Add caption |
ஹோமியோபதி நலமாக்கல்கள்
தலைகீழ் சிறுவன்
தலைகீழ் சிறுவன்
10வயது
சிறுவன் அவனுக்கு 4 வருடமாக
மூச்சிரைப்பு, சளி, இருமல் தொந்தரவு இருக்கு
சரியாகவும் சாப்பிடறதில்லை அதில்லாம வயித்துவலியும் இருக்கு அவனுடைய தாயாரிடம்
விசாரித்ததில் "வீட்டில எப்பவும் தலைகீழாக (சிரசாசன நிலையில்) நிற்கிறான்.ஸ்கூலில்
இருந்து வந்தவுடன் ரண்டு தலகாணியப்போட்டு அதுல தலய வச்சு தலகீழா நிக்குறான்,
அப்படி நின்னுகிட்டே டிவி பாக்குறான்,மணிக்கணக்கா
நின்னாலும் அவனுக்கு ஒன்னும் செய்யறதில்ல. அதில்லாம அப்படி நின்னா தான்
நல்லாருக்குங்கிறான். இல்லாட்டி சாப்பிட மாட்டேங்குறான், தூங்க மாட்டேங்குறான்,
தலைகீழா நிக்கலன்னா அவனால இயல்பா இருக்க முடியல. நமக்கு தான் பயமாருக்கு எதாவது
ஆயிடுமோன்னு. மிரட்டினா மட்டும் தான் நேரா நிக்குறான். இல்லைனா தலைகீழாதான்.
எவ்வளவு சொல்லியும் கேக்கமாட்டேங்குறான். ஆனா தலைகீழா
நிக்க விடலைன்னா பித்துப்புடிச்சதுபோல ஆயிடறான்.ஏற்கெனவே சீக்காளியா இருக்கான்
இதுல தலைகீழா நின்னு இன்னும் ஏதாவது வந்துட்டா நம்மால செலவு பண்ணமுடியாதுங்க"
என்று அவனது தாய் மிகவும் வருந்தினார்.
சிறுவனை உற்றுநோக்கியதில்
துறுதுறுன்னு இருக்கான், படிப்பில் கவனம் செலுத்தமுடியலங்கறான் சத்தம் கேட்டா
தாங்கமுடியாம பயந்துக்கறான், எல்லாத்தையும்
கிண்டல் செய்யறான், நோயில் உள்ள தனித்தன்மை தலைகீழாக நிற்பதுதான் என்று முடிவு
செய்து அதற்கான குறிமொழியைத் தேடினால் synthesis repertoryல்
அதற்கான குறிமொழி இல்லை, complete repertoryல் தான்
அதற்கான குறிமொழி கிடைத்தது.
Gestures,makes stands on his head ஒரே மருந்து tanacetum vulgare.
இந்த மருந்தைப்பற்றிய
குறிப்பு boericke
material medicaவில் மட்டுமே உள்ளது வேறு
மெட்டீரியா மெடிக்காவில் இல்லை போயரிக்கிலும் மருந்தின் மனக்குறிகள் முழுமையாக
இல்லை. அதிலும் சிறுவனின் துயரர் குறிப்போடு முழுமையாக ஒத்துவரவில்லை. இருந்தாலும்
தலைகீழாக நிற்பதுதான் தனித்தன்மை அதோடு பொருந்திவரும் மருந்தே இந்த சிறுவனின்
துயர் துடைக்கும் மருந்து என்ற அடிப்படையில் அந்த மருந்தை 30வது வீரியத்தில் ஒரு வேளை
மட்டும் கொடுக்கப்பட்டது.
அதனுடன்
15 நாட்களுக்கான தொடர் மருந்துகளும்
கொடுக்கப்பட்டது.
15 நாள்
கழித்து வந்த சிறுவனிடம் நல்ல மாற்றம். விசாரித்ததில் அவனுடைய மூச்சிரைப்பு, சளி,இருமல் மற்றும் வயிற்றுவலி
அனைத்தும் குறைந்துள்ளது.
அவன் தாயார் " சார் இப்பல்லாம் நல்லா
சாப்பிடறான்,தூங்கறான்,
தலைகீழாகவும்
நிற்கறதில்லை, நல்லா
இருக்கான் சார். எப்படி சார் 4 வருஷமாக தீராத
அவனோட பிரச்னை 15 நாள்ல சரியாயிருக்கு? ஆச்சரியம் தான்." என்றார்.
மீண்டும் தொடர்
மருந்துகள் தந்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னேன்.
ஒரு மாதம் கழித்து
வந்தபொழுது எந்த தொந்தரவும் சிறுவனிடம் இல்லை. துயர் முழுதும் நீங்கி நலமாக
உள்ளான்.
“ எல்லா புகழும்
ஹானிமனுக்கே”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக