சமீபத்தில் நீங்கள் ‘மனித இனம் வளர்கிறது; ஆனால் வாழ்வதில்லை’ என்றீர்கள். தயவு செய்து எங்களுக்கு வாழும் கலையை விளக்குங்கள். அதன் மூலமாக மரணம் எங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கட்டும்.
ஆரோக்கியத்தின் அர்த்தம்
வாழ்க்கையில் சாதிப்பதற்காகப் பிறந்தவன் மனிதன். ஆனால் எல்லாமே அவன் கையில்தான் இருக்கிறது. அவன் அதைத் தவற விடலாம். அவன் தொடர்ந்து உரிமை.
வளருவது என்பது ஒவ்வொரு தருணமும் வாழ்க்கையில் லட்சியம் குறித்து ஆழமாக முன்னேற வேண்டும். அதாவது மரணத்தை விட்டுத் தள்ளிப் போவது- மரணத்தை நோக்கிப் போவதல்ல. வாழ்க்கையை நோக்கி ஆழமாகப் போகும்போது, உனக்குள்ளிருக்கும் இறவாத் தன்மையை நீ புரிந்து கொள்வாய். நீ மரணத்தை விட்டு விலகிப் போகிறாய். அப்போது மணரம் என்பது உடை மாற்றுவது, வீடு மாறுவது, ஒரு வடிவ மாற்றம். எதற்கும் மரணமில்லை; எதுவும் சாகாது என்று உணருகிற தருணம் வரும். மரணம்தான் மிகப் பெரிய மாயை.
இப்படி வளர்வதற்கு ஒரு மரத்தைக் கவனி. மரம் வளரும்போது அதன் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவுகின்றன. அங்கே ஒரு சமநிலை ஏற்படுகிறது. மரம் மேலே வளரும்போது அதன் வேர்கள் இன்னும் ஆழமாக பூமிக்குள் போய்க் கொண்டிருக்கும். சின்ன வேர்களை வைத்துக்கொண்டு ஒரு மரம் நூற்று ஐம்பது அடி வளரமுடியாது. சின்ன வேர்கள் மரங்களைத் தாங்காது. வாழ்க்கையில் வளருவது என்பது உனக்குள்ளே நீ வளருவது. அங்கேதான் உன் வேர்கள் இருக்கின்றன.
எனக்கு வாழ்க்கையில் முதல் லட்சியம் தியானம்தான். மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதற்குக் குழந்தைப் பருவம்தான் சரியான சமயம். உங்களுக்கு வயதானால் நீங்கள் மரணத்தை நெருங்குகிறீர்கள். அப்போது தியானத்திற்குப் போவது மேலும் மேலும் கடினமாகும். தியானம் என்றால் இறவாத் தன்மைக்கு, சாசுவதத்திற்கு, கடவுள் தன்மைக்குப் போகிறீர்கள். இதற்குத் தகுதியான நபர் குழந்தைதான். காரணம் அதற்கு எந்த அறிவு, மத, படிப்பு போன்ற பலவித குப்பைச் சுமைகள் இல்லை. அது வெகுளி. ஆனால் துரதிரு~;டவசமாக அந்த வெகுளித்தனத்தை அறியாமை என்று வசைபாடுகிறோம். அறியாமைக்கும், வெகுளித்தனத்திற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் அவை இரண்டும் ஒன்றல்ல. வெகுளித்தனத்தைப் போலவே, அறியாமையும் தெரியாத நிலைதான். ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதை முழு மனித இனமும் சரியாகக் கவனிக்கவில்லை. வெகுளித்தனம் அறிவானது அல்ல. அதே சமயம் அதற்கு அந்த ஆசையுமில்லை. அது திருப்தியாக முழு நிறைவாக இருக்கிறது.
வாழ்கிற கலையின் முதல் அம்சமே அறியாமைக்கும் வெகுளித்தனத்திற்கும் எல்லை பிரிப்பதுதான். வெகுளித்தனத்தை ஆதரிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். காரணம் குழந்தை அதனுடன் ஒரு பெரிய பொக்கி~த்தைக் கொண்டு வந்திருக்கிறது. கடும் முயற்சிக்குப் பிறகு ஞானிகள் இதைக் கண்டுபிடிக்கிறார்கள். தாங்கள் மறுபடியும் குழந்தையாகி விட்டதாக, மறுபிறப்பு எடுத்திருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.
நீ வாழ்க்கையை இழந்து விட்டதை புரிந்து கொண்டால், கொண்டுவர வேண்டிய முதல் லட்சியமே வெகுளித்தனத்தை மீண்டும் திரும்ப கொண்டு வருவதுதான். உன் அறிவை, புனித கருத்தை, மதத்தை, பக்தியை, தத்துவத்தைத் தூக்கிப் போடு. மறுபிறப்பு எடு. வெகுளியாக மாறு. அது உன் கையில்தான் இருக்கிறது. உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும்- இரவல் வாங்கியதை, பாரம்பரியத்தை, சடங்குகளை, பெற்றோர், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள் கொடுத்ததை எல்லாம் துடைத்துப் போட்டுச் சுத்தப்படுத்து. இதிலிருந்து வெளியே வா. மறுபடியும் எளிமையாகு. மறுபடியும் குழந்தையாகு. தியானத்தினால் மட்டுமே இந்த அற்புதம் நடக்கும்.
தியானம் என்பது ஒரு எளிமையான, வினோதமான அறுவை சிகிச்சை முறை. உன்னுடையது அல்லாதவற்றையெல்லாம் உன்னை விலக்கி வெட்டிப்போடும். அது உன்னுடைய ஆதாரமான இருப்பை மட்டும் காக்கும். மற்றவையெல்லாம் எரித்துப் போட்டு உன்னை நிர்வாணமாக தனிமையில் வெயிலில், காற்றில் நிறுத்தும். பூமியில் வந்திறங்கிய முதல் மனிதனைப் போல. எதுவும் தெரியாமல், புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியவனைப்போல, தேடுதலை நோக்கிப் போகிறவனைப் போல, புனித யாத்திரை போகிறவனைப்போல உணர்வீர்கள்.
இரண்டாவது குறிக்கோள் புனித யாத்திரை. வாழ்க்கை என்பது தேடல்; ஆசையல்ல. ஆனால் இந்த தேடல் என்பது இப்படியாக வேண்டும் அப்படியாக வேண்டும் என்பதல்ல. ஒரு நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும், பிரதமராக வேண்டுமென்பதல்ல. அது ‘நான் யார்?’ என்கிற தேடல். தான் யாரென்று தெரியாமலே, யாரைப்போலவோ ஆகவேண்டும் என்று விரும்புவது வினோதமானது. இந்தத் தருணத்தில் தாங்கள் யார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய இருப்புடன் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. ஆனால் எதுவாகவோ ஆக வேண்டுமென்ற இலக்கு மட்டுமே இருக்கும். அப்படி ஆவது என்பது ஆன்மாவின் நோய். இருப்பதுதான் நீ. உன்னுடைய இருப்பை கண்டுபிடிப்பதுதான் வாழ்க்கையின் துவக்கம். பிறகு ஒவ்வொரு தருணம் கண்டுபிடிப்புதான். ஒவ்வொரு தருணமும் ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். ஒரு புதிய புதிர் தன் கதவுகளைத் திறக்கும். ஒரு புதிய காதல் உனக்குள் வளரத் துவங்கும். இதுவரையில் உணராத ஒரு புதிய பரிவு, அழகு, நல்லது குறித்த ஒரு வசியம் ஏற்படும்.
ஒரு சிறு புல் கூட உங்களுக்கு மிக முக்கியமாகப் படுகிற அளவிற்கு வசியப்படுவீர்கள். ஒரு பெரிய நட்சத்திரத்தைப் போல் இந்தச் சிறிய புல் கூட இருத்தலுக்கும் மிகவும் முக்கியமானது என்று வசியம் உங்களுக்குத் தெளிவுபடுத்தும். இந்தப் புல் இல்லையென்றால் இருத்தலில் ஏதோ குறைவாக இருப்பதாகத் தோன்றும். இந்தச் சிறு புல் தனித்தன்மையானது. அதற்கு மாற்று கிடையாது. அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.
இந்த வசியம் உங்களுக்கு புதிய நட்புகளை உருவாக்கித்தரும். மரங்கள், பறவைகள், மிருகங்கள், மலைகள், நதிகள், கடல், நட்சத்திரங்களுடன் நட்பு ஏற்படும். இந்த அன்பு, நட்பு வளரும்போது அது செழுமையாக இருக்கும்.
நீங்கள் அதிகம் வசீகரிக்கப்படும்போது, வாழ்க்கை பெரிதாகும். அது இப்போது சின்ன குட்டையல்ல் அது ஒரு பெரிய கடல். அது நீங்கள், உங்கள் மனைவி, குழந்தைகள் என்று கட்டுப்படுத்திக் கொள்ளாது. கட்டுப்படவே செய்யாது. முழு இருத்தலே உங்கள் குடும்பமாகிவிடும். முழு இருத்தலே உங்கள் குடும்பமாகாத வரையில் உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாது. காரணம் எந்த மனிதனும் தீவல்ல. நாம் எல்லோருமே இணைக்கப்பட்டவர்கள். நாம் ஒரு பெரிய கண்டம். பல லட்சம் வழிகளில் இணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த முழுமை மீது நம் இதயம் முழமையாகக் காதல் கொள்ளாவிட்டால், அதே அளவிற்கு நமது வாழ்க்கை சுருங்கும்.
தியானம் இந்த வசியத்தைக் கொடுக்கும். உலகமே நமது என்கிற மிகப்பெரிய உணர்வு ஏற்படும். இது நம் உலகம்; நட்சத்திரங்கள் நம்முடையவை. இங்கே நாம் அந்நியர்கள் அல்ல. இருத்தலோடு நாம் ஆழமாக பிணைந்திருக்கிறோம். நாம் அதன் பகுதி. நாம்தான் அதன் இதயம்.
இரண்டாவதாக, தியானம் உங்களுக்குள் ஒரு பெரிய மௌனத்தைக் கொண்டுவரும். காரணம் குப்பை நாளங்கள் போய்விட்டன. அறிவின் ஒரு பகுதியான சிந்தனைகளும் போய்விடும். ஓர் ஆழ்ந்த மௌனம். உங்களுக்கே வியப்பாக இருக்கும். மௌனம் என்கிற ஒரு இசை மட்டுமே இருக்கும். இந்த மௌனத்தை ஒரு வடிவமாகக் கொண்டு வருகிற முயற்சிதான் இந்த இசை.
புராதன கிழக்கிலிருந்த பல துறவிகள் சிறந்த கலை, இசை, கவிதை, ஓவியம், எழுத்து எல்லாமே தியானத்தின் மூலமாகப் பிறந்ததாகவே வலியுறுத்தினார்கள். புனித யாத்திரைக்குத் தயாராக இல்லாதவர்களுக்காக, தெரியாத வி~யத்தை தெரிந்த உலகத்திற்குக் கொண்டு வருகிற முயற்சிதான் இது. புனித யாத்திரை போகத் தயாராகாதவர்களுக்கு இது ஒரு பரிசு. அனேகமாக ஒரு பாடலோ, அல்லது சிலையோ அவரை அதன் மூலத்தைத் தேடிப் போக வைக்கலாம்.
அடுத்த முறை கௌதம புத்தர் அல்லது மகாவீரர் கோயிலுக்குப் போகும்போது மௌனமாக அமர்ந்து அந்தச் சிலையைக் கவனியுங்கள். அதன் வடிவமைப்பு, அளவைப் பார்க்கும்போது நீங்கள் மௌனமாகி விடுவீர்கள். அப்படி அமையப்பெற்றது. அது தியானத்தின் சிலை. அதற்கும் கௌதம புத்தருக்கும், மகாவீரருக்கும் தொடர்பில்லை.
அந்தப் பரந்த சமுத்திர நிலையில் நமது உடல் ஒருவித தோற்றி நிலையில் இருக்கும். நீங்களே கவனிப்பீர்கள். ஆனால் எச்சரிக்கையாக மாட்டீர்கள். நீங்கள் கோபப்படும்போது கவனித்திருக்கிறீர்களா? உடல் ஒரு தோற்றத்தில் இருக்கும். கோபத்தில் நீங்கள் உங்கள் கைகளை, முட்டிகளை விரித்து வைத்திருக்க முடியாது. கோபத்தில் நீங்கள் புன்னகை புரிய முடியாது. உங்களால் முடியுமா? குறிப்பிட்ட சில உணர்ச்சிகளில் நமது உடல் ஒரு தோற்றத்தை எடுக்கும். சின்ன வி~யங்களுக்குக் கூட உள்ளே ஓர் ஆழமான தொடர்பு உண்டு.
பல நூற்றாண்டுகளாக, குறிப்பிட்ட ரகசிய விஞ்ஞானம் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் அனுபவத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது. படிப்பு, எழுத்து மூலமாக வருவதில்லை. ஆனால் உள்ளே ஆழமாகப் போகக்கூடிய ஒன்றிலிருந்து, மௌனத்தின் மூலமாக தியானத்தின் மூலமாக, அமைதியின் மூலமாக உள்ளே செல்கிறது. இந்த மௌனம் வளரும்போது, உன் நட்பு, அன்பு வளர்கிறது. வாழ்க்கை தருணத்திற்குத் தருணம் நாட்டியமாடும்; உற்சாகப்படும்; கொண்டாடும்.
உலகம் முழவதிலும், ஒவ்வொரு கலாசாரத்திலும், ஒவ்வொரு சமுகத்திலும், சில நாட்கள் பண்டிகைகளுக்கு ஏன் ஒதுக்கினார்கள் என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? இந்தப் பண்டிகைகள்தான் உனக்குக் கொடுக்கப்படுகிற ந~;ட ஈடு. சமூகம் உன் வாழ்க்கையின் எல்லாக் கொண்டாட்டங்களையும் பிடுங்கிக் கொண்டு விட்டது. அதற்கு ஈடாக எதையுமே கொடுக்காவிட்டால் உன் வாழ்க்கையே கலாசாரத்திற்கு ஆபத்தாக முடியும். ஒவ்வொரு கலாச்சாரமும் உனக்கு ஈடாக எதையாவது கொடுக்காவிட்டால் நீ எப்போதுமே ஒரு வித துன்பத்தில், சோகத்தில் இருப்பதாக உணர்வாய். ஆனால் இந்த ஈடுகள் எல்லாமே போலியானவை. ஆனால் உன்னுடைய உள் உலகத்தில் தொடர்ந்து ஓர் ஒளி, பாடல், உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கு ஈடாக எதையாவது கொடுக்காவிட்டால் நீங்கள் கொதித்தெழுந்து ஓர் ஆபத்தான நிலையை உருவாக்கி விடுவீர்கள் என்று நினைக்கும் போதுதான் சமூகம் உங்களுக்கு அந்த ஈட்டைத் தருகிறது. ஒடுக்கத்திலிருந்து உங்களை வெளியேற்றிக் கொள்ள சமூகம் உங்களை அனுமதிக்கிறது. அதுவே உண்மையான கொண்டாட்டமல்ல. அது உண்மையாக இருக்கவும் முடியாது. உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, வாழ்க்கைக்குள் நடக்க வேண்டும்.
உண்மையான கொண்டாட்டங்கள் தேதியிட்டு நடக்க முடியாது. நுவம்பர் மாதம் ஒண்ணாந் தேதி என்பதல்ல. இது வினோதமானது. வருடம் முழவதும் நீங்கள் துன்பத்தில் இருப்பீர்கள். நவம்பர் ஒண்ணாந் தேதி மட்டும் நீங்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு, கூத்தாடுவீர்கள். ஒன்று அந்தத் துன்பம் போலியானதாக இருக்க வேண்டும்; அல்லது நவம்பர் ஒண்ணாந் தேதி போலியானதாக இருக்க வேண்டும். அந்த நவம்பர் ஒண்ணாந் தேதி போய்விட்டால், நீங்கள் மறுபடியும் உங்கள் இருட்டுப் பள்ளத்திற்குள் போய்விடுவீர்கள். எல்லோருக்கும் ஒரு துன்பம், ஒரு பதற்றம்.
வாழ்க்கை என்பது ஒரு தொடர் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். வருடம் முழவதும் பண்டிகை ஒளி வீச வேண்டும். நீ வளர்ந்தால் மட்டுமே நீ மலர முடியும். சின்ன வி~யங்களைக் கூட கொண்டாட்டமாக மாற்ற முடியும். நீ செய்கிற ஒவ்வொன்றும் உன்னை வெளிப்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். அதில் உன்னுடைய கையெழுத்து இருக்க வேண்டும். பிறகு வாழ்க்கை முழுவதுமே கொண்டாட்டம்தான்.
உனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நீ படுக்கையில் இருக்கிறாய். அந்த தருணத்தைக் கூட, படுக்கையில் கிடக்கிற அந்த நேரத்தைக் கூட அழகாக, உற்சாகமாக மாற்றிக் கொள்வாய். ஓய்வாக, பொழுது போக்கும் ஒரு தருணமாக, தியான நேரமாக, இசை, அல்லது கவிதை கேட்கிற நேரமாக மாற்றிக் கொள்ள முடியும். நீ நோயிலிருப்பதற்காகத் துக்கப்பட வேண்டியதில்லை. எல்லோரும் அலுவலகத்தில் இருக்கிறார்கள். நீ மட்டும் உன் படுக்கையில் ஒரு ராஜாவைப் போல பொழுது போக்குகிறாய். யாரோ உனக்காகத் தேநீர் தயார் செய்கிறார்கள். வாழ்க்கை உண்மையான அர்த்தங்களை உனக்காகப் பாடிக் கொண்டிருக்கும். ஒரு நண்பர் உன்னிடம் வந்து உனக்காகப் புல்லாங்குழல் வாசிக்க ஒப்புக் கொண்டிருப்பார். மருந்தைவிட இவையெல்லாம்தான் முக்கியமானவை. உனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரைக் கூப்பிடு. அதைவிட முக்கியம், உன்னை நேசிப்பவர்களைக் கூப்பிடு. நேசத்தை விட மிகச் சிறந்த மருந்து கிடையாது. அழகை, இசையை, கவிதையை உருவாக்குபவர்களைக் கூப்பிடு. கொண்டாட்ட எண்ணத்தை விட சிறந்த மருந்து எதுவுமேயில்லை.
மிகக்குறைந்த சிகிச்சை தான் மருந்து. ஆனால் நாம் இதையெல்லாம் மறந்துவிட்டு, மருந்துகளை நம்பி சிடுசிடுவென்று சோகத்தோடு இருக்கிறோம். அலுவலகத்தில் நடக்கிற மிகப்பெரிய சந்தோ~த்தை இழந்து விட்டதாக உணர்கிறோம். அலுவலகத்தில் நாம் படுதுன்பத்தில் இருந்தோம். ஒரு நாள் ஓய்வு. பிறகு அதே துன்பத்தைப் பிடித்துக் கொள்கிறோம். அதை விட மறுக்கிறோம்.
எல்லாவற்றையும் ஆக்கபூர்வமாக ஆக்குங்கள். மோசமானவற்றைக் கூட சிறந்ததாக மாற்றிக்கொள். அதைத்தான் ஒரு கலை என்கிறேன். ஒரு மனிதன் முழு வாழ்க்கையை வாழ்ந்து ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொரு படியையும் அழகாக, அன்பாக, மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டால் மரணம் கூட அவன் வாழ்க்கைப் பயணத்தில் அவன் அடைகிற உச்சகட்ட நிறைவாக அமையும்.
அந்தக் கடைசி வேலை- எல்லோருக்கும், ஒவ்வொரு நாளும் நடக்கிறமாதிரி மரணம் அருவருப்பாக இருக்காது. மரணம் என்பது அருவருப்பு என்றால், உன் முழு வாழ்க்கையுமே வீண்தான்.
மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான ஏற்றுக் கொள்ளுதலாக இருக்க வேண்டும். தெரியாத இடத்திற்கு ஒரு மகிழ்ச்சியான நுழைவாக, நண்பர்களிடமிருந்தும், பழைய உலகத்திலிருந்தும் ஒரு மகிழ்ச்சியான பிரிவு. அதில் எந்த சோகமும் இருக்கக் கூடாது.
தியானத்திலிருந்து துவங்கு. மௌனம், அமைதி, பேரின்பம், வசியம் எல்லாமே உனக்குள் எல்லாமே வளரத் துவங்கும். பிறகு தியானத்திலிருந்து கிடைக்கிற எல்லாவற்றையும் வாழ்க்கைக்குக் கொண்டு வா. அதைப் பகிர்ந்து கொள். பகிர்கிற எல்லாமே வளரத் துவங்கும். மரணத்தை எட்டிப் பார்க்கிற தருணத்தில் மரணம் என்பதே இல்லை என்பது உனக்கு தெரியவரும். எல்லோரிடமிருந்து விடை பெறலாம். அப்போது கண்ணீரோ, சோகமோ இருக்காது. அது ஆனந்தக் கண்ணீராக் இருக்கலாம். சோகம் இருக்காது.
மருந்திற்கும் தியானத்திற்கும் என்ன தொடர்பு?
‘தியானம்’ ‘மருந்து’ என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு ஒரே வேர்தான். மருந்து என்பது உடல் ரீதியாகக் குணப்படுத்துவது. தியானம் என்பது ஆன்மீக ரீதியாக முழுமையாகக் குணப்படுத்துவது. இரண்டுக்குமே குணமாக்கும் தன்மைகள் உண்டு.
இன்னொரு வி~யத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். ‘குணப்படுத்துவது’ ‘முழுமை’ இரண்டு வார்த்தைகளுமே ஒரு வேரிலிருந்து தான் வருகின்றன. குணப்படுத்துவது என்பது முழுமையானது. அதில் எதுவுமே விடுபடுவதில்லை. இன்னொரு வார்த்தை- அதாவது புனிதம் அதற்கும் அதே வேர்தான். குணப்படுத்துவது, முழுமை, புனிதம் எல்லாமே ஒரே வேரிலிருந்துதான் வருகின்றன.
தியானம் குணப்படுத்துகிறது; உன்னை முழுமையாக்குகிறது. அப்படி முழுமையானால் அதுதான் புனிதம்.
புனிதன் என்றால் ஏதோ மதத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. ஒரு தேவாலயத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பொருள் உனக்குள்ளே நீ மொத்தமாக, முழுமையாக, எதையும் இழக்காமல் நிறைவாக இருக்கிறாய் என்பதுதான்.
மதம் என்பது உள் நோக்கிய பயணம். தியானம் அதற்கான வழி. தியானம் என்ன செய்கிறதென்றால், எவ்வளவு ஆழமாக முடியுமோ அந்த அளவிற்கு உன் உள் உணர்வுக்குள் உன்னை அழைத்துச் செல்கிறது. உன் சொந்த உடல் கூட ஏதோ வெளியில் இருப்பதைப் போல ஆகிறது. உன் இருப்பின் மையத்திலிருக்கும் இதயம் கூட வெளியே இருக்கிறது. உன் உடல், இதயம், மனம் மூன்றும் வெளியே இருப்பதாகப் பார்த்தால், உன் இருப்பின் மையத்திற்கு வந்துவிட்டதாக பொருள்.
மையத்திற்கு வருவது என்பது உன்னையே மாற்றுகிற ஒரு வெடிச் சிதறல். மறுபடியும் பழைய மாதிரி ஆகமுடியாது. காரணம் உடல் என்பது வெறும் வெளி கூடு என்பது உங்களுக்குத் தெரியும். மனம் சற்று உள்ளே. ஆனால் உள் உச்சத்தில் இல்லை. இதயம் இன்னும் சற்று உள்ளே. ஆனாலும் உள் மையத்திலில்லை. நீ அதிலிருந்து அடையாளம் காணப்படாமல் இருக்கிறாய்.
முதல் முறையாக நீ உருப்பெற்ற உணர்வு ஏற்படுகிறது. அந்தப் பழைய- சிதறிய நபராக இல்லை. முதல் முறையாக ஒரு பிரம்மாண்ட சக்தி வந்துவிட்ட உணர்வு. இதுவரையில் நீ உணராத விரையமாகாத ஒரு சக்தி. உடலுக்கு, மனதிற்கு, இதயத்திற்குத்தான் மரணம்; உனக்கில்லை என்கிற உணர்வு வருகிறது.
நீ முடிவற்றவன். நீ எப்போதுமே இங்கிருக்கிறாய். எப்போதும் இங்குதான் இருப்பாய். வௌ;வேறு வடிவத்தில் இருந்து இறுதியாக வடிவமில்லாமல் இருப்பாய். ஆனால் உன்னை அழிக்கவே முடியாது. அழிக்க முடியாதவன் நீ. இது எல்லா பயத்தையும் உன்னிலிருந்து எடுக்கிறது. பயம் மறையும் போது விடுதலை தோன்றும். அந்த பயம் மறைகிற போதுதான் அன்பு தோன்றும். இப்போது நீ பகிர்ந்து கொடுக்கலாம். நீ வேண்டுமென்கிற அளவுக்குக் கொடுக்க முடியும். காரணம் இப்போது நீ வற்றாத ஜீவ நதியாகி விட்டாய்.
தியானம் உன்னை முழுமையாக்குகிறது. உன்னைப் புனிதமாக்குகிறது. பசி, தாகம், தேடல், இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு நீங்கள் குறையாத ஊற்றாக இருக்கிறீர்கள். நீங்களே ஒளியாகிறீர்கள். உங்கள் இருப்பின் எஜமானனாக ஆவதற்கான வழிதான் தியானம். கடவுள் தேவையில்லை. வினா- விடை தேவையில்லை. எந்தப் புனித நூலும் தேவையில்லை. இதற்காக யாரும் கிறித்துவனாகவோ, யூதனாகவோ, இந்துவாகவோ ஆக வேண்டியதில்லை. அதெல்லாம் வெறும் முட்டாள்தனம். உனக்குத் தேவையெல்லாம் உன் மையத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான். அதைக் கண்டுபிடிக்க சிறந்த வழி தியானம்தான்.
அது உன்னை முழுமைப்படுத்தும், ஆரோக்யமான ஆன்மிகம், நீ பெரும் பணக்காரனாகி, உலகத்தின் ஆன்மிக வறுமையையெல்லாம் ஒழிப்பாய். அதுதான் உண்மையான வறுமை.
உடலின் வறுமை என்பது உணவு, உடை, இருப்பிடம். இதைப் போக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போதும். ஆனால் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் உனக்குப் பேரின்பத்தைக் கொடுக்கவே முடியாது. அது அவர்கள் எல்லைக்கப்பாற்பட்டது. உலகம் உனக்கு தரக்கூடிய எல்லாமே உன்னிடம் இருக்கும். ஆனால் அமைதி, தெளிவு, மௌனம், பரவசம் இல்லையென்றால் நீ ஏழைதான்.
உண்மையில், முன்பு எப்போதுமில்லாத வறுமையை உணர்வீர்கள். காரணம் அங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. நீங்கள் தங்க மாளிகையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பிச்சைக்காரர் என்பது உங்களுக்குத் தெரியும். தங்க மாளிகையே ஒரு முரண்பாடாக தெரியும். உள்ளே எதுவுமில்லை என்பதைக் காண்பீர்கள். நீங்கள் வெறும் வெறுமை.
அதனால்தான் மனித இனம் அதிக புத்திசாலியாகும்போது, அதிக முதிர்ச்சி வரும்போது பல பேர் அர்த்தமற்றதாக உணருகிறார்கள். அதிக அதிகமான மக்கள் ‘வாழ்க்கை என்பது ஒரு விபத்து; வாழ்வதே வீண்’ என்று நினைக்கிறார்கள்.
மேற்கே மனோதத்துவத்தின் சமீபத்திய வளர்ச்சி ஒன்றை உணர்த்துகிறது. தற்கொலைதான் ஒரே தீர்வு என்கிறது. உன் உள் உலகம் தெரியாமல், வெளி உலகத்தில் எனக்கு எல்லாமே கிடைக்கும்போது தற்கொலைதான் தீர்வு என்றுதான் தோன்றும்.
தியானம் உன்னை உள்ளே பணக்காரனாக்குகிறது. பிறகு தற்கொலை என்கிற கேள்வியேயில்லை. நீ உன்னை அழிக்க நினைத்தாலும் முடியாது. வழியே இல்லை. நீ அழிக்க முடியாதவனாகிறாய். இறவாத் தன்மைதான் பெரிய விடுதலை என்று தெரிகிறது. மரணத்திலிருந்து, நோயிலிருந்து, வயோதிகத்திலிருந்து விடுதலை. அவையெல்லாமே வந்து போகும். ஆனால் நீங்கள் தொடப்படாமல், காயப்படாமல் இருக்கிறீர்கள். உன் உள் ஆரோக்யம் நோய்க்கு அப்பாற்பட்டது.
அது அங்கே இருக்கிறது. கண்டுபிடிக்க வேண்டியதுதான்.
மருத்துவ விஞ்ஞானம், உடலியல், மனோதத்துவம் எல்லாமே முதிர்ச்சியடையாதவை. காரணம் அவை மனித இனத்தின் மீது மேலெழுந்தவாரியாகவே வேலை செய்கின்றன. மனிதனின் மையத்திற்கு அவை வழி தேடுவதில்லை. அவை, மனதைத் தாண்டி ஓர் உள்ளுணர்வு மையம் இருப்பதாக ஏற்றுக் கொள்வதில்லை. மரணத்தைத் தாண்டிய ஓர் உள்ளுணர்வு. இத்துறைகளைச் சேர்ந்தவர்கள் அதை மூடிவிட்டார்கள். உள்ளுணர்வு மையத்தை முழு பெரும் முயற்சிகள் எடுத்து கண்டுபிடித்ததை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
உடலியல் அல்லது மருத்துவ நிபுணர்கள் பல நேரங்களில் கண்டு பிடிக்கும் நோய் தவறாகப் போவதற்குக் காரணம் அவர்களுடைய பார்வை முழுமையானதாக இல்லை. அவர்கள் மனிதனை ஒரு பொருளாகவே புரிந்திருக்கிறார்கள். மனதை அந்தப் பொருளிலிருந்து வரும் உபரியாகவே பார்க்கிறார்கள். ஒரு நிழல் வடிவம்- அதற்கு மேலில்லை அவர்களுக்கு. முடிவில்லாதது எதுவுமில்லை. அழியாதது என்று எதுவுமேயில்லை. அவர்கள் மனித ஜீவன்கள் குறித்து ஒரு வடிவம் அமைத்திருக்கிறார்கள். அதன் மூலமாக புத்திசாலிகளிடம் ஓர் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த முழுமையான நிராகரிப்பு காரணமாக அவர்களிடம் விஞ்ஞான அணுகுமுறையில்லை. ஒரு மத வெறியர் அல்லது அரசியல்வாதியின் மூட நம்பிக்கையைப் போலத்தான் இதுவும்.
மனித இனத்தின் உள்ளுணர்வை ஆராய்ந்து, அதன் உள்வானத்தைப் பார்த்து, ‘அது உண்மையில்லை, அது வெறும் கனவு, வெறும் நிழல்தான்’ என்று நிரூபிக்கிற வரையில் அதை நிராகரிக்கும் உரிமை விஞ்ஞானத்திற்கு இல்லை.
அவர்கள் ஆராயவில்லை. அவர்களாக அப்படி நினைத்துக் கொண்டார்கள். அது வெறும் பொருள் என்கிற எண்ணம். விஞ்ஞான உலகத்தின் மூட நம்பிக்கை, கடவுளைப் போல சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் மத உலகத்தின் மூடநம்பிக்கைகள்.
விஞ்ஞானமே தூய்மையான விஞ்ஞானமல்ல் அது இருக்கவும் முடியாது. காரணம் விஞ்ஞானி இன்னும் வெகுளியாகவில்லை. தவறான எண்ணங்களிலிருந்து விடுபடவில்லை. தன்னையும் தன் மனநிலையையும் மீறி அவர்கள் உண்மையைத் தேடிப் போகத் தயாராக இல்லை.
மேற்கத்திய மருத்துவம் மனிதனை ஒரு முழு உயிர்ப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நோய் தாக்கிய பகுதியில் மட்டும் மனிதனுக்கு சிகிச்சை தேவைப்படவில்லை என்று பேசினீர்கள். இதைப் பற்றி மேலும் சொல்லமுடியுமா?
உதாரணமாக, உங்களுக்குத் தலைவலி. உடனே ஓர் ‘ஆஸ்ப்ரோ’ தலைவலி மாத்திரை கொடுப்பார்கள். அந்த மாத்திரை உங்களுக்கு நிவாரணமல்ல. வலி என்கிற உணர்வு உனக்கு இல்லாமல் செய்கிறது அவ்வளவுதான். அந்த மாத்திரை உன் தலைவலியை அழிக்காது. அந்த வலியைப் பற்றி உனக்குத் தெரியாமல் செய்கிறது. அது உன்னைக் குழப்புகிறது. தலைவலி அங்கேயே இருக்கிறது. ஆனால் அதை உணர்வதில்லை. ஒரு மாதிரியான மறதியை ஏற்படுத்துகிறது.
ஆனால் முதலில் தலைவலி ஏன் அங்கே இருக்கிறது? சாதாரண மருந்து அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நீ ஒரு மருத்துவரிடம் போனால் முதலில் ஏன் தலைவலி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். உனக்குத் தலைவலி இருக்கிறது. பிரச்னை அவருக்கு மிகவும் சாதாரணமானது. ‘அறிகுறி இருக்கிறது. மருந்தை, ஏதோ ஒரு மருந்தை, அல்லது ரசாயனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அறிகுறி மறைந்துவிடும்.’ தலைவலி மறைந்துவிடும் ஆனால் மறுநாள் வயிறு கெட்டுப்போகும். இன்னொரு அறிகுறி வந்துவிட்டது.
மனிதன் ஒன்றுதான். மனிதன் முழுமையானவன். உறுப்புகளின் தொகுதி. நீங்கள் பிரச்னையை ஒரு மூலையில் தள்ளலாம். அது இன்னொரு மூலையில் கிளம்பும். இன்னொரு மூலைக்குப் போக நேரமாகும்; அவ்வளவுதான். அந்தப் பகுதிக்குப் பயணமாகிற நேரம். ஆனால் அது வந்தே தீரும். பிறகு அந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் தள்ளப்படும். மனிதனுக்குப் பல பகுதிகள் இருக்கின்றன. ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தள்ளிக்கொண்டே போகும்.
இதனால் ஆரோக்யமாவதற்குப் பதிலாக நீ மேலும் மேலும் நோய்வாய்ப்படுவாய். மேலும் பல சமயங்களில் சின்ன வியாதி பெரிய வியாதியாக மாறும். உதாரணமாக, தலைவலியை அனுமதிக்காவிட்டால், வயிற்று வலியை அனுமதிக்காவிட்டால், முதுகு வலியை அனுமதிக்காவிட்டால், எந்த வலியையும் அனுமதிக்காவிட்டால் வலி வருகிறது. நீங்கள் எதையோ எடுத்துக் கொள்கிறீர்கள். அதை நிறுத்துகிறீர்கள். பல ஆண்டுகளுக்கு இதே முறையில் அதை அடக்குகிறீர்கள். இது அடக்குமுறை. பிறகு எல்லா நோய்களும் ஒன்றாக சேருகின்றன. ஒரு திட்டமிட்ட முறையில் தன்னை நிலைநாட்டிக் கொள்கிறது. அது புற்றுநோயாக மாறலாம். ஒன்றாக சேர்ந்தவையெல்லாம் தன்னை நிலைநாட்டிக்கொண்டு பெரிதாக வெடிக்கலாம்.
ஏன் இன்னும் நம்மால் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை? புற்றுநோய் என்பது மனிதனின் அடக்கப்பட்ட நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம். ஒரு தனியான நோயை எப்படி அடக்குவது என்பது இப்போது நமக்குத் தெரியும். இப்போது அது தனி நோயல்ல. இப்போது ஒட்டுமொத்தத் தாக்குதல். எல்லா நோய்களும் ஒன்று சேர்ந்து விட்டன. கை கோர்த்துக் கொண்டன. ஒரு ராணுவத்தையே உருவாக்கி விட்டன. இப்போது படை உன்னைத் தாக்குகிறது. அதனால் தான் மருந்துகள் தோல்வி அடைகின்றன. இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கிற சாத்தியக் கூறுகள் குறைவு.
புற்றுநோய் ஒரு புதிய நோய். இது கற்கால சமூகத்தில் இல்லை. ஏன்? கற்கால சமூகத்தில் ஏன் இல்லை என்று ஏன் கேட்க வேண்டும்? காரணம், கற்கால மனிதன் எதையும் அடக்குவதில்லை. அதற்கு அவசியமில்லை. அது உன்னுடைய அமைப்பிலேயே இருக்கிற புரட்சியாளன். நீ அடக்காவிட்டால், புரட்சியாளன் தோன்றப் போவதில்லை. சின்ன வி~யங்கள் வரும், போகும்.
மத ரீதியான பழக்கத்தில் அறிகுறிகளைப் பார்க்க மாட்டார்கள். எங்கிருந்து வருகிறது என்றுதான் பார்ப்பார்கள். அதைத்தான் நான் ‘புத்தரின் மனோதத்துவம்’ என்கிறேன். உனக்குத் தலைவலி இருந்தால் அது உடல்நலக் குறைவல்ல. அது உன் நோயல்ல. உண்மையில், அடிப்படையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதைக் காட்டுகிற அறிகுறி. அடிப்படைக்குச் செல்லுங்கள். அங்கே என்ன தவறு என்று கண்டுபிடியுங்கள்.
தலை உங்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறது. ஓர் ஆபத்து எச்சரிக்கை. ஒரு சங்கொலி. ‘உடலைக் கவனி. ஏதோ ஒரு தவறு நடக்கிது’ என்கிறது. சரியாக இல்லாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள். அது உங்கள் உடலின் ஒருங்கிசைவை அழிக்கப் போகிறது. இனிமேல் அதை செய்யாதே. இல்லையென்றால் உன் தலைவலி உன்னை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
தலைவலி என்பது நோயல்ல. தலைவலி உங்கள் எதிரியுமல்ல. அது உங்கள் நண்பன். அது உங்கள் சேவையில் இருக்கிறது. உங்கள் இருப்புக்கு அது மிகவும் அவசியம். ஏதாவது தவறு நடந்தால் அது உங்களை எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக நீங்கள் ஒரு தலைவலி மாத்திரையைப் போட்டு அந்த எச்சரிக்கை மணியை அணைத்து விடுகிறீர்கள். இது அபத்தம். இதுதான் மருந்தில் நடக்கிறது. இதுதான் மருத்துவ சிகிச்சையில் நடக்கிறது. அறிகுறிக்கான சிகிச்சை.
இதனால்தான் அவசியமானது தவறிப் போகிறது. அவசியம் என்பது ஆதாரத்தைத் தேடிப்போவதுதான். அடுத்த முறை உங்களுக்குத் தலைவலி வரும்போது ஒரு சிறிய அளவில் ஒரு பரிசோதனைக்காக தியானம் முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். பிறகு பெரிய நோயை அறிய பெரிய அறிகுறிக்குப் போகலாம்.
உங்களுக்குத் தலைவலி வரும்போது இந்தச் சின்னப் பரிசோதனையை முயலுங்கள். மௌனமாக இருந்து கவனியுங்கள். அதை கவனிப்பது என்பது உங்கள் எதிரியைப் பார்ப்பது போலல்ல. எதிரியைப் போல பார்த்தால் உங்களால் சரியாகக் கவனிக்க முடியாது. அதை நீங்கள் தவிர்ப்பீர்கள். தவிர்க்க முயலுவீர்கள். அதை உங்கள் நண்பனாகப் பாருங்கள். அது உங்கள் நண்பன். அது உங்களுக்குப் பணி செய்யவே இருக்கிறது. அது சொல்கிறது: ‘ஏதோ ஒரு தவறு அதை கவனியுங்கள்.’ சற்று மௌனமாக இருந்து தலைவலியைக் கவனித்து அந்த வலியை நிறுத்த முயலாதீர்கள். அதை மறையச் செய்ய வேண்டும் என்கிற ஆசையில்லாமல், அதோடு முரண்படாமல், சண்டை போடாமல், பகைத்துக் கொள்ளாமல் கவனியுங்கள். அதை என்னவென்று பாருங்கள்.
கவனியுங்கள், அந்த தலைவலி உங்களுக்கு ஓர் உள்ளார்ந்த தகவலைத் தருகிறதா என்று பாருங்கள். அது சங்கேத செய்தி. அதை மௌனமாகக் கவனித்தால் வியந்து போவீர்கள். மௌனமாக கவனித்தால் ஏதோ ஒன்று நடக்கும். முதலில், அதைக் கவனிக்கும்போது, அது தீவிரமாகும். நீங்கள் சற்றுக் குழம்பிப் போவீர்கள். ‘இப்படித் தீவிரமானால் அது எனக்கு எப்படி உதவப் போகிறது?’ என்று நினைப்பீர்கள். அது தீவிரமாகிறது. காரணம் அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள். நீங்கள் இதை அடக்குகிறீர்கள். மாத்திரையில்லாமலே அடக்குகிறீர்கள். நீங்கள் அதைக் கவனிக்கும்போது அது மறைகிறது. தலைவலி அதன் இயற்கையான தீவிரத்தை அடைகிறது. பிறகு அதை அடைக்கப்படாத காதுகளுடன் கேட்கிறீர்கள். உங்கள் காதுகளில் பஞ்சில்லை. அது படு தீவிரமாகும்.
முதல் வி~யம், அது தீவிரமாகும். அது தீவிரமானால், நீங்கள் அதை சரியாகக் கவனிக்கிறீர்கள் என்று பொருள். அது தீவிரமடையாமல் இருந்தால், இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இன்னும் அதைத் தவிர்க்கிறீர்கள். அதைக் கவனியுங்கள். அது தீவிரமடையும். இதுதான் முதல் அறிகுறி, அதுதான் உள் பார்வை.
இரண்டாவதாக அது ஒரே குறியில் இருக்கும். அது மற்ற இடத்திற்குப் பரவாது. முதலில் ‘என் தலை முழுவதும் வலிக்கிறது’ என்று நினைத்தீர்கள். இப்போது அது முழு தலையிலில்லை, அது ஒரு சின்ன இடத்தில்தான் என்பதை உணர்வீர்கள். இது கூட அதை நீங்கள் சரியாகக் கவனிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது பரவுகிறது என்கிற எண்ணமே ஒரு தந்திரம். அதைத் தவிர்க்க இது ஒரு வழி. அது ஓர் இடத்தில் இருந்தால் அது தீவிரமடையும். அதனால் முழு தலையும் வலிப்பதாக ஒரு மாயை ஏற்படுத்துகிறீர்கள். அது பரவினால் எங்குமே தீவிரமடையாது. இவையெல்லாம் நாம் தொடர்ந்து செய்யும் தந்திரங்கள்.
அதைப்பார், பிறகு அதன் இரண்டாவது படி அது அளவில் குறைந்து குறைந்து குறைந்து கொண்டே வரும். பிறகு அது ஓர் ஊசி முனையைப் போல ஆகிற தருணம் வரும். படு கூர்மை உடனடி கூர்மை. மிகுந்த வலியானது. தலையில் அப்படி ஒரு வலியை அனுபவித்திருக்கவே முடியாது. ஆனால் அது ஒரு சிறிய பகுதிக்கு உட்பட்டது. அதைப் பார்த்துக் கொண்டேயிருங்கள்.
பிறகு மூன்றாவது மிக முக்கியமானது ஏற்படுகிறது. அது தீவிரப்படும்போது அந்த முனையை நீங்கள் பார்க்கும்போது, நிலைநிறுத்தி கவனமாக அந்த முனையைப் பார்க்கும்போது பல சமயங்களில் அது காணாமல் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் பார்வை சரியாக இருந்தால் அது மறைவதை நீங்கள் பார்ப்பீர்கள். அது மறையும்போது அது எங்கிருந்து வருகிறது என்பது தெரிய வரும். வருவதற்குக் காரணமென்ன என்பது பலமுறை தெரியவரும். மறுபடியும் அது அங்கிருக்கும். அப்போது உங்கள் பார்வை அவ்வளவு சுறுசுறுப்பாக, கவனமாக, ஆழ்ந்து இருக்காது. ஆனால் மறுபடியும் வரும். எப்போதெல்லாம் உங்கள் பார்வை சரியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் அது மறையும். அது மறையும்போது அதற்குப் பின்னால் ஒளிந்திருப்பதுதான் காரணம். உங்கள் மனம் காரணத்தை வெளிப்படுத்தும்போது உங்களுக்கே வியப்பாக இருக்கும்.
அதற்கு ஆயிரத்தொரு காரணங்கள் இருக்கும். பல்வேறு காரணங்கள் இருக்கும். மறுபடியும் அதே எச்சரிக்கை கிடைக்கும். காரணம் அந்த எச்சரிக்கை அழைப்பு எளிமையானது. உங்கள் உடலில் பல எச்சரிக்கை அமைப்புகள் கிடையாது. பல காரணங்களுக்கும் ஒரே மாதிரியான எச்சரிக்கை மணிதான். அது எச்சரிக்கவில்லையே என்று பின்னால் உங்களுக்குக் கோபம் வருமே. திடீரென்று, ஒரு வெளிப்பாடு மாதிரி அங்கே வந்து நிற்கும். நீங்கள் இத்தனை நாள் சீழைப் போல சுமந்து கொண்டே வந்த கோபத்தைக் காண்பீர்கள். இப்போது இது அதிகமாகிவிட்டது. அந்தக் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். அதைத் துடைத்தெறிய வேண்டும். அதை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். பிறகு உடனடியாக உங்கள் தலைவலி மறைவதைக் காண்பீர்கள். அதற்கு எந்த மாத்திரையும் தேவையில்லை. எந்த சிகிச்சையும் தேவையில்லை.
பிறகு அந்தக் கோபம் மறைந்தவுடன், முழுமையான, வேறுபட்ட, நல்ல தரமான உடல் நலம் உங்களுக்கு எழும். அந்த எழுச்சியை நீங்கள் மாத்திரைகளால் கொண்டு வரவே முடியாது. மாத்திரை அடக்குகிறது. கோபம் உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கும். உங்களுக்குள் ஒரு வன்முறை உறுமிக் கொண்டிருக்கும். உங்கள் எச்சரிக்கை மணியைத்தான் நீங்கள் அணைத்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். எதுவுமே மாறவில்லை. அந்த எச்சரிக்கை மணி மட்டும் அங்கே இல்லை.
இது போய்க்கொண்டே இருக்கிறது. அது மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகிறது. அது உங்களுக்கு வயிற்றுவலி, காசநோய், பிறகு ஒரு நாள் உங்களுக்கு அது புற்றுநோயைக் கொடுக்கும். அது ஒரு பெரிய அளவில் சேர்ந்த பிறகு, அதனுடைய தரமும் மாறும் ஓரளவு வரைதான் உடல் எதையுமே தாங்கிக் கொள்ளும். அந்த எல்லை தாண்டியவுடன் அது நோயாக உணரத் துவங்கும். அதுதான் மனதில் நிலைக்கும். உடலையும், மனதையும் இரண்டு தனிப்பட்ட வி~யங்கள் என்று நினைக்காதீர்கள். அப்படியல்ல உடல்- மனம் உள உடல்.
ழூஓN~hவின் ஆற்றல் தியானம்
ஆற்றல் கொண்ட தியானம் என்பது ஒரு மணி நேரம் நீடிக்கும். அது ஐந்து நிலைகளைக் கொண்டது. இதைத் தனியாகச் செய்யலாம். ஆனால் குழுவாகச் செய்யும்போது இதன் சக்தி அதிகம். இது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதனால் மற்றவர்களிடமிருந்து மறைந்தே இருக்க வேண்டும். உங்கள் கண்களைத் தியானம் முழுவதிலும் மூடியே வைத்திருக்க வேண்டும். முடிந்தால் கண்களைக் கட்டிக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில், தளர்ந்த வசதியான உடைகளைப் பயன்படுத்துங்கள்.
முதல் கட்டம்: 10 நிமிடங்கள்
மூக்கின் வழியாக கடுமையாக உள் வெளியாக சுவாசியுங்கள். அந்த சுவாசம் தீவிரமாகும். அது ஒழுங்கற்று இருக்கட்டும். அந்த சுவாசம் ஆழமாக நுரையீரலுக்குள் செல்ல வேண்டும். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக உடலை இறுக்காமல் சுவாசியுங்கள். அந்த சுவாசம் ஒழுங்கற்றதாக (அதாவது நேராக, எதிர்பார்கிற முறை) இருக்க வேண்டும். ஒரு சக்தி நகரத் துவங்கியதும், அது உங்கள் உடலை நகர்த்தத் துவங்கும். உடல் அசைவை அனுமதியுங்கள். அதை வைத்து இன்னும் அதிக சக்தி பெற முயலுங்கள். இயற்கையான முறையில் உங்கள் கைகள், உடலை அசைத்தால் சக்தி அதிகரிக்கச் செய்யுங்கள். உங்கள் சக்தி வளருவதாக நினையுங்கள். முதல் கட்டத்திலேயே அதைப் போக விடாதீர்கள். அதே சமயம் மெதுவாக செய்யாதீர்கள்.
இரண்டாவது கட்டம்: 10 நிமிடங்கள்
உங்கள் உடலை தொடருங்கள். உங்கள் உடலுக்கு சுதந்திரம் கொடுத்து அப்போது இருக்கிறபடியே அது வெளிப்படட்டும். வெடியுங்கள்! உங்கள் உடல் எடுத்துக் கொள்ளட்டும். வெளியே போக வேண்டியதெல்லாம் போகவிடுங்கள். முற்றிலும் பைத்தியமாகுங்கள். பாடுங்கள், கத்துங்கள், சிரியுங்கள், கூச்சல் போடுங்கள், அழுங்கள், குதியுங்கள், அசையுங்கள், நடனமாடுங்கள், உதையுங்கள், உங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள். எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடல் முழுவதுமாக நகரட்டும். ஒரு சிறு நடிப்பு கூட இதைத் துவக்குவதற்கு உதவும். அப்போது என்ன நடக்கிறதோ அதில் உங்கள் மனம் தலையிட அனுமதிக்காதீர்கள். உங்கள் உடலுடனே இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
மூன்றாவது கட்டம்: 10 நிமிடங்கள்
உங்கள் தோள்கள், கழுத்தைத் தளர்த்துங்கள். உங்கள் இரண்டு கைகளையும் எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்குங்கள். உங்கள் கை முட்டியைப் பார்க்காதீர்கள். கைகளை உயர்த்தி வைத்தபடியே மேலும், கீழும் குதியுங்கள். குதிக்கும் போது ஹ{…ஹ{…ஹ{… என்று மந்திரத்தை உரக்கச் சொல்லுங்கள். இந்தச் சத்தம் ஆழமாக உங்கள் அடிவயிற்றிலிருந்து வரவேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் கால்கள் தரையில் படும்போது (உங்கள் பின்பாதம் முழவதும் தரையில் படவேண்டும்) அந்தச் சத்தம் உங்கள் காம மையத்தைத் தாக்க வேண்டும். உங்களிடமுள்ள எல்லாவற்றையும் கொடுத்து, ஓய்ந்து போங்கள்.
நான்காவது கட்டம்: 15 நிமிடங்கள்
நிறுத்துங்கள்! எந்த நிலையிலிருக்கிறீர்களோ அதே நிலையில் உறைந்தபடி நில்லுங்கள். உடம்பில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. ஒரு சிறு இருமல், அசைவு கூட உங்கள் சக்தியைக் கலைத்துவிடும். எல்லா முயற்சிகளும் வீண். உங்களுக்குள் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு மௌன சாட்சியாக இருங்கள்.
ஐந்தாவது கட்டம்: 15 நிமிடங்கள்
கொண்டாடுங்கள். இசை, பாட்டு என்று என்ன இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டாடுங்கள். அந்த நாள் முழுவதும் அந்த உயிரோட்டத்தை அப்படியே வைத்திருங்கள்.
ஒரு சாட்சியாகவே இருங்கள். தொலைந்து போகாதீர்கள். தொலைந்து போவது சுலபம். நீங்கள் சுவாசிக்கும்போது மறந்து போகலாம். நீங்கள் சுவாசத்தில் மூழ்கியிருக்கும்போது சாட்சியாக இருப்பது மறந்து போகும். பிறகு நோக்கம் தவறிப்போகும். வேகமாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக சுவாசியுங்கள். உங்கள் முழு சக்தியையும் அதில் கொண்டு வாருங்கள். அதே சமயம் சாட்சியாகவும் இருங்கள். என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். நீங்கள் ஒரு பார்வையாளர். முழுவதும் வேறு யாருக்கோ நடக்கிறது. எல்லாமே உடலில் நடக்கிறது. ஆனால் கவனம் மட்டும் மையத்தில் இருந்து கவனிக்கிறது. மூன்று கட்டங்களிலும் இந்த சாட்சியாகப் பார்ப்பது நடக்க வேண்டும். எல்லாமே நின்றவுடன், நான்காவது கட்டத்தில் நீங்கள் முழுமையாக செயலற்று, உறைந்து போகும்போது உங்கள் எச்சரிக்கை உணர்வு உச்சத்திற்குப் போகும்.
இந்தத் தியானத்தில் எதைச் செய்தாலும் நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக, உணர்வோடு, விழிப்போடு இருக்க வேண்டும். உங்களுக்கு வலி ஏற்பட்டால் அதிக கவனமாக இருங்கள். வேறு எதுவும் செய்யாதீர்கள். கவனம்தான் மிகப்பெரிய வாள். அது எல்லாவற்றையும் அறுத்துப் போடும். நீங்கள் சாதாரணமாக அந்த வலியைக் கவனித்துக் கொண்டிருங்கள்.
உதாரணமாக, தியானத்தின் கடைசி கட்டத்தில் நீங்கள் மௌனமாக அமர்ந்திருக்கிறீர்கள். நகராமல் இருக்கும்போது உடலில் பல பிரச்னைகள் இருப்பதை உணர்வீர்கள். கால் மரத்துப் போவதாக உணர்வீர்கள். கையில் ஓர் அரிப்பு. உடலில் எறும்புகள் ஊர்வதைப் போல பல உணர்வுகள். பல தடவை பார்த்து விட்டீர்கள்; ஆனால் அங்கே எறும்புகள் இல்லை. அரிப்பு உள்ளேதான், வெளியே இல்லை. நீங்கள் என்ன செய்வது? உங்கள் கால்கள் மரத்துப் போகின்றன? கவனியுங்கள். உங்கள் முழு கவனத்தையும் அதன் மீது செலுத்துங்கள். உங்கள் கண்களைக் கூடி திறக்காதீர்கள். உங்களுக்கு அரிப்பு எடுக்கிறதா? சொரிந்து கொடுக்காதீர்கள். அது உதவாது. உங்கள் கவனத்தை அதன்மீது செலுத்துங்கள். சில வினாடிகளுக்குள் அந்த அரிப்பு காணாமல் போகும். என்ன நடந்தாலும், உங்களுக்கு வலியே ஏற்பட்டாலும், வயிற்றில், தலையில் கடுமையான வலி இருந்தாலும்! காரணம் தியானத்தின் போது முழு உடலில் ஒரு மாறுதல் வருகிறது. அதன் ரசாயனத்தை மாற்றுகிறது. புதிய வி~யங்கள் நடக்கத் துவங்குகின்றன. உடல் முழவதிலும் ஒரு குளறுபடி. சில சமயம் வயிறு பாதிக்கப்படும். காரணம் அந்த வயிற்றில் தான் நீங்கள் பல்வேறு உணர்ச்சிகளை அடக்கி வைத்திருக்கிறீர்கள். இப்போது அவை கிளறப்படுகின்றன. சில சமயம் உங்களுக்கு வாந்தி வரும், குமட்டும். சில சமயங்களில் தலையில் கடுமையான வலி ஏற்படுவதை உணர்வீர்கள். காரணம் தியானம் மூளையின் உள் அமைப்பை மாற்றுகிறது. தியானத்தில் போகும்போது நீங்கள் உண்மையில் ஒரு குளறுபடியில் இருக்கிறீர்கள்.
விரைவில் எல்லாமே அமைதியாகும். அப்படியானால் நீங்கள் என்னதான் செய்ய வேண்டும்? சாதாரணமாக உங்கள் தலையிலுள்ள வலியைப் பாருங்கள், அதைக் கவனியுங்கள். நீங்கள் ஒரு கவனிப்பாளர். நீங்கள் செய்பவர் என்பதை மறந்து விடுங்கள். மௌ;ள மௌ;ள எல்லாமே குறைந்து போகும். அது அழகாக, ஒரு கண்ணியத்தோடு குறையும். அது தெரிகிற வரையில் நீங்கள் நம்பவே முடியாது. மறைகிறது. ஆனால் அதே சக்தி இப்போது ஆனந்தமாகிறது. சக்தி ஒன்றுதான்.
வலி அல்லது ஆனந்தம் இரண்டுமே ஒரே சக்தியின் இரண்டு பக்கங்கள். நீங்கள் அமைதியாக அமருங்கள். எல்லாத் தடுமாற்றங்களையும் கவனியுங்கள். எல்லாத் தடுமாற்றங்களும் மறையும். எல்லாத் தடுமாற்றங்களும் மறையும்போது, திடீரென்று உங்கள் உடல் முழுவதும் மறைவது போல ஒரு விழிப்பு வரும்.
இந்தக் கவனிக்கும் முறையில் வலியை ஒரு வெறியாக மாற்றுவது குறித்து ஓN~h எச்சரித்திருக்கிறார். கடுமையான உடல் அறிகுறிகள்- வலி குமட்டல் தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் தியானத்திற்குப் பிறகு நீட்டித்தால்… நீங்கள் சுய கொடுமைக்கு ஆளாக வேண்டியதில்லை. மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஓN~hவின் எல்லா தியான முறைகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் புரிந்து கொண்டவரையில், உண்மையான ஆரோக்யம் என்பது என்ன?
உண்மையான ஆரோக்யம் என்பது எங்கோ உனக்குள் ஏற்பட வேண்டும். உனக்குள் உன் உணர்வில். காரணம் உணர்விற்கு பிறப்போ இறப்போ கிடையாது. அது முடிவற்றது. உணர்வில் ஆரோக்யமாக இருப்பது என்பது முதலில் விழிப்போடு இருப்பது. இரண்டாவதாக ஒருங்கிணைந்திருப்பது. மூன்றாவது பரவசம், நான்காவது பரிவோடு இரு. இந்த நான்கும் இருந்துவிட்டால், ஒருவர் உள் அளவில் ஆரோக்யமாக இருக்கிறார். ஒரு சன்னியாசி இந்த நான்கையும் நிறைவேற்ற முடியும். உன்னை மேலும் விழிப்படையச் செய்ய முடியும். காரணம், எல்லா தியான முறைகளும், வழிகளும் உன்னை விழிப்படையச் செய்யத்தான். இயந்திரத்தனமான உன் உடல் தூக்கத்திலிருந்து உன்னை விழிக்க வைக்கும் கருவிகள் அவை. ஆடுவது, பாடுவது உன்னை ஒருங்கிணைக்கும். பிறகு ஒரு தருணத்தில் ஆடுபவர் மறைந்து விடுவார். ஆட்டம் மட்டுமே இருக்கும். அந்த அபூர்வ இடைவெளியில் ஒருவர் ஒருங்கிணைந்து விட்டதாக உணர்வார். ‘நான்’ என்று செயல்பட்டு வந்த அந்த மையம் இல்லாதபோது அந்த ‘நான்’ முற்றிலுமாகக் காணவில்லை. நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். போகிற அந்த உணர்வுதான் ஒருங்கிணைப்பு…
விழித்திருந்து ஒருங்கிசைவோடு இருந்தால் அது பரவசம் ஏற்படுகிற சாத்தியங்களை உருவாக்கும். பரவசம்தான் உச்ச கட்ட மகிழ்ச்சி. வெளிப்படுத்தப்பட முடியாதது. அதை விவரிக்க எந்த வார்த்தைகளுமே இல்லை. ஒருவர் பரவசத்தை அடைந்து விட்டால், மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தை ஒருவர் உணர்ந்து விட்டால், அதன் விளைவுதான் பரிவு. அந்த மகிழ்ச்சி உனக்கிருக்கும்போது நீ அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பகிராமல் தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாததுதான் பகிர்தல். இருக்கும்போது ஏற்படுகிற யதார்த்த விளைவு. அது பெருக்கெடுத்து வடியும். நீ எதையுமே செய்ய வேண்டியதில்லை. அதன் இயல்புப்படி அதுவாக நடக்கும்.
இவைதான் உள் ஆரோக்யத்தின் நான்கு தூண்கள். அதை அடையுங்கள். அது நமது பிறப்புரிமை. கேட்டுப் பெற வேண்டியதுதான்.
ஆரோக்யம் என்றால் என்ன? இதை நாம் புரிந்து கொள்ள முயலவேண்டும். சாதாரணமாக ஒரு மருத்துவரிடம் இந்த கேள்வியைக் கேட்டால், நோயற்ற நிலைதான் ஆரோக்யம் என்பார். ஆனால் இந்த விளக்கம் எதிர்மறையானது. ஆரோக்யத்தை நோயின் மூலமாக விளக்குவதுதான் நமது துரதிரு~;டம். ஆரோக்யம் என்பது ஆக்கபூர்வமான வி~யம். ஆக்கபூர்வமான ஒரு நிலை. நோய் எதிர்மறையானது. ஆரோக்யம் என்பது இயற்கை. இயற்கையின் மீதான ஒரு திணிப்புதான் நோய். அதனால் ஆரோக்யத்தை நோய் மூலமாக விளக்குவதே வினோதமானது.
விருந்தினரை வீட்டுக்காரராக விளக்குவதே வினோதமானதுதான். ஆரோக்யம் என்பது நம்முடன் இருப்பது, நோய் எப்போதாவது வந்து போவது. ஆரோக்யம் இறப்பு வரை நம் கூட வரும். நோய் என்பது ஒரு செயற்கையான நிகழ்வு. ஆனால் இதை ஒரு மருத்துவரைக் கேட்டால் நோய் காணாமல் போகும்போது ஆரோக்யம் இருக்கும் என்பார். பாரசெல்சஸ், விளக்கம்தான் தவறு என்பார். ஆரோக்யம் என்பதை ஒரு ஆக்கபூர்வமானது என்று விளக்க வேண்டும். ஆரோக்யத்தை பற்றி ஒரு கற்பனையான விளக்கம் போய்க் கொண்டிருக்கும்போது எப்படி ஆரோக்யம் குறித்து ஒரு ஆரோக்யமான விளக்கத்திற்கு வரமுடியும்.
பாரசெல்சஸ் சொல்வார், ‘உன் உள் ஒருங்கிசைவு தெரியாவிட்டால், நாங்கள் உங்களை நோயிலிருந்து மட்டுமே விடுவிக்க முடியும்.. காரணம் உங்கள் உள் ஒருங்கிணைப்புதான் உங்கள் ஆரோக்யத்தின் ஆதாரம். ஆனால் ஒரு முறை உங்களை நோயிலிருந்து விடுவித்தால், நீங்கள் உடனடியாக இன்னொரு நோயைப் பிடித்துக் கொள்வீர்கள். காரணம் உங்கள் உள் ஒருங்கிசைவு குறித்து எதுவுமே செய்யப்படவில்லை. உண்மை என்னவென்றால் உங்கள் உள் ஒருங்கிணைப்பிற்குத்தான் ஆதரவு தேவை.
ஒரே வகையான ஆரோக்யம் மட்டுமே இருக்கிறது. அதற்கு எந்த அடைமொழியும் கிடையாது. யாராவது உங்களை, ‘சௌக்கியமா?’ என்று கேட்டால், ‘நல்ல சௌக்கியம்’ என்கிறீர்கள். அவர் உங்களை ‘எந்த மாதிரி சௌக்கியம்?’ என்று கேட்டால், ‘எப்படி சௌக்கியம்?’ என்று கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். ‘சாதாரண சௌக்கியம், சௌக்கியம்னா சௌக்கியம்தான், நன்றாக இருப்பதாக உணர்கிறேன், எங்கும் தவறில்லை, எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது, நான் சந்தோ~மாக இருக்கிறேன், இதைவிட எதுவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’ என்று சொல்வீர்கள்.
பலவிதமான ஆரோக்யங்கள் இருக்கின்றனவா? இல்லை. ஒரே வகைதான். ஆரோக்யமாக இருப்பது. ஆனால் நோய்கள் பல லட்சங்கள்.
இதே கதைதான் உண்மைக்கும். உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் பொய்கள் பல்லாயிரம், காரணம் பொய்கள் உங்களை நம்பியிருக்கிறது. உங்களைத் தேவையான அளவிற்கு நீங்கள் உருவாகிக் கொண்டே போகிறீர்கள். நோய்களும் உங்களை நம்பியிருக்கின்றன. நீங்கள் தவறாக வாழலாம். தப்பான உணவுகளை உண்ணலாம். கெட்ட காரியங்களைச் செய்யலாம். அதன் மூலமாக நீங்களே நோய்களை உருவாக்கலாம்.
ஆரோக்யமும் அதே மாதிரிதான். எப்போதும் புதிது. ஆனாலும் எப்போதும் ஒரே மாதிரிதான். அதையே நீ புராதனமானது எனலாம்; அதே சமயம் புதிது, சமீபத்தியது எனலாம்.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஆரோக்யமாக இருந்தார்கள். இப்போது நீ ஆரோக்யமாக இருக்கிறாய். அதில் ஏதாவது வேறுபாடு இருக்கும் என்று நினைக்கிறாயா? அவருக்கு உன்னுடைய நிறமல்ல. அவருக்கு உன் மொழி தெரியாது. ஐயாயிரம் வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் யாரோ ஆரோக்யமாக இருந்திருக்கிறார்கள். அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவருக்கு என்ன நிறமாக இருக்கட்டும். ஆணோ, பெண்ணோ, இளைஞரோ, முதியவரோ அவர் ஆரோக்யமாக இருந்திருந்தால் ஒன்று மட்டும் உனக்குத் தெரியும். அவர் ஆரோக்யமாக இருந்திருக்கிறார். அந்த ஆரோக்ய உணர்வை நீ அனுபவிக்கலாம். அந்த மனிதரைப் பற்றி உனக்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அழகு, அருவருப்பு, குள்ளம், நெட்டை, அது ஒரு பொருட்டேயல்ல. அவர் ஆரோக்யமாக இருந்தார். நீயும் ஆரோக்யமாக இருக்கிறாய். ஓர் அனுபவம் ஒரே மாதிரி.
ஆனால் நோய்கள்? ஒவ்வொரு நாளும் புதிய நோய்கள் உருவாக்கப்படுகின்றன. பல லட்சம் நோய்கள் இருக்கின்றன. மனிதன் அதிகம் கண்டுபிடிக்கும்போது புதிய பல நோய்கள் வந்து கொண்டேயிருக்கும்.
நீங்கள் ஆரோக்யமாக இருக்கும்போது நீங்கள் மருத்துவரிடம் போவதில்லை. போவீர்களா? ‘கடந்த இரண்டு வாரங்களாக நான் ஆரோக்யமாக இருப்பதாக உணர்கிறேன். எங்கோ தவறிருக்கிறது?’ என்பீர்களா?
உண்மையில் பண்டைய சீனாவில் நடந்த ஒரு வி~யத்தை நினைவில் கொள்ளலாம். ஒரு வேளை எதிர்காலத்தில் அது பயன்படலாம். சீனாவை அதிகம் பாதித்தவர்கள் கன்ஃபியூ~pயஸ். அவருடைய ஒரு சிந்தனை அங்கே அமுல்படுத்தப்பட்டது. பல வருடங்களாக அது பழக்கத்தில் இருந்தது. அது என்னவென்றால், நோயாளியை ஆரோக்யமாக வைத்திருக்கவே மருத்துவருக்குப் பணம் கொடுத்தார்கள். நோயாளியைக் குணப்படுத்துவதற்காக மருத்துவருக்குப் பணம் கொடுத்தால் அது அவருடைய சுயநல சிந்தனை. நீங்கள் நோயிலேயே இருக்கட்டுமே என்று நினைக்க வைக்கும். நீங்கள் அதிகம் நோய்வாய்ப்பட்டால் நல்லது, அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டாலும் நல்லது. மருத்துவரின் மனதில் ஓர் இரட்டைச் சிந்தனையை விதைக்கிறீர்கள்.
முதலில் அந்த மருத்துவரின் மனதில் மக்களை ஆரோக்யமாக வைத்திருப்பதுதான் அவருடைய வேலை என்று போதிக்க வேண்டும். “உன் வேலையே வாழ்க்கையை, வீர்யத்தை இளமையை நீட்டிக்க வேண்டும்” என்கிறீர்கள். ஆனால் அந்த மருத்துவரின் சுயநலமோ எல்லோரும் ஆரோக்யமாக இளமையாக இருந்தால், யாருமே நோயில் விழமாட்டார்கள். பிறகு அவர் பசியால் சாகவேண்டியதுதான். எல்லோரும் ஆரோக்யமாக இருந்தால் மருத்துவருக்கு நோய் வந்துவிடும். முழுமையான நோய், சாகிறவரையில் நோய். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இல்லை. ஒரு மருத்துவரின் சுயநலம் அவருக்கு கற்றுக் கொடுத்த தத்துவத்திற்கு எதிரானது. அவருடைய ஆர்வமெல்லாம் மக்கள் எப்போதும் நோயிலேயே இருக்க வேண்டுமென்பதுதான். அதிக நோயிருந்தால் நல்லது. அதனால் ஒரு வினோதமான ஒரு வி~யத்தைப் பார்ப்பீர்கள். ஒரு பணக்காரனை விட ஓர் ஏழை நோயிலிருந்து விரைவில் குணமடைகிறான். ஏன் ஏழைக்கு மட்டும் விரைவில் குணமாகிறது? காரணம் மருத்துவர்கள் அவர்களைச் சீக்கிரம் துரத்த வேண்டுமென்று நினைக்கிறார்கள். அவர்கள் தேவையில்லாமல் மருத்துவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
கன்ஃபியூசியஸின் எண்ணம் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் மருத்துவருக்கு மாதச் சம்பளம் கொடுத்து தன்னை ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டும் என்றார். அந்த மாதம் முழுவதும் அவர் ஆரோக்யமாக இருந்தால் அவர் மருத்துவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அவருக்கு நோய் வந்தால் அதற்கேற்ற மாதிரி அவரது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளலாம்.
முதலில் இது வினோதமாக இருந்தது. காரணம் உலகம் செய்வதற்கு எதிராக நாம் செய்கிறோம். ஆனால் யதார்த்தமானது. புத்திசாலித்தனமானது. பல வழிகளில் கன்ஃபியூசியஸ் ஒரு அதி புத்திசாலி மனிதர். ஒவ்வொருவரும் ஒரு மருத்துவரை வைத்திருக்க வேண்டும். அவர் அந்த மருத்துவருக்கு அவரை ஆரோக்யமானவராக வைத்திருக்க பணம் கொடுக்க வேண்டும். அவரை குணப்படுத்த அல்ல. அந்த மனிதரை சரியாக கவனிக்காததால் அவருக்கு சம்பளக் குறைப்பு உண்டு.
பல நூற்றாண்டுகளாக இது தொடர்ந்தது. அது நன்றாகவும் வேலை செய்தது. அற்புதமாக வேலை செய்தது. மருத்துவர், நோயாளி இருவருக்குமே அது நன்றாக வேலை செய்தது. மருத்துவர்கள் மீதும் அதிக நோய் ஏற்றவில்லை. அது அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.
அதனால் மருத்துவர்களும், ‘இவர்கள் நோயில் விழவேண்டும். மருந்துகளை நம்ப வேண்டும்’ என்று நினைக்கவில்லை. அவர்கள் அதிக உடற்பயிற்சியைத்தான் சிபாரிசு செய்தார்கள். நடப்பது, நீச்சல், விளையாட்டு ஆகியவையே! இதன் மூலமாக அவர்கள் ஆரோக்யமாக இருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக கன்ஃபியூசியஸின் ஆதிக்கம் இருந்தவரையில் உலகத்திலேயே ஆரோக்யமான நாடாக சீனா இருந்தது.
இதுவரையில் இல்லாத விலையுயர்ந்த ஒரு மருத்துவ அமைப்பை மேற்கத்திய சமூகம் உருவாக்கியிருக்கிறது. மக்கள் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் டாலர்களை செலவழிக்கிறார்கள். அது அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று, தொற்று தடுப்பு போன்ற துறைகளில் வெற்றிகரமாகவும் இருக்கிறது. ஆனாலும் மக்கள் முன்பைவிட அதிகமாக நோயில் இருக்கிறார்கள். ஆரோக்யம் என்றால் என்ன?
மேற்கத்திய மருத்துவம் மனிதனை இயந்திரத்தனமாகப் பார்க்கிறது. அதனால் இயந்திரத்தனம் எங்கெல்லாம் வெற்றிகரமாக உள்ளதோ அங்கெல்லாம், இது வெற்றிகரமானது. ஆனால் மனிதன் ஒரு இயந்திரமல்ல. மனிதன் ஓர் உயிர்க் கூறு. மனிதனுக்கு நோய் எங்கிருக்கிறதோ அங்கு மட்டுமே சிகிச்சை என்பது ஏற்றதல்ல. முழு உடற்கூறுமே பிரச்னையில் உள்ளது என்பதற்கான அறிகுறிதான் நோய் உண்டான பகுதி. நோய்வாய்ப்பட்ட பகுதி அதைக் காட்டுகிறது. காரணம் அது பலவீனமாக உள்ளது.
நோய்வாய்ப்பட்ட பகுதிக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடைகிறீர்கள். ஆனால் வேறு எங்கோ மீண்டும் நோய் தலை காட்டுகிறது. நோய்வாய்ப்பட்ட அந்த பகுதியிலிருந்து அது செல்வதை நீங்கள் தடுத்திருக்கிறீர்கள். அதன் மூலம் அதைப் பலப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மனிதனை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஒன்று அவனுக்கு நோய் அல்லது அவன் ஆரோக்யமாக இருக்கிறான். அவை இரண்டுக்குமிடையே வேறு நிலையங்கள் இல்லை. அவனை முழுக் கூறாகத்தான் பார்க்க வேண்டும். நான் சில உதாரணங்களைச் சொன்னால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு விபத்தினால் அக்குபஞ்சர் சீனாவில் வளர்ந்தது. ஒரு வேடன் ஒரு மானைக் கொல்ல முயன்று கொண்டிருந்தான். ஆனால் அவனது அம்பு மானை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, அதைப் பற்றித் தெரியாத ஒரு மனிதன் குறுக்கே வந்துவிட்டான். அம்பு அவன் கால்களில் பாய்ந்துவிட்டது. அந்த மனிதனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் மைக்ரேய்ன் தலைவலி. அம்பு காலில் பட்டவுடனே அந்த மைக்ரேய்ன் மறைந்துவிட்டது. இது மிகவும் வினோதமானது. யாருமே இந்த முறையைப் பற்றி யோசிக்கவேயில்லை.
இந்த விபத்தினால் முழு அக்குபஞ்சரும் வளர்ந்தது. பிறகு அது முழு விஞ்ஞானமாக வளர்ந்தது. அதனால் நீங்கள் ஒரு அக்குபஞ்சர் மருத்துவரிடம் போய், ‘என் கண்களில் ஏதோ ஒரு கோளாறு. என் தலையில் ஏதோ கோளாறு. என் ஈரலில் கோளாறு என்றால் அவர் அந்த ஈரலைப் பற்றியோ, தலை, கண்ணைப் பற்றியோ கவலைப்படமாட்டார். அவர் முழு உடல்கூறைப் பற்றித்தான் யோசிப்பார். அவர் உங்களையே குணப்படுத்த முயல்வார். நோய்வாய்ப்பட்ட அந்தப் பகுதியை மட்டுமல்ல.
அக்குபஞ்சர் ஒரு மனிதனின் உடலில் எழுநூறு மையங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. உயிரோடிருக்கிற ஓர் உயிரியல் மின்சாரம்தான் மனிதன். அதில் ஓர் வகை மின்சாரம் இருக்கிறது. அதனால் அதை ஒரு உயிரியல் மின்சாரம் என்கிறோம். அந்த உயிரியல் மின்சாரம் உடலில் எழுநூறு மையங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒவ்வொரு மையமும் உடலில் ஏதோ ஒரு பகுதிக்குத் தொடர்புடையது. ஆனால் அந்தப் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கிறது. அதுதான் அந்த விபத்தில் நடந்தது. அம்பு அந்த உயிரியல் மின்சார மையத்தைத் தொட்டது. அது தலையுடன் தொடர்புடையது. உடனே மைக்ரேய்ன் மறைந்தது.
அக்குபஞ்சர் அதிகம் புனிதமானது. அந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். நீ மனிதனை ஓர் இயந்திரமாகப் பார்த்தால், அவனைப் பற்றி ஒரு பகுதி எண்ணம்தான் கிடைக்கும். அவன் கையில் காயமென்றால், கைக்கு மட்டுமே, முழு உடலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உடலில் ஒரு பகுதிதான் கை. இயந்திரத்தனமான பார்வை ஒரு தலைப்பட்சமானது. அது வெற்றியடைகிறது. ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல. காரணம் மருந்தினால், அறுவை சிகிச்சையினால் அடக்கப்படுகிற அந்த நோய் வேறு ஓர் இடத்தில் இதை விட மோசமான வடிவத்தில் உருவெடுக்கிறது. அதனால் மருத்துவம் அற்புதமாக வளர்ந்திருக்கிறது. அறுவை சிகிச்சை ஒரு மிகப்பெரிய விஞ்ஞானமாக உருவெடுத்திருக்கிறது. ஆனாலும் மனிதன் இன்னும் அதிக நோயினால், வியாதியினால் எப்போதும் அவதிப்படுகிறான்.
இந்தக் குழப்பத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். முழு உடல்கூறாகக் கவனிக்க வேண்டும். நவீன மருத்துவம், மேற்கத்திய மருத்துவத்தில் என்ன பிரச்னை என்றால் உனக்கு ஆன்மாவே கிடையாது என்று நினைப்பதுதான். உனக்கு உடல்- மன அமைப்பைத் தவிர எதுவுமே கிடையாது. நீயும் ஓர் இயந்திரம். உன் கண்களை மாற்றலாம். உன் கைகளை மாற்றலாம். உனக்கு வேறு கால்களைப் பொருத்தலாம். இப்போதோ, பின்னரோ உன் மூளையைக் கூட மாற்றலாம்.
ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையை அவர் இறக்கிற தருவாயில், இறப்பதற்கு முன் எடுத்து அதை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக உதாரணமாக போலாக் என்கிற ‘போப்’புக்கு வைத்தால் அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகிவிடுவார் என்று நினைக்கிறீர்களா? மூளை என்பது ஒரு பகுதிதான். அது ஒரு வினோத நிகழ்வாக இருக்கும். போலாக் ஐன்ஸ்டின் சேர்ந்த இனக்கலப்பாகவே இருக்கும். குறைந்தபட்சம் இப்போது போலக்காக மட்டுமிருக்கிறார். பிறகு அவர் மறக்கப்பட்ட நிலையிலிருப்பார். என்ன போப்பா அல்லது இயற்பியலாளரா என்பதே தெரியாமலிருப்பார். இதை நாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோம். ரத்தம் ஏற்றுகிறோம். மக்களின் மற்ற உறுப்புகளை மாற்றுகிறோம். நம்மிடம் இயந்திர இதயங்கள் இருக்கின்றன. இயந்திர இதயம் இருக்கிற மனிதன் உண்மையான, ஆதாரமான இதயத்துடன் இருக்கும் மனிதனைப்போல் இருக்க முடியாது. இயந்திர இதயம் வைத்திருக்கும் மனிதனிடம் அன்பு, காதல் கூட, ‘நான் உன்னைக் காதலிப்பதாக நினைக்கிறேன்’ என்று சொல்லக் கூடிய நிலையில்தான் இருக்கும். அது இதயத்திலிருந்து நேரடியாக வராது. காரணம் அவனிடம் இதயமில்லை.
இந்தியாவில் மருத்துவ விஞ்ஞானம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்து விட்டது. இப்போது என்னவெல்லாம் அறுவை சிகிச்சை இருக்கிறதோ, அதை அப்போதே கிழக்கிலிருந்த பெரிய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான சூ~;ருத் விளக்கிவிட்டார் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஐயாயிரம், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சுவடுகளில் இவை இருந்தன. ஆனால் அவற்றைத் தொலைத்துவிட்டார்கள். இதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறேன். வளர்க்கப்பட்ட ஒரு விஞ்ஞானத்தை ஏன் தொலைத்தார்கள்? காரணம் அறுவை சிகிச்சை என்பது மனிதனை இயந்திரத்தனமாகப் பார்க்கிறது. ஆனால் மனிதன் இயந்திரமில்லை. அதனால் மனிதனை அழிப்பதற்குப் பதிலாக அறுவை சிகிச்சையை ஒழித்தார்கள்.
இன்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கியமான அருமையான கருவிகளையெல்லாம் பற்றி அன்றே சூ~;ருத் தன் ஏடுகள் மூலமாக விளக்கிவிட்டார். எல்லா சிகிச்சைகளையும், மூளை அறுவை சிகிச்சையைக் கூட விளக்கமாக எழுதியிருக்கிறார். அது அறுவை சிகிச்சையின் நவீன பாடப் புத்தகம் போல் இருக்கும். ஆனால் அது ஏழாயிரம், அல்லது ஐயாயிரம் ஆண்டுகளாவது பழையது. நாம் இன்றைக்கு எந்த மையத்தில் வைத்து வளர்த்தோமோ அதேபோல், இப்போது நாம் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் அப்போது சந்தித்திருக்க வேண்டும். அடிப்படையில் ஏதோ தவறு என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் வேலை செய்து கொண்டு போகப்போக நோய்களும், உடல்நலக் குறைவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு நபருக்கு உடல்நலக் குறைவேயில்லாமல் செய்தால் கூட அவர் ஆரோக்யமானவரல்லர். உடல்நலக் குறைவில்லை என்பதாலேயே அவர் ஆரோக்யமானவரல்லர். அது ஓர் எதிர்மறை விளக்கம். ஆரோக்யம் என்பது ஆக்கபூர்வமான எதையாவது வைத்திருக்க வேண்டும். உடல்நலக்குறைவு என்பது எதிர்மறையானது. இப்போது இந்த எதிர்மறை ஆக்கபூர்வமானதை விளக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றாக இருக்கிற உணர்வுதான் ஆரோக்யம். உங்கள் முழு உடலுமே அதன் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்தத் தொந்தரவும் இல்லை. ஒரு மாதிரி நன்றாக இருக்கிறது. ஒருவித ஒருமைத்தனம் முழு இருத்தலில் இருக்கிறது. அது அறுவை சிகிச்சை மூலமாக ஏற்பட்டதல்ல.
இந்தியா இந்த முழு விஞ்ஞானத்தை மூழ்கடித்துவிட்டு, முற்றிலும் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்தது. ஆயுர்வேதம், அதாவது வாழ்க்கை விஞ்ஞானம். இது முக்கியமானது. மேற்கே நாம் இதை மருந்து என்கிறோம். மருந்து என்பது வியாதியைக் குறிப்பது. ஆரோக்யத்திற்கும் மருந்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. மருந்து என்றால் அந்த முழு விஞ்ஞானமுமு; உன்னை நோயிலிருந்து குணப்படுத்துவதுதான்.
ஆயுர்வேதத்திற்கு வேறு வித்தியாசமான அணுகுமுறை. அது ஒரு வாழ்க்கை விஞ்ஞானம். இது உன் நோயைக் குணப்படுத்த உதவுவதில்லை. மாறாக, நோயே வராமல் தடுக்கிறது. உன்னை ஆரோக்யமாக வைத்திருந்து நோய் என்பதே சாத்தியமில்லாமல் செய்கிறது. கிழக்கும் மேற்கும் இந்த வி~யத்தில் வௌ;வேறு பாதையில் செல்கின்றன. மனிதன் ஒரு இயந்திரமா அல்லது ஒரு முழுமை பெற்ற ஆன்மீக அடையாளமா.
இரண்டாவதாக, மேற்கத்திய மருந்துகள் மக்களின் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கின்றன.
உண்மையான மருந்து எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க வேண்டும், எடுக்கக் கூடாது. அது உன்னைப் பலப்படுத்த வேண்டும். தொற்றுநோய்க்கு எதிராக சண்டை போட வேண்டும், உன்னைப் பலவீனப்படுத்தி நீ எல்லா தொற்றுநோய்க்கும் வளைந்து கொடுக்கிற நிலைக்கு உன்னை மாற்றக்கூடாது.
புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணரான டெல்காடோ மிருகங்களை வைத்துப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எலிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் அதனுடைய வாழ்நாள் இரட்டிப்பு ஆனது. இரண்டு வேளை கொடுத்தால் அதன் ஆயுள் குறைந்து போவதைக் கண்டு வியப்படைந்தார். அதிக உணவு, குறைந்த ஆயுள். ஒரு வேளை உணவு போதும் என்கிற முடிவுக்கு அவர் வந்தார். இல்லையென்றால் அதன் ஜீரணமுறையில் நீங்கள் அதிகம் பாரத்தை ஏற்றுகிறீர்கள். அதனால் அதன் ஆயுள் குறைகிறது. ஆனால் சில மனிதர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை உணவு சாப்பிடுகிறார்களே…? மருந்து அவர்களை சாகவிடாது, அதே சமயம் வாழவும் விடாது. அவர்கள் சாதாரணமாக வளர்வார்கள்.
பாரம்பரியமாய் வந்த பலவற்றை மனிதன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு ஆதாரங்களை, அவனுக்குக் கிடைத்த பல்வேறு தகவல்களைக் குறித்து அவன் மறு யோசனை செய்ய வேண்டும். முற்றிலும் புதிய மருத்துவ அணுகுமுறை வரவேண்டும். அது அக்குபஞ்சர், ஆயுர்வேதம், கிரேக்க மருத்துவம், டெல்காடோவின் ஆராய்ச்சி, மனிதன் இயந்திரம் இல்லை போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். மனிதன் பன்முக ஆன்மக ஜீவன். நீங்கள் அவனிடம் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்யத்தை எதிர்மறையாக விளக்கக்கூடாது. உங்களுக்கு நோயில்லை. அதனால் நீங்கள் ஆரோக்யமாக இருக்கிறீர்கள். ஆரோக்யத்திற்கு ஒரு நல்ல ஆக்கபூர்வமான விளக்கம் தேவை. ஏன் அவர்களால் ஒரு ஆக்கபூர்வமான விளக்கத்தைக் கொடுக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நோய் என்பது புறம். நன்றாக இருப்பது என்பது அகம்.
உனக்குள் ஓர் அகம் இருப்பதை மேற்கத்திய விஞ்ஞானம் ஏற்றுக் கொள்வதில்லை. அது உன் உடலை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. அது உன்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
மனிதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இப்போது அவர்கள் எதிரிகளைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்தால் அவர்கள் மனிதனை, அவன் வாழ்க்கையைப் பற்றி சற்றே நல்ல எண்ணங்களைக் கொண்டு வருவார்கள்.
இப்போது எல்லோருக்கும் நன்று தெரியும். அதுவும்- குறிப்பாக, மூளை நிபுணர்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மையம் என்பது மூளைதான். உங்கள் கைகள் செயலிழந்து போனால், உங்கள் கைகளுக்கு மட்டும் சிகிச்சை கொடுப்பது முட்டாள்தனம். அதற்கு மட்டும் சிகிச்சை கொடுக்க முடியாது. அது ஒரு யோசனை, இயந்திரத்தனமான யோசனை. உங்கள் கைகளை வெட்டி அங்கே இயந்திரக் கைகளைப் பொருத்தலாம். அது கொஞ்சம் அசைந்து கொண்டாவது இருக்கும். வேறு எதுவும் செய்ய முடியாது. அந்தக் கை இப்போது முற்றிலும் பயனற்றவை. அவை இறந்து விட்டன. உன் தலையிலுள்ள ஏதோ ஒரு மையம் உன் கைகளைக் கட்டுப்படுத்துகிறது. அந்த மையத்தைக் குணப்படுத்த வேண்டும். கையைத் தொடவே கூடாது. அந்த மையம் வேலை செய்யவில்லை. அந்த மையத்தில் ஏதோ பிரச்னை.
இப்போதோ அல்லது சற்று தள்ளியோ மருந்து முழுக்க மூளை மையத்தால் ஆக்ரமிக்கப்படும். பிறகு அந்த மையத்தின் கட்டுப்பாட்டில்தான் உடலிருக்கும். மையத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், உடலில் ஏதாவது ஒரு பகுதி ஜாடை காட்டும். உடனே நீ அந்தப் பகுதிக்கு சிகிச்சை கொடுப்பாய், உள்ளே போகமாட்டாய்.
நவீன மேற்கத்திய மருத்துவம் மேலோட்டமானது. நீங்கள் ஒவ்வொரு வேர்களுக்கும் போகவேண்டும். திடீரென்று கைகள் ஏன் செயலிழந்து போயின? மூளையிலுள்ள மையத்தில் ஏதோ கோளாறு. அந்த மையத்தை சுலபமாக குணமாக்க முடியும். அதுவும் உயிரியல்- மின்சார மையம்தான்.
நீ நன்றாக இல்லை என்று தோன்றினால் உங்கள் மின்கலம் பலத்தை இழந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பலமேற்ற வேண்டும். உங்கள் கைகள் செயலிழந்து விட்டால், அனேகமாக உங்கள் மையத்தில் மின்சாரக் கோளாறு என்று பொருள். அதைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு மருந்து தேவையில்லை. அதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இப்போது மனிதனை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எப்படி பல்வேறு சமூகங்கள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு காலகட்டத்தில் மனிதனுக்கு சிகிச்சை அளித்திருக்கின்றன என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் வினோதமான முறை செய்யத் துவங்கினால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நிராகரிக்கக்கூடாது.
உதாரணத்திற்கு, எழுபது சதவிகித நோய் உங்கள் மனதில் இருக்கிறது. உங்களுக்கு எதுவுமில்லை. இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு அலோபதி மருந்து கொடுப்பது என்பது ஆபத்தானது. காரணம் எல்லா அலோபதி மருந்துகளும் ஏதோ ஒரு விதத்தில் வி~த்தோடு தொடர்புடையது. உங்களுக்கு நோயிருந்தால், மருந்து நல்லது. ஆனால் உங்களுக்கு நோயில்லை, எண்ணம் மட்டுமே இருக்கிறது. அதற்கு ஹோமியோபதிதான் சிறந்தது. அது எந்தக் கெடுதலையும் விளைவிக்காது. அதில் ஒன்றுமில்லை. ஆனால் அது மனித குலத்திற்கு பெரும் உதவி. ஆயிரக்கணக்கான மக்கள் ஹோமியோபதியால் குணமடைகிறார்கள்.
ஹோமியோபதி சிறந்த மருந்தா இல்லையா என்பதல்ல கேள்வி. மக்களுக்கு செயற்கையான நோயிருக்கிறதா என்பதுதான். அதற்கு செயற்கை மருத்துவ முறைகள்தான் தேவை. ஹோமியோபதிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஆனால் மக்களுக்கு எந்த நோயுமில்லை. தங்களுக்கு இருப்பதாக நினைத்தே சித்ரவதைப்படுகிறார்கள். ஹோமியோபதி அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும். அது குணப்படுத்தும். ஆனால் யாருக்கும் கெடுதல் நினைக்காது. அது போலி மருத்துவம். ஆனால் மனிதர் குலத்தை என்ன செய்வது?
இந்திய மருத்துவர்களுக்கும், கள தாதிகளுக்கும் எந்தக் கருவியோ நவீன இயந்திரமோ இல்லை. எக்ஸ்ரே கிடையாது. உன் இதயத்துடிப்பை பார்க்கக்கூடிய இதயத்துடிப்பு மானி கூட கிடையாது. ஆனால் இந்த முறை ஆயிரக்கணக்கான வருடங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. அவர்களும் சோதித்தார்கள். காரணம் உன் இதயத்துடிப்பு உன் வாழ்க்கையின் மையத்தில் இருக்கிறது. யாராவது சரியில்லையென்றால் ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு குறிப்பு கொடுக்கும். உன் நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக உன் இதயத்துடிப்பைச் சீராக்க முயலுவார்கள். அவர்களின் மருந்து உன் இதயத்துடிப்பைச் சீராக்கும். உடனே நோய் மறைந்துவிடும். நீ நோயைக் குணப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறாய். அது வெறும் அறிகுறி.
அதனால்தான் ஆயுர்வேதத்தில் அவர்களால் அறுவை சிகிச்சையைத் தூக்கி எறிய முடிந்தது. அது மனிதனை ஓர் இயந்திரமாகக் குறைத்தது. சுலபமாக தாதுக்கள், மூலிகைகள் போன்ற இயற்கை பொருட்களை வைத்து, உடல் அமைப்பில் வி~ம் ஏற்றாமல் அவர்களால் செய்ய முடிந்தது. பிறகு ஏன் தேவையில்லாமல் மனிதனுக்கு வி~ம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்? அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதே?
இந்த ஒரு காரணத்தினால்தான், ஒரு பக்கம் மருந்து வளர்ந்து வடிவம் பெறுகிற அதே சமயத்தில் பக்கத்தில் நோய்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. நீ ஒரு நோய்க்கு சிகிச்சை கொடுக்கிறாய், ஆனால் நீ வி~த்தை வைத்து சிகிச்சை கொடுக்கிறாய். அந்த நோய் போய்விடும். ஆனால் அந்த வி~ம் உடலுக்குள்ளேயே இருக்கும். அந்த வி~ம் தன் வேலையைக் காட்டி புதியவைகளை உருவாக்கும். அதனால் மூலிகை, தாது மருந்துகளையும், ஹோமியோபதியையும் இணைக்க வேண்டும்.
பல்வேறு பிரிவுகள் கொண்ட ஒரே ஒரு விஞ்ஞானம்தான் இருக்க வேண்டும். மருத்துவர் இந்த மனிதனை எந்த பிரிவிற்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்ய வேண்டும். ஒருவரிடம் சொல்வதில் பயனில்லை. ‘உனக்கு நோயில்லை’ அது பயன்தராது. அவர் உடனே மருத்துவரை மாற்றி விடுவார். அதுதான் ஒரே பயன். ‘உனக்கு நோயிருக்கிறது…’ என்று சொல்கிற டாக்டரைத்தான் அவருக்கு பிடிக்கும்.
சிலர் வாழ்வதற்கான உறுதியை இழந்து விட்டார்கள். இவர்களுக்கு எந்த மருத்துவமும் உதவாது. காரணம் வாழவேண்டுமென்கிற அடிப்படை உறுதியை இவர்கள் இழந்து விட்டார்கள். அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள். அவர்கள் இறுதிச் சடங்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மருந்தே தேவையில்லை. இவர்களுக்கு வாழவேண்டும் என்கிற உறுதியை கொடுக்கிற வேறு மாதிரியான சிகிச்சை தேவைப்படுகிறது. அதுதான் அவர்களுக்கான அடிப்படைத் தேவை. பிறகு வேறு எந்த மருந்தும் அவர்களுக்கு உதவும்.
இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்து முழுமையாக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் மனிதன் நோயிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். ஒரு விஞ்ஞானக் கணக்குப்படி மனிதன் முந்நூறு ஆண்டுகள் வாழமுடியுமாம். மனித உடலில் முந்நூறு ஆண்டுகள் புதுப்பித்துக் கொள்ளும் சாத்தியமிருக்கிறது. அதனால் அடிப்படையில் நாம் செய்வது எல்லாமே தவறு. மனிதன் எழுபது வயதில் இறந்து போகிறான்.
இதற்கு ஆதாரமிருக்கிறது. அது கா~;மீரின் ஒரு பகுதி இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் அந்தப் பகுதியை ஆக்ரமித்து விட்டது. இங்கு மக்கள் சுலபமாக நூற்று ஐம்பது ஆண்டுகள் வாழ்கிறார்கள். அங்கு சிலர் நூற்றி எண்பதைக் கூட எட்டிவிட்டார்கள். இப்போது இந்த மனிதர்களின் உணவு, பழக்க வழக்கங்களை ஆராய வேண்டும். அந்த உணவுப் பழக்க வழக்கங்களை மற்றவர்களுக்கு, தெரியப்படுத்த வேண்டும். காகாஸ, இது ர~;யாவிலுள்ளது. இங்கு நூற்றி எண்பது வயதுக்காரர் ஓர் இளைஞனைப்போல் இன்னும் வயலில் வேலை செய்கிறார்… அவருக்கு இன்னும் வயதாகவில்லை. அவருடைய உணவு, அவருடைய வாழ்க்கை முறையை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இதுபோல் பலர் வாழ்க்கை முறையை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இப்படிப் பலர் இருக்கிறார்கள் அந்தப் பகுதியில் மட்டும். காகாஸியா அந்தப் பகுதி பலமான பலரைக் கொடுத்திருக்கிறது. ஜோஸப் ஸ்டாலின் கூட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். ஜார்ஜ் குருட்ஜஃப் கூட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். கடுமையான பலசாலிகள்.
மருந்திற்குப் புதிய பயிற்சி தேவை. இது சாத்தியம் காரணம் இப்போது உலகத்தில் நடப்பதையெல்லாம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். துவக்கத்திலேயே ஒரு குறுகிய சிந்தனையில் இருக்கக்கூடாது.