புதன், 31 ஆகஸ்ட், 2016

அக்குபஞ்சரைப் பற்றிச் சற்று விரிவாகப் பேச முடியுமா?


மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை க்கான பட முடிவு

அக்குபஞ்சரைப் பற்றிச் சற்று விரிவாகப் பேச முடியுமா?

அக்குபஞ்சர் முற்றிலும் கிழக்கு சார்ந்தது. அதனால் எந்தக் கிழக்கத்திய விஞ்ஞானத்தையும் நீங்கள் மேற்கத்திய மனதோடு அணுகினால் நீங்கள் பலவற்றை இழப்பீர்கள். உங்கள் முழு அணுகுமுறையும் வித்தியாசமானது. ஒரே பாணியில், நேர்மையாக, பகுப்பாய்ந்தபடி இருக்கும். அந்தக் கிழக்கத்திய விஞ்ஞானங்கள் உண்மையில் விஞ்ஞானமில்லை. அது ஒரு கலை. முழு விஷயமும் நீங்கள் சக்தியை அறிவுஜீவித்தனத்திலிருந்து, உள்ளுணர்விற்கு மாற்ற முடியுமா என்பதை பொறுத்தே இருக்கிறது. நீங்கள் ஆணிலிருந்து பெண்ணாக மாறமுடியுமா என்பதைப் பொறுத்தது. துடிப்பான வேகமாக அணுகுமுறையிலிருந்து சாந்தமான, கேட்பவராக முடியுமா? பிறகுதான் இது வேலை செய்யும். இல்லையென்றாலும் நீங்கள் அக்குபஞ்சரைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அது அக்குபஞ்சராக இருக்காது. நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் அதை அல்ல. ஆனால் அது ஒரு தந்திரம். ஒரு மேலார்ந்த பார்வை.
இதுதான் பல கிழக்கத்திய விஷயங்களில் நடக்கிறது. மேற்கு ஆசைப்படுகிறது. அது ஆழமானது. மேற்கு கிழக்கத்திய விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தன் மனத்தைக் கொண்டு வந்து புரிந்து கொள்ளப் பார்க்கிறது. மேற்கத்திய மனம் வந்த அந்தத் தருணத்தில் அதன் அடிப்படையே தகர்ந்து போகிறது. சில துண்டுகள் தான் மிச்சமிருக்கும். ஆந்தத் துண்டுகள் பயன்படாது. ஆனால் அந்த அக்குபஞ்சர் வேலை பயன்படாது. ஆதனால் அந்த அக்குபஞ்சர் வேலை செய்யப் போவதில்லை என்று அர்த்தமாகாது. ஆக்குபஞ்சர் வேலை செய்யும். ஆனால் கிழக்கத்திய அணுகுமுறையில்தான் வேலை செய்யும்.
அதனால் நீ உண்மையில் அக்குபஞ்சர் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதைத் தெரிந்து கொள்வது நல்லது. அதே சமயம் நினைவில் கொள். அது மிகவும் அவசியமானதல்ல. எவ்வளவு தகவல் பெற முடியுமோ கற்றுக் கொள்ளுங்கள். பிறகு எல்லா தகவல்களையும் மறந்துவிட்டு இருட்டில் திரியுங்கள். உங்கள் மயக்க உணர்வை கேளுங்கள். நோயாளியுடன் நல் உறவோடு உணருங்கள். அது வித்யாசமானது.
ஒரு நோயாளி ஒரு மேற்கத்திய மருத்துவரிடம் வந்தால் அந்த மேற்கத்திய மருத்துவர் காரணத்தைப் பார்க்கிறார். சோதிக்கிறார். பகுப்பாய்ந்து பார்க்கிறார். எங்கு நோய் என்று பார்க்கிறார். என்ன நோய் என்று பார்க்கிறார். எது அதை குணப்படுத்தும் என்று பார்க்கிறார். அவர் மனதின் ஒரு பகுதியைப் பயன்படுத்துகிறார். ஆராய்ந்து பார்க்கிற பகுதி. அவர் நோயைத் தாக்குகிறார். அதைக் கைப்பற்றுகிறார். நோய்க்கும் மருத்துவருக்கும் ஒரு சண்டை நடக்கிறது. நோயாளி அந்த ஆட்டத்திற்குள் வரவில்லை. மருத்துவரும் நோயாளியைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் நோயுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நோயாளி புறக்கணிக்கப்படுகிறான்.
ஆனால் ஓர் அக்குபஞ்சர் மருத்துவரிடம் வந்தால் அவருக்கு நோய் முக்கியமில்லை. நோயாளி முக்கியம். காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கியிருக்கிறான். காரணம் நோயாளியிடம்தான் உள்ளது. நோய் என்பது ஓர் அறிகுறிதான். நீ அறிகுறியை மாற்றலாம். இன்னொரு அறிகுறி வரும். இந்த நோயை மருந்துகள் மூலமாக எதிர்த்துப் போராடலாம். அதன் வெளிப்படுத்தலைத் தடுக்கலாம். ஆனால் அந்த நோய் இன்னொரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இப்போது மிகவும் ஆபத்தாக, அதிக வலுவுடன், ஒரு பழி உணர்ச்சியோடு, முதல் நோயை விட அடுத்து வருவதை சமாளிப்பது மிகவும் கடினம். அதற்கும் மருந்து கொடுக்கிறீர்கள். பிறகு மூன்றாவது நோய் இன்னும் கடினமாகும்.
இப்படித்தான் அலோபதி புற்றுநோயை உருவாக்கியது. ஒரு புறம் நோயை நீங்கள் விரட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள். அது இன்னொரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. நீங்கள் அந்த இடத்தைத் தாக்குகிறீர்கள். நோய்க்கு ரொம்ப ரொம்பக் கோபம் வருகிறது. நீங்கள் நோயாளியை மாற்றுவதில்லை. நோயாளி அப்படியே இருக்கிறார். காரணம் அப்படியே இருக்கிறது. அந்தக் காரணம் காரியத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
அக்குபஞ்சர் காரணத்தோடு போராடுகிறது. அதன் விளைவுகளைக் கவனிப்பதில்லை. எப்போதுமே காரணத்திற்குப் போக வேண்டும். எப்படி காரணத்திற்குப் போக முடியும்? முகாந்திரம் காரணத்திற்குப் போக முடியாது… முகாந்திரத்திற்குக் காரணம் மிகப்பெரியது. அது விளைவுகளை மட்டுமே சமாளிக்க முடியும். தியானம் மட்டுமே காரணத்திற்குப் போக முடியும். அதனால் அக்குபஞ்சர் நோயாளியை உணருவார். அவர் தன் ஞானத்தை மறப்பார். அவர் நோயாளியுடன் இணைந்து போகவே முயற்சி செய்வார். அவருடன் ஒத்துப்போவார். நோயாளியுடன் ஒரு பாலம் அமைத்துக் கொள்வார். நோயாளியின் நோயை தன் உடலால் உணர்ந்து பார்ப்பார். தன்னுடைய சக்தியில், அதுதான் உணர்வால் காரணத்தைக் கண்டறியும் வழி. ஏனெனில் காரணம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரே ஒரு கண்ணாடி ஆவார். தன்னிடமே அந்தப் பிம்பத்தைப் பார்ப்பார்.
இதுதான் அதன் முழு செயல்பாடு. இதைச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். காரணம் அதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் அதற்குள் போவது நல்லது. அதனால் என்னுடைய யோசனை முதலில் இரண்டு வருடங்களாவது மேற்கில் படியுங்கள். பிறகு ஆறுமாத காலமாவது தொலை கிழக்கு நாடுகளுக்குச் சென்று அக்குபஞ்சர் நிபுணருடன் இருங்கள். அவருடைய பார்வையில் இருங்கள். அவர் வேலை செய்யும்போது கவனியுங்கள். அவருடைய சக்தியை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களால் ஏதாவது செய்ய முடியும். இல்லையென்றால் அது மிகவும் கடினம்.
மௌ்ள மௌ்ள உன் சுய சக்தியையோ, அல்லது அது உன் மீது வேலை செய்வதையோ உணரத் துவங்கினால், அக்குபஞ்சர் என்பது ஒரு தொழில்நுட்பமாகத் தெரியாது. அது ஒரு கருவியாகவே இருக்கும். நீ அந்தத் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் அது உனக்கு ஒன்றும் செய்யாது. அது ஒரு கலை என்பதைவிட அது உன்னிடமுள்ள கூடுதல் படைப்பாகவே இருக்கும். புராதன தொழில்நுட்பத்தில் இதுதான் மிகவும் கடினமான விஷயம். அது விஞ்ஞான பூர்வமானதல்ல. அதை ஒரு விஞ்ஞான பூர்வமான பார்வையில் கவனித்தால், அதைப் பற்றிய விஷயங்கள் லேசாகத் தெரிய வரும். ஆனாலும் ஏதோ ஒரு பெரிய பகுதி தெரியாமலே இருக்கும். பிறகு நீ என்ன தெரிந்து கொண்டாலுமே அதிகம் தெரிந்ததாகவே இருக்காது. அதுவே உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கத் துவங்கி விடும்.
முழு புராதன அணுகுமுறையே முற்றிலும் மாறுபட்டது. அது தர்க்கரீதியானதல்ல. அது பெண்மை சார்ந்தது. உள்ளுணர்வு சார்ந்த, தர்க்கமற்றது. விஞ்ஞான மனதைப் போல் அதை ஒரு வாதமுள்ள முறையாக அதை யாருமே நினைக்கவில்லை. இருத்தலோடு ஆழ்ந்த கலப்பில் ஈடுபட்டு ஒரு கனவுலகத்தில் அதுவும் பகற்கனவிலிருந்து இயற்கை தன்னுடைய ரகசியங்களையும் மர்மங்களையும் வெளிக்காட்ட வேண்டுமென்று நினைப்பார்கள். அது இயற்கை மீதான வற்புறுத்தலல்ல. முக்கியமாக அதை இணங்க வைப்பது. அந்த அணுகுமுறையும் உள்ளார்ந்தது.
ஒருவர் தன் உடலை உள்ளார்ந்த மையத்திலிருந்து அணுகவேண்டும். புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையங்கள் தெரியவில்லை. அது ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைத்தது. ஒருவர் ஆழ்ந்து உள்ளே போனால், அங்கிருந்து பார்த்தால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் சூழ்ந்திருப்பதைப் பார்க்க முடியும். ஏதோ இரவு முழவதும் நட்சத்திரங்கள் அள்ளிக் கொண்டதைப் போல. இந்தச் சக்திப் புள்ளிகளைப் பார்த்து விட்டால் பிறகு தான் நீங்கள் தயார். இப்போது உள்ளார்ந்த ஈர்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இன்னொருவரின் உடலைத் தொட்டவுடனேயே எங்கெல்லாம் உடல் சக்தி இல்லை; எங்கே இருக்கிறது என்பதை உணரமுடியும். எங்கே நகருகிறது, எங்கே இல்லை, எங்கு குளிர்ச்சி, எங்கே சூடு?, எங்கு உயிரோட்டம், எங்கு இறந்திருக்கிறது என்பது தெரியும். சில புள்ளிகளில் அது அசையும், சில புள்ளிகளில் அப்படியே இருக்கும்.
உங்களுக்கு உங்களை எவ்வளவு தெரியுமோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் அக்குபஞ்சரைத் தெரிந்து கொள்ள முடியும். இரண்டும் கலக்கும்போது ஒரு பெரிய ஒளி கிடைக்கும். அந்த ஒளியில் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். உங்களைப் பற்றி மட்டுமல்ல. அடுத்தவர் உடலையும் கூட. மூன்றாவது கண் திறக்கும்போது ஒரு புதிய பார்வை கிடைக்கும்.
அக்குபஞ்சர் ஒரு விஞ்ஞானமல்ல. அது ஒரு கலை. ஒவ்வொரு கலையும் நீ முழுமையாக சரண் அடையவேண்டுமென்று எதிர்பார்க்கும். மற்ற தொழில்நுட்பத்தைப் போல அந்த தொழில்நுட்பக் கலைஞன் தன் இஸ்டத்திற்கு அதை வளைக்க முடியாது. அதற்கு உன் முழு இதயம் தேவை. ஓர் ஓவியன் தன் ஓவியத்தில் தன்னை மறப்பதைப் போல, ஒரு கவிஞன் தன் இசையில் தன்னைக் கரைத்துக் கொள்வதைப் போல. அதுபோல்தான் இதுவும். ஒரு தொழில்நுட்பக் கலைஞன் அக்குபஞ்சரைக் கற்றுக் கொள்ளலாம். அதற்குத் தேவையானவற்றை சரியாக செய்ய முடியாது. அவன் அதுவாக இருக்க முடியாது. அவன் சிலருக்கு உதவலாம். ஆனால் அது ஒரு பெரிய கலை. ஒரு பெரிய திறன். அதை அப்படியே உறிஞ்ச வேண்டும். அதன் ரகசியமே சரணாகதிதான். அதனுள் உங்களால் முழவதுமாக சரணடைய முடிந்தால், அது ஒரு பக்தியாக, அர்ப்பணமாக மாறுகிறது. அதுவாக ஆகலாம். அதற்குள் போகலாம். முழு மனதோடு உற்சாகமாக.
நீங்கள் சுயமாக இருக்க முயலுங்கள். நீங்களே ஒரு தந்திரத்தைக் கையாளவேண்டும். அக்குபஞ்சர் என்பது ஒரு தந்திரம், ஒரு கலை. ஒரு விதியைப் போல யாரையும் பின்பற்றத் தேவையில்லை. இதற்கு யாருமே கிடையாது. இதற்கு விதிமுறைகள் கிடையாது. ஓர் உள்பார்வை கிடையாது. நீங்களாக வேலை செய்ய ஆரம்பியுங்கள். முதலில் சிறிது அவநம்பிக்கை ஏற்படும். நீங்கள் சரியாக செய்கிறீர்களா, இல்லையா என்கிற அவநம்பிக்கை ஏற்படும். ஆனால் அப்படித்தான் ஒருவர் துவங்க வேண்டும். அது ஒரு தேடுதல். விரைவாகவோ தாமதமாகவோ நீங்கள் கதவைக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு முறை கதவைக் கண்டுபிடித்து விட்டால் போதும்; பிறகு தேடுதல் குறையத் துவங்கும். பிறகு உங ;களுக்குக் கதவு தெரியும். அதனால் வேலையைத் துவக்குங்கள்.
நீங்கள் யாருடைய உடலையாவது தொடும்போது அல்லது ஓர் ஊசியால் வேலை செய்யும்போது, நீங்கள் கடவுளின் பெயரால் வேலை செய்கிறீர்கள். ஒரு தயக்கத்தோடு, மரியாதையோடு இருக்க வேண்டும். அங்கே புத்தியோடு வேலை செய்யக்கூடாது. ஒரு காதலோடு செய்ய வேண்டும். புத்தி தேவையான அளவு இல்லை. அது போதாது. அதனால் அந்த நபருக்காகக் கவலைப்படுங்கள். எப்போது நிறைவாக உணருங்கள். காரணம் புத்தி என்பது ஓர் அளவானது. இன்னொரு நபரோ முழு உலகம். ஏறக்குறைய முடிவற்ற நிலை. மக்கள் உங்களைத் தொடுகிறார்கள். ஆனால் உங்களைத் தொடுவதில்லை. அவர்கள் வெளியேதான் தொடுகிறார்கள். நீங்கள் எங்கோ ஆழத்தில் ஒரு மையத்தில் இருக்கிறீர்கள். அன்பைத் தவிர வேறு எதுவுமே நுழைய முடியாது. மனிதன் ஒரு மர்மம். அவன் எப்போதுமே மர்மமாகத்தான் இருக்கப் போகிறான். அந்த மர்மம் என்பது ஒரு விபத்தாக ஏற்பட்டதில்லை. அவனுடைய இருத்தலே மர்மம்தான்.
மனோவசியம் அதாவது ஹிப்னாடிஸம் தியானமாக மாறுவதைப் பற்றி பேசமுடியுமா? சிகிச்சைக்கும் தியானத்திற்குமிடையே இருந்த மெல்லிய கோடு மறைந்து வருவதைப் பார்க்கிறேன்.
அப்படி ஒரு காலம் இருந்தது. தியானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நுழைவாயிலாக மனோவசியம் கருதப்பட்டது. ஆனால் மத்திய காலத்தில் கிறிஸத்துவம் மனோவசியத்தை சூன்யக் கலையாக நினைத்து ஒதுக்கி விட்டது. அந்தத் தீணடாமை இன்றும் தொடர்கிறது. கிறித்துவர்கள் அல்லாதவர்கள் மனதிலும் அது தங்கிவிட்டது. அது கிறித்துவ யோசனை என்பது தெரியாமலேயே அதில் ஈடுபட்டு விட்டார்கள். ஏன் கிறித்துவம் வசியத்திற்கு எதிராக இருந்தது? உங்களுக்கு வியப்பாகவே இருக்கும். அது மனோவசியத்திற்கு எதிராக இருந்ததற்குக் காரணமே அது தியானத்திற்கு நேரடியாக அழைத்து செல்கிறது என்பதனால்தான். பூசாரி தேவையில்லை. தேவாலயங்கள் தேவையில்லை. ஏன் கடவுளே கூட தேவையில்லை. அதுதான் பிரச்னை.
உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால் பிறகு எந்த மதமும் இருக்கப் போவதில்லை. தேவையேயில்லை. அது ஒரு சாதாரண காரணம்தான். நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருக்கப் போகிறீர்கள். எதற்காகத் தரகர்கள்? அல்லது தூதுவர்கள் எதற்கு? அவர்களுக்கு அவர்களுடைய ஞானத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. வருடக் கணக்கில் அவர்கள் அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களை தூண்டி, நண்பர்களைத் தூண்டிக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. அவர்கள் செய்வது எதுவுமே மதம் சார்ந்தது அல்ல. அவர்கள் செய்ததெல்லாமே எண்ணிக்கை அரசியல்தான். உங்களுடைய பொறுப்பில் எத்தனை எண்ணிக்கை சேர்கிறது என்பதை வைத்து உங்கள் பலத்தை உங்கள் அதிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மனோவசியம் பூசாரிகளுக்கு எதிராக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே கிறித்துவம் முழுக்க பாதிரியார்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது. தான் புத்துணர்வு பெற்றதாக யேசுநாதர் எப்போதுமே சொன்னதில்லை. அல்லது அவருக்குப் பிறகு வந்த எந்த கிறித்துவருமே தான் புத்துணர்வு பெற்றதாக சொல்லவில்லை. அவர் ஏதோ முட்டாள்த்தனமாக தான் கடவுளின் ஒரே பிள்ளை என்று அறிவித்தார். கடவுள் என்பது ஒரு குறியீடு. அது இந்தியர்களைப் போல பிள்ளை பெற்றுப் போட்டுக்கொண்டே இருக்காது. குறியீடு என்பது மலடு, அவை எதையுமே உருவாக்காது.
இருத்தலோடு நீங்கள் நேரடி தொடர்பு கொள்வதை கிறித்துவம் விரும்பவில்லை. நீங்கள் ஒரு பாதிரியார் வழியாக, ஒரு போப், ஒரு மகான், பிறகுதான் கடவுள். நடுவில் ஏகப்பட்ட இடைத்தரகர்கள். யார் பொய் சொல்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. காரணம் உங்களுக்குக் கடவுளிடம் நேரடி இணைப்பில்லை. பாதிரியாருக்குப் போப்பிடம் தொடர்பு, போப்பிற்கு இயேசுவுடன் நேரடி இணைப்பு. இயேசுவிற்குக் கடவுளுடன் நேரடி தொடர்பு. அந்தத் தொடர்பின் தொலைபேசி எண்கள் எந்தத் தொலைபேசி அகராதியிலும் இருக்காது.
மனோவசியம்தான் கதவு. எப்போதுமே அதுதான் தியானத்திற்கான கதவு. ஒரு முறை ஒருவன் அந்த தியானம் என்கிற உலகத்தில் நுழைந்துவிட்டால், அவனுக்கு அப்படி ஒரு தெளிவு. அப்படி ஒரு சக்தி. அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை எழும். அதற்குப் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் எந்தத் தகப்பனும் தேவையில்லை. அதற்குப் பிறகு அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய எந்தப் பாதிரியாரும் தேவையில்லை. அவனே ஒரு பிரார்த்தனை ஆகிறான். எந்தக் கடவுளிடமும் பிரார்த்தனை இல்லை. வெறும் எளிமையான ஒரு பிரார்த்தனைத்தனம். முழுமைக்கு ஒரு நன்றி செலுத்துதல்.
மனோவசியத்தைத் தூக்கி எறிய வேண்டிய அவசியம் கிறித்துவத்திற்கு இருந்தது. அது சாத்தானால் உருவானதாகச் சொல்லித் தூக்கி எறிய வேண்டியிருந்தது. இதே காரணத்திற்காகத்தான் சூன்ய கலையும் அழிக்கப்பட்டது. இந்தக் காரியத்தை செய்து கொண்டிருந்ததற்காகப் பல லட்சம் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். அவர்கள் உயர்ந்த பீடத்தை தேவாலயங்களின் தொடர்பில்லாமல் நேரடியாக தொடர்பு கொள்ள முயன்றார்கள்.
தியானத்திற்கு செய்கிற சேவையாக செய்யாவிட்டால் வசியத்தைக் கூட ஆபத்தானதாகப் பயன்படுத்தலாம். மனோவசியம் என்றால் என்னவென்று நான் உங்களுக்கு விளக்குகிறேன். பிறகு அதை தியானத்தின் சேவையாகப் பயன்படுத்தாவிட்டால் அதை எப்படி துஸ்பிரயோகம் செய்யலாம் என்பதையும் சொல்கிறேன்.
மனோவசியம் என்பதன் சரியான அர்த்தமே உங்களைக் கட்டாயத் தூக்கத்தில் ஆழ்த்துவதுதான். முப்பத்து மூன்று சதவிகிதம், அதாவது மனித இனத்தில் மூன்றில் ஒரு பங்கினர் மனோவசியத்தின் ஆழ்ந்த படிவத்திற்குப் போகிற சாத்தியம் இருக்கிறது. இது ஒரு வினோதமான எண்ணிக்கை. முப்பத்து மூன்று சதவிகிதம். காரணம் முப்பத்து மூன்று சதவிகித மக்களுக்கு மட்டுமே ஆன்மிக உணர்வு இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினருக்கு மட்டும்தான் உணர்ச்சி இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினருக்கு மட்டும் நட்புணர்வு இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினர் மட்டுமே படைப்பாளிகள். என்னுடைய சொந்த அனுபவத்தில் இந்த முப்பத்து மூன்று சதவிகிதத்தினரும் ஒரே மாதிரியானவர்கள். காரணம் படைப்பும், உணர்ச்சியும்தான் தியானம். அதுதான் அன்பு. அதுதான் நட்புணர்வு. இதற்கெல்லாம் அடிப்படையில் ஒன்று தேவை. தன் மீதே ஓர் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த இருத்தலில், வாங்கும் தன்மையில், இதயத்தைத் திறக்கிற நிலை.
மனோவசியத்தை இரண்டு வழிகளில் உருவாக்கலாம். முதல் வழி காரணமாக மக்கள் இது ஆபத்தானது என்னும் கிறிஸ்துவ பிரசாரத்தை நம்புகிறார்கள். இது பன்முக மனோவசியம். யாரோ உங்களை வசியப்படுத்துகிறார். ஒரு மனோவசியக்காரர் உங்களை மனோவசியப்படுத்துகிறார்… பல தவறான யோசனைகள் இதில் இருக்கின்றன. அதில் அடிப்படையானது வசியத்தால் உங்களை மனோவசியப்படுத்த முடியும் என்பது. இது முழு தவறு. மனோவசியக்காரரிடம் அந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது; சக்தி கிடையாது.
உங்களுக்கு எதிராக உங்களை யாருமே மனோவசியப்படுத்த முடியாது. நீங்களாக விரும்பினால்தான் நடக்கும். உங்களுக்குத் தெரியாத இடத்திற்கு, தெரியாத இருட்டிற்குப் போகத் தயாராக இருந்தால் மட்டுமே ஒரு மனோவசியக்காரரால் உங்களை மனோவசியப்படுத்த முடியும். ஆனால் உண்மையில் இந்த வசியக்காரர்கள் தங்களுக்கு இந்த சக்தி உண்டு என்பதை மறுப்பதில்லை. அதற்கு மாறாக, மனோவசியப்படுத்துகிற சக்தி தங்களிடம் உண்டு என்றே சொல்வார்கள். உங்களை மனோவசியப்படுத்துகிற சக்தி யாரிடமும் கிடையாது. உங்களிடம் மட்டுமே உங்களை மனோவசியப்படுத்திக் கொள்கிற சக்தி உண்டு. அல்லது யாராவது உங்களை மனோவசியப்படுத்த வைக்க முடியும். அந்த சக்தி உங்களுடையது. ஆனால் மற்றவர்கள் உங்களை மனோவசியப்படுத்தும்போது அதைத் துஸ்;பிரயோகம் செய்ய முடியும்.
அந்த முயற்சி, அந்தத் திறன், மிக எளிமையானது. மனோவசியக்காரர் ஒரு ஸ்படிகத்தைக் கயிற்றில் கட்டி உங்களுக்கு எதிராகத் தொங்கவிடுவார். பிறகு சொல்வார், “உங்களால் திறக்க முடியாது என்கிற நிலை வரும்வரையில் உங்கள் கண்களை மூடாதீர்கள். மூடாமல் இருக்க போராடுங்கள், முடிகிறவரையில் கண்களைத் திறந்தே வைத்திருங்கள்.” அந்த ஸ்படிகம் உங்கள் கண்களில் மின்னும். கண்கள் வற்றிப் போகாமல் இருக்க நீங்கள் கண்களை இமைக்க வேண்டியிருக்கும். அதுதான் உங்கள் உடலிலேயே மென்மையான பகுதி. ஒரு கார் கண்ணாடியில் உள்ள நீர் துடைப்பானைப் போலத் தானாக உங்கள் கண் இமைகள் வேலை செய்கின்றன. அது கண்களில் நீரை வரவழைக்கிறது. அதுதான் உங்கள் கண்களிலுள்ள தூசியைத் துடைக்கிறது. எதுவும் உள்ளே போகாமல் தடுக்கிறது. அது கண்களைப் புத்துணர்ச்சியோடு எப்போது நீர்மயமாக இருக்கிறது.
மனோவசியக்காரர் சொல்கிறார், ‘கண்களை இமைக்காதீர்கள். பளபளக்கிற ஒன்றைப் பார்த்துக் கொண்டேயிருங்கள்.’ அது மின்னும் காரணம் மின்னுகிற எதுவுமே உங்கள் கண்களை சோம்பச் செய்யும். உங்கள் தலைக்கு மேலே தொங்குகிற சக்தி வாய்ந்த ஒரு மின்சார விளக்கைப் பார்க்கச் சொன்னால், நிச்சயமாக உங்கள் கண்கள் சோர்ந்துதான் போகும். அவையாக மூடுகிற வரையில் நீங்களாகக் கண்களை மூடாதீர்கள் என்று சொல்லப்படுகிறீர்கள்.
இது ஒரு பகுதி. இன்னொரு பகுதி மனோவசியக்காரர் உங்கள் கண்கள் கனமாகின்றன, உங்கள் இமைகள் சோர்ந்து போகின்றன என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அதாவது உங்கள் கண்கள் சோர்வதாக இமைகள் மூட நினைப்பதாக. ஆனால் உங்களுக்கு அதற்கு எதிரான உத்தரவுகள் முடிகிறவரையில் போராடுங்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் நீங்கள் போராட முடியும்? அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்கு மேல் முடியாது. காரணம் இரண்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு விளக்கை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை உங்கள் கண்களை சோம்பச் செய்கிறது. வசியக்காரரோ கிளிப்பிள்ளையைப் போல சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஒரு தூக்கக் கலக்கக் குரலோடு. அதாவது தூக்கம் உங்கள் கண்களைத் தழுவுவதாக சொல்கிறார். உங்களால் தடுக்க முடியாது. உங்களால் கண்களைத் திறந்து வைக்கிற சாத்தியமேயில்லை.
கூடவே இந்த யோசனைகள். அந்த நபர் போராடுகிறார். அவருக்கு அவருடைய கண்கள் சோர்வடைவது தெரிகிறது. கண் இமைகள் கனக்கிறது. ஒரு பாரம். மூன்று நிமிடத்திற்குள் ஒரு கட்டம் வருகிறது, அதற்கு மேலில்லை. அவரால் போராட முடியாமல் கண்களை மூடுகிற உந்துதலை உதற முடியவில்லை. கண்கள் மூடியவுடன் அந்த மனிதர் அந்த மனிதர் சொன்னதையே சொல்கிறார். “உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருகிறது. உங்களால் என் குரலை மட்டும்தான் கேட்க முடிகிறது. வேறு எதுவுமில்லை. நான் ஒருவன் மட்டும்தான் உங்களுக்கு இப்போதுள்ள ஒரே தொடர்பு.”
அந்த நபர் இன்னும் ஆழ்ந்து ஆழ்ந்து தூங்கப் போகிறார், தொடர் யோசனைகளோடு. ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு எதுவுமே கேட்கவில்லை. அவருடைய தூக்கக் கலக்கக் குரல்தான் சொல்கிறது. ‘நீங்கள் ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து…’ பிறகு நீங்கள் ஆழத்திற்குப் போய் விட்டீர்களா என்பதை சோதிப்பார். உங்கள் கைகளில் ஓர் ஊசியைக் குத்திப் பார்ப்பார். நீங்கள் தூங்கி விட்டீர்கள். அதனால் உங்களுக்கு அது தெரியவில்லை…
உண்மையில் சோவியத் ரஸ்யாவில், அவர்கள் பன்முக மனோவசியம் துவங்கி அதன் மூலம் அறுவை சிகிச்சை கூட நடக்கிறது. மயக்க மருந்தே தேவையில்லை. சரியான சூழல் ஏற்பட்டால் ஒருவர் ஆழமாகப் போக முடியும். ஒரு தூக்கச் சூழல், அரையிருட்டு, இருட்டுமில்லை வெளிச்சமுமில்லை. அதே சமயம் மின்னுகிற கட்டாயமாக்கப்பட்ட ஒரு மின்னல் உங்கள் கண்கள் மீது செலுத்தப்படுகிறது. அறையில் ஒரு மெல்லிய இசை. அற்புதமான மணம். இவையெல்லாம் அவர் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போக உதவுகின்றன. சிகிச்சை அப்போது நடக்கிறது. நடந்திருக்கிறது. அந்த நபருக்கு ஒன்றுமே தெரியாது.
அதனால் மனோவசியக்காரர் சில விஷயங்களை முயல்கிறார். அவர் உங்கள் கைகளை உயர்த்தித் தடாலென்று கீழே போடுகிறார். பிடித்தமில்லாததால் கை கீழே விழுகிறது. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறீர்கள். தூக்கத்தில் உங்களால் கைகளை உயர வைக்க முடியவில்லை. அவர் உங்கள் கண் இமைகளைத் திறக்கிறார். அவர் உங்கள் கண்களைப் பார்க்கிறார். அதில் வெண்மை மட்டுமே தெரிகிறது. பாவை இரண்டும் மேலே செருகியிருக்கின்றன.
ஆழ்ந்து நீங்கள் வசியப்படும்போது மேலே பாவைகள் உயரப் போகும். இது தினப்படி தூக்கத்தில் கூட நடக்கும். யாராவது இறந்து போனால் கூட இப்படி நடக்கும். அதனால்தான் உலகம் முழுவதும் ஒருவர் இறந்து போனால் உடனே இறந்த மனிதரின் கண் இமைகளை மூடிவிடுவார்கள். இதற்கு சின்ன காரணம் முழு வெள்ளைக் கண்களோடு ஒருவரைப் பார்த்தால் பயமாக இருக்கும். இந்தியாவில் இது பல நூற்றாண்டுகளாக தெரிந்த விஷயம்தான். ஒருவர் இறக்கிற தருவாயில் அவர் கண்கள் மேலே செருகும். அதன் அறிகுறி, அடையாளம் என்னவென்றால் அவரால் அவரது மூக்கின் நுனியைக் கூட பார்க்க முடியாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மூக்கை நீங்கள் பார்க்க முடியாது. காரணம் கண்களில் பாவைகள் மேல் நோக்கி நகரும். அவற்றால் மூக்கின் நுனியைக் கூடப் பார்க்க முடியாது. அதிக பட்சம் ஆறு மாதங்கள்…
அதனால் மனோவசியக்காரர் கண் இமைகளைத் திறக்கிறார். அங்கே கீழே வெள்ளையாக இருக்கிறதா என்று பார்க்கிறார். அதுவரையில் அங்கிருந்தது, அதாவது பாவை, மேலே போய்விட்டதா என்று பார்க்கிறார். அதற்கு பிறகு இனி நீங்கள் யார் பேசுவதையும் கேட்க முடியாது என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார். இனிமேல் அவர் சொல்வதை நீங்கள் தட்ட முடியாது. அவர் என்ன சொன்னாலும் நீங்கள் செய்வீர்கள். இது ஆபத்தானது. அவர் உங்களிடம் சொல்லலாம். “உங்களிடமுள்ள பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள்.” உடனே நீங்களும் உங்களிடமுள்ள பணத்தையெல்லாம் எடுத்து அவர் கையில் ஒப்படைப்பீர்கள். அவர் உங்கள் ஆபரணங்களை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதாவது ஒரு பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லலாம். அது உங்களைச் சிக்கலில் கொண்டு போய்விடலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் வீட்டை விற்று விட்டீர்கள் அல்லது உங்கள் வீட்டை நன்கொடையாகக் கொடுத்து விட்டீர்கள்.
இதில் இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. அவர் மனோவசியம் முடிந்ததும் ஒரு யோசனை சொல்லலாம். முடிந்ததும் சொல்கிற யோசனை என்னவென்றால் அவர் சொல்லலாம், “அடுத்த பத்து நாட்கள் கழித்து நீங்கள் என்னிடம் வருவீர்கள். நீங்கள் வந்துதான் ஆகவேண்டும். உங்கள் எல்லாப் பணத்தையும், ஆபரணங்களையும், மதிப்புள்ளது எதை நீங்கள் வைத்திருந்தாலும் கொண்டு வந்து என் மேஜையில் வைத்து விட்டுப் போங்கள்.” இதன் மூலமாக இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. இருபத்து நாலு மணி நேரம் கழித்து நீங்கள் யாரையாவது சுட்டு விட முடியும். இந்த உத்தரவுகளெல்லாமே நிறைவேறும். காரணம் நடப்பது எதுவுமே அந்த நபருக்குத் தெரியாது. அவரது உணர்வைப் பொறுத்த வரையில், அந்த ஆழ்ந்த மனோவசியத்தில் என்ன நடந்தது என்பதே தெரியாது. ஆழ்ந்த மனோவசியம் உங்கள் மயக்க நிலையைத் தொடுகிறது.
இந்த ஆபத்துகளைத்தான் கிறித்துவம் மிகைப்படுத்தியது. அது ஒழுக்கத்திற்கும், மதத்திற்கும் எதிரானது என்றார்கள். ஒரு பெண்ணை கற்பழித்து விடலாம். ஆனால் அவருக்கே தெரியாது. அல்லது ஒரு பெண்ணிடம் சொல்லலாம் ‘நீ என்மேல் காதல் கொண்டு விட்டாய்’ என்று. அந்தத் தருணத்திலிருந்து அவள் விழித்தவுடன் ஒரு பெரிய காதல் உருவாகும். அவள் சற்றுத் தயங்குவாள். காரணம் அவளுடைய விழிப்படைந்த மனதிற்கு என்ன நடந்தது என்பதே புரியாது. ஆனால் அவளுடைய விழிப்படைந்த மனதிற்கும், தொடர்பில்லை. மயக்கம் அதிக சக்தி வாய்ந்தது. ஒன்பது மடங்கு அதிக சக்தி கொண்டது. பிறகு அந்த மயக்கம் ஏதாவது செய்யத் துவங்கும்போது, விழிப்படைந்த மனம் அதை எதிர்க்கும், ஆனால் அது வீண் முயற்சி.
இவையெல்லாம் பரவி, வேகமாக மனிதர்களிடம் மிகைப்படுத்தப்பட்டது. ஆனால் தேவாலயங்களின் நோக்கம் உங்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அல்ல. அதன் நோக்கமே மனோவசியத்தைத் தூக்கி எறிய வேண்டும். அதனால் அந்தக் கதவின் வழியாக உச்சகட்ட நிலையான தியானத்திற்குப் போகமாட்டார்கள்.
கிறித்துவம் இன்னொரு விதமான மனோவசியத்தை முழுக்க மக்களுக்குத் தெரியாமலே செய்துவிட்டது. அதுதான் சுயமனோவசியம். அது பன்முக மனோவசியமல்ல. பன்முக மனோவசியத்தை மட்டும்தான் தவறாகப் பயன்படுத்த முடியும். தானாக, அல்லது சுய வசியத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது… அதில் யாருமே கிடையாது. நீங்கள் மட்டும்தான். இதை நீங்களே உங்களுக்கு செய்து கொள்ள முடியும். நீங்களே ஓர் அறிவிப்புக் கடிகாரத்தைப் போட்டுக் கொள்ளலாம். அதையே மூன்று முறை சொல்லுங்கள். அதுவும் பதினைந்து நிமிடத்திற்குள். அந்த அறிவிப்பு மணி ஓய்ந்தவுடன் நீங்கள் உங்கள் ஆழ்ந்த மனோவசியத் தூக்கத்திலிருந்து எழுவீர்கள். அதற்குப் பிறகு அதுதான் நடைமுறை.
நீங்கள் விளக்கைப் பாருங்கள். அந்த பன்முக மனோவசியக்காரர் என்ன செய்தாரோ அதையே செய்யுங்கள். விளக்கைப் பார்த்தபடி நீங்களே மீண்டும் மீண்டும் சொல்லுங்கள், ‘என் கண்கள் கனமாகிக் கொண்டிருக்கிறது கனமாக கனமாக… இன்னும் கனமாக, இன்னும் கனமாக, எனக்குத் தூக்கம் வருகிறது. என் கண்களை இனிமேலும் திறந்து வைத்திருக்க முடியாது. என்னால் முடிந்தவரையில் முயலுகிறேன். ஆனால் இனிமேலும் சாத்தியமில்லை.’ இது எல்லாமே மூன்று நிமிடங்கள்தான் பிடிக்கும். எவ்வளவு அதிகமாகப் போராடுகிறீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் மனோவசியத்தில் ஆழ்ந்து போவீர்கள்.
நான் ஒரு மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வயதான மனிதர். தன் குடும்பத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். தினமும் தனக்கு எத்தனை நோய்கள் வந்திருக்கின்றன என்று கணக்கெடுத்துக் கொண்டிருப்பார். மருத்துவர்களும் சோர்ந்து விட்டார்கள். அவருக்கு நோயே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மருத்துவ நிகழ்ச்சிகளைப் பார்த்து நோய்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வார். பிறகு தன் குடும்பத்தினரை வதைக்க ஆரம்பித்தார். “நான் இந்த நோயால் அவதிப்படுகிறேன். என்னை யாருமே கவனிப்பதில்லை.” இது வயதானவர்கள் மற்றவர்களின் கவனத்தைக் கவருவதற்கு செய்யும் வழி. வயதானவர்களை யாருமே கவனிப்பதில்லை. அதனால் அதற்கு அவர்களே ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எரிச்சல் வரும். அதிக கோபம், அதிக சிடுசிடுப்பு. மற்றவர்களைக் கவர அவர்களே, இப்படி புதிய தந்திரங்களை உருவாக்குவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதும் அவர்களை கவனித்து போஷாக்காக வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது யாருமே கவனிப்பதில்லை. அவர்கள் இருக்கிறார்களா செத்தார்களா என்பதைப் பற்றிக் கூட யாரும் கவலைப்படவில்லை.
என்னை நேசிக்கிற இந்தியப் பாடகர் ஜெகஜத் சிங். ஒரு நல்ல நகைச்சுவையைச் சொன்னார். லண்டலின் வசிக்கிற ஒரு நண்பர் வந்திருக்கிறார். அவரிடம், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
அவர் சொன்னார், “பரவாயில்லை”.
ஜெகஜித் சிங், “உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்?”
அவர், “அவளும் பரவாயில்லை!”
“உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?”
“அவர்களும் நலம்தான்.”
இறுதியாக ஜெகஜித் கேட்டார், “உங்கள் தந்தை எப்படியிருக்கிறார்?”
அந்த மனிதர் சொன்னார், “அப்பாவா? அவர் நான்கு வருடங்களாக நன்றாகத்தான் இருக்கிறார்… நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.” அதாவது அந்த நண்பர் நான்கு வருட காலத்திலிருந்து நன்றாக இருப்பதாகக் கூறினார். முழுமையாக நன்றாகவே இருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பிலிருந்து நன்றாகவே இருந்து வருகிறார்.
கவனத்தைக் கவர வயதானவர்கள் தங்களுக்கு உரிய வழிகள் வைத்திருப்பார்கள். தாங்கள் மைக்ரேய்னில் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு வயிற்று வலி என்றும் கூறுவார்கள். அவர்கள் மருத்துவ பெயர்கள் தெரிந்திருக்கும் வரை அவர்கள் சமாளித்து விடுவார்கள்.
இறுதியாக மருத்துவர்கள் மறுக்கத் துவங்கினார்கள். “அவர் ஒரு பைத்திய மனிதர். அவருக்கே உடல்நலக் குறைவேயில்லை. அவருக்கு எந்த நோயுமில்லை. அவரைப் பல முறை சோதித்து விட்டோம்” என்று சொல்வார்கள்.
ஆனால் மகன் சொல்வார், “நாங்கள் என்ன செய்ய முடியும்? மருத்துவரை வரவழைத்து விட்டோம்.”
அதனால் இறுதியாக மருத்துவர்கள் ஒரு மனோவசியக்காரரை வரவழைக்கலாம் என்று யோசனை சொன்னார்கள். “ஒரு மனோவசியக்காரரை வரவழையுங்கள். அவரை மனோவசியம் செய்து அவருக்கு ஒன்றுமேயில்லை என்று சொல்ல வைக்கலாம். இந்த ஒரு மருந்துதான் அவருக்குத் தேவை. அவருடைய மயக்க நிலை அவர் சரியாக இருக்கிறார் என்பதைப் பிடித்துக் கொண்டால், பிறகு ஒரு பிரச்னையுமில்லை.”
பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவர்கள் ஒரு மனோவசியக்காரரை வரவழைத்தார்கள். அவரைப் பார்ப்பதற்கு ஒரு மருத்துவரைப் போல் உபகரணங்களுடன் இருந்தார். சிக்மண்ட் ப்ராய்டைப் போல் ஒரு சின்ன தாடி. கண்ணுக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தார். தொழிலுக்கு ஏற்றாற் போல் ஒருவர் உடையணிய வேண்டும். அதுதான் கவர்ச்சியாக இருக்கும். அவர் அந்த வயோதிகரைக் கேட்டார், “உங்களுக்கு என்னவெல்லாம் பிரச்னைகள்?”
வயோதிகர், தன் பிரச்னைகளைப் பட்டியலிட்டார். மனோவசியக்காரர் சொன்னார், “சரி, நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். என் கையிலிருக்கும் இந்தத் தொங்கு மணியைப் பாருங்கள். அது மின்னும் காரணம் அது மின்கலத்தால் இயங்குகிறது. உங்கள் கண்களை அதன் மீதே வைத்திருங்கள். கண்களைத் திறக்க முடியாத நிலை வரை அப்படியே பாருங்கள்.”
நீண்ட வாழ் நாள் அனுபவத்தில் வயோதிகர்கள் புத்திசாலிகளாகவும், சூழ்ச்சிக்காரர்களாகவும் ஆகிவிடுவார்கள். அந்த வயோதிகர் நினைத்தார். ‘இவன் உடையைப் பார்த்தாலே இவன் ஒரு மோசடிப் பேர்வழியாகத் தெரிகிறான். இவன் எனக்கு என்ன சிகிச்சை கொடுக்கப் போகிறான்?’ அவர் யோசித்தார், ‘சரி, பார்க்கலாம்.’ அவர் மூன்று நிமிடங்கள் வரை காத்திருக்கவில்லை. அவர் உடனே கண்களை மூடிவிட்டார். அவர் கைகளை மனோவசியக்காரர் தூக்கியதும் அவர் கைகளைக் கீழே போட்டுவிட்டார். அவருக்கு எல்லா வித்தைகளும் தெரியும். வயோதிகர் அவர் உலகத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்.
மனோவசியக்காரர் சொன்னார், “அவர் இப்போது ஓய்வாக ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறார். இப்போது நான் அவர் நன்றாக இருப்பதாக இப்போது நான் சொல்வேன். அவருக்கு எந்த நோயுமில்லை. இல்லாத நோய்களைச் சொல்லி இனி குழந்தைகளைத் துன்புறுத்த மாட்டார்.” வயோதிகர் மௌனமாக இருந்தார்.
அவருடைய பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஏன் நாங்கள் முன்பே இந்த மனோவசியக்காரரைப் பற்றி யோசிக்கவில்லை? மருத்துவர்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து காசை விரையம் செய்துவிட்டோம். அவர்கள் சொன்னதெல்லாம், ‘நீங்கள் வதைக்கிறீர்கள். நீங்கள் என்னதான் பணம் கொடுத்தாலும் எங்களை வதைக்கிறீர்கள். அந்த மனிதனுக்கு நோயே இல்லை” இந்த மனோவசியக்காரர்தான் சரியானவர்.
வயோதிகர் அப்படியே இருந்தார். எல்லா மனோதத்துவ கட்டளைகளும் முடிந்தன. மனோவசியக்காரர் தன் பணத்தைப் பெற்றுக் கொண்டார். ஒரு பிள்ளை அவரை வழியனுப்ப கார் வரை சென்றார். ஆனால் அவன் திரும்பி வருவதற்குள் வயோதிகர் கண்களைத் திறந்து கேட்டார். “அந்தக் கிறுக்குப் பயல் போனானா இல்லையா?”
நீங்கள் உடனடியாக கண்களை மூடினால், ஒன்றும் ஆகாது. காரணம் நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்கள். அந்த மனோவசியக்காரர் என்னதான் சொன்னாலும் அவர்தான் கிறுக்கனைப்போல ஆவார். என்ன முட்டாள்தனமாகப் பேசுகிறான். “உங்கள் கண்கள் கனமாக்கி கொண்டிருக்கின்றன.” அது கனமாகாது. ‘நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் போகிறீர்கள்’ நீங்கள் தூங்கவில்லை அதிக விழிப்புடன் இருக்கிறீர்கள். அவர் உங்களை ஏமாற்றுகிறார். உங்களுக்கு எந்த நோயுமில்லை என்கிறார்.
ஆனால் நீங்கள் ஒருவேளை சுய மனோவசியம் செய்து கொண்டால், அதில் எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் அந்த முழு முயற்சியில் இருக்கிறீர்கள். உங்கள் கண்களை சோர்வடையச் செய்யும் அந்த வெளிச்சத்தைப் பார்க்கிறீர்கள். அதுதான் அதன் ஒரே செயல்பாடு. அந்த மனோவசியக்காரர் சொன்னதைப் போல நீங்கள் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறீர்கள். ஆனால் நீங்களாகவே இருக்கிறீர்கள். இறுதியாக உங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. அது மூடிக்கொள்கிறது. அதன் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை. உங்கள் இமைகள் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்று நீங்கள் உணர்ந்தவுடன், நீங்கள் தூக்கத்தில் விழிப்பதைப் போல உணர்கிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்கள். “நான் ஆழ்ந்து, ஆழ்ந்து…” பிறகு ஒரு தருணத்தில் நீங்கள் உங்கள் ஆழ்ந்த மயக்கத்தில் செல்வீர்கள். பத்து நிமிடங்கள் கழித்து அந்த அறிவிப்பு மணி ஓய்ந்துவிடும். நீங்கள் உங்கள் மயக்கத்திலிருந்து விழிப்பிற்குள் வருவீர்கள். நீங்கள் வியப்படைவீர்கள். நீங்கள் எவ்வளவு புத்துணர்வோடு, எவ்வளவு இளமையாக உங்களுக்குள் இருப்பீர்கள். குளிர்ந்த காற்றுடன் கூடிய ஓர் அழகிய தோட்டத்தைக் கடந்து வந்ததைப்போல சுத்தமாக இருப்பீர்கள்.
உங்களுக்கு நீங்களே ஒரு சுய மனோவசிய யோசனை சொல்லிக் கொள்ளலாம். அது நீங்கள் கண்களை மூடுகிற அந்தத் தருணத்தில் சொல்லப்பட வேண்டும். இப்போது நீங்கள் ஆழமாகப் போவதை உணர்வீர்கள். அப்படி ஆழத்தில் போவதற்கு முன்பாக நீங்கள் சொல்வீர்கள் “நாளையிலிருந்து என் உடல் இன்னும் நன்றாக இருக்கப் போகிறது.” ஒரே ஒரு வி~யத்தைத்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய அல்ல. பேராசைப்படாதீர்கள். ஒரு பதினைந்து நாட்கள் அல்லத ஒரு மூன்று வார பயிற்சி உங்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும். நாளையிலிருந்து உங்கள் தியானம் இன்னும் ஆழமாக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். உங்கள் தியானம் இன்னும் ஆழமாகப் போய் உங்களுக்கு ஓர் அழகிய இணைப்பை உருவாக்கும்.
அந்த தியானம் இன்னும் ஆழமாகப் போகும்போது, நீங்கள் உங்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம் “நாளை முதல் என் தியானம் இன்னும் ஆழமாகப் போகும்.” இந்த இரண்டையும் நீங்கள் உங்கள் மயக்கத்தில் கொண்டு வரலாம்.
ஒருமுறை உங்கள் மயக்க நிலையில் ஆழத்தைத் தொட்டுவிட்டால், பிறகு நீங்கள் உங்கள் இரண்டாவது எண்ணத்தைச் சொல்லலாம். “நான் இருட்டு மயக்கத்திலிருந்தாலும், எனக்குள் ஒரு மெலிதான விழிப்பு இருக்கும். என்ன நடக்கிறது என்பதை நான் பார்க்க முடியும்” பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லுங்கள். “இலேசாக இருந்த என் விழிப்புணர்வு இப்போது பெரிதாகி, பெரிதாகி, பெரிதாகி…” பிறகு ஒருநாள் நீங்கள் உங்கள் முழு மயக்கமும் ஒரு விழிப்பு வெளிச்சத்தில் இருப்பதை உணர்வீர்கள். அதுதான் தியானம்.
மனோவசியத்தைப் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும். எந்தவித பயமுமில்லாமல். சேர்ந்தோ, நீங்கள் நம்புகிறவருடனோ அல்லது பரஸ்பர நேசம் வைத்திருப்பவருடனோ. அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிற பயமில்லாமல் இருக்கும். நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பருடன் இருக்கிறீர்கள். அவர்களால் உங்களுக்குக் கெடுதல் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வளைந்து கொடுக்கிறீர்கள். அல்லது நீங்களாகவே செய்து கொள்ளலாம்.
அப்படிச் செய்தால் இது சற்று அதிக நேரம் பிடிக்கும். காரணம் இரண்டு பேர் செய்கிற வேலையை நீங்கள் ஒருவரே செய்கிறீர்கள். இது கொஞ்சம் தொந்தரவுதான்.
ஆனால் இப்போது பதிவுக் கருவிகள் இருக்கின்றன. அந்த இன்னொரு நபரை முழுமையாகத் தூக்கிப்போட்டு விடலாம். உங்கள் எண்ணத்தை அந்தப் பதிவுக் கருவியில் சொல்லுங்கள். அந்தப் பதிவுக் கருவி உங்களைத் தவறாகப் பயன்படுத்தாது. அது உங்கள் மனைவியைக் கொல்ல சொல்லாது. நீங்களாக அந்தக் கருவியில் சொல்லாத வரையில். பிறகு நான் ஒன்றும் உதவ முடியாது. நீங்கள் அந்தக் கருவியில் என்ன பதிவு செய்கிறீர்களோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் சொல்லும். உங்கள் முழு எண்ணத்தையும் அதில் பதிவு செய்து விடலாம். எல்லா எண்ணங்களையும். தூக்கத்திற்குப் போவது. இமைகளில் கனம், ஆழத்திற்கு போவது. பிறகு நீங்கள் அந்த ஆழத்திலிருக்கும்போது நான்கு அல்லது ஐந்து நிமிட இடைவேளையில் அந்த ஆழத்தில் நீங்கள் தங்கிவிடுவீர்கள். பிறகு பதிவுக் கருவியிலிருந்து ஒரு குரல் கேட்கும். உங்கள் தியானம் இன்றிலிருந்து ஆழமாகிவிடும். உங்கள் எண்ணங்களோடு நீங்கள் போராடமாட்டீர்கள். நீங்கள் கண்களை மூடிய அந்தத் தருணத்தில் உங்கள் எண்ணங்கள் தானாகவே காணாமல் போய்விடும்.
பதிவுக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் அங்கே நீங்கள் யாரையும் நம்ப வேண்டிய அவசியமில்லை. எந்தவித பயமுமில்லாமல் பதிவுக் கருவியை நம்பலாம். நீங்கள் கதவை மூடிக்கொள்ளலாம். யாரும் வந்து பதிவுக் கருவியில் விளையாட முடியாது. இல்லையென்றால் யாராவது வந்து உங்களிடம் தந்திரம் செய்யலாம்.
சுய மனோவசியம் தியானத்தின் சேவையில் இருக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய பயன். அது ஆரோக்யத்திற்கு, நீண்ட ஆயுளுக்கு, அன்பிற்கு, நட்புணர்விற்கு, துணிச்சலுக்கும் சேவை செய்யலாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை சுய மனோவசியம் கொடுத்துதவும். தெரியாத வி~யம் குறித்த உங்கள் பயத்தை போக்கலாம். உங்கள் மரண பயத்தைத் தூக்கி எறியலாம். நீங்கள் தனிமையில், மௌனமாக, அமைதியாக இருக்க உங்களைத் தயார் செய்யலாம். உங்களை இருபத்து நாலு மணி நேரமும் உங்களை தியானத்திலேயே இருக்க வைக்கலாம்.
நீங்கள் கூட சொல்லிக் கொள்ளலாம், “நான் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போது, ஒரு விழிப்பு வெளிச்சம் என் தூக்கத்தைக் கலைக்காமல் தொடரட்டும்.”
அந்த நேரத்தில் நீங்கள் சொல்கிறீர்கள், “சிகிச்சைக்கும், தியானத்திற்குமிடையே இருந்த மெல்லிய கோடு மறைந்துவிட்டது.” இதுதான் என் நீண்ட நாள் ஆசை. சிகிச்சை மனோவசியத்தில் கரைய வேண்டும். அந்த மனோவசியம் தியானத்தில் கரைய வேண்டும். பிறகு நீங்கள் புத்துணர்வு பெற ஒரு மிகப்பெரிய சக்தியை உருவாக்கி விட்டீர்கள். கடந்த காலத்தில் இதைப் பயன்படுத்தியதேயில்லை.
சிகிச்சையைப் பயன்படுத்தவேயில்லை. சிகிச்சை உங்கள் குப்பைகளையெல்லாம் சுத்தப்படுத்தும். உங்கள் நிலைப்பாட்டைக் கூட எடுத்துவிடும். உள்ளேயிருந்த எல்லாவற்றையும் தூக்கிப் போட சிகிச்சை உதவும். அதை உள்ளே அழுத்தி வைத்திருந்தீர்கள். சிகிச்சை அதைத் தூக்கி எறியும். சிகிச்சைதான் ஓர் அழகான சுத்தப்படுத்தும் முறை. சுத்தப்பட்ட மனம் மனோவசியத்திற்குள் சுலபமாக, எந்தப் போராட்டமுமில்லாமல் வந்து விழும். சுயவசியத்தில் அல்லது வசியத்தில் இல்லாதவர்கள் கூட, அந்த முப்பத்து மூன்று சதவிகிதத்தில் இல்லாதவர்கள் கூட சிகிச்சையினால், அவர்களும் கூட மனோவசியத்திற்குத் தயாராக இருக்கும் குழுவோடு தயாராக இருப்பார்கள். சிகிச்சை நூறு சதவிகித மக்களையும், நம்பிக்கைக்குரிய மனோவசியப் பிரியர்களாக மாற்றிவிடும். சிகிச்சை மெதுவாக மனோவசியத்தில் கரையும். பிறகு மனோவசியத்தை தியானத்திற்குப் போகிற படியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மூன்றையும் நான் என்னுடைய மும்மூர்த்திகளாக வரித்துக் கொண்டிருக்கிறேன். கடவுள், புனித ஆவி, யேசு கிறிஸ்து அந்த முட்டாள்தனத்தையெல்லாம் மறந்து விடுங்கள். இவை மும்மூர்த்திகளல்ல. ஆனால் எது விஞ்ஞான பூர்வமானதாக, எது நீங்களாக செய்ய முடியுமோ, எதற்கு பயிற்சி பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவோ அதைத் தவிர மதம் முழுவதுமே குப்பைகள்தான். ஆனால் மக்கள் அந்தக் குப்பைகளின் மீது ஆர்வம் காட்டி, அவசியமானவற்றை மறந்து விட்டார்கள். உண்மையில், அந்த அவசிய அடிப்படைக் கூறுகளெல்லாம் இமயமலையோடு ஒப்பிடப்படும்போது மிகவும் சிறியவைதான். ஆனால், அவை அந்த மலையின் மீதுதான், பல நூற்றாண்டுகளாகக் குவிந்து கிடக்கின்றன. இப்போது அவசியமான அந்தக் கூறுகள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதே கடினமாகிவிட்டது.
நான் உங்களுக்கு சிபாரிசு செய்வதெல்லாம் மிகச் சாதாரண விஷயம். இதற்கு உங்களுக்கு பாதிரியார் தேவையில்லை. தேவாலயங்கள் தேவையில்லை. இதற்கு எந்தப் புனித நூலும் தேவையில்லை. சிறிய புரிந்து கொள்ளுதல், சிறிய துணிச்சல் மட்டுமே தேவை. சிகிச்சை மூலமாகத் தூக்கி எறியுங்கள். உங்களுக்குள் எவ்வளவு குப்பை இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. சுத்தப்படுத்தும்போதுதான் தெரியும், “அட கடவுளே இது நானா அல்லது வேறு யாராவதா? நான் என்ன செய்கிறேன்? என்ன சொல்கிறேன்?” சில சமயங்களில் நீங்கள் சொல்வதில் கூட எந்த அர்த்தமும் இருக்காது. ஆனால் அது இருந்திருக்கிறது. இல்லையென்றால் அது உங்களிடம் வந்திருக்க முடியாது. அது உன்னுடைய தியானத்திற்கு இடைஞ்சல் நீ மனோவசியத்திற்குள் ஆழமாகப் போவதற்கும் தடையாக இருந்தது. நடுவில் எங்கோ அது ஒரு தடுப்பாக இருந்திருக்கிறது.
அதனால் சிகிச்சைதான் முதல் விஷயம். இரண்டாவது மனோவசியம். மூன்றாவது அதிலிருந்து வளரக்கூடிய உன் தியானம்.
தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி.
தியானம் முழுமை பெறும்போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது. முழு பேரின்பம் வருகிறது. முழுப் பரவசம் உன்னை ஆட்கொள்கிறது.

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவர் சங்கத்தில் ஓஷோ ஆற்றிய உரை
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை க்கான பட முடிவு

என் நேசத்திற்குரியவர்களே,
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்பேறு. கவலை, பதற்றம், நோய், உடல்நலக்குறைவு ஆகியவை மனிதனுக்கு மட்டுமே உள்ள பிரச்னைகள். பூமியில் வேறு எந்த மிருகத்திற்கும் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த நிலைதான் மனிதனுக்கு முன்னேற்றத்தை, பரிணாம வளர்ச்சியைக் கொடுக்கிறது. நோய் வந்தால் மனிதன் அதனுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அந்த நிலையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த நோய்தான் மனிதனின் ஆற்றல், அமைதியின்மை. அதே சமயம் இதுதான் அவனுடைய அவப்பேறும் கூட. அமைதியில்லாமல், மகிழ்ச்சியில்லாமல் இருப்பதனால் அவன் கஸ்டப்படுகிறான்.
மனிதனைத் தவிர வேறு எந்த மிருகத்திற்கும் பைத்தியம் பிடிப்பதில்லை. மிருகங்களுக்கு தானாகப் பைத்தியம் பிடிப்பதில்லை. அவை மனநோய்க்கு ஆளாவதில்லை. மனிதன்தான் அதைத் துன்புறுத்தி அதன் புத்தியைப் பேதலிக்கச் செய்கிறான். காட்டில் இருக்கும் போது மிருகங்களுக்கு புத்தி கெட்டுப் போவதில்லை. சர்க்கஸ்க்கு வந்தவுடன் தான் அதற்குப் பித்து பிடித்துப் போகிறது. காட்டில் விலங்குகள் அடைக்கப்படுவதில்லை. மிருகக் காட்சி சாலைக்குள் வந்தவுடன்தான் அதற்கு வக்ரம் பிடிக்கிறது. மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்து கொள்கிறான். எந்த மிருகமும் தற்கொலை செய்து கொள்வதில்லை.
மனிதன் என்கிற நோயைக் குணப்படுத்த, புரிந்து கொள்ள இரண்டு முறைகளில் முயற்சி செய்தார்கள். ஒன்று மருந்து, மற்றொன்று தியானம். இரண்டு சிகிச்சையுமே ஒரே நோய்க்குத்தான். மருந்து மனிதனுக்குள் இருக்கும் ஒவ்வொரு நோயையும் தனித்தனியாகப் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து பார்க்கிற அணுகுமுறை. தியானம் மனிதனையே நோயாகப் பாhக்கிறது. தியானம் மனிதனின் அடிப்படைக் குணாதிசயத்தையே நோயாகப் பார்க்கிறது. மனிதனுக்கு வந்து போவதுதான் நோய் என்றுதான் மருந்து பார்க்கிறது. மனிதனுக்கு அந்நியமான ஒரு விஷயமாகவே மருந்து நோயை நினைக்கிறது. மெதுவாக இந்த வேறுபாடுகள் கரைந்து விடுகின்றன.

‘நோய்க்கு சிகிச்சை அளிக்காதே, நோயாளிக்கு அளி’

என்று சொல்லத் துவங்கியிருக்கிறது மருத்துவ விஞ்ஞானம்.
இது மிக முக்கியமான கருத்து. நோய் என்பது ஒரு நோயாளியின் வாழ்க்கைமுறை என்பதுதான் இதற்குப் பொருள். ஒவ்வொரு மனிதனும் ஒரு மாதிரியான நோயில் விழுவதில்லை. நோய்களுக்கும் ஒரு தனித்தன்மை, தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு. எனக்கும் காச நோய்; உனக்கும் காசநோய். அதனால் இருவரின் நோயும் ஒன்று என்று அர்த்தமில்லை. நமது காச நோய்க்குக் கூட இரண்டு வடிவங்கள் உண்டு. காரணம் நாம் இருவரும் வௌ;வேறு தனி நபர்கள். என் காச நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை உன் காச நோய்க்கு நிவாரணம் அளிக்காது. நோயாளி என்பவன் உள்ளே வேர்களில்தான் இருக்கிறான். நோயில் அல்ல.
மருந்து மனிதனின் நோயை மேலோட்டமாகவே பார்க்கிறது. தியானம் மனிதனுக்குள்ளே போய் நோயின் வேர்களைப் பிடித்துக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் மருந்து மனிதனின் ஆரோக்கியத்தை வெளியேயிருந்து கொண்டு வருகிறது. தியானம் மனிதனின் உள் இருப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மருந்தில்லாமல் தியான விஞ்ஞானம் முழுமையடையாது. அதேபோல் மருந்து, விஞ்ஞானமும் தியானமில்லாமல் நிறைவுபெறாது. காரணம் உடல், ஆன்மா இரண்டு சேர்ந்ததுதான் மனிதன்.
இரண்டும் சேர்ந்துதான் மனிதன் என்பது ஒரு மொழிப்பிழை.
ஒரு நபரின் உடல், ஆன்மா இரண்டுமே ஒரு மனிதனின் தனித்தனி அடையாளங்களாகவே மனிதன் பல ஆயிரம் வருடங்களாக நினைத்து வந்திருக்கிறான். இந்தச் சிந்தனை இரண்டு ஆபத்தான முடிவுகளை கொடுத்திருக்கிறது. ஒரு முடிவில் சிலர், ஆன்மா மட்டுமே மனிதன் என்று நினைத்து உடலைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். இந்தச் சிலர் தியானத்தில் மட்டுமே சில முன்னேற்றங்களை ஏற்படுத்தி மருந்தை கவனிக்கவில்லை. அதனால் மருந்து விஞ்ஞானம் ஆகவில்லை. அதனால் உடல் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு மாறாக, சிலர் மனிதன் என்பவன் வெறும் உடல்தான் என்று கருதினார்கள். அவர்கள் ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படவில்லை. இவர்கள் தங்கள் பங்கிற்கு மருத்துவத் துறையில் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார்கள். தியானத்தின் பக்கம் அடியெடுத்து வைக்கவேயில்லை.
இரண்டும் சேர்ந்தவனேதான் மனிதன். அதே சமயம் இப்படி சொல்வது ஒரு மொழிப் பிழை என்று நானே சொல்கிறேன். இரண்டு சேர்ந்தது என்று சொல்லும்போது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விஷயங்கள் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இல்லை. உண்மையில் உடல், ஆன்மா இரண்டுமே ஒரு கோலில் இரு முனைகள். சரியான கோணத்தில் பார்த்தால், மனிதன் உடலுடன் கூடிய ஆன்மா என்று சொல்ல முடியாது. காரணம் அது அப்படியில்லை. மனிதன் உள-உடற்கூறு. அல்லது உடல்-உள கூறானவன். மனிதன் மன-உடல் அல்லது உடல்-மனம்.
என்னைப் பொறுத்தவரையில் உணர்வின் ஈர்ப்புக்கு உட்பட்ட ஆன்மாவின் ஒரு பகுதியே உடல்- உணர்வின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட உடலில் ஒரு பகுதியே ஆன்மா. கண்ணுக்குப் புலப்படாத உடலே ஆன்மா. புலப்படும் ஆன்மாவே உடல். அவை இரண்டு வெவ்வேறான விஷயங்கள் அல்ல. இரண்டு வேறுபட்ட அடையாளங்கள் அல்ல. ஒரே அடையாளத்தில் ஒரு வேறுபட்ட நிலையில் அதிர்வுகள்.
இந்த இரு வேட எண்ணங்கள்தான் மனித இனத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது. எப்போதுமே அதை இரண்டு என்று நினைத்துக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறோம். முதலில் இதைப் பொருள்- ஆற்றல் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி நினைப்பதில்லை. இப்போது பொருள்- ஆற்றல் இரண்டும் தனித்தனியானவை என்று சொல்ல முடியாது. பொருள் என்றால் ஆற்றல் என்றுதான் சொல்கிறோம். பழைய பதங்களைப் பயன்படுத்துவதில்தான் சிக்கலே வருகிறது என்பதுதான் யதார்த்த உண்மை. ஏதோ ஒன்று இருக்கிறது. உதாரணத்திற்கு அதை ‘அ’ என்றே வைத்துக் கொள்வோம். ஒரு புறம் அதைப் பொருளாகப் பார்த்தால் மறுபுறம் அது ஆற்றலாக இருக்கிறது. அவை இரண்டல்ல. ஒரே படிவத்தின் இரண்டு வடிவங்கள்.
அதேபோல்தான் உடல்- ஆன்மா இரண்டுமே ஒரே படிவத்தில் இரண்டு வடிவங்கள். இரண்டு முனைகளிலிருந்தும் நோய் வரலாம். உடலில் துவங்கி ஆன்மாவில் முடியலாம். உண்மையில் உடலில் செயல்பாடுகளின் அதிர்வுகளை ஆன்மாவில் உணர முடியும். அதனால்தான் சில சமயங்களில் நோய் குணமானபின்னும் ஒரு மனிதன் தனக்கு ஏதோ வியாதி இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான். உடலிலிருந்து நோய் வெளியேறிவிட்டது. உடலில் நோய் இல்லை என்று மருத்துவரே சொல்லிவிட்டார். ஆனாலும் நோயாளி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவே நினைக்கிறார். அவருக்கு வியாதி இல்லை என்பதை நம்ப மறுக்கிறார். எல்லாவித பரிசோதனைகளும் அவருக்கு எல்லாம் சரியாகவே இருப்பதாக உணர்த்திவிட்டன. ஆனாலும் தான் நன்றாக இல்லை என்றே அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவரைப் போன்றவர்கள்தான் மருத்துவர்களைப் பாடாய்ப்படுத்துவார்கள். ஆனால் நோய் இல்லை என்பதாலேயே உன் உடல், நலம் என்று அர்த்தமில்லை. உடல் நலத்திற்கென்று உடன்பாடான பண்பு உண்டு. நோய் இல்லை என்பது எதிர்மறையானது. முள் இல்லை என்று நம்மால் சொல்ல முடியும். அதுவே மலர் இருக்கிறது என்று பொருளில்லை. முள் இல்லை என்றால் அதைக் காணவில்லை என்றுதான் பொருள். மலர் இருக்கிறது என்பது முற்றிலும் வேறு விஷயம்.
ஆரோக்கியம் என்கிற பரிமாணத்தில் இன்னும் மருந்து விஞ்ஞானம் இன்னும் எதையுமே சாதிக்கவில்லை. நோய் என்பது என்ன என்பதிலேயே அதன் முழு கவனமும் இருந்து வந்திருக்கிறது. நோயைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டால் மருந்து விஞ்ஞானம் பலவிதமான விளக்கங்களைக் கொடுக்கும். ஆரோக்கியத்தைப் பற்றிக் கேட்டால் உங்களை அது ஏமாற்ற முயற்சி செய்யும். நோயில்லை என்றால் எஞ்சியிருப்பது ஆரோக்கியம் என்று சொல்லும். இது தந்திரம்; விளக்கமன்று. நோயைத் தொடர்புபடுத்தி எப்படி ஆரோக்கியத்திற்கு விளக்கமளிக்க முடியும்? இது முள்ளைக் காட்டி மலரைப் பற்றி சொல்வது மாதிரி. மரணத்தை வைத்து வாழ்க்கையை விளக்குவது மாதிரி. இருட்டைக் காட்டி வெளிச்சத்தைப் புரிய வைப்பது போல. பெண்ணைக் காட்டி ஆணை, அல்லது ஆணைக் காட்டி பெண்ணை வர்ணிப்பது போல.
மருந்து விஞ்ஞானம் இதுவரையில் ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்லவேயில்லை. நோய் என்ன என்பதை மட்டுமே அது சொல்வதுதான் அதன் இயல்பு. அதற்குக் காரணம் இருக்கிறது. மருந்து விஞ்ஞானம் வெளியில் இருந்துதான் கிரகித்துக் கொள்கிறது. உடல் ரீதியான வடிவத்தை மட்டுமே அது கவனிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் போது நோய் மட்டுமே புலப்படும். மனிதனின் உள்ளிருப்பு- ஆன்மாவை வைத்தே ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும்… இந்த வகையில் பார்த்தால் இந்தி வார்த்தை ஸ்வஸ்தயா என்பது மிகவும் அழகான வார்த்தை. ஆங்கிலத்தில் ‘ஹெல்த்’ என்று சொல்லப்படுவது ஸ்வஸ்தயா என்று பொருளாகாது. குணப்படுத்துவது- அதாவது ‘ஹீல்’ என்கிற வார்த்தையை வைத்தே ‘ஹெல்த்’ என்கிற வார்த்தை வந்தது. அது நோயுடன் தொடர்புடையது. ஹெல்த் என்றால் குணப்படுத்தப்பட்டவர்- அதாவது நோயிலிருந்து மீண்டவர் என்று அர்த்தம்.
ஸ்வஸ்தயா என்றால் அப்படிப் பொருளன்று; தன்னை அடைந்தவர், தனக்குள் நிறைந்தவர் என்றுதான் பொருள். தனக்குள் தெளிவாக இருப்பவர் என்றுதான் இதற்குப் பொருள்; ஆரோக்கியம் என்பதன்று. உண்மையில் ஸ்வஸ்தயா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை. உலகத்தின் மற்ற மொழிகளில் நோய் அல்லது நோய் இல்லை என்கிற பொருளையே கொடுக்கிறது. நோயற்ற நிலை என்றே நாம் ஸ்வஸ்தயாவைப் புரிந்து கொண்டிருக்கிறோம். நோயற்ற நிலை அவசியம். ஆனால் ஸ்வஸ்தயாவிற்குள் அது மட்டும் அடங்காது. அதற்கு வேறு எதுவோ தேவைப்படுகிறது. கோலின் மறுமுனையில்- அதாவது நம் உள்ளிருப்பிலிருந்து ஏதோ ஒன்று தேவைப்படுகிறது, நோய் வெளியிலிருந்து துவங்கினாலும் அதன் அதிர்வுகள் ஆன்மாவில் எதிரொலிக்கின்றன.
அமைதியான ஓர் ஏரியில் நான் ஒரு கல்லை வீசுகிறேன். நீரில் கல் பட்ட இடத்தில் மட்டுமே நீர் கலங்கும். ஆனால் அந்தக் கலங்கலினால் ஏற்படும் சிற்றலைகள் கல் எறியப்படாத ஏரியின் கரைவரை செல்லும். அதேபோல்தான் நம் உடலில் ஏற்படும் கலக்கம் நமது ஆன்மாவரை சென்று கலக்கும். உடலுக்கு மட்டுமே நோய் மருந்து, சிகிச்சை அளிக்குமென்றால், தொலைதூரத்தில் கரையை அடைந்த சிற்றலைகள் என்ன ஆகும்? நாம் ஏரியில் ஒரு கல்லை எறிகிறோம். கல் தாக்கிய நீரில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டுத் திருப்தி அடைகிறோம். நீரில் பட்ட கல்லுக்குத் தொடர்பில்லாமல் தனக்கென்று ஒரு சுயமான தனித்தன்மையை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட சிற்றலைகளின் நிலை என்ன ஆகும்?
ஒரு மனிதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நோயின் அதிர்வுகள் ஆன்மாவிற்கு நுழைகின்றன. அதனால் சிகிச்சை முடிந்து நோய் குணமானபின்னும் அந்த நோய் இருப்பதாக அவர் நினைக்கிறார். நோய் இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் அந்த அதிர்வுகள் அந்த நபரின் உள்ளிருப்பில் எதிரொலித்திருக்கிறது. இதற்கு மருந்து விஞ்ஞானத்தில் இதுவரையில் எந்தத் தீர்வும் இல்லை. அதனால் தியானமில்லாமல் மருந்து விஞ்ஞானம் எப்போதும் முழுமை பெறாமலேயே இருக்கும். நம்மால் நோயைக் குணப்படுத்த முடியும். நோயாளியைக் குணப்படுத்தவே முடியாது. ஒரு வகையில் நோயாளி குணமாகாமல் இருப்பது மருத்துவருக்கு நல்லது. நோய் குணமானாலும் நோயாளி மறுபடியும் அவரிடம் வரவேண்டுமே!
நோய் கோலின் மறுமுனையிலிருந்து கூட எழும்பியிருக்கலாம். உண்மையில், மனிதன் இருக்கிற நிலையில் நோய் அங்கேயே ஏற்கனவே இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல மனிதனைப் போல மனம் சீரழிந்த, பதற்றமான, அமைதியற்ற வேறு எந்த மிருகமும் கிடையாது. இதற்குக் காரணமிருக்கிறது. தன் சுய உருவத்தை விட்டு, வேறு மாதிரியாக வேண்டும் என்கிற எண்ணம் எந்த மிருகத்திற்கும் கிடையாது. நாய் என்பது நாய்தான். அது நாயாக வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனிதன், மனித ஜீவனாக மாறவேண்டியிருக்கிறது. அவன் ஏற்கனவே அப்படியில்லை. ஒரு நாயிடம், அது சற்றுக் குறைவான நாய் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. மனிதன் வி~யத்தில் அப்படியில்லை. சரியான காரணத்தோடு ஒரு மனிதனிடம், அவன் சற்று குறைவான மனிதன் என்று சொல்லலாம். முழுமையாக எந்த மனிதனும் பிறந்ததில்லை.
மனிதன் முழுமையற்ற நிலையில்தான் பிறக்கிறான். மற்ற எல்லா மிருகங்களும் முழுமையாகவே பிறக்கின்றன. ஆனால் மனிதன் அப்படியில்லை. அவன் முழுமையடைய சில வி~யங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த முழுமையற்ற நிலைதான் அவனுடைய நோய். அதனால்தான் இருபத்திநாலு மணி நேரமும் அவன் சிக்கலிலேயே இருக்கிறான். வறுமையினால் ஓர் ஏழை மட்டும்தான் கஸ்டத்திலிருக்கிறான் என்பதில்லை. அப்படித்தான் நம்மிடம் பொதுவாக ஒரு எண்ணம் இருக்கிறது. ஒரு பணக்காரனாகும்போது க~;டத்தின் அளவுதான் மாறுகிறதே தவிர, கஸ்டம் அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் உணருவதேயில்லை.
உண்மையில் ஒரு பணக்காரனுக்கு இருக்கிற கவலையெல்லாம் ஓர் ஏழைக்குக் கிடையாது. காரணம் ஓர் ஏழை கஸ்டப்பட அவன் ஏழை என்கிற நியாயமான பிரச்னை இருக்கிறதல்லவா? ஆனால் ஒரு பணக்காரனுக்கு நியாயமான காரணமில்லை. தன் கஸ்டத்திற்கு இதுதான் காரணம் என்று அவனால் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. ஒரு ஏக்கம், அல்லது கவலைக்கு ஒரு வெளிப்படையான காரணமில்லாத போது இது இன்னும் மோசமாகிறது. ஒரு நியாயமான காரணமிருந்தால் அது நிவாரணத்தைக் கொடுக்கும், ஓர் ஆறுதலைத் தரும். காரணமிருந்தால் அந்தக் கஸ்டத்தை ஒருநாள் நீக்கிவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால் காரணமில்லாமல் ஒரு கஸ்டம் வந்தால் சிக்கல்கள் அதிகரிக்கும்.
ஏராளமான துன்பத்திற்கு ஆளான பல ஏழை நாடுகள் உண்டு. ஆனால் அவை பணக்கார நாடானவுடன், பணக்கார நாடுகளும் இந்தத் துன்பத்தை அனுபவித்திருக்கும் என்பதை உணரும்.
மனித இனம், ஒரு பணக்காரனின் துன்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்! ஏழையடைவதை அல்ல. துன்பத்தை தேர்ந்தெடுக்கிற ஒரு நிலை வந்தால் ஒரு பணக்காரனின் துன்பத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. அதே சமயம் அதில் அமைதியின்மையும் அதிகமாகும்.
இன்றைக்கு, உலகத்தின் எந்த நாட்டையும் விட, அதிகமான அமைதியின்மையையும், ஏக்கத்தையும் சந்திக்கிற நாடு அமெரிக்காதான். வேறு எந்தச் சமூகத்திற்கும் இல்லாத அளவிற்கு வசதிகள் அமெரிக்காவில்தான் இன்று இருக்கின்றன. ஆனால் உண்மையில் அமெரிக்காவில்தான் முதல் முறையாக ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. முதல் முறையாக மாயைகள் உடைபட்டிருக்கின்றன. தன்னுடைய துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணமிருக்கிறது என்று மனிதன் நினைப்பதுண்டு.
தன்னுடைய துன்பத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. தான் மட்டுமே காரணம் என்கிற தெளிவு முதல் முறையாக அமெரிக்காவில் வந்திருக்கிறது. புதிய துன்பங்களைத் தானே கண்டுபிடிக்கிறான். அவனுக்குள்ளிருக்கிற குணாதிசயம் அவன் இல்லாத ஒன்றை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த நிலை ஒவ்வொரு நாளும் அர்த்தமில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அதனால் நாளும் அர்த்தமில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அதனால் ஏற்கனவே சாதித்தது கூட அர்த்தமில்லாத, அற்பமானதாகத் தெரிகிறது. அதனால் இல்லாத ஒன்றிற்காகத் தொடர்ந்து போராடுகிறான்.
நடக்க முடியாத இரண்டு காரியங்களுக்கு இடையே கட்டப்பட்ட பாலம்தான் மனிதன் என்று ““நீட்ஸே““ எங்கோ சொன்னார். இயலாத காரியத்தைச் சாதிக்க ஓர் ஆர்வம். முழுமையடைய ஓர் ஆர்வம். இந்த முழுமையடைகிற ஆர்வத்தில்தான் எல்லா மதங்களுமே பிறந்தன.
ஒரு காலத்தில் இந்தப் பூமியில் பூசாரிகள்தான் வைத்தியர்கள். மதத் தலைவர்கள்தான் மருத்துவர்கள். அவரே பூசாரி அவரே மருத்துவர். இதை மனத்தில் குறித்து கொள்வது நல்லது. நாளை இதே நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை. ஒரு சின்ன வித்தியாசம் மட்டும் இருக்கும். மருத்துவர் பூசாரியாயிருப்பார். இது அமெரிக்காவில் ஏற்படத் துவங்கி விட்டது. காரணம் முதல் முறையாக உடல் மட்டுமே என்கிற நிலை இல்லை என்பது அங்கு தெளிவாகியிருக்கிறது. உடல் முழு ஆரோக்கியத்துடன் இருந்தால் பிரச்சினைகள் பல மடங்கு கூடுகிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தன்னுள் இருக்கும் நோய், உடலிலுள்ள கோலின் மறு முனையிலிருந்து வந்திருக்கிறது என்பதை உணரத் துவங்கி விட்டான்.
நமது உணர்வுகளுக்குக் கூட காரணம் தேவைப்படுகிறது. காலில் முள் குத்திய பிறகுதான் கால் இருக்கிற உணர்வே ஒருவனுக்கு வருகிறது. காலில் முள் குத்தாத வரையில் கால் இருக்கிற உணர்வே இருப்பதில்லை. முள் காலில் இருக்கும்போது அவனுடைய ஆன்மா காலைக் குறி வைக்கும் அம்பாக மாறிவிடுகிறது. அந்தச் சமயத்தில் காலைத் தவிர வேறு எதிலும் கவனம் செல்லாது. அதுதான் இயல்பு. ஆனால் காலிலிருந்து முள்ளை எடுத்த பிறகும் வேறு எதிலும் கவனம் செல்லாது. உங்களுடைய பசி தீர்ந்துவிட்டால், உடுத்துவதற்கு நல்ல உடைகள் இருக்கும். வீடு ஒழுங்காக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான மனைவி கிடைப்பாள். அதைவிட பேரிழப்பு வேறு இல்லை என்பது வேறு விடயம். பிடித்தமான மனைவி கிடைக்காவிட்டால் ஒருவனுடைய துன்பங்களுக்கு முடிவே இல்லை. உங்களுக்குப் பிடித்தமான மனைவி கிடைக்காவிட்டால் அவள் கிடைப்பாள் என்கிற நம்பிக்கையாவது இருக்கும். பிடித்தமான மனைவி கிடைத்துவிட்டால் அதுவும் தொலைந்தது.
ஒரு மனநல காப்பகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காப்பகத்தைக் காண ஒருவர் சென்றார். அங்கிருந்த அதிகாரி அவரை அழைத்துப் போய்க் காப்பகத்தைச் சுற்றிக் காட்டினார். ஒரு குறிப்பிட்ட அறைக்கு முன்னால் நின்றவுடன் அந்த மனிதர் அதிகாரியிடம் கேட்டார். அந்த அறையிலிருப்பவருக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். அவன் காதலித்த பெண் அவருக்குக் கிடைக்காததால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார் அதிகாரி. அடுத்த அறையிலிருந்தவரோ தன் அறைக் கம்பிகளை வளைக்க முயன்று கொண்டிருந்தார். இரண்டு கைகளாலும் மார்பில் அடித்துக் கொண்டார். தலைமயிரைப் பிய்த்துக் கொண்டிருந்தார். இவனுக்கு என்ன பிரச்னை என்று கேட்டார் வந்தவர். அந்த அறையிலிருந்தவருக்குக் கிடைக்காத பெண் இவருக்குக் கிடைத்து விட்டாள். அதனால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றார் அதிகாரி. தான் காதலித்த பெண் கிடைக்காததால் அவளுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு தன் மனக்கோளாறோடு மகிழ்ச்சியோடு இருந்தார் முதல் அறைக்காரர். ஆனால் இரண்டாவது அறைக்காரரோ தன் தலையை கம்பிகளில் மோதிக் கொண்டிருந்தார். தன் காதலி கிடைக்காத காதலர்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள்.
உண்மையில் நாம் சாதிக்காததைச் சாதிக்க நினைக்கிறோம். அதை சாதிப்போம் என்கிற நம்பிக்கையிலேயே வாழ்கிறோம். சாதித்தவுடன் நம் நம்பிக்கைகள் உடைந்து போகிறது. நாம் வெறுமையாகி விடுகிறோம். இன்று உடல் பிரச்சினைகளிலிருந்து மனிதனை விடுவிக்கிறார் மருத்துவர். அந்தச் சமயத்தில் அவனது வேலை அடுத்த பாகத்திற்குச் செல்கிறது. உடல் நோயிலிருந்து மனிதன் விடுபட்டவுடன், அவனது உள்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறோம். முதல் முறையாக அவனுக்குப் பிரச்னைகள் உள்ளே ஆரம்பிக்கின்றன. வெளியே எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனாலும் எதுவுமே சரியில்லாத மாதிரி இருக்கிறது.
இந்தியாவில் இருபத்திநாலு தீர்த்தங்கரர்களும் ராஜாக்களின் பிள்ளைகளாக இருந்ததில் வியப்பில்லை. புத்தன் ஒரு மகாராஜாவின் பிள்ளை. ராமனும், கிருஸ்ணனும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் அமைதியின்மை என்பது அவர்களது உடலிலிருந்து மறைந்துவிட்டது. அமைதியின்மை உள்ளிருந்து துவங்கிவிட்டது.
மருந்து மனிதனை நோயிலிருந்து மேலோட்டமாக உடல் ரீதியாக விடுபடச் செய்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவிதமான நோயிலிருந்து மனிதன் விடுபட்டாலும் மனிதன், மனிதன் என்கிற அடிப்படை நோயிலிருந்து விடுபடவில்லை. மனிதனாக இருக்கிற நோய்தான் முடியாத காரியத்தைச் செய்கிற ஆசை. மனிதனாக இருக்கிற நோய்க்கு எதிலுமே திருப்தி வராது. மனிதனாக இருக்கிற நோய் சாதித்ததையெல்லாம் வீணாக்கும். இல்லாததற்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும்.
மனிதனாக இருக்கிற நோயைக் குணப்படுத்துவது தியானம்தான். மற்ற எல்லா நோய்களையும் மருத்துவர்களால் குணப்படுத்த முடியும். மருந்துக்கும் அந்தச் சக்தி உண்டு. ஆனால் மனிதனாக இருக்கிற குறிப்பிட்ட இந்த நோய்க்குத் தியானம்தான் ஒரே நிவாரணம். மனிதனின் உள்பகுதியைப் புரிந்து கொண்டு அதை நோக்கி வேலை செய்தால் மட்டுமே மருந்து விஞ்ஞானம் முழுமையடையும். உள்ளுக்குள் மனம் சீரழிந்த மனிதன் உடலுக்கு வெளியே ஆயிரத்தொரு நோய்களை உருவாக்குகிறான்.
நான் ஏற்கனவே சொன்னதைப்போல, எப்பொழுதெல்லாம் உடல் நோய்வாய்ப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அதிர்வுகளை, சிற்றலைகளை ஆன்மாவில் உணர முடியும். அதேபோல் ஆன்மா நோய்வாய்ப்பட்டால் அந்தச் சிற்றலைகள் உடலை வந்தடையும்.
அதனால்தான் உலகத்தில் மருத்துவத்துறையில் பல ‘பதி’ ஹோமியோ ‘பதி’ நேச்சரோ ‘பதி’ என்று உண்டு. நோய்க் குண பாடம்- அதாவது, ஆங்கிலத்தில் ““பேத்தாலஜி““ (Pathology).
மருத்துவம் ஒரு விஞ்ஞானமாக இருந்தால் இத்தனை ‘பதி’க்கள் வந்திருக்கக் கூடாது. அப்படி வந்திருப்பதற்கு காரணமே, மனிதனின் நோய்கள் ஆயிரம் வகைகள். சில வகையான நோய்களை அலோபதியினால் குணமாக்க முடியாது. மனிதனுக்குள்ளிருந்து கிளம்பி, வெளியே பயணிக்கும் நோய்களுக்கு அலோபதி பயன்தராது. வெளியே துவங்கி உள்ளே செல்லும் நோய்களுக்கு அலோபதிதான் சிறந்த மருத்துவம். உள்ளிருந்து வெளியே வரும் நோய்கள் உடல் ரீதியான நோய்களே அல்ல. உடல் ரீதியாக வெளிக்காட்டும். அதனுடைய பூர்வீகமே உளவியலானது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் அது இறை சார்ந்தது.
ஒருவருக்கு உளவியல் ரீதியாக ஒரு நோயிருந்தால் அதை எந்த மருந்து மருத்துவமும் குணமாக்க முடியாது. சொல்லப்போனால், அதனால் தீமைதான். மருத்துவம் செய்து கொண்டால் அந்த மருத்துவம் எதையாவது செய்ய முயலும். அந்த முயற்சியில், அது நிவாரணம் தராமல் அது தீமையில் போய் முடியும். கேடும் விளைவிக்காத, நிவாரணமும் தராத மருந்துகளே தேவை. உதாரணத்திற்கு, ஹோமியோபதி எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. காரணம் அதனால் எந்தப் பலனும் இல்லை. ஆனால் ஹோமியோபதி நிச்சயம் நிவாரணத்தைத் தரும். அதற்கு நிவாரணத்தைத் தரமுடியாது. அதன் மூலமாக மக்களுக்கு நிவாரணமே கிடைப்பதில்லை என்று பொருளல்ல.
நிவாரணம் கிடைப்பது என்பது வேறு; நிவாரணம் கொடுப்பது என்பது வேறு. இந்த இரண்டு இரு தனி விஸயங்கள். உளவியல் ரீதியாக ஒருவர் நோயை உருவாக்குகிறார். அவருக்கு அடிப்படையான மருந்து தேவை. அது தொப்புள் கொடி தொடர்புடையது. அவருக்கு அஸ்திவார சிகிச்சை தேவை. அவருக்கு ஓர் ஆறுதல் தேவைப்படுகிறது. அவருக்கு நோயில்லை என்கிற உத்தரவாதம் தேவைப்படுகிறது. இதை ஒரு பண்டாரத்தின் சாம்பலைக் கொண்டு கூட செய்துவிட முடியும். கங்கை நீரைப் போன்ற புனித நீர்களைக் கொண்டு செய்து விட முடியும்.
இப்போதெல்லாம் பலவித சோதனைகள் இந்த அஸ்திவார மருத்துவம், அதாவது ஒரு வகையான மாயை மருந்து குறித்து நடக்கிறது. பத்து நபர்கள் ஒரே விதமாக நோயில் இருக்கிறார்கள். மூன்று பேருக்கு அலோபதி மருத்துவம். மூவருக்கு ஹோமியோபதி, மூவருக்கு இயற்கை வைத்தியம் செய்தால் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைக்கும். ஒவ்வொரு சிகிச்சையும் ஒரே சதவிகிதத்தில் நன்மையாகவும், தீமையாகவும் பாதிக்கிறது. விகிதாசாரத்தில் எந்த வேறுபாடுமே இல்லை. இது சிந்திப்பதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்கிறது. என்ன நடக்கிறது?
என்னைப் பொறுத்தவரையில், அலோபதி என்பது ஒரு விஞ்ஞான பூர்வமான மருந்து. ஆனால் மனிதனுக்குள் விஞ்ஞானமற்றதாக ஏதோ இருக்கிறது. அதற்கு விஞ்ஞானபூர்வமான மருந்து பயன்படாது. அலோபதி மட்டுமே மனித உடலை விஞ்ஞான ரீதியாக அணுகுகிறது. ஆனால் அதனால் நூறு சதவிகித முடிவுகளைக் கொடுக்க முடியாது. காரணம் மனிதனின் உள் என்பது கற்பனை மிகுந்தது. புதிதாக உருவாக்கக் கூடியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துடிப்பது. அலோபதி பலனளிக்காமல் போனால் அந்த நபருக்கு விஞ்ஞானமற்ற நோய் இருப்பதாகவே பொருள். விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றால் என்ன?
இந்த வார்த்தைகள் வினோதமாகத் தோன்றும். விஞ்ஞானபூர்வமாக மருத்துவ சிகிச்சை, விஞ்ஞானமற்ற மருத்துவ சிகிச்சை இருப்பது உங்களுக்குத் தெரியும். நான் சொல்கிறேன். விஞ்ஞானபூர்வமான நோய், விஞ்ஞானமற்ற நோய்- அதாவது விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றும் உண்டு. உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்த வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.
குருடாகிப்போன ஓர் இளம் பெண்ணை எனக்குத் தெரியும். ஆனால் அவளது குருட்டுத்தன்மை மனோதத்துவ ரீதியானது. உண்மையில் அவளது கண்கள் பாதிக்கப்படவேயில்லை. கண் மருத்துவ நிபுணர்கள் அவளது கண்கள் சரியாக இருப்பதாகவே சொன்னார்கள். அந்தப் பெண் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் பெண் யாரையும் ஏமாற்றவில்லை. அவளை நெருப்பை நோக்கி அழைத்துப் போனால் கூட, அவள் அதனருகே போவாள். சுவரில் மோதித் தலையைக் காயப்படுத்திக் கொள்வாள். அவள் யாரையும் முட்டாளாக்கவில்லை. அவளது கண்களால் அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த நோய் மருத்துவர்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்தார்கள். நான் அவளைப் புரிந்து கொள்ள முயன்றேன். அந்தப் பெண் யாரையோ காதலித்தாள். அவளது குடும்பத்தினர் அவனைப் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருந்ததைத் தெரிந்து கொண்டேன். அவளைத் தொடர்ந்து கேட்டபோது தன் காதலனைத் தவிர இந்த உலகத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றாள். தன் காதலனைத் தவிர யாரையும் பார்ப்பதில்லை என்கிற உறுதி. அவளது உறுதியில் ஒரு தீவிரம் இருந்ததால், அவள் மனோதத்துவ ரீதியில் குருடாகி விட்டாள். அந்த கண்கள் எதையுமே பார்க்காது. கண்களைக் கூறுபடுத்திப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் கூறுபடுத்துவது என்பது மருத்துவரீதியாகச் சாதாரணமானது. பார்ப்பது என்பது கண்களின் செயல்பாடு. கண்களுக்குப் பின்னால் இருந்து பார்ப்பவர் நழுவிவிட்டார். தன்னையே அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார். இதை நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அதை உணருவதில்லை. உடல் இயக்கம் செயல்படுவதே, நாம் அதற்குப் பின்னால் இருந்தால்தான்.
ஹாக்கி விளையாடும்போது ஓர் இளம் ஆடவன் தன் கால்களைக் காயப்படுத்திக் கொண்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ரத்தம் வருகிறது. அவனால் அதை உணர முடியவில்லை. அவன் காலில் ரத்தம் வருவதை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அவனிடமோ எந்தச் சலசலப்பும் இல்லை. விளையாட்டு முடிந்து அரைமணி நேரம் கழித்து, காலைக் கவனிக்கிறான். கத்த ஆரம்பிக்கிறான். எப்போது அடிபட்டது என்கிறான். அது அவனுக்கு மிகுந்த வலியைக் கொடுக்கிறது. அவனுக்குக் காயம்பட்டு அரைமணி நேரம் ஆயிற்று. காலில் என்பது உண்மை. காலின் உணர்வு இயக்கம் சரியாகவே வேலை செய்கிறது. அந்த உணர்வுதான் அரைமணி நேரம் கழித்து அவனுக்கு வலியை உணர்த்தியது. அப்படியானால் அந்தத் தகவலை அது ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை. அவனது கவனம் காலில் இல்லை. கவனம் முழுவதும் விளையாட்டில் இருந்தது. அந்தக் கவனம் அதிதீவிரமாக இருந்ததால், சிறிதளவு கவனம் கூட கால்களுக்குச் செல்லவில்லை. கால், தசைகள் அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். நரம்புகள் முறுக்கியிருக்க வேண்டும். கால் எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தொடர்பகத்தில் இருந்த மனிதன் தூங்கிவிட்டான். அவன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்திருக்க வேண்டும் அல்லது வேறு எங்காவது இருந்திருக்க வேண்டும். அவன் அங்கு இல்லை. காணாமல் போய்விட்டான். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தபோதுதான் காலில் காயம்பட்டிருப்பது கவனிக்கப்பட்டது.
ஒரு காரியம் செய்யச் சொல்லி அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு சொன்னேன். அவள் பார்க்க விரும்புகிற நபரை பார்க்க அனுமதிக்காததால் அவள், ஓர் தற்கொலை. அவள் ஒரு பகுதி தற்கொலை செய்து கொண்டதைத் தவிர அவளுக்கு வேறு எந்தப் பிரச்னையுமில்லை. அவள் காதலன் அவளைப் பார்க்கட்டும். குடும்பத்தினர்கள் கேட்டார்கள் ‘அதற்கும் கண்களுக்கும் என்ன தொடர்பு?’ என்றார்கள். ஒரு முயற்சி செய்து பாருங்கள் என்றேன். அவள் காதலனைச் சந்திக்கலாம். ஐந்து மணிக்கு அவன் வருகிறான் என்று சொன்னதும் அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்றாள். கண்கள் சரியாகிவிட்டன.
இது ஏமாற்றுதலில்லை; ஹிப்னாடிஸம், அதாவது வலுவில் துயில் கொள்ளச் செய்வது… வசியப்படுத்துதல் நடக்கும் பல சோதனைகள் இது ஏமாற்று வேலை அல்ல என்பதைக் காட்டிவிட்டது. இது என்னுடைய அனுபவத்தில் நான் சொன்னது. ஹிப்னாடிஸ மயக்கத்தில் இருக்கும் ஒருவரின் கையில் கூழாங்கல்லை வைத்துவிட்டு அது எரிகிற கரித்துண்டு என்று சொல்லுங்கள். கையில் சூடு பட்டவுடன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் நடந்து கொள்வார். அதை உடனே தூக்கி எறிவார். கத்த ஆரம்பிப்பார். கை சுட்டு விட்டதுமாதிரி துடிப்பார். இதுவரையில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கையில் கொப்பளம் ஏற்படும். அப்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கும். எரியும் கரித்துண்டு அவர் கையில் வைக்கப்பட்டதாக அவர் கற்பனை செய்யும்போதே அவர் கையில் கொப்பளங்கள் வருகின்றனவென்றால், உடல் ரீதியாக இதற்கு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதற்கு சிகிச்சை என்பது மன அளவிலிருந்து துவக்க வேண்டும்.
இங்கே நாம் மனிதனின் ஒரு முனையைத்தான் பார்க்கிறோம். உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம் மனதிலிருந்து கிளம்பும் நோய் அதிகரித்துவிட்டது. இன்று, விஞ்ஞான ரீதியாகச் சிந்திப்பவர்கள் கூட ஐம்பது சதவிகித நோய் மனதிலிருந்துதான் கிளம்புகிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவில் அப்படியில்லை. காரணம் மனம் நோய்வாய்ப்படுவதற்கு அந்த மனம் பலமாக இருக்க வேண்டும். இன்றும் இந்தியாவில் தொண்ணூற்று ஐந்து சதவிகித நோய்கள் உடல் சார்ந்தவை. ஆனால் அமெரிக்காவில் மன ரீதியான நோய் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
மனரீதியான நோய்கள் முதலில் உள்ளே ஆரம்பித்து, வெளியே பரவும். அவை வெளியேறும் வியாதிகள். ஆனால் உடல் ரீதியான நோய்கள் உள்ளே போகக்கூடியவை. மனநோய்க்கு உடல் ரீதியான சிகிச்சை அளித்தால் அது வேறு வழியாக வெளியேறத் துடிக்கும். மனநோய் ஒரு இடத்தில் வடிவதை சின்ன அளவில் நாம் தடுக்கலாம். ஆனால் அது நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் வெளியேறத் தயாராகிவிடும். ஒரு நபரின் குணாதிசயத்தின் பலவீனமான பகுதியிலிருந்து நான் பிரச்னையை அணுகுவேன். அதனால்தான் பல சமயங்களில் மருத்துவர்களால் இந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை. அதே சமயம். நோயின் பல வடிவங்களைப் பெருக்கி விடுகிறார்கள். ஒரு வழியாக வருவது இப்போது பல வழியாக வரத் துவங்குகிறது. காரணம் இப்போது பல மையங்களில் நாம் அணைகளைக் கட்டிவிட்டோம்.
என்னைப் பொறுத்தவரையில், தியானம்தான் மனிதனின் மறுமுனைக்கான நிவாரணம். இயற்கையாக மருந்துகள் பொருளையும், அதன் ரசாயனக் கலவையையும் நம்பியிருக்கிறது. ஆனால் தியானமோ உணர்வை சார்ந்திருக்கிறது.தியானத்திற்கு மாத்திரைகள் கிடையாது. இத்தனைக்கும் மக்கள் எல்.எஸ்.டி., கஞ்சா போன்ற ஆயிரக்கணக்கான முறைகளை முயற்சி செய்கிறார்கள். தியானத்திற்கு மாத்திரை தயாரிக்க பலவித முயற்சிகள் நடக்கின்றன. அதுவும் கூட உடல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்கிற பிடிவாதம்தான். உள்ளே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டால் கூட அதற்குப் பிறகும் கூட நாம் வெளியே இருந்துதான் சிகிச்சை கொடுக்கிறோம்; உள்ளே அல்ல. எந்த ரசாயனத்தின் மூலமாகவும் மனிதனின் உள்ளிருப்பிற்குள் செல்லவே முடியாது. உள்ளே செல்லச் செல்ல ரசாயனத்தின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். உள்ளே போகும்போது உடல், பொருள் ரீதியான அணுகுமுறையெல்லாம் பயனற்றதாகிவிடும். பொருளற்ற அணுகுமுறை அல்லது உளவியல் அணுகுமுறைதான் அங்கே அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே இருக்கிற தப்பெண்ணங்களால் இந்த விடயத்தில் நாம் எதையுமே சாதிக்கவில்லை. சம்பிரதாயமான, இரண்டு மூன்று தொழில்களில் மருத்துவர் தொழிலும் ஒன்று. சம்பிரதாயக் கூட்டுக்கள் அதிகம் புதையுண்டு கிடப்பவர்களில் முதல் வரிசையில் இருப்பவர்கள் பேராசிரியர்களும், மருத்துவர்களும்தான். அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் பழைய சிந்தனைகளிலிருந்து எளிதில் வெளியே வரமாட்டார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அது நியாயமான காரணமும் கூட. தங்களிடம் நிரம்பிக் கிடக்கும் பழைய எண்ணங்களைக் களைந்துவிட்டு புதிய நோக்கங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் குழந்தைகளுக்குப் போதிக்கும்போது பல சிக்கல்கள் ஏற்படும். ஒரு வி~யம் ஆழமாக பதிந்துவிட்டால்தான் திறமையாகப் போதிக்க முடியும். எண்ணத்தில் உறுதி வேண்டும், குழப்பமாக, சலசலப்பாக இருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்கள் கற்றுக் கொடுக்கும்போது ஒரு திடமான, உறுதி அவர்களிடம் இருக்கும்.
ஒரு பேராசிரியருக்கு தேவைப்படும் உறுதி ஒரு குற்றவாளிக்குக் கூட இருக்க வேண்டியதில்லை. தான் சொல்வது சரி என்கிற தன்னம்பிக்கை ஒரு பேராசிரியருக்கு இருக்க வேண்டும். இந்தத் தன்னம்பிக்கையோடு தான் தொழிலை சரியாக செய்கிறோம் என்றிருப்பவர்கள் ஒரு சம்பிரதாயக் கூட்டுக்குள்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் பழமை மாறாமல்தான் இருப்பார்கள். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்த வகையில் பார்த்தாலும் கல்வி குறைந்த பழமை உடையதாகவே இருக்க வேண்டும். அதனால்தான் எந்த ஆசிரியரும் புதிதாக எதையுமே கண்டுபிடிப்பதில்லை. பல்கலைக்கழகங்களில் பல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் வெளியே இருந்துதான் வருகின்றன. நோபல் பரிசு பெற்றவர்கள் எழுபது சதவிகிதம் பேர் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இருப்பவர்கள்தான்.
இதற்கு அடுத்தபடி பழமையில் ஊறியிருப்பவர்கள் மருத்துவர்கள்தான். இதற்குத் தொழில் ரீதியான காரணம் இருக்கிறது. மருத்துவர்கள் வேகமாக முடிவுகள் எடுக்க வேண்டும். நோயாளி மரணப்படுக்கையில் இருக்கும்போது மருத்துவர் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. பிறகு யோசனைதான் மிச்சமிருக்கும். நோயாளி இறந்து போயிருப்பார். மருத்துவர்கள் பழமையாக இல்லாமல், தன்னிச்சையாக புதிய முறைகளையும் சோதனைகளையும் செய்யத் துவங்கினால் அதிலும் ஆபத்து இருக்கிறது. அவர் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த மாதிரி உடனடி முடிவுகள் எடுக்க வேண்டிய எல்லோருமே தங்களின் கடந்த கால அனுபவ அறிவையே நம்பியிருக்க வேண்டும். புதிய யோசனைகளில் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் அந்த இடத்தில் முடிவுகள் எடுக்க வேண்டிய எல்லோருமே கடந்த கால அனுபவங்களையே நம்பியிருப்பார்கள். அதனால்தான் மருத்துவத் தொழில், மருத்துவ ஆராய்ச்சிக்கு முப்பது ஆண்டுகள் பின்தங்கியே இருக்கிறது. எது பழக்கத்தில் இருக்கக் கூடாதோ, அதைப் பின்பற்றுவதால், பல நோயாளிகள் தேவையில்லாமல் இறந்து போகிறார்கள். ஆனால் இது ஒரு தொழில் ரீதியான விபத்து. அதனால் மருத்துவர்களின் பல அணுகுமுறைகள் மரபு மாறாதவையாகவே உள்ளன. அவற்றில் ஒன்று மனிதனைவிட மருந்தை நம்புவது. உள்ளுணர்வைவிட ரசாயனத்தை நம்புவது. உள்ளுணர்வைவிட வேதியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. வேதியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். உள்ளுணர்வு குறித்து எந்தப் பரிசோதனையுமே நடக்கவில்லை.
இங்கே நான் சில உதாரணங்களைச் சொன்னால் உங்களுக்குப் புதிய எண்ணங்கள் வரும் என்று நினைக்கிறேன். பிரசவ வலி இல்லாமல் எப்படி குழந்தை பெற்றெடுப்பது என்பது காலங்காலமாக இருந்து வருகிற கேள்வி. பூசாரிகள் இதற்கு நேர் எதிரானவர்கள். உலகம் வலியிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமென்கிற எண்ணத்திற்கு எதிரானவர்கள் பூசாரிகள்தான். உலகத்தில் வலி இல்லை என்றால் இவர்களுக்கே வேலை இருக்காதே. அவர்களுடைய வேலையே அர்த்தமற்றதாகிவிடும். அவதியும், சோகமும், துன்பமும் இருந்தால்தான் அவர்களுக்கு அழைப்பு வரும்; பிரார்த்தனை இருக்கும். துன்பங்கள் இல்லையென்றால் கடவுள் கூட புறக்கணிக்கப்படுவார். எப்போதாவது தான் பூஜைகள் நடக்கும். காரணம் துன்பம் வந்தால்தான் நாம் கடவுளையே நினைக்கிறோம். எப்போதுமே வலியில்லா பிரசவத்திற்கு எதிரானவர்கள் பூசாரிகள். பிரசவத்தின் போது வலி ஏற்படுவது இயற்கையானது என்பார்கள் அவர்கள்.
ஆனால் இப்படியிருக்கக் கூடாது. இது கடவுளின் ஏற்பாடு என்பது பொய்யான பிரசாரம். பிரசவத்தின் போது வலி ஏற்படுத்த வேண்டுமென்று எந்தக் கடவுளும் விரும்பமாட்டார். வலியில்லா பிரசவத்திற்கு சில மருந்துகள் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அதற்காக சில ரசாயனங்கள், மயக்கமருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். மருத்துவர்களின் இந்த முயற்சிகள் எல்லாமே உடல் ரீதியானவை. இதற்குப் பொருள் என்னவென்றால் வலி தெரியாமல் தாயின் உடலைத் தயார்படுத்துவதுதான். பல நூற்றாண்டுகளுக்கு பெண்களே கூட இந்த முயற்சியில்தான் இருக்கிறார்கள்.
அதனால்தான் எழுபத்தி ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இரவில் பிறக்கின்றன. பகலில் இது கடினம். காரணம் பெண்கள் அப்போது சுறுசுறுப்பாகவும், விழிப்போடும் இருக்கிறார்கள். தூங்கும்போது பெண்கள் சற்றுத் தளர்ந்து இருப்பார்கள். அப்போது குழந்தை பிறந்தால் சுலபமாக இருக்கும். இரவில் அவர்கள் தூங்கப் போவார்கள். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். அதனால் எழுபத்தி ஐந்து சதவிகிதக் குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சத்தில் பிறக்கிற வாய்ப்பே இல்லாமல் போகிறது. இருட்டில்தான் பிறக்க வேண்டியிருக்கிறது. குழந்தை பிறக்கப்போகிற தருணத்திலிருந்து தாய் அதற்கு நிறைய தடைகள் போடுகிறாள். பிறகு அந்தக் குழந்தைக்காக அவள் பல இன்னல்களைத் தாங்கிக் கொள்கிறாள் என்பது வேறு விஸயம். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய் அதற்குப் பல தொந்தரவுகளைக் கொடுக்கிறாள்.
தூங்கும்போது உடல் சற்றுத் தளர்ந்திருக்கும்; அப்போது அதற்கு மருந்துகள் மூலமாக நிவாரணம் கொடுக்கலாம் என்பது ஒரு முயற்சி. அதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் இதில் அதற்கே உண்டான சில சிக்கல்கள் உள்ளன. பெரிய பின்னடைவே அந்த நபரின் உள்ளுணர்வில் நாம் நம்பிக்கையே கொள்வதில்லை. மனித உள்ளுணர்விலுள்ள நம்பிக்கைகள் குறைந்து கொண்டே போகும்போது, உள்ளுணர்வு மறையத் துவங்குகிறது.
“லாமேசே" என்கிற ஒரு மருத்துவர் மனித உள்ளுணர்வை நம்பினார். பல ஆயிரம் பெண்களுக்கு வலியில்லாத பிரசவத்தை நடத்திக் காட்டினார். இந்த முறைக்குப் பெயர் தெளிவான ஒத்துழைப்பு. பிரசவத்தின்போது தியானமுறையில், சுயஉணர்வோடு தாய் ஒத்துழைப்பு கொடுக்கிறாள். அதை அவள் ஏற்றுக் கொள்கிறாள். அவள் முரண்டு பிடிப்பதில்லை. எதிர்ப்பதில்லை. குழந்தை பிறப்பதனால் வலி ஏற்படுவதில்லை. தாய் அதை எதிர்ப்பதினால் வருகிறது. குழந்தை பிறக்கிற அந்த இயக்கத்தை அவள் கட்டுப்படுத்துகிறாள். வலிக்கு அவள் பயப்படுகிறாள். அந்தப் பிரசவ வேதனையைக் கண்டு பயப்படுகிறாள். இந்த பயம் கலந்த எதிர்ப்பு குழந்தை பிறப்பதைத் தடுக்கிறது. குழந்தை பிறக்க முயலும்போது இருவருக்கும் சச்சரவு ஏற்படுகிறது. குழந்தைக்கும், தாய்க்கும் மோதல் நடக்கிறது. இந்த முரண்பாடுதான் வலிக்குக் காரணம். இந்த மோதலினால், இந்த எதிர்ப்பினால் வலி ஏற்படுவது இயற்கையானது.
இந்த எதிர்ப்புப் பிரச்னையை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. உடல் ரீதியாக அணுகும்போது தாய்க்கு மயக்க மருந்து கொடுக்கலாம். இந்தச் சமயத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மயக்கத்தில் இருக்கிறாள். முழு உணர்வோடு அவள் தாயாவதில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது, குழந்தை மட்டும் பிறப்பதில்லை. ஒரு தாயும் பிறக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்போது, இரண்டு பிறப்புகள் நடக்கின்றன. ஒரு பக்கம் குழந்தை பிறக்கிறது; இன்னொரு புறம் ஒரு சாதாரண பெண் தாயாகிறாள். தாயின் மயக்கத்தில் குழந்தை பிறப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் இருக்கிற அடிப்படை உறவை உருக்குலைக்கிறோம். அதனால் ஒரு தாய் உருவாவதில்லை; ஒரு தாதி உருவெடுக்கிறாள்.
செயற்கையாக ரசாயனம் மூலமாக ஒரு தாய்க்கு மயக்க மருந்து கொடுத்துப் பிரசவிக்க செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரசவத்தின் போது ஒரு தாய்க்குத் தெளிவு இருக்க வேண்டும். ஒரு தாயும் பிறக்கிறாள் என்கிற உணர்வும் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், ஒரு தாயின் உணர்வைப் பிரசவத்திற்குத் தயார் செய்கிறோம் என்று பொருள். பிரசவத்தை ஒரு தாய் தியான உணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தியானத்தில் ஒரு தாய்க்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. பிரசவத்தைத் தடுக்கவோ, எதிர்க்கவோ கூடாது. எது நடந்தாலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். பூமியில் எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறதோ அங்கு செல்லும் நதி ஓடுவதைப் போல, காற்று வீசுவதைப் போல, இலைகள் உதிர்வதைப் போல. யாருக்கும் இதைப் பற்றிய பாதிப்பு இருப்பதில்லை. அதைப் போலவே அவளுக்கு முன்னால் உள்ள எதற்குமே அவள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரசவத்தின்போது தாய் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், அதை எதிர்த்து சண்டை போடாமல் இருந்தால், பயப்படாமல் இருந்தால், அந்த நிகழ்வில் தியான உணர்வோடு மூழ்கிப்போனால், பிறகு வலியில்லாத பிரசவம் நடக்கும். வலி காணாமல் போய்விடும்.
இதை நான் விஞ்ஞான அடிப்படையில் சொல்கிறேன். இந்த முறையில் பல பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. வலியிலிருந்து அவள் விடுபடுவாள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பல தொலைநோக்கு முடிவுகள் ஏற்படும்.
முதலில் நமக்கு வலியை ஏற்படுத்துகிற பொருளோ, அல்லது நபர் மீதோ நமக்கு ஒரு மோசமான எண்ணம் அவரிடம் தொடர்பு ஏற்பட்டவுடனேயே ஏற்படுகிறது. முதல் அனுபவத்திலேயே நாம் போராடுகிற நபர் மீது நமக்கு ஒரு பகை உணர்வு ஏற்படுகிறது. இதுவே அவருடன் ஏற்படவிருந்த நட்புறவுக்குத் தடையாக இருக்கிறது. முரண்பட்ட அந்த நபருடன் உருவாக்க இருந்த நட்புறவுப் பாலத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது மேலோட்டமானது. ஆனால் முழு விழிப்புணர்வோடு, ஒத்துழைப்போடு ஒரு பிரசவம் ஏற்பட்டால்…
இது ஒருவகையில் சுவாரஸ்யமானது. இதுவரையில் நாம் பிரசவ வேதனை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். பிரசவப் பேரின்பம் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. காரணம் அப்படி ஒன்று நடந்ததேயில்லை. ஆனால் முழு ஒத்துழைப்பு இருந்தால் இந்தப் பிரசவப் பேரின்பம் ஏற்படும். அதனால் வலியில்லாத பிரசவத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேரின்பப் பிரசவத்தை ஆதரிக்கிறேன். மருத்துவ விஞ்ஞானத்தின் உதவியோடு நம்மால் அதிக பட்சம் வலியில்லாத பிரசவத்தை உருவாக்க முடியும். ஆனால் பேரின்பப் பிரசவத்தை உருவாக்கவே முடியாது. அந்த முதல் தருணத்திலேயே ஓர் உணர்வுள்ள உள் இணைப்பைத் தாய்க்கும், சேய்க்கும் உருவாக்கிவிட முடியும்.
உள்ளிருந்து கொண்டு கூட இதைச் செய்ய முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம். எப்போது நோய்வாய்ப்பட்டாலும், அந்த நோய்க்கு எதிராக வெளியேயிருந்துதான் சண்டை போடுகிறோம். இதைக் கண்டுபிடிக்கவும் நாம் முயல்வதில்லை. இதனால் நாமே நோயை வரவழைப்பது சத்தியம். நாமே அழைத்த வியாதிகள்தான் அதிகம். உண்மையில் சில நோய்கள் மட்டும்தான் தாமாக வருகின்றன. பல நாளாக வரவேற்றுக் கொண்டவைதான். அவை வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே நாம் அழைப்பு விடுத்துவிட்டோம். அதனால்தான் இந்த இரண்டிற்கும் தொடர்பிருப்பதை நம்மால் உணர முடிவதில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் எந்த சமூகமும் உடலுறவிற்கும் குழந்தை பிறப்பிற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. காரணம் இரண்டிற்கும் உள்ள கால இடைவெளி அதிகம். அதாவது ஒன்பது மாதம். இந்த இடைவெளியில் ஏற்பட்ட காரண- விளைவுகளைத் தொடர்பு ஏற்படுத்துவது கடினமாக இருந்தது. மேலும் எல்லா உடலுறவுகளும் குழந்தைப் பிறப்பில் முடிவதில்லை. அதனால் இந்த இரண்டையும் தொடர்புபடுத்த வேண்டிய நியாயமிருக்கவில்லை. ஒன்பது மாதங்களுக்கு முன்பு நடந்த ஒன்று இன்று குழந்தைப் பிறப்பில் முடிந்திருக்கிறது என்பதை மனிதன் பின்னால்தான் உணர்ந்தான். அவனால் ஒரு காரண- காரிய உறவை ஏற்படுத்த முடிந்தது. இதேதான் நோய் குறித்தும் ஏற்பட்டது. எப்போதோ நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அது பின்னால்தான் வரும். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நிறைய காலம் ஓடிவிடுகிறது. அதனால்தான் இந்த இரண்டிற்கும் தொடர்பிருப்பதாக நம்மால் பார்க்க முடிவதில்லை.
திவாலாக இருந்த ஒரு மனிதனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தையிலிருந்த அவனது கடைக்குப் போகவே பயந்தான். தெருவில் நடக்கவே பயந்தான். ஒரு நாள் குளியலறையில் இருந்து வெளியே வரும்போது, கீழே விழுந்தான். முடமாகிப் போனான். இப்போது அவனுக்கு எல்லாவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் அவன் முடமாகிப் போவதையே விரும்பினான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவன் உளமாற அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது வி~யமல்ல. அவன் முடமாவதை விரும்பினானா இல்லையா என்பதும் வி~யமல்ல. அனேகமாக அவன் அதைப்பற்றி யோசித்திருக்கக் கூட வேண்டியதில்லை. ஆனால் எங்கோ மனசுக்குள், அவனது நினைவற்ற உணர்வில் சந்தைக்குப் போகக் கூடாது. கடைக்கோ, தெருவுக்கோ போகக் கூடாது என்று நினைப்பிருந்தது. இதுதான் முதல் படி.
இரண்டாவதாக, மக்கள் அவனிடம் அதிக வெறுப்பைக் காட்டாமல், அவர்கள் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தான். அதுதான் அவனது ஆழ்ந்த ஆசை. நிழலைப் போல மனதை உடல் தொடரும். அது எப்போதும் மனதிற்கு ஆதரவு கொடுக்கும். மனம் அதற்கான ஏற்பாட்டை செய்கிறது. மனதிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது என்பது நாம் உணருவதில்லை. ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருங்கள். இரவில் மட்டும் சாப்பிடுங்கள். மனம் இதைக் கவனித்துக் கொண்டேயிருக்கும். ‘ஒருநாள் முழுக்க பட்டினி கிடந்திருக்கிறாய். அதனால் நீ அசௌகர்யமாக இருக்கிறாய். அதனால் ராஜாவின் அரண்மனையில் விருந்துக்கும் போகலாம்’ என்று சொல்லும். அன்று இரவில் கனவில் நீங்கள் அங்கே சாப்பிடுவீர்கள்.
உடலால் செய்ய முடியாத எல்லாவற்றிற்கும், மனம் ஏற்பாடு செய்யும். எல்லாக் கனவுகளுமே இப்படித்தான். ஒரு மாற்று; அவ்வளவுதான். பகலில் நம்மால் செய்ய முடியாதவற்றை இரவில் செய்கிறோம். மனம்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்யும். இரவில் கழிப்பறைக்கு போகவேண்டியிருந்தால், மனம் உன்னைச் சத்தம் போட்டு எழுப்புகிறது என்றுதான் பொருள். உன் கனவில் அது உன்னைக் கழிப்பறைக்கு அனுப்பும். அப்போது சிறுநீரகப் பை இலகுவானது போல் உணர்வீர்கள். கழிப்பறைக்குப் போய்விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைப்பீர்கள். உன் தூக்கம் கெடக்கூடாது என்பதற்காக மனம் செய்த ஏற்பாடு இது. இரவு, பகலாக உங்களது ஆசைகளைப் பூர்த்தி செய்ய மனம் ஏற்பாடு செய்து கொண்டேயிருக்கும்.
இந்த மனிதன் பக்கவாதம் வந்து கீழே விழுந்தான். இப்போது நாம் அவனுக்கு சிகிச்சை அளிக்க முயலுகிறோம். ஆனால் உண்மையில் இந்த மருந்து அவனுக்குக் கெடுதலையே செய்யும். காரணம் அவனுக்கு வாத நோயில்லை; அவனாக வரவழைத்துக் கொண்டான். அவனுடைய வாதத்திற்கு சிகிச்சை அளித்தால் கூட அவன் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நோயை வரவழைத்துக் கொள்வான். உண்மையில் சந்தைக்குப் போகிற தைரியத்தை வரவழைத்துக் கொள்ளாத வரையில் அவனுக்கு ஒரு நோயில்லாவிட்டாலும் இன்னொன்று வந்து சேரும். அவன் நோய்வாய்ப்பட்டவுடனேயே, நிலைமைகள் மாறிவிடும் என்பதை உணர்கிறான். அதனால் இப்போது அவன் திவாலாவதற்கு ஒரு நியாயம் கிடைத்து விட்டது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் முடமாகி விட்டேனே! இப்படித் தன் கடன்காரர்களுக்கு சொல்லிவிட முடியும். ‘நான் எப்படிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியும்? என் நிலைமையைப் பார்த்தாயா இல்லையா?’ உண்மையில் அவன் நிலைமையைக் கண்டவுடன் கடன் கொடுத்தவருக்குப் பணத்தைக் கேட்கக் கூச்சமாக இருக்கும். அவன் மனைவி இன்னும் அதிக அக்கறையோடு அவனைப் பார்த்துக் கொள்வாள். குழந்தைகள் அதிகப்படியாகக் கவனித்துக் கொள்ளும். அவன் நண்பர்கள் வந்து பார்ப்பார்கள். மக்கள் அவன் படுக்கையைச் சூழ்ந்து கொள்வார்கள்.
யதார்த்தத்தில், ஒருவர் நோய்வாய்ப்பட்டாலொழிய நாம் நமது அன்பை ஒருவரிடத்தில் காட்டுவதில்லை. யாரெல்லாம் நேசிக்கப்பட வேண்டுமோ அவர் நோயில் விழ வேண்டும். பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். இதற்கு முக்கிய காரணமே அன்பைப் பெறுகிற வழி இது. புருஸனை வீட்டில் வைத்திருக்க வேறு வழியே கிடையாது என்பது அவர்களுக்கு தெரியும். மனைவியால் அவனை வீட்டில் கட்டிப்போட முடியாது. நோயினால் முடியும். இதை ஒரு முறை உணர்ந்து கொண்டு அதை மனதில் பதிய வைத்துக் கொண்டால், பிறகு எப்போதெல்லாம் அனுதாபம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நோயில் விழலாம். உண்மையில் ஒரு நோயாளி மீத அனுதாபம் காட்டுவது ஆபத்தானது. காரணம் அனுதாபத்தின் மூலம் அவரது நோய்க்கு அலங்காரம் செய்கிறீர்கள். மாறாக அவருக்கு சிகிச்சையைத் தான் காட்ட வேண்டும்.
பக்கவாதம் வந்துள்ள இந்த மனிதனை எந்த மருந்தும் குணப்படுத்த முடியாது. அதிகபட்சம் நோயை வேண்டுமானால் மாற்றிக் கொண்டிருப்பான். காரணம் உண்மையில் அவனுக்கு நோயில்லை. அது ஓர் ஆழமான தானியங்கி யோசனை. பக்கவாதம் என்பது மனதிலிருந்து கிளம்பியது.
இதே போல்தான் இன்னொரு மனிதனின் கதை. அவனுக்கும் வாத நோய். இரண்டு வருடங்களாக நோயில் அவதிப்படுகிறான். எழுந்திருக்கக் கூட முடியாது. ஒரு நாள் அவன் வீடு தீ பிடித்துக் கொண்டது. எல்லோரும் வெளியே ஓடினார்கள். திடீரென்று பதறிப்போய் நோயிலிருந்த அந்த மனிதனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்தார்கள். ஆனால், அவன் வெளியே வருவதைக் கண்டார்கள். அதுவும் ஓடி வந்தான். இந்த மனிதனால் இதற்கு முன் உட்காரக் கூட முடியவில்லை. அவனால் நடக்க முடிந்ததைக் குடும்பத்தினர் உணர்த்தினார்கள். அதற்குச் சாத்தியமேயில்லை என்று சொல்லியபடியே அங்கேயே விழுந்தான்.
இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று? அவன் யாரையும் முட்டாளாக்கவில்லை. அவனது நோய் மனம் தொடர்புடையது; உடல் தொடர்புடையதல்ல. அதுதான் ஒரே வித்யாசம். அதனால்தான் ஒரு மருத்துவர் நோயாளியிடம் உன் நோய் மனம் சம்பந்தப்பட்டது என்று சொன்னால் அதை நோயாளி விரும்புவதில்லை. காரணம் அவனுக்குத் தேவையில்லாமல் ஏதோ நோயிருப்பதாகச் சொல்வதாக நினைக்கிறான். இது சரியல்ல. காரணமேயில்லாமல் நோயிருப்பதாகச் சொல்வதை யாருமே விரும்புவதில்லை. நோயில் விழுவதற்கு மன ரீதியான காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்கள் உடல் ரீதியாக நோயில் விழுவதற்கான காரணத்தை விட முக்கியமானதாக அல்லது அதி முக்கியமானதாகக் கூட இருக்கலாம். மருத்துவரின் பங்கில் ஒருவர் மன நோயில் இருப்பதாகச் சொல்வதே கூட ஒரு தவறான சிகிச்சையாக இருக்கலாம். இப்படி சொல்வதனால் நோயாளிக்குத் திருப்தியில்லை. உண்மையில் அந்த மருத்துவரிடம் அந்த நோயாளிக்கு கசப்பே ஏற்படும்.
இதுவரையில் மனம் தொடர்புடைய நோய் குறித்து நமக்கு ஒரு கனிவான அணுகுமுறையை வளர்க்கவில்லை. எனக்குக் காலில் அடிபட்டால் எல்லோரும் அனுதாபப்படுவார்கள். ஆனால் என் மனம் காயப்பட்டால் எனக்கு ஏதோ மனோவியாதி என்றுதான் சொல்வார்கள். ஏதோ நான் தவறு செய்வதாகவே நினைப்பார்கள். என் காலில் அடிபட்டால் எனக்கு அனுதாபம் கிடைக்கும். ஆனால் அதுவே மனம் தொடர்பான நோயாக இருந்தால், என் தவறு என்று குறை சொல்வார்கள். இல்லை, அது என் தவறில்லை.
மனம் தொடர்புடைய நோய்களுக்குத் தனியாக ஓர் இடம் உண்டு. ஆனால் மருத்துவர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. இந்தத் தயக்கத்திற்குக் காரணம், அவர்களிடம் உடல் தொடர்புடைய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை இருக்கிறது. வேறு எந்தக் காரணமுமில்லை. ‘அது அவருக்கு அப்பாற்பட்டது. அதனால் அது ஒரு நோயே இல்லை’ என்கிறார்கள். உண்மையில் அது என் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வேறு மருத்துவரைப் பார்க்க உங்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். இந்த நபருக்கு சிகிச்சை உள்ளேயிருந்து துவங்கி பிறகுதான் வெளியே வரவேண்டும். ஒரு சின்ன விடயம் அவனது உள் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும்.
என்னைப் பொறுத்தவரையில் தியானம் என்பது உள்ளேயிருந்து வெளியே பரவக்கூடிய ஒரு சிகிச்சை.
ஒருநாள் யாரோ புத்தரிடம் சென்று கேட்டார்கள், ‘நீங்கள் யார்? நீங்கள் ஒரு தத்துவஞானியா, அல்லது ஒரு சிந்தனாவாதியா, துறவியா, யோகியா?’ புத்தர் சொன்னார், ‘காயம் ஆற்றுபவன், மருத்துவன்’(HEALER) என்றார்.
அவருடைய இந்தப் பதில் அற்புதமானது. காயமாற்றுபவன். எனக்கு உள் நோய்களைப் பற்றித் தெரியும். அதனால்தான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இதைப் புரிந்து கொள்கிற சமயத்தில் இந்த மனம் தொடர்புடைய நோய்க்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். காரணம் உடல் தொடர்புடைய நோய்களை முற்றிலும் நம்மால் அகற்றிவிட முடியாது. அப்படிச் செய்கிற நாளில் மதமும், விஞ்ஞானமும் நெருக்கமாகிவிடும். அந்த நாளில் மருந்தும், தியானமும் அருகில் வந்துவிட்டதை பார்ப்போம். நான் புரிந்து கொண்ட வரையில் மருந்தைத் தவிர விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவும் இந்த இடைவெளியே நிரப்பாது.
வேதியியல் மதத்தின் அருகே வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதேபோல் இயற்பியலோ, கணிதமோ மதத்தின் அருகே வருவதற்கு இதுவரையில் எந்தக் காரணமும் இல்லை. மதமில்லாமல் கணிதம் பிழைத்துக் கொள்ளும். எப்பொழுதும் அது அப்படித்தான் இருக்கும். கணிதத்திற்கு மதத்தின் உதவி தேவை என்கிற நிலை இன்னும் உருவாகியிருப்பதாக நான் நினைக்கவில்லை. மதம் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று கணிதம் நினைக்கக்கூடிய தருணம் வந்துவிட்டதாகவும் நினைக்கவில்லை. அந்த நாள் வரவே கூடாது. காலாகாலத்திற்கும் கணிதம் தன் விளையாட்டை நடத்திக் கொண்டேயிருக்கும். காரணம் கணிதம் ஒரு விளையாட்டு, அது வாழ்க்கை இல்லை.
ஆனால் மருத்துவர் என்பவர் அப்படியில்லை. அவர் விளையாடவும் செய்கிறார்; அதே சமயம் வாழ்க்கையையும் கையாளுகிறார். அனேகமாக மருத்துவர்தான் மதத்தையும் விஞ்ஞானத்தையும் இணைக்கும் முதல் பாலமாக இருப்பார். உண்மையில் இது நடக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக- வளர்ந்த, புரிந்து கொண்ட நாடுகளில் நடக்கத் துவங்கிவிட்டது. காரணம் மருத்துவர்கள்தான் மனித உயிர்களோடு தொடர்புடையவர்கள். சாவதற்கு முன் கார்ல் கஸ்டல் ஜங் இதைத்தான் சொன்னார். நான் ஒரு மருத்துவனாக இருப்பதால், நான் சொல்கிறேன் நாற்பதுக்கு மேல் என்னிடம் வருகிற நோயாளிகளுக்கு அடிப்படையான நோயே மதமில்லாததுதான். இது ஒரு வியப்பான வி~யம். எப்படியாவது நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகை மதத்தை கொடுக்க முடியுமென்றால் அவர்கள் ஆரோக்யமாகிவிடுவார்கள்.
இதைப் புரிந்து கொள்வது நல்லது. ஒரு மனிதனின் வாழ்க்கை கீழே விழும்போது- முப்பத்தைந்து வரை அது வளர்கிறது. பிறகு அது கீழே இறங்கத் துவங்குகிறது. முப்பத்தைந்துதான் உச்சம். முப்பத்தைந்து வயது வரை ஒரு மனிதனுக்கு தியானத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கலாம். காரணம் அதுவரையில் அவன் உடல் சார்ந்தவன். பு~;டியாகவே இருப்பான். அந்தச் சமயத்தில் எல்லா நோய்களும் உடல் ரீதியானது. ஆனால் முப்பத்தைந்து வயதுக்கு மேல் நோய் ஒரு புதிய கோணத்தில் திரும்பும். காரணம் இப்போது வாழ்க்கை மரணத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டது. வாழ்க்கை வளரும்போது அது வெளியே பரவத் துவங்குகிறது. மனிதன் இறக்கும்போது அவன் உள் ரீதியாகவே சுருங்கிப் போகிறான். வயோதிகம் உள் வழியாகவே சுருங்க வேண்டும். வயதானவர்களின் எல்லா நோய்களுமே மரணத்தின்போது உள்ளே வேர்களில்தான் இருக்கும்.
வழக்கமாக இந்தந்த நபர் இன்னின்ன நோயினால் இறந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால் மரணத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்ன நடக்கிறது என்றால் சாகிற சாத்தியமிருப்பதால், எல்லா நோய்களுக்கும் அவர் வளைந்து கொடுக்கிறார். தான் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று உணரும்போது பல்வேறு நோய்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கின்றன. அவனும் அதைப் பிடித்துக் கொள்கிறான். ஆரோக்யமான மனிதன் கூட மரணம் நிச்சயம் என்று உணர்ந்தவுடன் நோயில் விழுகிறான். எல்லாமே சரியாக இருந்தன. எல்லா மருத்துவ அறிக்கைகளும் சாதாரணமாகவே இருந்தன. எக்ஸ்ரே கூட சரியாகத்தான் இருந்தது. நாடித்துடிப்பும் சரியாகவே இருந்தது. மருத்துவரின் இதயத் துடிப்புமானி கூட எல்லாமே சரியாக இருப்பதாகவே நோயாளியிடம் சொன்னது. ஆனால் நாளை சாகப்போகிறோம் என்று முழுமையாக அந்த நபர் உணர்ந்துவிட்டால் அவர் பல்வகையான நோய்களைப் பிடித்துக் கொள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். இருபத்து நாலு ஜென்மங்களில் கூட பிடித்துக் கொள்ள முடியாததை இருபத்து நாலு மணி நேரத்தில் பிடித்துக் கொள்வார். இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று? தன்னை ஏன் எல்லா நோய்களுக்கும் திறந்து வைத்துக் கொண்டான். மரணம் நிச்சயம் என்றதும் எதிப்பதை அவன் நிறுத்திவிட்டான். அவன் உணர்வை விட்டு நகர்ந்து விட்டான். அதுதான் எல்லா நோய்களுக்கும் எதிரான ஒரு தடுப்புச் சுவராக, ஒரு தடையாக இருந்தது. இப்போது அவன் மரணத்திற்குத் தயாராகிவிட்டான். அதனால் நோய்கள் வரத்துவங்கி விட்டன. அதனால்தான் ஓய்வு பெற்ற மனிதன் விரைவில் செத்துப் போகிறான்.
அதனால் ஓய்வு பெற விரும்புகிறவர்கள் எல்லோரும் ஓய்வு பெறுவதற்கு முன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் செத்துப் போகிறார்கள். எழுபது வயதில் செத்துப் போயிருக்க வேண்டியவர் அறுபத்து ஐந்து வயதிலேயே செத்துப் போகிறார். எண்பது வயதில் செத்துப் போகிறவர் எழுபத்து ஐந்தில் செத்துப் போகிறார். ஓய்வு பெற்ற அடுத்த பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மரணத்திற்கு தயார் செய்வதிலேயே முடிந்துவிடும். வேறு எதையுமே சாதிக்க மாட்டார். காரணம் வாழ்க்கையில்தான் பயனற்றதாகிவிட்டது அவருக்குத் தெரியும். அவருக்கு வேலையில்லை. சாலையில் யாரும் அவருக்குக் காலை வணக்கம் சொல்வதில்லை.
அவர் அலுவலகத்தில் இருந்தபோது வேறு மாதிரி இருந்தது. இப்போது யாரும் அவரைப் பார்ப்பதில்லை. காரணம் இப்போது அவர்கள் வேறு யாருக்கோ வணக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமே பொருளாதார அடிப்படையில்தான் இயங்குகின்றன. புதிய மனிதர்கள் அலுவலகத்தில் வந்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இந்த மனிதனுக்கு வணக்கம் சொல்ல நேரமில்லை. அவர்கள் இவரை மறந்துவிடுவார்கள். இப்போது திடீரென்று தான் பயனற்றுவிட்டதாக உணரத் துவங்கிவிட்டார்.தான் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக உணர்கிறார். அவரால் யாருக்கும் பயனில்லை. குழந்தைகள் கூட அவர்களுடைய மனைவிகளோடு நேரம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவுக்குப் போகிறார்கள். அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் மெதுவாக சுடுகாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர் தேவைப்பட்ட மனிதர்களுக்குக் கூட அவர் இப்போது பயனற்றுப் போய்விட்டார். திடீரென்று வளையத் துவங்கிவிட்டார். மரணத்திற்காகத் தன்னைத் திறந்து வைக்கிறார். எப்போது மனிதனுடைய உள்ளுணர்வு உள்ளே ஆரோக்யமாக இருக்கிறது? முதலில் அவன் உள் உணர்வு இருப்பதை உணரும்போது. வழக்கமாக உள்ளிருப்பதை நாம் உணருவதில்லை. நம் கவலையெல்லாம் உடல், கை, கால், தலை, இதயத்தைப் பற்றித்தான் ‘நான்’ என்கிற எண்ணமே இல்லை. நம் முழு கவனமும் வீட்டின் மீதுதான், அதில் வசிப்பவரிடமில்லை.
இது ஓர் ஆபத்தான சந்தர்ப்பம். காரணம் நாளை என் வீடு இடியத் துவங்கியதும் நான் விழுவதைப்போல உணர்கிறேன். அதுவே என்னுடைய நோயாகிவிடுகிறது. ஆனால் என் வீட்டை விட நான் வேறுபட்டவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அங்கே வசிப்பவன் அவ்வளவுதான். பிறகு வீடு இடிந்தால் கூட நான் இருப்பேன். பிறகு அது ஒரு பெரிய மாறுதலைக் கொடுக்கும். அதுதான் அடிப்படை மாறுதல். பிறகு மரணத்தைக் குறித்த பயம் விலகிவிடும்.
தியானம் இல்லாமல் மரணம் குறித்த பயம் விலகாது. அதனால் தியானத்தின் முதல் அர்த்தமே தன்னைத் தெரிந்து கொள்வதுதான். நாம் உள்ளுணர்வோடு இருக்கிற வரையில், நம் உள்ளுணர்வு எதையோ பற்றி விழிப்போடு இருக்கும். தன்னைப் பற்றியே நினைக்காது. அதனால்தான் நாம் தனியாக இருக்கும்போது நமக்குத் தூக்கம் வருகிற உணர்வு வருகிறது. காரணம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நாளிதழை படிக்கும்போதோ, வானொலி கேட்கும்போதோ நாம் விழித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறோம். ஒரு மனிதனை ஒரு இருட்டறையில் தனியாக விட்டால் அவனுக்குத் தூக்கம் வரும். காரணம் நீ எதையும் பார்க்க முடியாது. உன் உள்ளுணர்வு உனக்குத் தேவையில்லை. எதையுமே பார்க்க முடியாத போது தூங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேறு தீர்வே கிடையாது. தனியாக, இருட்டறையில் நீ தனியாக இருக்கிறாய். பேசுவதற்கு யாருமே இல்லை. யோசிக்க எதுவுமில்லை. உடனே தூக்கம் உன்னை தழுவிக் கொள்ளும்.
ஒரு வகையில் தூக்கமும் தியானமும் ஒரே மாதிரிதான். இன்னொரு வகையில் வேறு மாதிரி. தூக்கம் என்றால் நீங்கள் ஒரு வித மயக்கத்தில் இருப்பதாக அர்த்தம். தியானம் என்றால் நீ தனியாக இருக்கிறாய். ஆனால் விழிப்போடு இருக்கிறாய். அதுதான் ஒரே வேறுபாடு. உன்னைப்பற்றிய விழிப்போடு நீங்கள் தனியாக இருந்தால்…
ஒரு நாள் புத்தருடன் இருந்த ஒருவன் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தான். புத்தர் கேட்டார் ‘ஏன் கால்களை ஆட்டுகிறாய்?’
அவன் பதில் சொன்னான், ‘மறந்து விட்டேன். அது தானாக அசைந்தது. நான் அதைக் கவனிக்கக் கூட இல்லை.’
புத்தர் சொன்னார், ‘உன் கால் ஆடுகிறது. ஆனால் உனக்கே தெரியவில்லை. அது யாருடைய கால்? உன்னுடையது.’
அந்த மனிதன், ‘என் கால்கள்தான். ஆனால் நீங்கள் ஏன் உங்கள் உரையிலிருந்து விலகிவிட்டீர்கள்? தொடருங்கள்’ என்றான்.
புத்தர் சொன்னார், ‘நான் என் உரையைத் தொடரமாட்டேன். காரணம் நான் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் மயக்கத்தில் இருக்கிறான். எதிர்காலத்தில் உன் அசைவுகளைப் பற்றிய விழிப்புணர்வோடு இரு. நான் உனக்கு இரட்டை விழிப்புணர்வு கொடுப்பேன். காலின் அசைவைப் பற்றிய விழிப்புணர்வு வரும்போது அதைக் கவனிப்பவரின் விழிப்புணர்வும் பிறப்பெடுக்கும்.
விழிப்புணர்வு என்பது இரு முனைகளைக் கொண்டது. அதைப் பரிசோதித்துப் பார்த்தால் ஒரு பக்கம் அது வெளி நோக்கி இருக்கும் இன்னொரு பக்கம் அது உன்னை ஊடுருவும். அதனால் தியானத்தின் அடிப்படையே நாம் நம் உடலையும், நம்மையும் பற்றிய விழிப்படையத் துவங்குவோம். இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் மரண பயம் மறைந்துவிடும்.
மனிதனை மரண பயத்திலிருந்து விடுவிக்காத மருந்துவிஞ்ஞானம்(MEDICAL SCIENCE) மனிதன் என்கிற நோயைக் குணப்படுத்தவே முடியாது. மருந்து விஞ்ஞானம் மனிதனின் வாழ்க்கை நாட்களை அதிகரிக்கவே முயல்கிறது… ஆனால் வாழ்க்கை நாட்களை அதிகப்படுத்துவதன் மூலம் மரணத்திற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது என்பதைத் தவிர வேறு இல்லை. அதிக நாட்கள் காத்திருப்பதை விட குறைந்த நாட்கள் காத்திருப்பதே நல்லது. வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலமாக மரணத்தை மேலும் பரிதாபத்திற்குரியதாக்குகிறோம்.
உங்களுக்குத் தெரியுமா? மனிதனின் வாழ்க்கையை அதிகரிக்கச் செய்கிற மருத்துவ விஞ்ஞான நாடுகளில் ஓர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாகிற உரிமை. ஆங்கிலத்தில் அதற்குப் பெயர் Euthanasia. வயதானவர்கள் தாங்கள் சாகிற உரிமையை அரசியல் சட்டத்தில் கொண்டுவர வேண்டுமென்கிறார்கள். மருத்துவமனையில் அவர்களின் மரணத்தை பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கை கொடுமையானதாக ஆக்குவதாகக் கருதுகிறார்கள். அது சாத்தியம்தான். ஒரு மனிதனின் பிராண வாயுவை வைத்து அவனது மரணத்தை முடிவில்லாமல் தொங்க வைக்கலாம். அவனை உயிருடன் வைக்கலாம். ஆனால் அது மரணத்தை விட கொடுமையானது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எத்தனை மனிதர்களை மருத்துவமனைகளில் தலைகீழாகவும், அ~;ட கோணலாகவும் எத்தனை பேர்களை வைத்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். பலரை பிராண வாயுதான் கட்டிக் காக்கிறது. சாகிற உரிமை அவர்களுக்கில்லை. அந்த உரிமையைக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் புரிந்து கொண்டவரையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் பலவற்றில் மனிதனுக்கு சாகிற உரிமை அரசியல் சட்ட உரிமையாகிவிடும். காரணம் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு எதிராக ஒரு மனிதனை வைத்துக் கொண்டிருக்கிற உரிமை மருத்துவர்களுக்குக் கிடையாது.
ஒரு மனிதனின் வயதைக் கூட்டுவதன் மூலமாக அவனிடமுள்ள மரண பயத்தைப் போக்கி விடமுடியாது. ஒரு மனிதனை ஆரோக்யமாக வைத்திருப்பதன் மூலம் அவனது வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக ஆக்கிவிட முடியும். ஆனால் பயமில்லாமல் செய்யாது. பயமற்ற தன்மை ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் வரும். அதாவது, ஒருவர் தனக்குள்ளிருக்கும் ஒன்று எப்போதும் இறக்காது என்பதை அவர் தன் உள்ளிருந்து புரிந்து கொள்ளும்போதுதான். இந்தப் புரிதல் மிகவும் அவசியம்.
இறவாத் தன்மையை உணருவதுதான் தியானம் அதாவது எனக்குள் இருப்பது இறக்காது. அதனால்தான் உங்கள் உடலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதன் மூலமாக, அது வாழ்கிற வரையில் சந்தோஸமாக வாழும். அதேசமயம் உங்களுக்குள்ளிருப்பதை அறிந்து, மரணம் உங்கள் வாசலில் வந்து நின்றால் கூட நீங்கள் பயப்படப் போவதில்லை. அந்த உள்புரிதல்தான் பயமற்ற தன்மை.
தியானம் என்பது உள்ளிருந்து, தியானம் என்பது வெளியே இருந்து. பிறகு நீங்கள் மருத்துவ விஞ்ஞானத்தை, ஒரு முழுமையான விஞ்ஞானமாக ஆக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில், தியானமும், மருந்தும் ஒரே விஞ்ஞானத்தின் இரு முனைகள். அவற்றை இணைக்கும் தொடர்புதான் காணவில்லை. இப்போது மெதுவாக, மெதுவாக அவை ஒன்றுக்கொன்று நெருங்கி வருகிறது. இன்றைக்கு, அமெரிக்காவில் பல பெரிய மருத்துவமனைகளில், ஒரு வசியக்காரர், hypnotist அவசியமாகி விட்டார். ஆனால் வசியம் என்பது தியானமல்ல. ஆனாலும், இது நல்ல துவக்கம். மனிதனின் உணர்வுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்கிற புரிதல் இருப்பதையே இது காட்டுகிறது. அதாவது, உடலுக்கு மட்டும் சிகிச்சை அளித்தல் போதாது என்பதை!
நான் நினைக்கிறேன், இன்று ஒரு வசியக்காரர் மருத்துவமனைக்குள் நுழைந்தால் நாளை ஒரு கோயிலே நுழையும். சற்றுத் தாமதமாக வரும். எப்போதாவது வரும். ஆனால் அதற்கு நேரமாகும். பிறகு வசியக்காரருக்குப் பின், ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு யோகாதியான இலாக்கா இருக்கும். அது நடக்க வேண்டும். பிறகு நம்மால் மனிதனுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். உடலை மருத்துவர்கள் கவனித்துக் கொள்வார்கள். மனதை, மனோதத்துவ நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆன்மாவை, யோகாவும், தியானமும் பார்த்துக் கொள்ளும். மனிதனை முழுமையாக மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்கிற நாளில், மொத்தமாக, பிறகு அவனுக்கு அப்படியே சிகிச்சை அளித்தால், அதுதான் மனித இனத்திற்கு மகிழ்ச்சியான நாள். அந்தக் கோணத்தில் யோசியுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன். அதன் மூலமாக அந்த நாள் விரைவில் வரட்டும்.
அன்பாகவும், அமைதியாகவும் என் பேச்சைக் கேட்டதற்கு நான் நன்றி பாராட்டுகிறேன். இறுதியாக உங்களுக்குள்ளிருக்கும் கடவுளை வணங்குகிறேன். என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஓஷோ