மெய்ப்பொருள் காண்பது
அறிவு
---மரு.பழ.வெள்ளைச்சாமி
அறிவு என்பது உணர்தல் மற்றும் அறிதல் என்று இருவகை சார்ந்தது. இதில் உணர்தல்
என்றால் என்ன? அறிதல் என்றால் என்ன? என்று பார்ப்போம். இதை ஆங்கிலத்தில் knowledge and wisdom என்று
கூறுவார்கள்.
அறிதல் என்று கூறும்போது இருக்கின்ற
ஒன்றை அறிதல் என்று பொருள் உணரப்படுகிறது.
அதேபோல் உணர்தல் என்று கூறும்போது
இல்லாத ஒன்றை உணர்ந்து அறிதல் என்று பொருள்படுகிறது.
அறிவு என்ற சொல் அறிதல் என்ற
சொல்லில் இருந்து வந்தது. அறிதல் என்ற சொல்லிருந்து அறிவியல் வந்தது. அதை
விஞ்ஞானம் என்று கூறுகிறோம்.
இப்போது அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்றால் என்ன?
நமக்கு புறத்தே இருக்கும் ஒன்றை
புலன்களால், காரண காரியத் தொடர்போடு அறியப்படுவது விஞ்ஞானம்.
இப்போது உணர்ந்து அறிதல் என்றால் என்ன என்ரு பார்ப்போம்.
இதுவும் அறிதல் தான் நமது புலன்களுக்கு
அப்பாற்பட்ட ஒன்றை, காரண காரியத்தொடர்போடு பொருத்தி பார்க்க முடியாத ஒன்றை அகத்தே
உணர்தல். இதை ‘மெய் உணர்தல்’ என்று கூறுவார்கள்.
நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரண்டு வகையான அறிவு பற்றியும்
கூறியிருக்கிறார்
அறிவுடைமை என்ற அதிகாரத்தில்
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
நமக்கு புறத்தே இருக்கும் பொருள்
எதுவாக இருந்தாலும் அதனுடைய மெய்யான தன்மையை காண்பது அறிவு.
நமக்கு புறத்தே இருக்கும் ஒன்றை
புலன்களால் அறிவது, அறிதலுக்கு புறத்தே பொருட்களும் மற்றும் புலன்களும் அவசியம்.
அந்த புலன்களுக்கு உதவக் கூடியதுதான் கருவிகளும், சோதனைச்சாலைகளும். மேலும் காரணம்
மற்றும் விளைவு தத்துவம் முக்கியப்பங்கு அளிக்கிறது. இவ்வாறு ஒரு பொருள்
எவ்வகையாயினும், யார் என்ன சொன்னாலும் அதை நம்பாமல், அதை புலன்களால் அறிந்து
காரணம் மற்றும் விளைவுக் கோட்பாடோடு பொருத்திப்பார்த்து ஆய்வுக்கு உட்படுத்தி அதனுடைய
உண்மைப்பொருளை அறிவதே விஞ்ஞானம்.
நமது திருவள்ளுவர் இன்னொரு அறிவு
பற்றியும் கூறியுள்ளார். இதை ‘மெய் உணர்தல்’ என்ற அதிகாரத்தில் கூறியிருக்கிறார்.
“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
இதில் வள்ளுவர் ஒரு பொருள் எந்த வடிவத்தில்
இருந்தாலும் அந்த பொருளின் மெய்யான தன்மையை உணர்தல் தான் அறிவு என்கிறார். அந்த
உணர்தலே ஞானம். இதில் ஒன்று முக்கியமானது. அதாவது ஒவ்வொரு பொருளும் உணரப்படவேண்டும்.
அவ்வாறு உணரப்படும்போது அந்தப் பொருளின் சாரத்தை அறிய முடியும். இந்த அறிதல்.
புலனறிவுக்கு அப்பாற்பட்டது. இந்த அறிதல் பௌதீக, மற்றும் இரசாயன ஆய்வுக்கு
அப்பாற்பட்டது.
இதை எப்படி அறிவது? இது சாத்தியமா?
என்று எண்ணத்தோன்றுகிறது
இதை எவ்வாறு அறிவது? இதற்கு வள்ளுவர்
என்ன கூறியிருக்கிறார்?
