ஹோமியோபதி ஆர்கனானில் இயற்கை விதிகள்
பழ.வெள்ளைச்சாமி
*****
""""மருத்துவம் என்பது மிகவும் சிக்கலான அறிவியல். இன்னும் சொல்லப் போனால் அறிவியல் என்று சொல்வதை விட கலை. அதுவும் கலைகளுக்கு எல்லாம் கலை. மருத்துவத்திற்கு முழுமை, தனித்துவம் மற்றும் பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அறிவு வேண்டும். மருத்துவம் தனித்துவமான வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.""
இந்த வாசகம் தத்துவவியலாளர் அலெக்ஸாண்டர் ஸ்பிரிக்கின் மருத்துவம் தொடர்பான கருத்து. மிகவும் சரியான கணிப்பு.
வேறு எந்த மருத்துவத் துறைக்குப் பொருந்துகிறதோ என்னவோ, ஆனால், நிச்சயம் ஹோமியோபதி மருத்துவத் துறைக்கு மிகவும் சரியாகப் பொருந்தும்.
ஏன் ஹோமியோபதி மருத்துவத்துக்குச் சரியாகப் பொருந்தும்? மேற்கூறிய வாசகத்தின் அனைத்துக் கூறுகளையும், உள்ளடக்கிய மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் மட்டும்தான்! அதனால்தான் டாக்டர் ஹானிமன் அவர்கள் ஹோமியோபதி மட்டுமே சரியான மருத்துவம் என்று கூறுகிறார். அவரது ஆர்கனான் மணிமொழி 53-இல்
""""இந்த மருத்துவமுறை மட்டுமே சரியான மருத்துவமுறை. இரண்டு புள்ளிகளை ஒரு நேர்கோடு மட்டும்தான் இணைக்கும் அது போல.""
எவ்வாறு இவ்வளவு உறுதியாகக் கூறு முடிகிறது? ஏனெனில் ஹானிமன் அவர்கள் ஆர்கனான் 2-வது மணிமொழியில் கூறியது போல்
""""எளிதில் புரியக்கூடிய தத்துவத்தின் அடிப்படையில்"" இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் கூறியது போல் இதன் சாரம், இயற்கை விதிகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதிலிருந்து ஹோமியோபதிக்கென்று அடிப்படையில் ஒரு தத்துவப் பின்னணி இருக்கிறது. வேறெந்த மருத்துவ முறைக்கும் இது போன்ற தெளிவான தத்துவப் பின்புலம் இருப்பதாகத் தெரியவில்லை.
இங்கே மருத்துவத்திற்கும் மற்றும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றும். இந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், தத்துவம் என்றால் என்ன என்பதைத் தெரிந்தால்தான் இதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும், ஏன் ஹோமியோபதியைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அந்தத் தத்துவப் பின்னணி இல்லாததால்தான், இன்னும் ஹோமியோபதி தெரிந்தது போல் தெரியாமல் இருக்கிறது.
அப்படி என்றால் தத்துவம் என்றால் என்ன?
வார்த்தைவியல்படி பார்த்தோம் (etymology) என்றால் தத்துவம் என்பதற்கு ஞானத்திற்கான காதல் (love for sophia) என்று கூறலாம்.
கிரேக்கத்தில் பிளாட்டோ அவர்கள் தத்துவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆனால் ஞானம் என்ற வார்த்தைக்குப் பதிலாக பிளாட்டோ அவர்கள் மிகச் சரியாக மொழிபெயர்த்து """"உண்மைக்கான காதல்"" என்று கூறினார்.
தத்துவத்தின் தொடக்கம் உண்மையை தேடிச் சேகரித்தல் மட்டுமல்ல. உண்மைக்கான விருப்பமே தத்துவம்தான்.
ஆகத் தத்துவம் என்பது உண்மையை அறிவதில் விருப்பம்.
இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு, இந்த இயற்கையைப் பற்றிய அறிவு, இயற்கையில் உள்ள பொருட்கள் மற்றும் உயிர்களுக்குள் உள்ள தொடர்பு பற்றிய அறிவு, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவு, மனிதனுக்கும் அவனுடைய மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவு, மனிதனுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் உயிரற்றவற்றிக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவு. மனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவு. இயற்கை, மனிதன் மற்றும் சமூகம் இவை மூன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவு. மனிதன், மனம் மற்றும் ஆன்மா தொடர்பான அறிவு இவ்வாறு அனைத்துத் தேடல்களுமே தத்துவத்திற்குள் அடங்கும்.
மனிதன் தோன்றியது முதல் இயற்கையையும், இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் இவனுடைய நிலை என்ன? என்பதைப் பற்றியும் அறிய முற்பட்டுக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொருவரும் அவர்களுடைய போக்கில் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக வெவ்வேறு தத்துவ விளக்கங்கள் தோன்றின. அவை எல்லாவற்றையும் பற்றி விரிவாகக் கூறுவது நமது நோக்கமல்ல.
ஆனால் தத்துவம் என்பது அறிவியலுக்கும், மனிதனுக்கும், மனித வாழ்க்கைக்கும் அவசியமானது என்பது மட்டும் தொடர்பு.
ஆகவே, ஹோமியோபதி கலை சார்ந்த அறிவியல், அதுவும் அறிவியலுக்கெல்லாம் அறிவியலாக உள்ளதால், இதற்கான தத்துவப் பின்னணி என்ன என்று பார்ப்பதுதான் நமது நோக்கம்.
ஹோமியோபதியின் தத்துவப் பின்னணி பற்றி பார்ப்பதற்கு முன், ஹோமியோபதியை உலகுக்கு அளித்த டாக்டர். ஹானிமன் அவர்கள் தத்துவம் தொடர்பாக என்ன கருத்து வைத்திருந்தார் என்று பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்று.
டாக்டர். ஹானிமன் அவர்களுடைய வாழ்க்கை முறையும் மற்றும் ஆளுமையும் அவர்களுக்குத் தத்துவத்தின்பால் உள்ள ஆர்வம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தத்துவத்தின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஆயினும் அவருக்குத் தத்துவவாதிகள் மீது சரியான அபிப்பிராயம் இல்லை. அவர் தத்துவம் என்பது அறிவுக்கான ஆதாரமாகவும், அடித்தளமாகவும் மற்றும் தொடக்கப்புள்ளியாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
அவர் தத்துவத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். தத்துவம் என்பது உயர்ந்த ஒன்றாக இருந்து கொண்டு மனித மனத்தில் வாழ்க்கைப் போராட்டத்திற்கான ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. தத்துவமானது அறிவியல்களில் எல்லாம் உயர்ந்த அறிவியலாக இருக்கிறது. இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், மற்றும் அடித்தளமாகவும் இருக்கின்றது. தத்துவமில்லாமல் எந்த அறிவியலும் நிலைத்திருக்க முடியாது. தத்துவமில்லாதபோது அது கைவினைப் பொருளாகவும், இன்னொன்றைச் சார்ந்ததாகவும்தான் இருக்க முடியும். இதுவே உண்மை. இது எல்லா மருத்துவ முறைகளைவிடவும் உயர்ந்தது.
இது டாக்டர். ஹானிமன் அவர்களுடைய தத்துவம் பற்றிய புரிதல். இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு இவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தத்துவம் இழையோடி இருக்கிறது என்பதை மிகவும் தெளிவாகவே உணர்த்துகிறது.
டாக்டர். ஹானிமன் அவர்களுடைய வாழ்க்கையில் அவருடைய தந்தை முதல் தத்துவ ஆசிரியர். அவர்தான் முதலில் கற்கக் கசடற, கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற உண்மையை போதித்து வாழ்க்கைக்கு முதல் அடித்தளம் இட்டவர்.
இவர் பள்ளிப் பருவம் முதல் தொன்மை மொழிகளில் இவருக்கு இருந்த ஆர்வம் இவருடைய பண்பாட்டுத்தளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தொன்மை மொழிகளைக் கற்றதால், வளர்ந்த பண்பாட்டுத் தளமான தத்துவார்த்த வார்ப்பாக மாறியது. இவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறு வயது முதல் தத்துவம் நிரவி இருப்பiதைக் காண முடியும்.
இவரைப் பற்றி ஜேன்பாப் என்ற விமர்சகர் கூறுகிறார்-
""""ஹானிமன் தத்துவத்தையும் மற்றும் படிப்பையும் துல்லியமாகவும், மிகவும் சரியாகவும் அவருக்கேயுண்டான தனித்துவமான போக்கில் செய்யும் வரம் பெற்றவர்"".
இவருடைய வாழ்க்கை உற்றறிவார்க்கு பாப் அவர்களுடைய கூற்று எந்த அளவு மெய்யானது என்பதை உணரலாம்.
இவருக்கு தத்துவார்த்த ஞானம் இருந்ததால்தான் உண்மை நேசிக்க முடிந்தது. நல்ல கொள்கையை வகுத்துக் கொள்ள முடிந்தது. மேலும் தான் வகுத்துக் கொண்ட கொள்கைப்படி வாழ்வதற்கு தன்னையும், தன் குடும்பத்தையும் தயார்ப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவருக்கு அடுக்கடுக்கான துன்பங்களும், வறுமையும் மற்றும் அவருடைய எதிரிகள் அவரை ஊர் ஊராகத் துரத்திய போதிலும் உறுதி குலையாமல் உண்மையின்பாலும், நேர்மையின்பாலும் நிற்க முடிந்தது.
ஆனால், இவருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவத்திலும் ஆர்வம் கிடையாது. இவர் பல்துறைத் தத்துவங்களையும் கற்றறிந்தார். அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை எங்கெங்கு தேவையோ அங்கங்கு பயன்படுத்திக் கொண்டார். அவர் பள்ளிப் பருவத்திலிருந்தே தத்துவஞானி தேங்கார்டஸ், ஸ்பைனோஜா மற்றும் லீப்னெக் போன்றவர்களுடைய தத்துவ நூல்களில் ஆர்வமுடையவராக இருந்தார். இவர்கள்தான் அந்தக் காலக்கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதற்கு அவருடைய மனோபாவம் மனிதனாகவும், மருத்துவனாகவும் மாறி வைட்டலிசம் என்ற உயிராற்றல் தத்துவத்திற்கும் பின்பு இயற்கை தத்துவத்திற்கும் மாறியது. இயற்கை தத்துவத்தை வார்த்தெடுத்தவர்கள் செல்லிங் மற்றும் ஹெகல் என்ற தத்துவமேதைகள்தான். பின்பு இயற்கைத் தத்துவத்திலிருந்து ஸ்ரிச்சுவலிசம் என்ற கோட்பாட்டுக்கு மாறினார். அதிலிருந்து மறை பொருள்வாதத்திற்குச் சென்றார்.
இவருக்கு பொருள்முதல்வாதக் கருத்தோடு தொடர்பில்லை என்றே சொல்லலாம். அப்போது வாழ்ந்த கான்ட் போன்றவர்களை அறிந்திருந்தாலும், பொருள்முதல்வாதம் இவருக்கு ஏற்புடையதற்றதாக இருந்தது.
இருப்பினும், வெற்று ஊகங்களிலும், கற்பனையான புனைவுகளிலும் நம்பிக்கையற்றவராக இருந்தார்.
எந்த ஒன்றையும் ஆராய்ந்து, பரிசோதனை செய்து, அனுபவத்தால் அறிந்த ஒன்றையே ஏற்றுக் கொள்வார். இந்த அளவுக்கு இவருக்கு பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இருந்தது.
இவர் பொதுவில் மத நம்பிக்கையில்லைதான் என்றாலும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவர். இவர் பிறப்பில் புராட்டஸ்டான்ட் கிருத்துவர். ஆனால் அதன் மீது அப்படியொன்றும் பெரிய பிடிப்பு இல்லை.
இவருடைய கடவுள் நம்பிக்கை வித்தியாசமானது. கடவுள் எங்கும் வியாபித்துள்ளார். ஒவ்வொரு உயிரிலும், உலக நலனுக்காகவும், உயிர்களின் நன்மைக்காவும் இருக்கின்றார்.
உயிர்களை நோயிலிருந்து காப்பாற்ற, இந்த மருத்துவ இரகசியத்தை, தன்னைத் தேர்வு அறிவித்ததாகக் கூறினார். ஆகவே, இந்த மருத்துவ உண்மையில், திறமையுள்ளவராகவும் மற்றும் இந்த உண்மையைப் பேணுவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
கடவுள் பிரபஞ்சத்தைக் கட்டியவர். அனைத்து உயிர்களிடமும் பரவியுள்ளார். ஆகையால் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதே மகிழ்ச்சியானது என்று உணர்ந்தார்.
இவருடைய கடவுள் கொள்கை கிருத்துவ மதத்திற்கு எதிரானது. அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இவர் சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்ஸின் கருத்துக்களில் மிகவும் ஈர்க்கப்பட்டார். இவர் கன்பூசியஸின்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களை விட உயர்ந்ததாகக் கருதினார். இவரை இயேசுவை சுடர்விடும் மனக்கிளர்ச்சியாளர் என்று கூறுவார்.
பொதுவில் இவரை இயற்கை தத்துவவாதி என்று அழைக்கலாம். ஏனெனில் அப்போது மிகவும் பிரபலமாய் இருந்த ஹெகலின் தத்துவத்தின் தாக்கம் இவரிடம் முழுமையாக இருந்தது. அவரிடமிருந்து இவருக்கு இயற்கை தத்துவத்துவம் சிந்தனை தோன்றியிருக்கலாம்.
இதன் விளைவாக, இவருடைய ஹோமியோபதி மருத்துவ தத்துவ நூல் ஆர்கனானில் இயற்கை விதியைப் பற்றி பேசுகிறார்.
மேற்கூறியவை அனைத்தும் ரிச்சர்டு ஹேல் எழுதியதிலிருந்து சேகரித்த விஷயங்கள்தான்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் குணமாக்கல் விதி இயற்கை விதிப்படி இருப்பதாகக் கூறுகிறார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தை 1796-இல் ஊருக்கு அளித்தார். அன்று முதல் எண்ணற்ற எதிர்ப்புகள். தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து இந்த மருத்துவத்தை வளர்த்தெடுத்தார்.
டாக்டர் ஹானிமன் அவர்கள் 1796-இல் இந்த மருத்துவ உண்மையை உலகுக்கு அறிவித்ததிலிருந்து 1843-இல் அவர் இயற்கை எய்தும் வரை கடுமையாக உழைத்து பல உண்மைகளைக் கண்டறிந்தார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் அறிந்து, ஆய்வு செய்து, பரிசோதித்து, மறுபடியும் பலமுறை பரிசோதித்து, தான் கண்டறிந்த உண்மைகளை ஆர்கனான் என்ற தத்துவ நூலாக 1812-இல் முதல் பதிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1839-இக்குள் ஆர்கனானில் பல மாற்றங்கள் செய்தார். அது ஆறு பதிப்புகளாக வெளி வந்தது.
எவ்வளவு எதிர்ப்புகள் அவர் கொள்கைக்கு மட்டுமல்ல, அவர் வாழ்க்கைக்கும்தான். அவரும், அவர் குடும்பமும் படாதபாடு இல்லை. மனித சமூகம் சமுதாயத்திற்காக பாடுபடுபவர்களை எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை என்பது மட்டுமல்ல. அடுக்கடுக்காக துன்பங்களைத் தரவும் தயங்குவதில்லை. இது டாக்டர். ஹானிமன் அவர்களுக்கும் முற்றிலும் பொருந்தும். இருப்பினும், டாக்டர். ஹானிமன் அவர்கள் தன்னுடைய ஆர்கனான் ஆறாம் பதிப்பை 1839-இல் எழுதி முடித்தார். அதில் தான் கண்டுபிடித்த மருத்துவ உண்மையை ஏறக்குறைய முழுமைப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். துரதிர்ஷ்டம், அவர் வாழும் காலத்தில் அது வெளி வரவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1920-இல் ரிச்சர்டு ஹேல் என்பவர் பல இன்னல்களைச் சந்தித்து வெளியிட்டார்.
ஹோமியோபதி 1796-இல் இருந்து இன்றுவரை உலக நாடுகள் அனைத்திலும் பயிற்சி செய்யப்படும் மருத்துவமாக பரவிக் கொண்டு இருக்கிறது. எவ்வளவோ எதிர்ப்புகள் வந்த போதும் அது அழியவில்லை. உலக நாடுகளின் அரசுகள் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இருப்பினும், அதுவாகவே மக்கள் மருத்துவமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
உலகில் நூற்றுக்கனக்கான மருத்துவ முறைகள் இருந்தாலும், இன்றளவும் ஹோமியோபதி அதற்கென்று தனியிடத்தைப் பிடித்துக் கொண்டு, பல எதிர்ப்புகளையும் மீறி வளர்ந்து கொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?
ஆம். ஹோமியோபதி இயற்கை விதிகள் என்ற எளிய உண்மையின்மேல் கட்டமைக்கப்பட்டது. சரியாகச் சொன்னால் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறியது போல இது மட்டுமே மிகச் சரியான தத்துவத்தை உடையதாக இருக்கிறது.
டாக்டர். ஹானிமன் அவர்கள் அவருடைய ஆர்கனானின் ஆறாம் பதிப்பில் ஆறு இடங்களில் இயற்கை விதிகள் பற்றிக் கூறுகிறார்.
ஆர்கனான் ஆறாம் பதிப்பின் முன்னுரையில் பக்கம் 82-இல் அலோபதி மருத்துவத்தின் குறையைச் சொல்லும்போது, அலோபதி மருத்துவர்கள், இயற்கை விதியின்படி குணமாகிறது என்ற உண்மையை உணராமல், குருட்டுத்தனமாக, அவர்களை அறியாமல் ஹோமியோபதி முறை குணமாக்கலைச் செய்து விடுவார்கள் என்று கூறுகிறார்.
ஆர்கனான் மணிமொழி 26-இல் """"ஹோமியோபதியில் நலமாக்கல் என்பது, இயற்கை விதியைச் சார்ந்துள்ளது. இது சில சமயங்களில் தெளிவாக உணரப்படவில்லை. மேலும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை."" இருப்பினும் அதுதான் குணமாக்கலுக்குக் காரணமாகிறது.
``ஒரு உயிரியில் ஏற்படும் பலஹீனமான ஆற்றல் வாய்ந்த பாதிப்பு, அதை ஒத்ததை அதை விடப் பலம் வாய்ந்த ஒன்றால் நிரந்தரமாக அழிக்கப்படுகிறது. ""
""""ஆர்கனான் மணிமொழி 28-இல் அதுவாகவே மிகச் சரியாக நிகழ்கிறது. இது ஒவ்வொரு சுத்தமான சோதனையிலும், ஒவ்வொன்றையும் மிகச் சரியாக உற்று நோக்கும்போதும் தெரிகிறது. ஆக குணமாக்கல் என்பது இயற்கை விதிப்படி நடந்தேறுகிறது என்று தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுகிறது. ஆனால் அது எப்படி அறிவியல்பூர்வமாக நடந்தேறுகிறது என்று விளக்குவது என்னைப் பொறுத்தவரை முக்கியமில்லாத விஷயம்"".
ஆர்கனான் மணிமொழி 48-இல் """"மேற்கூறிய உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது இயற்கையின் வழியாகவோ அல்லது மருத்துவரின் மருத்துவக் கலை மூலமாகவோ, இருக்கின்ற நோயை அல்லது பாதிப்பை, அதற்கு மாறுபட்ட நோயை ஏற்படுத்தும் பொருளைக் கொண்டு, அது எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் நீக்க முடியாது. அதற்கு மாறான, அதற்கு ஒத்த குறிகளைக் கொண்ட, அதைவிட பலம் வாய்ந்த ஒன்றால் மட்டுமே குணப்படுத்த முடியம். இந்நிகழ்வானது மாறாத நிலையினை இயற்கை விதிப்படி நடந்தேறுகிறது. இது இதுவரை கண்டுணரப்படாமல் இருக்கிறது.""
ஆர்கனான் மணி மொழி-53-இல் """" உண்மையான குணமாக்கல் என்பது இதமாக, விரைவாக, மிகவும் நிச்சயமாக மேலும் நிரந்தரமாகப் பெறப்படுகிறது. ஏனெனில் இது பிழையாத நிலையான இயற்கை விதிப்படி நடந்தேறுகிறது. ""
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து """"ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்"" என்ற ஹோமியோபதித் தத்துவம் இயற்கை விதி சார்ந்தது என்பதை டாக்டர் ஹானிமன் அவர்களின் மணிமொழி உறுதியாகக் கூறுகிறது.
ஆனால் அவரே அது அறிவியல்பூர்வமாக எவ்வாறு செயல்படுகிறது என்று விளக்குவது என்பது முக்கியமற்றதாகக் கூறுகிறார்.
இதிலிருந்து ஹோமியோபதி மருத்துவ முறை கட்டமைக்கப்பட்டது, இயற்கை விதிகளின் அடிப்படையில் என்பது தெளிவாகிறது.
ஆனால் இயற்கை விதியின் அடிப்படையில் குணமாக்கல் எவ்வாறு நடந்தேறுகிறது என்று கூறவில்லை.
குணமாக்கல் மட்டும்தான் இயற்கை விதிப்படி நடந்தேறுகிறதா? இதற்கு மேலும், இயற்கை விதிகள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால், அந்த விதிகள் எல்லாம், ஹோமியோபதியில் அதுவும் குறிப்பாக ஆர்கனானில் கையாளப்படுகின்றனவா? எப்படி அனுசரிக்கப்படுகின்றன என்று பார்ப்பதும், மேலும் குணமாக்கல் இந்த விதிப்படி எவ்வாறு நடந்தேறுகிறது என்றும் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
ஹோமியோபதி முற்றிலும் இயற்கை விதிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
மருந்து கொடுத்து நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் கலைகளில், பரினாம வளர்ச்சியில் ஹோமியோபதி உயர்ந்த இடத்தில் உள்ளது. ஹோமியோபதி மட்டுமே சரியான மருத்துவம். இதற்கு மேல் மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்த இன்னொரு மருத்துவம் வருவதற்கு வாய்ப்பில்லை.
அப்படி என்றால் ஹோமியோபதியின் சாரம் என்ன?
1. மனிதனை, நோயை மற்றும் குணமாக்கலை முழுமையாகப் பார்த்தல் ( wholism).
2. துயரரைத் தனித்துவப்படுத்துதல் ( individualisation).
3. உயிராற்றல்.
4. மருந்துகளை நிரூபணம் செய்தல்.
5. மருந்துகளை வீரியப்படுத்துதல்.
6. துயரருக்கு ஒரு வேளைக்கு ஒரு மருந்து மட்டுமே கொடுத்தல்.
7. மியாசம்.
8. ஒத்தது ஒத்ததோடு செயல்படும்.
9. ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்.
10. குணமாக்கல் என்ற உயர்ந்த குறிக்கோள்.
ஹோமியோபதி இயற்கை விதிப்படி செயல்புரிகிறது என்று கருதுவோமேயானால், மேற்கூறிய சாரங்கள், இயற்கை விதியோடு இணைந்து போகிறதா? அப்படியென்றால், இயற்கை விதி என்றால் என்ன? இயற்கை விதி எப்படி இருக்க வேண்டும்?
இயற்கை விதி என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும்? டேவிஸ் மற்றும் பெயின்மேன் என்ற தத்துவ இயலாளர்கள் சேகரித்த விவரங்கள்.
1. இது உண்மையானது என்றும் மாறாதது, திரும்பத் திரும்ப ஒரு போதும் ஒன்றேபோல நிகழாதது.
2. இது அகில முழுமைக்கும் உடையது. இது அகிலத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
3. இது எளிமையான, கணக்குச் சூத்திரம் போல அறுதியானது, எளிமையானது.
4. இது முழுமையானது. இந்தப் பிரபஞ்சத்தால் எந்த ஒன்றாலும் மாற்ற முடியாதது.
5. இது நிலையானது. இது எந்தச் சூழலிலும் மாறாது நிறைந்திருப்பது.
6. வரம்பில்லா ஆற்றல் உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இத்துடன் இணங்கிப் போகும்.
7. இது ஆதி முதல் இன்று வரை இருந்து வருவதுடன் என்றும் இருப்பது.
8. இது காலத்தாலும், இடத்தாலும் மாறாதது.
9. காலத்தாலும் திரும்பி மாற்ற முடியாதது.
மேற்கூறிய டேவிஸ் (davis) மற்றும் பெயின்மேன் (feynmann) சேகரித்த விபரங்கள் இயற்கை விதியின் முக்கியத்துவத்தை உணரச் செய்கின்றன.
இயற்கை, உயிர்கள் அதிலும் குறிப்பான மனிதன் மற்றும் சமூகம் அனைத்தும் இயங்குகின்றன. அவை அனைத்தும் ஒரு விதியின் கீழ் இயக்கியது, இயக்குகிறது, இயங்கும். அந்த விதியே இயற்கை விதி.
இப்போது இந்த ஹோமியோபதி இயற்கை விதிகள் எப்படிப் பொருந்துகிறது என்று பார்ப்போம். இந்த விதிகளின் மூலம் ஹோமியோபதியை செழுமைப்படுத்த உள்ள வாய்ப்புகளை ஆராய்வதே நமது நோக்கமாகும்.
இந்த இயற்கை விதிக்கென்று வரலாறு இருக்கிறது. இது வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு நபர்களால், வெவ்வேறுவிதமாகக் கூறப்பட்டது. இவற்றில் நான் எதை சரியானது என்று அறிந்துணர்ந்தேனோ அதையே இங்கே சுருக்கமாக விளக்கி ஹோமியோபதிக்கும், அதற்கும் உள்ள ஒற்றுமையையும், அங்கே சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற கருதுகோள்களையும் விளக்க முயற்சிக்கின்றேன்.
இயற்கை விதிகளிலும், கோட்பாடுகளிலும் மற்றும் கருதுகோள்களிலும் உள்ள முக்கியமான பகுதிகளைச் சொல்லி, அவைகளுக்கும், ஹோமியோபதிக்கும், அதிலும் குறிப்பாக ஆர்கனானுக்கும் உள்ள தொடர்பை விவரிக்க முயற்சிக்கின்றேன்.
*****
இயற்கையின் மெய்ம்மை
*****
""""இயற்கைத் தத்துவம் ஒரு போதும் தேக்கத்தையோ, அல்லது வரையறையோ ஏற்றுக் கொள்வதில்லை. இதன் நோக்கமோ, பிரபஞ்சத்தின் சாரத்தை உணர்ந்து அதிலும், அதில் மனிதனுடைய பங்கை அறிவதும், அதிலிருந்து மனிதனுக்கான சாரத்தை உணர்வதும்தான்.""
இது மிகவும் சரியானதே. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. எதுமே பிரபஞ்பத்தில் நிநைறவடைந்து இல்லை. ஆகையால் ஹோமியோபதி ஒப்பற்ற மருத்துவம் என்றால் அதை அனைத்து வகையிலும், அனைத்து உயிர்களுக்கும் அனைத்து காலத்துக்கும், அனைத்து இடத்துக்கும், அனைத்து நோய்களுக்கும் தீர்வளிப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைய நிலையில் அப்படி இல்லை என்பதுதான் உண்மை. டாக்டர் ஹானிமன் அவர்கள் அவர் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து ஹோமியோபதியை வளர்த்து மனித சமூகத்தின் நலனுக்கு உகந்தளித்திருக்கிறார். அவர்கள் அறிந்த உண்மைகளை ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் இறுதியாகக் கூறியிருக்கிறார்.
இன்றைய நிலையில் அது போதுமானதாக இல்லை. இயற்கைத் தத்துவத்தின்படி எதுவுமே முடிவுற்றது இல்லை. முழுமையடைந்ததும் இல்லை. ஆகவே ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் ஹானிமன் கூறியவையே முடிந்த முழுமையானது என்று எண்ண வேண்டாம். அவ்வாறு நினைப்போமானால் நாம் இயற்கைக்கு எதிராக இருக்கின்றோம்.
ஆகவே, ஆர்கனான் 6-ஆம் பதிப்பின் மேன்மையைக் கண்டு அதை இன்னும் அறியாத மக்களுக்கும் ஹோமியோபதியருக்கும் விளங்கவைக்கும் அதே வேளையில் அதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு, நாம் பொறுப்போடு செயல்பட்டால்தான், நாம் இயற்கைக்கும், டாக்டர் ஹானிமன் அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல, ஹோமியோபதியை தேக்கத்திலிருந்து ஏன் அதன் அழிவிலிருந்து மீட்டு எடுப்போம்.
""""இயற்கை ஆற்றலின் உயிர் மையம் எதில் அடங்கியிருக்கிறது என்றால், இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் சாரத்தை உணர்ந்தறிவது. இதுவே வேறுபாடுகளாகத் தெரிகின்ற பிரபஞ்ச முழுமையை ஆய்வு செய்வதற்கான ஆரம்பப் புள்ளி"".
இது ஹோமியோபதிக்கு மிகவும் முக்கியமானது. ஹோமியோபதி மருத்துவரின் உயரிய நோக்கமாகிய முறைநிறை நலத்திற்கு துயரரைக் கொண்டு வருவதற்கு, மிகவும் அவசியமானது, முதலில் அவர் மனிதனின் சாரத்தை அறிய வேண்டும், நோயின் சாரத்தை அறிய வேண்டும். மருந்தின் சாரத்தை அறிய வேண்டும். இவ்வாறு சாரத்தை அறிவதுதான் ஹோமியோபதி. துயரரின் சாரத்தை அறிந்து, அதற்கு ஒத்த மருந்தின் சாரத்தைக் கொடுக்கும்போதுதான் நம்முடைய குறிக்கோள் நிறைவேறும்.
இதைத்தான் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் 6-ஆம் பதிப்பின் மணிமொழி 3-இல் """"நோயில் குணப்படுத்த வேண்டியது எது? மருந்தில் குணப்படுத்த வேண்டியது எது? "" என்று மருத்துவர் அறிய வேண்டும் என்கிறார்.
மணிமொழி 20-இல் ஆரோக்கியமான மனிதனிடத்தில் நோயை ஏற்படுத்துவதும், நோயுற்ற மனிதனிடத்தில் நோயைத் தீர்ப்பதும் மருந்துகளின் அகநிலைச் சாரம்தான் என்பதை வலியுறுத்துகிறார்.
மேலும் டாக்டர் ஹானிமன் அவர்கள் மணிமொழி 11, 18, 148 இன்னும் பல மணிமொழிகளில் மனிதனில் நோயுறுவது மனிதனின் (உயிர்சாரம்) உயிர்ப் பண்புதான் என்று கூறுகிறார்.
இயற்கையை அறிதல் என்பது ஒவ்வொன்றின் சாரத்தை அறிவதிலிருந்து தொடங்குகிறது என்பது மற்ற மருத்துவங்களுக்கு ஒரு போதும் பொருந்தாது. ஹோமியோபதிக்கு மட்டுமே பொருத்தமானது.
அறிதல் என்ற கோட்பாடு சாரத்தை உணர்தல் என்ற இயற்கைத் தத்துவம் ஹோமியோபதியில் சிறப்பாக கையாளப்படுகிறது.
""""இயற்கையை அறிவதற்கு அமைப்பு முறையாக, அறிவியல்பூர்வமாக வகைப்படுத்துதல் வேண்டும். வகைப்படுத்துவதால் அறிதல் சுலபமாகும். வகைப்படுத்தித் தனித்தனியாக நாம் பார்த்தாலும், எல்லாமே முழுமைக்கான சாரத்தில் இருதுக்கின்றன "".
இது இயற்கை அறிதல் முறையைப் பற்றியது. ஹோமியோபதியில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
மருத்துவத்தில், நோயில், சாரத்தை அறிவதும் மற்றும் மருந்தின் சாரத்தை அறிவதும்தான் பிரதானமானது என்றாலும், வகைப்படுத்துதல் அவசியமானது.
மற்ற துறை மருத்துவங்களில் கூட்டு மருந்துகள், கலவை மருந்துகள் என்று கொடுக்கப்படும்போது, ஹோமியோபதியில் மட்டும் ஒரு தனிப்பொருளை, தனி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. தனிப் பொருளைக் கொடுத்தாலும், இயற்கையில் உள்ள பொருள்களைக் கொடுத்தாலும், இயற்கையில் உள்ள பொருள்களை வகைப்படுத்துதல் செய்யப்படுகிறது.
1. தாவர இன மருந்து (plant kingdom)
2. விலங்கின மருந்து (animal kingdom)
3. கனிம இன மருந்து (mineral kingdom)
4. ஆற்றல் வகை மருந்து (imponderables,energy forces)
5. நோய்ப் பொருள் மருந்து (nosodes)
மற்றும்
6. உடலுறுப்பு மருந்து (sarcodes)
என வகைப்படுத்தி அறிதலை எளிமையாக்கி மருந்துகளின் சாரத்தை அறிந்து ஒரு மருந்தை தேர்வு செய்கிறோம்.
அதேபோல நோய் என்பதை மூன்று மியாசங்ககளாக வகைப்படுத்துகிறோம். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்தாலும், மொத்தத்தில் அவை அனைத்தும் உயிர்ப் பண்பின் பாதிப்பு என்பதை நாம் அறிகிறோம்.
ஹோமியோபதியும் இயற்கையை அறிவது போல வகைப்படுத்தி ஆய்வு செய்து அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
பருப்பொருளே கரு மூலமாக சர்வப் பொதுவாக இருக்கிறது.
""""மனித அறிவுக்கு வெளியே புற உலகம் இருக்கிறது. புற உலகம் பருப்பொருளின் பல தோற்றங்களால் ஆனது "".
பல தோற்றங்களும் வடிவங்களும் அடிப்படை மூலக்கூறான ஒன்றால் ஆனவே. இந்தப் பிரபஞ்சம் முழுவதுக்கும் உள்ள அனைத்துக்கும் ஆதிமூலமாகப் பருப்பொருள் இருக்கிறது. புலன்களால் அறியப்படாததாக இருந்து கொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் இருந்து கொண்டு, பிரபஞ்ச முழுமைக்கான சாரமாக இருக்கிறது "".
""""இந்த ஆதி மூலப் பொருள் ஆற்றலாக, மின்காந்தப் புலமாக இருக்கிறது "".
""""அனைத்து வடிவங்களும், தோற்றங்களும் இதனால் ஆனவையே "".
""""எந்தப் பருப்பொருளால் ஆன ஒரு பொருளை எவ்வளவு பகுத்தாலும், அழிக்க முடியாது "".
""""பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் ஆற்றலின் வடிவங்கள்தான். ஆகவே ஆற்றலை அழிக்கவும் முடியாது. ஆக்கவும் முடியாது. ஆனால் மாற்ற முடியும். ஆகையால் பொருளையும் ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது "".
மேற்கூறிய அனைத்தும் இயற்கைத் தத்துவத்திலிருந்து எடுத்தவைதான்.
ஹோமியோபதி மருத்துவம் சுருக்கமாகச் சொன்னால் மூன்று ஆற்றல்கள் பற்றி கூறக்கூடிய மருத்துவ முறை.
மனிதன் உயிராற்றலால் ஆனவன். அவன் நோயுறுவதற்கு முன்பாக முதலில் நோயுறுவது அவனுடைய உயிராற்றல்.
இவ்வாறு அவனுடைய உயிராற்றலை நோயுறச் செய்வது, அவனுக்கு புறத்தே இருக்கின்ற நோயாற்றல்.
நோயுற்ற உயிராற்றலை சீர் செய்வதற்கு மருந்தாற்றல் பயன்படுத்தப்படுகிறது.
ஆக ஹோமியோபதி என்ற இந்த மூவகை ஆற்றலைப் பற்றி அறிவதுதான் என்றால் மிகையாகாது.
பருப்பொருளின் சர்வப் பொதுத் தொடர்பும் இடைவுறவும்
""""இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் தனித்தனியாக இருப்பது போலத் தோன்றினாலும், தனித்தனியாக இருக்கவில்லை. அவை பிரபஞ்ச முழுமையின் பகுதிகளாகவே இருக்கின்றன. அவை ஆதிமூலத்தின் தோன்றல்கள். ஆகையால் முழுமையின் பகுதிகளாக இருப்பது மட்டுமே சாத்தியம் "".
""""ஆகையால் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொன்றோடும் தொடர்பு கொண்டுள்ளது. இடையுறவு கொண்டுள்ளது. அதனால் எந்த ஒன்றில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அது அனைத்துக்கும் போய்ச் சேரும் "".
""""ஒவ்வொரு பொருளும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருள்களோடும் இடைவிடாது இடையுறவு வைத்துக் கொண்டு இருக்கிறது. அதனால், தான் மட்டும் மாறுவது மட்டுமின்றி, அனைத்துப் பொருட்களிலும் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கிறது "".
""""இதிலிருந்து ஒன்றில் அல்லது ஓர் உயிரியில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அந்த மாற்றத்திற்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் காரணம் "".
இது இயற்கைத் தத்துவத்தின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
ஹோமியோபதியில் நோய் என்பது ஒரு மனிதனின் மனம் மற்றும் உடல் ஆரோக்கிய நிலையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆரோக்கிய நிலை மாற்றத்திற்கு புறத்தே இருக்கின்ற, தீங்கு விளைவிக்கின்ற மிகையாற்றல் என்று கூறப்படுகிறது (ஆர்கனான் மணி மொழி 16, 148) இங்கே பகையாற்றல் என்று கூறும்போது எது என்று சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்த மாற்றத்திற்கு பிரபஞ்ச முழுமையில் உள்ள அனைத்துமே காரணமாக இருக்கலாம். இதுதான் என்று சரியாக வரையறுக்க முடியாது.
அதனால்தான் டாக்டர் ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 1-இன் அடிக்குறிப்பின் நோய்க்கான காரணம் அறியப்படாமல் இருப்பதாகக் கூறுகிறார்.
நாம் காரணம் என்று கூறுவதெல்லாம் தூண்டு காரணமாக அல்லது உத்தேசமான காரணமாக இருக்குமேயொழிய மிகச் சரியான காரணம் காரணமாக இருக்க முடியாது. ஆகையால் விளைவாக வெளிப்படுகிற குறிகள் மற்றும் அடையாளங்களின் தொகுப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அனைத்துப் பொருட்களும், அனைத்துப் பொருட்களோடும் இடைவிடாத இடையுறவு வைத்திருப்பதால் அனைத்துப் பொருட்களிலும் ஏற்படும் மாற்றத்திற்கு அனைத்துமே காரணமாகிறது. இந்த இயற்கை விதிதான் ஹோமியோபதிப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையுமே மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்ற கருதுகோளுக்குக் காரணமாகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமே """"நோயாகவும் மருந்தாகவும்"" இருக்கின்றன.
வேறு எந்த முறையிலும் இவ்வளவு எளிமையாக மருந்துகளை வரையறுக்க முடியாது.
பருப்பொருள் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
""""இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பருப்பொருளால் ஆனது. அது எங்கிருந்தும் வந்ததும் இல்லை. அது வேறு எங்கும் போவதில்லை. ஆகவே அனைத்துக்கும் ஆதாரமாகவும், காரணமாகவும், மற்றும் தொடர் நிகழ்வாகவும் இருந்துகொண்டு இருக்கிறது. இதன் இருத்தலும் வேறு எந்த ஒன்றுக்கும் கடன்பட்டதில்லை "".
இந்த ஆதாரப் பொருள் எல்லா மாற்றங்களுக்கும் உட்பட்டது. அனைத்து உள்ளீடு மாற்றங்களுக்கும், மற்றும் அனைத்து மாற்றங்களுக்கும் ஆதாரமானது.
""""இந்தப் பருப்பொருளான பொருட்கள் இருத்தலுக்கான காரணமே அது அனைத்துடனும் சங்கிலித் தொடர் போல இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருள் அதன் வடிவம் அழியும்போது இன்னொரு வடிவமாக மாறுமேயொழிய அதை முற்றிலுமாக அழிக்க முடியாது"".
"""" பொருளை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது என்பது மிகவும் முக்கியமான கருத்து "".
""""ஒரு பொருளை அளவு ரீதியாகவும் அழிக்க முடியாது, பண்பு ரீதியாகவும் அழிக்க முடியாது ""..
மேற்கூறிய கருத்துகள் இந்தப் பிரபஞ்சம் அறாத் தொடர்ச்சியில் இருப்பதற்கான ஆதாரம்.
இதை ஹோமியோபதி மருத்துவத்தில் முக்கிய கருத்தாகக் கொள்ளலாம்.
ஒரு மனிதனின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் புலன்களுக்கு எட்டாத பருப் பொருள்தான். அந்த மூலப் பொருளே, சீராக இருந்து கொண்டு ஆரோக்கிய வாழ்விற்க்கு அடித்தளமாக உள்ளது.
இந்த ஒழுங்கு சீர்கெடும்போது ஆரோக்கியத்தில் மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றமே நோய்.
அந்த நோயைக் குணப்படுத்த எண்ணற்ற அளவு பகுத்தாலும் அழிக்க முடியாத ஒன்றின் ஒத்த ஆற்றலால்தான் முடியும்.
மேற்கூறிய முடிவுகளுக்கெல்லாம் டாக்டர் ஹானிமன் அவர்கள் வரவேண்டுமென்றால், நிச்சயமாக டாக்டர் ஹானிமன் அவர்களுக்கு இயற்கை தத்துவத்தைப் பற்றிய புரிதல் இருந்திருக்க வேண்டும்.
இந்த ஆற்றல் அழியாக் கோட்பாடே ஹோமியோபதியின் அடிநாதமாக இருக்கிறது. (முநல nடிவந) இந்த இயற்கை உண்மையை உணர்ந்தவர்கள்தான் ஹோமியோபதியை உணர்ந்து கொள்ள முடியும்.
பருப்பொருளின் இயக்கம்.
""""பருப்பொருளின் இருத்தலே அதன் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த உலகமானது இடைவிடாது ஒருங்கிணைந்து கொண்டும் மற்றும் உருச்சிதைந்து கொண்டும் இருக்கிறது. அது எவ்வளவுதான் மாறினாலும், சிதைந்தாலும், அதை அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது. இந்த இடைவிடாத மாற்றமும், ஒருங்கைணிப்பும், உருச்சிதைவும், நிலையான இடையறாத இயக்கத்தினால்தான் நடந்தேறுகிறது. இவ்வாறு ஏற்படும் இயக்கத்திற்கு வெளியிலிருந்து எந்த ஒன்றும் தூண்டவில்லை. அதற்கான காரணம் உள்ளார்ந்து அதைச் சார்ந்ததாக இருக்கிறது "".
இவ்வாறுதான் இயற்கை விதி பருப்பொருள் இயக்கம் பற்றி கூறுகிறது.
ஆகவே, மனித இனம் இடைவிடாது இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கிறான். அவனில் ஏற்படும் எந்த மாற்றத்திற்கும் அவனுக்குள் அதற்கான காரணி இருக்கிறது. இதை ஹோமியோபதி ஏற்றுக் கொள்கிறது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதும், நோயுறுவதும் அவனில், அவனுள் உள்ளார்ந்து அனைத்துக்கும் காரணமான உயிர்ப் பண்புதான் காரணம் என்பதை ஹோமியோபதி கூறுகிறது. (ஏவையட ஞசinஉiயீடந) அவனுடைய ஆரோக்கியமான மாற்றமும் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பபட்ட நோயுறு மாற்றமும் அவனுடைய அகநிலைச் சாரத்தைப் பொறுத்தே இருக்கிறது என்று ஹோமியோபதி கூறுகிறது.
ஒரு மனிதனுடைய ஆரோக்கியமும், நோயும் அவனுடைய இயக்கத்தைப் பொருத்தே அமைகிறது.
""""ஒரு பொருளின் இயக்கத்தை அறிய வேண்டுமென்றால், அந்த பொருளோடு தொடர்புடைய மற்ற பொருள்களின் இயக்கத்தோடும் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டும் "".
ஒரு மனிதனில் ஏற்பட்ட மாற்றத்தை அறிவதற்கு, அவனோடு தொடர்புடைய அனைத்தைப் பற்றியும் அறிய வேண்டிய அவசியத்தை டாக்டர் ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணி மொழி 5 மற்றும் 208 ஆகியவற்றில் கூறுகிறார்.
எனவே, ஒரு மனிதனில் ஏற்படும் மாற்றம் அவனுடைய இயக்கத்தைப் பொறுத்தும், இடையுறவைப் பொறுத்தும் அமைகிறது என்பதுதான் உண்மை. இந்த எளிய உண்மையை உரைப்பது இயற்கைத் தத்துவம்தான்.
""""ஒரு பொருள் எவ்வளவுதான் மாற்றம் ஏற்பட்டாலும் அதன் அடிப்படைப் பண்பை அது ஒருபோதும் இழக்காது. அது இருக்கும் வரை அந்தப் பண்பு அதனோடு இருக்கும் "".
இந்த இயற்கைக் கோட்பாடு, எவ்வளவு உண்மை என்பதை ஹோமியோபதி உணர்த்துகிறது.
இயங்கும்போது ஆற்றல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு பொhருளும் ஆற்றலின் வடிவங்கள்.
ஹோமியோபதியில் ஒரு மருந்தை வீரியப்படுத்தும்போது அதை எல்லையற்ற அளவு பகுத்தாலும் அது அதனுடைய அடிப்படைப் பண்பை ஒரு போதும் இழப்பதில்லை என்ற உண்மையை ஹோமியோபதி உரைக்கின்றது.
பருப்பொருளுக்கும், இடம் மற்றும் காலத்துக்கும் உள்ள தொடர்பு.
""""இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் காலத்தோடும், இடத்தோடும் தொடர்பு உடையதாக இருக்கிறது "".
ஒரு பருப்பொருள் மட்டுமல்ல, எண்ணங்களும், உணர்வுகளும் கூட வெளியோடும், காலத்தோடும், இயக்கத்தோடும் தொடர்புள்ளது "".
இதை டாக்டர் ஹானிமன் அவர்கள் சரியாக உணர்ந்துள்ளார்.
ஹோமியோபதியில் இந்த விதி மிகவும் சரியாகவே கையாளப்படுகிறது. ஒரு மனிதனின் ஆரோக்கிய நிலை இடத்தோடும், காலத்தோடும், இயக்கத்தோடும் தொடர்பு உள்ளதாக இருக்கிறது. அதேபோல் ஒருவன் நோயுற்ற நிலையிலும் அவன் இடத்தோடும், காலத்தோடும் மற்றும் இயக்கத்தோடும் தொடர்புள்ளவனாக இருக்கின்றான்.
ஒருவனுடைய நோயானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது.
ஒருவருடைய செயற்பாட்டோடு தொடர்புடையது.
அவனுடைய இருத்தலோடு தொடர்புடையது.
அவனுக்கும் புற உலகத்திற்க்கும் உள்ள தொடர்போடு தொடர்புடையது.
ஹோமியோபதியில் இந்த தொடர்பினால் ஏற்படும் மாற்றங்களை மாறுமைகள் (ஆடினயடவைல) என்று குறிப்பிடுகிறார்கள்.
டாக்டர் ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 18-இல் ஒட்டு மொத்தக் குறிகளோடு மாறுமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி கூறுகின்றார்.
இதுபோல் மணிமொழி 7-இல் நோயுறு குறிகளோடு அத்துடன் இணைந்துள்ள சூழலையும் கவனிக்கச் சொல்கிறார்.
மருந்துகளை நிரூபணம் செய்யும்போது, ஆரோக்கியமான மனிதனின் உடலிலும், மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் குறிகளை வெளிப்படுத்துகின்றன. ஆர்கனான் மணிமொழி 133-இல் இது தொடர்பாகக் கூறியுள்ளார். நிரூபணத்தில் வெளிப்படும் குறிகளுக்கும் மாறுமைகளுக்கும் உள்ள தொடர்பை மிகச் சரியாகக் கண்டுணர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
ஆக, இயற்கை விதியின்படி, ஒவ்வொரு உயிரும் எந்நிலையிலும், இடத்தோடும், காலத்தோடும் தொடர்பு கொண்டவை என்பதை டாக்டர் ஹானிமன் அவர்கள் மிகச் சரியாக உணர்ந்ததால், நோய்க் குறிகளுக்கு இடத்தோடும் மற்றும் காலத்தோடும் உள்ள தொடர்பை மாறுமைகளாகக் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்.
""""இயற்கையில் ஒவ்வொரு பொருளும் அல்லது ஒவ்வொரு உயிரியும் அதன் சாராம்சத்திற்கு ஏற்றார்போல இடத்தோடும், காலத்தோடும் தொடர்புள்ளதாக இருக்கின்றன "".
இதனால், நோயுற்ற மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு மாமறுமைகள் வெளிப்படுகின்றன. அது அவர்களுடைய தனித்தன்மையோடு சார்புள்ளவை. ஆகையால்தான் மாறுமைகள் ஒரு மனிதனைத் தனித்துவப்படுத்துவதில் தனித்துவமாக இருக்கின்றன.
இதன் அடிப்படையில் டாக்டர் போயனிங்ஹாசன் அவர்கள் மாறுமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.
உலகில் வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாhத அளவிற்கு ஹோமியோபதியில் மாறுமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் ஹோமியோபதி இயற்கை விதிகளின்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மனிதன் நோயுள்ள நிலையிலும், ஆரோக்கியமான நிலையிலும், இடத்தோடு முப்பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றான். அவனுடைய முப்பரிமான நிலையும் காலத்தோடு தொடர்புள்ளதாக இருக்கிறது. காலத்திற்கு ஒரு பரிமானம் மட்டுமே இருப்பதனால், அது ஒரு திசை வழியில் செல்கிறது. அதாவது கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் பின்னர் எதிர்காலத்திற்கும் சென்று கொண்டிருக்கிறது.
இதனடிப்படையில்தான் ஒருமனிதன் நோயுற்ற நிலையில் அவனுடைய கடந்த கால வரலாறு, அவனுடைய பெற்றோர்களுடைய வரலாறு மற்றும் மூதாதையர்களின் வரலாறு முதலியவற்றை காணும்படி ஹோமியோபதி வலியுறுத்துகிறது.
இதற்கெல்லாம் காரணம் ஹோமியோபதி. இயற்கை விதியாகிய காலத்திற்கும், இடத்திற்கும் மற்றும் பொருள்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மிகச் சரியாக அறிந்ததால்தான், ஹோமியோபதியில் ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்தி மருத்துவம் பார்க்க முடிகிறது.
பிரபஞ்சம் முழுமைக்கான இணைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய கோட்பாடு.
""""ஒவ்வொரு பொருளும் மற்றும் உயிரியும் முடிவற்ற வகையில் சங்கிலித் தொடர்போல் எல்லாவற்றோடும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், எல்லாப் பொருட்களும், எல்லாச் செயல்பாடுகளும் ஒரு தனி முழுமையாகத் தெரிகிறது. இதுதான் பிரபஞ்சம் முழுமைக்குமான பண்பாக இருக்கிறது. நாம் நமது சுண்டு விரலை அசைத்தால் கூட அந்த அசைவு பிரபஞ்சம் முழுமையிலும் பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு எல்லையற்ற அளவில் ஒரு வலைப்பின்னலாக அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன"". ஆனால் ஒவ்வொன்றுக்கான உட்தொடர்பும், இணைப்பும் முழுமையானது அதே சமயம் அவைகளின் சுதந்திரமும் ஒப்பீட்டு அளவிலானது.
இந்த இயற்கை விதி வேறு எதற்கும் பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் மருத்துவத்திற்கு மிகவும் சிறப்பாகப் பொருந்தும்
ஒரு மனிதன் அல்லது ஓர் உயிரியின் ஒட்டுமொத்த வாழ்வும் அனைத்தோடும் தொடர்புள்ளதாக இருக்கிறது.
எந்த ஒன்றில் என்ன நிகழ்ந்தாலும், அது அனைத்திற்கும் போய்ச் சேரும். அதுபோல் ஒன்றின் மாற்றத்தில் அனைத்திற்கும் பங்கு இருக்கிறது.
இது ஹோமியோபதியில் மிகவும் சரியாகக் கையாளப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியமும், நோயும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு துயரருக்கு அவன் வாழுகின்ற சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நாம் அவரை நலப்படுத்த முடியாது.
இதனடிப்படையில் துயரருக்கான குறிகள் சேகரிக்கும்போது புறநிலை முழுமைக் குறிகளையும் (ஞாலளiஉயட ழுநநேசயட) மற்றும் மாறுமைகளையும் கட்டாயமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம்.
இதற்கு அடிப்படை இயற்கை விதியை டாக்டர் ஹானிமன் அவர்கள் சரியாகப் பின்பற்றியதுதான்.
""""ஒன்றைப் பற்றியதான அறிதலுக்கு அத்தோடு தொடர்புடைய எல்லாவித இணைப்புகளையும் ஆய்வு பண்ணுவது என்பது தலையாய பணி "".
""""ஒரு பொருளின் (சாரத்தை) உண்மைத் தன்மையை அறிய வேண்டுமென்றால் முடிவான வழிமுறை இருக்கிறது. அதை எல்லாவகையிலும் ஆய்வு செய்ய வேண்டும், அதன் எல்லா உடனடி மற்றும் இடையீடான இணைப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதுதான் முறையான அறிவியல் ஆய்வு. இவ்வாறு பகுதி மற்றும் முழுமைக்கான இணைப்புகளைக் காண வேண்டும். இவ்வாறு உலகளவில் இணைப்புகளையும் மற்றும் குறிப்பாக அத்தியாவசியமான இணைப்புகளையும் நாம் கவனிக்கத் தவறும்போது, அது எடுத்துக் கொண்ட கொள்கைக்கும் மற்றும் பயிற்சிக்கும் பேரழிவாக முடியும் "".
இந்த இயற்கை விதி கூறும் ஆய்வு முறை ஹோமியோபதியில் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒருவருடைய நோயை அறிவதற்கும் மற்றும் துயரரை அறிவதற்கும் இது மிகவும் அத்தியாவசியமானது.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 5, 77, 78 மற்றும் 208 போன்ற மணிமொழிகளில் இந்த ஆற்றல் முறையை வலியுறுத்துகின்றார்.
வேறு எந்த மருத்துவ முறையிலும் இவ்வாறான அணுகுமுறையைக் காண முடியாது.
இதிலிருந்து நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம்மோடு தொடர்புடையவர்களை மட்டுமின்றி, அனைவரையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பருப்பொருள்களுக்கிடையேயான செயல்பாடு.
""""இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்பவை எல்லாம் பொருள்களுக்கிடையேயான இடைச் செயல்பாட்டின் விளைவே. இந்த இடைச் செயல்பாட்டின் விளைவால் பொருட்களுக்கிடையே பரஸ்பர மாற்றம் ஏற்படுகிறது "".
""""ஒரு பொருளின் பண்புகள் அது மற்றவற்றோடு கொண்டுள்ள இடைத் தொடர்பு மற்றும் இடையுறவு மூலம் மட்டுமே வெளிப்படுகின்றன"".
""""இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் இடைவிடாத சங்கித் தொடர் போன்ற இடையுறவு வைத்துக் கொண்டு இருக்கின்றன. அதனால் ஒவ்வொன்றிலும் ஏற்படும் விளைவுகளுக்கு அவைகளுக்கு இடையிலான இடையுறவே காரணமாக இருக்கிறது "".
""""பொதுவாக பொருட்களுக்கு இடையிலான இடையுறவுகளையும் அல்லது ஒரு பொருள்குள்ளான இடையுறவுகளையும் அறியாமல் நாம் ஒரு போதும் ஒரு பொருளின் பண்புகளையோ, வடிவங்களையோ, உண்மைக்கான விதிமுறைகளையோ அறிய முடியாது "".
இந்த இயற்கை விதி ஹோமியோபதியில் டாக்டர். ஹானிமன் அவர்களால் சரியாகவே பின்பற்றப்படுகிறது.
ஒரு மனிதனில் ஆரோக்கியம் என்பது அந்த மனிதனின் உறுப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த, ஒத்திசைந்த செயல்பாட்டைப் பொருத்தும், அந்த மனிதனுக்கும், புறஉலகத்திற்கும் இடையிலான செயல்பாட்டைப் பொறுத்தும் அமைகிறது.
அதேபோல் நோய் என்பது உயிர்ப் பண்புக்கும், நோய் ஆற்றலுக்கும் இடையிலான இடையுறவின் விளைவு.
நலம் என்பது, நோய் ஆற்றலுக்கும் மற்றும் மருந்தாற்றலுக்கும் இடையிலான இடையுறவின் விளைவு.
ஹோமியோபதியில் மருந்துகளை நிரூபணம் செய்யும்போது, மருந்துக்கும் மனிதனின் சாரம்சத்திற்கும் இடையிலான இடையுறவின் விளைவால்தான் மருந்துகளின் பண்பை அறிந்து கொள்ள முடிகிறது.
இடையுறவே பொருள்களின் பண்பை அறிய ஒரே வழி. ஆகையால்தான் மனிதனின் பண்பை அறிய அவனுக்கும் குடும்பத்திற்கும், அவனுக்கும் மற்ற உறவுகளுக்கும், அவனுக்கும் தொழிலுக்கும், அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் மற்றும் அவனுக்கும் அவனுடைய பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இடையிலான இடையுறவை அறிந்தால்தான் முடியும்.
ஆகையால் ஹோமியோபதியில் மனிதனின் ஆரோக்கியத்தை அறிவதற்கும், நோயை அறிவதற்கும், மருந்தின் குணப்படுத்தும் ஆற்றலை அறிவதற்கும் மற்றும் துயரரை அறிவதற்கும் இயற்கை விதியாகிய உலகளாவிய இடையுறவு என்ற விதி மிகவும் முக்கியமானது.
காரணக் காரியத் தொடர்புக் கோட்பாடு.
""""காரண காரியத் தொடர்பு என்பது நிகழ்வுகளின் தோற்றுவாயோடு இணைந்துள்ளது. ஒரு காரணம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு அளவிற்குக் காரணமாகிறது. அந்த விளைவு இன்னொன்றுக்குக் காரணமாகிறது. காரண காரியத்தின் சாரம் எப்போதும் பாரம்பரியத்தோடும் மற்றும் உறுதிப்பாட்டோடும் தொடாபுள்ளதாக இருந்து, ஒரு நிகழ்விலிருந்து மற்றொரு நிகழ்விற்குமாகத் தொடர்ந்து போவதில் அடங்கி இருக்கின்றது"".
இந்தக் காரணக் காரியத் தொடர்புக் கோட்பாடு என்ற இயற்கை விதி ஹோமியோபதியில் மிகவும் சரியாகப் பின்பற்றப்படுகிறது.
டாக்டர். ஹானிமன் அவர்கள் """"நாட்பட்ட நோய்கள்"" (chronic diseases) என்ற புத்தகத்தில் மியாசம் தொடர்பாகப் பேசுகிறார். அதில் சோரா என்ற மியாசம்தான் அனைத்து நோய்களுக்கும் தாயாக இருப்பதாகக் கூறுகிறார். அந்த சோராதான் மற்ற இரண்டு மியாசங்களுக்கும் (சைக்கோஸிஸ் மற்றும் சிபிலிஸ்) காரணம் என்று கூறுகிறார்.
ஒருவருடைய துயரை ஆய்வு செய்யும்போது, அப்போதுள்ள நோய்க் குறிகளை மட்டும் பார்த்தால் போதாது. அவருடைய கடந்த கால வரலாற்றையும், அவருடைய பெற்றோருடைய வரலாற்றையும், இதற்கும் மேல் அவருடைய பாராம்பரியத்தின் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.
மியாசம் கோட்பாடே காரண காரியத் தொடர்புக் கோட்பாடோடு தொடர்புடையது.
""""காரணக் காரியத் தொடர்பு காலத்தோடு தொடர்புடையது"".
""""காரணக் காரியத் தொடர்பு உலகளாவியது. பிரபஞ்சமயமானது"".
""""காரணக் காரியத் தொடர்பு முன்னோர் மற்றும் சந்ததிக்கான தொடர்போடு கூடியது"".
எந்த நோயும் அதற்கான முன்னோடியில்லாமல் தோன்றுவதில்லை. அதேபோல் ஒரு மனிதனுடைய ஆரோக்கியம் அவருடைய பாரம்பரியத்தோடு தொடர்புடையது.
ஒரு மனிதனுடைய எல்லாப் பண்புமே உயிரியில் பரிணாமத்தைச் சார்ந்ததாக உள்ளது.
இதை டாக்டர். ஹானிமன் முதல் தற்போதைய டாக்டர்கள் இராஜன்சங்கரன், பிரபுல் விஜயகர் வரை கவனத்தில் கொள்கிறார்கள்.
""""காரணக் காரியத் தொடர்பின் மிக முக்கியமான பகுதி என்பதே காரணம் மற்றும் காரிய இணைப்பு அறாத் தொடர்ச்சியானது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற இணைப்பு. இதற்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. இந்தச் தொடர்ச்சி முடிந்து போகாமல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். இது எங்கு தொடங்குகிறது மற்றும் எங்கு போய் முடிவடைகிறது என்று யாருமே சொல்ல முடியாது. இந்தக் காரணக் காரியத் தொடர்பு பிரபஞ்சம் போல ஒரு எல்லையற்ற ஒன்று"".
இந்த இயற்கை விதி ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறது. அதாவது ஒரு நோய்க்கான காரணத்தை யாரும் அறுதியிட்டுக் கூறு முடியாது. ஆகையால் காரணம் எதுவாக இருந்தாலும் குறிகளும் அடையாளங்களும் வெளிப்பட்டே தீரும். ஆகையால் அதைத் தொகுத்து அதற்குண்டான மருந்தைத் தேர்வு செய்வதே எதார்த்தமானது என்ற உண்மையை டாக்டர். ஹானிமன் அவர்கள் நன்கு அறிந்திருந்தார். ஆர்கனான் மணிமொழி 7-இல் எந்தத் தூண்டு காரணத்தையும் நீக்க வேண்டிய அவசியமில்லை. குறிகளின் தொகுப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மருந்து கொடுத்தாலே போதும் என்பiதை வலியுறுத்துகின்றார்.
""""காரண காரியத்திற்கான இடையுறவு என்பது பெறுதல், கொடுத்தல் (குநநன யெஉம) கோட்பாட்டோடு தொடர்புடையது"".
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் மன நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பது தொடர்பாக ஆர்கனான் மணி மொழி 215 மற்றும் 216-இல் கூறுகிறார்.
உடல் நோயானது ஒரு கட்டத்தில் அப்படியே மன நோயாக மாறுவதும், அப்படி மன நோயானது உடல் நோய்க்கான காரணமாக மாறுவதை மிக அழகாக விவரிக்கின்றார்.
""""ஒரு விளைவு எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காரணங்களின் இடையுறவின் செயல்பாட்டில் வெளிப்படுகிறது. ஒன்றில் ஏற்படும் விளைவாக ஏற்படும் நிகழ்வு எப்போதுமே அந்தப் பொருளின் இயல்பையும் மற்றும் வெளிப்புறக் காரணியையும் பொறுத்தது"".
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 31-இல் சிறப்பாகவே பின்பற்றுகிறார்.
நோயை ஏற்படுத்துகின்ற பகையாற்றலில் பகுதி மனம் சார்ந்ததாகவும், பகுதி உடல் சார்ந்ததாகவும் இருக்கிறது. இவை ஒரு மனிதனை நிபந்தனையற்று நோயடையச் செய்வதில்லை. அவை அவனிடத்தில் அவனுடைய சுபாவம் அனுமதித்தால் மட்டுமே நோயை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர்.ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் இந்த விதியை எந்த அளவிற்குச் சரியாக உணர்ந்துள்ளார் பாருங்கள்.
""""காரண காரியத் தொடாபில், எந்த ஒன்றுமே செயலற்றதாக இருப்பதில்லை. அது எப்போதுமே அகநிலைச் செயல்பாட்டோடு கூடியதுதான். ஆகையால் ஒரு காரணம் அதில் ஒரு விளைவை ஏற்படுத்தும்போது அது அதனுடன் கூடிய இடையுறவுச் செயல்பாட்டின் விளைவாக எதிர்வினை புரிவதாக இருக்கும்"".
இந்தக் கோட்பாட்டை மருந்துகளை ஆரோக்கியமான மனிதனிடத்தில் நிரூபணம் செய்யும்போது விளக்குகிறார்.
ஆர்கனான் மணிமொழி -112-இல் மருந்துகளின் முதல்நிலைச் செயல்பாடு மற்றும் இரண்டாம் நிலைச் செயல்பாடு குறித்துப் பேசுகிறார். (ஞசiஅயசல யஉவiடிn யனே ளுநஉடினேயசல யஉவiடிn) இதில் மருந்தானது, உயிர்ப் பண்பின் மீது வினைபுரியும்போது வெளிப்படுவது முதல்நிலைச் செயல்பாடு. மனிதனின் உயிர்ப் பண்பானது மருந்தின் மீது எதிர்வினை புரிவது இரண்டாம் நிலைச் செயல்பாடு.
ஒரு மனிதனில் மனத்தின் செயல்பாடு, சுற்றுப்புறச்சூழல் மற்றும் மூளையின் சாம்பல்நிறப் பொருளின் இடையுறாச் செயல்பாட்டின் விளைவே என்று இயற்கைத் தத்துவம் கூறுகிறது.
இதனால்தான் டாக்டர். ஹானிமன் ஒரு துயரரின் மனநிலை மற்றும் சுபாவத்தைப் பிரதானமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி ஆர்கனான் மணிb மாழி 210, 211, 212, 213 மணிமொழிகளில் கூறுகிறார்.
மனக்குறிகள் எப்போதும் புறநிலை எதார்த்தத்தையும் மற்றும் அகநிலைச் சாரத்தையும் சார்ந்தது என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஆகவேதான், ஹோமியோபதியில் ஒரு மனிதனின் சாரத்தை வெளிப்படுத்துகிற மனக்குறிகளை மட்டும் கருத்தில் கொண்டு மருந்து தேர்வு செய்து கொடுக்கும்போது பல துயரர்க்ள் மிகவும் விரைவாகவும், இதமாகவும் மற்றும் நிரந்தரமாகவும் குணமாவதைப் பார்க்கிறோம்.
""""இயற்கை ஒரு காரணம். பல விளைவுகளுக்கு காரணமாகிறது. அதேபோல் பல காரணங்கள் சேர்ந்து ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், ஒரு காரணம் அந்த ஒன்றின் சாரத்தை மட்டும் பொருத்ததாக இல்லாமல், அது வினைபுரியும் பொருளின் சாரத்தைப் பொருத்ததாக இருக்கிறது"".
இயற்கையில் இந்த விதி மிகவும் முக்கியமானது. எந்த விளைவும் எப்போதும் சாரத்தோடு தொடர்புடையது.
மருந்துகளை நிரூபணம் செய்யும்போது, ஒரே அளவான மருந்து எல்லோரிடமும் ஒன்றுபோல் குறிகளை வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் நிரூபணம் செய்யும் மருந்தின் சாரம் ஒன்றாக இருந்தாலும், அது வெவ்வேறு சாரத்தோடு கூடிய மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவதால், எல்லோரிடத்திலும் ஒன்று போல் குறிகளை வெளிப்படுத்துவதில்லை. இதை ஆர்கனான் மணிமொழி 116 மற்றும் 117-இல் கூறுகிறார்.
இந்த இயற்கைத் தத்துவம் வேறொரு உண்மையும் கூறுகிறது. ஒத்ததோடு ஒத்ததுதான் செயல்படும் என்று கூறுகிறது.
ஆற்றலோடு ஆற்றல்தான் வினைபுரியும். அதேபோல் சாராம்சத்தோடு சாராம்சம்தான் வினைபுரியும்.
""""ஒரு விளைவுக்குப் பல காரணங்கள் இருப்பதாலும், அதில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே முக்கியமான காரணங்களாக இருக்கும்"".
இது ஆர்கனான் 31-ஆம் மணிமொழி இதைத்தான் வலியுறுத்துகின்றது.
ஒரு மனிதனில் நோய் உருவாவதற்கு, மனம் சார்ந்த காரணம், புறம் சார்ந்த காரணம் மற்றும் அந்த மனிதனுடைய சுபாவம் முதலியவை காரணங்களாக இருந்தாலும், அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது அந்த மனிதனுடைய சாரம்சத்தோடு கூடிய சுபாவமே.
""""ஒரு உயிரியில் ஏற்படும் வினைக்கு அகநிலைக் காரணம் மற்றும் புறநிலைக் காரணங்கள் காரணங்களாக இருந்தாலும், அகநிலைக் காரணம் அத்தியாவசியமானதாக இருக்கும். புறவயக் காரணம் அவசியமானதாக இருக்கும். ஆனால் புறவயக் காரணம் அந்த உயிரியின் ஆளுமையிலிருந்து சுதந்திரமாக இருக்கிறது.
ஹோமியோபதியில் அகநிலை முதன்மை முழுமைகள் (ஆiனே ழுநநேசயட) புறநிலை முதன் முழுமைக் குறிகள் காரணங்களாக இருந்தாலும், இவற்றில் அகநிலை முதன்மை முழுமைக் குறிகளே தீர்மானகரமானது (ஆர்கனான் மணிமொழி 211).
சிலக்காரணங்கள் உடனடியாக விளைவை ஏற்படுத்துவதில்லை. அதற்கான சரியான சூழல் வரும்போது மட்டுமே விளைவு ஏற்படும்.
இது காரண காரிய விதிகளில் மிகவும் முக்கியமானது.
ஒருவர், ஏதாவது ஒரு காரணத்தினால் மனம் புண்பட்டுப் போனால், உடனடியாக அதன் விளைவு உடம்பில் தெரிவதில்லை. சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து கூட சரியான சூழல் ஏற்படும்போது அவரிடம் நோய்க்குறிகளாக வெளிப்படும்.
""""காரண காரிய விதியில் சூழல் மிகவும் முக்கியமானது. சில சமயங்களில் சூழலே காரணம் போலத் தெரியும். ஆகையால், காரணம் மற்றும் சூழல் ஒருவிளைவுக்கு அடித்தளமாக இருக்கின்றது"".
ஹோமியோபதியில் இந்த விதி மியாசம்கோட்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோரா மியாசத்தில் முதன்மைக் குறிகள் அழிக்கப்பட்டபின்பு, அந்த சோராவானது மறை நிலைக்குச் சென்று மையத்தில் அமைதியாக இருக்கிறது. அதுவே 80ரூ நோய்களுக்கு காரணமாகிறது. ஆனால் மறைநிலையில் (டுயவநவே ளுவயவந) இருந்து கொண்டு சரியான தருணத்தில் எண்ணிறந்த இரண்டாம் நிலைக் குறிகள் வரக் காரணமாகின்றன.
""""முடிவாகக் காரண காரியத் தொடர்புகள் எல்லையற்றது. பல சமயங்களில் காரணம் அறியப்படாமலே இருக்கிறது. இந்நிலையில் செயல்பாட்டு நிலையில் இருந்து ஆய்வைத் தொடங்கலாம்"".
ஹோமியோபதியில் நோய்க்கான காரணம் அறியப்படாமல் இருக்கிறது.
காரணம் காரியத் தொடர்பு எல்லையற்றது. அதனால் குறிப்பிட்ட காரணத்தை வரையறுப்பது என்பது சரியாக இருக்காது.
ஹோமியோபதியில் நோயான உயிர்ப் பண்பு பாதிப்பதால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அது சூட்சுமமானதாக உணரப்படுகிறது அதனால் அதைப் பாதிப்பை அடையச் செய்யும் காரணத்தையும் அறுதியிட்டுக் கூறு முடியாது. ஆகையால், அந்த பாதிப்பால் வெளிப்படும் குறிகளின் தொகுப்பே நோயாகக் கருதப்படுகிறது.
ஆக, இயற்கை விதியாகிய காரண காரியத் தொடர்புக் கோட்பாடு மிகவும் சரியாக ஹோமியோபதியில் நடந்தேறுகிறது. இதை வைத்தே ஹோமியோபதி எந்த அளவிற்கு உண்மையானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
*****
அமைப்பு முறை மற்றும் வடிவமைப்பு பற்றிய கோட்பாடு
*****
""""அமைப்பு முறை (ளுலளவநஅ) அகநிலையாக உள்ள பல பகுதிகள் இணைந்த முழுமை. அந்தப் பகுதிகள் ஒருங்கிணைந்து உண்டானதுதான் வடிவமைப்பு"". (ளுவசரஉவரசந)
""""இந்த அமைப்பு முறையானது ஒரு குறிப்பிட்ட பணியின் பொருட்டு பகுதிகள் இணைந்து அமைக்கப்பட்டது. அந்தப் பணியின் தன்மைக்கேற்றார்போல் பகுதிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்திக் கொண்டதுதான் வடிவமைப்பு. பணியில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுமானால், அது காலப்போக்கில் வடிவமைப்பில் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்"".
""""ஒரு உயிரியில் எந்த அமைப்பு முறையும் தனித்து இயங்குவதில்லை. மற்ற அமைப்பு முறையோடு ஒருங்கிணைந்ததாகத்தான் இருக்கிறது. ஒரு அமைப்பு முறையுடைய செயல்பாடு மற்ற அமைப்பு முறைகளுடைய செயல்பாட்டோடு ஒப்பீட்டு அளவில் தொடர்புள்ளதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது"".
""""ஒரு அமைப்பு முறை மற்ற அமைப்பு முறைகளோடு இணைந்து ஒட்டு மொத்த முழுமையை உருவாக்குகிறது"".
""""ஒரு அமைப்பு முறை ஒட்டு மொத்த முழுமையின் சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இல்லையேல் அது ஒட்டுமொத்த முழுமையின் பகுதியாக இருக்க முடியாது"".
""""ஒரு அமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்ற அமைப்பு முறைகளோடு தொடர்பு உடையதாக இருக்கும்"".
இவையெல்லாம் அமைப்பு முறை மற்றும் வடிவமைப்பு தொடர்பான இயற்கை மெய்ம்மைகள்,. இது மருத்துவத்திற்கு முக்கியமானது. குறிப்பாக ஹோமியோபதிக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹோமியோபதி மனிதனை தனித்தனி அமைப்பாக பார்ப்பதில்லை. எந்த அமைப்பில் என்ன நிகழ்ந்தாலும், அது முழுமையின் பிரதிபலிப்பாக ஹோமியோபதி கருதுகிறது.
முழுமை மற்றும் பகுதி பற்றிய கோட்பாடு
இயற்கைத் தத்துவத்தில் முழுமை மற்றும் பகுதி பற்றிய கோட்பாடு மிகவும் முக்கியமானது.
""""முழுமை மற்றும் பகுதிகள் ஒன்றையொன்று தழுவியதாக இருக்கின்றன. முழுமையும் மற்றும் பகுதியும் ஒன்றையொன்று தொடர்போடு இருக்கும்போது மட்டும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. முழுமை பகுதிகள் இல்லாhமல் இருக்க முடியாது. அதேபோல முழுமையற்று பகுதிகளால் இருக்க முடியாது. எவ்வளவுதான் மிகச் சிறிய பொருளாக இருந்தாலும், அது அதன்மட்டில் முழுமையாக இருந்து கொண்டு. இன்றொன்றின் பகுதியாகவும் இருக்கின்றது. இது போல ஒவ்வொன்றும் தானே முழுமையாகவும், முடிவில் பெரிய முழுமையின் பகுதியாகவும் இருக்கிறது. அந்த பெரிய முழுமை எல்லையற்ற முழுமையின் பகுதியாக இருக்கிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் பகுதியாக இருக்கிறது"".
""""ஓர் உயிரியில் முழுமை என்பது பிறக்கும்போது முழுமையாகப் பிறக்கிறது. இறக்கும்போதும் முழுமையாக இறக்கிறது. ஓர் உயிரியில் முழுமை என்பது வேறுபட்ட பகுதிகளின் ஒருங்கிணைந்த மொத்தமாக இருக்கிறது. உணர்தல், புரிதல், வெளிப்படுத்துதல், கருதுதல், ஞாபகசக்தி, கவனித்தல் அனைத்தும் முழுமைக்கானதாகவே இருக்கின்றது. முழுமையை உருவாக்குகின்ற பகுதிகள் அதற்கேயுண்டான தனித்தன்மையோடு இருந்தாலும், அவை ஒருங்கிணைந்த முழுமைக்காகவும் பணிபுரிகின்றன. ஒருங்கிணைந்த முழுமை ஒருங்கிணைந்த புதிரை உருவாக்குகிறது. அதை நாம் உணர்வறிவு என்று அழைக்கின்றோம். ஒரு முழுமையில் கண்ணுக்குத் தெரியாத ஒன்று அனைத்துப் பகுதிகளையும் வழி நடத்தி செயல்புரிய வைப்பதாக இருக்கிறது. அதை அந்த முழுமையின் சாரம் என்று சொல்லலாம்"".
""""முழுமையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்த, ஒத்திசைந்த, உயிரோட்டமான செயல்பாட்டோடு இருக்கின்றதோடு, முழுமை எந்தப் பணிக்காக உள்ளதோ, அந்தப் பணி மிகச் சரியாகவும், ஒழுங்காகவும் நிறைவேறும் அதுவே அழகு"".
""""ஒவ்வொரு பகுதிக்கும் சுதந்திரமான செயல்பாடு இருந்தாலும், அது ஒட்டுமொத்த முழுமையின் நோக்கத்திற்கான செயல்பாட்டோடு இயைந்து செயல்பட்டே ஆக வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் அல்லது அந்த உயிரி முழுமையாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். எந்தப் பகுதியாவது ஒருங்கிணைந்த செயல்பாட்டோடு ஒத்திசைவு இல்லாவிட்டால் அது தான் நோய்"".
""""ஒரு பகுதியில் ஏற்படும் எந்த மாற்றமும் முழுமையிலும் பிரதிபலிக்கும், ஒரு முழுமையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் உரிய இடம் முழுமையோடு இருந்தாலும், சில பகுதிகள் முழுமையோடு மிகவும் சிக்கலான அத்தியாவசியமான தொடர்புடன் இருக்கின்றன. அவைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த முழுமைக்கும் அழிவையே கொடுப்பதாக இருக்கும். ஒரு பகுதியின் பயன்பாட்டைப் பொருத்து அதுக்கும் முழுமைக்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் உணரப்படுகிறது"".
""""ஒரு பொருளை எல்லையற்ற வகையில் பகுத்துக் கொண்டே போகலாம். ஆனால் அவ்வாறு பகுக்கும்போது அதில் ஏற்படுகின்ற அளவு மாற்றம் குணமாற்றத்திற்கு இட்டுச் செல்லும். ஒவ்வொரு கட்டத்திலும் அந்த முழுமைக்கான பண்பு மாறிக் கொண்டே போகும். ஆகவே ஒரு முழுமையின் பண்பு எல்லையற்றது"".
""""ஒரு முழுமையில் உள்ள பகுதிகள் எப்போதும் அந்த முழுமையில் உள்ள சாரம்சத்துக்கேற்றார் போல் செயல்படும்"".
""""ஒரு பகுதியைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அதற்கும் அந்த முழுமைக்கும் உள்ள தொடர்பை அறியாமல் அறிய முடியாது"".
""""ஒரு முழுமையை அறிவதற்கு, எண்ணற்ற விபரங்களைச் சேகரிக்கும்போது அவை முழுமையை சரியாக அறிவதில் தெளிவற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். ஆகையால் சிறப்பு இயல்புப் பண்புகளை அறிவதே முழுமை அறிவதற்கான அணுகுமுறை"".
""""ஒவ்வொரு பகுதியும்,. தனியானது போல் கருதிக் கொண்டு, அதை அறிய நினைப்பது மிகவும் ஆபத்தானது. ஒரு பகுதியை அறிவதற்கு முழுமையோடு உள்ள தொடர்பைக் கொண்டே அறிய வேண்டும். அதே போல் பகுதிகளைப் பற்றிக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், முழுமையை மட்டுமே ஆய்வு செய்வதும் ஆபத்தானது"".
""""ஒரு பகுதியில் வருகின்ற பாதிப்பு அந்த இடத்தில் மட்டும் வந்த பாதிப்பாகக் கருதுவது தவறு. அது ஒட்டு மொத்த முழுமையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவுதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்"".
""""முழுமையின் ஒவ்வொரு பகுதியையும் யாந்திரீகமாக ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவதோ அல்லது முழுமையானது மட்டுமே புலன் கடந்த பிரத்யோகப் பண்போடு விளங்குவதாகக் கருதுவதோ தவறானது. ஒரு முழுமை எப்போதும் பகுதிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்குக் கடன்பட்டிருக்கிறது. அது போல ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றமோ அல்லது வளர்ச்சியோ முழுமை சார்ந்ததாகவே இருக்கிறது. ஆக பகுதிகளுக்கும், முழுமைக்கும் இடையில் உள்ள தொடர்பு எளிமையானது இல்லை என்பது தெளிவாகிறது"".
மேற்கூறப்பட்டவை அனைத்தும் முழுமை மற்றும் பகுதி பற்றி இயற்கை தத்துவம் எவ்வாறு பார்க்கிறது என்பதன் சாரம்.
இவை எப்படி ஹோமியோபதியோடு தொடர்புள்ளவை என்று பார்ப்பதும், இதில் எந்த அளவு ஹோமியோபதி இயற்கை விதியை பின்பற்றுகிறது என்று பார்ப்போம்.
ஹோமியோபதி மருத்துவம் என்பதே முழுமைக்கான மருத்துவம்ட.
ஹோமியோபதி மனிதனை முழுமையாகப் பார்க்கிறது. ஹோமியோபதியில் நோய்க்கோ அல்லது நோயுற்ற உறுப்புக்கோ மருத்துவம் இல்லை. ஆகையால் அது மனிதனை முழுமையாகப் பார்த்து மனிதனை முழுமையாக நலப்படுத்துகிறது.
ஹோமியோபதியில் ஆரோக்கியம் என்பது அனைத்து உறுப்புகளும், உணர்வு ரீதியாகவும் மற்றும் செயல்பாடு ரீதியாகவும் ஒருங்கிணைந்த, ஒத்திசைந்த, உயிரோட்டமான செயல்பாட்டின் கீழ் இருப்பதாகக் கூறப்படுகிறது. (ஆர்கனான் மணி மொழி 9) அவ்வாறு இருப்பதால் பகுத்தறியும் மனமானது. இந்த ஆரோக்கியமான உடலை வாழ்தலின் உயர்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது.
மேலும் ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது ஒட்டு மொத்த மனிதனின் உணர்வையும் மற்றும் செயல்பாட்டையும் பொருத்ததாக இருக்கிறது (ஆர்கனான் மணிமொழி 19).
ஆக மனிதனின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பார்க்கிறது.
அதுபோல் மனிதன் நோயுறும்போது முழு மனிதனும் நோயுறுவதாகச் சொல்லி, ஆர்கனான் மணி மொழி 6-இல் நோய் என்பது உடல், மனம் ஆகியவற்றின் ஆரோக்கிய நிலையில் ஏற்பட்ட மாற்றமே என்று கூறுகிறது.
ஒவ்வொரு முழுமைக்கும் ஒரு தனிப்பட்ட சாரம் இருக்கிறது அல்லது உயிர் பண்பு இருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில் நோய் என்பதை அகநிலைச் சாரத்தின் பாதிப்பு என்று ஆர்கனான் மணிமொழி 7-இல் கூறப்படுகிறது.
அதேபோல் மணிமொழி 11-இல் ஒரு மனிதன் நோயுறுவதற்கு முன் முதலில் பாதிப்பு அடைவது அந்த மனிதனின் உயிர்ப் பண்பு (ஏவையட ஞசinஉiயீடந) என்றும். அந்த உயிர்ப் பண்பின் பாதிப்பு உணர்வு நிலை மாற்றத்துக்கும் பின்பு அது செயல்பாட்டு நிலை மாற்றத்துக்கும் இட்டுச் செல்கிறது என்று கூறப்படுகிறது.
மனிதன் நோயுறும்போது வெளியிலிருந்து வரும் நோயை உருவாக்கும் பகையாற்றல் மனிதன் உயிர்ப் பண்பைப் பாதித்து, இம்சித்து முழு மனிதனையும் நோயுறச் செய்கிறது. இதை டாக்டர்.ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 11, 16, 148, 72 ஆகியவற்றில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
இதுபோல் ஒரு மனிதன் குணமாவதுகூட முழுமையாகத்தான் குணமாக வேண்டும். ஏனெனில் அவன் முழுமையாகத்தான் நோயுறுகிறான்.
ஆர்கனான் மணிமொழி 16 மற்றும் 148-இல் கூறியுள்ளதற்கிணங்க, மனிதன் நோயுறுவது என்பது மனிதனின் உயிர்ப் பண்பாகிய சாரம் பாதிப்படைதலே. அவனை குணப்படுத்த அவனுடைய நோய்க்குறிகளுக்கு ஒத்த மருந்தின் சாரத்தைக் கொடுக்கும்போது அது பாதிக்கப்பட்ட மனிதனின் சாரத்தோடு வினைபுரிந்து நலப்படுத்துகிறது.
ஒரு முழு மனிதனையும் நலப்படுத்த அந்த மனிதனுடைய சாரத்iதை அறிய வேண்டும். அது எளிதில் அறியப்பட முடியாததாக இருப்பதால், அதனால் வெளிப்படும் குறிகள் மற்றும் அடையாளங்களின் தொகுப்பே நோயைப் பற்றி கருத்தால் உணரத்தக்க வரைபடத்தைத் தருகிறது- (ஆர்கனான் மணி மொழி 6).
ஒட்டுமொத்த குறிகளின் தொகுப்புக்கு ஒத்த குறிகளைத் தோற்றுவிக்கக் கூடிய மருந்தைத் தேர்வு செய்வது மட்டுமே முழு மனிதனையும், நலப்படுத்த வழி என ஆர்கனான் மணி மொழி 7, 18, 148 மற்றும் பல மணிமொழிகளில் கூறுகின்றார்.
ஒரு முழுமையின் பாதிப்பு பல பகுதிகளாகவும், அடையாளங்களாகவும் வெளிப்படுகின்றன. அந்தக் குறிகளின் தொகுப்பு முழுமையைப் பிரதிபலிக்கின்றன. உண்மைதான்.
ஆனால் நாம் கையாளக் கூடிய முழுமையை (மனிதனை), மற்ற முழுமைகளிலிருந்து அடையாளப்படுத்துவது அந்த முழுமையின் சாரம்சத்தை வெளிப்படுத்தும் பண்புகள் மட்டுமே. அந்த சாராம்சத்தைக் குறிக்கும் சிறப்பியல்புப் பண்புக் குறிகளைத் தொகுத்தால்தான் நாம் முழுமையின் சாரத்தை அடையாளப்படுத்த முடியும்.
இதைத்தான் டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 105-இல் இயற்கை நோயில் அதன் உயிர்ப் பண்பு (சிறப்பு இயல்புப் பண்புக் குறிகள்) குறிகளின் தொகுப்புக்கு ஒத்த மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்.
இதையே மணி மொழி 258-இல் மிகவும் சிறப்பாகக் கூறுகிறார்.
""""இதை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நோயிலும், சிறப்பு இயல்புப் பண்புக் குறிகளின் தொகுப்பு மிகவும் துல்லியமாக எந்த மருந்தில் ஒத்ததாக உள்ளதோ, அந்த மருந்தே தேர்வு செய்வதற்கு தகுதியுள்ள மருந்து. இந்த மிகவும் கவனமான தேர்வில் எந்த அற்ப விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
ஒரு மனிதனை அறிவதற்கு, அவர் சாராம்சத்தை அறிவதும், சாராம்சத்தை குறிகளின் தொகுப்பு மூலமே அறிவதும் முழுமையை அறிவதற்கான வழி.
மருந்தை நிரூபணம் செய்யும்போது, அதை ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கப்படும்போது, அது அந்த மருந்து அவனின் உடல், மனம் இரண்டிலும் வேலை செய்கின்றது. அவ்வாறு வேலை செய்து, உடலிலும், மனதிலும் நோய்க்குறிகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறு நோய்க் குறிகளை ஏற்படுத்தும்போதே, அதற்கேயுண்டான சிறப்பு இயல்புக்குறிகளை வெளிப்படுத்துவதன் மூலம், அதற்கேயுண்டான குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்பதைப் பறைசாற்றுகிறது. இது டாக்டர் ஹானிமன் அவர்கள் 21-ஆம் மணிமொழியில் கூறியது.
இதிலிருந்து மருந்துகளை நிரூபணம் செய்யும்போதும், ஆரோக்கியமான முழு மனிதனுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.
ஹோமியோபதியில் மருந்துகள் தனி மருந்துகளாகத்தான் நிரூபணம் செய்யப்படுகின்றன. ஏனெனில், மருந்துகள் என்ற முழுமை மனிதம் என்ற முழுமைக்குக் கொடுக்கப்படுகின்றன.
ஒரு முழுமையை எவ்வளவு பகுத்தாலும், முழுமை, முழுமைதான் என்பதை ஒவ்வொரு மருந்தும் நிரூபனம் செய்யும்போது மெய்ப்பிக்கின்றன.
அலோபதி மருத்துவத்தில் தனித்தனி உறுப்பு நோயுறுவதாகக் கருதுகிறார்கள். அதனடிப்படையில் உறுப்பு சார்ந்த நிபுணர்கள் மருத்துவம் செய்யக் கிளம்பிவிட்டார்கள். இயற்கைக்கு முரணான கேலிக்கூத்து. இதை இயற்கை தத்துவம் எதிர்க்கிறது.
இயற்கையில் முழுமையின் பகுதியை மட்டும் பார்ப்பது ஆபத்தானது. குறிப்பிட்ட பகுதி (டுடிஉயடணையவiடிn) ஆய்வு என்று சொல்வார்கள். முழுமையைப் பார்க்கத் தவறி விடுவார்கள். அது போல் முழு மனிதனை மட்டும் பார்த்துக் கொண்டு பகுதியின் பாதிப்பை அலட்சியப்படுத்துவார்கள். இந்த இரண்டு போக்குமே தவறானது என்பதை மிகவும் சரியாக டாக்டர். ஹானிமன் அவர்கள் உணர்ந்துள்ளார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் உறுப்பு சார்ந்த நோய் மற்றும் பகுதி சார்ந்த நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை ஆர்கனான் 173 –இல் இருந்து 200 முடிய உள்ள மணிமொழிகளில் கூறுகிறார்.
அவர் இந்த மணிமொழிகளில் இயற்கை விதியைத் துல்லியமாகப் பின்பற்றுவதைப் பற்றி கூறுகிறார். அவர் மணிமொழி 18 மற்றும் 189-இல் உறுப்பு சார்ந்த நோய் மற்றும் பகுதி சார்ந்த நோய் தொடர்பாக கூறியவற்றைப் பார்ப்போம்.
ஒரு பக்க நோயில் அல்லது உறுப்பு சார்ந்த நோய் என்பது """"அந்தப் பகுதிகள் மட்டுமே நோய்வாய்ப்பட்டு விட்டதாகவும், மற்ற பகுதிகள் அந்த நோயோடு எந்த தொடர்பற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோட்பாடு மிகவும் அபத்தமான கருத்தாகும். இவ்வாறு கருதி மருத்துவம் பார்ப்பது மிகவும் அழிவை ஏற்படுத்தும்"". இவ்வாறு மணி மொழி 185இல் கூறுகிறார்.
மேலும் மணிமொழி 189-இல் என்ன கூறகிறார் என்று பார்ப்போம்.
எந்தப் புற நோயும் அகக் காரணி இல்லாமல் உருவாவதோ, வளர்வதோ அல்லது நிலைத்திருப்பதோ சாத்தியமில்லை. ஒருங்கிணைந்த முழுமையில் ஒத்துழைப்பு இல்லாமல் ஏற்படுவதில்லை. புற நோய் தோன்றும் போதே ஒட்டு மொத்த முழுமனிதனும் நோயுறு நிலைக்கு ஆளாகின்றான். மற்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிப்படையாமல் அது வெளிப்புறத்தே தோன்றச் செய்ய முடியாது. அந்த நோயோடு முழுமையின் மற்ற பகுதிகளும் பங்கு கொள்கின்றன. உண்மையிலேயே ஒட்டு மொத்த உயிரியும் கருவியாக இல்லாமல் அந்த நோய் உருவாகும் என்று எண்ணிக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அந்த உயிரியின் எல்லாப் பகுதிகளும் பிரிக்க முடியாதபடி உணர்வு ரீதியாக மற்றும் செயல் ரீதியாக முழுமையோடு நெருக்கமாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. உதட்டில் வருகின்ற புண்ணோ அல்லது நகச்சுற்றோ ஏற்கனவே அல்லது அதே சமயத்திலோ அகநிலையில் மொத்த உயிரியும் நோயுறாமல் வருவதில்லை"".
இந்த மணிமொழி எந்த அளவுக்குச் சரியாகப் பகுதிக்கும் முழுமைக்கும் உள்ள உறவையும் மற்றும் முழுமையின் முக்கியத்துவத்தை தெளிவாக்குகின்றன. டாக்டர். ஹானிமன் அவர்கள் முழுமை மற்றும் பகுதிக்கான இயற்கை விதியைக் கறாராகக் கையாளுகின்றார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் முழுமையைப் பார்க்கும் அதே வேளையில் பகுதியைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் மணிமொழி 193-இல் ஒட்டுமொத்த முழுமையும் நோயால் பாதிப்படைந்திருந்தாலும், பகுதியில் தோன்றிய நோயை முதன்மைக் குறி என்று கூறுகிறார். அந்த முதன்மைக்குறியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒட்டு மொத்த நோயையும் குணப்படுத்த முடியாது.
பகுதியின் நோயின் குறிகளைத் தவறான மருத்துவ முறையில் அழித்துவிட்டால், சரியான மருந்தைத் தேர்வு செய்ய முடியாமல்போகும் என்பதை மணி மொழி 198 மற்றும் 199 ஆகியவற்றில் அனுபவத்தின் மூலம் உரைக்கிறார்.
பகுதி என்பது எப்போதும் முழுமையின் சாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று இயற்கை விதி கூறுகிறது. இதை டாக்டர் போயனிங்ஹாசன் அவர்கள் மிகச் சிறப்பாக உணர்ந்து, பகுதி சார்ந்த நோயின் தனித்தன்மையை அறிய வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார். அவர் இடம், உணர்வு மற்றும் மாறுமை (டுடிஉயவiடிn, ளுநளேயவiடிn யனே ஆடினயடவைல) தொடர்பான அவர் முன் வைத்தது முழுமையின் ஒவ்வொரு பகுதியும் முழுமையின் சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு பகுதிக்கான தனித்துவமான மாறுமை ஒட்டு மொத்த முழுமைக்கும் பொருந்தும் என்பதைக் கூறுகிறது.
இதிலிருந்து பகுதி என்பது முழுமையை வெளிப்படுத்துவதாகவும், பகுதிகள் எல்லாம் முழுமையில் அடங்கியதாகவும் இருக்கின்ற இயற்கை விதியை ஹோமியோபதி மிகச் சரியாகவே வெளிப்படுத்துகிறது.
அலோபதி மருத்துவம், தனிக்குறிக்கு மருத்துவம் பார்ப்பது மூலம் முழுமையின் பகுதியைப் பார்ப்பதாக ஆர்கனான் மணி மொழி 58-இல் குற்றம் சாட்டுகிறார். அவ்வாறு செய்வதால், தனிக்குறி தற்காலிகமாகத் தணிக்கப்பட்டு, பின்பு ஒட்டு மொத்த முழுமையிலும் நோய் அதிகரிக்கும் என்பதை பகுதிக்கும், முழுமைக்கும் உள்ள தொடர்பை அலோபதி மருத்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததையும், அலோபதி மருத்துவம் முழுமைக்கான மருத்துவம் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி ஹோமியோபதியின் மேன்மையை விண்டுரைக்கிறார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் நோயையும் முழுமையாகப் பார்க்கிறார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 7-இன் அடிக்குறிப்பில் எப்படி ஒரு கால் மட்டும் மனிதனாகமாட்டானோ, அதேபோல் ஒற்றைக் குறி நோயாகாது என்று கூறுகிறார். நோய் என்பதே முழுமையின் சாரம் பாதிப்படைவதே என்று வலியுறுத்துகிறார். ஒட்டு மொத்தக் குறிகள் முழுமையின் சாரம் பாதிப்பு அடைந்ததை புற உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.
மேற்கூறியவைகளிலிருந்து ஹோமியோபதியில் மனித முழுமையின் சாரம், நோய் முழுமையின் சாரம், மருந்து முழுமையின் சாரம் பேசப்படுகின்றது.
முழுமை மற்றும் பகுதிக்கான கோட்பாடு என்ற இயற்கை விதியிலிருந்தே டாக்டர். ஹானிமன் அவர்கள் ஒரு மனிதன், ஒரு நோய் மற்றும் ஒரு மருந்து என்ற உன்னத நெறிக்கு வந்து ஹோமியோபதி மருத்துவத்தை ஒப்பற்ற மருத்துவமாகவும், அதுமட்டுமே மருத்துவமாகும் என்ற உண்மையை உலகோர் உணரச் செய்திருக்கிறார்.
ஹோமியோபதியில் நோய் உருவாவதும், நோய் குணமாவதும் கூட முழுமை மற்றும் பகுதி தொடர்பான கோட்பாடுபடி நடக்கின்றன.
அனைத்துப் பகுதிகளிலும் முழுமையைக் கட்டமைத்து முழுமையை வெளிப்படுத்தினாலும், ஒவ்வொரு பகுதிக்கும் தனியான முக்கியத்துவம் இருப்பதையும், ஒட்டு மொத்த முழுமையோடு தொடர்பு இருப்பதையும், நோய் உருவாவது மற்றும் நோய் குணமாவது தொடர்பான கோட்பாட்டோடு உற்றறிந்தால் புலப்படும்.
நோய் என்பது முழுமையின் சாரம் பாதிக்கப்படுவது. ஆகையால் நோய் உறுப்பில் தோன்றுவதற்கு முன் முழுமை முழுவதும் பரவி விடும். அது வெளிப்படும்போது முக்கியமற்ற உறுப்பிலிருந்து முக்கியமான உறுப்பை நோக்கி நகர்கிறது. (ஆர்கனான் மணிமொழி 204).
அதேபோல் குணமாகும்போது முதலில் பாதிக்கப்பட்ட சாரம் முதலில் நோயிலிருந்து விடுவிக்கப்பட்டு, முக்கியமான உறுப்பிலிருந்து முக்கியமற்ற உறுப்பை நோக்கி நோய் குணமாகிக் கொண்டு வருகிறது. இவ்வாறுதான் டாக்டர். ஹானிமன் அவருடைய நாட்பட்ட நோய்கள் (ஊhசடிniஉ னுளைநயளநள) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
வடிவமும், உள்ளடக்கமும் பற்றிய கோட்பாடு.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதற்கேயுண்டான வடிவத்தைப் பெற்று மற்ற பொருள்களிடமிருந்து தன்னை தனித்துவப்படுத்திக் கொள்கிறது.
வடிவம், உள்ளடக்கத்தின் புற வெளிப்பாடு, அது உள்ளடக்கத்திற்கும், புறஉலகத்திற்குமான இணைப்பாக இருக்கிறது.
சுதந்திரமாக உள்ள புற உலகத் தாக்கம் வடிவத்தின் வழியாகவே உள்ளடக்கத்தை அடைகிறது.
அதற்கேற்றார்போல் உள்ளடக்கம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
புற உலகத் தாக்குதலால் வடிவம் பாதிக்கப்படும்போது, உள்ளடக்கத்தின் செயல்பாடே வடிவத்தைப் பேணுகிறது.
மருத்துவத்தில் வடிவம் மற்றும் உள்ளடக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது.
வடிவமைப்பு ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாக இருப்பதால், அது ஒன்றிலிருந்து ஒன்றை தனித்துவப்படுத்த உதவும் முதல் காரணியாக இருக்கிறது.
இதை ஹோமியோபதியில் உடல் வாகாக (ஊடிளேவவைரவiடிn) காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலம் அறியலாம்.
""""உள்ளடக்கமானது முழுமையின் பகுதிகளாக இருந்து கொண்டு, அந்த முழுமையின் சாரத்தைப் பேணுவது தொடர்பாக ஒவ்வொன்றுக்குமான பணியின் நிமித்தம் மற்ற பகுதிகளோடு ஏற்படுத்திக் கொண்ட உட்கட்டமைப்பு"".
""""சாரம் மாறும்போது உள்ளடக்கத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் அப்போது உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும். அந்த உள்ளடக்க மாற்றம் வடிவமாற்றத்திற்கு தவிர்க்க முடியாதபடி இட்டுச் செல்லும்"".
வடிவமும், உள்ளடக்கமும் பரஸ்பர வேலைத் திட்டத்தில் இயங்குகின்றன.
மருத்துவத்தில் வடிவமும் உள்ளடக்கம் பற்றிய கோட்பாடு புறநிலை எதார்த்தத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவை சொல்வதாக இருக்கிறது.
ஹோமியோபதியில் புறநிலை முதன்மை முழுக்குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, இதனடிப்படையில்தான் என்றால் மிகையாகாது.
வடிவம் உள்ளடக்கத்தின் புற வெளிப்பாடு. அதனால் வடிவத்தைப் பேணுவதால், உள்ளடக்கத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சி, நடைப் பயிற்சி மற்றும் யோகா போன்றவைகள் வடிவத்தைப் பேணுவதன் மூலம் உள்ளடக்கத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவே.
வடிவமும், உள்ளடக்கமும் மொத்தத்தில் முழுமையின் சாரத்தோடு தொடர்பில்லாததால், ஹோமியோபதி முழுமையையும், சாரத்தையும் மிக முக்கியமாகக் கருதிப் பார்க்கிறது.
உள்ளடக்கம் மாறும்போது வடிவம் மாறியே ஆக வேண்டும். இது இயற்கை நியதி. அவ்வாறு மாறவில்லை என்றால் அது நோய்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு உள்ளடக்கத்துக்கேற்றவாறு வடிவம் அமையப் பெற வேண்டும்.
ஆக உள்ளடக்கம் மற்றும் வடிவம் பற்றிய கோட்பாடு ஹோமியோபதியில் முக்கியமாகக் கருதப்படுகிறது.
சாராம்சமும், தோற்றமும் பற்றிய கோட்பாடு.
எல்லா அறிஞர்களும் எப்போதுமே ஒன்றின் சாராம்சத்தை அறிவதிலே ஆவல் கொள்வார். அதை அவர்கள் மறைக்கப்பட்ட புதையலாக கருதுகிறார்கள். ஏனெனில் அதுதான் ஒன்றின் மையம் அல்லது இதயமாக இருந்து கொண்டு ஒட்டு மொத்த உயிரியையும் கட்டுப்படுத்துகிறது.
சாராம்சத்தை அறிவதே அல்லது கருத்தில் கொள்வதே பிரபஞ்சத்தில் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரபஞ்சம் எந்த சாராம்சத்தில் இயங்குகிறது என்பதை அறிவதிலே தத்துவார்த்த போராட்டம் தொடங்குகின்றது.
இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் சாரம் என்ன? அதேபோல ஒவ்வொரு பொருளின் சாரம் என்ன என்று அறிவதே அறிதலின் அடித்தளமாக இருக்கிறது.
ஒரு மனிதனின் சாராம்சம் என்பது அந்த மனிதனுடைய தனித்துவமான பண்பு. இதுவே ஒரு நபரின் அத்தியாவசிய பண்பு. இது நான் என்னும் தன் முனைப்போடு தொடர்பு உள்ளது.
இது ஒரு நபருடைய அபூர்வமான பண்பு. ஒருவர், அவரை இழக்காமல் அந்தப் பண்பை இழக்க முடியாது.
அதுவே ஒரு பொருளினுடைய அடிப்படை பகுதிகள் அல்லது எல்லாத் தன்மைகளையும் ஒருங்கிணைக்கும் பண்பு. அந்தப் பண்பு அறுபடுமானால், அந்த ஒட்டு மொத்தப் பொருளும் விழுந்து சிதறிப் போகும். எதுவும் மிச்சம் இல்லாமல் ஒட்டு மொத்த ஒழுங்கும் அழிந்து போகும்.
சாராம்சமானது ஒரு பொருளின் உள்ளடக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால் உள்ளடக்கத்தின் எல்லாவற்றோடும் இல்லாமல் முக்கியமான ஆதாரமான பகுதிகளோடு தொடர்புள்ளது.
சாராம்சம் எல்லா பிரிவோடும் மற்றும் தன்மையோடும் தொடர்புள்ளது. ஆனால் எல்லாப் பண்பும் சாராம்சத்தைக் குறிப்பதில்லை. எதாவது ஒன்று மட்டுமே சாராம்சத்தை வெளிப்படுத்தும்.
சாராம்சத்தைக் காண்பதற்கு அதன் ஒன்றின் அளவு மற்றும் குணத்தின் விகிதாச்சாரதைக் காண வேண்டும்.
""""சாராம்சம் என்பது காரண காரியத் தொடர்பில் இருக்கிறது"".
""""சாராம்சம் என்பது ஒன்றின் ஒருங்கிணைந்த தன்மையைக் குறிப்பதாக உள்ளது. அது அமைப்பை, பகுதியை, முழுமையை, தனித்தன்மையை, பகுதியின் பண்பை, பொதுப்பண்பை, உள்ளடக்கத்தை, குணாம்சத்தை, பரிமானத்தை, எதிர்மறையை, காரண காரியத்தை மற்றும் அனைத்து விதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது"".
""""அதுவே அந்தப் பொருள் இருத்தலுக்கான அனைத்து விதிகளோடும், இழையோடி, அதன் செயல்பாட்டிற்குக் காரணமாகிறது"".
""""இது ஒரு பொருள் அல்லது உயிரி இருத்தலுக்கான அடிப்படை"".
""""தோற்றம் என்பது சாராம்சம் நிலவுகின்ற வடிவம்"".
""""சாராம்சமே உண்மையானது. தோற்றம் என்பது சாராம்சம் அதுவாகவே எடுத்துக் கொண்ட வடிவம்."".
""""தோற்றம் என்பது ஏதோ அகநிலையில் நிரம்பி வழிகின்ற சாரத்தினுடைய வடிவம் என்பதாக உணர்ந்தால், ஒளிய புரிந்து கொள்ள முடியாது"".
""""குறிகள், எப்படி அகநிலையாக உள்ள நோயின் புற வெளிப்பாடோ அது போல தோற்றம் சாராம்சத்தினுடைய புற வெளிப்பாடு"".
""""ஒன்றின் வெளிப்புற வெளிப்பாட்டுக்கு அடித்தளமாகவும், அடிப்படை அபூர்வ பண்பாகவும் இருப்பது அந்தப் பொருளின் சாராம்சம்"".
""""எந்த ஒரு நிகழ்வும் சிறியதோ அல்லது பெரியதோ அது அகநிலைச் சாரத்தினுடைய வெளிப்பாடே. அந்த அபூர்வப் பண்பே அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது"".
""""தோற்றமும், சாராம்சமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி இருக்கின்றது"".
""""தோற்றத்தின் மூலமே சாராம்சம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது"".
""""அதுபோல சாராம்சம் இருப்பதாலே தோற்றம் இருக்கிறது"".
""""தோற்றம் வெளிப்படுத்தும் அனைத்துமே சாராம்சத்தைக் குறிப்பதில்லை. அவைகளில் சில மட்டுமே சாராம்சத்தைக் குறிப்பதாக உள்ளது"".
""""அறிதல் எப்போதும் சிக்கலானதாகவே இருக்கிறது. ஏனெனில் சாராம்சம் தோற்றத்திற்குள் காணமுடியாதபடி மறைந்துள்ளது"".
""""தோற்றம் என்பது சாராம்சம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு பகுதி"".
""""நோய் என்பது நிகழ்வுகளுக்கும் மற்றும் சாராம்சத்திற்கும் இடையிலான முரண்பாடு"".
""""அதாவது ஒருவருடைய நோக்கத்திற்கும் மற்றும் வழிக்கும் இடையிலான முரண்பாடு. அவனுடைய செயலுக்கும் விளைவுக்குமான முரண்பாடு. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நபர் தற்போது இருப்பதற்கும் மற்றும் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார் என்பதற்குமான முரண்பாடு"".
""""சாராம்சம் எப்போதும் விசித்திரப் பண்பின் மூலமே தன்னை வெளிப்படுத்தும்"".
""""ஒரு நபரை அறிய வேண்டுமென்றால், அவரை உற்றறிய வேண்டும். உற்றறிந்தவற்றிற்கும் அவருடைய இருத்தலுக்கான வித்தியாசத்தை அறியும்போது மட்டுமே அவருடைய சாராம்சத்தை அறிய முடியும்"".
நாம் சாராம்சம் மற்றும் தோற்றம் தொடர்பாக இயற்கைத் தத்துவம் என்ன கூறுகிறது என்று பார்த்தோம்.
நாம் இப்போது ஹோமியோபதியில் அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்த இயற்கைத் தத்துவத்தை அறிந்தவர்கள் ஹோமியோபதியை கற்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் டாக்டர்.ஹானிமன் அவர்கள் உயிராற்றல் கோட்பாடு பற்றிக் கூறியதும் இதுவும் மிகவும் ஒத்து இருக்கிறது.
இயற்கை தத்துவத்தில் சாராம்சம் பற்றிக் கூறப்பட்டுள்ளவை வரிக்கு வரி உயிராற்றல் கோட்பாட்டோடு ஒத்து வருவதைக் காணலாம்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றல் தொடர்பாக ஏவையட குடிசஉந, ஏவையட ஞசinஉiயீடந, டுகைந குடிசஉந, டுகைந நநேசபல, டுகைந ஞசinஉiயீடந என்ற பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்கனான் டட்ஜன் எழுதிய 6-ஆம் பதிப்பில் உயிராற்றல் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து வார்த்தைகளும் (ஏவையட குடிசஉந) உயிராற்றலைக் குறிப்பதாகக் கிட்டத்தட்ட எல்லோரும் சொல்கிறார்கள். பல மணிமொழிகளில் ஏவையட குடிசஉந மற்றும் ஏவையட ஞசinஉiயீடந ஆகிய இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். இது மொழியாக்கத்தில் வந்த கோளாறு என்று கூறுகிறார்கள்.
நான் அப்படியாகக் கருதவில்லை. டாக்டர். ஹானிமன் அவர்கள் இரண்டு வார்த்தைகளை வெவ்வேறு பொருள்படக் கூறியிருப்பதாகக் கருதுகிறேன்.
ஏவையட குடிசஉந என்ற வார்த்தையை உயிராற்றலைக் குறிக்கும் முகத்தானும், ஏவையட ஞசinஉiயீடந என்ற வார்த்தையை உயிர்ப் பண்பு அல்லது மனிதனின் உயிர் சாரம் என்பதைக் குறிப்பதற்கும் பயன்படுத்தியுள்ளார் என்று தெளிவாகத் தெரிகிறது.
உயிராற்றலுக்கும், உயிர் சாரத்திற்கும் நிறையே வேறுபாடு உள்ளது. அது என்ன வேறுபாடு என்பதை பின்னீடு பார்ப்போம்.
நாம் இப்போது உயிராற்றல் தொடர்பாக என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
உயிராற்றல் கோட்பாட்டை ஆர்கனான் மணிமொழி 9-இல் மிகவும் சிறப்பாகக் கூறுகின்றார்.
ஆரோக்கியமான மனிதனிடத்தில் அகநிலையான ஏகமும் உள்ள இயக்க ஆற்றல் இந்த உடம்பிற்க்கு உயிரைத் தருகிறது. அது எல்லையற்ற ஆதிக்கத்தின் மூலம் ஆட்சி செய்கிறது. மேலும் உடலின் அனைத்துப் பகுதிகளையும் புகழத்தக்க, ஒத்திசைந்த, உயிரோட்டமான செயல்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. அதாவது உணர்வு ரீதியாகவும், செயல் ரீதியாகவும் வைத்திருக்கிறது. அந்த மனிதனில் உறைந்துள்ள பகுத்தறியும் மனமானது, இந்த ஆரோக்கியமான உடம்பை வாழ்தலின் உயர்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
""""இந்த உடலானது, உயிராற்றல் இல்லாவிட்டால் உணரும் திறனற்றதாகவும், செயல்படும் திறனற்றதாகவும் பேணும் திறனற்றதாகவும் ஆகிவிடுகிறது. எல்லா உணர்வுகளும் மற்றும் வாழ்க்கையின் எல்லாச் செயல்பாடுகளையும் உயிராற்றலின் வழியாகவே செய்கிறது. இதுதான் உடலுக்கு ஆரோக்கிய நிலையிலும், மற்றும் நோயுற்ற நிலையிலும் உயிர் கொடுக்கிறது (ஆர்கனான் மணிமொழி 10)""..
""""உயிராற்றலானது உடலின் அனைத்து செல்களிலும் பரவியுள்ளது. மனிதன் நோயுறுவதற்கு முன் உயிராற்றல்தான் முதலில் நோயுறுகிறது. உடலுக்குத் தீங்கு செய்யும் பகையாற்றலால் உயிராற்றல் பாதிப்படைகிறது. (ஆர்கனான் மணி மொழி.11) "".
""""அக நிலையில் உயிராற்றல் என்ற சாராம்சம் பாதிப்படைகிறது. அந்தப் பாதிப்பு குறிகளாகவும், அடையாளங்களாகவும் புற உலகிற்குத் தெரிகிறது. அந்தக் குறிகளின் தொகுப்பே உரிய மருந்தை வலியுறுத்திக் கேட்கிறது"". இது டாக்டர். ஹானிமன் அவர்கள் 7-ஆம் மணிமொழியில் உயிராற்றல் தொடர்பாகக் கூறியுள்ளார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றலுக்கும் உடலுக்கும் உள்ள உறவை ஆர்கனான் மணிமொழி 15-இல் கூறுகிறார்.
""""உண்மையிலேயே உடல் என்பது உயிர்க்கான கருவியாக இருக்கிறது. உடல் இயங்காமல் அதை உணர முடிகிறது. அது இயங்குவதற்கான ஆற்றலை உயிராற்றல் கொடுக்கின்றது. அதுபோல் உடல் இல்லாமல் உயிராற்றலை உணர முடியாது. இவை இரண்டும் சேர்ந்து ஒருமையாக இருக்கின்றது. மனமானது இரண்டையும் எளிதாகப் புரிதலின் பொருட்டு வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்கின்றது.
""""உயிராற்றலான, நோயை உண்டாக்குகின்ற பகையாற்றலின் தாக்கத்தால் முதலில் சீர்கேடடைகிறது. (ஆர்கனான் மணி மொழி 15) "".
""""இதே போல் ஆர்கனான் மணி மொழி 16 மற்றும் 148-இல் உயிராற்றலானது தீமை உண்டு பண்ணி, ஆரோக்கியமான உயிரியைத் தாக்கி, ஒத்திசைந்த வாழ்க்கையை பாதிப்படையச் செய்கின்ற உயிரிக்கு எதிரான பகைக் சக்தியின் ஆற்றல் வாய்ந்த பாதிப்பால் நோய் ஏற்படுகிறது"". இவ்வாறு டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றல் நோய்படுவதைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
உயிராற்றலானது, நோய்த் தொற்றான உடல் முழுவதும் பரவி, முக்கியமான உறுப்பைப் பாதித்து, மனிதனுடைய உயிருக்கு ஆபத்து வராமல், அந்த நோய்த் தொற்றைப் புறச்சுற்றுக்கு அனுப்பி, மனிதனை உடனடி அழிவிலிருந்து காப்பாற்றுகிறது என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணி மொழி 201-இல் கூறுகின்றார்.
இவ்வாறு உயிராற்றல் பற்றி ஆர்கனானில் பல இடங்களில் கூறி இருக்கின்றார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றல் தொடர்பாக ஆர்கனானில் கூறியிருப்பதும், சாராம்சம் தொடர்பாக இயற்கைத் தத்துவத்iதைக் கூறியிருப்பதும் ஏறக்குறைய ஒன்றே போல் இருப்பதைக் காணலாம்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றல் (ஏவையட குடிசஉந) மற்றும் உயிர்ப் பண்பு (ஏவையட ஞசinஉiயீடந) என்று பல இடங்களில் கூறியிருக்கின்றார். ஒரே மணிமொழியில் இரண்டு வாhத்தைகளுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை இரண்டுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் என்னால் அவ்வாறு எண்ண முடியவில்லை. மொழிபெயர்ப்பாளர்கள்தான் குழப்பியிருக்கிறார்கள், டாக்டர். ஹானிமன் அவர்கள் மிகச் சரியாக இரண்டு வார்த்தைகளையும் வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தியருப்பதாக நான் உணர்கின்றேன்.
நான் மட்டுமல்ல, யார் ஒருவர் சாராம்சம் பற்றிய இயற்கைத் தத்துவத்தை அறிந்திருப்பாரோ, அவர் அவ்வாறு எண்ணுவதைத் தவிர்க்க முடியாது.
இயற்கைத் தத்துவத்தில் கூறப்படும் உயிர்ப் பண்பு (ஏவையட ஞசinஉiயீடந) மற்றும் ஆர்கனானில் கூறப்பட்டுள்ள உயிர் ஆற்றல் (ஏவையட குடிசஉந) இரண்டின் தொடர்பாக இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்...
ஹோமியோபதியில் பிரதானமாகப் பேசப்படுகின்ற முழுமை (றுhடிடளைஅ), தனித்துவம் (ஐனேiஎனைரயடவைல) ஒரு மருந்துக் கோட்பாடு முதலியவை ஆர்கனானில் கூறப்பட்ட உயிராற்றல் கோட்பாட்டோடு பொருந்துவதாக இல்லை.
ஆனால், இயற்கைத் தத்துவத்தில் கூறப்படுகின்ற சாராம்சமும், தோற்றமும் தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துகள் முழுவதும் பொருந்துவதாக இருக்கின்றன.
ஹோமியோபதியில் உயிராற்றல் மற்றும் உயிர்ப் பண்பு ஆகிய இரண்டு பற்றியும் பேசப்படுவதாகக் கருதுகின்றேன்.
உயிராற்றல் என்பது இயற்கைத் தத்துவம் கூறுவது போல உயிருக்கு வெளியே இருந்து வந்த ஒன்றன்று. உயிரிக்குள்ளே உயிரின் உள்ளார்ந்த இயக்கத்தால் குறிப்பிட்ட சூழலில் வெளிப்பட்டதாகும். இதுவே தன்னியக்க உயிராற்றல். இந்த உயிராற்றல் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அனைத்து உயிர்களிலும் இருப்பது ஓர் உயிர்தான்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுவது போல் உயிராற்றலால்தான் உடலுக்கு உயிர் கிடைக்கிறது. உடலுக்கு உணர்திறன் வந்தது. செயல்படும் திறன் வந்தது,. பேணும் திறன் வந்தது.
உயிராற்றல் இல்லையெனில் உயிரி செயலற்று கிடக்க வேண்டியதுதான். எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஆனால் ஓர் உயிரி எவ்வாறு உணர்வது, எவ்வாறு செயல்படுவது என்பதைத் தீர்மானிப்பது உயிராற்றலாக இருக்க முடியாது.
ஒவ்வொரு உயிரியும் ஒன்று போல் உணர்வதில்லை. ஒன்று போல் செயல்படுவது இல்லை. ஒவ்வொரு உயிரிக்கும் உயிராற்றல் வெவ்வேறாக இருக்க முடியாது. அப்படி இருக்க, உயிர்கள் எப்படி வெவ்வேறாக உணர முடியும்?
ஒவ்வொரு உயிரியும் வெவ்வேறாக உணர்கிறது மற்றும் செயல்படுகிறது என்றால் அதற்குக் காரணம் உயிராற்றல் இல்லை. அதற்கு மாறாக அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஆன உயிர்ப் பண்புதான் காரணமாகும்.
உயிர்ப் பன்பு என்பது ஒவ்வொரு உயிருக்கும் அதற்கேயுண்டான சாராம்சம்.
அந்த சாராம்சம் அந்த உயிரியின் அனைத்து உணர்வுகளுக்கும், அனைத்து செயல்பாடுகளுக்கும், அனைத்து இணைப்புகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் காரணமாக இருந்து அனைத்தையும் இணைக்கின்ற நூல் இழையாக இருக்கின்றது. அந்த ஒன்றை இழந்துவிட்டால், அந்த உயிர் அழியாமல் இருக்க முடியாது.
ஒவ்வொருவரும், ஒரு உயிரியும் அந்த உயிர்ப் பண்போடு இருப்பதற்கே விரும்புகின்றன. அந்த உயிர்ப் பண்பைப் பேணுவதற்கும், அதை நிலை நிறுத்துவதற்கும்தான் ஒரு உயிரியின் அனைத்துப் பகுதிகளும் ஒருங்கிணைந்த உயிரோட்டமான செயல்பாட்டில் இருக்கின்றன.
இவ்வாறுதான் இயற்கைத் தத்துவம் கூறுகிறது. இந்த சாராம்சம் என்ற உயிர்ப் பண்பு என்ற இயற்கைத் தத்துவத்தோடு ஹோமியோபதியை இணைத்துப் பார்த்தால்தான் ஹோமியோபதியின் பிரதானக் கூற்றான ஹோமியோபதி என்பது முழுமைக்கான மருத்துவம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இயற்கை விதியாகிய சாராம்சம் என்பதைப் புரிந்து கொண்டால்தான் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்பதையும் சரியாக உணர்ந்தறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
இயற்கைத் தத்துவமாகிய சாராம்சம் தோற்றத்தில் வெளிப்படாது சூட்சுமமமாக இருந்து கொண்டு தோற்றத்தை ஆள்கிறது.
சாராம்சம் என்பது அந்த மனிதனின் அனைத்துப் பண்புகளுக்கும் காரணமாக இருந்து கொண்டு ஒரு சில பிரத்தியோகப் பண்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது.
உடல் பாதிக்கப்பட வேண்டுமென்றால் அந்த மனிதனின் சாராம்சமாகிய உயிர்ப் பண்பு பாதிக்கப்படாமல் ஒரு போதும் பாதிக்கப்படுவதில்லை.
ஒரு மனிதனின் உயிர்ப் பண்பே தீர்மானகரமான சக்தி. அந்த உயிர்ப் பண்பு இயற்கையில் இயல்பாக இருக்கும்போது அந்த மனிதன் ஆரோக்கியமாக இருக்கின்றான். அந்த உயிர் பின்பு பாதிக்கப்படும்போது அவன் நோயுறுகின்றான்.
ஒரு மனிதனுடைய சாராம்சமே அந்த மனிதனின் வாழ்வையும், இருப்பையும் தீர்மானிக்கின்றது.
ஒரு மனிதனை அறிவதற்கு அவனுக்கே உரித்தான சாராம்சத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் சாராம்சத்தை அறிவதை மையமாக வைத்தே அறிதல் தொடங்குகிறது.
ஒவ்வொரு பொருளும் அல்லது உயிரியும் அதனதன் சாராம்சத்தின் மூலமே இணைத்துக் கொள்கிறது. இடையுறவு வைத்துக் கொள்கிறது.
அப்போதுதான் ஒரு முழுமை மற்றொரு முழுமையோடு வினைபுரிய முடியும்.
மருந்துகளை ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுத்து நிரூபணம் செய்யும்போது மருந்தின் அகநிலை உயிர்ப் பண்பு மனிதனுடைய அகநிலைச் சாரத்தோடு வினையாற்றுகிறது (ஆர்கனான் மணி மொழி 20).
அதேபோல் நோயுள்ள மனிதனுக்கு வீரியப்படுத்தப்பட்ட மருந்தைக் கொடுக்கும்போது அவனுடைய சூட்சுமமமான நோயுள்ள அகநிலைச் சாரத்தோடு அதை ஒத்த மருந்தின் சூட்சுமமான அகநிலைச் சாரம் செயல்புரிகிறது.
ஆக ஒரு மனிதனின் ஆரோக்கிய நிலை, நோயுற்ற நிலை, மருந்தை நிரூபணம் செய்தல், மருந்தை வீரியப்படுத்திக் கொடுத்தல், நோயுற்ற மனிதனை நலப்படுத்துதல் அனைத்துமே இயற்கைத் தத்துவமாகிய அகநிலைச் சாரத்தோடு பொருத்திப் பார்க்கும்போது மட்டுமே ஹோமியோபதியை தெளிவாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும்.
இது தவிர்த்து ஆர்கனானில் கூறப்பட்டதாகக் கருதப்படும் உயிராற்றல் கோட்பாட்டை வைத்துப் பார்த்தால் முழுமை, தனித்துவம் முதலியவற்றோடு ஒட்டுறவு இருப்பதைக் காணலாம்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனானில் பல இடங்களில் ஏவையட ஞசinஉiயீடந அல்லது டுகைந ஞசinஉiயீடந நோயுறுவதாகத்தான் கூறுகின்றார்.
ஆர்கனான் 148-வது மணிமொழியில் நோயுறுவது (ஞசinஉiயீடந டிக டகைந) உயிர்ப் பண்பு பாதிப்பதையே நோய் என்கிறார்.
அதுபோல ஆர்கனான் மணிமொழி 11-இல் முதலில் சீர்கேடடைவது (ஏவையட ஞசinஉiயீடந) உயிர்ப் பண்புதான் என்பதையும் டாக்டர். ஹானிமன் அவேர்கள் கூறுகின்றார்.
ஆக ஆர்கனானில் (ஏவையட ஞசinஉiயீடந, டுகைந ஞசinஉiயீடந) என்று கூறுவது அந்தந்த பொருளுக்குண்டான சாராம்சமே என்று கருதுவதுதான் பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
இதற்கு மாறாக, உயிராற்றல் என்று கருதுவோமானல், அது மற்றவற்றோடு பொருந்தாதது மட்டுமல்ல ஹோமியோபதியை சிறப்பாகப் பயன்படுத்த முடியாது.
மனிதனின் ஆரோக்கிய நிலையை அறிவதில், மனிதனின் நோயுற்ற நிலையை அறிவதில், ஒரு மருந்தின் அகநிலைப் பண்பை அறிவதில் மற்றும் வீரியத்தை அறிதல் ஆக அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது சாராம்சம் என்ற கோட்பாடே.
உயிராற்றல் கோட்பாட்டின் மூலம் மேற்கூறியவற்றை எல்லாம் அறிவது என்பது முடியாததாகவே கருதுகின்றேன்.
ஆர்கனானில் உயிராற்றல் என்று வருகின்ற பல இடங்களில் சாராம்சம் என்று பொருள் கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
தனியானது, சிறப்பானது, பொதுவானது, பகுதி சார்ந்தது பற்றிய இயற்கைத் தத்துவம்
இயற்கையில் முழுமையாக ஒத்து இருக்கின்ற இரண்டைப் பார்க்கவே முடியாது.
இயற்கையில் விதவிதமாக வேறுபட்டு இருப்பதுதான் அழகு. இடைவிடாது இடத்தையும், காலத்தையும் கடந்து விதவிதமான அபூர்வங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதுதான் இயற்கை.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் அபூர்வமானது. அது போல் ஒவ்வொரு மனிதனும் அபூர்வமானவன்.
""""இரண்டு பொருட்கள் பொதுவாக வெளியில் வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. ஆகவே அவைகளுக்கு இடையிலான உறவு வெவ்வேறாக இருக்கிறது. இவ்வாறு உறவு வெவ்வேறாக இருப்பதாலேயே அவைகளுடைய பண்புகள் ஒவ்வொரு கணமும் வெவ்வேறாக இருக்கின்றன"".
முழு மனிதனை ஹோமியோபதியில் அடிப்படையான முழு மனிதனைப் பார்ப்பது. முழு மனிதனைப் பார்க்கும்போது, ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்ப்பதற்கு அந்த முழு மனிதனை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க உதவுவது அவனுக்கே உரித்தான தனிப் பண்புதான். ஒவ்வொரு மனிதனுக்கான அபூர்வப் பண்புதான் ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.
""""இயற்கையில் ஒவ்வொரு பொரும் அதற்கே உரித்தான தனிப் பண்புகள் மூலமே மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் கொள்கிறது"".
இது இயற்கையின் சிறப்பு. இந்த விதியின் மூலம்தான் ஹோமியோபதியில் ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற கோட்பாடு வலியுறுத்தப்படுகிறது.
""""ஒவ்வொரு பொருளும் தனித்தன்மையும் வேற்றுமையை மட்டும் கொண்டிருக்கவில்லை. சில அம்சங்கள் ஒற்றுமையும் கொண்டிருக்கின்றது. பொதுவான அம்சம் எதுவுமே இல்லாத பொருட்களே கிடையாது"".
இந்தக் கோட்பாடு எல்லாப் பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொதுவானதாக இருந்தாலும், மனிதர்களிடம் மிகவும் சரியாக இருக்கிறது.
""""ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கே உரித்தான தனித்துவம் இருக்கிறது. அதே வேளையில் அந்த மனிதன் சார்ந்த இனத்திற்கான தனிப்பண்பு இருக்கின்றது. பிறகு எல்லா மனிதர்களுக்குமான பொதுப் பண்பு இருக்கிறது"".
ஆக மனிதர்களுக்கான பொதுப் பண்பு, இனத்திற்கான சிறப்புப் பண்பு மற்றும் அவனுக்கேயுண்டான தனிப்பண்பு என்று மூவகைப் பண்புகளும் ஒவ்வொரு மனிதனிடமும் இருப்பதை ஹோமியோபதியில் துயரர் ஆய்வின்போது பாhக்கின்றோம்.
அதே போல மருந்துகளை நிரூபணம் செய்யும்போது. ஒவ்வொரு மருந்திலும் இம்மூன்று பண்புகளும் இருப்பதைப் பார்க்கின்றோம்.
அந்தப் பொருட்களுக்கேயுண்டான தனிப் பண்பு, அந்த இனத்திற்குண்டான சிறப்புப் பண்பு மற்றும் எல்லாப் பொருளுக்கும் உண்டான பொதுப்பண்பு ஆகியவை நிரூபணம் செய்யும்போது வெளிப்படுவதைக் காண்கிறோம்.
ஆகையால் நமது மெட்டீரியா மெடிக்காவில் உள்ள மருந்துகளின் குறிகள் ஒன்றுபோல் தெரிவதைப் பார்க்கிறோம்.
""""தனியானதும், பொதுவானதும் பரஸ்பரத் தொடர்பு கொண்டிருக்கின்றன. தனியானது, பொதுவானதற்கு இட்டுச் செல்லும். செல்லும் தொடர்பில் அன்றி வேறுவிதமாக நிலவுவதில்லை.
""""பொதுவானது தனியானதில் தனியானதன் மூலம் மட்டுமே நிலவுகிறது. எந்தத் தனியானதும், பொதுவானதாகும் எந்தப் பொதுவானதும் தனியானது ஆகும்"".
ஒரு மனிதனில் அவருக்கே உரித்தான தனியான குணம் மட்டும் இருப்பதல்ல, அத்தோடு பொதுவானதும், ஆகப் பொதுவானதும் ஆகிய குணங்கள் இருக்கின்றன.
இது போலவே மருந்து ஒவ்வொன்றிலும் இருக்கின்றது.
நாம் ஹோமியோபதியில் ஒவ்வொரு மனிதனையும் ஆர்கனான் மணி மொழி 83-இல் கூறியது போல் தனித்துவப்படுத்தி மருந்து தேர்வு செய்ய வேண்டும். அப்போது அவருக்கே உரித்தான தனித்துவப் பண்புகளைக் குறிக்கும் குறிகளைத் தொகுத்து அவைக்கு ஒத்த மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும் ஆர்கனான் மணி மொழி 105 மற்றும் 258).
ஒரு துயரருடைய அனைத்துக் குறிகளையும் தொகுக்க வேண்டும் என்பதை ஆர்கனான் மணி மொழி 18-இல் குறிப்பிடப்படுகின்றது.
தனியானது எப்போதும் சிறப்பானது மற்றும் பொதுவானது மூலமே தெரியவருவதால், டாக்டர். ஹானிமன் அவர்கள் அனைத்துக் குறிகளின் தொகுப்பு மட்டும் ஒரே வழி என்பதை வலியுறுத்துகிறார்.
மேலும் தனியானது என்பது ஒரு மனிதனிடம் மட்டுமே இருந்து கொண்டு மற்ற மனிதர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தும் குறியாகும்.
ஒரு சில மனிதர்களிடம், பொருட்களிடம் மட்டுமே காணப்படும் பண்பு சிறப்பானது என்றும், அநேக மனிதர்களிடம் அல்லது பொருட்களிடம் மட்டும் காணப்படும் பண்பு பொதுவானது என்றும் எல்லா மனிதர்களிடமும் அல்லது எல்லாப் பொருட்களிலும் உள்ள பண்பு ஆகப் பொதுவானது என்றும் இயற்கை விதி தீர்மானிக்கின்றது.
இது எப்படி ஹோமியோபதி மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது?
""""மேலும் ஒரு பொருளின் பண்பு, இடம், காலம், அளவு இவற்றோடு தொடர்புடையது"" என்று இயற்கை விதி கூறுகிறது.
ஒரு மருந்தை ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கும்போது அது அந்த மனிதனின் மனதிலும், உடலிலும் வேலை செய்து நோய்க்குறிகளை தோற்றுவிக்கும் அதே வேளையில் அதற்கேயுண்டான தனித்தன்மை வாய்ந்த குறிகளையும் வெளிப்படுத்தித் தனக்கு தனித்துவமான குணப்படுத்தும் ஆற்றல் உள்ளன என்பதை உலகிற்கு பறைசாற்றுகின்றன. இவ்வாறு டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் 21-ஆம் மணிமொழியில் கூறுவது எந்த அளவிற்கு இயற்கை விதியோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
மேலும் மருந்தை வீரியப்படுத்தி நிரூபணம் செய்யும்போது, அது அதன் எல்லாப் பண்பையும் வெளிப்படுத்துவதில்லை. அந்த மருந்தினுடைய சாரம், மனிதனுடைய சாரத்தோடு வினைபுரிந்து அதனுடைய அகநிலைச் சாரத்திற்கான குறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
இந்த இயற்கைத் தத்துவம், மருந்துகளின் பண்பை அளவு மாற குணம் மாறும் என்ற அடிப்படையில் மருந்துகளின் பண்பை அறிய உதவுகிறது.
ஹோமியோபதி என்பதே துயரரின் தனித்துவத்தை அறிந்து அதையொத்த மருந்தின் தனித்துவத்தோடு பொருத்துவதுதான் என்றால் மிகையில்லை.
ஹோமியோபதியில் முழு மனிதனுக்கு மருந்து, முழு மனிதனை அறிய அவனுடைய சாரம்சத்தை அறிய வேண்டும். அவனுடைய சாராம்சம் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்தும் குறிகளைக் கொண்டே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
தனியானது, சிறப்பானது, பொதுவானது என்ற இயற்கை விதி
1. ஒரு மருந்தை தனித்துவப்படுத்துவதற்கு
2. ஒரு மருந்தின் வீரியத்தைத் தேர்வு செய்வதற்கு
3. மருந்தின் அளவை தீர்மானிப்பதற்கு
4. மருந்து கொடுக்கப்படும் வேளையைத் தீர்மானிப்பதற்கு
மிகவும் அவசியமாகிறது.
இன்றியமையாமையும், தற்செயலும் இயற்கை விதி
""""இன்றியமையாமையும், காரண காரியத் தொடர்பும் வெவ்வெறு கருதுகோளாகும்"".
""""ஆனால் காரண காரியத் தன்மையின் கட்டாயத்தை வலியுறுத்தும்போது, தவிர்க்க இயலாதபடி இன்றியமையாதது பற்றிய கருதுகோள் தேவைப்படுகிறது"".
""""காரண காரியத்தன்மையை விளக்க முடியாதபோது, இன்றியமையாமையின் அவசியம் உணரப்படுகிறது"".
மேற்கூறிய இயற்கைக் கோட்பாடு ஹோமியோபதியில் மிகவும் சரியாகப் பின்பற்றப்படுகிறது.
ஹோமியோபதியில் நோய்க் காரணம் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால் உயிராற்றல் சீர்கேடுதான் நோய் என்று கூறும்போது, உயிராற்றல் சீர்கேடு என்பது இன்றியமையாமையாகவும், உணர்வு நிலை மாற்றத்திற்கும், செயல்பாட்டு நிலை மாற்றத்திற்கும் காரணமும் ஆகிறது (ஆர்கனான் மணி மொழி 11).
இதுபோல் ஆரோக்கியமானது ஒரு மனிதனுடைய உணர்வையும் மற்றும் செயல்பாட்டையும் பொருத்தது. (ஆர்கனான் மணிமொழி 19).
ஒரு மனிதனின் உறுப்புகள் உணர்வு ரீதியாகவும், செயல்ரீதியாக ஒருங்கிணைந்த, ஒத்திசைத்த, உயிரோட்டமான செயல்பாட்டின் கீழ் இருப்பதற்கு, உயிராற்றல்தான் காரணமாக இருக்கிறது. இன்றியமையாகவும் இருக்கிறது (ஆர்கனான் மணிமொழி 9).
இங்கே உயிராற்றல் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டு இன்றியமையாக இருக்கிறது.
ஒரு மனிதன் நோய் உறுவதற்கு உயிராற்றல் சீர்கேடு என்று பார்த்தோம். ஆனால் அதை சீர்கேடு அடையச் செய்வது உயிர்க்கு எதிரான பகையாற்றல். இந்த பகையாற்றல் உயிராற்றல் சீர்கேட்டுக்குக் காரணமாகவும், இன்றியமையாமையுமாக இருக்கிறது.
""""இதிலிருந்து இயற்கையில் எந்த ஒன்றிலும் இன்றியமையாமையின் பங்கு காரணம் காரியத் தொடர்புக்கு உட்பட்டதாகத் தோன்றினாலும், தவிர்க்க இயலாதது, உண்டானது"".
இது ஹோமியோபதி மருத்துவத்தில் இன்றியமையாமை குறித்த இயற்கை வழி வெளிப்படையாகத் தெரிகிறது.
இயல்புகள் மற்றும் தொடர்புகளில் இருத்தலின் காரணங்கள் அவற்றுக்குள்ளே இருக்கின்றது. நிகழ்வை ஏற்படுத்தப்படுகின்ற கூறுகளின் உள் தன்மையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்போது அது இன்றியமையாதவை என்று சொல்லப்படுகிறது.
மேற்கூறிய இயற்கைக் கோட்பாட்டை எப்படி கையாளுகிறது என்று மேலே பார்த்தோம்.
ஒரு மனிதனுடைய இயல்பு, தொடர்பு மற்றும் நிகழ்வு அனைத்தும் உயிர்ச் சாரம்தான் காரணம். இது காரணம் மட்டும் அல்ல, இன்றியமையாமையும்கூட. மேலும் இது அவல நிலையானது.
காரணங்கள் வெளியே உள்ள இயல்புகளாலும், தொடர்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்போது தற்செயலனாவை என்று சொல்லப்படுகின்றன.
ஹோமியோபதியில் மருந்துகளை நிரூபணம் செய்யும்போது அனைத்து மருந்துகளும் எல்லா மனிதர்களிடத்தும் அகநிலையில் மனதிலும், உடலில் மாற்றத்தைக் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும். இங்கே மருந்துகளின் சாரம் மனிதனின் சாரத்தோடு வினை புரிந்து நோயுறு தன்மையை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இன்றியமையாமையின் காரண காரியத் தொடர்போடு தொடர்புள்ளது (ஆர்கனான் மணி மொழி 33).
ஆனால் அதே சமயம் நோயை உருவாக்குகின்ற விசத் தன்மை வாய்ந்த உயிருக்கு எதிரான பகை ஆற்றல் உயிராற்றலைச் சீர்கேடடையச் செய்வது நிபந்தனைக்குட்பட்டது. அது தற்செயலானது. அதற்கான காரணிகள் வெளியீட்டானவை. அது எல்லோரையும் பாதிப்பது இல்லை. கரு வரை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் இருக்கலாம். அது அவருள் இருக்கின்ற இன்றியமையாமையின் தன்மையைப் பொறுத்தது.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணி மொழி 77 மற்றும் 78 களில் இன்றியமையாமை மற்றும் தற்செயல் தொடர்பாக மியாசம் பற்றிக் கூறியிருப்பதில் காணலாம்.
இங்கே டாக்டர். ஹானிமன் அவர்கள் அனைத்து நோய்களுக்கும் தாயாக இருப்பது சோரா மியாசம் என்று கூறும்போது அதன் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகின்றார். அதுவே உள்ளீடான காரணமாக இருக்கிறது. அது இல்லாவிட்டால் நோயே இல்லை. அதனால் மியாசம் என்பது இன்றியமையாததாக இருக்கிறது. அகநிலைக் காரணமாகவும் இருக்கிறது.
மேலும் திடீர் மாற்றம் நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு புறநிலைக் காரணங்கள் தற்செயலானவை, அவை அனைவருக்கும் நோயை ஏற்படுத்துவது இலை. தூண்டு காரணம். அனைவருக்கும் பொதுவானாலும் ஒரு சிலர் மட்டுமே பாதிப்படைகிறார்கள். இது ஒரு கட்டாய நிகழ்வு அல்ல. தற்செயல் நிகழ்வு என்று கொள்ளலாம்.
""""இன்றியமையாமையும், தற்செயலும் பிரிக்க முடியாதவை ஒன்றையொன்று சார்ந்தவை"".
இந்தக் கூற்று மியாசம் மற்றும் நாட்பட்ட நோய்கள் மற்றும் திடீர் நோய்களுக்கான தொடர்பில் காணலாம்.
எனவே, டாக்டர். ஹானிமன் அவர்கள் இன்றியமையாமை மற்றும் தற்செயல் தொடர்பான விதியை மிகவும் சரியாகவே ஆர்கனானில் கையாண்டிருக்கின்றார் என்றால் மிகையில்லை.....
*****
சாத்தியமும் யதார்த்தமும் பற்றிய இயற்கைக் கோட்பாடு
*****
""""நிலவுகின்ற பல் வகைப் பொருட்களும். நிலவுகின்ற நிகழ்வுகளும் யதார்த்தமாகும். அந்த யதார்த்தத்திற்குள் நிகழப் போகின்ற கரு அமைந்திருப்பது சாத்தியம்"".
""""சாத்தியமும், யதார்த்தமும் தமக்குள் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. சாத்தியம் யதார்த்தத்தின் வளர்ச்சியிலிருந்து பிறக்கின்றது. யாதார்த்தம் சாத்தியத்தினால் தயாரிக்கப்படுகிறது. எனவே இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கக் கூடாது"".
""""சாத்தியமும், யதார்த்தமும் என்ற கோட்பாடு நிலவுகின்ற, எல்லாப் பொருட்களும் மற்றும் நிகழ்வுகளும் இடையறாத இயக்கத்தில் இருக்கின்றன, அதனால் மாறிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையிலிருந்து அதனால் சாத்தியத்தை யதார்த்ததிலிருந்து பிரிப்பது நடைமுறையில் நிவைவேற்ற முடியாத ஒன்று"".
இந்த யதார்த்தம் மற்றும் சாத்தியம் பற்றிய கோட்பாடு இயற்கையில், மனிதனில், சமூகத்தில், தவிர்க்க முடியாத முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
மருத்துவத்தில் இக்கோட்பாடு மிகவும் அவசியமாகிறது . அதுவும் ஹோமியோபதியில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
ஹோமியோபதி மருத்துவரின் உயரிய நோக்கம் நோயுற்ற மனிதனை நோயிலிருந்து மீட்டு எடுத்து, மறுபடியும் ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருவது.
அதாவது நோயுற்ற மனிதன் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, முதலில் நோயின் கடுமையிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுவது முதற்கட்ட சாத்தியம். பின்பு அது யதார்த்தமானவுடன் அவனை நோயிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க நினைப்பது அடுத்த சாத்தியம். பிறகு அந்த யதார்த்தத்திலிருந்து உடல், உயிர், மனம் ஆக அனைத்தையும் ஆரோக்கியமாக வைக்க நினைப்பது அடுத்த சாத்தியம்.
""""இவ்வாறு ஒரு யதார்த்தத்திலிருந்து உடனடிச் சாத்தியத்தையும் பின்பு அதை அடுத்த சாத்தியத்தையும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சாத்யமும் யதார்த்தமாவதுதான் வளர்ச்சிப் போக்கு"".
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தை யதார்த்தத்தின் மருத்துவமாகத் தந்துள்ளார். அவர்கள் ஆய்வு செய்து பரிசோதித்து அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளிலிருந்து ஆர்கனான் முதல் பதிப்பை 1810-இல் கொண்டு வந்தார். இந்த யதார்த்தத்தைக் கொண்டு அன்றைய நிலையில் மருத்துவம் பார்த்தார். பின்பு அந்த யதார்த்தத்திற்குள் கருவாயில் இருந்த சாத்தியத்தை இரண்டாம்பதிப்பாக, அதைத் தொடர்ந்து மூன்று, நான்கு, ஐந்து பதிப்புகளாகக் கொண்டு வந்து முடிவில் 1859-இல் ஆறாம் பதிப்பைக் கொணர்ந்தார்.
இது ஒன்று போதும் ஹானிமன் யதார்த்ததிலிருந்து எப்படி சாத்தயங்களுக்குச் சென்றார் என்று புரிந்து கொள்வதற்கு. !
ஆர்கனான் மணி மொழி 12-இல் நோயால் பாதிக்கப்பட்ட உயிராற்றல்தான் நோய்களை உற்பத்தி பண்ணுவதாகக் கூறுகிறார். இதுதான் யதார்த்தம். அது எப்படி உருவாக்கியது என்பதை அறிவது தேவையில்லாதது என்று அதற்கான சாத்தியத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை.
டாக்டர். ஹானிமன் அவர்கள் யதார்த்தத்திலிருந்து மட்டுமே செயல்படுபவர்.
நோய் என்பது உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்தின் மாறுபட்ட நிலை, அது குறிகளாகவும், அடையாளங்களாகவும் வெளிப்படுகின்றன. அவற்றை பற்றிய தொகுப்பே நோயைப்பற்றிய கருத்தால் உணரப்படும் வரைபடத்தைத் தருகின்றன. (ஆர்கனான் மணி மொழி-6). இது யதார்த்தம். இது விடுத்து இதற்கான காரணம் எங்கோ உள்ளே மறைந்திருப்பதாகத் தேடுவது அபத்தம் என்று உரைகிறார். ஆகையால் யதார்த்தத்தில் இருந்து ஒன்றைப் பார்ப்பதை டாக்டர். ஹானிமன் அவர்கள் வலியுறுத்துகின்றார்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் 1796-இல் ஹோமியோபதியை உலகுக்கு அறிவித்தார். பின்பு 1800-இல் ஹோமியோபதி மூலம் மருத்துவம் பார்க்கத் தலைப்பட்டார். அப்போது நிரூபணம் செய்த கொஞ்ச மருந்துகளைக் கொண்டே பல நோய்களைக் குணப்படுத்தினார் இது முற்றிலும் யதார்த்தமானது.
ஹோமியோபதியில் முழுமையைக் காண வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.
அவர் முழு மனிதனையும் காண்பதற்கு குறிகளின் தொகுப்பையே கணக்கில் எடுத்துக் கொண்டார். அவனுடைய சாரத்தைப் பார்ப்பது அல்லது கருவைப் பார்ப்பது, மையத்தைப் பார்ப்பது, உயிர் உணர்வைப் பார்ப்பது என்றெல்லாம் இப்போது பேசப்படுகிறதே அது போல் எந்த ஒன்றுக்கும் செல்லவில்லை.
உயிராற்றல் பாதிப்பு குறிகளின் மூலமே வெளியுலகத்திற்கு அறிவிக்கப்படுகிறது. (ஆர்கனான் மணிமொழி 7) என்ற யதார்த்தத்தின் உண்மையின் மீது அழுத்தமாக நிற்கிறார்.
இதைக் கொண்டு ஹானிமன் அவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாது என்று அர்த்தமில்லை. அவர் அப்போது இருந்த ஜெர்மானியத் தத்துவராகிய ஹெகலை அறிந்தவர். மேற்கத்திய தத்துவங்கள் மட்டுமின்றி கிழக்கத்திய தத்துவங்களையும் அறிந்திருந்தார்.
ஆர்கனான் மணி மொழி 189-இல் மனிதன் உணர்வு ரீதியாகப் பிரிக்க முடியாத முழுமை என்று கூறுகிறார். மனிதன் உணர்வு நிலையில் முழுமையாக உள்ளான் என்பதை அறிந்தும் அது உடனடிச் சாத்தியம் இல்லை, அதனால் குறிகளின் தொகுப்பு மட்டுமே யதார்த்தம் என்பதை உணர்ந்து அதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதே அனைவருக்குமான வழிமுறை என்பதை உணர்ந்தோதினார்.
மேலும் டாக்டர். ஹானிமன் அவர்கள் தனித்துவம் பற்றிப் பேசும்போது, மனிதனின் மையத்தை அறிய கவர்ந்தீர்க்கிற, தனித்துவமான, வழக்கத்திற்குமாறான, விநோதமான சிறப்பியல்புக் குறிகளே தலையாயது என்ற யதார்த்தத்தின் மீது நிற்கிறார். இது ஒன்றே அனைவருக்குமான வழிமுறை.
இன்று பல டாக்டர்கள் சாத்தியத்தை யதார்த்தமாக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி சரியானதாக இருந்து, ஹோமியோபதியை வளர்த்து மக்கள் மருத்துவமாக்கினால் சரி. அது விடுத்து மேல் தட்டு மக்களின் மருத்துவமாக புலன் கடந்த ஒன்றாக மாற்றி முடக்கிப் போட்டு வைத்து விடாமல் இருக்க வேண்டும்.
ஹோமியோபதியில் டாக்டர். ஹானிமன் அவர்கள் மட்டுமே சரியாக யதார்த்தத்தை உணர்ந்தவர். ஹோமியோபதியில் மனிதரைத் தனித்துவப்பத்தி, அந்தத் தனித்துவத்தைக் கொண்டுள்ள சரியான மருந்தைக் கொடுக்க வேண்டும்.
மிகவும் துல்லியமாகச் செய்ய வேண்மென்றால், மிகச் சிலரே செய்ய முடியும். மேலும் நிரூபணம் செய்த மருந்துகளின் தன்மை பற்றிய அறிவு செறிந்திருக்க வேண்டும். தத்துவத்தை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டு கையாளவேண்டும். இது எத்தனை பேருக்குச் சாத்தியம்? ஒரு மருத்துவர் ஒரு துயரரை 100 ரூ துல்லியமாக துயரர் ஆய்வு செய்து, மிகச் சரியாகத் தீர்மானகரமான குறிகளை தெரிவு செய்து, அவற்றின் தொகுப்புக்கு ஒத்த மருந்தைத் தேர்வு செய்து, சரியான வீரியத்தையும் தெரிவு செய்து, சரியான அளவில் கொடுக்கும்போது மட்டுமே மிகச் சரியான ஒத்த மருந்து என்று அழைக்கப்படும்.
இது எத்தனை பேருக்கு சாத்தியம்? இவ்வாறு இருந்தால்தான் ஹோமியோ மருந்துகள் வேலை செய்யும் என்று வந்துவிட்டால் ஹோமியோபதியை மிகச் சிலரே பயிற்சி செய்ய முடியும். ஹோமியோபதியும் வளராது.
ஆனால், டாக்டர். ஹானிமன் அவர்கள் யதார்த்தத்தை நன்கு உணர்ந்தவர். மிகக் கொஞ்ச மருந்துகளைப் பற்றி தெரிந்தவர்களைக்கூட ஹோமியோபதியில் பயிற்சி செய்வதற்கான வழியை ஆர்கனானின் மணி மொழி 162-இல் இருந்து 171 வரை உள்ள மணிமொழிகளில் விளக்கியுள்ளார்.
இவருடைய இந்த யதார்த்தமான போக்கு மட்டும் இல்லையென்றால், ஹோமியோபதியும் பிழைத்திருக்காது. ஹோமியோபதி மருத்துவர்களும் பிழைக்க முடியாது.
ஹோமியோபதியில் நோயானது அகநிலைச் சாரத்தின் பாதிப்பு. அதற்கான காரண காரியம் தெரியாது. மேலும் காரண காரியம் எல்லையற்றது. இந்நிலையில் வெளிப்புறத்தே தோன்றுகின்ற குறிகள் மட்டுமே யதார்த்தம். இந்த யதார்த்தத்திலிருந்துதான் டாக்டர். ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியைப் பார்க்கிறார்.
ஹோமியோபதியில் மருத்துவருடைய உயரிய நோக்கம் இழந்த ஆரோக்கியத்தை மீட்டுவது என்று கூறப்படுகிறது.
ஆர்கனன் 2-ஆம் மணிமொழியில் முழுநிலை நலம் என்பது விரைவாகவும், இதமாகவும், நிரந்தரமாகவும், அதாவது நோயை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது என்று கூறப்பட்டுள்ளது. இது சாத்தியம். ஆனால் யதார்த்தத்திற்கு பொருந்தாது. ஒப்பீட்டு அளவிலான வார்த்தைகள்தான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சாரம் இருக்கிறது. அந்தச் சாரமே அவன் இருத்தலையும், அவன் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. அவ்வாறு அந்தச் சாரத்தோடு ஒரு மனிதன் வாழ்வதுதான் ஆரோக்கியமான வாழ்வு. அந்தச் சாரத்தோடு வாழ்வது என்பதே நிபந்தனையுடன் கூடிய ஆரோக்கியம்தான். இப்படியிருக்க எப்படி முழுமை நிறை நலத்தை ஏற்படுத்த முடியும்? அந்தச் சாரம் பாதித்த மனிதனை அவனுடைய சாரத்தில் நிறுத்துவதுதான் நலம் என்று கூறுவதுதான் யதார்த்தம். அதற்காகத்தான் துயரரை ஆய்வில் நாம் பாதிக்கப்பட்ட தனித் தன்மையை அறிய விழைகிறோம், அந்தத் தனித்தன்மை குறிகளின் உதவி கொண்டு அறிவதன்றி வேறு வழியில் அறிய நினைப்பது யதார்த்தத்திற்கு புறம்பானது. இது டாக்டர்கள் ஸ்கால்டன், இராஜன்சங்கரன், வித்தொல்காஸ் போன்றவர்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் யதார்த்தம் மிகத் தெளிவாக இருக்கும்போது, அதிலிருந்து வேலையைத் தொடங்குவதுதானே மிகச் சரியாக இருக்கும். இதை வலியுறுத்துகிற ஆர்கனான் எப்படி காலாவதியாகும்? ஹோமியோபதி மக்களுக்கான மருத்துவமாக இருக்க வேண்டுமென்றால், இந்த யதார்த்தத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆர்கனானில் தேவை காலம் கடந்தது என்றே சொல்ல வேண்டும்.
ஹோமியோபதியில் குணப்படுத்த முடியாத நோய் என்பது இல்லை. குணப்படுத்த முடியாத நிலை வேண்டுமென்றால் இருக்கலாம். அது அந்தத் துயரரைக் கையாளும் மருத்துவரைப் பொறுத்து வேறுபடலாம்.
இன்றைக்கு பீதியடையச் செய்யும் நோய்களாகக் கருதப்படும் எய்ட்ஸ், .. .. .. .. .. நோய்களுக்கும் ஹோமியோபதியில் தீர்வு உள்ளது. ஏனெனில் குறிகள் என்ற யதார்த்தத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான மருத்துவம் இல்லை. நோய் அவைகளால் வருவதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு மனிதனுடைய சாரம் பாதிப்பதால்தான் நோய் வருவதாக ஹோமியோபதி கூறுகிறது. அது குறிகளாகவும், அடையாளங்களாகவும் தெரிகின்றன. அவைகளின் தொகுப்பே நோய். அந்த தொகுப்புக்கு ஒத்த மருந்தைக் கொடுப்பதே ஹோமியோபதி. இதில் எந்த வைரஸாக இருந்தால் என்ன, ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும் என்ற யதார்த்தம்தானே ஹோமியோபதி. இப்படி இருக்க எந்த நோயைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது சாத்தியமாகத் தெரிவது எல்லாம் இந்த ஹோமியோபதித் தத்துவத்தை எப்படி மிகச் சரியாகப் பயன்படுத்துவது என்பதுதான்.
ஆர்கனான் மணிமொழி 9-இல் """"இந்த அக நிலையில் உள்ள பகுத்தறியும் மனமானது, ஆரோக்கியமான உடலை வாழ்தலின் உயர்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்"".
ஹோமியோபதியில் முதல் யதார்த்தம் நோயுற்றவனை முதலில் ஆரோக்கிய நிலைக்கு மீட்டு எடுத்தல்.
பிறகு நிபந்தனையோடு கூடிய ஆரோக்கிய மனிதனை, அவனுடைய சுயத்தை உணர வைத்து, சுயத்தை அழிக்க வைப்பது அடுத்த யதார்த்தம்.
அடுத்து சுயத்தை இழந்த மனிதன் அன்பின் வடிவமாய் மாறுவது அடுத்த யதார்த்தம்.
பின்பு அன்பு, உழைப்பு, பகிர்வு என்ற உணர்வுகளோடு கூடிய மனிதத்துவத்தை உணர்ந்த சமூக மனிதனாக மாறுவது அடுத்த யதார்த்தம்.
ஆக ஹோமியோபதி நோக்கி நீக்கல் என்ற யதார்த்தத்திலிருந்து படிப்படியாக பல சாத்தியங்களை அடுத்தடுத்து யதார்த்தமாக்கி கடைசியில் ஒரு மனிதனை தெய்வீக மனிதனாக மாற்றவல்லதாக இருக்கிறது.
இயற்கைத் தத்துவத்தின் முக்கியமான இயற்கை விதிகள்
இயற்கைத் தத்துவம் பிரபலம் முழுமைக்கான பொருட்கள், நிகழ்வுகள் அவைகளிடையேயான சர்வாம்சத் தொடர்கள் மற்றும் வளர்ச்சிகளைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்துகின்றது. இதை எப்படி வெளிப்படுத்துகின்றது என்று விளக்குவதே இயற்கை விதிகள்.
இது இயற்கை முழுமைக்குமானது என்றால் ஹோமியோபதிக்கும் அவை பொருந்தும். அந்த இயற்கை விதிகள் மூன்று. ஆனால் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.
அவை-
1. எதிர் நிலைகளின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான போராட்டம்
2. அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.
3. நிலை மறுத்தலின் நிலை மறுத்தலின் நிலை மறுப்பு.
இந்த மூன்று விதிகளும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் பொதுவானவை. எந்த ஒன்றை அறிய வேண்டும் என்றாலும், இந்த விதிகளை அறிந்து, அறியும்போது அறிதல் முழுமை பெறும், நம்முடைய ஆய்வு சிறப்பானதாக இருக்கும்.
எதிர் நிலைகளின் ஒற்றுமை வளர்ச்சி பற்றி போராட்டம் குறித்த இயற்கை விதி
இதுவே பிரபஞ்சத்தில் அனைத்து விதிகளுக்கும் அடிப்படையானது.
""""ஒவ்வொரு பொருளும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அது இயங்குவதற்கான ஆற்றல் அந்தப் பொருள் அகநிலையிலேயே இருக்கிறது. அவ்வாறு அகநிலையில் ஆற்றல் இருப்பதற்குக் காரணம் அந்தப் பொருளுக்குள் உள்ள எதிர் நிலை"" தான் அனைத்துக்கும் காரணம் என்று பேசப்படுகிற அந்த உயிராற்றல் எங்கோ வெளியிலிருந்து வரவில்லை. அது அந்த உயிர்களுக்குள் உள்ள எதிர்மறை சக்திகளின் விளைவே.
டாக்டர். ஹானிமன் அவர்கள் இந்த எதிர்மறை சக்தியைத்தான் இயற்கை விதி என்று கூறுகிறார். ஒரு மருந்து நோயைக் குணப்படுத்துவதற்கும், அதே நோயை உண்டு பண்ணுவதற்கும் எதிர்நிலை சக்திதான் காரணம்.
ஒரு பொருள் என்றாலே எதிர்நிலைப் பண்புகளின் தோற்றம்தான். இந்த அடிப்படை விதிதான் ஹோமியோபதியின் தோற்றத்திற்குக் காரணம்.
ஒரு பொருளை ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கும்போது அந்த பொருள் மனிதனின் உடலிலும், மனதிலும் நோயுறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
அதே மருந்தை நோயுற்ற மனிதனுக்குக் கொடுக்கும்போது, அந்த நோய் அது ஆரோக்கியமான மனிதனிடத்தில் ஏற்படுத்திய நோயை ஒத்திருக்கும்பட்சத்தில் குணப்படுத்துகிறது.
இதைத்தான் இயற்கை விதி என்றும் ஒத்ததை ஒத்தது குணப்படுத்துவதாகவும் கூறுகிறார். இவ்வாறு அந்த மருந்து குணப்படுத்துவதற்குக் காரணம் அந்தப் பொருளுக்குள்ளே அமைந்துள்ள எதிர் மறை சக்திதான் காரணம்.
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 21-இல் கூறுகிறார். அதில் ஒவ்வொரு தனி மருந்தும் அதற்குள்ளே நோயை உண்டு பண்ணும் ஆற்றலும், நோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் உடையதாக உள்ளது என்று கூறுகிறார்.
உலகத்தில் எந்தப் பொருளும், எந்த உயிரும், மாற்று நிகழ்வும், எதிர்மறை.... .. .. ..
அதேபோல், மணிமொழி 22-இல் நோயுடைய ஒட்டு மொத்தக் குறிகள், அதற்கடுத்த அல்லது எதிரான குறிகளைத் தோற்றுவிக்கக் கூடிய மருந்தால் குணப்படுத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு மணிமொழிகளும் பொருள்களுக்குள்ளே குணப்படுத்தும் ஆற்றலும் மற்றும் நோயை உண்டுபண்ணும் ஆற்றலும் இருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது. ஒரு பொருள் எதிர்நிலைப் பண்புகளின் கூட்டாக இருந்து கொண்டு அதன் சாரத்தை வெளிப்படுத்துவதுதான்.
மேலும் 27-வது மணிமொழியில் """" மருந்தினுடைய குணப்படுத்தும் ஆற்றல், நோய்க்கு ஒத்த, சற்று மிகையான பலத்துடன் ஒவ்வொரு நோய்க்கும் கொடுக்கப்படும்போது, அது நோயை நிச்சயமாக, வேரோடு, விரைவாக, நிரந்தரமாக நோயை அழித்து நீக்குகிறது. ஏனெனில், அது ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கப்படும்போது அதையொத்த, முழுமையான, ஒட்டுமொத்தக் குறிகளையும் உண்டுபண்ணியது"".
மணிமொழி 28-இல் இது குணப்படுத்தும் இயற்கை விதி என்றும், இது ஒவ்வொரு சோதனையிலும் தெளிவாக வெளிப்படுகிறது. இதை மிகச் சரியாக உற்றறிந்து உலகத்தில் இந்த உண்மை நிறுவப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தேறுகிறது என்று அறிவியல்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டுமென்பதை என்னைப் பொருத்தவரை ஒரு விஷயமும் எழுதவில்லை. அதை விளக்குவதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
எந்த விஷயத்திலும் சோதித்து, உற்றறிந்து, அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து, தெளிவடைந்த பின்பே உலகுக்கு அறிவிக்கும் டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிராற்றல் தொடர்பாக மணிமொழி 12-இன் அடிக்குறிப்பிலும் மருந்து குணப்படுத்துவது தொடர்பாக மணிமொழி 28-லும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, அனுபவத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு கூறுவதற்கு முயற்சிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், நிச்சயமாக இதற்கான விளக்கம் இயற்கையில் இருக்கிறது.
ஆம், ஒவ்வொரு பொருளும் எதிர்மறைப் பண்போடு இருப்பதுதான் காரணம். ஒரே பொருளுக்குள்ளே குணப்படுத்தும் ஆற்றலும், நோயை உண்டு பண்ணும் ஆற்றலும் இருக்கின்றன.
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கப்படும்போது, அந்த மருந்தின் நோயை உண்டு பண்ணும் ஆற்றல் வெளிப்படுகிறது. அது உயிரிலும், மனதிலும் நோய்க் குறிகளைத் தோற்றுவிக்கின்றன. இப்போது இதற்குச் சமமான எதிர் மறை ஆற்றல் எதுவாக இருக்க முடியும்? அந்த நோயைக் குணப்படுத்தும் வல்லமை வாய்ந்ததாகத்தான் இருக்க முடியும்.
இங்கேதான் சங்தேகம் எழுகிறது. இப்போது நோயைக் குணப்படுத்துவது, நோய்க்கு ஒத்த ஆற்றலா? அல்லது அதற்கு எதிரான ஆற்றலா?
இயற்கைத் தத்துவப்படி ஒவ்வொரு பொருளும் எதிர் மறைப் பண்போடு உள்ளது. உண்மை என்னவென்றால் நோயைக் குணப்படுத்துவது நோய்க்கு எதிரான ஆற்றல்தான் என்பது சரியாக இருக்கும்.
நாம் மருந்துகளை நிரூபணம் செய்வது, அவற்றின் நோயை உண்டுபண்ணும் ஆற்றலை அறிவதற்குத்தான். அவ்வாறு அறிவதால் இயற்கை நோய்க்கு ஒத்த செயற்கை நோயை உண்டு பண்ணும் மருந்து என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதைத் துயருற்ற மனிதனுக்குக் கொடுக்கும்போது அவனிடத்தில் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வினைபுரிந்து நோயை நீக்குகிறது.
இது இப்படி இருக்க, நாம் ஹோமியோபதியில் """"ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்"" (ளுiஅடைய ளுiஅடைiரௌ ஊரசநவேயச) என்று கூறுவது சரியா?
இதே போல் மணிமொழி 22-இல் நேர் எதிர்பண்புடைய மருந்தும் நோயைக் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மணிமொழி 23-இல் நோயில் நிலைத்திருக்கிற குறியானது, நேர் எதிர் பண்புடைய மருத்தைக் கொடுக்கும்போது, நோயை அழித்து நீக்க முடியாது என்றும், அது தற்காலிக நிவாரணம் மட்டும் அளிக்கும் என்றும், அதன்பிறகு நோயானது கடுமையாகவும், தெளிவாகவும் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.
நேர் எதிர்ப் பண்பு (ஹவேiயீயவாiஉ கூசநயவஅநவே) மருத்துவத்தில், மருந்தான நோய்க்கு எதிரான பண்பின் அடிப்படையில் தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. ஆகவே அது முதலில் தற்காலிக நிவாரணமும், அதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் நோய் உண்டுபண்ணும் ஆற்றல் வினைபுரிந்து இயற்கை நோயை கடுமையானதாக ஆக்கி விடுகிறது.
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 69-இல் எப்படி நேர் எதிர்ப் பண்பு மருத்துவம் செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். ஒரு நேர் எதிர்ப் பண்பு (ஹவேiயீயவாiஉ) மருத்துவத்தில், கடுமையான வலிக்கு ஓபியம் மருந்து கொடுக்கப்படுகிறது. இங்கே ஓபியம் மருந்தினுடைய முதன்நிலை பண்பாகிய உணர்விழப்பு (iளேநளேibடைவைல), (ளுவரயீகையஉவiடிn) உணர்வு மழுக்கம் என்ற அடிப்படையில் வலிக்கு எதிரான பண்புடன் கொடுக்கப்பட்டது. மருந்து கொடுத்தவுடன் வலிக்கு நேர் எதிர்ப் பண்பு வேலை செய்து வலியைத் தற்காலிகமாக குறைக்கிறது. பின் அதற்கு எதிராக இரண்டாம் நிலைப் பண்பாகி வலி ஏற்பட்டு நோயை அமுக்கி விடுகிறது என்று கூறப்படுகிறது.
இங்கேயும் மருந்துக்குள் எதிர் நிலைப் பண்புகள் இருப்பது மெய்ப்பிக்கப்படுகிறது.
இங்கே ஓபியம் மருந்தை அடுத்து அடுத்து கொடுக்கும்போது ஹோமியோபதி குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், உணர்வு மழுங்கடிப்பும், வலியும் ஓபியத்தின் பண்புதானே. எதிரெதி ர் பண்பாக இருப்பின் அவை ஓபியத்தின் பண்புதானே.
இன்று உலகத்தில் பெருவாரியான மக்கள் அலோபதி மருத்துவம்தான் பார்க்கின்றார்கள். யாரும் உடனடியாக இறந்து விடுவதில்லை. இறப்பு விகிதமும் குறைந்து உள்ளது. நிரூபணம் செய்யப்படா மருந்துகள் வீரியப்படுத்தப்படாமல், அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதால், பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு அந்த மருத்துவத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வாழ்நாள் தள்ளிப் போடப்படுவதும் உண்மைதான். இதற்குக் காரணம் எதிர்நிலைப் பண்புக் கோட்பாடுதான். (ஹவேiயீயவாiஉ ஞசinஉiயீடந).
ஆகவே, ஹோமியோபதியில் மருந்து குணப்படுத்துவதற்குக் காரணம் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுவது போல் விளக்க முடியாததாக இல்லை. இயற்கை விதியாகிய பொருட்களின் எதிர்நிலைப் பண்பு விதிப்படி குணமாகிறது என்பது தெளிவாகிறது.
இதே போல் உயிராற்றல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுவது கூட, ஒரு மனிதனுடைய சாராம்சம் பாதிக்கப்படுவது நோய் என்று அறிய முடிகிறது. அதற்குக் காரணம் எதிர்நிலைப் பண்புகளில் ஒற்றுமையின்மைதான் காரணம். மேலும் ஒரு மனிதன் நோயுறும்போது மனிதனுடைய சாராம்சம் முதலில் பின்னடைகிறது அது கூட மருந்தின் சாராம்சத்திற்கு (ஐnநேச யேவரசந டிக ஆநனiஉiநே ஆர்கனான் மணி மொழி 20) ஏற்படும் முரண்பாடே காரணம் என்பதையும் நாம் இயற்கை விதி கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனில் எதிர் நிலைப் பண்புகள் இருக்கின்றன. அவையின் ஒற்றுமையே வளர்ச்சி, ஆரோக்கியம். அவையின் ஒற்றுமையின்மையே-பகை, முரண்-நோய்.
ஒரு மனிதன் கருவுற்றதிலிருந்து, யதார்த்தமான கருவில் மனிதன் என்ற சாத்தியம் அடங்கியிருக்கின்றான். அங்கே எதிர் நிலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி ஒற்றுமையாகவும், பகை முரணாகவும் வளர்வதால் முழுமனிதன் தோன்றினான்.
முழு மனிதனில்,
1. ஆக்கக் கூறும் அழிவுக் கூறும் இருக்கின்றன.
2. மூச்சு இழுத்தல், மூச்சு வெளிவிடுதல்
3. இரத்தம் இதயத்திலிருந்து உறுப்புகளுக்கும், உறுப்புகளிலிருந்து இருதயத்திற்கும் செல்கிறது.
4. உட்கொள்தலும், வெளியேற்றலும் நடைபெறுகிறது.
5. உணர்வை உணர்தலும், உணர்வை வெளிப்படுத்தலும்.
இவ்வாறு ஒட்டுமொத்த மனிதனும் அவனுடைய சாராம்சத்தை நிலை நிறுத்த அனைத்து எதிர்நிலைப் பண்புகளின் ஒற்றுமையோடும், போராட்டத்தோடும் இருக்கின்றான்.
எதிர் நிலைப் பண்புகளின் ஒற்றுமை நிருபணப்படும்போது ஆரோக்கியமாக இருக்கின்றான்.
எதிர் நிலைப் பண்புகள் தோராயமாகச் சமன் செய்ய முடியாதபோது (எதிர்நிலைப் பண்புகள் எப்போதும் சமமாக இருப்பதில்லை). நோயுறுகிறான். இதற்கு அகநிலைக் காரணிகள் மற்றும் புறநிலைக் காரணிகள் காரணமாக இருக்கலாம்.
ஒரு மனிதனில் எதிர் பண்புகளுக்கிடையிலான விஞ்சுதலும், மிஞ்சுதலுமான போராட்டத்திற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அப்போது மனிதன் இயற்கையில் மரித்து விடுகிறான்.
ஒரு பொருள் அல்லது நிகழ்வின் வளர்ச்சியில் தீர்மானமான பாத்திரத்தை வகிக்கின்றது. உள் முரண்பாட்டை அடிப்படையானது என்று கூறுகிறோம். அது அந்தப் பொருள்அல்லது நிகழ்வின் சாராம்சத்தோடு தொடர்புடையது. அதன் இதர முரண்பாடுகளும், மொத்த வளர்ச்சியும் அந்தந்த அடிப்படையான முரண்பாட்டைப் பொறுத்தது.
இந்த எதிர்நிலை தொடர்பான இயற்கை வழி மிகவும் சரியாகவே ஹோமியோபதியில் பயன்படுத்தப்படுகிறது.
ஹோமியோபதியில் உயிராற்றல்தான் நோயுறுகிறது. உயிராற்றல்தான் நோயிலிருந்து முதலில் விடுதலை அடைகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நோயுருவது சாராம்சம்தான். சாராம்சம் ஆகிய உயிர்ப் பண்புதான் நோயுறுகிறது என்பதை டாக்டர். ஹானிமன் அவர்கள் அவருடைய மெட்டீரியா மெடிக் பியூரா என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
""""உயிரியின் உயிர்ப் பண்பில் ஏற்படும் ஆற்றல் வாய்ந்த சீர்கேடுதான் நோய் என்பதை சரியாகவே நாம் உற்றறிகிறோம்"".
""""நோய் என்பது மனிதனிடத்தில் உள்ள உயிர்ப் பண்பின் ஆற்றல் வாய்ந்த சீர்கேடு. அது மனிதனின் உணர்வு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் குறிகளின் தொகுப்பு மூலம் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நோயிலும், இந்தக் குறிகளின் தொகுப்புக்கு மட்டுமே சிகிட்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த நோய் சார்ந்த குறிகளின் தொகுப்பை நீக்குவது என்பதே ஆரோக்கியமாகும்"".
இவ்வாறு டாக்டர். ஹானிமன் அவர்கள் உயிர்ப் பண்பின் சீர்கேடே நோய் என்று உரைக்கிறார். இந்த சீர்கேட்டுக்கு அடிப்படைக் காரணம் அகம் சார்ந்த முக்கியமான எதிர்நிலைகளில் ஏற்படும் போராட்டம் என்று இயற்கை விதி சொல்கிறது.
""""இயற்கையில் ஒவ்வொரு பொருளிலும் அல்லது உயிரிலும் உள்ள அடிப்படையான முரண்பாட்டை பற்றிய கருதுகோள் முக்கியமானது. ஏனென்றால், ஒவ்வொரு நிகழ்விலும் போக்கிலும் அடிப்படையான முரண்பாட்டை வெளிக்காட்டுவது என்பது அதன் சாராம்சத்தை எடுத்துக் காட்டுவதாகும்"".
இந்த இயற்கைத் தத்துவத்தில் உள்ள இந்த கூற்று மிகவும் முக்கியமானது.
இதனால்தான் டாக்டர். இராஜன் சங்கரன் அவர்களின் """"கூhந ளுயீசவை டிக ழடிஅடியீயவால"" என்ற நூலில், மையப் பாதிப்பு என்பது மிகவும் முக்கியமான மண்டலங்களாகிய """" ஞசூநுஐ ஹஓஐளு "" –இல் ஏற்படும் சீர்கேடே என்று கூறுகிறார்.
உள்ளீடான முரண்பாடுகள் ஒரு பொருள் அல்லது நிகழ்வின் எதிர்நிலையான அம்சங்களுக்கு இடையில் தோன்றுகின்றன. வெளிப்புற முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நிகழ்வுக்கும் மற்ற பொருட்கள் அல்லது நிகழ்வுகளுக்கும் இடையில் தோன்றுகின்றன.
""""எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வின் வளர்ச்சியிலும் உள்ளீடான முரண்பாடுகள் தீர்மானமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், அவை அதன் உள்ளடக்கம் சாராம்சத்துடன் தொடர்புடையவை. அதன் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையானவை"".
இந்தக் கூற்று மருத்துவத்தில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு மனிதனில் ஏற்படும் மாற்றத்திற்கும், அகநிலைக் காரணிகள் மற்றும் புறநிலைக் காரணங்கள் காரணமாகின்றன. அவற்றில் அகநிலைக் காரணியே தீர்மானகரமானவை. ஏனெனில் இவை சாராம்சத்தோடு தொடர்புடையவை.
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனான் மணிமொழி 31-இல் விளக்குகிறார். """"மனிதனில் நோயை ஏற்படுத்தும் பகையாற்றல் அகம் சார்ந்ததாகவும், புறம் சார்ந்ததாகவும் இருந்தாலும், ஒரு ஆரோக்கியமான மனிதனை, நிபந்தனையற்ற வகையில், சீர்கேடு அடையச் செய்வதற்கான சக்தியை அவை பெறவில்லை. ஆனால் ஒரு மனிதனில் உள்ள முற்சார்பு இயல்பு நிலை (ஞசநனளையீடிளவைiடிn) போதுமான அளவு இருந்தால்தான், அவை அவனைச் சுகவீனம் அடையச் செய்யும்"".
இதே போல ஆர்கனான் மணி மொழி 211-இல் துயரரின் மனநிலையும், சுபாவமும் மருந்ததைத் தேர்வு செய்வதை தீர்மானிப்பதில் முதன்மையாக இருக்கிறது என கூறப்படுகிறது.
இதிலிருந்து இயற்கை விதியின் இந்தக் கூற்று, ஹோமியோபதியில் எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள்.
""""ஒரு நிகழ்வின் சாராம்சத்iiயும், அதன் வளர்ச்சியின் பிரதான விதிகளையும் கண்டுபிடிப்பதற்கு அதன் உள்ளறையான முரண்பாடுகளையும், அவற்றின் அமைப்பையும், இடைத் தொடர்பையும் எடுத்துக் காட்டி குறிப்பிட்ட நிலைமைகளில், வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத்தில் இயங்குகின்ற அடிப்படையான முரண்பாட்டை சுட்டிக் காட்ட வேண்டும். இயக்கவியலில் சரியான அர்த்தம் பொருட்களின் சாராம்சத்தில் உள்ள முரண்பாட்டை ஆராய்வதாகும்"".
மேற்கூறிய இயற்கை விதி தொடர்பான கூற்று துயரர் ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தத் துயரரின் இடையுறவுகளையும், தொடர்புகளையும் அறிய வேண்டியதன் அவசியத்தையும் துயரரின் குறிகளில் பிரதான பங்கு வகிப்பது உள்ளீடான முரண்பாட்டைக் குறிக்கிற துயரரின் மாறுபட்ட மனநிலையும், சுபாவமும் என்பதையும் சாராம்சத்தின் உள்ள முரண்பாட்டின் விளைவால் தோன்றிய கவர்ந்தீர்க்கிற, தனியான, வழக்கத்திற்கு மாறான, விநோதமான குறிகளின் தொகுப்பே எனவும் ஹோமியோபதி கூறுகின்றது.
ஆக ஹோமியோபதியில் எதிர் நிலைகளின் ஒற்றுமை மற்றும் போராட்ட விதி முழு அர்த்தத்தில் பயன்படுத்தாவிட்டாலும், பெரும்பாலும் சரியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
*****
அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாகப் பரிணமித்தல் பற்றிய இயற்கை விதி
*****
இந்த இயற்கை விதி மிகவும் முக்கியமானது.
இங்கே அளவு என்பது பண்பைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.
அளவு என்று எதிர்நிலைகளைத் தீர்மானிப்பதாக உள்ளது.
ஆக அளவு என்பது பொருட்கள் நிகழ்வும் மற்றும் அனைத்தையும் தோற்றுவித்தது.
அளவு மாற்றமே அடிப்படையில் வடிவ மாற்றம்.
அளவு மாற்றம் தோற்றத்தின் மாற்றம்.
அளவு மாற்றமே பூமி மற்றும் கோள்கள் பால் வெளி மற்றும் இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் அமைப்பு மற்றும் ஒழுங்கு அனைத்திற்கும் காரணம்.
நாம் இதற்கு முன் எதிர்நிலைகள் ஒற்றுமை மற்றும் முரண்பாடுகளில் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைப் பற்றி பேசினோம்.
எதிர்நிலைகள் இல்லை என்றே சொல்லலாம். அளவு ஒன்றுதான் தற்காலிகமாக எதிர்நிலைகள் இருப்பதற்குக் காரணம். பொருள்களின் அளவும் அவற்றின் சுழற்சியும் முக்கியம்.
நாம் இரவு மற்றும் பகலையும், இருட்டையும், வெளிச்சத்தையும், ஆக்கத்தையும், அழிவையும், சுவாசித்தலையும், வெளிவிடுதலையும், உட்கொள்தலை, வெளியேற்றுதலை இன்னும் நமக்கு எதிர்நிலையாகத் தோன்றும் அனைத்தும் எதிர்நிலைகள் என்று புரிதலுக்காக கொள்ளலாம்.
உதாரணத்தில் இருட்டையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொள்வோம். இருட்டின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தால் வெளிச்சமும், வெளிச்சத்தின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தால் இருட்டு வந்து விடும். இங்கே இருட்டும், வெளிச்சமும் ஒன்றுதானே. எப்படி வெவ்வேறாக இருக்கும்?
அளவு என்பது தீர்மானகரமான சக்தி. இந்தப் பிரபஞ்சம் ஆதி மூலத்திலிருந்து தோன்றியிருக்கலாம். பரமாவணுவிலிருந்து தோன்றியிருக்கலாம், சூனியத்திலிருந்து தோன்றியிருக்கலாம். இங்கு எல்லாம் அளவில்லாத் தன்மையைத்தான் குறிகிறது. ஆகவே அளவு எப்போது வந்ததோ அப்போது எல்லாம் வந்தது.
நமது கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் அளவில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் இருக்கிறது.
குணம் உள்ள ஒவ்வொன்று அளவோடும், பொருளோடும், சுழற்சியோடும் சம்பந்தப்பட்டதுதான்.
மனிதர்களுடைய கோபம், பயம், இரக்கம் பொருளைப் போன்ற உணர்வுகளுக்கு அளவு இருக்கிறது. அதனால் பொருளோடு தொடர்புள்ளது அல்லது அதுவே பொருளாகத்தான் உள்ளது.
அளவு இல்லையேல், காலம் இல்லை. அளவு இல்லையேல் வெளியில்லை. அளவு இல்லையேல் எதிர் நிலைகள் இல்லை. ஆக அளவு இல்லையேல் எதுவும் இல்லை எல்லாமே சூனியம்தான்.
மகான்கள், புத்தர், லாவோசு, இயnசு போன்றவர்கள் இந்த அளவற்ற நிலைக்குச் செல்வதைத்தான் அப்போது பொருள், எதிர்மறை, இயக்கம், மாற்றம் போன்ற அனைத்தும் மறைந்து போகும்.
ஒரு பொருள் அல்லது ஒரு மனிதர், அளவற்ற நிலைக்குச் செல்ல முடியும். ஏனெனில் அளவு அற்ற நிலையிலிருந்துதான் அனைத்தும் வந்தது.
அதனால்தான் புத்தர் கூட துன்பத்திலிருந்து விடுதலைக்கு பிறவியற்ற சூனிய நிலைக்குப் போக வேண்டும் என்று கூறுகிறார்.
இன்னும் சொல்லப் போனால், அளவுதான் நோயையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றது.
அளவுதான் துன்பத்தையும், இன்பத்தையும் தீர்மானிக்கின்றது.
அளவு என்பதுதான் எல்லாவற்றிற்கும் முக்கியம் என்பதை இப்போது நாம் உணர்கிறோம்.
அளவு மட்டும் பண்பைத் தீர்மானிப்பது இல்லை. அளவு, விசை, வேகம் (யஉஉநடநசயவiடிn யனே எநடடிஉவைல) மூன்று பண்பைத் தீர்மானிக்கிறது.
பொருளின் விசை, வேகம் மாறும்போது அப்பொருளின் பண்பு மாறுபடுகிறது.
ஒரு பொருளின் சாரத்தை அறிவதற்கு அதன் பண்புகளை அறிய வேண்டும்.
பண்பு என்பது பொருள்களின் இயல்பையும், தனித்தன்மையையும் வெளியிடுகின்ற அவசியமான கூறுகளின் மொத்தம்.
""""பண்பு என்பது பொருள்களுக்குச் சொந்தமானவை. அப்பொருட்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றபொழுது அவையும் மாற்றமடைகின்றன. ஒரு பொருளைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற்று, அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதற்கு அதை மற்ற பொருள்களிலிருந்து தனியாக வேறுபடுத்த வேண்டும். அவற்றுக்கு இடையிலுள்ள ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் நிறுவி அவற்றின் குணாம்சங்களை வகைப்படுத்த வேண்டும்""..
மேற்கூறிய இயற்கை விதி மட்டுமே ஹோமியோபதியில் மருந்துகள் எப்படி கையாளப்படுகின்றன என்று விளக்குகிறது.
ஹோமியோபதி பொருட்களின் அளவை மாற்றி அவைகளின் பண்பு அறியப்படுகிறது. ஆம். மருந்துகளை வீரியப்படுத்தி, அளவு மாற்றி, ஆரோக்கியமான மனிதனுக்குக் கொடுக்கும்போது, அந்தப் பொருள் ஒவ்வொரு வீரியத்திலும், ஒவ்வொரு பண்பை வெளிப்படுத்துகிறது.
மருந்துகள் வீரியப்படுத்தப்பட்டு, நிரூபணம் செய்யும்போது அது மனிதனின் சாராம்சத்தோடு வினைபுரிந்து, அதன் பல்பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
""""ஆராயப்படும் பொருளின் அல்லது நிகழ்வின் அடிப்படையான பண்புகளையும், அடிப்படை அல்லாத பண்புகளையும் வேறுபடுத்திக் காண்பது அவசியம்"".
ஹோமியோபதியில் மருந்துகள் நிரூபணம் செய்யும்போது பல வீரியங்களில் அதை ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அவ்வாறு கொடுக்கப்படுகிறபோது, அந்த மருந்து ஒவ்வொரு வீரியத்திலும் அதற்கேயுண்டான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
நாம் அம்மருந்துகளின் அனைத்துப் பண்புகளையும் தொகுத்தாலும், அதில் அடிப்படையான அதன் சாராம்சத்தை வெளிப்படுத்தும் பண்புகளைக் கண்டு அதன் தனித்துவத்தை அறிந்து மருந்தாகப் பயன்படுத்துகின்றோம்.
ஹோமியோபதியில் தனித்துவத்தை அறிவதே தலையாயது. அதை அறிவதற்கு அம்மருந்து சிறப்பியல்புப் பண்புகளின் தொகுப்பே முக்கியமானது என்று கூறுகிறோம்.
ஒவ்வொரு பொருளுக்கும், தனியான பண்பு, சிறப்பான பண்பு, பொதுவான பண்பு, ஆகப் பொதுவான பண்பு என்று நான்கு வகைப் பண்புகளும் இருக்கின்றன.
இவைகளில் ஆகப் பொதுவானது மிகவும் வெளிப்படையாகவும், பொதுவானவை வெளிப்படையாகவும், சிறப்பானவை ஒப்பீடு செய்யும்போதும் மற்றும் தனியானவை சூட்சுமமாகவும் தெரிய வரும்.
நாம் ஹோமியோபதியில் துயரரைத் தனித்துவப்படுத்தி, அந்த தனித்துவத்திற்கு ஒத்த மருந்தை தேர்வு செய்ய வேண்டும். அதற்குத் தனியானவை மிகவும் அவசியமானவை. அவை சாரத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளவை.
குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்தும். அந்த அளவு அந்தப் பண்பை வெளிப்படுத்துவது அப்பொருளின் அளவுகோல். எனவே பண்பு மாற வேண்டுமென்றால், அளவு மாறியிருக்க வேண்டும். அளவு மாறி பண்பு மாறாவிட்டால், அந்த அளவுகோல் நோய்வாய்ப்பட்டு விட்டது.
மனித வாழ்வில் கருக்குழந்தை, கைக்குழந்தை, நடக்கும் குழந்தை, சிறுவன், விடலைப் பருவம், வாலிபம், நடுத்தரவயதினன், வயோதிகன் என்று மாற்றம் நிகழ்கிறது. அப்படி நிகழும்போது, ஒவ்வொரு பருவத்திற்கும், ஒவ்வொரு பண்பு இருக்கிறது. அவ்வாறு அந்தந்த பருவத்துக்கு உரிய பண்பு இல்லாத போதும், அல்லது அதிகப்படியான பண்பு இருந்தாலும், அதற்குக் குறைவான பண்பு இருந்தாலும், அந்த மனிதன் நோயுறுகின்றான்.
அதாவது அளவு மாறும்போது பண்பு மாற வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட அளவுக்கும் ஒரு குறிப்பிட்ட பண்பு இருக்கின்றது.
ஹோமியோபதியில் இந்தக் கோட்பாடு,
1. மருந்தை நிரூபணம் செய்யும்போது கையாளப்படுகிறது.
2. மருந்து கொடுக்கும்போது கையாளப்படுகிறது
3. மருந்தை வீரியப்படுத்தும்போது பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மருந்து இயற்கை நோய் போல் இல்லாமல் எல்லா ஆரோக்கிய மனிதர்களிடமும், எல்லா நேரமும், எல்லாக் காலமும் செயல்புரிகிறது. ஏனெனில், அதன் அளவைத் தேவைக்கேற்றார்போல் கூட்டவோ, குறைக்கவோ முடியும். அப்படி அளவு மாறும்போது, பண்பு மாறுவதாக இருக்கிறது.
இயற்கையில் குறிப்பிட்ட அளவுக்கு குறிப்பிட்ட பண்பு வெளிப்படும் என்பது தெரியும்.
அதை சரியான அளவில் மனிதர்களுக்குக் கொடுக்கும்போது, அவருடைய சாராம்சத்தோடு வினைபுரிந்து, நபருக்குகேற்றார்போல் குறிகள் வெளிப்படுகின்றன என்று பார்த்தோம். இங்கே அளவும் சாராம்சமும் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.
""""ஒரு பொருளை எவ்வளவு பகுத்தாலும், அதன் சாராம்சம் மாறுவதில்லை. அதன் மற்ற பண்புகள் எல்லாம் அளவுக்குத் தக்கபடி மாறும் விசை வேகத்திற்குத் தக்கபடியும் மாறுகின்றது"".
இந்தக் கருதுகோள் மருந்துகள் வீரியப்படுத்தும்போதும், வீரியப்படுத்திய மருந்துகளை நிரூபணம் செய்யும்போதும் மெய்பிக்கப்படுகிறது.
ஒரு பருப்பொருளாக இருக்கும்போது அதன் புலனறி பண்புகளையும், அதனுடைய மற்ற பண்புகளையும் அவற்றில் மறைந்துள்ள சாராம்சம் ஆகியவற்றைக் காண்கிறோம். அதை வீரியப்படுத்திக் கொடுக்கும்போது அளவு மாறுகிறது. அது அதனுடைய பௌதிகப் பண்புகளை இழந்து விடுகிறது. மேலும் மேலும் அதைப் பகுத்து வீரியப்படுத்தும் போது புலன் கடந்த பண்புகள் வெளிப்படுகின்ற, மிக உயர்ந்த வீரியத்தில் அந்தப் பொருளின் புலன் கடந்த சாரம் மட்டும் வெளிப்படும். ஆக ஒரு பொருள் ஒவ்வொரு வீரியத்திலும், அந்த வீரியத்திற்குரிய பண்பை வெளிப்படுத்துகிறது.
இந்தக் கருத்தைக் கொண்டே டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவு மாற்றம் எந்த அளவுக்குப் பண்பு மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார்.
ஆர்கனான் மணிமொழி 128-இல் ஒரு மருந்தை நிரூபணம் செய்யும்போது, வீரியப்படுத்தாமல் மருந்தைக் கொடுக்கும்போது, அது அதனுடைய முழு சக்தியையும் வெளிப்படுத்துவதில்லை. அதன் முழு சக்தியை அடியில் மறைந்திருக்கிறது. அதே மருந்தை உயர்ந்த வீரியத்தில் அதே நபருக்குக் கொடுக்கும்போது இதுவரை மறைந்துள்ள அல்லது செயலற்ற நிலையில் இருந்த சக்திகள் வளர்ந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படுகின்றன என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் மணிமொழி 270-இன் அடிக்குறிப்பில் """"இது தெளிவாகத் தெரிகிறது, பருப்பொருளாக இருந்து மருந்து உயர்ந்த அளவில் வீரியப்பத்தும்போது, அந்த மருந்தின் உண்மையான அகநிலையில் உள்ள மருந்தின் சாராம்சம் வெளிப்படுகிறது. முடிவாக உயர்ந்த வீரியத்தில் அந்த மருந்து அதற்கேயுண்டான தனித்தன்மையான சாராம்சத்தில் கரைந்து விடுகிறது"" என்று கூறுகிறார்.
இதன் மூலம் ஒரு மருந்து ஒவ்வொரு நிலையிலும் அகநிலைக்கான பண்பை வெளிப்படுத்துகிறது. ஆனால் உச்சக்கட்டமாக அதன் தனித்துவமான சாராம்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது.
இக்கருத்தையே """"கூhந ளுயீசவை டிக ழடிஅடியீயவால"" என்ற நூலில் டாக்டர். இராஜன் சங்கரன் நைட்ரிக் ஆசிட் பற்றிக் கூறும்போது, 200 வீரியத்தில் அது எதிரியை மன்னிக்க முடியாத பண்போடு இருப்பவராகவும் 1 எம் வீரியத்தில் நீதி மன்ற யுத்தம் செய்பவராகவும் வெளிப்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆக ஒவ்வொரு வீரியமும் அதற்கேயுண்டான பண்புகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மற்ற பண்புகள் மறைக்கப்படுகின்றன. அதன் மிக உயர்ந்த வீரியத்தில் மட்டுமே உச்சகட்டமான அதன் சாரத்தை வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.
டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் முக்கியத்துவத்தை மணிமொழி 276-இல் """"மிகச் சரியாக தேர்வு செய்த மருந்து உயர்ந்த வீரியத்தில் அதிக அளவு கொடுக்கப்படும்போது, மிகுந்த தீங்கைச் செய்கிறது. அதுவும், அலோபதி மருந்தைவிட, உயர்ந்த வீரிய மருந்து செய்யும் தீங்கே அதிகமாக இருக்கிறது. மிக அதிகமான அளவு கொடுக்கப்படும்போது, அதுவும் குறிப்பாக திருப்பித் திருப்பிக் கொடுப்பப்படும்போது மிக அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதுதான் விதி. அது துயரரின் உயிருக்கே உலை வைத்து விடும். நோயைக் குணப்படுத்த முடியாதபடி செய்துவிடும். அது இயற்கை நோயைக் குணப்படுத்தினால், அதனால் ஏற்பட்ட மருந்தின் நோய் குணப்படுத்த முடியாமலே போய்விடும்.
இந்தக் கூற்று அளவு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்னபது தெளிவாகிறது. ஒரே மருந்து அளவு மாறும்போது குணப்படுத்துவதாகவும், ஆபத்து விளைவிப்பதாகவும் இருக்கின்றது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மேற்கூறிய கூற்று நிரூபிக்கிறது.
மேலும் டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் முக்கியத்துவத்தை மணிமொழி 253-இல் அடிக்குறிப்பில் தெளிவாகவே கூறுகின்றார்.
தேர்வு செய்யப்பட்ட மருந்தை குறைந்த வீரியத்தில் எவ்வளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குக் குறைவாகக் கொடுக்கும்போது, மனநிலையிலும், சுபாவத்திலும் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே அதிக அளவு கொடுக்கப்படும்போது, அது சரியாகத் தேர்வு செய்யப்பட்ட மருந்தாக இருந்தாலும், மிகுந்த சிரமத்தை ஏற்பத்திய பின்பே குணத்தை உருவாக்கும் என்று டாக்டர். ஹானிமன் அவர்கள் அளவின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
இதேபோல் அளவின் அவசியத்தையும், அது ஒவ்வொரு முறை கொடுக்கும்போதும் முந்தைய அளவை விட மாறி இருக்க வேண்டும் என்பதையும் மணிமொழி 246-இல் குறிப்பிடுகின்றார்.
இதேபோல மணிமொழி 247 மற்றும் 248-இல் மருந்தின்அளவு மற்றும் வீரியமும் மாறி இருக்க வேண்டிய அவசியத்தையும், அப்படி மாறா விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் விளக்குகின்றார்.
ஆக அளவு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை ஆர்கனான் முழுவதும் டாக்டர். ஹானிமன் அவர்கள் வலியுறுத்துகின்றார்.
அளவு மாறும்போது, பண்பு மாறும் என்ற இயற்கை விதி ஹோமியோபதியில் மிகச் சரியாகவே பின்பற்றப்படுகிறது.
மேலும்,ஹோமியோபதி ஒரு முக்கியமான விஷயத்தையும் கூறுகிறது. அதாவது வெறும் அளவு மாற்றம் மட்டுமே நாம் எதிர்பார்த்த பண்பு மாற்றத்தை ஏற்படுத்தாது. அதனோடு விசை மற்றும் வேகம் சேரும்போது மட்டுமே அதனதற்குத் தகுந்தார்போல் பண்பு மாறும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இதை மணிமொழி 247-இன்அடிக்குறிப்பில் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
முதல்வேளை மருந்து நல்ல பலனைத் தந்தபோதும், அதை அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது முறை கொடுக்கும்போது, அது குறைந்த அளவேயானாலும், முறையான அளவு குலுக்கி வீரியப்படுத்திக் கொடுக்காதபோது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
எனவே அளவு மாற்றம் பண்புமாற்றத்திற்கு இட்டுச் செல்லும், அல்லது பண்பு மாறியிருந்தால் கட்டாயம் அளவு மாறியிருக்க வேண்டும் என்ற இயற்கை விதி மிகச் சிறப்பாகவே, ஹோமியோபதியில் கையாளப்பட்டிருக்கிறது.
மேலும் ஹோமியோபதி புதிய விஷயத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
ஒரு பொருளுக்கு புலனறிந்த பண்பு புலன் கடந்த பண்புகள் இருக்கின்றன என்பதை தெளிவாகக் கூறுகிறது.
திருவள்ளுவர் பெருமான் மெய் உணர்வு என்ற அதிகாரத்தில் கூறியது போல, மெய்யறிவு எது என்பதையும், மேலும் மெய்யறிவை எப்படி அறிய முடியும் என்பதையும் ஹோமியோபதி கூறுகிறது.
திருவள்ளுவர் கூறுகிறார்
""""எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு""
இங்கே மெய்ப் பொருள் என்று வள்ளுவர் கூறுவது, ஒரு பொருளைப் பற்றி புலன் கடந்த அறிதலை. ஒரு பொருள் பருப்பொருளாக இருக்கும்போது அதன் பண்பும், அது வீரியப்படுத்தும்போது அது வெளிப்படுத்தும் பண்பும் முற்றிலும் வேறானது.
இதைத்தான் புலன்களால் அறியப்படுவது பயனில்லை, புலன் கடந்த அறிவுதான் பொருளின் சாரத்தை வெளிப்படுத்தும் என்பதையும் வள்ளுவர் கூறுகின்றார்.
""""ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு""
இங்கே மெய் உணர்வு என்பதை எது என்பதையும் வள்ளுவரே கூறுகின்றார்.
""""ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்""
என்று உள்ளம் அறிதலையே வள்ளுவர் மெய்ப் பொருள் அறிதல் என்று கூறுகின்றார்.
இங்கு தான் ஹோமியோபதி உலகுக்கு புதிய உண்மையைக் கூறுகிறது.
ஒரு பொருளுக்கு பௌதீக, வேதியல் குணங்குளுக்கப்பால், உணர்வறிவு, ஊடிளேஉiடிரளநேளள ஒன்று இருக்கிறது என்றும் அதுவே அதன் சாராம்சமாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது.
ஒரு பொருளை பருப்பொருளை பருப் பொருளாகக் கொடுக்கப்படும்போது அந்த மனிதன் புலன்களில் மட்டுமே வினைபுரிகிறது. அதையே பொருளற்ற பொருளாக வீரியப்படுத்திக் கொடுக்கும்போது அது அவனுடைய சுயத்தில் வேலை செய்கிறது அல்லது பொருளின் சாரம், மனிதனின் சாரத்தோடுதான் வினைபுரிகிறது.
இதை உணர்ந்துதான் டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 141-இன் அடிக்குறிப்பில் மருந்துகளை நிரூபணம் செய்வது மருந்தின் சாரத்தை அறிவது மட்டுமல்ல, அந்த மனிதனின் சாரத்தை அறிவதற்கும் உதவுகிறது என்றும் அதுவே ஞானத்திற்கான அடித்தளம் என்றும் டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறுகின்றார்.
ஆக, அளவு என்பது பல பரிமாணங்களில் ஹோமியோபதியில் பார்க்கப்படுகிறது.
அளவு மாற்றமே பண்பு மாற்றம் என்று கூறும் இயற்கை விதி ஹோமியோபதியில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.
1. உடல், மன ஆரோக்கிய நிலையில் ஏற்பட்ட மாற்றமே நோயானால், அந்த மாற்றத்திற்கு அடிப்படை அளவு மாற்றம் தானே.
2. அளவுதான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தையும், நோயையும் தீர்மானிக்கிறது.
3. அளவுதான் ஒரு பொருள் உணவு, விசமாகத் தீர்மானிக்கிறது.
4. அளவுதான் ஒரு பொருளை மருந்தாகவும், நோயாகவும் தீர்மானிக்கிறது.
5. அளவுதான் எல்லாவற்றையும் இது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்கிறது.
இதிலிருந்து இயற்கையில் அளவே பிரதானம் என்பது தெளிவாகிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் இருத்தலும், உலகில் இருந்தாலும் அளவைப் பொருத்தே அமைகிறது.
அளவு என்று குறிப்பிட முடியாத சூனியத்திலிருந்து எப்போது அளவு தோன்றியதோ அப்போதே பொருள், காலம் வெளி அனைத்தும் தோன்றி விட்டது.
அளவு மாற மாறப் பன்பு மாறி, படிப்படியாக மனிதன் வரைக்கும் பிரபஞ்சம் பரிணமித்து இருக்கிறது.
ஹோமியோபதியில் ஒரு பொருள் அழிக்க முடியாது என்பதற்கிணங்க அதை எவ்வளவு பகுத்தாலும் அதன் பண்புகள் மாறுமேயொழிய அழிக்க முடியாது என்றும், அது பருப்பொருளாக இருக்கும்போது, அதன் பண்பும், அதை வீரியப்படுத்தும்போது ஒவ்வொரு வீரியத்திலும் அதற்கேயுரித்தான பண்பு வெளிப்படுவதையும் அறியலாம்.
இதைப்போல் பண்பை மாற்றுவதன் மூலம் பொருளை மாற்ற முடியுமா? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது. பண்பு மாறிவிடும்போது பண்பு மாறும் என்பதுதான் விதி.
நாம் ஒரு பொருளை பகுத்துப் பகுத்து வீரியப்படுத்தும்போது வெவ்வேறு பண்புகள் வெளியாவது போல, மனிதனை எப்படி பகுத்து வீரியப்படுத்துவது. இதை சற்று சிந்திக்கலாம்.
ஒவ்வொரு மனிதனிடமும் தனியான, சிறப்பான, பொதுவான, ஆகப் பொதுவான பண்புகள் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது, மனிதனின் சுயத்தை அறிவது என்பது,
மருந்துகளின் சாரத்தை அறிய, நாம் அவற்றை வீரியப்படுத்தி, ஆரோக்கியமான மனிதர்களுக்குக் கொடுக்கும்போது, அவை அவற்றின் ஒவ்வொரு வீரியத்திலும், அவற்றிற்கான பண்பை வெளிப்படுத்துகின்றன. உயர்ந்த வீரியத்தில் கிட்டத்தட்ட அதன் சாராம்சத்தை மட்டுமே (சுயத்தை மட்டுமே) வெளிப்படுத்துகின்றன.
இது இப்படியிருக்க, மனிதர்களை எப்படி வீரியப்படுத்துவது? வீரியப்படுத்தி அவர்களுடைய சாராம்சத்தை எப்படி அறிவது?
அளவு மாற பண்பு மாறும் என்றால் பண்பு மாற அளவு மாற வேண்டும். மனிதன் அவனுடைய பல்வேறு பண்புகளை விடுத்து, சுயத்திற்கான பண்புக்கு வந்து, பின்பு சுயத்துக்கான பண்பையும் விடுவித்து விட்டால், அவன் பொருளற்ற பொருளாக ஆகிவிடுவான்.
மனிதர்கள் இவ்வாறு முக்தி, மோட்சம், சூனியம், தாவோ, தம்மம் என்ற நிலைகளை அடைய பண்பற்ற நிலைக்குப் போக வேண்டும். இதற்கு மனிதர்கள் சாமி கும்பிடுதல், விரதம் இருத்தல், யோகம் செய்தல், தியானம் செய்தல், முடிவில் சமாதி அடைதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றான். அப்படி ஈடுபடும்போது முடிவில் ஞானம் பிறந்து, பிறவியற்ற, அவன் எதிலிருந்து வந்தானோ, அந்தப் பெருளற்ற பொருளாக ஆகிவிடுவான்.
மனிதர்கள் மேற்கூறிய அனைத்து செய்கைகளையும் செய்யும்போது, வெவ்வேறு நிலைகளில் அவர்களை வீரியப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் மிகை இல்லை. ஆகவே மேற்கூறியவற்றை ஆன்மீகம் என்று கருத வேண்டாம். இதை புலன் கடந்த அறிவியல் என்று கூறலாம்.
மேலும், தன்னுடைய சாரத்திற்குத் செல்லும்போது, ஒத்தது ஒத்ததோடு வினைபுரியும் என்ற அடிப்படையில், எந்தப் பொருளோடு தொடர்பு கொள்கின்றானோ, அந்தப் பொருளின் சாரத்தை உணர்கின்றான். அப்போது அந்தப் பொருள் பற்றிய மெய்ம்மை புரிய வருகிறது. அதனால், அதன் மீது சரியாக விணைபுரிய முடிகிறது. அதனால், அவனுடைய செயலில் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது. இதை அவன் தெய்வத்தின் கருணையால் நடந்ததாகக் கருதுகின்றான்.
இதிலிருந்து, தியானம், தவம், வழிபாடு எல்லாமே ஒரு வகையில் மனிதர்களை வீரியப்படுத்தி பண்பற்ற நிலைக்குக் கொண்டு செல்தலே.. ..
ஆக, அளவு மாற்றம் பண்பு மாற்றம் என்ற விதி ஹோமியோபதிக்கு மட்டுமின்றி ஹோமியோபதி மூலம் பல உண்மைகளை உணர்வதற்கு உதவியாக இருக்கின்றது.
நிலை மறுப்பின் நிலை மறுப்பைப் பற்றிய விதி
இந்த இயற்கை விதி மேற்கூறிய இரண்டு இயற்கை விதிகளும் இயங்கும்போது ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு வெவ்வேறான படிநிலைகளை அடைகின்றன என்பiதைக் குறிக்கின்றது.
இந்தப் பிரபஞ்சம் முழுமையில் அனைத்தும் பகுதிகள். இந்தப் பகுதிகளின் வளர்ச்சி கீழ்நிலையில் இருந்து மேல் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு போகும்போது பழைய அம்சங்களில் நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டு புதிய ஒன்றாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது, அதற்கான பண்பும் மாறுகிறது. இவ்வாறு புதிய நிலை வரும்போது அதற்கு முந்திய பழைய நிலையை மறுத்துத்தான் வருகிறது. இவ்வாறு இந்தப் புதிய நிலையிலும், அடுத்து வருகின்ற புதிய நிலையால் மறுக்கப்பட்டு, வேறு புதிய நிலையாக வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையும், மற்றொன்றால் மறுக்கப்பட்டு வளர்ச்சியான உயர்ந்த நிலைக்குப் போகிறது. இவ்வாறு வளர்ச்சியும், மாற்றமும் ஒரு திசை வழியில் ஏற்படுகிறது. இதில் ஒவ்வொரு புதிய நிலையும் பழையதன் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.
மனித வாழ்க்கை எடுத்துக் கொள்வோம். கருக்குழந்தை, கைக்குழந்தை, நடக்கும் குழந்தை, சிறுவன், விடலைப் பருவம், வாலிபப் பருவம், நடுத்தரப் பருவம், வயோதிகப் பருவம் என்று இத்தனை படிநிலைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு படிநிலையும் அதற்குரிய பண்போடு அடுத்த நிலைக்கு வழிவிடுவதும் இப்படி ஒவ்வொரு நிலையும் மேலான நிலைக்குச் செல்வதுதான் ஆரோக்கியம். அப்படி மேலான நிலைக்குச் செல்வதில் வரும் இடையூறுதான் நோய் என்று சொன்னால் மிகையில்லை.
நாம் இறப்பு என்று கூறுவது கூட ஒரு மனிதன் கடைநிலையை மறுத்து, மற்றொரு நிலை வரமுடியாத போது, அந்த மனிதனின் வளர்ச்சி முடிந்து விடுகிறது. அங்கு வேறொன்று வந்து விடுகிறது. முதலில் இருந்ததை மரணமடைந்ததாகக் கூறுகின்றோம்.
இந்த இயற்கை விதி ஹோமியோபதியில் ஓரளவு பின்பற்றப்படுகிறது.
ஹோமியோபதி முழுமையைப் பார்க்கிறது. மனிதனையும் முழுமையாகப் பார்க்கிறது. நோயையும் முழுமையாகப் பார்க்கிறது. மருந்தையும் முழுமையாகப் பார்க்கிறது. அதனால்தான் ஒரு மனிதன், ஒரு நோய், ஒரு மருந்து என்ற கோட்பாட்டுக்கு ஹோமியோபதி வருகிறது.
மனிதன் என்ற முழுமைக்கு எத்தனை படி நிலைகள் இருக்கின்றன என்று பார்த்தோம்.
அதேபோல், நோய் என்பதையும் முழுமையாகப் பார்க்கிறோம். நாம் ஒரு உறுப்பு அல்லது பகுதி நோயுற்றதாகக் கூறுவதில்லை. ஒட்டுமொத்த மனிதனும் நோயுறுவதாகக் கூறுகின்றோம். ஆம். முதலில் சீர்கேடு அடைவது அந்த மனிதனுடைய உயிர்ச்சாரம்.
மனிதனுடைய உயிர்ச் சாரம் பாதிப்பின் வெளிப்பாடு, முதல் வெளிச்சுற்றிலும், அதாவது படிப்படியாக முக்கியமான உறுப்பை நோக்கி, ஒவ்வொரு கட்டமாக நோய் வளர்கிறது என்று பார்த்தோம். இவ்வாறு ஒரு நிலையை மறுத்து, அடுத்த நிலைக்கு நோய் செல்வதாகத்தான் ஹோமியோபதி கருதுகிறது.
அதுபோல் நோய் குணமாவது கூட முக்கியமான உறுப்பிலிருந்து தொடங்கி முக்கியமற்ற உறுப்பு நோக்கி நோய் குணமாவதையும் பார்க்கின்றோம்.
இதுதான் நோய் பற்றியும், நோய் குணமாவது பற்றியுமான ஹோமியோபதியின் நிலைப்பாடு. இது எந்த அளவு """"நிலை மறுப்பின் நிலை மறுப்பு"" என்ற இயற்கை விதிக்கு ஒத்துவருகின்றது என பார்ப்போம்.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஒரு உறுப்பில் நோய் தோன்றுவதில்லை என்றும், ஒட்டுமொத்த மனிதனும் நோயுறுகின்றான். ஆனால் உறுப்பில் வெளிப்படுவதாகக் கூறுகிறார்.
ஆர்கனான் மணி மொழி 189-இல், ஒரு உறுப்பில் நோய் தோன்றுவது, அனைத்து உறுப்புகளின் ஒத்துழைப்போடு, அனைத்து உறுப்புகளின் அனுமதியோடு தோன்றுவதாகக் கூறுகிறது. ஒரு உறுப்பில் நோய் தோன்றும் அதே நேரத்தில் ஒட்டு மொத்த மனிதனும் நோயுறுகிறான் அல்லது அதற்கு முன் முழு மனிதனும் துயருருகின்றான் என்றும் கூறுகிறார்.
இதிலிருந்து ஒரு உறுப்பில் நோய் வந்தாலோ அல்லது ஒரு பகுதியில் நோய் வந்தாலோ, அதில் மட்டும் நோய் வந்ததாகவும், மற்ற உறுப்புகள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என்று கருத முடியாது. ஆனால், ஆர்கனான் மணிமொழி 155-இல் நோயற்ற பகுதி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதே போல் ஒத்திராத நோய்கள் பற்றிக் கூறும்போது, இரண்டு ஒத்திராத நோய்கள் உடம்பின் அதற்குத் தகுதியான இடங்களில் தோன்றுவதாகக் கூறுவதும், ஒரு ஒத்திராத நோய் ஒரு இடத்தில் இருக்கும்போது மற்ற இடங்கள் நோயற்று இருப்பது போல பொருள் ஆர்கனான் 40, 41 , 42 மற்றும் 43 மணிமொழிகளில் கூறப்பட்டிருப்பது, நோயைப் பற்றிய தெளிவான இயற்கை விதிகள் உணரப்பட்டதாகத் தெரியவில்லை.
மேலும் ஒருவரிடத்தில் மூன்று மியாசங்களும் இருப்பதாகவும் ஏற்கனவே சிபிலிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவன், பின்பு சோராவால் பாதிக்கப்படுவதாகவும், பின்பு சைக்கோஸிஸ் நோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுவது கூட சற்று குழப்பமானதாக இருக்கிறது.
நாம் நோய் என்பதை உயிராற்றல் பாதிப்பு (உயிர்ப் பண்பு) என்றால் அதன் வெளிப்பாடு படிப்படியாக முக்கியமற்ற உறுப்பிலிருந்து முக்கியமான உறுப்பை நோக்கிச் செல்லும். பழைய நிலையை மறுத்து, புதிய நிலைக்கு நோய் போவதை நாம் பார்க்கிறோம். இப்படி இயற்கை இருக்க, உடலில் வேறு இடங்களில் வேறு வேறு நோய் அதற்குப் பொருத்தமான இடங்களில் தோன்றுவதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்?
ஒரு நிலையை மறுத்து மற்ற நிலை வரும்போது பழைய நிலையின் முக்கிய அம்சங்களைக் கொண்டதாகப் புதிய நிலை இருக்கும். அதன் பயணம் ஒரு திசை வழியாக இருக்கும், அந்தப் பயணம் நேர்கோட்டுப் பாதையில் இருக்காது. சுருள் வட்டப் பாதையில் இருக்கும். மேலும், கீழுமாகப் படிப்படியாக, உயர்ந்த கட்டை எட்டும். இவ்வாறான மாற்றங்களுக்கு எப்போதுமே உள்ளீடான காரணங்கள் பிரதானமாக இருக்கின்றன. வெளிப்புறக் காரணங்கள் பெரும்பாலும் தூண்டு காரணமாகத்தான் இருக்கிறது.
இந்த இயற்கைக் கோட்பாடு சரியாகவே டாக்டர். ஹானிமன் அவர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆர்கனான் மணிமொழி 74-இல் இந்த உடல் எவ்வாறு கொடுமையான அலோபதி மருந்துகளின் தாக்குதல்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது என்று விளக்குகிறார்.
""""இது உடம்பில் ஒரு புரட்சியே செய்கிறது. சில பகுதிகளை உணர்வற்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. அல்லது அதிகப்படியான உணர்வுகளைத் தூண்டி, உறுப்புகளை விரிவடையச் செய்வதற்கும், சுருங்குவதற்கும், தளர்ச்சியடையச் செய்வதற்கும், அல்லது கெட்டிதட்டிப் போகவும் செய்கிறது. அல்லது சில உறுப்புகளை அழித்து, உடலில் சில மாற்றங்களை உள்ளும் புறமும் செய்து இந்த மனிதனை ஒட்டுமொத்த அழிவிலிருந்தும் காக்கிறது"" .
இது டாக்டர். ஹானிமன் அவர்கள் அலோபதி மருந்துகளை திருப்பித் திருப்பிக் கொடுப்பதால் ஏற்படும் அழிவிலிருந்து எப்படி உயிராற்றல் காப்பாற்றுகிறது என்று விளக்குகிறார்.
இந்த மூவகைச் செயல்பாட்டையும், டாக்டர் பிரபுல் விஜயகர் அவர்கள் நவீன மருத்துவத்தில் ஒரு செல் அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சியோடு ஒப்பிடுகிறார். இதையே மூவகை மியாசம் என்றும் கூறுகிறார்.
ஆர்கனான் 74-இல் உயிராற்றலில் முதல் முயற்சி சோரா என்றும் அடுத்த முயற்சி சைகோஸிஸ் என்றும் மூன்றாம் முயற்சி சிபிலிஸ் என்றும் கூறுகிறார்.
ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதற்கு அகநிலைக் காரணம் அத்தியாவசியம் என்று இயற்கை விதி கூறுகிறது.
இதை டாக்டர். ஹானிமன் அவர்கள் மணிமொழி 73-இல் திடீர் நோய்களுக்கு வெளிப்புறக் காரணங்கள் தூண்டு காரணங்களாகவும், உட்புறமாக உள்ள மறைபொருளாக உள்ள சோரா மியாசம்தான் அடிப்படை என்றும் விளக்குகிறார்.
அதேபோல் மணிமொழி 76-இல் நாட்பட்ட நோய்களுக்கு நாட்பட்ட மியாசங்கள்தான் காரணம் என்று கூறகிறார்.
நாம் மனிதனில் ஒத்திராத நோய்கள் அவைகளுக்கு உகந்த இடங்களில் தோன்றுவதாகப் பார்ப்பதை விடுத்து, ஒரே நோய் வெவ்வேறு நிலைப்பாடுகளில் இருப்பதாகக் கொள்ளலாம்.
டாக்டர்.ஹானிமன் அவர்கள் மியாசம் பற்றிக் கூறும்போது சோரா மியாசத்தை தாய் மியாசமாகக் கூறுகிறார்.
சோரா மியாசம் தோன்றுவதற்கான காரணம் சரியாகக் கூறப்படாத போதும், நாம் யூகிக்க முடியும் என்ற அடிப்படையில் மனிதனில் சாராம்சம் பாதிப்படைவதுதான் நோய்.
எப்படி மனிதன் என்பவன் குழந்தை முதல் வயோதிகன் வரை மனிதன் என்ற உயிரியாக இருக்கின்றானோ அதே போல் நோய் என்பது எந்தக் கட்டத்திலும் ஒரே நோய்தான். அது பல்வேறு படிநிலைகளை அடைகிறது. நோய் என்பது புற உறுப்பில் சாதாரண அரிப்பாக எளிய நிலையில் தோன்றி ஒவ்வொரு நிலையாக மாறி மிக முக்கியமான உறுப்பில் உயிரைக் கொல்லும் அளவிற்கு சிக்கலான நோயாக பரிணமிக்கிறது.
இயற்கையின் நிலை மறுப்பின் நிலை மறுப்பு விதி எந்த அளவு நோயிலும் வெளிப்படுகிறது என்று பாருங்கள்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. டாக்டர். ஹானிமன் அவர்கள் (ஊhசடிniஉ னுளைநயளநள) நாட்பட்டநோய்கள் என்ற புத்தகத்தில் மூவகை மியாசங்கள் பற்றி கூறுகின்றார்.
அதில் சோரா மட்டும் முதல் நிலைக் குறிகளை அப்படியே விட்டால் அக நிலையில் பரவியுள்ள சோரா விஷம் அடுத்தக் கட்டத்திற்குப் போகும் என்றும், (ஆர்கனான் மணி மொழி 201) மற்ற சைக்கோஸிஸ், சிபிலிஸ் மியாசங்கள் அவ்வாறு மாறாமல் முதல் நிலைக் குறிகளோடு இருக்கும் என்றும் கூறுகின்றார்.
இங்கே, சோரா, சைகோஸிஸ் மற்றும் சிபிலிஸ் என்பதை தனித்தனி மியாசங்களாக தனித்தனியாக மனிதனைப் பாதித்ததாகப் பார்ப்பதுதான் நெருடலாக உள்ளது.
நாம் இவற்றைத் தனித்தனி மியாசங்களாகக் கொள்ளாமல், மனிதனின் சாராம்சம் பாதிப்பின் தனித்தனி நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு மனிதனின் சாராம்சம் பாதிப்பு சோரா என்ற முதல் நிலை படிவத்தில் தொடங்கி, ஒரு காலக்கட்டத்தில் சைகோஸிஸ் என்ற நிலைக்கு மாறி, பின்பு அதிவிருந்து சிபிலிஸ் நிலைக்கு மாறி, அடுத்த நிலை மறுக்க முடியாத நிலை வருகிறது. இதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நோய் சோரா என்ற நிலையிலிருந்து, அது மறுக்கப்பட்டு, அடுத்த உயர்ந்த கட்டத்திற்குப் போகிறது. அடுத்து சிபிலிஸ் நிலைக்குப் போகிறது. இந்த நிலை மாற்றம் இயற்கையின் வளர்ச்சிப் போக்கில் நிகழ்ந்தேறும்போது, நாம் எந்த நிலைக்கு மருந்து கொடுக்கின்றோமோ, அந்த நிலையில் நோய் முற்றிலும் குணமாகிவிடும்.
இயற்கையில் ஒரு நிலை மறுக்கப்பட்டு அடுத்த நிலைக்கு மாறினாலும், பழையதன் பண்புகள் புதிய நிலையிலும் வெளிப்படும் ஏனெனில் மாற்றம் என்பது நேர்க்கோட்டில் பயனிக்காது. அது சுருள் வட்டப் பாதையில்தான் பயணிக்கும். அதனால் ஒரே மணிதனிடம் நோய் வெவ்வேறு நிலையை அடைந்தபோது, சோரா, சைக்கோஸிஸ் மற்றும் சிபிலிஸ் ஆகிய மூன்று நிலைகளும், ஒரு சேர இருப்பதைக் காணலாம். அவை தனித்தனியாக வந்ததாகக் கருதுவதற்கில்லை.
இந்நிலையில் மருந்து கொடுக்கும்போது நோய் முக்கியமான நிலையிலிருந்து முக்கியமற்ற நிலைக்கு மாறியதுபோல தோன்றினாலும், அதற்கு புதிய மருந்து கொடுக்க வேண்டி வராது. ஏனெனில் உயர்ந்த நிலைக்கு மருந்து கொடுத்து நோய் அழிக்கப்பட்டு விட்டது.
நோய் குணமாகும்போது ஹெரிங்ஸ் விதிப்படி, நோய் முக்கியமான உறுப்பிலிருந்து, முக்கியமற்ற உறுப்புக்கு மாறும் என்று சொல்வது செயற்கையாக உள்ளமுக்கப்பட்ட நிலையில்தான் நிகழலாம். இயற்கை பரிமாணத்தில் இவ்வாறு நடக்காமல் போகலாம். ஆகவேதான் பல துயரர்களிடம் ஹெரிங்ஸ் விதி நடைமுறைக்கு வராததையும் காணலாம்.
டாக்டர். இராஜன் சங்கரன் அவர்கள் நோய் நிலையை பத்தாக பிரிக்கிறார். அக்கியூட் (ஹஉரவந)-இல் இருந்து சிபிலிஸ் வரை பத்து நிலைகளாகப் பிரிக்கிறார். அதையும் தோராயமாக மனிதர்களுடைய வயதோடு சம்பந்தப்படுத்துகிறார். அவர் மிகவும் சரியாகவே பார்க்கிறார். அவருடைய பார்வையில் ஒன்வொன்றும் தனித்தனி நோய்களல்ல. ஒரு நோயின் பல்வேறு நிலைகள் அவை சாராம்சத்தோடு தொடர்புள்ளவை.
அவர் கூற்றுப்படி எந்த மியாசத்திற்கு மருந்து கொடுக்கப்பட்டதோ, அந்த நிலையிலேயே நோய் குணமாகிவிடும் என்பதுதான் அவருடைய நிலை. இவருடைய கணிப்பு மிகச் சரியே. இயற்கையின் நிலை மறுப்பின் நிலை மறுப்பு விதிப்படி மிகவும் சரியே.
ஆனால், பிரபுல் விஜய்கர் சிபிலிஸ்க்கு மருந்து கொடுக்கும்போது, அது சைக்கோஸ்க்கு மாறுவதும், பின்பு சோராவுக்கு மாறுவதும் இயற்கையான மாற்றத்தில் நிகழாது. ஒரு வேளை செயற்கையாக உள்ளமுக்கப்பட்டிருந்தால் படிவம் படிவமாக வெளி வரலாம்.
ஆகவே நிலை மறுப்பின் நிலை மறுப்பின் விதி சரியாக இருந்தால், நோயையும், நோய் குணமாவதையும் இப்படி பார்ப்பதுதான் மிகச் சரியானது.
இதுபோல், மருந்துகளை நிரூபணம் செய்யும்போதும், தோன்றிய குறிகளை வைத்து அவை குணமாக்கிய குறிகளைக் கணக்கில் எடுத்துப் பார்த்ததிலிருந்தும், நாம் ஒரு விஷயத்தை நன்கு அறிய முடியும். ஒரு மருந்தில் மூன்று மியாசங்களும் இருப்பதைக் காணலாம். அவை எப்படி வந்தன? மருந்தினுடைய சராம்சம் மனிதனின் சாராம்சத்தில் வேலை செய்வதால் தோன்றியவை, அதுவும் நிரூபணம் செய்பவரின் தன்மைக்கேற்றார்போல் வெளிப்படும் ஒரே நோயின் பல்வேறு நிலைகள் என்பது தெரியவில்லையா?
நோய் என்பது ஒன்று என்றும், மியாசம் என்பது புரிதலுக்கான பிரிவினை என்று பார்க்கும்பட்சத்தில் மிகவும் சரியே. அதை வெவ்வேறு நோயாகப் பார்ப்பது அல்லது வெவ்வேறு மியாசங்களாகப் பார்ப்பதுகூட இயற்கைக்கு முரணானது.
இயற்கை விதியாகிய நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற விதி நோய் பற்றி பார்க்கும்போது, ஆர்கனானில் சொல்லியிருப்பவை பொருந்ததாது போல் தோன்றினாலும், இயற்கை விதிப்படிதான் இருக்கிறது என்பதை மிகவும் ஆர்கனானைப் படித்தால் சரியாக விளங்கும்.
இப்போது இயற்கை விதிகளும், கருது கோள்களும் யாவை என்பதையும் அவை ஹோமியோபதியில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் சுருக்கமாகப் பார்த்தோம்.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம், என்ன தருவித்தோம் என்று காண்பது தான் இந்த ஆய்வின் நோக்கம். அதை இப்போது காண்போம்.
ஒப்பீட்டு ஆய்வின் முடிவுகள்
நாம் இது வரைக்கும் இயற்கை விதிகளையும், அவற்றோடு ஹோமியோபதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் சுருக்கமாகப் பார்த்தோம். இதிலிருந்து நாம் ஹோமியோபதியில் அறிந்து கொண்டது என்ன என்று பார்ப்போம்.
1.
ஹோமியோபதி மனிதனை பரு உடலாக உள்ளவன் என்றும் மற்றும் ஆற்றலாக உள்ளவன் என்றும் ஹோமியோபதி பார்க்கிறது.
மேலும் பொருள்தான் ஆற்றல் என்பதால், ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்பதை ஹோமியோபதி நிரூபித்து இருக்கிறது.
2.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வடிவங்களும், உருவாக்கங்களும் அந்தப் பொருளற்ற பொருளின் வெளிப்பாடுகள் என்பதையும், ஆகையால் ஒவ்வொன்றும் அனைத்தோடும் இடைவிடாத இடையுறவு வைத்துக் கொண்டு இருக்கிறது என்றும், அதனால் அது மட்டும் மாறுவதில்லாமல், தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் மாற்றம் ஏற்படக் காரணமாகிறது என்பதையும் ஹோமியோபதி உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த இடையுறவுகள் ஒவ்வொன்றின் சாராம்சத்தோடு தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதை ஹோமியோபதி மெய்ப்பித்திருக்கிறது.
அதனால் ஒன்றின் சாரத்தை அறிய, அதன் இடையுறவுகளையும் மற்றும் இடைத் தொடர்புகளையும் கவனிக்க வேண்டும் என்பதை ஹோமியோபதி சரியாகவே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
மனிதனுடைய ஆரோக்கியமும், நோயும், மருந்தும், நோய்க்கான நிவாரணியும் இந்த இடையுறவு மற்றும் இடைத் தொடர்பு இவற்றைப் பொருத்தே இருக்கிறது என்பதை ஹோமியோபதி அங்கீகரிக்கின்றது.
எல்லாப் பொருட்களும், எல்லாப் பொருட்களிலும் ஏற்படும் மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதால், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் மருந்தாக்க முடியும் என்பதையும் ஹோமியோபதி சரியாகவே புரிந்துள்ளது.
3.
காரண காரியத் தொடர்பு என்பது இயற்கை விதிகளில் மிகவும் முக்கியமானது என்பதை ஹோமியோபதி உணர்ந்துள்ளது.
ஆர்கனான் மணி மொழி 1-இன் அடிக்குறிப்பில் நோய்க்கான காரணம் அறிய முடியாது என்று மிகச் சரியாகவே டாக்டர். ஹானிமன் அவர்கள் கூறகிறார். ஏனெனில் ஒரு விளைவுக்கு பல காரணங்கள் தேவைப்படும் என்ற நோக்கில் டாக்டர். ஹானிமன் அவர்கள் நோயைப் பார்க்கிறார். ஆகையால்தான் காரண காரியத் தொடர்பிலிருந்து ஆய்வைத் தொடங்காமல், அதன் வெளிப்பாட்டிலிருந்து ஆய்வைத் தொடங்குகிறார். அவர் உயிராற்றல் சீர்கேடுதான் நோய் என்று கூறும்போது அது ஏன் சுர்கேடு அடைகிறது என்பதை அறுதியிட்டுக் கூறவில்லை. அதன் வெளிப்பாடாகிய குறிகளின் தொகுப்பே நோய் என்பதை யதார்த்தத்தைப் புரிந்து உறுதி செய்கிறார்.
உயிராற்றல் சீர்கேடுக்கு அதன் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதுதான் காரணம் என்று கருதலாம். எதிர்பார்ப்பு என்பது அந்த மனிதனின் சாராம்சம் சார்ந்ததாக உள்ளது. எப்போது அந்த மனிதன் அவருடைய சாராம்சத்தினுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லையோ, அப்போது அவன் நோய்க்கான முதற்கூற்றோடு (ஞசநனளையீடிளவைiடிn) இருக்கின்றான். நோய் தோன்றுவதற்கு பகையாற்றல் என்று கூறுவது என்பது தோராயமானது என்பதை நாம் உணர முடிகிறது. நோய் தோன்றுவதற்கு அறுதியான காரணம் கூற முடியாது என்பதை டாக்டர்.ஹானிமன் அவர்கள் சரியாகவே உணர்ந்திருக்கிறார். இயற்கையில் காரண காரியத் தொடர்பு என்பது எல்லையற்றது. முடிவற்றது.
ஆகவே டாக்டர். ஹானிமன் அவர்கள் தூண்டு காரணங்களையும் மற்றும் அடிப்படைக் காரணமான மியாசத்தைக் கூறுவதும் கூட அறுதியான காரணங்கள் இல்லை. தூண்டு காரணங்களும், அடிப்படையான காரணங்களும் மனிதனில் நோயை ஏன் ஏற்படுத்த வேண்டும்? ஏன் ஒரு சிலரிடம் மட்டும் ஏற்படுத்த வேண்டும்? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை இவ்வாறு கூறிக் கொண்டே போகும்போது காரண காரியங்களுக்கு எல்லை இல்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வர வேண்டும்.
அறிவியலில் காரண காரியத் தொடர்பு என்பது முக்கியமானது. அவ்வாறு காரண காரியத் தொடர்பு சரியாக இல்லாத போது, செயல்பாட்டு விளைவிலிருந்து ஆய்வைத் தொடங்கலாம் என்பது தான் தத்துவ இயலாளர் அலெக்ஸாண்டர் ஸ்பிர்கின் கூறுகிறார்.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து டாக்டர். ஹானிமன் அவர்கள் காரண காரியத் தொடர்பை கையாளுகிறார்.
4.
ஆர்கனானில் உயிராற்றல் தொடர்பாகக் கூறப்பட்டவை சற்று குழப்பமாகதான் உள்ளது. இது மொழிபெயர்ப்பால் வந்ததா? அல்லது புரிதலில் வருகின்ற பிழையா?
இயற்கையின் விதியின் அடிப்படையில் நாம் பார்க்கும்போது முதலில் நோயுறுவது உயிராற்றலா? அல்லது உயிர்ப் பண்பா? ஆர்கனானில் ஏவையட குடிசஉந, ஏவையட ஞசinஉiயீடந, ஏவையட நநேசபல, டுகைந ஞசinஉiயீடந என்ற பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எல்லா வார்த்தைகளும் உயிராற்றல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
நிச்சயமாக (ஏவையட குடிசஉந) உயிராற்றல் என்பதும், ஏவையட ஞசinஉiயீடந என்பதும் வேறுவேறுதான்.
உயிராற்றல் என்பது யாவருக்கும் பொதுவானது. உயிர்ப் பண்பு என்பது ஏவையட ஞசinஉiயீடந நபருக்கு நபர் வேறுபடுவது.
இயற்கை விதிப்படி உயிர்ப் பண்பு என்பது ஒரு பொருள், நிகழ்வு அல்லது உயிரியின் சாராம்சம் என்று கூறப்படுகிறது.
உயிராற்றல் தொடர்பாக ஆர்கனானில் கூறப்பட்டவைகளும், சாராம்சம் என்று இயற்கைத் தத்துவத்தில் கூறப்பட்டவைகளும் ஒத்து இருக்கின்றன.
ஆகையால், முதலில் சீர்கேடு அடைவது சாராம்சம்தான் என்பதுதான் சரி. சாராம்சம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். அவனுடைய ஆnhராக்கியத்தையும், நோயையும் தீர்மானிப்பது சாராம்சம் என்றால் மிகையில்லை. டாக்டர். ஹானிமன் அவர்கள் சாராம்சம் (உயிர்ப் பண்பு) சீர்கேடு அடைவதாகக் கூறியிருந்தால்தான், ஒரு மனிதனை முழுமையாக பார்ப்பது, தனித்துவப்படுத்துவது என்பதெல்லாம் சரியாக இருக்கும். அதற்கு மாறாக உயிராற்றல் என்று பார்த்தால் மேற்சொன்னவற்றிற்குப் பொருத்தமாக வராது.
ஒரு மனிதனின் சாரம், மருந்தின் சாரம், நோயின் சாரம் என்று பார்க்கும்போது மட்டுமே, ஆர்கனானைப் புரிதல் என்பது சாத்தியமாகும். ஆர்கனானைச் சரியாகப் பயன்படுத்தலாம்.
துயரரை அறிவது என்பதும், மருந்தை அறிவது என்பதும் சாராம்சத்தை அறிவது என்பதே சரி. உயிராற்றல் என்று கருதும்பட்சத்தில் ஒரு தெளிவு பிறக்கவில்லை.
5.
ஹோமியோபதி மனிதனை முழுமையாகப் பார்க்கிறது. மனிதன் பிறக்கும்போது முழுமையாகப் பிறக்கின்றான். வாழும்போது முழுமையாக வாழ்கின்றான். நோயுறும்போது முழுமையாக நோயுறுகின்றான். மரிக்கும்போதும் முழுமையாக மரிக்கின்றான். இயற்கை விதிப்படி மிகச் சரியாகவே ஹோமியோபதி பார்க்கிறது.
ஒரு முழுமையின் சாரம் அனைத்துப் பகுதிகளிலும் வெயளிப்படும். அப்படி வெளிப்பட்டால்தான் முழுமை. இதை ஆர்கனான் சரியாகவே வெளிப்படுத்துகிறது.
துயரர் ஆய்வு, முழுமைக்குமானதாக இருந்தால், பகுதியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொள்கிறது. பகுதியைப் புறக்கணித்துவிட்டு முழுமையை மட்டும் பார்ப்பதையும், முழுமையைப் புறக்கணித்துவிட்டு பகுதியை மட்டும் பார்ப்பதையும் இயற்கை விதி அனுமதிப்பதில்லை. டாக்டர். ஹானிமன் அவர்கள் முழுமையையும் பார்க்கிறார். அதேசமயம் பகுதியின் தலைமைக் குறியையும் பார்க்கச் சொல்வதன் மூலம் இந்த விதியைச் சரியாகவே பின்பற்றுகிறார்.
6.
டாக்டர். ஹானிமன் அவர்கள் ஒரு யதார்த்தவாதி என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் மெய்ப்பிக்கிறார்.
நோய்க்கான காரணம் அறியாமல் இருக்கும்போது, அதன் வெளிப்பாடாகிய குறிகளின் தொகுப்பே நோய் என்றும், அந்த ஒட்டு மொத்தக் குறிகளை நீக்குவதே குணமாக்கல் என்று கூறுவது யதார்த்தத்தை சரியாகக் கணிப்பதாகும்.
டாக்டர். ஹானிமன் அவர்கள், மனிதன் உணர்வு ரீதியாகப் பிரிக்கப்பட முடியாத முழுமையாக இருக்கிறான் என்பதை சரியாக அறிந்திருந்தும், அந்த மாறுபட்ட உணர்வு நிலைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக யதார்த்தமான உண்மையாகிய, அதன் வெளிப்பாடாகிய ஒட்டு மொத்தக் குறிகளின் தொகுப்புக்கு மருந்து தேர்வு செய்யும்படி சொல்வது மிகவும் யதார்த்தமானது.
ஹோமியோபதியில் ஐயாயிரம் மருந்து வரை இருக்கின்றன. இந்நிலையில் அனைத்து மருந்துகளையும் படிப்பதும், ஞாபகத்தில் கொள்வது என்பதும் சாத்தியமில்லை. அதேபோல ஒரு மனிதனின் தனித்துவத்தை துல்லியமாக அறிவதும் எளிதல்ல. ஒரு மனிதனின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் சிறப்பு இயல்புக் குறிகளின் தொகுப்புக்கு மிகச் சரியான மருந்தை ஒரே சமயத்தில் தேர்வு செய்வதும் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இந்நிலையில் குறை எண்ணிக்கையில் மருந்துகளைப் பற்றித்தெரிந்தவர்கள் கூட ஹோமியோபதியில் பயிற்சி செய்ய முடியும் என்ற யதார்த்தத்தை டாக்டர். ஹானிமன் அவர்கள் ஆர்கனானில் கூறியிருப்பது இயற்கையோடு இயைந்ததாக இருக்கிறது.
ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து, இயற்கையோடு இயைந்த வகையில் யதார்த்தத்திற்கு இணங்க ஆர்னான் என்ற நூல் எழுதப்பட்டது என்பதே மிகவும் சிறப்பானது.
7.
இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்வுக்கும் மற்றும் உயிருக்கும் தனியான பண்பு, சிறப்பான பண்பு, பொதுவான பண்பு, ஆகப் பொதுவான பண்பு என்ற நான்கு வகைப் பண்புகளும் இருக்கின்றன. இதை ஆரோக்கியமான மனிதன், துயரருற்ற மனிதன், மருந்துகள் ஆகிய அனைத்திலும் ஆர்கனான் பார்க்கச் சொல்கிறது.
இதில் தனித்துவமான பண்பே ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்த உதவும் என்றும், அவனுடைய முழுமையையும் வெளிப்படுத்துகின்றன என்பதையும் ஆர்கனான் கூறுகிறது. இது இயற்கை விதியோடு மிகவும் பொருந்துவதாக உள்ளது.
துயரரை அறிவதும், மருந்தை அறிவதும் வீரியத்தை தீர்மானிப்பதும், அளவைத் தீர்மானிப்பதும் மேற்கூறிய பண்பின் அடிப்படையில்தான் என்பதை ஆர்கனான் இன்னமும் துல்லியமாகக் கூற வேண்டும்.
மேற்கூறிய பண்புகள் பற்றிய கணிப்பு மேலும் தெளிவாகப் புரியும்போது மருந்து தேர்வும், வீரியப் பிரச்னையும் இல்லாமல் செய்ய முடியும்.
8.
டாக்டர். ஹானிமன் அவர்கள் பொருள்களில் உள்ள எதிர்மறைப் பண்புகள் பற்றி, நோயையும் உருவாக்கும் ஆற்றல் மற்றும் நோயைக் குணப்படுதூதும் ஆற்றல் என்று மருந்துகளின் எதிர்மறையைப் பற்றிக் கூறினாலும், ஒத்ததை ஒத்தது குணப்படுத்துகிறது என்ற இயற்கை வழிதான் புதிராக உள்ளது.
ஒத்ததின் மூலம் உரியதை அறிதல் என்ற முறையில் மருந்தைத் தெரிவு செய்து கொடுக்கும்போது, அந்த மருந்தில் உள்ள, நோயை ஆரோக்கியமான மனிதனிடத்தில் தோற்றுவித்த ஆற்றலுக்கு, எதிரான ஆற்றல்தான் நோயைக் குணப்படுத்துகிறது.
ஒவ்வொரு பொருளிலும் எதிரிடையான பண்புகள் இருப்பதாலே அது பொருளாக இருக்கிறது. ஆகையால் நோயை உண்டுபண்ணும் ஆற்றலும், நோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் எதிரானவை, அப்போது அங்கே ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும் என்ற கூற்று சரியானதுதானா? என்று இயற்கை விதியை அறிந்தவர்களுக்கு எழுகிறது.
இந்த எதிர்மறை பற்றிய கோட்பாடுதான் ஹோமியோபதியின் சாரமாக உள்ளது. இதுதான் ஆண்டிபதியிலும் செயல்புரிவதாக உள்ளது.
ஆர்கனானில் இது பற்றிய தெளிவு மேலும் தேவைப்படுகிறது. இது தெளிவாகும்போதுதான் ஒத்த நோய்கள் மற்றும் ஒத்திராத நோய்கள் பற்றிய புரிதல் தெளிவாகும்.
எதிர்மறை பற்றிய இயற்கை விதிதான் ஆரோக்கியத்திற்கும், நோய்க்கும், மருந்துக்கும், மாற்றத்திற்கும் அடிப்படையானது. இது தொடர்பாக ஆர்கனானில் கூடுதலாக விளக்குவதன் மூலம் ஆர்கனானில் கூறுகின்ற இயற்கை விதியை முழுமையாக நடைமுறைப்படுத்தலாம்.
9.
அளவு மாற பண்பு மாறும் என்ற கோட்பாடு ஹோமியோபதியில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மருந்தின் அளவு சரியாக இருக்கும்போதுதான் இதமான, விரைவான குணம் ஏற்படுகிறது.
மருந்தின் அளவு குறித்து மிகவும் சரியாகவே கூறப்பட்டுள்ளது.
ஆனால் அளவு மற்றும் பண்பு பற்றி விரிவாகக் கூறப்பட வேண்டும். அளவுதான் ஒவ்வொரு பொருளையும் தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட அளவு கட்டாயம் குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்த வேண்டும். இது தான் இயற்கை விதி.
மனிதனின் ஆரோக்கியம், நோய், மருந்து நிவாரணி அனைத்தும் அளவைப் பொருத்ததே. ஒரு மனிதனில் ஏற்படும் எந்த மாற்றமும் அளவோடு தொடர்புடையது என்பதை இன்னும் விவரிக்கப்பட வேண்டியதுள்ளது.
ஒரு பொருளின் அளவு மாறும்போது பண்பு மாறும் என்பதை மருந்துகளை வீரியப்படுத்தி ஒவ்வொரு வீரியத்திலும் நிரூபணம் செய்யும்போது அறிய முடியும். ஒவ்வொரு அளவும் அதற்குண்டான தனித்துவமான பண்பை வெளிப்படுத்தும். ஆகையால் மருந்துகள் தாய்த்திரவம், 30, 200, 1 எம், 10 எம் என்பது ஒவ்வொரு வீரியத்திலும் நிரூபணம் செய்யும்போதுதான், மனிதனையும், மருந்துகளையும் தனித்துவப்படுத்துவதும், வீரியம் தேர்வு செய்வதும் எளிமையாகும்.
அளவு மாற பண்பு மாறும் என்ற கோட்பாடு ஹோமியோபதியில் பின்பற்றப்படும்போது, அறிதல் இரண்டு வகையாக இருப்பதை ஹோமியோபதி வலியுறுத்துகிறது. புலன் அறிந்த உண்மைகள் மற்றும் புலன் கடந்த உண்மைகள் என்ற புதிய அறிவியலை ஹோமியோபதி புகுத்துகிறது.
நாம் மருந்துகளை வீரியப்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யும்போது, பொருள்களுக்கு மனம் இருப்பதை அறிய முடிகிறது. இது புலன் கடந்த உண்மை. ஒரு மருந்தின் சாரம், ஒரு மனிதனின் சாரத்தின் மீது விணைபுரியும் அதே மருந்து அதன் பண்பை வெளிப்படுத்துகின்றது. இது இன்றைய அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இதைத்தான் திருவள்ளுவர் மெய்யறிவு என்று கூறுகிறார். இதுதான் உண்மை அறிதலாகும்.
இவ்வாறு அளவு மாற பண்பு மாறும் என்ற இயற்கை விதி ஆர்கனானில் பின்பற்றப்பட்டு உலகுக்கு புதிய உண்மைகளைத் தருகின்றது.
10.
ஹோமியோபதி முழுமையைப் பார்க்கிறது. அது ஒரு மனிதன், ஒரு மருந்து, ஒரு நோய் என்று பார்க்கின்றபோதுதான் அது முழுமையைப் பார்ப்பதாக அர்த்தம்.
மனிதன் முழுமையானவன். ஆனால் அவனுக்கு பிறப்பு முதல் வயோதிகம் வரை பல நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிலையும், குறிப்பிட்ட கட்டத்தில் மற்றொரு நிலையால் மறுக்கப்பட்டு, இப்படிப் படிப்படியாக ஒவ்வொரு நிலையும் மறுக்கப்பட்டு, இறுதியில் மறுக்க முடியாத நிலையை அடையும்போது, அந்த மனிதன் மரித்து விடுகின்றான்.
இதை நாம் மருந்தில் காணலாம். இதையே நோயில் காணலாம்.
நோய் ஒன்றுதான். அது சாராம்சத்தின் சீர்கேடு. அது மனிதனின் முதலில் வெளிச்சுற்றில் வெளிப்பட்டு, படிப்படியாக முக்கியமான உறுப்பை நோக்கி நகர்ந்து கடைசியில் மறுக்க முடியாத நிலையில் அவன் உயிர் முடிந்து விடுகிறது.
இவ்வாறு நோயைப் பார்க்கும்போது நோயின் மூன்று நிலைகளாக சோரா, சைக்கோஸிஸ், சிபிலிஸ் என்று பார்த்தால் இது முழுமைக் கோட்பாட்டோடு ஒத்திசைவாக இருக்கும். ஆர்கனானில் இது பற்றிய விளக்கம் இயற்கை விதிக்கு ஒத்து வராததாக உள்ளது.
ஒரு மனிதன் ஒரு முறை நோயுறும்போதே முழு மனிதனும் நோயுற்றதாகக் கூறிவிட்டு, பின்பு நோயற்ற பகுதி இருப்பதாகவும், அங்கே வேறொரு நோய் வருவதாகவும் கூறுவது குழப்பமானது. மேலும், சோரா, சைக்கோஸிஸ் மற்றும் சிபிலிஸ் ஆகிய மியாசங்கள் தனித்தனியாக மனிதனை பாதித்தாகவும் இவை மூன்றுமே மனிதனில் வெவ்வேறு இடங்களில் இருப்பதாகக் கூறுவதும் முரணாக உள்ளது. இது தொடர்பாக ஆர்கனானை ஆய்வுக்கு உட்படுத்தி, போதிய விளக்கம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற இயற்கை விதி சரியாகப் பின்பற்றப்படுகிறபோது நோயைப் பற்றிய குழப்பங்கள் மறையும்.
இந்தக் கோட்பாடு டாக்டர். ஹெரிங் அவர்களின் குணமாகுதல் விதியோடு சரியாக ஒத்து வர வேண்டும். ஒரு நோய், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு இயற்கையாகவே மாறும்போது, பின்னோக்கி வருதல் என்பது சாத்தியமில்லை. இது இயற்கை விதிக்குப் புறம்பானது. இதுவே செயற்கையாக உள்ளமுக்கப்பட்டதாக இருப்பின் டாக்டர். ஹெரிங் அவர்களின் விதி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆகவே, இந்த விதியை மியாசத்தோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும்போது, தனித்தனி மியாசங்கள் என்று வேறுபடுத்துவது இயற்கைக்கு முரணானது. அதையே ஒரு நோயின் மூன்று நிலைகள் என்று புரிந்து கொள்ளும்போது மிகச் சரியாக இருக்கும். டாக்டர். இராஜன் சங்கரன் அவர்கள் நோயைப் பத்து நிலைகளாகப் பார்ப்பது சரியாகவே கணித்ததாகத் தெரிகிறது.
டாக்டர். ஹானிமன் அவர்களுடைய மியாசம் பற்றிய கோட்பாடும், முழுமை பற்றிய கோட்பாடும் இந்த இயற்கை விதியை சரியாகப் பின்பற்றும்போது தீரும் என்பதில் ஐயமில்லை.
நாம் ஆர்கனானை இயற்கை விதிகளோடு ஒப்பீடு செய்து பார்த்தோம். ஆர்கனானில் இயற்கை விதி பல இடங்களில் சரியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
இயற்கை விதியாக எதிர்மறைகள் பற்றிய விதியும், நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற விதியும் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, ஆர்கனான் மேலும் செழுமைப்படும்.
தற்போது உள்ள நிலையில் ஆர்கனான் ஆறாம் பதிப்பு ஹோமியோபதி மருத்துவம் செய்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. இருப்பினும், மேலும் இயற்கை விதிகளை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கும்போது அதில் உள்ள இடைவெளிகள் நிரவப்படும். மேலும் அது பயனுள்ள நூலாக இருக்கும்.
இது தவிர்த்து, டாக்டர் ஜான் ஸ்கால்டன் போன்றவர்கள் சொல்வது போல இது காலாவதியான நூலல்ல. இதற்கு மாற்றாக வேறொரு நூல் வர முடியாது. ஏனெனில், இது இயற்கை விதிகளைத் தழுவியது. இயற்கை விதிகள் என்றும் மாறாது. அது போல ஆர்கனானின் தேவையும், மதிப்பும் என்றும் குறையாது.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக