே அடிப்படையில் வடிவ மாற்றம்.
அளவு மாற்றம் தோற்றத்தின் மாற்றம்.
அளவு மாற்றமே பூமி மற்றும் கோள்கள் பால் வெளி மற்றும் இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் அமைப்பு மற்றும் ஒழுங்கு அனைத்திற்கும் காரணம்.
நாம் இதற்கு முன் எதிர்நிலைகள் ஒற்றுமை மற்றும் முரண்பாடுகளில் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைப் பற்றி பேசினோம்.
எதிர்நிலைகள் இல்லை என்றே சொல்லலாம்.  அளவு ஒன்றுதான் தற்காலிகமாக எதிர்நிலைகள் இருப்பதற்குக் காரணம்.  பொருள்களின் அளவும் அவற்றின் சுழற்சியும் முக்கியம்.
நாம் இரவு மற்றும்  பகலையும், இருட்டையும், வெளிச்சத்தையும், ஆக்கத்தையும், அழிவையும், சுவாசித்தலையும், வெளிவிடுதலையும், உட்கொள்தலை, வெளியேற்றுதலை இன்னும் நமக்கு எதிர்நிலையாகத் தோன்றும் அனைத்தும் எதிர்நிலைகள் என்று புரிதலுக்காக கொள்ளலாம்.
உதாரணத்தில் இருட்டையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொள்வோம்.  இருட்டின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தால் வெளிச்சமும், வெளிச்சத்தின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தால் இருட்டு வந்து விடும்.  இங்கே இருட்டும், வெளிச்சமும் ஒன்றுதானே.  எப்படி வெவ்வேறாக இருக்கும்?
அளவு என்பது தீர்மானகரமான சக்தி.  இந்தப் பிரபஞ்சம் ஆதி மூலத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.  பரமாவணுவிலிருந்து தோன்றியிருக்கலாம், சூனியத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.  இங்கு எல்லாம் அளவில்லாத் தன்மையைத்தான் குறிகிறது.  ஆகவே அளவு எப்போது வந்ததோ அப்போது எல்லாம் வந்தது.
நமது கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் அளவில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் இருக்கிறது.
குணம் உள்ள ஒவ்வொன்று அளவோடும், பொருளோடும்,                                                                                
சுழற்சியோடும் சம்பந்தப்பட்டதுதான்.
                                                                               

மனிதர்களுடைய கோபம், பயம், இரக்கம் பொருளைப் போன்ற உணர்வுகளுக்கு அளவு இருக்கிறது.  அதனால் பொருளோடு தொடர்புள்ளது அல்லது அதுவே பொருளாகத்தான் உள்ளது.
அளவு இல்லையேல், காலம் இல்லை.  அளவு இல்லையேல் வெளியில்லை.  அளவு இல்லையேல் எதிர் நிலைகள் இல்லை.  ஆக அளவு இல்லையேல் எதுவும் இல்லை எல்லாமே சூனியம்தான்.
                                                                               

மகான்கள், புத்தர், லாவோசு, இயnசு போன்றவர்கள் இந்த அளவற்ற நிலைக்குச் செல்வதைத்தான் அப்போது பொருள், எதிர்மறை, இயக்கம், மாற்றம் போன்ற அனைத்தும் மறைந்து போகும்.
ஒரு பொருள் அல்லது ஒரு மனிதர், அளவற்ற நிலைக்குச் செல்ல முடியும்.  ஏனெனில் அளவு அற்ற நிலையிலிருந்துதான் அனைத்தும் வந்தது.
அதனால்தான் புத்தர் கூட துன்பத்திலிருந்து விடுதலைக்கு பிறவியற்ற சூனிய நிலைக்குப் போக வேண்டும் என்று கூறுகிறார்.
                                                                               

இன்னும் சொல்லப் போனால், அளவுதான் நோயையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றது.
அளவுதான் துன்பத்தையும், இன்பத்தையும் தீர்மானிக்கின்றது.
அளவு என்பதுதான் எல்லாவற்றிற்கும் முக்கியம் என்பதை இப்போது நாம் உணர்கிறோம்.
அளவு மட்டும் பண்பைத் தீர்மானிப்பது இல்லை.  அளவு, விசை, வேகம் (acceleration and velocity) மூன்று பண்பைத் தீர்மானிக்கிறது.
பொருளின் விசை, வேகம்  மாறும்போது அப்பொருளின் பண்பு மாறுபடுகிறது.
ஒரு பொருளின் சாரத்தை அறிவதற்கு  அதன் பண்புகளை அறிய வேண்டும்.
பண்பு என்பது பொருள்களின் இயல்பையும், தனித்தன்மையையும் வெளியிடுகின்ற அவசியமான கூறுகளின் மொத்தம்.
                                                                               

""""பண்பு என்பது பொருள்களுக்குச் சொந்தமானவை.  அப்பொருட்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றபொழுது அவையும் மாற்றமடைகின்றன. ஒரு பொருளைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற்று, அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதற்கு அதை மற்ற பொருள்களிலிருந்து தனியாக வேறுபடுத்த வேண்டும்.  அவற்றுக்கு இடையிலுள்ள ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் நிறுவி அவற்றின் குணாம்சங்களை வகைப்படுத்த வேண்டும்""..
                                                                               

மேற்கூறிய இயற்கை விதி மட்டுமே ஹோமியோபதியில் மருந்துகள் எப்படி கையாளப்படுகின்றன என்று விளக்குகிறது.
                                                                               

ஹோமியோபதி பொருட்களின் அளவை மாற்றி அவைகளின் பண்பு அறியப்படுகிறது.  ஆம். மருந்துகளை வீரியப்படுத்தி, அளவு மாற்றி, ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கும்போது, அந்தப் பொருள் ஒவ்வொரு வீரியத்திலும், ஒவ்வொரு பண்பை வெளிப்படுத்துகிறது.
மருந்துகள் வீரியப்படுத்தப்பட்டு, நிரூபணம் செய்யும்போது அது மனிதனின் சாராம்சத்தோடு வினைபுரிந்து, அதன் பல்பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
                                                                               

""""ஆராயப்படும் பொருளின் அல்லது நிகழ்வின் அடிப்படையான பண்புகளையும், அடிப்படை அல்லாத பண்புகளையும் வேறுபடுத்திக் காண்பது அவசியம்"".
                                                                               

ஹோமியோபதியில் மருந்துகள் நிரூபணம் செய்யும்போது பல வீரியங்களில் அதை ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அவ்வாறு கொடுக்கப்படுகிறபோது, அந்த மருந்து ஒவ்வொரு வீரியத்திலும் அதற்கேயுண்டான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
நாம் அம்மருந்துகளின் அனைத்துப் பண்புகளையும் தொகுத்தாலும், அதில் அடிப்படையான அதன் சாராம்சத்தை வெளிப்படுத்தும் பண்புகளைக் கண்டு அதன் தனித்துவத்தை அறிந்து மருந்தாகப் பயன்படுத்துகின்றோம்.
                                                                               

ஹோமியோபதியில் தனித்துவத்தை அறிவதே தலையாயது.  அதை அறிவதற்கு அம்மருந்து சிறப்பியல்புப் பண்புகளின் தொகுப்பே முக்கியமானது என்று கூறுகிறோம்.
                                                                               

ஒவ்வொரு பொருளுக்கும், தனியான பண்பு, சிறப்பான பண்பு, பொதுவான பண்பு, ஆகப் பொதுவான பண்பு என்று நான்கு வகைப் பண்புகளும் இருக்கின்றன.
                                                                               

இவைகளில் ஆகப் பொதுவானது மிகவும் வெளிப்படையாகவும், பொதுவானவை வெளிப்படையாகவும், சிறப்பானவை ஒப்பீடு செய்யும்போதும் மற்றும் தனியானவை சூட்சுமமாகவும் தெரிய வரும்.
நாம் ஹோமியோபதியில் துயரரைத் தனித்துவப்படுத்தி, அந்த தனித்துவத்திற்கு ஒத்த மருந்தை தேர்வு செய்ய வேண்டும்.  அதற்குத் தனியானவை மிகவும் அவசியமானவை.  அவை சாரத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளவை.
குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்தும்.  அந்த அளவு அந்தப் பண்பை வெளிப்படுத்துவது அப்பொருளின் அளவுகோல்.  எனவே பண்பு மாற வேண்டுமென்றால், அளவு மாறியிருக்க வேண்டும்.  அளவு மாறி பண்பு மாறாவிட்டால், அந்த அளவுகோல் நோய்வாய்ப்பட்டு விட்டது.
                                                                               

மனித வாழ்வில் கருக்குழந்தை, கைக்குழந்தை, நடக்கும் குழந்தை, சிறுவன், விடலைப் பருவம், வாலிபம், நடுத்தரவயதினன், வயோதிகன் என்று மாற்றம் நிகழ்கிறது.  அப்படி நிகழும்போது, ஒவ்வொரு பருவத்திற்கும், ஒவ்வொரு பண்பு இருக்கிறது.  அவ்வாறு அந்தந்த பருவத்துக்கு உரிய பண்பு இல்லாத போதும், அல்லது அதிகப்படியான பண்பு இருந்தாலும், அதற்குக் குறைவான பண்பு இருந்தாலும், அந்த மனிதன் நோயுறுகின்றான்.
அதாவது அளவு மாறும்போது பண்பு மாற வேண்டும்.  ஒவ்வொரு குறிப்பிட்ட அளவுக்கும் ஒரு குறிப்பிட்ட பண்பு இருக்கின்றது.
                                                                               

ஹோமியோபதியில் இந்தக் கோட்பாடு,
1.மருந்தை நிரூபணம் செய்யும்போது கையாளப்படுகிறது.
2.மருந்து கொடுக்கும்போது கையாளப்படுகிறது
3.மருந்தை வீரியப்படுத்தும்போது பயன்படுத்தப்படுகிறது.
                                                                               

ஒரு மருந்து இயற்கை நோய் போல் இல்லாமல் எல்லா ஆரோக்கிய மனிதர்களிடமும், எல்லா நேரமும், எல்லாக் காலமும் செயல்புரிகிறது.  ஏனெனில், அதன் அளவைத் தேவைக்கேற்றார்போல் கூட்டவோ, குறைக்கவோ முடியும்.  அப்படி அளவு மாறும்போது, பண்பு மாறுவதாக இருக்கிறது.
இயற்கையில் குறிப்பிட்ட அளவுக்கு குறிப்பிட்ட பண்பு வெளிப்படும் என்பது தெரியும்.
அதை சரியான அளவில் மனிதர்களுக்குக் கொடுக்கும்போது, அவருடைய சாராம்சத்தோடு வினைபுரிந்து, நபருக்குகேற்றார்போல் குறிகள் வெளிப்படுகின்றன என்று பார்த்தோம்.   இங்கே அளவும் சாராம்சமும் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.
                                                                               

""""ஒரு பொருளை எவ்வளவு பகுத்தாலும், அதன் சாராம்சம் மாறுவதில்லை.  அதன் மற்ற பண்புகள் எல்லாம் அளவுக்குத் தக்கபடி மாறும்  விசை வேகத்திற்குத் தக்கபடியும் மாறுகின்றது"".
இந்தக் கருதுகோள் மருந்துகள் வீரியப்படுத்தும்போதும், வீரியப்படுத்திய மருந்துகளை நிரூபணம் செய்யும்போதும் மெய்பிக்கப்படுகிறது.
ஒரு பருப்பொருளாக இருக்கும்போது அதன் புலனறி பண்புகளையும், அதனுடைய மற்ற பண்புகளையும் அவற்றில் மறைந்துள்ள சாராம்சம் ஆகியவற்றைக் காண்கிறோம்.  அதை வீரியப்படுத்திக் கொடுக்கும்போது அளவு மாறுகிறது.  அது அதனுடைய பௌதிகப் பண்புகளை இழந்து விடுகிறது.  மேலும் மேலும் அதைப் பகுத்து வீரியப்படுத்தும் போது புலன் கடந்த பண்புகள் வெளிப்படுகின்ற, மிக  உயர்ந்த வீரியத்தில் அந்தப் பொருளின் புலன் கடந்த சாரம் மட்டும் வெளிப்படும்.  ஆக ஒரு பொருள் ஒவ்வொரு வீரியத்திலும், அந்த வீரியத்திற்குரிய பண்பை வெளிப்படுத்துகிறது.
இந்தக் கருத்தைக் கொண்டே டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவு மாற்றம் எந்த அளவுக்குப் பண்பு மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார்.
                                                                               

ஆர்கனான் மணிமொழி 128-இல் ஒரு மருந்தை நிரூபணம் செய்யும்போது, வீரியப்படுத்தாமல் மருந்தைக் கொடுக்கும்போது, அது அதனுடைய முழு சக்தியையும் வெளிப்படுத்துவதில்லை.  அதன் முழு சக்தியை அடியில் மறைந்திருக்கிறது.  அதே மருந்தை உயர்ந்த வீரியத்தில் அதே நபருக்குக் கொடுக்கும்போது இதுவரை மறைந்துள்ள அல்லது செயலற்ற நிலையில் இருந்த சக்திகள் வளர்ந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படுகின்றன என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்கள்.
 மேலும் மணிமொழி 270-இன் அடிக்குறிப்பில் """"இது தெளிவாகத் தெரிகிறது, பருப்பொருளாக இருந்து மருந்து உயர்ந்த அளவில் வீரியப்பத்தும்போது, அந்த மருந்தின் உண்மையான அகநிலையில் உள்ள மருந்தின் சாராம்சம் வெளிப்படுகிறது.  முடிவாக உயர்ந்த வீரியத்தில் அந்த மருந்து அதற்கேயுண்டான தனித்தன்மையான சாராம்சத்தில் கரைந்து விடுகிறது"" என்று கூறுகிறார்.
இதன் மூலம் ஒரு மருந்து ஒவ்வொரு நிலையிலும் அகநிலைக்கான பண்பை வெளிப்படுத்துகிறது.  ஆனால் உச்சக்கட்டமாக அதன் தனித்துவமான சாராம்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது.
இக்கருத்தையே  """"the spirit of homoeopathy"" என்ற நூலில் டாக்டர். இராஜன் சங்கரன் நைட்ரிக் ஆசிட் பற்றிக் கூறும்போது, 200 வீரியத்தில் அது எதிரியை மன்னிக்க முடியாத பண்போடு இருப்பவராகவும் 1 எம் வீரியத்தில் நீதி மன்ற யுத்தம் செய்பவராகவும் வெளிப்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆக ஒவ்வொரு வீரியமும் அதற்கேயுண்டான பண்புகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.  மற்ற பண்புகள் மறைக்கப்படுகின்றன.  அதன் மிக உயர்ந்த வீரியத்தில் மட்டுமே உச்சகட்டமான அதன் சாரத்தை வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.
                                                                               

டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் முக்கியத்துவத்தை மணிமொழி 276-இல் """"மிகச் சரியாக தேர்வு செய்த மருந்து உயர்ந்த வீரியத்தில் அதிக அளவு கொடுக்கப்படும்போது, மிகுந்த தீங்கைச் செய்கிறது.  அதுவும், அலோபதி மருந்தைவிட,  உயர்ந்த வீரிய மருந்து செய்யும் தீங்கே அதிகமாக இருக்கிறது.  மிக அதிகமான அளவு கொடுக்கப்படும்போது, அதுவும் குறிப்பாக திருப்பித் திருப்பிக் கொடுப்பப்படும்போது மிக அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதுதான் விதி.  அது துயரரின் உயிருக்கே உலை வைத்து விடும்.  நோயைக் குணப்படுத்த முடியாதபடி செய்துவிடும்.  அது இயற்கை நோயைக் குணப்படுத்தினால், அதனால் ஏற்பட்ட மருந்தின் நோய் குணப்படுத்த முடியாமலே போய்விடும்.
இந்தக் கூற்று அளவு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்னபது தெளிவாகிறது.  ஒரே மருந்து அளவு மாறும்போது குணப்படுத்துவதாகவும், ஆபத்து விளைவிப்பதாகவும் இருக்கின்றது.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மேற்கூறிய கூற்று நிரூபிக்கிறது.
                                                                               

மேலும் டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் முக்கியத்துவத்தை மணிமொழி 253-இல் அடிக்குறிப்பில் தெளிவாகவே கூறுகின்றார்.
தேர்வு செய்யப்பட்ட மருந்தை குறைந்த வீரியத்தில் எவ்வளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குக் குறைவாகக் கொடுக்கும்போது, மனநிலையிலும், சுபாவத்திலும் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும்.  அதுவே அதிக அளவு கொடுக்கப்படும்போது, அது சரியாகத் தேர்வு செய்யப்பட்ட மருந்தாக இருந்தாலும், மிகுந்த சிரமத்தை ஏற்பத்திய பின்பே குணத்தை உருவாக்கும் என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
                                                                               

இதேபோல் அளவின் அவசியத்தையும், அது ஒவ்வொரு முறை கொடுக்கும்போதும் முந்தைய அளவை விட மாறி இருக்க வேண்டும் என்பதையும் மணிமொழி 246-இல் குறிப்பிடுகின்றார்.
இதேபோல மணிமொழி 247 மற்றும் 248-இல் மருந்தின்அளவு மற்றும் வீரியமும் மாறி இருக்க வேண்டிய அவசியத்தையும், அப்படி மாறா விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் விளக்குகின்றார்.
ஆக அளவு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை ஆர்கனான் முழுவதும் டாக்டர். ஹானிமன் அவர்கள் வலியுறுத்துகின்றார்.
அளவு மாறும்போது, பண்பு மாறும் என்ற இயற்கை விதி ஹோமியோபதியில் மிகச் சரியாகவே பின்பற்றப்படுகிறது.
மேலும்,ஹோமியோபதி ஒரு முக்கியமான விஷயத்தையும் கூறுகிறது.  அதாவது வெறும் அளவு மாற்றம் மட்டுமே நாம் எதிர்பார்த்த பண்பு மாற்றத்தை ஏற்படுத்தாது.  அதனோடு விசை மற்றும் வேகம் சேரும்போது மட்டுமே அதனதற்குத் தகுந்தார்போல் பண்பு மாறும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இதை மணிமொழி 247-இன்அடிக்குறிப்பில் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
முதல்வேளை மருந்து நல்ல பலனைத் தந்தபோதும், அதை அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது முறை கொடுக்கும்போது, அது குறைந்த அளவேயானாலும், முறையான அளவு குலுக்கி வீரியப்படுத்திக் கொடுக்காதபோது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
எனவே அளவு மாற்றம் பண்புமாற்றத்திற்கு இட்டுச் செல்லும், அல்லது பண்பு மாறியிருந்தால் கட்டாயம் அளவு மாறியிருக்க வேண்டும் என்ற இயற்கை விதி மிகச் சிறப்பாகவே, ஹோமியோபதியில் கையாளப்பட்டிருக்கிறது.
மேலும் ஹோமியோபதி புதிய விஷயத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
ஒரு பொருளுக்கு புலனறிந்த பண்பு புலன் கடந்த பண்புகள் இருக்கின்றன என்பதை தெளிவாகக் கூறுகிறது.
திருவள்ளுவர் பெருமான்  மெய் உணர்வு என்ற அதிகாரத்தில் கூறியது போல, மெய்யறிவு எது என்பதையும், மேலும் மெய்யறிவை எப்படி அறிய முடியும் என்பதையும் ஹோமியோபதி கூறுகிறது.
திருவள்ளுவர் கூறுகிறார்
                                                                               

""""எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு""
                                                                               

இங்கே மெய்ப் பொருள் என்று வள்ளுவர் கூறுவது,  ஒரு பொருளைப் பற்றி புலன் கடந்த அறிதலை.  ஒரு பொருள் பருப்பொருளாக இருக்கும்போது அதன் பண்பும், அது வீரியப்படுத்தும்போது அது வெளிப்படுத்தும் பண்பும் முற்றிலும் வேறானது.
இதைத்தான் புலன்களால் அறியப்படுவது பயனில்லை, புலன் கடந்த அறிவுதான் பொருளின் சாரத்தை வெளிப்படுத்தும் என்பதையும் வள்ளுவர் கூறுகின்றார்.
                                                                               

""""ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு""
                                                                               

இங்கே மெய் உணர்வு என்பதை எது என்பதையும் வள்ளுவரே கூறுகின்றார்.
                                                                               

""""ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்""
                                                                               

என்று உள்ளம் அறிதலையே வள்ளுவர் மெய்ப் பொருள் அறிதல் என்று கூறுகின்றார்.
இங்கு தான் ஹோமியோபதி உலகுக்கு புதிய உண்மையைக்  கூறுகிறது.
                                                                               

ஒரு பொருளுக்கு பௌதீக, வேதியல் குணங்களுக்கப்பால், உணர்வறிவு, consciousness ஒன்று இருக்கிறது என்றும் அதுவே அதன் சாராம்சமாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது.
ஒரு பொருளை பருப்பொருளை பருப் பொருளாகக் கொடுக்கப்படும்போது அந்த மனிதன் புலன்களில் மட்டுமே வினைபுரிகிறது.  அதையே பொருளற்ற பொருளாக வீரியப்படுத்திக் கொடுக்கும்போது அது அவனுடைய சுயத்தில் வேலை செய்கிறது அல்லது பொருளின் சாரம், மனிதனின் சாரத்தோடுதான் வினைபுரிகிறது.
                                                                               

இதை உணர்ந்துதான் டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 141-இன் அடிக்குறிப்பில் மருந்துகளை நிரூபணம் செய்வது மருந்தின் சாரத்தை அறிவது மட்டுமல்ல, அந்த மனிதனின் சாரத்தை அறிவதற்கும் உதவுகிறது என்றும் அதுவே ஞானத்திற்கான அடித்தளம் என்றும் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
ஆக, அளவு என்பது பல பரிமாணங்களில் ஹோமியோபதியில் பார்க்கப்படுகிறது.
அளவு மாற்றமே பண்பு மாற்றம் என்று கூறும் இயற்கை விதி ஹோமியோபதியில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.
                                                                               

1.உடல், மன ஆரோக்கிய நிலையில் ஏற்பட்ட மாற்றமே நோயானால், அந்த மாற்றத்திற்கு அடிப்படை அளவு மாற்றம் தானே.
2.அளவுதான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தையும், நோயையும் தீர்மானிக்கிறது.
3.அளவுதான் ஒரு பொருள் உணவு, விசமாகத் தீர்மானிக்கிறது.
4.அளவுதான் ஒரு பொருளை மருந்தாகவும், நோயாகவும் தீர்மானிக்கிறது.
5.அளவுதான் எல்லாவற்றையும் இது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்கிறது.
                                                                               

இதிலிருந்து இயற்கையில் அளவே பிரதானம் என்பது தெளிவாகிறது.
                                                                               

இந்தப் பிரபஞ்சத்தின் இருத்தலும், உலகில் இருந்தாலும் அளவைப் பொருத்தே அமைகிறது.
                                                                               

அளவு என்று குறிப்பிட முடியாத சூனியத்திலிருந்து எப்போது அளவு தோன்றியதோ அப்போதே பொருள், காலம் வெளி அனைத்தும் தோன்றி விட்டது.
                                                                               

அளவு மாற மாறப் பண்பு மாறி, படிப்படியாக மனிதன் வரைக்கும் பிரபஞ்சம் பரிணமித்து இருக்கிறது.
                                                                               

ஹோமியோபதியில் ஒரு பொருள் அழிக்க முடியாது என்பதற்கிணங்க அதை எவ்வளவு பகுத்தாலும் அதன் பண்புகள் மாறுமேயொழிய அழிக்க முடியாது என்றும், அது பருப்பொருளாக  இருக்கும்போது, அதன் பண்பும், அதை வீரியப்படுத்தும்போது ஒவ்வொரு வீரியத்திலும் அதற்கேயுரித்தான பண்பு வெளிப்படுவதையும் அறியலாம்.
இதைப்போல் பண்பை மாற்றுவதன் மூலம் பொருளை மாற்ற முடியுமா? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.  பண்பு மாறிவிடும்போது பண்பு மாறும் என்பதுதான் விதி.
நாம் ஒரு பொருளை பகுத்துப் பகுத்து வீரியப்படுத்தும்போது வெவ்வேறு பண்புகள் வெளியாவது போல, மனிதனை எப்படி பகுத்து வீரியப்படுத்துவது.  இதை சற்று சிந்திக்கலாம்.
ஒவ்வொரு மனிதனிடமும் தனியான, சிறப்பான, பொதுவான, ஆகப் பொதுவான பண்புகள் இருக்கின்றன.  இப்படி இருக்கும்போது, மனிதனின் சுயத்தை அறிவது என்பது,
மருந்துகளின் சாரத்தை அறிய, நாம் அவற்றை வீரியப்படுத்தி, ஆரோக்கியமான மனிதர்களுக்குக் கொடுக்கும்போது, அவை அவற்றின் ஒவ்வொரு வீரியத்திலும், அவற்றிற்கான பண்பை வெளிப்படுத்துகின்றன.  உயர்ந்த வீரியத்தில் கிட்டத்தட்ட அதன் சாராம்சத்தை மட்டுமே (சுயத்தை மட்டுமே) வெளிப்படுத்துகின்றன.
இது இப்படியிருக்க, மனிதர்களை எப்படி வீரியப்படுத்துவது? வீரியப்படுத்தி அவர்களுடைய சாராம்சத்தை எப்படி அறிவது?
அளவு மாற பண்பு மாறும் என்றால் பண்பு மாற அளவு மாற வேண்டும்.  மனிதன் அவனுடைய பல்வேறு பண்புகளை விடுத்து, சுயத்திற்கான பண்புக்கு வந்து, பின்பு சுயத்துக்கான பண்பையும் விடுவித்து விட்டால், அவன் பொருளற்ற பொருளாக ஆகிவிடுவான்.
மனிதர்கள் இவ்வாறு முக்தி, மோட்சம், சூனியம், தாவோ, தம்மம் என்ற நிலைகளை அடைய பண்பற்ற நிலைக்குப் போக வேண்டும்.  இதற்கு மனிதர்கள் சாமி கும்பிடுதல், விரதம் இருத்தல், யோகம் செய்தல், தியானம் செய்தல், முடிவில் சமாதி அடைதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றான்.  அப்படி ஈடுபடும்போது முடிவில் ஞானம் பிறந்து, பிறவியற்ற, அவன் எதிலிருந்து வந்தானோ, அந்தப் பொருளற்ற பொருளாக ஆகிவிடுவான்.
மனிதர்கள் மேற்கூறிய அனைத்து செய்கைகளையும் செய்யும்போது, வெவ்வேறு நிலைகளில் அவர்களை வீரியப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் மிகை இல்லை.  ஆகவே மேற்கூறியவற்றை ஆன்மீகம் என்று கருத வேண்டாம்.  இதை புலன் கடந்த அறிவியல் என்று கூறலாம்.
மேலும்,  தன்னுடைய சாரத்திற்குத் செல்லும்போது, ஒத்தது ஒத்ததோடு வினைபுரியும் என்ற அடிப்படையில், எந்தப் பொருளோடு தொடர்பு கொள்கின்றானோ, அந்தப் பொருளின் சாரத்தை உணர்கின்றான்.  அப்போது அந்தப் பொருள் பற்றிய மெய்ம்மை புரிய வருகிறது.  அதனால், அதன் மீது சரியாக வினைபுரிய முடிகிறது.  அதனால், அவனுடைய செயலில் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது.  இதை அவன் தெய்வத்தின் கருணையால் நடந்ததாகக் கருதுகின்றான்.
இதிலிருந்து, தியானம், தவம், வழிபாடு எல்லாமே ஒரு வகையில் மனிதர்களை வீரியப்படுத்தி பண்பற்ற நிலைக்குக் கொண்டு செல்தலே.. ..
ஆக, அளவு மாற்றம் பண்பு மாற்றம் என்ற விதி ஹோமியோபதிக்கு மட்டுமின்றி ஹோமியோபதி மூலம் பல உண்மைகளை உணர்வதற்கு உதவியாக இருக்கின்றது.                                                                                                                                                                            

#பழ.வெள்ளைச்சாமி                                                                                                                       plv                                                                                                                                                               -ஹோமியோபதி ஆர்கனானில் இயற்கை விதிகள்.

அடையாளம் அழியும்போது PLV

""""அடையாளம் அழியும்போது""

அன்பே !
வடிவம் இல்லாத ஒன்றிலிருந்துதான்
வடிவங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அடையாளமில்லாத
ஒன்றிலிருந்துதான்
அடையாளங்கள்
தோன்றிக் கொண்டு இருக்கின்றன.
இப்போது
அடையாளத்தை அழித்து
அடையாளமில்லாததாக்குவது எப்படி ?
அதுதான் காதல்.
ஆம்
அடையாளம் அழியாமல்
காதல் வராது.
காதல் வரும்போது
அடையாளம் இருக்காது.
அதனால்
அந்தக் காதலே அன்பு
அந்தக் காதலே தாவோ
அதனால் அன்பே
காதல்,  கடவுள்
தாவோ
எல்லாம் நீயே
ஏனெனில் நீ என்
அடையாளத்தை அழித்தவளல்லவா?                                                                                  #plv
#தாவோ மட்டும்