இதற்கு வள்ளுவர் வழி சொல்லியிருக்கிறார்.
அதே அதிகாரத்தில் அறியும் விதத்தை கூறியுள்ளார்.
இது உள்ளத்தால் அறிதல். இது புலனறிவுக்கு
அப்பாற்பட்டது. காரண காரியத்தொடர்புக்கு அப்பாற்பட்டது.
“ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின்
ஒருதலையாய்
பேர்த்து உள்ள வேண்டாப்பிறப்பு”
இதில் ஒருவருடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்தல்.
இதில் எப்படி உள்ளம் உண்மைப்பொருளை ஆராய்ந்து உணரும்? இது சாத்தியமா? இதை
எல்லோராலும் அறியமுடியுமா? இதை ஞானிகள் தான் செய்யமுடியுமா? என்று சந்தேகங்கள்
எழலாம்.
இது ஞானிகள் மட்டும் செய்யக்கூடியது
என்றால் வள்ளுவர் இதை பொதுவாகக் கூறுவானேன். வள்ளுவர் கூறியுள்ளதை பார்த்தால் இது
எல்லோருக்கும் சாத்தியம் என்றே தெரிகிறது.
இங்கே இன்னொரு விசயத்தை
பார்க்கவேண்டும். அதாவது ஒரு பொருளை அறியும்போது அந்தப்பொருளின் அகநிலைச்சாரத்தை
உணர அதாவது அகநிலைப் பண்பை உணர வேண்டும்.
மேலும் வள்ளுவர் புலன்களால் அறிவதை
மெய் உணர்தல் என்று கூறவில்லை. ஏனெனில் அந்த அறிதல் ஒருவருடைய ஏற்கெனவே உள்ள
மனநிலைக்கு ஏற்றாற் போல் மாற வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதில் உண்மையானது தோராயமாக
அறியப்படுவதாகவே இருக்கும்.
ஆனால் ‘மெய் உணர்தல்’ இல் கூறப்பட்ட அறிவும்,
உண்மையை உணர்தலாகும். உண்மை, ஒன்றாகத்தான் இருக்கும். இது நபருக்கு நபர்
வேறுபடாது.
இந்த உண்மையை எவ்வாறு அறிவது?
திருவள்ளுவர் உள்ளம் உணர்தல் என்று கூறினாலும் இது புதிராகவே இருக்கிறது. ஏதோ
ஞானிகளால் அறிவது போல் அல்லவா இருக்கிறது!
ஆனால் நிச்சயம் உண்மை எல்லோரும்
உணரப்படக் கூடியது. புலனறிவுக்கு அப்பாற்பட்டது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது.
இதை எப்படி அறிய வேண்டும் என்பதையும்
‘எல்லோராலும் அறிய முடியும் என்பதையும்’ கூறியிருக்கிறார். அதை எப்படி அறிவது
என்று பார்ப்போம்.
டாக்டர் ஹானிமன் மணிமொழி 20இல்
மருந்தினுடைய அகநிலை பண்பானது மறைந்துள்ளது. அதை பகுத்தறிவின் முயற்சியால்
ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அதை ஆரோக்கியமான மனிதருக்கு கொடுத்து அது
செயல்படும்போது கிடைக்கும் அனுபவத்தின் மூலம் அறியப்படுகிறது என்று கூறுகிறார்.
ஒரு பொருள் எத்தன்மையது ஆயினும்
அந்தப் பொருளின் மெய்ப்பொருளைக் கானவேண்டும் ஆயினும் வேறு எந்த வழியிலும் காண இயலாது.
அதை ஆரோக்கியமான மனிதனுக்கு கொடுத்தால் அது அந்த மனிதனின் உடலிலும் மனதிலும் வேலை
செய்து அதனுடைய பண்பை வெளிப்படுத்துகிறது. அதாவது அதன் அகநிலைச்சாரத்தை அந்த
மனிதனின் உள்ளம் உணர்கிறது. இதைத்தான் வள்ளுவர் ‘ஓர்த்து உள்ளம் உணரின்’ என்று
குறிப்பிடுகிறார்.
நாம் ஒரு பொருளை தற்போதுள்ள ஆய்வு
முறைகளுக்கு உட்படுத்தினால் நிச்சயமாக அதனுடைய பௌதீக மற்றும் வேதியல் பண்புகளைக்
காணலாம். அவ்வாறு அறிவதை அறிவியல் என்று கூறுகிறோம். இந்த ஆய்வில் அந்தப் பொருளின்
அகநிலைச்சாரத்தை (inner nature) அறிய முடியாது.
இந்த அகநிலைச்சாரத்தை அறிவதுதான் ‘மெய்ப்பொருள் காண்பது’ ஆகும். இதுதான் அந்தப்
பொருளின் உண்மையை அறிதல்.
திருவள்ளுவர் ‘மெய் உணர்தல்’ என்ற
அதிகாரத்தில் ஒரு பொருளின் மெய்ப்பொருள் காண்பதே உண்மை அறிவு என்று கூறினார். அதை
எவ்வாறு காணவேண்டும் என்று டாகடர் ஹானிமன் கூறியிருக்கிறார்.
இது உலகிலேயே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு.
இதற்காகவே டாக்டர் ஹானிமனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். உலகம் இந்த உண்மையை
உணராமல் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் எல்லா பொருட்களுக்கும் ‘மனம்’
இருக்கிறது என்ற உண்மை தெரிய வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் வாழ்ந்த விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் உயிரற்றதையும் உயிருள்ளதையும்
பிரிக்கும் வரையறை இல்லை என்றும், எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கிறது என்றும்
கூறியுள்ளார்.
மேலும் எல்லாப் பொருட்களுக்கும் மனம்
இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆனால் எவ்வாறு அறிவது என்றுதான் கூறவில்லை. அவர்
கூறியதையும் அன்றைய உலகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஹோமியோபதி அதை நிரூபித்துள்ளது.
எந்த விஞ்ஞான ஆய்விலும் பல்சடில்லா
தாவரத்துக்கு அழும் தன்மை இருக்கிறது என்றும் ஆறுதல் சொன்னால் சாந்தமடையும்
என்றும் கூறப்படவில்லை.
http://www.vithoulkas.com/en/books-study/online-materia-medica/3545.html
அதேபோல் தங்கத்திற்கு தற்கொலை எண்ணம் உள்ளது என்று கூறவில்லை.
http://hpathy.com/materia-medica/the-blessings-of-gold-not-everything-that-shines-is-gold/
அதேபோல் படிகக்கல்லுக்கு (சிலிக்கா) இமேஜ் பற்றிய எண்ணம் உள்ளது என்று
கூறவில்லை. http://www.interhomeopathy.org/carbon_the_feeling_of
இந்த மெய்யான பண்பு ஏன் சாதாரணமாக
வெளிப்படுவதில்லை என்று தோன்றலாம். ஏனெனில் அவற்றின் உயிராற்றல் மிகவும்
நுணுக்கமாக இருப்பதால் அதை வெளிப்படுத்தமுடியவில்லை. அதற்கு ஒரு மீடியா
தேவைப்படுகிறது. அவை ஆரோக்கியமான மனிதனில் வினைபுரியும்போது அந்த மனிதனின் மூலம்
தன்னுடைய அகத்தை வெளிப்படுத்துகிறது.
இது யார் நிரூபணம் செய்தாலும்
வெளிப்படும்; எல்லோராலும் மெய்ப்பொருளைக் காண முடியும்.
ஒரு மனிதன் ஒரு பொருளை நிரூபணம்
செய்யும்போது அந்தப் பொருளின் மெய்ப்பொருளை உணர்கிறான். மேலும் அவன் தன்னுடைய
உணர்வு நிலையையும் தன்னுடைய எண்ணப்போக்கையும் மேலும் தன்னுடைய சுபாவத்தையும்
அறிந்து கொள்கிறான். இதை மணிமொழி 141இன் அடிக்குறிப்பில் ஹானிமன் கூறுகிறார்.
இதைத்தான் டாக்டர் ஹானிமன் உண்மையான
ஞானத்தின் அடித்தளம் என்று கூறுகிறார்.
இதிலிருந்து ஒரு பொருளின்
மெய்ப்பொருளைக் காண்பதற்கு அதை நிரூபணம் செய்வதுதான் ஒரே வழி. அவ்வாறு
செய்யும்போது தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களையும் அறிய முடியும். அதுவே
ஞானத்தின் தோற்றம்.***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக